என்ன நடக்கிறது என்பதை அறியாமல் போதகரின் சீடர்கள் திகைத்தனர். அவர்கள் வாழ்க்கையில் கண்ட அன்பின் பிரதிநிதியான அவருடைய வார்த்தையை ஒரு நிமிடம் அவர்கள் கேட்டனர். அடுத்த நிமிடம், அவர் அநீதியினால் விற்கப்பட்டு, வாழ்வதற்கு தகுதியற்றவர் என்று தீர்மானிக்கப்பட்டு, மரண தண்டனைக்கு பாத்திரவானாக்கப்பட்டார். அவர் போய்விட்டார். எதிர்காலத்தைக் குறித்த போதகரின் தரிசனம் அவர் வந்த வேகத்திலேயே மறைந்துபோனது. 3 நாட்கள் நிழலில் வாழ்ந்துகொண்டிருந்த போதகரின் சிநேகிதர்கள், எதிர்பாராத வேறொரு நிகழ்வை சாட்சியிட்டனர். அவர்களுடைய எண்ணம் திடீரென்று மாறியது. முதலாவது, போதகரை அடக்கம் பண்ணி வைத்திருந்த கல்லறை வெறுமையாய் இருக்கிறதை பெண்கள் சாட்சியிட்டனர். அதில் ஒருவள், அவரை நேரில் சந்தித்ததாகவும் அவர் தன்னோடு பேசியதாகவும் அறிவித்தாள். உடனே அனைத்து கூட்டத்தினரும் தாங்கள் அவரை சாட்சியிட்டதை அறிக்கையிட்டனர்.

சிநேகிதர்களின் வாழ்க்கை துரிதமாய் மாற்றமடைந்தது. கடந்த சில ஆண்டுகளில், அவர்களில் அநேகர் அவர்கள் சாட்சியிட்ட சம்பவத்தை மறக்கப்பண்ணும்படிக்கு வற்புறுத்தப்பட்டு, கொலைசெய்யப்பட்டனர். அவர்களுடைய இந்த அசாத்தியமான தைரியத்தைக் கண்ட அநேகர் அவர்களின் வார்த்தைகள் உண்மை என்று நம்பத்துவங்கினர். போதகரின் எதிரிகள், மூடப்பட்ட கதவுகளின் பின்பாய் நின்று மெல்லிய குரல்களில், இவர்களின் பேச்சுக்களை எவ்விதம் நிறுத்துவது என்று ஆலோசனை செய்தனர். சிலர் தங்களுடைய ஜீவனை இழக்காமல் காத்துக்கொள்ள எண்ணுவார்கள் என்று அவர்கள் நம்பினர். அதே வேளையில், சிலர் சத்தியத்திற்காய் தங்களுடைய ஜீவனையும் கொடுப்பார்கள் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர். ஆனால் போதகரை பின்பற்றுபவர்கள், அவர்கள் விசுவாசத்திற்காய் பாடனுபவிக்கவும் ஆயத்தமாயிருக்கிறார்கள் என்பதையும் அவர்கள் சீக்கிரத்தில் அறிந்துகொள்ள நேர்ந்தது. போதகரின் மரணத்திற்கு பின்பு அவரை நேரில் கண்டதாக சாட்சி சொன்னதற்காகவே அவர்கள் மரிக்க நேர்ந்தது.

தன்னுடைய சிநேகிதர்களுக்கு போதகர் இன்னொரு ஆச்சரியத்தைக் கொடுத்தார். அவர் அவர்களோடு மலையில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது, அவர் மெதுவாய் பூமியிலிருந்து மேலெழும்பி, மேகங்களில் மறைந்துபோனார். வாயடைத்து நின்ற சிநேகிதர்கள், ஆகாயத்தை வெறித்துப் பார்த்தவண்ணம் நின்றிருக்க, இரண்டு தூதுவர்கள் தோன்றி, “அவர் புறப்பட்டு போனபடியே திரும்பி வருவார்” என்று அவர்களுக்கு அறிவித்தனர். அப்போது, அவர்கள் எதிர்பாராத நாழிகையில் அவர் திரும்பிவருவார் என்று போதகரே அவர்களுக்கு சொன்னதை அவர்கள் நினைவுபடுத்திப் பார்த்தனர். ஆனாலும் அவர்களை விட்டு அவர் விலகமாட்டேன் என்று வாக்குப்பண்ணியிருந்தார். அவர்கள் அவரை பார்க்கமுடியாவிட்டாலும் அவருடைய ஆவி அவர்களுக்குள்ளே வாசமாயிருக்கும் என்றும் உறுதியளித்திருந்தார்.

DONATE

போதகர் பூமியில் வாழ்ந்த நாட்களில் அவரும் மற்ற பொய்யான மார்க்க நம்பிக்கையாளரைப் போல இருக்கக்கூடும் என்று ஒருசிலர் நம்பியிருந்தனர். அவரை ஒரு குற்றவாளியாய் அடையாளப்படுத்தினால், அவரை பின்பற்றக்கூடியவர்கள் களைந்து சென்றுவிடுவார்கள் என்று அவர்கள் எண்ணியிருந்தனர். ஆனால் அதற்கு எதிர்மாறாக சம்பவித்தது. போதகரின் மறைவுக்குப் பின் அந்த இயக்கம் எண்ணிக்கையிலும் செயல்பாட்டிலும் வேகமாய் வளர்ச்சியடைந்தது. அந்த செய்தி தேசமெங்கிலும் பரவியபோது, பலர் அவரை ஒரு சாதாரண போதகரைக் காட்டிலும் மேலானவர் என்பதை அறிந்துகொண்டனர். அந்த இயக்கத்தின் பார்வையில், அந்த ராஜாவே அவர்களை நேரடியாய் சந்தித்தார் என்று எண்ணப்பட்டது.

வாழ்க்கையை மாற்றும் அனுபவத்தை பலர் பெற்றுக்கொண்டனர். பொது மேடைகளில், சந்தைகளில், குடும்ப கூடுகைகளில் அந்த செய்தி பகிரப்பட்டது. தெரு வீதிகளில், நாட்டுப்புறங்களில், இளைஞரும் முதியோரும், ராஜாவின் உயிரை பலியாக்கிய மரமானது, பராமரிப்பாளர்களுக்காய் முதல் தோட்டத்தில் ராஜா எற்படுத்தி வைத்திருந்த இரண்டு மரங்களோடு நேரடியாய் தொடர்புடையது என்பதைக் கேள்விப்பட்டனர். பராமரிப்பாளர்களின் துவக்க கால சரித்திரத்தில், அந்த மரங்களில் ஒன்றைப் பார்த்து, “நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை புசிப்பவர்கள் மரிப்பார்கள்” என்று ராஜா எச்சரித்தார்.

முதல் தம்பதியினர் அந்த மரத்தின் கனியை புசித்ததினால், அவர்கள் ஆவிக்குரிய மரணத்தை சந்தித்து, சரீரப்பிரகாரமான மரணத்தையும் சந்திக்க துவங்கினர். ஆவிக்குரிய பிரிவினாலும், மரணத்துக்கேதுவான சரீரத்திற்கு பாத்திரர்களானதாலும் அவர்கள் ராஜாவிடத்திலிருந்து பிரிக்கப்பட்டனர். எனினும் இந்த முதல் இரண்டு மரங்களுக்கும் இடையில் இந்த மூன்றாவது மரம் நிற்கிறது. ராஜா, அந்த மரத்தில் தொங்கி தன் ஜீவனைக் கொடுத்ததினிமித்தம், தடைசெய்யப்பட்ட விருட்சத்தின் கனியை புசித்த பராமரிப்பாளர்களுடைய தப்பிதத்திற்கான விலைக்கிரயம் செலுத்தப்பட்டது.

தன்னுடைய குடிமக்களின் சுதந்திரத்திற்கான விலைக்கிரயத்தை தானே கொடுக்கத் தீர்மானித்து தன்னுடைய தரிசனத்தை நிறைவேற்றுவதே அந்த திட்டம்.

கடைசியாக, ராஜாவின் திட்டம் இன்னதென்று அறிவிக்கப்பட்டது. தன்னுடைய குடிமக்களின் சுதந்திரத்திற்கான விலைக்கிரயத்தை தானே கொடுக்கத் தீர்மானித்து தன்னுடைய தரிசனத்தை நிறைவேற்றுவதே அந்த திட்டம். நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசித்து மரணத்திற்கு பாத்திரவான்களாய் மாறியவர்களுக்காக தன்னையே பலியாய் ஒப்புக்கொடுப்பதே அந்த திட்டம். குறுகிய காலத்திற்குள்ளதாகவே, ராஜாவின் சிநேகிதர்கள் உலகமெங்கிலும் சுற்றித்திரிந்து, பராமரிப்பாளர்களின் தவறான தெரிந்தெடுப்பிற்கான விலைக்கிரயத்தை செலுத்த உதவிய மீட்பின் மரமாகிய இந்த இன்னொரு மரத்தைக் குறித்த செய்தியை பிரகடனப்படுத்தினர்.

அந்த செய்தி எல்லோருக்குமானது. அவர் கொடுக்கும் அந்த சலுகையைப் பயன்படுத்திக்கொள்பவர்களுக்கு, குடியுரிமையையும் ஆசீர்வாதங்களையும் வாக்குப்பண்ணியிருந்தார். அவரை ராஜா என்று ஏற்றுக்கொண்டு, அவர் கொடுக்கும் மன்னிப்பையும் நித்திய வாழ்வையும் நம்புகிறவர்களின் இருதயத்தில் தேவனுடைய இராஜ்யம் அவருடைய வருகை மட்டும் நிலைத்திருக்கும்.

ராஜாவின் கதையானது, அன்பு மற்றும் இரக்கத்தின் கதை. தன்னுடைய சுய புண்ணியங்களினால் ஒருவன் பரிதீசை அடைய முடியாது.

ராஜாவின் கதையானது, அன்பு மற்றும் இரக்கத்தின் கதை. தன்னுடைய சுய புண்ணியங்களினால் ஒருவன் பரதீசை அடைய முடியாது. ராஜாவின் பக்கத்தில் சிலுவையில் அறையப்பட்ட இரண்டு கள்ளர்களில் ஒருவனைப்போலவே அனைவரும் பரதீசுக்குள் பிரவேசிக்க முடியும். அதில் ஒருவன், தன்னை இரட்சித்துகொள்ள முடியாத ராஜா என்று அவரை கேலி செய்தான். மற்றவன் தன்னுடைய பாவத்தை உணர்ந்து, “உம்முடைய இராஜ்யத்திற்குள் பிரவேசிக்கும்போது என்னை நினைத்தருளும்” என்று வேண்டிக்கொண்டான். அவனுடைய அந்த எளிமையான விசுவாசத்தின் பரிசாய், “இன்று என்னோடு கூட பரதீசிலிருப்பாய்” என்று ராஜா அவனுக்கு வாக்குக் கொடுக்கிறார்.