லூக்கா 23:34
பிதாவே, இவர்களுக்கு மன்னியும்,
தாங்கள் செய்கிறது இன்னதென்று
அறியாதிருக்கிறார்களே என்றார்.
இரகசிய வரலாறு
ககவிஞர் ஹென்ரி வாட்ஸ்வொர்த் லாங்பெல்லோ “நம் எதிரிகளின் இரகசிய வரலாற்றை நம்மால் படிக்க முடிந்தால், ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் போதுமான அளவு வருத்தமும் துன்பமும் அனைத்து “விரோதங்களையும் நிராயுதபாணி ஆக்கும் அளவு இருப்பதை காணமுடியும்”அவர் வார்த்தைகள் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு சூழல்- ஒரு கதை இருக்கிறது என்பதை நினைவூட்டுகிறது. அவர்கள் அவ்வாறு இருக்க அவர்களை வடிவமைத்த நிகழ்வுகள்தான் காரணம். அது அவர்களுடனான நம் சந்திப்பின் தாக்கமாகும். நாம் நம் வாழ்வின் மகிழ்ச்சியும் வலியும், வெற்றியும் போராட்டமும் ஆன சுய வரலாற்றை அறிவோம். மற்றவர்களுடைய சுய வாழ்வு -உருவாக்கும் வரலாற்றை நாம் அடையாளம் காணும் தேவை இருக்கிறது.
இயேசு சிலுவையில் தொங்கிய போது, அவரைச் சுற்றி நடந்த நிகழ்வுகள் தங்களுக்கென்று கதைகள் உடைய மக்களையும் ஈடுபடுத்தியது. ஆண்டு கணக்காய் போரில் ஈடுபட்டதால் மிருகத்தனமான படைவீரர்கள், ஆண்டு கணக்காய் நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிய முயற்சிசெய்து கடினமாகிய மதவாதிகள், உண்மையான நம்பிக்கையின்றி மீட்பிற்காக ஆற்றொணாமல் ஏங்கும் மக்கள் கூட்டம், ஒருவர் கூட தங்களுடைய வெறுப்பு நிரம்பிய செயல்களுக்கு மன்னிப்புக் கோரவில்லை. ஆனால் சிலுவையில் கிறிஸ்து இரக்கம் காட்டியதற்கான விளக்கத்திற்கு உதவுகிறது. இயேசு, “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்றார் (லூக்கா 23:34).
மக்கள் ஒருவர் மேல் ஒருவர் ஏற்படுத்தும் வலியை மன்னிப்பதில்லை. நாம் அதற்கு பின்னே ஓர் இரகசிய வரலாறு இருப்பதை புரிந்து கொள்ளும் போது நம்மால் இரக்கத்தை காட்ட முடியும். இயேசு சொன்னது போன்று பரலோக பிதாவும் “நன்றிகெட்ட மற்றும் பொல்லாதவர்களுக்கும் இரக்கம் காட்டுகிறார்” (6:35).
பில் கிரவடர்
மக்களுக்கு சந்தேகத்தின் பலனை கொடுப்பதற்கு எவ்வாறு உங்களை நினைவூட்ட முடியும்? உங்கள் பார்வையில் அல்லது அவர்களுடனான தொடர்பில் என்ன வித்தியாசத்தை இது ஏற்படுத்தும்?
பிதாவே என் வாழ்வின் அனைத்து தவறுகளுக்கும் நீங்கள் காட்டிய இரக்கத்திற்கும் மற்றும் சிலுவையில் வழங்கிய மன்னிப்பிற்கும் நன்றி. எனக்கு தவறு இழைத்த வர்களுக்கு இரக்கம் காட்ட, எனக்கு ஒரு மன்னிக்கும் இருதயத்தை தயைகூர்ந்து தாரும்.
இன்றையவேதப்பகுதி | லூக்கா 23:32-43
32 குற்றவாளிகளாகிய வேறே இரண்டு பேரும் அவரோடே கூட கொலை செய்யப்படுவதற்கு கொண்டு போகப் பட்டார்கள்.
33 கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்த பொழுது அங்கே அவரையும் அவருடைய வலது பக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடது பக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள்.
34 அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டு சீட்டுப் போட்டார்கள்.
35 ஜனங்கள் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் உடனே கூட அதிகாரிகளும் அவரை இகழ்ந்து:இவன் மற்றவர்களை இரட்சித்தான் இவன் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட கிறிஸ்து ஆனால் தன்னைத் தானே இரட்சித்து கொள்ளட்டும் என்றார்கள்.
36 போர் சேவகரும் அவர் இடத்தில் சேர்ந்து அவருக்கு காடியை கொடுத்து:
37 நீ யூதரின் ராஜாவானால் உன்னை இரட்சித்து கொள் என்று அவரை பரியாசம் பண்ணினார்கள்.
38 இவன் யூதருடைய ராஜா என்று கிரேக்கு லத்தீன் எபிரெயு எழுத்துக்களில் எழுதி அவருக்கு மேலாக வைக்கப்பட்டது
39 அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்:நீ கிறிஸ்து வானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்.
40 மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்கு உட்பட்டவனாயிருந்தும் தேவனுக்கு பயப்படுகிறது இல்லையா?
41 நாமோ நியாயப்படி தண்டிக்கப் படுகிறோம் ;நாம் நடப்பித்த வைகளுக்கு தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாதது ஒன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்து கொண்டு
42 இயேசுவை நோக்கி: ஆண்டவரே நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.
43 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.