நமக்கு ஒரு பாலகன் பிறந்தார். . . அவர் நாமம் அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தா. . . என்னப்படும் (வ.6). ஏசாயா 9:1-7

லூசி தனது தற்காலிக அலுவலகத்தை அமைத்து, ஓர் சிறிய கட்டணத்திற்கு ஆலோசனைகளை வழங்குவதாக மிகவும் விரும்பப்பட்ட நகைச்சுவைப் பிரதியில் விளம்பரப்படுத்துகிறார். சார்லி பிரவுன் என்பவர் அணுகி, அவர் எப்படி கவனிக்கப்படவில்லை மற்றும் முக்கியமற்றவராக உணர்கிறார் என்று லூசியிடம் கூறுகிறார். அவர் தனது தனிமை உணர்வை விவரித்து முடித்ததும், பெரிதும் அக்கறையற்றஅந்த ‘ஆலோசகர்’ அவரிடம் “சில நண்பர்களைஉருவாக்கிக்கொள்ளுங்கள்” என்ற எளிமையான தீர்வைத்கொடுத்துவிட்டு, பின்னர் அவரது கட்டணத்தை வசூலிக்க முயற்சிக்கிறார். என்ன ஓர் பரிதாபம்!

நம்முடைய பிரச்சனைகளையும் கவலைகளையும் இயேசுவிடம் கொண்டு வரும்போது, அதன் விளைவு மிகவும் வித்தியாசமானது. கிறிஸ்து பிறப்பதற்கு ஏறக்குறைய 750 ஆண்டுகளுக்கு முன்பாகவே, வரவிருக்கும் மேசியா அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தா என்று அழைக்கப்படுவார் (ஏசாயா 9:6) என்பதனை ஏசாயா முன்னறிவித்தார்.

ஓர் நல்ல ஆலோசகருக்குதான் பிரச்னையின் மையத்தை நன்கு ஆழமாய் ஆராய்ந்து அதைத் தீர்ப்பதற்கான வழிகளைச்செயல்படுத்தத் தெரியும். மனித இயல்புகளைப் பற்றிய முழுமையான புரிதலை இயேசு கொண்டிருந்ததால் (யோவான் 2:24-25), மண்ணுலகில் அவருடைய ஊழியத்தின்போது, ஒரு ஸ்திரியின்வாழ்க்கை அவளது தனிப் பட்டத் திருப்தியை மட்டுமே தேடுவதன் விளைவாக மட்டுமே இருப்பதை அவள் உணர்ந்து கொள்ள அவரால் உதவ முடிந்தது (4:14-18). பரிசேயர்களின் தவறான பக்தியை அவர்களின் சுயநலத்தின் அறிகுறியாகவும் இயேசு கண்டறிந்தார் (மத்தேயு 23:1-7). அவருடைய சீடர்கள் தங்களில் யார் மிக முக்கியமானவர் என்று வாதிடத்தொடங்கியபோது, அவர் அவர்களின் எண்ணங்களை அறிந்து அவர்களை மனத்தாழ்மைக்கு நேராய் வழி நடத்தினார் (லூக்கா 9:46-48).

இயேசுவின் பூமிக்குரிய ஊழியத்திலும், இன்று நம் வாழ்விலும் அவருடைய ஆலோசனைகளின் மையப்புள்ளி ‘சமாதானம்’. சமாதானத்திற்கான எபிரேய வார்த்தையான ஷாலோம், பிரச்னைகளிலிருந்து தற்காலிக விடுதலையைவிட இன்னும் அதிகமானது என்பதைக் குறிக்கின்றது. சமாதானத்தின்காரணராகிய இயேசு, தேவனுடனும் மற்றவர்களுடனும் இணக்கத்தைக் காண நமக்கு உதவிபுரிகிறார். நாம் பாவம் செய்யும் போது நமக்கு பரிந்து பேசுபவரவாக இருக்கிறார் (1 யோவான் 2:1-2). அவருடைய கிருபையையும் அன்பையும் மற்றவர்களுடன் பகிரும் போது, நம்மை இன்னும் செழித்தோங்கச் செய்கிறார்.

நம்முடைய காயங்களைக் குணப்படுத்தும் பாதையில் இயேசு நம்மை வழிநடத்துவார் என்று உறுதியாக நம்பலாம். அவரைப்போல் நம்மைப் புரிந்துகொண்டு நேசிக்க இவ்வுலகில் ஒருவருமில்லை!

-ஜெனிபர்ஷுல்ட்

சிந்தனை

மேலும் வாசியுங்கள்: சங்கீதம் 32:7-9 தேவன் நம்முடைய வாழ்வைமிகவும் அக்கறையுடன் சித்தரித்து மென்மையாக வழிகாட்டி நடத்துவதை எண்ணிப் பார்க்கவும்.
அடுத்தது: உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் ஓர் பெரிய அடிப்படை பிரச்சினையின் அறிகுறிகளாகவும் இருக்கலாம்? எத்தகையப் போராட்டங்களில் நீங்கள் ஆவியானவரின் துணையையும் விடுதலையையும் பெறத்தூண்டுகிறார்?

 

 

 

banner image