ஓசியா 14:2
தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி,
எங்களைத் தயவாய் அங்கீகரித்தருளும்

ஆசீர்வதிக்கப்பட்ட மனந்திரும்புதல்

“உடைந்தது” என்பது கிரேடியின் தெருவின் பெயராக இருந்தது மற்றும் அந்த ஐந்து எழுத்துக்கள் அவருடைய உரிமம் தகடில் பெருமிதத்துடன் பொறிக்கப்பட்டுள்ளன. அந்த புனைப்பெயர் ஆவிக்குரிய அர்த்தத்தில் அன்று, ஆனால் நடுத்தர வயது சூதாடி, தவறானவர் மற்றும் ஏமாற்றுபவருக்கு பொருந்தும்.இருப்பினும் ஒரு மாலையில் அனைத்தும் மாறியது, அவர் உணவகத்தின் அறையில் தேவ ஆவியானவரால் குற்றப்படுத்தப்பட்டார். அவர் தம் மனைவியிடம், “நான் இரட்சிப்பை அடைகின்றேன் என்று நினைக்கின்றேன்!” என்றார்.அந்த மாலையிலே அவர் தம்முடன் கல்லறை வரை எடுத்துச் செல்வோம் என்று நினைத்த பாவங்களை அறிக்கையிட்டு மற்றும் மன்னிப்பிற்காக இயேசுவிடம் வந்தார். நாற்பது வயதை எட்ட மாட்டோம் என்று நினைத்தவர் அடுத்து முப்பது ஆண்டுகள் வாழ்ந்து இயேசுவின் மனம் மாறிய விசுவாசியாக தேவனுக்கு ஊழியம் செய்தார். அவருடைய உரிமம் தகடில் – “உடைந்த” என்பதற்கு பதிலாக “மனம் திருந்திய” என்று மாற்றினார்.

மனந்திருந்து. கிரேடி அதைத்தான் செய்தார் மற்றும் அதை தான் தேவன் இஸ்ரவேலர்களை செய்யுமாறு ஓசியா 14:1-2 இல் அழைத்தார்: “இஸ்ரவேலே உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு;…. வார்த்தைகளைக் கொண்டு கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்… அவரிடம் சொல்லுங்கள் “எங்கள் பாவங்களை மன்னித்து எங்களை கிருபையுடன் ஏற்றுக்கொள்ளும்”. பெரியதோ அல்லது சிறியதோ, குறைவோ அல்லது அதிகமோ நமது பாவங்கள் நம்மை தேவனிடமிருந்து பிரிக்கின்றன. ஆனால் நம் பாவங்களில் இருந்து திரும்பி அவர் கிருபையால் இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் பெற்ற மன்னிப்பால் அந்த இடைவெளியை மூட முடியும். நீங்கள் போராடும் இயேசுவின் விசுவாசியாக இருந்தாலோ அல்லது கிரேடியின் வாழ்வு போன்றதாக இருந்தாலோ உங்கள் மன்னிப்பு ஒரு ஜெபத்தின் தொலைவே உள்ளது.

ஆர்தர் ஜாக்சன்

எந்த பாவங்கள் உங்களை தேவனிடத்திலிருந்து பிரிக்கின்றன? நீங்கள் முன்பு தயாராக இல்லை என்றால் இப்பொழுது உங்களுக்கு தேவனின் தேவையை அறிக்கையிட தயாரா மற்றும் தேவன் இயேசுவின் மூலம் அளித்த மன்னிப்பை ஏற்க நீங்கள் தயாரா?

பிதாவே நான் கீழே விழுவதற்கு ஏதுவான காரியங்கள் ஏதாவது என் இருதயத்தில் இருக்கின்றதோ மற்றும் ஏதாவது உம்மை விட்டு என்னைப் பிரிக்கின்றதோ என்று ஆராய்ந்து பாரும். என்னை சுத்திகரியும்; மன்னியும் மற்றும் உங்களின் கனத்திற்காக என்னை பயன்படுத்தும்.

இன்றைய வேத பகுதி | ஓசியா 14:1-4

1 இஸ்ரவேலே உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு; நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய்.

2 வார்த்தைகளைக் கொண்டு கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவரை நோக்கி: தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி எங்களை தயவாய் அங்கீகரித்து அருளும்; அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் காளைகளை செலுத்துவோம்.

3 அசீரியா எங்களை இரட்சிப்பதில்லை; நாங்கள் குதிரைகளின் மேல் ஏற மாட்டோம்; எங்கள் கைகளின் கிரியையை பார்த்து: நீங்கள் எங்கள் தேவர்கள் என்று இனி சொல்ல மாட்டோம்; திக்கற்றவன் உம்மிடத்தில் இரக்கம் பெறுகிறான் என்று சொல்லுங்கள்.

4 நான் அவர்கள் சீர்கேட்டை குணமாக்குவேன்; அவர்களை மனப்பூர்வமாய் சிநேகிப்பேன்; என் கோபம் அவர்களை விட்டு நீங்கிற்று.

 

banner image