சங்கீதம் 130:4
உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.
அவர் மன்னிக்கிறார்
மாமார்க்கின் கை அவருடைய தொடுதளத்தை (டச் பேட்) இயக்கும்போது நடுங்கியது.ஆன்லைன் வரலாற்றை உருட்டினார் (ஸ்க்ரோலிங்). பல்லாண்டுகளாய் ஆன்லைனில் சூதாட்டம் ஆடிய ஒவ்வொரு நாளும் நேரமும் இருந்தன. “தேவன் என் போதையிலிருந்து மீள எனக்கு உதவினார். அவர் மன்னித்தார் என்று அறிவேன், ஆனால் என் கணினி சரித்திரத்தை பார்த்தபோது என் முந்தைய பாவம் மன வருத்தத்தை அளித்தது. என் சூதும் பொறுப்பற்ற தன்மையும் பதிவு செய்யப்பட்டுள்ளன”.
“அன்று தேவ மன்னிப்பைப் பாராட்ட எனக்கு உதவியது. அந்த ஆன்-லைன் பதிவை எனக்கு எதிராக தேவன் வைத்திருந்தால் நான் எங்கே இருப்பேன்?” என்றார் மார்க்.
மார்க் தாவீது சங்கீதம் 130:3ல் சொன்னதை எதிரொலித்தார்” கர்த்தாவே நீர் அக்கிரமங்களை கவனித்திருப்பீரானால் யார் நிலை நிற்பான் ஆண்டவரே” தேவன் நம் பாவத்தின் ஆழங்களை அறிவார். அதனால் தான் அவர் தம் குமாரனை, இயேசுவை நமக்காக மரணம் அடையவும் மற்றும் உயிர்த்தெழவும் செய்தார். கிறிஸ்துவினால் “மீட்பு” உண்டு (வசனம் 7). மீட்பு என்னும் வார்த்தையின் எபிரேய பதம் படாஹ் (padah) அதற்கு – மீட்கும் தொகை என்று அர்த்தம் தேவையான விலையைக் கொடுத்து தண்டனையிலிருந்து விடுதலை பெறுவதாகும்.இதை தான் இயேசுவின் மரணம் நமக்கு சாதித்தது. இன்று நாம் அவருடன் வாழ்வின் புதுமையில் நடக்கும்போது, நாம் இப்பவும் பாவம் செய்து மனம் திருந்தி மன்னிப்பு வேண்டும்போது, அவர் மன்னிப்பை வழங்குவேன் என்று வாக்களிக்கிறார் (சங்கீதம் 130:4; 1 யோவான் 1:9).
மார்க் அன்று தம் ஆன்லைன் வரலாற்றை நீக்கினார். அதுபோன்றே தேவனின் மன்னிப்பால் நம் பாவ பதிவு என்றென்றும் அழிக்கப்பட்டது.
கேரன் ஹுவாங்
தேவனின் மன்னிப்பை பற்றிய சந்தேகங்கள் உங்களுக்கு தேவன் உடனான உறவை மீண்டும் எப்படி பிடித்து வைக்கிறது? உங்களுக்கு சங்கீதம் 130 எவ்வாறு உத்தரவாதம் அளிக்கிறது?
அன்பான தேவனே, உம்முடைய அன்பும் இரக்கமும் இல்லாவிட்டால் நான் எங்கே இருப்பேன்? உம்முடைய குமாரனின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் மன்னிப்பு என்னும் விவரிக்கமுடியாத ஈவை வழங்கியதற்காக நன்றி.
இன்றைய வேதப்பகுதி | சங்கீதம் 130
1 கர்த்தாவே ஆழங்களிலிருந்து உம்மை நோக்கி கூப்பிடுகிறேன்.
2 ஆண்டவரே என் சத்தத்தை கேளும்; என் விண்ணப்பங்களின் சத்தத்திற்கு உமது செவிகள் கவனித்து இருப்பதாக.
3 கர்த்தாவே நீர் அக்கிரமங்களை கவனித்திருப்பீரானால், யார் நிலை நிற்பான் ஆண்டவரே.
4 உமக்கு பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மீட்பு உண்டு.
5 கர்த்தருக்கு காத்திருக்கிறேன்; என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பி இருக்கிறேன்.
6 எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்கு காத்திருக்கிற ஜாமக்காரரைப் பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்கு காத்திருக்கிறது.
7 இஸ்ரவேல் கர்த்தரை நம்பி இருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும் அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு.
8 அவர் இஸ்ரவேலை அதின் சகல அக்கிரமங்களினின்றும் மீட்டுக் கொள்வார்.