“அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள்”


banner image

“அச்சிறுவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள்”

வாசிக்க: மாற்கு 9 :14-27
“அவர் பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்”.- மாற்கு 9:19

“நான் தேவனை விசுவாசிக்கவில்லை மற்றும் நான் போக மாட்டேன்”, என்று மாற்கு சொன்னான்.

எமிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது‌. அவர் மகன் ஒரு மகிழ்ச்சியான சிறுவனிலிருந்து கடுகடுப்பான, ஒத்துழைக்காத இளைஞனாக மாறிவிட்டான். வாழ்க்கை போர்க்களமானது. ஞாயிறு பயப்படும் நாளாக மாறியது. ஏனெனில் அவன் குடும்பத்துடன் சபைக்கு செல்ல மறுத்தான். இறுதியாக, விரக்தியடைந்த அவன் பெற்றோர் ஒரு ஆலோசகரிடம் ஆலோசனை பெற்றனர்.அவர் சொன்னார், “மாற்கு தன்னுடைய விசுவாச பயணத்தை தானே மேற்கொள்ள வேண்டும்.இராஜ்யத்துக்குள் ஒருவரை கட்டாயப்படுத்த முடியாது. தேவன் கிரியை செய்ய இடம் அளியுங்கள். தொடர்ந்து ஜெபித்து காத்திருங்கள்”.

எமி காத்திருந்து- ஜெபித்தார். ஒரு நாள் காலை அவர் படித்த இயேசுவின் வார்த்தைகள் அவர் மனதில் எதிரொலித்தன. இயேசுவின் சீடர்கள் ஓர் ஆவி- பிடித்த பையனுக்கு உதவவில்லை. ஆனால் இயேசுவிடம் பதில் உண்டு:”அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள்” (மாற்கு 9: 19).அந்த தீவிரமான நிலைமையில் இயேசுவால் குணப்படுத்த முடியுமானால் அவர் மகனுக்கும் இயேசுவால் உதவ முடியும். அவர் மனதளவில் பின்னுக்கு வந்து ,அவரை விட அதிகமாய் நேசிக்கும் ஒருவரிடம் தம் மகனை தனியாக விட்டார்.

தினந்தோறும் எமி மௌனமாக மாற்கை தேவனிடம் ஒப்படைத்து, தேவன் மாற்கின் தேவைகளை அறிவார் மற்றும் அவர் காலம் மற்றும் அவர் வழியில் அவன் வாழ்வில் கிரியை செய்வார் என்ற உறுதியை பற்றிக்கொண்டார்.

மரியோன்

 

 

 

banner image