நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது. மத்தேயு 6:3.

நான் முதன் முதலில் கல்லூரியில் பட்டம் பெற்றபோது, ஒரு வாரத்திற்கு இருபத்தைந்து டாலர்களை மட்டும் தான் (இது சுமார் INR 2000) எனது மளிகைப் பெருட்டளுக்காக செலவு செய்ய வேண்டும் என்ற நிலையில் இருந்தேன். ஒரு நாள், பணம் செலுத்தும் வரிசையில் நுழையும் போது, நான் தேர்ந்தெடுத்த மளிகை சாமான்கள், எனது மீதமுள்ள பணத்தை விட சற்று அதிகமாக இருக்கும் என்று சந்தேகித்தேன். “இருபது டாலர்களை எட்டியதும் நிறுத்துங்கள்,” என்று காசாளரிடம் சொன்னேன். ஒரு பை குடைமிளகாயை தவிர, நான் தேர்ந்தெடுத்த அனைத்தையும் வாங்க முடிந்தது.

நான் வீட்டிற்குச் செல்லவிருந்தபோது, ஒரு மனிதர் என் காரை நிறுத்தினார். “இதோ உங்கள் குடைமிளகாய், மேடம்,” என்று அவர் பையை என்னிடம் கொடுத்தார். நான் அவருக்கு நன்றி சொல்ல நேரம் கிடைக்கும் முன், அவர் ஏற்கனவே அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டார்.

இந்த தயவின் எளிய நன்மையை நினைவுகூரும்போது, அது இன்னும் என் இதயத்தை பூரிப்பாக்கி, மத்தேயு 6 இல் உள்ள இயேசுவின் வார்த்தைகளை நினைவுபடுத்துகிறது. எல்லோருக்கும் முன்பாக ஏழைகளுக்குக் கொடுப்பவர்களை விமர்சித்து (வ. 2), இயேசு தம் சீடர்களுக்கு வேறு வழியைக் கற்பித்தார். அவர்கள் அவர்களின் தாராள மனப்பான்மை பற்றியும், அவர்களுடைய கொடுக்கும் செயலை பற்றியும் மக்களுக்கு காண்பிப்பதை விட, கொடுப்பதை ரகசியமாகச் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அது, அவர்களின் வலது கை கொடுப்பது இடது கைக்குக் கூட தெரியாதளவாக இருக்க வேண்டும் (வ. 3)!

ஒரு நபரின் எதிர்பாராத தயவு, ஒருபோதும் என்னை பற்றியதாக இருக்கக்கூடாது என்று எனக்கு நினைவூட்டியது. தாராள மனப்பான்மையுள்ள தேவன் நமக்குக் கொடுத்ததன் காரணமாகத்தான், நாம் மற்றவர்களுக்குக் கொடுக்கிறோம் (2 கொரிந்தியர் 9:6-11). நாம் அமைதியாகவும் தாராளமாகவும் கொடுக்கும்போது, தேவன் யார் என்பதை நாம் பிரதிபலிக்கிறோம். மேலும், தேவன் தனக்கு தகுதியான நன்றியை மட்டுமே பெறுகிறார் (வச. 11).

ஆசிரியர்: மோனிக்கா லா ரோஸ்

சிந்தனை

நீங்கள் எப்போதாவது எதிர்பாராத தயவை பெற்றிருக்கிறீர்களா? Facebook.com/ourdailybreadindia. இல் உங்கள் கதையைப் பகிரவும்.
அமைதியாகவும் தாராளமாகவும் கொடுப்பது தேவனின் பெருந்தன்மையை பிரதிபலிக்கிறது.

 

 

 

banner image