தேவன் நிமித்தம் நான் சவுலின் குடும்பத்தாருக்குத் தயைசெய்யும்படி அவன் வீட்டாரில் யாதொருவன் இன்னும் மீதியாய் இருக்கிறானா? 2 சாமுவேல் 9:3.

ஒரு இளம் தாய் தன் குழந்தைகளுடன் தனியாக விமானத்தில் ஏறி, உதைத்து அழத் தொடங்கிய தனது மூன்று வயது மகளை அமைதிப்படுத்த தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது பசியால் வாடிய அவளது நான்கு மாத மகனும் அழ ஆரம்பித்தான்.

அவள் அருகில் அமர்ந்திருந்த ஒரு பயணி, ஜெசிக்கா தன் மகளை பிடித்துக்கொண்டபோது, குழந்தையைப் பிடித்துக் கொள்ள விரைவாக முன்வந்தார். அப்போது அந்தபயணி தான் இளம் அப்பாவாக இருந்த நாட்களை நினைவு கூர்ந்தார். ஜெசிக்கா தனது குழந்தைக்கு உணவளிக்கும் போது, அந்த நபர் அந்த மூன்று வயது குழந்தையுடன் வண்ணம் பூசத் தொடங்கினார். அடுத்த இணைக்கும் விமானத்தில், அதே நபர் மீண்டும் உதவ முன்வந்தார்.

“தேவனின் கரத்தால் நான் நடத்தப்பட்டேன். நாங்கள் வேறு யாராவது ஒருவர் பக்கத்தில் அமர்த்தப்பட்டிருக்கலாம், ஆனால், நான் சந்தித்த நல்ல மனிதர்களில் ஒருவரின் அருகிலேயே அமர்த்தப்பட்டோம்.” என்று ஜெசிகா நினைவுகூர்ந்தாள்.

2 சாமுவேல் 9 இல், வேண்டுமென்றே செய்யப்படும் தயவு என்று நான் சொல்வதற்கான மற்றொரு உதாரணத்தைப் வாசிக்கிறோம். சவுல் ராஜாவும் அவருடைய மகன் யோனத்தானும் கொல்லப்பட்ட பிறகு, தாவீது இராஜா தன்னுடைய சிம்மாசனத்திற்கு போட்டியாக எழும்பும் யாராக இருந்தாலும் அவரை கொன்றுவிடுவார் என்று சிலர் எதிர்பார்த்தனர். அதற்குப் பதிலாக, “தேவன் நிமித்தம் நான் சவுலின் குடும்பத்தாருக்குத் தயைசெய்யும்படி அவன் வீட்டாரில் யாதொருவன் இன்னும் மீதியாய் இருக்கிறானா?” என்று கேட்டார்(வி. 3). யோனத்தானின் மகனான மேபிபோசேத், தாவீதிடம் கொண்டு வரப்பட்டான். தாவிது மேவிபோசேத்தின் சுதந்தரத்தை மீட்டெடுத்தார். மேலும் அவர் தனது சொந்த மகனைப் போலவே தன்னுடைய பந்தியில் பகிர்ந்து கொள்ள அன்புடன் அழைத்தார் (வச. 11).

தேவனின் மகத்தான தயவின் பயனாளிகளாக, மற்றவர்களிடம் வேண்டுமென்றே தயவு காட்டுவதற்கான வாய்ப்புகளை தேடுவோம் (கலாத்தியர் 6:10).

ஆசிரியர்: சிண்டி ஹெஸ் கேஸ்பர்

சிந்தனை

தேவனுடையை தயவை யாரிடம் காண்பிக்கலாம்? புண்படுத்தும் அல்லது ஊக்கமிழந்த நபர் ஒருவருக்கு நீங்கள் என்ன குறிப்பிட்ட செயலில் தயவை காண்பிக்கலாம்?
பரலோகத் தகப்பனே, நீர் எனக்குக் காட்டிய தயவிற்காக உமக்கு நன்றி. அதை மற்றவர்களுக்கு காண்பிக்க எனக்கு உதவுச் செய்யும்.

 

 

 

banner image