ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால் இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார். ரோமர் 8:27

மருத்துவமனைப் படுக்கையில் இறக்கும் தருவாயில்இருந்தஇளைஞனிடம்,ஜெப விண்ணப்பங்கள் ஏதேனும் உள்ளதா? என்று கேட்டேன். அவர் பெயர்களையும் ஜெபக் குறிப்புகளையும் துடைத்துவிட்டு, வெட்கத்துடன் என்னைப் பார்த்து, “எனக்காக ஜெபிக்க வேண்டாம்” என்று நான்போதிக்கப் பட்டுள்ளேன் என்றார்.

அவர் இறந்து கொண்டிருந்தார். கடைசி நாட்களில் அவருக்கு வலி தெரியாமல் இருக்க அவருக்கு மருந்துகள் போடப்பட்டிருந்தது. ஆனாலும்அத்தருணத்திலும் அவர் தனக்காகஜெபிக்க உரிமையிருக்கிறதென்பதை நம்பாதவராயிருந்தார். தேவனிடம் பேசுவதற்கு வார்த்தைகள் கிடைக்காவிட்டாலும், தேவனுடைய ஆவியானவர்நமக்காக பரிந்து பேசுவாரென்பதை நான் அவருக்கு நினைவூட்டினேன்.

தேவன் நம் இதயத்தையும் மனதையும் அறிந்தவராயிருக்கிறார். நமக்குத் தேவையானதை அவருடைய சித்தத்தின்படித் தருவதாக வாக்குப்பண்ணியிருக்கிறார்(ரோமர் 8:27). சில சமயங்களில்கடினமானநம் வாழ்க்கையில்வார்த்தைகளினால் தேவனிடம் பேச முடியாமல்இருக்கலாம்.

அச்சமயங்களில் ஆவியானவர் நமக்காகப் பிதாவிடம் பேசுகிறார்.தேவன் அறிகிறார்.அவருடைய பரிபூரணச்சித்தங்கள் நிறைவேறும்.வார்த்தைகளினால் ஜெபித்தாலும், உள்ளத்தினால்ஜெபித்தாலும் உறுதியோடுஅவருக்குக் காத்திருக்கலாம்.

வார்த்தையினால் ஜெபிக்க முடியாதஜெபங்களுக்கு எவ்வாறு தேவன் உனக்கு பதிலளித்திருக்கிறார்? தேவன் உனக்காக பரிந்து பேசியமைக்காக நீ எவ்வாறு அவருக்கு நன்றி கூறுவாய்?

பரலோகத் தந்தையே, நான் எப்போதெல்லாம் என்ன ஜெபிக்க வேண்டும்? எப்படி ஜெபிக்க வேண்டும்? என்று உறுதியற்றிருக்கிறேனோ, அப்போதெல்லாம் ஆவியானவர் எனக்காகப் பரிந்து பேசியமைக்காக உமக்கு நன்றி.

ரோமர் 8:26-30

அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார். ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல்செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார். அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன் குறித்திருக்கிறார். எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.