மேகனின் இருதயம்
மேகன் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது குளிர்காலத்தில் அணியும் கையுறையை தொலைத்து விட்டு வீட்டுக்குத் திரும்புவாள். அது அவளுடைய தாயை பாதித்தது, ஏனென்றால் அவளுக்கு புதிய கையுறையை வாங்கிக் கொண்டே இருக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் குடும்பத்தால் கொடுக்க முடியவில்லை. ஒரு நாள் அவள் தாய் மிகவும் கோபமடைந்து “மேகன் நீ மிகவும் பொறுப்பாக இருக்க வேண்டும் இப்படியே நீ செய்து கொண்டே இருக்கக் கூடாது!” என்றார்.
மேகன் அழத்தொடங்கினாள். அவள் கண்ணீருடன் தனக்கு புதிய கையுறைகள் கிடைப்பதனால் தான் கையுறைகள் இல்லாத குழந்தைகளுக்கு தன்னுடையதை கொடுத்து விடுகிறதாக கூறினாள்.
இப்பொழுது அவளுக்கு 18 வயது ஆகிறது, அவளின் பொழுதுபோக்கு, சமூகத்தில் தன்னார்வ தொண்டு ஆற்றுவது மற்றும் உள்நகர குழந்தைகளுக்கு வழி காட்டுவது ஆகும். அவளுடைய விருப்பம் மக்களுக்கு உதவி செய்வது. அதை குறித்து சொல்லும் போது அவள் சொன்னாள், “நான் செய்ய வேண்டிய காரியம் அது போன்ற சேவை தான்” என்று தோன்றுகின்றது.
கிறிஸ்தவர்களாக நமக்கு மற்றவர்களுக்குக் கொடுக்கும் இருதயம் வேண்டும். யாக்கோபு நம்மை நாமே அளிப்பதற்கான நடைமுறை வழியை நமக்கு தருகிறார்: “திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவரை விசாரிக்க வேண்டும்”(வசனம் 27).
மேகனின் இருதயத்தை போன்ற இருதயத்தை தேவனிடம் கேளுங்கள். தேவனின் மீதுள்ள அன்பினால், அவர் செய்யச் சொன்னதை செய்யுங்கள். அதை தான் “நாம் செய்ய வேண்டும்”.
ஆனி
|
|
|