தேவதூதன் அவர்களை நோக்கி: “பயப்படாதிருங்கள்” என்றார். லூக்கா 2:10

வேதாகமத்தில் ஒவ்வொரு முறையும் தேவதூதன் தோன்றும்போது, அவர் சொல்லும் முதல் வார்த்தை “பயப்படாதிருங்கள்” (தானி. 10:12,19; மத். 28:5; வெளி. 1:17) சற்று ஆச்சரியமானதுதான். இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒன்று பூமியுடன் தொடர்பு கொள்ளும்போது, அவை பொதுவாக மனிதர்களிடையே ஒருவித பிரமிப்பு கலந்த பயத்தினை உருவாக்குகின்றது. ஆனால் நம் தேவன் பூமியில் பயமுறுத்தாதவிதத்தில் தோன்றியதாக லூக்கா கூறுகிறார். தேவன், நாம் அவரைப் பார்த்து பயப்படத் தேவையில்லை என்பதனை இயேசுவின் மூலம் உணர்த்தும் படியாக கொட்டகையில் பிறந்து முண்ணனையில் கிடத்தப்பட்டார். புதிதாகப் பிறந்த குழந்தையைவிட சற்று குறைவாக பயப்படும் காரியம் என்ன?

இயேசுவைப் பற்றிய குழப்பமான அநேக சந்தேகங்கள் அவருடைய ஊழியக்காலம் முழுவதும் பின்தொடர்ந்தன. பெத்லகேமில் ஓர்தச்சரின் மகனான குழந்தை எப்படி கடவுளிடமிருந்து வரும் மேசியாவாக இருக்க முடியும்? ஆனால் வயலில் இருந்த மேய்ப்பர்களின் குழுவிற்கு அவர் யார் என்பதில் சந்தேகம் இல்லை, ஏனென்றால் அவர்கள் தேவதூதர்களிடமிருந்து நேரடியாக நற்செய்தியைக் கேட்டனர் (2:8-14).

கடவுள் ஏன் மனித உருவம் எடுத்தார்? வேதாகமம் பல காரணங்களைக் கொடுக்கிறது, அவற்றுள் சில ஆழமான இறையியல் கோட்பாடுள்ளவை மற்றும் சில நடைமுறைக்குரியவை; ஆனால் இயேசு ஓர் வாலிபராக தேவாலயத்தில் போதகர்களுக்கு விரிவுரை செய்யும் காட்சி ஒன்றை விளக்குகின்றது (வச. 46). முதன்முறையாக சாதாரண மக்களும் தேவனுடன் நேரடியாக ஓர் உரையாடல் அல்லது விவாதம் நடத்த முடியும். “பயப்படாதிருங்கள்” என்ற முன் அறிவிப்பின்றி இயேசு—அவரது பெற்றோர், போதகர், ஏழை விதவை— போன்ற யாவருடனும் பேச முடியும்.

இயேசுவின் மூலம் தேவன் நம் அருகில் வருகிறார்.

– பிலிப் யான்சி

சிந்தனை

தேவனே, நீர் என்னிடம் வருவதற்கு நான் என்னைத்தாழ்த்தி, எப்பொழுதும் நன்றியறிதலுள்ளவனாக இருக்கிறேன்.
பயத்தினை முடிவுகட்டவே தேவன் வெளிப்பட்டார். எஃப். பி. மேயர்

 

 

banner image