நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்சூழ்நிலையின்நடுவிலும் . சங்கீதம் 56:3

ஓர் சிறிய நகரத்திலுள்ள தேவாலயத்திற்குப் போதகராக வாரன் இடம் பெயர்ந்து சென்றார். ஊழியத்தின் தொடக்கத்தில் ஒருசில முயற்சிகளில் வெற்றி பெற்றாலும் உள்ளூர் வாசிகளில் ஒருவர் அவருக்கு எதிராய் திரும்பினார். அந்த நபர் கொடூரமான செயல்களில் வாரன் ஈடுபட்டதாக ஓர் கதையை உருவாக்கி உள்ளூர் செய்தித்தாளுக்கு எடுத்துச் சென்றார். மேலும் அவரது குற்றச்சாட்டுகளை துண்டுப்பிரசுரங்களில் அச்சிட்டு உள்ளூர் மக்களுக்கு விநியோகித்தார். வாரனும் அவரது மனைவியும் கடுமையாக போராடி ஜெபிக்க ஆரம்பித்தனர். பொய்யான அந்தச் செய்தியை மக்கள் நம்பினால் அவர்களின் வாழ்க்கையே தலைகீழாகிவிடும்.

தாவீது ராஜா ஒருமுறை இதேபோன்றதான சூழ்நிலையினை சந்தித்தார். அவர் ஓர் எதிரியின் அவதூறானத் தாக்குதலை எதிர்கொண்டபோது, “நித்தமும் என் வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்; எனக்குத் தீங்கு செய்வதே அவர்கள் முழு எண்ணமாயிருக்கிறது’ என்று கூறினார் (சங்கீதம் 56:5). இந்த தொடர்ச்சியான தாக்குதல் அவருக்கு பயத்தையும் கண்ணீரையும் வரவழைத்தியது (வச. 8). அந்தக் கடினமான சூழ்நிலையின் நடுவிலும் அவர் இந்த சக்திவாய்ந்த ஜெபத்தை ஏறெடுத்தார்: “நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்… மாம்சமானவன் எனக்கு என்ன செய்யவான்?” (வச. 3–4).

தாவீதின் ஜெபத்தை இன்று நமக்கு முன்மாதிரியாககொள்ளலாம். நான் பயப்படுகிற நாளில் – பயப்படும் அல்லது குற்றச்சாட்டப்படும் நேரங்களில் நாம் கலங்காமல் கர்த்தரை சார்ந்து கொள்வோம். உம்மை நம்புவேன் –நம்முடைய போராட்டங்களை தேவனுடைய வல்ல கரங்களில் விட்டுவிடுவோம். மாம்சமானவன் எனக்கு என்ன செய்யவான்? – அவருடன் சேர்ந்து சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது, நமக்கு எதிரான அதிகாரங்கள் உண்மையில் எவ்வளவு மட்டுப்படுத்தப்பட்டவை என்பதை நாம் நினைவில் கொள்கிறோம்.

வாரன் பற்றிய செய்தியை செய்தித்தாள் புறக்கணித்தது. ஒருசில காரணங்களால் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படவில்லை. இன்று நீங்கள் எத்தகையப் போருக்குப் பயப்படுகிறீர்கள்? தேவனோடு பேசுங்கள். அவர் உங்களுடன் இணைந்து சூழ்நிலைக்கு எதிராய் போராட வாஞ்சிக்கிறார்.

– ஷெரிடன் வாய்ஸி

சிந்தனை

நீங்கள் உண்மையான எத்தகைய அச்சங்களை எதிர்கொள்கிறீர்கள்? அவைகளை சமாளிக்க தாவீதின் ஜெபம் உங்களுக்கு எவ்வாறு உதவும்?
அன்பான தேவனே, நான் பயப்படுகிறேன் – அதனால் இன்று நான் உங்கள் மீது நம்பிக்கை வைக்கின்றேன். நீங்கள் எனக்காக வழக்காடும்போது, மனிதர்கள் என்னை என்ன செய்ய முடியும்? வரவிருக்கும் வெற்றிக்காய் உமக்கு நன்றி.

 

 

 

banner image