நோசோமி நம்பிக்கை


banner image

நோசோமி நம்பிக்கை

இந்த மகத்துவம் உள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல் தேவனால் உண்டாயிருக்கிறது என்று விளங்கும்படி, இந்த பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம். – 2 கொரிந்தியர் 4:7

வடகிழக்கு ஜப்பானில் 2011ஆம் ஆண்டு பேரழிவான பூகம்பம் மற்றும் சுனாமி ஏற்பட்டன. ஏறத்தாழ 19000 பேர் உயிரிழந்தனர் மற்றும் 2,30,000 வீடுகள் அழிந்தன.இதன் பின்விளைவாக நோசோமி திட்டம், ஜப்பானிய மொழியில் நோசோமி என்றால் “நம்பிக்கை” என்று அர்த்தம், அது நிலையான வருமானம், சமுதாயம் மற்றும் கண்ணியம்- கூடுதலாக, கொடுக்கும் தேவன் மேல் நம்பிக்கையை அளிக்க உருவாக்கப்பட்டது.

நோசோமி பெண்கள், அந்த இடிபாடுகளில் சலித்த போது, உடைந்த சீன ஷார்ட்ஸ் என்னும் உடைந்த துண்டுகளை கண்டுபிடித்து அவற்றை நகைகளாக உருவாக்கி, உலகம் முழுக்க விற்றனர். இது பெண்களுக்கு வாழ்வாதாரத்தை அளித்தது மற்றும் கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தை பகிரும் அடையாளங்களாக விளங்கின.

புதிய ஏற்பாட்டின் காலத்தில், மக்கள் விலை உயர்ந்த பொருட்களை சாதாரண களிமண் பானைகளில் ஒளித்து வைப்பர்.பவுல் சுவிசேஷத்தின் பொக்கிஷம் கிறிஸ்துவை பின்பற்றும் மனித பலவீனத்துக்குள் இருக்கிறது என்பதை விளக்குகிறார்: மண்பாண்டங்கள் (2 கொரிந்தியர் 4:7). அவர் நம் வாழ்வின் அற்பமான – மற்றும் உடைந்த – பாத்திரங்கள் கூட நமது குறைபாடுகளுக்கு மாறாக தேவனின் வல்லமையை வெளிப்படுத்த முடியும் என்று கூறுகிறார்.

தேவன் நம் வாழ்வில் உள்ள குறைபாடுகளிலும் மற்றும் உடைந்த துண்டுகளிலும் வாழ்கிறார். நம்மைக் குணப்படுத்தும் வல்லமையின் நம்பிக்கை பெரும்பாலும் வெளிப்படுகிறது. இல்லை, நம் இருதயங்களை செப்பனிடும் போது, நம் குறைகள் மறைக்கப்படுவதில்லை. அவை தேவனின் சுபாவத்தை மற்றவர்களிடம் காட்டுகின்றன.

எலிசா

 

 

 

banner image