நாம் ஒருவரிலொருவர்அன்புகூரவேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாய் இருக்கிறது. 1 யோவான் 3:11
1962 இல் அல்பானி சிட்டி ஹால் முன் ஒரு பிரார்த்தனை விழிப்புணர்வை நடத்திய பிறகு, டாக்டர் ரெவரெண்ட் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் இரண்டு வாரங்களுக்கும் மேலாக, சிறையில் கழித்தார். அந்த அநியாயமான சிகிச்சையை சகித்துக்கொண்டு, “எதிரிகளை நேசிப்பது” என்ற தலைப்பில்பிரசங்கங்களை எழுதினார்.அது பின்னர் அவரது “அன்பின் வலிமை” புத்தகத்தின் ஒரு பகுதியாக மாறியது. அவரது வல்லமையான செய்தி சமூக மற்றும் அரசியல் மாற்றத்திற்கான கருவியாகஅன்பை அறிவித்தது.
பல ஆண்டுகளாக டாக்டர் கிங்கின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு, நிறத்தால் வித்தியாசத்தைக் கொண்ட எங்கள் இரு, வயது வந்தமகன்களுக்காக ஜெபம் செய்தேன். என் கணவரும் நானும் வெறுப்பை அன்புடன் எதிர்த்துப் போராட அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தோம், இது எளிதானது அல்ல.வெறுப்பு வெற்றி பெறுவது போல் தோன்றும் போது, நான் , ”கர்த்தாவே, உமது சாயலில் எங்களைப் படைத்து, உம்மையும் பிறரையும் நேசிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டதை அறிந்திருந்தால், எவ்வளவு காலம் நாங்கள் வெறுப்பினால் பிளவுபடுவோம்”? என்றுஜெபிப்பேன். “ஆதிமுதலே” நேசிக்கும்படி தேவன் தம் மக்களுக்கு அறிவுறுத்தினார்(1 யோவான் 3:11). தன் சகோதரனைப்பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாய் இருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராதென்று அறிவீர்கள்(வச. 15). ஒருவரிலொருவர் வார்த்தையிலும், செய்கையிலும், மனப்பான்மையிலும் அன்பைக்காட்ட தம் மக்களுக்கு வலியுறுத்தினார்(வ. 16-18).
அநீதிக்கு விரோதமாக நாம் நிற்கும் போது, தேவன் பரிசுத்த ஆவியின் மூலமாய் நம்மை பலப்படுத்துகிறார்:”நாம் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மேல் விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே அவருடைய கற்பனையாய் இருக்கிறது” (வ. 23).நாம் நேசிப்பதற்காகப் படைக்கப்பட்டோம்.
உன்னைவிட வித்தியாசமாயிருப்பவர்களை நேசிப்பதற்கு தேவன் எவ்வாறு உனக்கு உதவினார்? ஏன் பகைக்குப் பதிலாக அன்பைக் காட்டுவதுமுக்கியமானதாக இருக்கிறது.
எங்களை அன்பாய் சிருஷ்டித்துக் காப்பவரே,வித்தியாசங்களைக் கொண்டாடி உம்மை நேசிக்கவும், மற்றவர்களுக்கு அதைக் காட்டவும்எனக்கு உதவியருளும்.
1 யோவான் 3:11–24
நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது. பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப் போலிருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே. என் சகோதரரே, உலகம் உங்களைப் பகைத்தால் ஆச்சரியப்படாதிருங்கள். நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான். தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள். அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி? என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம். இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்களென்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்குமுன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம். நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார். பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், நாம் தேவனிடத்தில் தைரியங்கொண்டிருந்து, அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்குமுன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம். நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே அவருடைய கற்பனையாயிருக்கிறது. அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்.