“உடனே இயேசு அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்” (மத்தேயு 15: 27).
சில சமயங்களில் நாம் வாழ்க்கையால் மூழ்கடிக்கப்படுகிறோம். ஏமாற்றம், தீராத கடன், வேலை இழப்பு அல்லது பிறருடன் ஏற்படும் பிரச்சனை போன்ற நெருக்கும் அலைகள் நமக்கு நம்பிக்கையின்மை, மனச்சோர்வு அல்லது விரக்தியை ஏற்படுத்தும். இது இயேசுவின் முதல் சீடர்களுக்கு நடந்தது. அது எனக்கும் நடந்திருக்கிறது.
தேவனின் மூன்று அறிக்கைகள் நமக்கு ஆறுதலையும், உறுதியையும், இயேசுவே போதும் என்ற நம்பிக்கையையும் தருகின்றன. முதல் அறிக்கை, மத்தேயு 4 இல் உள்ள “என்று எழுதியிருக்கிறது” (வ. 4, 7, 10) என்ற வார்த்தை. இந்த வார்த்தை மூன்று முறை வருகிறது. சாத்தானின் மூன்று சோதனைகளை வென்றதன் மூலமாகத் தேவனுடைய வார்த்தை மெய்யானது என்பதற்கும், மிகவும் கடினமான சோதனைகளையும் அழுத்தங்களையும் அது வெல்கிறது என்பதற்கும் போதுமான ஆதாரத்தை இயேசு நமக்கு அளித்தார்.
இரண்டாவது அறிக்கை “நான்தான்” (மத்தேயு 14:27) என்ற வார்த்தை, பீதியடைந்த தம் சீடர்களிடம், சீறுகிற புயலை நிறுத்தவும், சீற்றம் கொண்ட கடலை அமைதிப்படுத்தவும் தாமே போதுமானவர் என்று இயேசு சொன்னபோது பேசப்பட்டது..
இயேசு சிலுவையிலிருந்து பேசின மூன்றாவது அறிக்கை: “எல்லாம் முடிந்தது!” (யோவான் 19:30). அவருடைய மரணம் நம்முடைய பாவக்கடனுக்கான கிரயத்தைச் செலுத்தவும் , நம்மை விடுவிக்கவும் போதுமானது என்று அவர் நமக்கு உறுதியளித்தார்.
நம் சூழ்நிலைகள் எதுவாக இருப்பினும், இயேசு தமது அன்பு, இரக்கம் மற்றும் கிருபையுடன் நம் நடுவே இருக்கிறார். அவரே நம்மைப் பாதுகாப்பாக்கத் தூக்கிச் சுமக்கும் ஆதாரமாகவும், நம் கூட இருப்பவரும், போதுமானவராகவும் உள்ளார்.
— டேவிட் சி. எக்னர்
|
|