அவர் சொல்லியிருக்கிறாரே… அதினாலே நாம் தைரியங் கொண்டு… எபிரெயர் 13:5-6
என் உறுதி, தேவன் எனக்கு அளித்த உறுதியில் கட்டப்படவேண்டும் தேவன் சொல்கிறார்,” நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை”, “அதனால் தைரியம் கொண்டு, ”கர்த்தர் எனக்கு சகாயர் நான் பயப்படேன்” (எபிரெயர் 13:5-6). நான் அச்சத்தில் ஆவேசப் படுவதில்லை. இதற்கு அர்த்தம் நான் பயத்திற்கு தூண்டப்பட மாட்டேன் என்பது அன்று, ஆனால் தேவனின் உறுதியான வார்த்தைகளால் ,நான் முழு தைரியத்துடன் இருப்பேன், ஒரு குழந்தை தன் தகப்பன் வைத்த தர நிலையை எட்டியது போன்றது. அநேக மக்களின் சிந்தையில் அச்சம் ஏற்படும் போது அவர்கள் விசுவாசம் தவறுகிறது. அவர்கள் தேவனின் உறுதியின் அர்த்தத்தை மறுக்கின்றனர் -அவர்கள் ஆழ்ந்த ஆன்மீக மூச்சை எடுப்பதற்கு மறந்துவிடுகின்றனர். நம் வாழ்வில் பயத்தை நீக்க உள்ள ஒரே வழி நமக்கு தேவன் அளித்த உறுதியை கவனிப்பதே ஆகும்.
நீங்கள் எதற்கு பயப்படுகிறீர்கள்? அது எதுவாக இருந்தாலும் நீங்கள் கோழை இல்லை- நீங்கள் அதை எதிர்கொள்ள தீர்மானித்து உள்ளீர்கள், இருப்பினும் இன்னமும் உங்களுக்கு பய உணர்வு இருக்கலாம். யாரும் உதவுவதற்கு இல்லை என்ற நிலையில் உங்களுக்குள்ளே “ஆனால் ‘கர்த்தர் எனக்கு சகாயர்’ இந்தக் கணத்தில், என் தற்போதைய சூழ் நிலையிலும் “என்று சொல்லிக் கொள்ளுங்கள். நீங்கள் பேசுவதற்கு முன் தேவனுடைய வார்த்தைகளை கவனிக்க கற்றுக் கொள்கிறீர்களா அல்லது பேசி விட்டு அதற்கு தக்கதாக தேவ வார்த்தைகளை பொருத்துகிறீர்களா? பிதாவின் உறுதியைப் பற்றிக்கொண்டு திட மனதுடன் சொல்லுங்கள் “நான் பயப்படமாட்டேன்”. நம் வழியில் எத்தீங்கு அல்லது தவறு இருப்பினும், அதை பொருட்படுத்த தேவையில்லை. ஏனெனில் “அவர் சொல்லி இருக்கிறாரே,” நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை.
தேவனுடைய உறுதியான வார்த்தைகளுக்கும் நம் சுய வார்த்தைகளுக்கும் எண்ணங்களுக்கும் நடுவில் மனித பலவீனம் இருக்கிறது நாம் துன்பங்களை சந்திக்கும்போது நாம் பலவீனமாக உணரும்போது அந்தத் துன்பங்கள் அரக்கனாக மாறி, நாம் வெட்டுக்கிளிகள் போல மாறுகிறோம் மற்றும் தேவன் இல்லாதவர் போல தோன்றும். ஆனால் தேவன் நமக்கு உறுதியளித்திருக்கிறார்- “நான் உன்னைவிட்டு…. கைவிடுவதுமில்லை”. தேவனுடைய முக்கிய இசை குறிப்பை கேட்டபின் நாம் பாட கற்கிறோமா? “கர்த்தர் எனக்கு சகாயர்” என்று சொல்ல போதுமான தைரியத்தால் நாம் தொடர்ந்து நிரப்பப்படுகிறோமா அல்லது நாம் பயத்திற்கு பணிந்து போகிறோமா?
சிந்தனை
இன்று தேவனுடைய உறுதியின் மீது நம்பிக்கை வைக்க நீங்கள் எப்படி கற்றுக் கொள்கிறீர்கள்? நீங்கள் துன்பங்களை எதிர் கொள்ளும் போது கர்த்தர் என் சகாயர் என்று அறிந்து நீங்கள் எப்படி தைரியமாக இருப்பீர்கள்?
பிதாவே, நீர் என் அடைக்கலம் மற்றும் என் பெலன். நீங்கள் என்னுடன் எப்போதும் இருக்கிறீர்கள் மற்றும் நான் தைரியமாய் இருந்து எல்லா பயத்தையும் எதிர்கொள்ள எனக்கு உதவுவதற்கும் நன்றி, ஆமென்!