விதவைகளெல்லாரும் அழுது, தொற்காள் தங்களுடனேகூட இருக்கையில் செய்திருந்த அங்கிகளையும் வஸ்திரங்களையும் காண்பித்து, அவனைச் சூழ்ந்துநின்றார்கள். அப்போஸ்தலர் 9:39

மார்த்தா முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தொடக்கப்பள்ளியில் உதவி ஆசிரியராக பணியாற்றினார். ஒவ்வொரு ஆண்டும், தேவைப்படும் மாணவர்களுக்கு புதிய கோட்டுகள், தாவணிகள் மற்றும் கையுறைகளை வாங்குவதற்கு அவர் பணத்தைச் சேமித்தார். இரத்தப் புற்றுநோய்வுடனான சண்டையில் அவர் தோற்ற பிறகு, நாங்கள் அவரது வாழ்க்கையின் பணியை கொண்டாடினோம். மலர்களுக்குப் பதிலாக, மக்கள் நூற்றுக்கணக்கான புத்தம் புதிய ஆடைகளை, அவர் விரும்பி பல ஆண்டுகளாக சேவை செய்த மாணவர்களுக்கு நன்கொடையாக வழங்கினர். அன்பான வார்த்தைகளாலும் சிந்தனைமிக்க செயல்களாலும், மார்த்தா மற்றவர்களை ஊக்கப்படுத்திய எண்ணற்ற வழிகளைப் பற்றிய சாட்சியை பலர் பகிர்ந்து கொண்டனர். நித்தியத்தின் இந்த பக்கத்தில் அவரது வாழ்க்கை முடிந்த பிறகு, அவரது சக ஆசிரியர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஆடைகளை நன்கொடையாக வழங்கி, அவரது நினைவை கௌரவித்தார்கள். அவரது தயவின் மரபு இன்னும் தேவைப்படுபவர்களுக்கு தாராளமாக சேவை செய்ய மற்றவர்களை ஊக்குவிக்கிறது.

அப்போஸ்தலர் 9ல், அப்போஸ்தலன் லூக்கா, ” நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்துகொண்டுவந்த” (வச. 36) தொற்காளை பற்றிய ஒரு கதையைப் பகிர்ந்து கொள்கிறார். அவள் நோய்வாய்ப்பட்டு இறந்த பிறகு, துக்கமடைந்த சமூகம் பேதுருவை சந்திக்கும்படி வற்புறுத்தியது. அனைத்து விதவைகளும் பேதுருவுக்கு தொற்காள் எவ்வாறு சேவை செய்து வாழ்ந்தார் என்பதைக் காட்டினார்கள் (வச. 39). இரக்கத்தின் ஒரு அற்புதமான செயலில், பேதுரு தொற்காளை மீண்டும் உயிர்ப்பித்தார். தொற்காளின் உயிர்த்தெழுதலின் செய்தி பரவியது, மேலும் ” அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள் ” (வச. 42). ஆனால் நடைமுறை வழிகளில் மற்றவர்களுக்குச் சேவை செய்வதில் தொற்காளின் அர்ப்பணிப்பு, அவளுடைய சமூகத்தின் இதயங்களைத் தொட்டதுமல்லாமல் அன்புடன்கூடிய தாராள மனப்பான்மையையும் வெளிப்படுத்தியது.

ஆசிரியர்: சோச்சிடில் டிக்சன்

சிந்தனை

இன்று உங்கள் அன்பான வார்த்தைகளாலும் செயல்களாலும் ஒருவரை எப்படி நேசிக்க முடியும்? தேவன் உங்களை தம்மிடம் இழுத்துகொள்ள வேறொருவரின் தயவை எவ்வாறு பயன்படுத்தினார்?
அன்பான தேவனே, ஒவ்வொரு நாளும் நடைமுறையான வழிகளில் மற்றவர்களை நேசிக்க எனக்கு உதவும், அதனால் மற்றவர்களை உம்மிடம் நேராகச் சுட்டிக்காட்டும் தயவின் மரபை நான் விட்டுச் செல்ல முடியும்.

 

 

 

banner image