ஓநாய்க்கு உணவளித்தல்
ஒரு வயதான அமெரிக்க சிவப்பு இந்திய தலைவர் தனது பேரனுடன் நெருப்பின் முன் அமர்ந்திருந்தார். அச்சிறுவன் பழங்குடியினருக்கான தடையை உடைத்தெறிந்தான். அவனுடைய தாத்தா எது அவனை அவ்வாறு செய்ய ஊக்குவித்தது என்பதை அவனுக்கு புரிய வைக்க விரும்பினார். தலைவர் தன் பேரனிடம் “நமக்குள் இரண்டு ஓநாய்கள் இருக்கிறது. ஒன்று நல்லது, மற்றொன்று கெட்டது. இவ்விரு ஓநாய்களும் நம் கீழ்ப்படிதலை கோரி நிற்கின்றன” என்றார்.
“எது வெற்றி பெற்றது?” என்று சிறுவன் கேட்டான்.
“நாம் எந்த ஓநாய்க்கு உணவளித்தோமோ அதுதான்!” என்றார் தலைவர்.
இயேசுவின் ஒவ்வொரு சீஷரும் இந்தப் போராட்டத்தை அடையாளம் கண்டுகொள்ளலாம். சுயநலம் மற்றும் பாவ ஆசைகளுடன் நாம் தொடர்ந்து போரிடுகிறோம். முதலில் அவை சிறிய “தீங்கற்ற” ஆசைகளாயிருக்கலாம். ஆனால் அவை வலுவடைந்து இறுதியில் நம்மைக் கட்டுப்படுத்த முடியும் (ரோமர் 6:16).
இதை எதிர்த்துப் போராட, சோதனையின் வல்லமையைப் பற்றி வேதம் சொல்வதை நாம் நம்ப வேண்டும். பரிசுத்த ஆவியானவர் நாம் அதை எதிர்க்கவும், அதன் வல்லமையிலிருந்து விடுபடவும் உதவுவார் என்றும் நாம் நம்ப வேண்டும்.
பின்னர் கடினமான ஒரு பகுதி வருகிறது. ஒரு தீய ஆசை தீவனமளிக்கக் கோரும்போது, நாம் இல்லை என்று சொல்ல வேண்டும். ஒருவேளை அதற்காகத்தான் பவுல் மீண்டும் மீண்டும், “துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்”(13:14) என்றும் கூறுகிறார்.
நினைவில் கொள்ளுங்கள், நாம் எதற்கு உணவளிப்போமோ, அதுவே நம்மைக் கட்டுப்படுத்தும்.
-டேவிட் எக்னர்
|
|
|