ஆறுதலின் கை
ஒரு சிக்கலான இதய அறுவை சிகிச்சையிலிருந்து நான் விழித்தபோது எனக்கு ஒவ்வாமை ஏற்பட்டது. தொண்டைக்குக் கீழே இருந்த ஒரு குழாய், எனக்கு உறுத்தலாக இருந்தது. என் உடல் கடுமையாக நடுங்க ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில், என் படுக்கையின் வலது பக்கம் இருந்த ஒரு செவிலியரின் உதவியாளர் வந்து என் கையைப் பிடித்தார். இச்செயல் நான் எதிர்பார்க்காத ஒன்று, என்னை மிகவும் மென்மையாக உணரச் செய்தது. நான் ஓய்வெடுக்க ஆரம்பித்தேன். அந்த ஓய்வு மோசமான என் உடல் நடுக்கத்திலிருந்து என்னைக் காத்தது.
மற்ற நோயாளிகளுக்கும் இதே போல் ஆறுதல் கரம் அளித்து அச்செவிலியர் உதவியிருந்தமையால், அச்செயல் எனக்கும் உதவியது. தம் பிள்ளைகள் துன்பப்படும்போது தேவன் எவ்வாறு ஆறுதலளிக்கிறார் என்பதற்கு இது ஒரு தெளிவான உதாரணம்.
ஆறுதல் என்பது எந்தவொரு பராமரிப்பாளருக்கும் ஒரு வல்லமை நிறைந்த மற்றும் மறக்கமுடியாத கருவியாகும். மேலும் இது தேவனின் கருவிப்பெட்டியின் ஒரு முக்கிய பகுதி என பவுல் 2 கொரிந்தியர் 1:3-4 இல் கூறுகிறார். தேவன் நமக்குத் தரும் ஆறுதலின் நினைவைப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு நாம் ஆறுதல் அளிப்பதன் மூலம் தேவன் ஆறுதலின் தாக்கத்தைப் பெருக்குகிறார் (வவ. 4-7). இது அவருடைய மகத்தான அன்பின் மற்றொரு அறிகுறியாகும். மேலும் இது நாம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒன்றாகும். சில சமயங்களில், நாம் எளிமையான சைகைகளின் மூலம் கூட, பிறருக்கு ஆறுதல் அளிக்கலாம்.
-ராண்டி கில்கோரால்
|
|