கரிசனையூள்ள ஒரு வார்த்தை
என் பெற்றௌரின் நாற்பதாவது திருமண ஆண்டு நிறைவடைந்த சில நாட்களில் எனது தந்தை காலமானபோது, எனது தாயார் அதிகமாக துயரமடைந்தார் ஆனால் அவர் கவலையூம் அடைந்தார். யார் கட்டணங்களைச் செலுத்துவார்கள்? தன்னிடத்தில் போதுமான பணம் உள்ளதா? வீட்டினை பழுது பார்க்கும் தேவையேற்படின் அதற்கு என்ன செய்வது? ஆனால் விரைவிலேயே தன்னுடைய கவலைகள் அவசியமற்றவை என்பதை அவர் கற்றுக்கொண்டார். எனது தந்தை, தனது மரணத்திற்கு முன்பே, தான் இறந்த பிறகு தாயாருக்கு அவசியமான அனைத்து நிதித்தேவைகளையூம் சந்திக்க ஏதுவாக மிகுந்த சிரத்தையூடன் ஏற்பாடு செய்து வைத்திருந்தார். இதைத் தவிர, எனது சகோதரியூம், நானும் எமது தாயாருக்கு வேறெந்த தேவைகளாவது ஏற்படும் பட்சத்தில் அவருக்கு உதவூவதற்கு எம்மை அர்ப்பணித்திருந்தோம்.
இவ்வாறாகக் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளும் விடயமானது இயேசுவின் இறுதி வார்த்தைகளில் ஒரு சிறப்பான முக்கியத்துவத்தைப் பெறுகிறது. சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தபோதிலும், இயேசு தமது தாய் மரியாளையூம், தாம் அன்புகூர்ந்த சீஷனாகிய யோவானையூம் பார்த்தார். பின்பு அவர் இந்த உருக்கமான வார்த்தைகளைக் கூறினார்: “ஸ்திரீயே, அதோஇ உன் மகன்” என்றும்இ யோவானை நோக்கி, “அதோஇ உன் தாய்” (யோவான் 19:26-27).
துக்கத்தின் பிடியில் இருந்த அந்த முக்கியமான தருணத்தில் பகிரப்பட்ட அற்புதமான அன்பின் வார்த்தைகள் அவை. யூத பாரம்பரியத்தின்படி, மரிக்கும் தறுவாயில் இருக்கும் ஒரு மகன் தன் தாயாரைப் பராமரிக்கும் பொறுப்பை தனது உடன்பிறந்த சகோதரன் ஒருவரிடம் ஒப்படைப்பது வழக்கம். இயேசுவின் விஷயத்திலும், (மத்தேயூ 13:55-ன்படி) மரியாளின் கணவரான யோசேப்பு அதற்கு முன்பே மரித்திருக்கக்கூடுமென்பதால், அவருடைய சகோதரர்களிடந்தான் பொறுப்பை ஒப்படைத்திருக்கவேண்டும். ஆனால் அந்த சமயத்தில், இயேசுவின் சகோதரர்கள் அவரை கிறிஸ்துவாக — அதாவது மேசியாவாக —இன்னும் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை.
மரியாளினது நலனில் கவனம் செலுத்திய இயேசு, அவளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பாளராக தமது சீஷனாகிய யோவானை நியமித்தார். “அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்” (யோவான் 19:27). கிறிஸ்து செய்த இக் காரியமானது, அனைத்து விசுவாசிகளும் கடவூளுக்குள் ஒரு புதிய குடும்பத்தின் அங்கத்தவர்கள் என்ற உண்மையையே பிரதிபலிக்கிறது@ இதுவே சிலுவையின் பாதத்தில் நம்முடைய கரிசனையூள்ள பிணைப்பை நிலைநாட்டுகிறது.
பட்ரீசியா ரேபோன
விசுவாசிகளை ஒரே குடும்பமாகப் பார்ப்பது என்பது, உங்களுக்கு என்ன அர்த்தத்தைத் தருகிறது?
அன்புள்ள இயேசுவே, சக விசுவாசிகளுக்கு உதவ நான் ஆயத்தமாகவூம் விருப்பமுள்ளவனாகவூம் இருப்பதற்கு எனக்கு உதவி செய்யூம்.
|
|
|
|
