மத்தேயு 1:18-25

18. இயேசுகிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. 19. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். 20. அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனiவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே, அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. 21. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக;  ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். 22. தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. 23. அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். 24. யோசேப்பு நித்திரைதெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு; 25. அவன் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.

இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும். பிலிப்பியர் 2:10

விதைகளிலிருந்து அரச மரங்களை முளைக்கச் செய்து, கருவாக வாழ்க்கையைத் தொடங்கச் செய்தவரை கற்பனை செய்து பாருங்கள்; நட்சத்திரங்களை கருப்பையில் சமர்ப்பிக்கச் செய்தவரை கற்பனை செய்து பாருங்கள்; நாம் ஒரு அல்ட்ராசவுண்டில் வெறும் புள்ளியாக கருதுகின்ற ஒன்றின் மூலம் வானங்களை நிரப்புபவர் அவரே. தேவனுக்கு சமமாய் இருந்த இயேசு தன்னை வெறுமையாக்கிக்கொண்டார். என்ன ஒரு வியக்கத்தக்க சிந்தனை!

ஒரு எளிய கிராமத்தில், மேய்ப்பர்கள், தேவதூதர்கள் மற்றும் வானத்தில் பிரகாசமான விளக்குகள் மத்தியில், மிருகஜீவன்களின் சத்தத்துடன் அவர் பிறந்த காட்சியை கற்பனை செய்து பாருங்கள். ஒரு இளைஞனாக, பிரமாண்டமான கேள்விகளுக்கு பதில்களுடன் வியக்க வைக்கும் போதகராக, யோர்தானில் ஒரு இளைஞனாக பரலோகத்திலிருந்து தனது பிதாவின் அங்கீகாரத்தைப் பெறுவது, மற்றும் வனாந்தரத்தில், அவர் பசியிலும் ஜெபத்திலும் போராடுவது போல என்று அனைத்துவிதத்திலும் அவர் தயவிலும் அந்தஸ்திலும் வளர்வதைப் பாருங்கள்.

அதைத்தொடர்ந்து அவர் வியாதியஸ்தர்களை சுகமாக்குதல், குஷ்டரோகிகளை தொடுதல், தீட்டானவர்களை மன்னித்தல் போன்ற உலகத்தையே மறுரூபமாக்கும் பணியைத் தொடங்குவதைப் பாருங்கள். ஆத்தும வியாகுலத்தினால் அவர் ஒரு தோட்டத்தில் மண்டியிட்டு ஜெபிப்பதையும், அவரது நெருங்கிய சிநேகிதர்கள் அவரை விட்டு ஓடிப்போகும்போது, அவர் கைது செய்யப்படுவதையும் பாருங்கள். அவர் கணவீனப்படுத்தப்பட்டு, இரண்டு மரக் கம்பங்களில் ஆணியடிக்கப்படுவதைப் பாருங்கள்; உலகத்தின் பாவங்கள் அனைத்தும் அவரது தோள்களின் மீது சுமத்தப்பட்டுள்ளது. ஆனால், ஆம், கல் உருண்டு விழுவதைப் பாருங்கள், ஒரு வெற்று கல்லறை வெறுமையாக்கப்பட்டு நிற்கிறது; ஏனென்றால் அவர் உயிரோடு எழுந்தார்!

அவர் உன்னதத்திற்கு உயர்த்தப்படுவதைப் பாருங்கள். அவரது நாமம் வானத்தையும் பூமியையும் நிரப்புவதைப் பாருங்கள் (பிலிப்பியர் 2:10–11).

ஒரு அல்ட்ராசவுண்டில் ஒரு புள்ளியாக மாறிய நட்சத்திரங்களை உருவாக்கிய பிரம்மாண்டமான தேவனே எங்கள் கிறிஸ்துமஸ் குழந்தை.

இயேசு பிறக்கவில்லை என்றால் வாழ்க்கையும் வரலாறும் எப்படி இருந்திருக்கும்? தேவனுக்கு நன்றி சொல்ல நீங்கள் என்ன ஜெபத்தை அல்லது பாடலை பாடக்கூடும்?

இயேசுவே, காணக்கூடாத ஒளியில் வாசம்செய்வதற்காய் உமக்கு நன்றி!