மாற்கு 9:17-29
17. அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன். 18. அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைக்கழிக்கிறது; அப்பொழுது அவன் நுரைதள்ளி, பல்லைக் கடித்து, சோர்ந்துபோகிறான். அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரிடத்தில் கேட்டேன்; அவர்களால் கூடாமற் போயிற்று என்றான். 19. அவர் பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றார். 20. அவனை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள். அவரைக் கண்டவுடனே, அந்த ஆவி அவனை அலைக்கழித்தது; அவன் தரையிலே விழுந்து, நுரைதள்ளிப் புரண்டான். 21. அவர் அவனுடைய தகப்பனை நோக்கி: இது இவனுக்கு உண்டாகி எவ்வளவு காலமாயிற்று என்று கேட்டார். அதற்கு அவன்: சிறுவயதுமுதற்கொண்டே உண்டாயிருக்கிறது; 22. இவனைக் கொல்லும்படிக்கு அது அநேகந்தரம் தீயிலும் தண்ணீரிலும் தள்ளிற்று. நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால், எங்கள் மேல் மனதிரங்கி, எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்றான். 23. இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார். 24. உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான். 25. அப்பொழுது ஜனங்கள் கூட்டமாகய் ஓடிவருகிறதை இயேசு கண்டு, அந்த அசுத்த ஆவியை நோக்கி: ஊமையும் செவிடுமான ஆவியே, இவனை விட்டுப் புறப்பட்டுப்போ, இனி இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதட்டினார். 26. அப்பொழுது அது சத்தமிட்டு, அவனை மிகவும் அலைக்கழித்துப் புறப்பட்டுப்போயிற்று. அவன் செத்துப்போனான் என்று அநேகர் சொல்லத்தக்கதாகச் செத்தவன்போல் கிடந்தான். 27. இயேசு அவன் கையைப் பிடித்து, அவனைத் தூக்கினார்; உடனே அவன் எழுந்திருந்தான். 28. வீட்டில் அவர் பிரவேசித்தபொழுது, அவருடைய சீடர்கள்: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று அவரிடத்தில் தனித்துக் கேட்டார்கள். 29. அதற்கு அவர்: இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.
விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும். மாற்கு 9:24
“நீண்ட காலமாக சந்தேகம், அதிலிருந்து தப்பிக்க எண்ணி நீங்கள் ஒருவேளை சோர்வடையக்கூடும்” என்று சோனு யோசித்தார். சந்தேகங்கள் ஆழமாக வேர்விட்டு, “நான் யார்” என்பதையே கேள்வியாக்கிவிடக்கூடும். ஆனால் புற்றுநோய் சிகிச்சையின் போது, சந்தேகம் நம் நம்பிக்கையையோ அல்லது நமது எதிர்காலத்தையோ வரையறுக்க வேண்டியதில்லை என்பதையும் அவர் கற்றுக்கொண்டார்.
உண்மையான தெய்வம் யார் என்பதை ஆராய்வதை விட, சோனு தன்னை வழிநடத்திக்கௌ;ள தீர்மானித்தார். “ஜீவனுள்ள தேவன் மீட்டு காப்பாற்றக்கூடியவர். அவர் நமக்குள்ளே நுழைந்து நம்முடைய எதிர்பார்ப்பு என்னும் இரும்பு கம்பிகளை தகர்க்கிறார்” என்று உறுதியாய் நம்பினார். “அவர் பார்வோனை மேற்கொள்ளும், செங்கடலை இரண்டாய் பிளக்கும், வானத்தைத் திறக்கும், பூமியை அசைக்கும், கிறிஸ்துவை ஒப்புக்கொடுக்கும், கல்லறையை வெறுமையாக்கும் தேவன். அவர் செய்ய நினைத்தது தடைபடாது.”
மாற்கு நற்செய்தியில், ஒரு நம்பிக்கையிழந்த தகப்பன் இயேசுவை அணுகினார். பல வருட விரக்திக்குப் பிறகு, பிசாசு பிடித்த தனது மகனுக்கான அனைத்து நம்பிக்கையையும் அவர் இழந்துவிட்டார் (9:21-22). “நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால், எங்கள் மேல் மனதிரங்கி, எங்களுக்கு உதவிசெய்யவேண்டும்” (வச. 22) என்று இயேசுவிடம் மன்றாடினான்.
“நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்” (வச. 23) என்று இயேசு சொல்ல, உடனே பிள்ளையின் தகப்பன், “விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான்” (வச. 24). தகப்பன் தனக்குள் இருக்கும் சந்தேகங்களைக் குறித்து நேர்மையாய் இருந்தார், அதேவேளையில் இயேசுவில் தன்னுடைய சிறிய நம்பிக்கையை வைத்தார். அப்போதுதான் இயேசு மாற்றத்தையும் நம்பிக்கையையும் கொண்டுவருவதற்கான விருப்பத்தைக் கண்டார் (வச. 25-27).
பல வருடங்களாக இடைவிடாமல் போராடிய பிறகு அல்லது நீங்கள் தகுதியற்றவர் என்று ஒத்துக்கொண்ட பிறகும் நீங்கள் சந்தேகிக்கக்கூடும். நீங்கள் எவ்வளவு பலவீனமாக இருந்தாலும், நடுங்கினாலும் அல்லது பயந்தாலும், இயேசுவில் உங்கள் விசுவாசத்தை வைப்பதில் இன்று அந்த பிள்ளையின் தகப்பனுடன இணைந்துகொள்ளுங்கள். அவர் நம்மோடு இருக்கிறார். உங்களுக்கும் எனக்கும் சிறந்தது என்று அவர் நம்பும் நன்மையை கொடுப்பதற்கு அவர் ஆயத்தமாயிருக்கிறார்.
இந்த நேரத்தில் நீங்கள் என்ன சந்தேகங்கள் அல்லது நிச்சயமற்ற தன்மைகளுடன் போராடுகிறீர்கள்? இயேசுவின் குணாதிசயத்திலும், அவருக்கு செவிகொடுப்பதிலும் கவனம் செலுத்துவது உங்கள் பயங்களை எவ்வாறு குறைக்கிறது?
அன்புள்ள இயேசுவே, என் சந்தேகங்ளோடு என்னை நான் இருக்கும் நிலையில் ஏற்றுக்கொண்டதற்காய் உமக்கு நன்றி. தயவுசெய்து என் அவிசுவாசத்தில் எனக்கு உதவிசெய்யும். இன்று எனக்குத் தேவையானதை நீர் கொடுக்க போதுமானவர் என்று விசுவாசிக்கிறேன்.