மாற்கு 2:13-17
13. அவர் மறுபடியும் புறப்பட்டுக் கடலருகே போனார்; அப்பொழுது ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள்; அவர்களுக்குப் போதகம்பண்ணினார். 14. அவர் நடந்துபோகையில், அல்பேயுவின் குமாரனாகிய லேவி ஆயத்துறையில் உட்கார்ந்திருக்கிறதைக் கண்டு: எனக்குப் பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்சென்றான். 15. அப்பொழுது, அவனுடைய வீட்டிலே அவர் போஜனபந்தியிருக்கையில், அநேக ஆயக்காரரும் பாவிகளும் அவரோடுகூட வந்திருந்தபடியால், அவர்களும் இயேசுவோடும் அவர் சீஷரோடுங்கூடப் பந்தியிருந்தார்கள். 16. அவர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம்பண்ணுகிறதை வேதபாரகரும் பரிசேயரும் கண்டு, அவருடைய சீஷரை நோக்கி: அவர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம் பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள். 17. இயேசு அதைக் கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.
நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன். மாற்கு 2:17
இயேசுவை சந்திப்பதற்கு முன்பாக பதினெட்டாம் நூற்றாண்டின் பாடலாசிரியரான வில்லியம் கூப்பர் என்பவர் தன்னை “சபிக்கப்பட்டவன், நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவன்” என்று அடையாளப்படுத்தினார். மூன்று தோல்வியுற்ற தற்கொலை முயற்சிகள் மற்றும் ஒரு மனநல மருத்துவமனையில் நீண்ட காலம் தங்கிய பிறகு, அவர் இந்த அளவிற்கு தொலைந்து போனதாக தன்னுடைய வாழ்க்கையில் உணர்ந்ததில்லை.
ஒரு நாள், ஒரு இருக்கையில் ஒரு வேதாகமம் கிடப்பதைக் கண்டார். தன்னைப் போலவே நம்பிக்கையற்ற தனிநபர்களிடம் இயேசுவின் அன்பு மற்றும் இரக்கத்தை அவர் அமர்ந்து படித்தார். “நமது இரட்சகரின் நடத்தையில், துயரமடைந்த மனிதர்களிடம் நான் மிகுந்த கருணை, இரக்கம், நன்மை மற்றும் அனுதாபத்தைக் கண்டேன். அந்த வெளிப்பாட்டைக் கண்டு நான் கண்ணீர் சிந்தினேன்; அதே இரக்கத்தை தான் இயேசு எனக்கும் காண்பித்திருக்கிறார் என்பதை என்னால் சற்றும் சிந்தித்துப்பார்க்க முடியவில்லை.”
அந்த இருக்கையில் இயேசுவுடன் அமர்ந்தபோது, “ஆயக்காரரும் பாவிகளும்” அவருடன் புசித்து குடித்தபோது பெற்ற அதே அன்பை கூப்பரும் அனுபவித்தார் (மாற்கு 2:15). இந்தக் கூட்டத்தினர், புறக்கணிக்கப்பட்டவர்கள், அன்பற்றவர்கள், விரக்தியடைந்தவர்கள், கூப்பரின் கூற்றுப்படி “பிரச்சனைக்குரியவர்கள்.” நான் “நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன்” என்று பரிசேயர்களுக்குத் தாம் தேர்ந்தெடுத்த சிநேகிதர்களைப் பற்றி இயேசு விளக்கினார் (வச. 17). “வியாதியஸ்தர்கள்” என்று அறியப்பட்டவர்களுக்கு அவர் ஒரு “மருத்துவராக” வந்தார்.
இன்று நீங்கள் “பாவிகளின் மேசையில்” உட்கார்ந்திருப்பது போல் தோன்றினால், எந்த வகையிலும் பரிதாபமாகவோ அல்லது நம்பிக்கையற்றதாகவோ உணர்ந்தால், இயேசு தனது தன்னுடைய நாற்காலியை நம்முடைய மேசையில் இழுத்து நம்மோடு அமர்கிறார் என்பதை நம்புங்கள். தாங்கள் தொலைந்து போனதாக உணர்கிறவர்களிடம் தான் இயேசு, “எனக்குப் பின்சென்றுவா” (வச. 14) என்று கூறுகிறார்.
கிறிஸ்தவராக மாறிய பிறகும் கூட, கூப்பர் சில சமயங்களில் தற்கொலை எண்ணங்களுடன் போராடினார். நீங்களும் இதேபோல் போராடுகிறீர்கள் என்றால், இயேசு தன்னை நம்முடைய மருத்துவராக சித்தரித்தது உங்களை எவ்வாறு ஊக்கமளிக்கிறது? இன்று இயேசுவுடன் இருக்கையில் எப்போது அமரப்போகிறீர்கள்?
அன்புள்ள இயேசுவே, என்னுடன் இருக்கையில் உட்கார்ந்ததற்காய் உமக்கு நன்றி. உம்முடைய இரக்கமும் தயவும் ஒருபோதும் தோற்றுப்போவதில்லை.