மத்தேயு 24:4-14, 32-33

4. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாத படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; 5. ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். 6. யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது. 7. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். 8. இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம். 9. அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள். 10. அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக் கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள். 11. அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். 12. அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம். 13. முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். 14. ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.

32. அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள். 33. அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்.

 

அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள். மத்தேயு 24:33

“நிச்சயமாக அது தெளிவாய் தெரியும்!” செய்தி சேனலில் கணிக்கப்பட்டுள்ள கோள்-அணிவகுப்பை நேரில் பார்த்தே ஆகவேண்டும் என்கிற எதிர்பார்ப்புடன், நிராஜ் தூங்குவதற்கு முன் விழித்திருந்தார். இதுபோன்ற ஒரு கோள் வரிசை தெரியும் அளவுக்கு வானம் பொதுவாக தெளிவாக இருக்காது. ஆனால் இந்த வானியல் நிகழ்வு குறித்து அவரது பள்ளியிலும் ஆன்லைனிலும் நிறைய உற்சாகமான பேச்சுக்கள் இருந்ததால், அந்த தாமதமான நேரத்தில் நாங்கள் எங்கள் மொட்டை மாடியில் கூடியிருந்தோம். மாம்ச கண்களுக்கு புலப்படாத கோள்களின் வரிசையை காணமுடிந்ததில் நாங்கள் ஆச்சரியப்பட்டோம். அது ஒரு அசாதாரண காட்சி! நிராஜ் விழிப்புடன் இருந்திருக்காவிட்டால் நாங்கள் அந்த நிகழ்வை தவறவிட்டிருப்போம்.

இயேசுவின் சீஷர்கள் அவர் மீண்டும் பூமிக்கு திரும்பி வருவதைப் பற்றி கேட்டபோது, அவர் அவர்களுக்கு முன் எச்சரிக்கையாக இருக்க அடையாளங்களைக் கொடுத்தார். இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளே (மத்தேயு 24:6-7) “வேதனைகளுக்கு ஆரம்பம்” (வச. 8). உபத்திரங்கள் மற்றும் வஞ்சிக்கிற காரியங்கள் பெருகும் (வச. 9-11); “முடிவுபரியந்தம் நிலைநிற்பது” கடினமாக்கும் (வச. 13). ஆயினும்கூட, சுவிசேஷம் உலகம் முழுவதும் பரவும் (வச. 14).

இந்த அழிவுக்கு ஏதுவான சம்பவங்கள் நிகழும்போது, இந்த உலகம் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக நாம் எண்ணக்கூடும். ஆனால் அப்படி எண்ணத்தேவையில்லை. இயேசுவின் வார்த்தைகள் நம் நம்பிக்கையைத் தூண்டுகின்றன. இவற்றைப் பார்க்கும்போது, “அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்” (வச. 33) என்று கூறுகிறார். நமது உலகின் அதிகரித்து வரும் குழப்பம் கிறிஸ்துவின் திட்டத்தை எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிடக்கூடியது அல்ல. அவர் சீக்கிரம் வருகிறார் என்பதை உறுதிப்படுத்துவதே அதின் நோக்கம்.

மத்தேயு 24 இல் இயேசு சுட்டிக்காட்டிய அடையாளங்களில் பெரும்பாலானவை நிகழ்வதை நீங்கள் காண்கிறீர்களா? சீக்கிரமாய் வரப்போகிற அவரது வருகை உங்களைச் சுற்றியுள்ள உலகில் உள்ள குழப்பத்தை நீங்கள் பார்க்கும் விதத்தை எவ்வாறு பாதிக்கிறது?

கர்த்தராகிய இயேசுவே, நீர் வந்து நீத்திய இளைப்பாறுதலைக் கொண்டுவரும் நாளுக்காக நான் ஏங்குகிறேன். உலகம் எவ்வளவு கட்டுப்பாட்டை மீறியதாகத் தோன்றினாலும், எதையும் தடுக்க முடியாத ஒரு திட்டம் உம்மிடம் இருக்கிறது என்பதற்காய் உமக்கு நன்றி.