பிலிப்பியர் 2:5-11
தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். பிலிப்பியர் 2:7
பரத் தனது புதிய வேலைக்கு முதல் நாள் சென்று கொண்டிருந்தபோது, பழுதடைந்திருந்த தனது காரின் ஓரத்தில் ஒரு பரபரப்பான காலைப் பொழுதில் நின்றார். மோட்டார் சைக்கிளில் அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த ரஸ்ஸல், உதவி செய்ய நின்றார். பரத் நகரத்திற்குப் புதியவர் என்பதை அறிந்ததும், வெகு தொலைவில் உள்ள தனது அலுவலகம் வரை லிஃப்ட் கொடுத்து, வேலை முடிந்ததும் அவரை அழைத்து வந்து தனது காரில் இறக்கிவிடுவதாகக் கூறினார். அதற்குள் பரதனின் காரை சரிசெய்ய ஒரு மெக்கானிக்கையும் ஏற்பாடு செய்வதாகக் கூறினார்.
இயேசு பரலோகத்திலிருந்து இறங்கி மனுஷமாய் எடுத்த தியாகமான அவதாரத்தை விட, ரஸ்ஸலின் சிரத்தையான பயணம் மற்றும் கூடுதல் முயற்சி பெரிதில்லை. காலத்திற்கும் புவியியல் அமைப்பிற்கும் அப்பாற்பட்ட உலகத்திலிருந்த இயேசு நம்முடைய உலகிற்குள் நுழைந்தார். அவர் பரலோக சலுகையை இழந்தார். தோலினால் ஆன வஸ்திரத்தை உடுத்தினார். அவர் தன்னை வெறுமையாக்கினார் (பிலிப்பியர் 2:7). கடவுள் மனிதனாக மாறியதே நமக்கு போதுமான அற்புதம்; ஆனால் இயேசுவோ அத்துடன் நிறுத்தாமல் நமக்காக சிலுவையில் அறையப்பட்டு, “மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்” (வச. 8).
இயேசுவின் தியாகம் மிகவும் மகத்தானது, இயேசுவுக்கு தகுதியற்றது, இரக்கத்தால் இயக்கப்பட்டது, இயேசு பரத்திற்கு திரும்பும் பயணம் நீண்ட காலத்திற்கு முந்தினது, “ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி(னார்)” (வச. 9). இன்று, கிறிஸ்துவின் செலவில் நமக்காக ஏற்ப்படுத்தப்பட்ட அந்த நீண்ட நித்திய பயணத்தில் நாம் மீண்டும் மகிழ்ச்சியடைவோமாக.
இயேசுவின் அவதாரத்தின் எந்த அம்சம் உங்களை மிகவும் வியக்க வைக்கிறது? எந்த கிறிஸ்மஸ் கேரல் பாடல் இயேசுவின் முதல் வருகையை வியப்பாக்குகிறது?
இரக்கமுள்ள இயேசுவே, எங்களில் ஒருவராக மாறுவதற்காக உங்களைத் தாழ்த்தியதற்காய் உமக்கு நன்றி. நீர் எங்களிடம் காட்டும் விலைமதிப்பற்ற அன்புக்காய் உமக்கு நன்றி.