சங்கீதம் 118:1-14

1. கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது. 2. அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வதாக. 3. அவர் கிருபை என்றுமுள்ளதென்று, ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக. 4. அவர் கிருபை என்றுமுள்ளதென்று, கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் சொல்வார்களாக. 5. நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார். 6. கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்? 7. எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன். 8. மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். 9. பிரபுக்களை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். 10. எல்லா ஜாதியாரும் என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன். 11. என்னைச் சுற்றிலும் வளைந்து கொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன். 12. தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன். 13. நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்; கர்த்தரோ எனக்கு உதவி செய்தார். 14. கர்த்தர் என் பெலனும், என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானார்.

 

கர்த்தர் என் பெலனும், என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானார். சங்கீதம் 118:14

ஒரு பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் வர்ணனையாளர், தனது வேலையை மிகவும் நேசிப்பதாகக் கூறுகிறார். ஆனால் அதேநேரத்தில், தனது தொழில் தனது வாழ்க்கையை தீர்மானிக்கிறதை அவர் விரும்பவில்லை. மாறாக, தனது “குடும்பம், நண்பர்கள் மற்றும் நம்பிக்கை” போன்றவைகளை வைத்தே தன் வாழ்க்கையை தீர்மானிக்க விரும்புகிறார். மேலும் அவர், “சில நேரங்களில் தொழில் ரீதியாய் கிடைக்கும் புகழ் மற்றும் செல்வங்கள் ஆகியவைகள் முக்கியமில்லாத விஷயங்கள்” என்று கூறுகிறார்.

பொது பார்வையில் அவர் சேவை செய்யும்போது அவர் இயேசுவுக்கு உண்மையாக இருக்க விரும்புகிறார். “நம்பிக்கையைப் பொறுத்தவரையில் கிறிஸ்தவம் எனக்கு மிகவும் முக்கியமானது, ஏனெனில் அது வாழ்க்கையைக் குறித்த ஒரு கண்ணோட்டத்தைக் கொடுக்கிறது” என்று எண்ணுகிறார்.

மற்ற நபர்களிடமிருந்து அல்லாமல், அவர் தேவனிடத்திலிருந்து தனது உறுதியைப் பெறும்போது, அவர் “புகழ்ச்சி என்னை ஒருபோதும் உயர்த்துவதில்லை, விமர்சனம் என்னை ஒருபோதும் தாழ்த்துவதில்லை” என்கிறார். இதில் அவர் சங்கீதக்காரரை எதிரொலிக்கிறார்: “மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்” (சங்கீதம் 118:8). இந்த சங்கீதத்தின் ஆசிரியர் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அது தாவீது ராஜாவாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் இந்த பாடல் இரண்டாவது ஆலய பிரதிஷ்டையின் போது பாடப்பட்டது (எஸ்ரா 3:11 ஐப் பார்க்கவும்). தாவீது ஒரு ஆடுமேய்க்கும் சிறுவனாயிருந்தபோதும், பின்னர் சவுலிடமிருந்து தப்பி ஓடியபோதும் தேவனுடைய அன்பான பாதுகாப்பை நன்கு அறிந்திருந்தார். எனவே, “கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்?” (வச. 6) என்று அவர் தைரியமாகச் சொல்ல முடிந்தது.

நாம் எதிரிகளிடமிருந்து தப்பிக்கவோ அல்லது தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவோ இருக்கவேண்டும் என்று அவசியமில்லை; ஆனால் நாமும் நமது அன்பான மற்றும் சர்வ வல்லமையுள்ள தேவன் மீது நம்பிக்கை வைக்கலாம். அவர் நமக்கு உதவி செய்பவர், அவரை நாம் முழுமையாக நம்பலாம்.

தேவனை மகிழ்விப்பதை விட, மக்களை மகிழ்விப்பதைத் தவிர்ப்பது எப்படி, அல்லது தேவனுடைய சத்தத்திற்கு செவிகொடுப்பதற்கு பதிலாக மற்றவர்களின் கருத்துகளில் உங்கள் மதிப்பைக் கண்டுபிடிப்பது எப்படி? இன்று கர்த்தருடைய வாக்குறுதியை நீங்கள் எவ்வாறு பெற முடியும்?

சிருஷ்டிகரான தேவனே, நீர் என்னை உமது சாயலில் படைத்தீர், நான் அற்புதமாகப் படைக்கப்பட்டிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். உமது பரிசுத்த ஆவியின் வல்லமையால் என்னை என்னுடைய சுயத்திலிந்து மீட்டுக்கொள்ளும்.