யோவான் 10:1-11

1. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான். 2. வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான். 3. வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக் கொண்டுபோகிறான். 4. அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது. 5. அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போம் என்றார். 6. இந்த உவமையை இயேசு அவர்களுடனே சொன்னார்; அவர்களோ அவர் சொன்னவைகளின் கருத்தை அறியவில்லை. 7. ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று  மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 8. எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள்; ஆடுகள் அவர்களுக்குச் செவி கொடுக்கவில்லை. 9. நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். 10. திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். 11. நானே நல்ல மேய்ப்பன்; நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.

அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லா(து). யோவான் 10:5

நான் அதைக் கண்டபோது, அது பசியாகவும், அழுக்காகவும், மற்றவர்களுடைய கவனத்திற்காக ஏங்கிக் கொண்டும் இருந்தது. அதனை ஒரு கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்று உணவளித்த பிறகு, நான் டெய்ஸி என்று அந்த பூனைக்கு பெயரிட்டு அதை என்னுடன் வீட்டிற்கு அழைத்து வந்தேன்.

முதலில், அது எவரிடமும் சென்று அவர்களின் மடியில் ஏறழ அமர்ந்துகொள்ளும். ஆனால் இப்போது அது என்னுடன் உணர்ச்சிப்பூர்வமாய் பிணைக்கப்பட்டதால், அது என்னை விட்டு வெளியேற மறுக்கிறது. அது என் பூனையாக இருப்பதை விரும்புகிறது. என் அருகில் தூங்கி, நான் செல்லும் இடங்களிளெல்லாம் என்னைப் பின்தொடர்கிறது. அது மிகவும் தன்னம்பிக்கை கொண்ட ஒரு ஜீவன். ஆனால் அந்நியர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறது.

இயேசு நம்மை தேடிவந்தபோது, நாமும் ஆறுதலுக்காய் ஏங்கிக்கொண்டிருந்தோம். பாவமும் அவமானமும் நம்மைக் கசப்பானவர்களாகவும், மீட்பை நேசிக்க வேண்டும் என்ற ஏக்கமுள்ளவர்களாகவும் உணர வைத்தது. நம்மை ஆடுகளுக்கு ஒப்பிட்டு, தன்னை “நல்ல மேய்ப்பன்” என்று அழைத்து, இயேசு, “நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான்” (யோவான் 10:9) என்று கற்பித்தார். அவர் நம்மைக் காப்பாற்றுகிறார்; நம்மைச் சுத்திகரிக்கிறார்; நம்மை போஷிக்கிறார்; நம்மை வழிநடத்துகிறார்.

உலகில் உள்ள மற்ற குரல்கள் நம்மை வித்தியாசமான வாழ்க்கை முறையை முயற்சிக்க அழைக்கும்போது, இயேசுவிடமிருந்து நகராமல், நாம் என் பூனையைப் போல எதிர்வினையாற்றுவோம். “அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போம்” (வச. 5).

நல்ல மேய்ப்பரான இயேசு நம்மை மீட்டெடுத்தார். டெய்சி என் பூனையாக இருப்பதை விரும்புவது போல, அவருடைய ஆடுகளாக இருப்பதையும் நாம் விரும்புவோம். அவர் நம்மை பரிபூரணமடையச் செய்வதில் மகிழ்ச்சியடைகிறார் (வச. 10).

இயேசுவுக்குச் சொந்தமானது பற்றி நீங்கள் எதை அதிகம் விரும்புகிறீர்கள்? அவர் உங்களுக்குக் கொடுக்கும் வாழ்க்கையின் பரிபூரணத்தை நீங்கள் எவ்வாறு விவரிப்பீர்கள்?

இயேசுவே, என்னைக் கண்டுபிடித்ததற்கும், என்னைக் காப்பாற்றியதற்கும், என்னை மீட்டெடுத்ததற்கும், என்னை உம்முடையதாக்கியதற்கும் உமக்கு நன்றி. நான் உமக்கு சொந்தமானவராக இருக்க விரும்புகிறேன்.