கௌன்ட் ஆஃப் மான்டி கிறிஸ்டோ திரைப்படத் தழுவலில் வரும் புகழ்பெற்ற காட்சியில் 16 வயதாகும் இளைஞனுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி அளிக்கப்பட்டது, “என் இளைய நண்பரே, வாழ்க்கை ஒரு புயல் போன்றது. ஒரு கணம் சூரிய ஒளியில் சுகமாக குளிர் காய்வாய் மறு கணத்தில் பாறையில் நொறுங்குவாய். அந்தப் புயல் வரும்போது நீ என்ன செய்வாயோ அதுதான் உன்னை மனிதனாக மாற்றுகிறது. நீ அந்த புயலைப் பார்த்து ரோமில் செய்தது போல, “உன்னுடைய மோசத்தை செய், நான் என்னுடையதை செய்கிறேன்!” என சத்தமிடலாம்”.

        முன் தீர்மானிக்கப்பட்ட அர்ப்பணிப்பு போல சுலபமாக இருந்தால் மட்டுமே நம்மால் வாழ்வில் ஏற்படும் புயல் போன்ற சூழ்நிலைகளை பாதிப்பில்லாமல் வெற்றிகரமாக கடந்து வருவோம் என்று அச்சந்தர்ப்பத்தின் கணத்தில் ஓர் எளிய பிரகடனத்தை உச்சரிக்க முடியும். அவை சாதாரண வார்த்தைகள் அல்ல, ஆனால் வரும் புயல்களை எதிர்கொள்ள நம்மை தயார்ப்படுத்திக்கொள்ள முடியும். நாம் நம் வாழ்வை திடமான அஸ்திபாரத்தில் கட்டினால், நம் வாழ்வில் வரும் காற்றும் மழையும் போன்ற துன்பங்களால் நம்மை அசைக்க முடியாது. நாம் சிறப்பாக செய்ய முடியும் என சத்தமிட வேண்டாம், ஆனால் நம்மால் மோசமான புயலையும் எதிர்த்து நிற்க முடியும்.

ஷெரிடன் வாய்ஸி

banner image

ரு நாள் நீங்கள் புல்லறுக்கும் போது இரண்டு காவல்துறை அதிகாரிகள் உங்களை நோக்கி வருகிறார்கள், உங்கள் பெயரை விசாரித்து, கைவிலங்கு மாட்டி உங்கள் வீட்டை சோதனை போட்டார்கள். அவர்கள் திருட்டுக்காக கைது செய்தார்கள். நிரபராதி என்று நீங்கள் சொன்ன உடனே அதற்கு ஒருவர் “நீங்கள் செய்தீர்களா இல்லையா என்பது குறித்து எனக்கு எந்த அக்கறையும் இல்லை உங்களுக்கு தண்டனை கிடைக்கும்” என்றார்.

        திருட்டு குற்றச்சாட்டு கொலை குற்றச்சாட்டாக மோசமாக மாறியது. அந்தக் கொலை நடந்த போது பதினைந்து மைல் தொலைவில் நீங்கள் வேலை செய்து கொண்டிருந்தீர்கள். “நீங்கள் செய்யவில்லை என்றால் உங்களுடைய சகோதரரில் ஒருவர் செய்திருப்பார்” என்று அதிகாரி கூறினார். கருப்பர் இனத்தை சேர்ந்தவர் என்பதால் வழக்கு ஜோடிக்கப்பட்டது என்பது புரிகிறது.

         நீங்கள் சிறைக்கு சென்றீர்கள். வழக்கு நீதிமன்றத்திற்கு வர காத்திருந்தீர்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுடைய வழக்கு விசாரிக்கப்பட்டது. நீதிபதி மரண தண்டனையை விதித்தார். 28 ஆண்டுகள் மரண தண்டனைக்காக காத்திருக்கிறீர்கள். இவ்வாறு நீங்கள் கற்பனை செய்து பாருங்கள்.

        இந்த பயங்கரமான கதை கதையன்று நிஜம். டிசம்பர் 1985இல் அந்தோணி ரே ஹின்டன் (Anthony Ray Hinton) என்பவர் அலபாமா, பிர்மிங்ஹாமில் உள்ள உணவகத்தின் மேலாளர்கள் இருவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். அவர் செய்யாத குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு 30 ஆண்டுகளை இழந்தார், இறுதியில் உச்ச நீதிமன்றம் 2015 புனித வெள்ளியில் அவருடைய மரண தண்டனையை ரத்து செய்தது .

அநீதியின் தாக்கம்

நான் முதலில் ரே ஹின்டனின் கதையைக் கேட்டபோது அநேக விஷயங்கள் என்னைத் தாக்கின. முதலாவது அவர் அவதிப்பட்ட அநீதியின் அளவு. கொலை ஆயுதமாகக் கருதப்பட்ட ஒரு சுழல் துப்பாக்கி அவர் அம்மா வீட்டில் கிடைத்ததன் அடிப்படையில்தான் ரேக்கு குற்றத்திற்கான தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த துப்பாக்கி இருபது ஆண்டுகளுக்கு மேலாக சுடப்படவில்லை. சரியான பாலிஸ்டிக் சோதனை நடத்தப்படவில்லை. ரேயின் முதல் வக்கீல் பாரபட்சம் உள்ளவராயும் திறமையற்றவராயும் இருந்ததால் நியாயமான விசாரணைக்கான வாய்ப்பு பத்து ஆண்டுகளாக தாமதப்பட்டது மற்றும் பொய் கண்டறியும் சோதனையில் தேர்ச்சி பெற்றாலும், அந்த முடிவை நீதிமன்றம் வசதியாக நிராகரித்தது.

        அடுத்தது, மரண தண்டனைக்காக சிறையில் காத்திருந்த போது அவர் சகித்துக் கொண்டது தான். அவருடைய சிறைக்கூடம் மிகச் சிறிது. அவர் தரையில் காலை மடக்கி தம் நெஞ்சருகே வைத்துக்கொண்டு தூங்குவார். இரவில் கொடுங்கனவுகள் கண்டு கைதிகள் அழுவர். சிலர் உயிரை விட்டனர். மரண தண்டனையை நிறைவேற்றும் இடத்திற்கு அடுத்து ரேயின் சிறை இருந்ததால், ஒவ்வொறு கைதிக்கு மரண தண்டனை நிறைவேற்றும்போது நடந்ததை கேட்டார் மற்றும் அதன் விளைவுகளை உணர்ந்தார்.

        ஆனால் ரேயின் கதையில் வேறு ஏதோ என்னை தாக்கியது. ஒரு வானொலி பேட்டியின்போது ஒரு பத்திரிக்கையாளர் ரே தமக்கு அநீதி இழைத்தவர்களை வெறுக்கவில்லை என்று குறிப்பிட்டார். “என்னால் (அவர்களை) வெறுக்க முடியாது,” என்று ரே சொன்னார், “ஏனென்றால் என் வேதாகமம் வெறுக்கக் கூடாது என்று போதிக்கிறது”. அவர் சகித்ததற்கான காரணத்தை அறிக்கையிட்டார்.

நீதிமன்றத்தின் கருணை

நீதிமன்றத்தில் அவர் இறுதி நாளில், ரே அவரின் விசாரணையில் ஈடுபட்டிருந்த ஒவ்வொருவரிடமும் உரையாற்றினார், “உங்களுக்கு நல்லது என்று தோன்றியதை எனக்கு செய்யுங்கள்”, என்று அவர் நீதிபதியிடம், “எனக்கு மரண தண்டனை தரும்போது நிச்சயமாக உங்கள் கரங்களில் இரத்தப்பழி சுமரும்” என்று கூறி அவர்களுக்காக ஜெபிப்பதாகக் கூறினார்.

        “நான் வெறும் ஒரு கருப்பு மனிதர், அது உங்களுக்கு ஒன்றும் இல்லை என்று அர்த்தமில்லை”, என்று குறிப்பாக கொடூரமான அரசுத்தரப்பு வழக்கறிஞரிடம் கூறினார். மேலும், “நான் உங்களை வெறுக்க வில்லை… நான் உங்களை நேசிக்கிறேன். எனக்கு எதிராக வழக்கு தொடர்ந்து, எனக்கு மரண தண்டனை அளிக்க முயற்சி செய்பவரை நான் நேசிக்கிறேன் என்று சொல்லுவது பைத்தியக்காரத்தனமாக தெரியலாம். ஆனால் உங்களை நேசிக்கிறேன்,” என்றார்.

        உறுதிமொழி எடுத்து பொய் கூறிய மாவட்ட வழக்கறிஞர், ஜாமீன்தார்கள் மற்றும் காவல்துறை துப்பறிவாளர்கள் அனைவரையும் பார்த்து ரே, “நீங்கள் செய்ததற்கு தேவன் உங்கள் அனைவரையும் மன்னிக்கவேண்டும் என்று ஜெபிக்கிறேன். நான் இறந்து போகப் போவது போல தான் நீங்களும் இறக்கப் போகிறீர்கள்… ஆனால் ஒன்று- என்னுடைய மரணத்திற்கு பிறகு, நான் பரலோகத்திற்குச் செல்வேன். நீங்கள் எங்கு செல்வீர்கள்?” என்று கேட்டார்.

        ரே ஹின்டன் அவருடைய சோதனை எவ்வளவு ஆழமான வடுவை ஏற்படுத்தும் என்பதும் அல்லது அவர் மன்னிப்பை தர விரும்புவது எவ்வளவு கடினம் என்பதையும் அப்போது அறியவில்லை. மரணத்தின் வாசலில் இருபத்தி எட்டு ஆண்டுகளாக காத்திருந்த அவர் தினமும் அவர்களுக்காக ஜெபித்தார். அதன் விளைவு ?

அவர் நரகத்திலும், ஆத்திரம் அல்லது வெறுப்பு இன்றி உயிர் பிழைத்தார்.
இந்த பெலனை ரே எங்கிருந்து பெற்றார்?

இரகசிய பெலன்

அந்த நாளில் நீதிமன்றத்தில் ரே “மேலே இருக்கும் ஒரு மனிதர் நான் அதை செய்யவில்லை என்று அறிவார். ஒரு நாள் நான் அதை செய்யவில்லை என்று உங்களுக்குக் காண்பிப்பார்,” என்றார். ரேக்கு நியாயம் வழங்கும் தேவன் மேலுள்ள விசுவாசம் தான், நம்பிக்கையையும் பெலனையும் தந்தது. ஆனால் அதைவிட அதிகமாக ஏதோ ஒன்று இருந்தது.

ரேயின் வார்த்தைகளை கவனித்தால் அது வேறு ஒருவருடைய வார்த்தைகளை எதிரொலிப்பதை காணமுடியும்:
“நான் உங்களை வெறுக்க வில்லை…நான் உங்களை நேசிக்கிறேன்”.
“நான் சொல்கிறேன், உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள் …”
“தேவன் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்…”
உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபியுங்கள்…”

        ரே தேவனுடைய நீதிக்காக காத்திருந்தபோது, காந்திக்கு அமைதியாக போராட வழி காண்பித்ததும், டீட்ரிச் போன்ஹோபருக்கு நாசிகளை எதிர்ப்பது எப்படி என்றதும் மற்றும் நமது அனுதின சொற்களஞ்சியத்தின் ஒரு பகுதியாக மாறிய “மறு கன்னத்தை காட்டு” மற்றும் “கூட ஒருமைல் தூரம் செல்வது” போன்ற சொற்றொடர்களை ஏற்படுத்தியதுமான, அந்த உரையின் வார்த்தைகளின் படி ரே நடந்து காட்டினார். அந்த உரை: மலைப் பிரசங்கம்.

        மத்தேயுவின் சுவிசேஷத்தில் மூன்று அதிகாரங்களில் (அதிகாரங்கள் 5-7), விரிந்துள்ள மலைப் பிரசங்கத்தை பதினைந்து நிமிடங்களில் வாசித்துவிட முடியும். ஆனால் இந்த வேதாகம சுருக்கத்தில், இயேசு ஜெபம் முதல்- மோதல் வரை, உறவு முதல் – உடைமை வரை அனைத்தையும் பற்றி உரையாற்றுகிறார். இருப்பினும், அனைத்திற்கும் ஒரு கருப்பொருள் அடிப்படையாக உள்ளது.

மீண்டெழும்பு.

         இயேசு இப்பொழுது – பிரபலமான இரண்டு வீடு கட்டுபவர்கள் கதையின் இறுதியில் இந்த கருப்பொருளை வெளிப்படுத்துகிறார். ஒருவர் புத்திசாலித்தனமாக, கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டினார். அடுத்தவர் மணலின் மேல் கட்டினார். புயலில் வீடு விழுந்தது. இயேசு இந்த எடுத்துக்காட்டு மூலம் தம் போதனையை நிறைவு செய்கிறார் :

ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு இவைகளின் படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து காற்று அடித்து அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது (மத்தேயு 7 :24 -25).

         சில நேரங்களில் மலைப்பிரசங்கம் வாசிப்பு சங்கடத்தை தருகிறது. சிலர் அதன் நெறிமுறைகளின்படி வாழ்வது சாத்தியமற்றது என்கின்றனர். அது சவால் மிகுந்தது. ரே ஹின்டனின் வாழ்வு, முழுமையற்றதாய் இருந்தாலும் அவ்வாறு வாழ முடியும் என காட்டுகிறது. நாம் மலைப் பிரசங்கத்தை நம் முன்னுரிமைகளை வடிவமைக்கவும், நம் நடவடிக்கைகளை வழிநடத்தவும் அனுமதித்தால், வாழ்வின் புயல்களை தாங்கும் வாழ்வாக அமைத்துக்கொள்ள முடியும் என்று இயேசு கூறுகிறார்.

பண்டைய பெலன்

அண்மை ஆண்டுகளில், மீள் திறன் ஒரு பெரிய தலைப்பாக ஆகியுள்ளது, ஆராய்ச்சியாளர்கள் கொந்தளிப்பான காலங்களை பெலத்துடன் எதிர்கொள்ள எது மக்களுக்கு உதவுகிறது என்று விசாரிக்கின்றனர். உளவியலாளர் மார்ட்டின் செலிக்மேன் ஆலோசனை கூறும் முக்கிய காரணிகள் :

  1. நேர்மறை உணர்ச்சிகள்: மீள்திறன் மக்கள் சமாதானம் மற்றும் நம்பிக்கை போன்ற நேர்மறை உணர்ச்சிகளை பெருக்கி, வருத்தம் மற்றும் கோபம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளை கையாளுகின்றனர்.
  2. சாதனை: மீள் திறன் மக்கள் வாழ்வில் ஏதோ ஒன்றை நோக்குகின்றனர் – வேலை, பொழுதுபோக்கு அல்லது ஒரு செயல்பாடு- அவற்றை நன்றாக செய்ய வேண்டுமென்று உணர்கின்றனர்.
  3. உறவுகள்: மீள் திறன் மக்கள் நல்ல நட்பு, குடும்ப ஒற்றுமை, சமூக இணைப்பு போன்றவற்றை உருவாக்குகின்றனர்.
  4. அர்த்தம்: மீள் திறன் மக்கள் சொந்தமாய் நினைப்பதன் மூலமும் தன்னை விட சிறந்த ஒன்றிற்கு சேவை செய்வதன் மூலமும் நோக்க உணர்வு உடையவர்களாய் இருப்பர்.

         ஓர் ஆரோக்கியமான இருதயதின் குறிப்பிடத்தக்க சாதனை: வலுவான உறவுகள் மற்றும் ஓர் அர்த்தமுடைய அறிவு. மலைப் பிரசங்கம் இந்த காரணிகள் மனிதனால் அல்லாமல் தெய்வீக நடத்துதலால் நம் வாழ்வில் உருவாகும் என்பதை காட்டுகிறது. பலவீனமானவர்கள் மற்றும் எளிமையானவர்கள் தேவனுடைய பெலனை அடைவார்கள்.

         ஒருவேளை விவாகரத்து, வேலையின்மை, சோகம் அல்லது அநீதி போன்ற வெள்ளங்களால் நீங்கள் தூக்கி எறியப்பட்டு இருக்கலாம் அல்லது நீங்கள் மகிழ்ச்சியாக, நல்ல காலத்தில் இருக்கலாம், மற்றும் உங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்கலாம். வாழ்வின் புயல்களை தவிர்க்க முடியும் என்று இயேசு சொல்லவில்லை. ஏதோ ஒரு நேரத்தில் நாம் சோதிக்கப்படுவோம் எந்த சூழ்நிலையாக இருந்தாலும், உங்கள் வாழ்வின் அஸ்திபாரத்தை பெலப்படுத்திக் கொள்ள இது சரியான நேரம்.

         நாம் மலைப் பிரசங்கத்தின் வழியாய் பயணம் செய்து எப்படி என்று கண்டு பிடிப்போம்.

banner image

“எ ன்னிடம் உள்ள இந்த மகிழ்ச்சியை சிறையில் அவர்களால் என்னிடம் இருந்து பறிக்க முடியவில்லை”. நீண்ட சோதனைக்குப் பிறகும் ரே வானொலி பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டதை நான் கேட்டேன். துன்பத்தின் மூலம் எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை அவர் அனுபவித்தார் (பிலிப்பியர் 4:7) ஆனால் இந்த சமாதானம் தானாக வருவதில்லை. அவர் தமக்கு அநியாயம் செய்தவர்களின் மீது கோபம் இருப்பதை ஏற்கின்றார் மற்றும் அநேக நேரங்களில் அவர் விரக்தி அடைந்தார். ரே அவரின் புயலின் மத்தியில் தம் இருதயத்தை கையாள வேண்டியிருந்தது.

         நிபுணர்களின் பரிந்துரைகளின்படி மீள் திறன் வளருவதற்கு முதற்படியாக மதிப்பதை கற்றுக்கொள்வது மற்றும் நன்றி உணர்வு, சமாதானம் மற்றும் நம்பிக்கை போன்ற நேர்மறை உணர்வுகளை வளர்ப்பதும், வெறுப்பு, துன்பம் மற்றும் கோபம் போன்ற எதிர்மறை உணர்வுகளை கடப்பதும் ஆகும். இயேசு மலைப் பிரசங்கத்தில் வெறுப்பை மன்னிப்பால் மாற்ற வேண்டும் (மத்தேயு 6:12, 14-15), கோபத்தை ஒப்புரவால் கையாளவேண்டும் (5:21-26), மற்றும் மாற்றார் உளம் அறிதல் (empathy) வளர நன்றாக தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டும் (7:12). அவருடைய மிக மகத்துவமான உதவி விரக்தியையும் கவலையையும் எதிர்கொள்வது ஆகும்.

விரக்திக்கு எதிராக நம்பிக்கை

வாழ்க்கை முதலாம் நூற்றாண்டில் மிக கடினமாக இருந்திருக்கக்கூடும். நோய் தடுக்க நவீன மருத்துவம் அல்லது சமூக பாதுகாப்பு அப்பொழுது கிடையாது. ரோமர் அதிகாரிகள் இணக்கமற்றவர்களை சிலுவையில் அறைந்தனர். சமத்துவமின்மை பரவியிருந்தது. இந்த நிலையில்தான் இயேசு இவ்வாறு பிரசங்கிக்க துவங்கினார்:

ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள். சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். நீதியின் மேல் பசிதாகம் உள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள். இரக்கம் உள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள். இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனை தரிசிப்பார்கள். சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் எனப்படுவார்கள். நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது (மத்தேயு 5:3 -10).

        மலைப்பிரசங்கம் நடவடிக்கைக்கான அழைப்பு உரையாக (7:24) இருக்கும் போது, நாம் ஆரம்ப வரிகளை செய்ய வேண்டிய பணிகளின் பட்டியல் என்று தவறாக புரிந்து கொள்கிறோம். இயேசு பரலோக ராஜ்யத்தை அடைய ஏழையாக, வருத்தமாக, அடிபணிந்தவராக அல்லது துன்புறுத்தப்பட்டவராக ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. இயேசு, அவருடைய ராஜ்யத்தை பிரதிபலிக்கும் இருதயங்களில், சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், உண்மையான நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சியை காணமுடியும் என்று காட்டுகிறார். மற்றொரு தருணத்தில் பொருள் வளங்கள் பற்றாக்குறை இருப்பினும் அல்லது வெற்றி அல்லது மகிழ்ச்சிக்கு தேவையான சூழ்நிலைகள் இல்லை எனினும் அவர்கள் பாக்கியவான்களாக இருக்க (காண்க லூக்கா 6:20-23) சாத்தியம் உண்டு.

        பொருள் வெற்றியைத் தேவனுடைய தயவு என்று பார்க்கும் மத உலகிலே, அத்தகைய போதனை எதிர்பாராதது. இன்று உன்னை பாக்கியவானாக கருதப்படும் காரணங்கள் எதுவோ அதேதான் இயேசுவின் காலத்திலும் “பாக்கியவான்களாக” கருதப்பட்டன: உங்களுக்கு நல்ல பெயர், புகழ் பெற்ற குடும்பம், நீங்கள் பிரபலமானவராக. அழகானவராக. செல்வாக்கு உள்ளவராக மற்றும் வெற்றி பெற்றவராக இருப்பது. அப்படிப்பட்ட மக்களை தான் அனைத்து விருந்துகளுக்கும் அழைப்பர். ஆனால் இயேசு ஆசிர்வதிப்பது அப்படிப்பட்ட மக்களை அல்ல.

       இயேசு தம்முடைய பிரசங்கத்தை வியக்கத்தக்க வகையில் ஆரம்பிக்கிறார்! அவருடைய ராஜ்யம் அனைவருக்கும் திறந்திருக்கிறது, அவர்களுடைய நிலைமை எதுவாயிருப்பினும் பொருளாதார ரீதியாகவும், ஆவிக்குரிய ரீதியாகவும் வறிய நிலை (மத்தேயு 5:3) துயரப்படுகிறவர்கள் மற்றும் சாந்தகுணமுள்ளவர்கள் (வசனம் 4-5), நீதியை தேடுபவர்கள் ஆனால் மறுக்கப்பட்டவர்கள் (வசனம் 6), இரக்கம் உள்ளவர்கள் மற்றும் சரியாக வாழ்ந்தவர்கள் (வசனம் 7-8), அரசியல் கலகக் காரர்களுக்கு பதில் சமாதானம் பண்ணுகிறவர்கள் (வசனம் 9), நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் மற்றும் இயேசுவை பின்பற்றுகிறவர்கள் (வசனம் 10-11). இயேசு, சமுதாயத்தால் நிராகரிக்கப்பட்ட மக்களை கண்டு தன் ராஜ்யத்தை வழங்கினார். அந்த ராஜ்யத்தில் ஆறுதல், நிறைவேற்றம், நீதி, பயன்பாட்டிற்கு வழங்கல், அத்துடன் எதிர்காலத்தில் அவருக்கு சொந்தமான அனைத்திலும் ஒரு பங்கு உள்ளது.

         இதுவே நம் நம்பிக்கையின் அடிப்படையாகும். மனதை ஒருமுகப்படுத்துவது, நேர்மறையாக சிந்திப்பது மற்றும் வேறு உத்திகள் நம்பிக்கை உணர்வுகளை வளர்க்க உதவக்கூடும். ஆனால் உண்மையான நம்பிக்கைக்கு, நம் எதிர்காலம் மாறும் என்று நம்ப ஒரு காரணம் தேவை. இதை தான் மலைப் பிரசங்கம் வழங்குகிறது. ரே ஹின்டன் கூறியது போல, “மேலே அனைத்தும் அறிந்த ஒரு மனிதர் இருக்கிறார்”. அந்த மேல் இருக்கும் மனிதர் நமக்கு ஆறுதல், நீதி மற்றும் நம் தேவைகள் எல்லாம் வந்து கொண்டிருக்கின்றன என்று வாக்களிக்கிறார்.

      நான் ஐரோப்பாவில் ஒரு முறை சேவை செய்யும் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு நடந்த மாநாட்டில் பேசினேன். இந்த மிஷனரிகள் அகதிகள், கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொருளாதார சரிவால் வறிய நிலைக்கு தள்ளப்பட்டவர்கள்- போன்றவர்களுக்கு உதவுபவர்கள். ஒருநாள் காலையில், “நீங்கள் சேவை செய்பவர்களுக்கு பீட்டிட்டியுட்ஸ் என்ன சொல்கிறது என்று அவர்களிடம் கேட்டேன்.” “மற்றவர்களால் அவர்கள் முறைகேடாய் நடத்தப்பட்டும், நிராகரிக்கப்பட்டும், சுரண்டப்பட்டும் இருந்தாலும் நம் தேவன் அவர்களுக்காக இருக்கிறார்” என்று பதிலளித்தனர். கிறிஸ்தவ ஊழியர்களுக்கு என்ன சொல்கிறது என்று கேட்டேன், ”நாம் வேலை செய்பவர்களுக்கும் நமக்கும் -நம்பிக்கை இருக்கிறது” என்றனர்.

கவலைக்கு எதிராக சமாதானம்

மலைப் பிரசங்கம் விரக்திக்கு எதிராக நம்பிக்கையை வழங்கும் என்றால், அதன் அடுத்த நடைமுறை உதவி உணர்ச்சிகள் சார்ந்தது, கவலையை கையாள உதவுகிறது. இளம் வாலிபராக நாம் உடல் அமைப்புகாக கவலைப்படுகிறோம். இருபதுகளில் தொழில் மற்றும் திருமணம் பற்றிய கவலை. பெரியவர்களாய் வங்கிக்கடன் மற்றும் குடும்பத்தினரின் நல்வாழ்வு பற்றிய கவலை. விளம்பரதாரர்கள் நம் பயங்களை காரணம் காட்டி தங்கள் பொருட்களை விற்கிறார்கள். நம் கவலை உணர்வு எப்போதும் தூண்டப்படுகிறது.

        இயேசு தம் பிரசங்கத்தில் கவலைப் பழக்கத்தை நீக்க இரண்டு காரணங்களை கொடுக்கிறார். முதலாவது நடைமுறை: “கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?” என்று கேட்கிறார் (மத்தேயு 6:27). ஆகையால், நாளைக்காக கவலைப்படாதிருங்கள்;… அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும் (வசனம் 34). வேலை செய்யாத அணுகு முறையை விட்டுவிடுங்கள்.

         அவரின் இரண்டாவது காரணம்- இறையியல்: கவலைப் படுவது என்பது நம் வாழ்வில் தேவனின் செயலை மறப்பதாகும். அவரது கருத்தை தெரிவிக்க இயேசு நம்மை இயற்கை உலகின் வழிகாட்டுதலுடன் தியானம் மூலம் வழிநடத்துகிறார். நம் தேவைகளுக்கு கவலைப்படுவதற்கு பதில் அவர் சொல்கிறார்:

 ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பு ஊட்டுகிறார்; அவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?

        உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறது என்ன? காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறது என்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை நூற்கிறதுமில்லை; என்றாலும் சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப் போல் ஆகிலும் உடுத்தி இருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்து வித்தால் உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயம் அல்லவா? (மத்தேயு 6:26, 28- 30).

        குருவியைப் பாருங்கள்; தேவன் அவற்றுக்கு “ஆகாரம்” கொடுக்கிறார். பாருங்கள் எவ்வளவு அழகாக வயல்களை டெய்சி மற்றும் டேன்டேலியன் பூக்களால் “உடுத்துவிக்கிறார்”- பாருங்கள், தேவன் இப்பொழுது உங்கள் வாழ்விலும் செயல்படுகிறார், அவர் உங்களை பார்த்துக் கொள்வார்.

        இயேசுவின் உபதேசத்தை உண்மையாகவே பின்பற்றுவது நமக்கு உதவியாக இருக்கும். இந்த வாரத்தில் நேரத்தை ஒதுக்கி இயற்கையில் நடக்கத் தயாரா? மெதுவாக ஆரம்பிக்கலாம், பாதையில் ஒவ்வொரு காலடியிலும் உணரும் உணர்ச்சி, ஆழ்ந்த மற்றும் மெதுவாக மூச்சு விடுவதன் மூலம் உடலை தளர்த்துவது, பின் நீங்கள் உங்கள் சூழலை கவனமாக நீங்கள் பார்க்க துவங்கலாம்- சூரியன் மற்றும் அதன் வெப்பம் உங்கள் தோலில், தென்றல் மென்மையாக உங்கள் முகத்தில் வீச, சலசலக்கும் இலைகள், பறவையின் பாடல்கள், நீங்கள் எதுவும் செய்யாமலே இயற்கைத் தழைப்பதை பாருங்கள். பின் உங்களை எரிச்சலூட்டும் விஷயங்களை தேவனிடம் நம்பிக்கையுடன் கொண்டு வாருங்கள்…

…இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார் முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள் அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும் (மத்தேயு 6:32-33).

         நம்பிக்கை, அழுகை மற்றும் இதயத்தின் கவலைகளை கையாள இயேசு உதவுகிறார். பெலனைக் கண்டுபிடிக்க முதல் அடி ஓர் ஆரோக்கியமான இதயம் ஆகும்.

banner image

ங்கள் நாடு நெருக்கடியில் இருக்கிறது மற்றும் அதை சரி செய்ய நீங்கள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள் என்று ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள். சமாதானமும் வளமையும் நாட்டில் நிறுவுவதற்கு உங்களிடம் உத்தரவாதமான திட்டம் இருக்கிறது மற்றும் உங்களுக்கு உதவி செய்ய நீங்கள் யாரை வேண்டுமானாலும் நியமிக்கலாம் என்று கற்பனை செய்யுங்கள். எந்த தன்மை உடைய மக்களை தேர்ந்தெடுப்பீர்கள்? நீங்கள் அநேகமாக சிறந்த தலைவர்களையும் பொருளாதார நிபுணர்களையும் மற்றும் யுக்திகளை கையாளுபவர்களை கண்டு பிடிப்பீர் அல்லவா? பிரபலமான, செல்வாக்கான மக்கள், வசீகரிக்கும் மற்றும் வலிமையான திறமையான மக்கள். யாரும் சிறியவர்களையும் முக்கிய மற்றவர்களையும் முக்கியமான பணிக்கு தேர்ந்தெடுக்க மாட்டார்கள் – இயேசுவாக இருந்தால் தவிர.

           இயேசு பிரசங்கத்தை வழங்கியபொழுது யார் பார்வையாளர்களாக இருந்தனர் என்பதை கருதுவது கவர்ச்சிகரமானது. அவருடைய சீடர்களுடன் ஒரு கூட்டமே கேட்டுக்கொண்டிருந்தது (மத்தேயு 5:1,7:28). அந்தக் கூட்டத்தினர் சுற்றி உள்ள இடங்களில் இருந்து இயேசுவிடம் சுகம் பெற வேண்டி வந்தவர்கள் (4:23-25). அவர்கள் வண்ணமயமான கூட்டம். சிலர் நோயாளிகள், மற்றவர்கள் வலிப்பினால் துன்பப்படுபவர்கள், சிலர் முடங்கியவர்கள் மற்றும் ஒருசிலர் பிசாசு பிடித்தவர்கள். அவர்கள் சாதாரண விவசாயிகள், இல்லத்தரசிகள் – சமூகத்தின் பெரிய மனிதர்கள் அல்லர். இயேசு அவர்களிடம் சொன்னது ஆழமான -மற்றும் மீள் திறன்- கட்டமைப்பு

செல்வாக்குபெற்றவர்கள்

இயேசுவின் வார்த்தைகள் தனிப்படதாய் இருக்கிறது. அதைவிட ராஜ்யத்தின் மதிப்பை உணர்ந்தவர்கள் “அவர்கள்” என குறிப்பிடாமல் அவர் சொல்கிறார் “என்னிமித்தம் உங்களை நிந்தித்து துன்பப்படுத்தி பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய் சொல்வார்களானால் பாக்கியவான்களாய் இருப்பீர்கள் சந்தோஷப்பட்டு களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாக இருக்கும்” (மத்தேயு 5:11-12).

         பிறகு அவர் சொன்னார்:

நீங்கள் பூமிக்கு உப்பாய் இருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்ற போனால் எதினால் சாரம் ஆக்கப்படும்? வெளியே கொட்டப்படுகிறதற்கும் மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது (மத்தேயு 5:13).

         நீங்கள் சமைக்க உபயோகிக்கும் உப்பை நினைத்துப்பாருங்கள் – உப்பு சுவையை அதிகரிக்கும். கசாப்பு கடைகளில் மாமிசம் கெடாது இருக்க உப்பிடுகிறார் – உப்பு சிதைவை தடுக்கிறது. இயேசு இந்த எடுத்துக்காட்டு மூலம் பார்வையாளர்களை உயர்ந்த அழைப்பிற்கு பட்டியலிடுகிறார். அவர்கள் தங்கள் கிராமங்களிலும் வீடுகளிலும் நன்மையை அதிகரிப்பவர்களாக மற்றும் சமூகத்தை நேர்மறையாக பாதித்து, சமூகம் மோசமாவதை தடுப்பர். இந்த விவசாயிகளும், இல்லத்தரசிகளும் இவ்வுலகின் மாற்று- முகவர்களாக இருப்பர்.

        நான் ஒரு முறை டொமினிகன் ரிபப்ளிக்கைச் சேர்ந்த சேன்டோ டொமிங்கோவின் சேரிகளைப் பார்வையிட்டேன். வீடுகள் நெளிந்த இரும்பினால் ஆனது மற்றும் மின்சாரக் கம்பிகள் தொங்கிக் கொண்டிருந்தன. நான் அங்கு உள்ள குடும்பங்களிடம் சபை எவ்வாறு அவர்களின் வேலையின்மை, போதை மருந்து பழக்கம் மற்றும் குற்றம் ஆகியவற்றை எதிர்க்க உதவுகிறது என்று பேட்டி எடுக்கச் சென்றேன்.

         ஒரு சந்தில் ஏணியில் ஏறி ஒரு சிறிய அறையில் ஒரு தாயையும் மகனையும் சந்தித்தேன். அடுத்த கணத்தில் யாரோ ஒருவர் எங்களை உடனே வெளியேறும்படி சொன்னார். ஒரு கும்பல் தலைவன் கும்பலுடன் கத்தியுடன் எங்களை தாக்க பதுங்கி இருந்தனர். நாங்கள் வேகமாக வெளியேறினோம்.

         இரண்டாவது இடத்தில் பிரச்சினை இல்லை. காரணத்தை பின்னர் அறிந்தேன். ஒவ்வொரு வீட்டையும் சந்தித்தபோது மற்றொரு கும்பல் தலைவன் (அப்பகுதியில் மிகவும் அஞ்சப்படுகிறவன்) எங்களுக்கு காவலுக்கு இருந்தான். அவனுடைய மகள் சபையால் போஷிக்கப்பட்டு, கற்பிக்கப்பட்டதால், கிறிஸ்தவர்கள் அவளுக்கு துணையாக இருப்பதால், தலைவன் எங்களுக்கு துணையாக நின்றான்.

         சேன்டோ டொமிங்கோவில் உள்ள கிறிஸ்தவர்கள் சமூக அந்தஸ்தோ அல்லது அரசியல் பலம் பெற்றவர்கள் அல்லர். பெரும்பாலும் ஏழைகள். ஆனால் அவர்கள் சமூகத்தை அழிவிலிருந்து தடுத்து சமூகத்தை உயர்த்துகின்றனர். அவர்கள் பூமிக்கு உப்பாய் இருக்கிறார்கள் மற்றும் அவர்கள் சமூகம் மாறுகிறது.

வெளிச்சத்தின் மக்கள்

ஆனால் இயேசு கவனிப்பவர்களுக்கு ஒன்று சொல்ல வேண்டி இருந்தது:

நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்க மாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடி வைக்காமல், விளக்குத் தண்டின் மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். இவ்விதமாய் மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும் படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது (மத்தேயு 5: 14 -16).

        நகரத்தின் கட்டிடங்களில் இரவில் ஒளியூட்டப்பட்டதை எண்ணிப்பாருங்கள்- ஒளி இருளைத் துளைக்கும். இருண்ட அறையில் டார்ச் அடித்தால்- மறைந்திருப்பதை வெளிச்சம் காட்டும். இயேசு பார்வையாளர்கள் தங்கள் நல்ல கிரியைகளால் பிரகாசிக்க வேண்டும் என்கிறார். அவ்வாறு செய்வதன் மூலம், உலகின் இருளை அகற்றி, அவர்கள் பின்பற்றும் காணாத தேவனை வெளிப்படுத்தி, அண்டை அயலாருக்கு மற்றொரு விதமாக வாழ்வதை காட்டுகின்றனர்.

        ஜேம்ஸ் மற்றும் ஆனியை அறிந்திருக்க மாட்டீர்கள் அவர்கள் தொலைக்காட்சியில் வருபவர்களோ, புத்தகம் எழுதியவர்களோ அல்லர். அவர்கள் கம்யூனிச சீனாவில் வாழ்ந்த ஒரு கிறிஸ்தவ ஜோடி. சீனா ஒரு குழந்தை திட்டத்தை கடைப்பிடித்தது. இரண்டாவது குழந்தை உள்ளவர்களை பாகுபாடு படுத்துகின்றனர் – அபராதம் விதிக்கின்றனர். ஆனி இரண்டாவதாக கர்ப்பமான போது அவர்கள் அரசின் எதிர்பார்ப்பை அறிவர்: அவர்கள் கருக்கலைப்பு செய்ய வேண்டும்.

        அழுத்தம் மேலும் அதிகரித்தது. மருத்துவ ரீதியாக இருதய குறைபாடுகளுடன் கரு இருந்ததால் மருத்துவர்கள், “நீங்கள் கருக்கலைப்பு செய்ய வேண்டும்” என்றனர். மாற்றுத்திறனாளிக்கு ஆதரவு இல்லாத நாட்டில், தர்க்கபூர்வமாக அதை தான்  செய்யவேண்டியதாயிருந்தது.

        குடும்பத்தினர் மூலம் அழுத்தம் வந்தது. சிறப்பான குழந்தையை வளர்க்க இயலாது. அவர்கள் கலாச்சாரத்திலும் இடமில்லை. பெற்றோரும் “நீங்கள் கருக்கலைப்பு செய்ய வேண்டும்” என்றனர்.

        அவர்கள் அரசு, மருத்துவர், குடும்பம் மற்றும் கலாச்சாரம் – ஜேம்ஸ் மற்றும் ஆனி எல்லா பக்கத்திலும் அழுத்தத்தை எதிர்கொண்டார்கள். அவர்கள் பதில் “நாங்கள் கருக்கலைப்பு செய்ய மாட்டோம். மாற்றுத் திறனாளியாக இருந்தாலும், அவள் தேவனிடம் இருந்து வரும் ஈவு அவருடைய சாயலில் உருவானவள்” என்றனர். உரிய காலத்தில் பாப்பா சென் யு பிறந்தாள். ஆனியுடன் அவள் ஏழு வாரங்கள் இருந்துவிட்டு பிறகு இறந்தாள்.

        அவர்களின் தைரியமான செயலை கவனித்தனர். மருத்துவர் அவர்களின் விசுவாசத்தால் உருகினார். அவர் “உங்களைப் போல ஒவ்வொரு பெற்றோரும் தம் குழந்தைகளை நடத்தினால் நம் நாடே வேறு மாதிரி இருக்கும்” என்றார் .அவர் தம் மருத்துவ மாணவர்களிடம் சென் யு வை நடத்திய விதம் பற்றி அவர்களை பகிரச் சொன்னார். எந்தப் பதவியோ அதிகாரமோ இல்லாத ஒரு ஜோடி உலகிற்கு வெளிச்சம் ஆனார்கள், வாழ்வதற்கான மாற்று வழியை உலகிற்கு கொடுத்து, காணமுடியாத தேவனை கணநேர கண்ணோட்டத்தில் காட்டினர்.

ஆவி – அதிகாரம் பெற்ற சாதனை

“நீங்கள் பூமிக்கு உப்பாய் இருக்கிறீர்கள்… நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்…” இயேசுவின் வார்த்தைகளை கருப்பொருளாக கருதலாம். நிபுணர்கள் கூறுவது போல, மீள் திறன் வளர்க்க இரண்டாவது காரணி சாதனை உணர்வு, அதாவது இலக்கைத் தொடருவது, ஒரு திறனில் தேர்ச்சி அல்லது தனிப்பட்ட முறையில் குறிப்பிடத்தக்க வேலையை செய்வது போன்றவை ஆகும்.

        இயேசு ஒரு பொழுதுபோக்கின் தேர்ச்சி அல்லது ஒரு தொழில் இலக்கை அடைவது பற்றி கூறவில்லை. அவர் ஓர் உயர்ந்த நிலை சாதனையைப் பற்றி கூறுகிறார். இயேசு அவருடைய ஆவியின் அதிகாரத்தில் உப்பு மற்றும் வெளிச்ச அன்பை நடைமுறை செயல்களாக செய்யும் சாதாரண மக்களை தேர்ந்தெடுத்தார்.

        பிரசங்கத்தின் முடிவில் இயேசு ஜெபம் பற்றி சொல்லி, நம் தேவைகளுக்கு நாம் தேவனை நம்பலாம் என்று உறுதியளிக்கிறார். “உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? (மத்தேயு 17:9-11) மற்றொரு தருணத்தில் இயேசு இதை ஒத்த ஒன்றை செல்கிறார்: “பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்பவர்களுக்கு பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்” (லூக்கா 11:13).

        பிரசங்கத்தின் நம்மை பற்றி அறிந்ததைவிட வாழ்வதற்கு முக்கியமானவர் பரிசுத்த ஆவியானவர். நாம் அவரை நம்பினால், பரிசுத்த ஆவியானவர் நமக்கு உள்ளே வந்து வாழ்கிறார், இயேசுவின் வார்த்தைகளை நினைவூட்டுகிறார் மற்றும் அவ்வாறு வாழ அதிகாரம் அளிக்கிறார் (யோவான் 14:15-18, 23-26). அப்போஸ்தலர் பவுல் விளக்கியது போல, பரிசுத்த ஆவியானவர் மூலம் இயேசு நமக்குள் கிரியை செய்து நம்மை மேலும் அன்பானவராக, மகிழ்ச்சியானவராக, உண்மை உள்ளவராக, மற்றும் கருணை உள்ளவராக செய்கிறார் (கலாத்தியர் 5:16-26) மற்றும் நதி போல நம் மூலம் பாய்ந்து மற்றவர்களை தொடவும், சேவை செய்யவும் ஓடுகிறார். இதன் அர்த்தம்: கிறிஸ்தவர்களின் வாழ்வு கடினமாக முயற்சி செய்வது அன்று. ஆனால் தேவ ஆவியானவரை நம்மை நிரப்புமாறும் நம் மூலம் கிரியை செய்யுமாறும் வேண்டுவதும் ஆகும். அதாவது உப்பு -மற்றும்- வெளிச்சம் சாதனைக்கு தேவைப்படுவது முழு மனதுடன் பணிவு, மற்றும் அர்ப்பணிப்பு ஆகும்.

        நாம் சில நாட்கள் யாரும் இல்லாதவராக உலகில் செல்வாக்கு அற்றவராக உணரலாம். ஆனால் இயேசு நம்மை ஆழ்ந்த அறிவுள்ள சாதனையாளர்களாக நிலைப்படுத்துகிறார். நாம் எண்ணதை விட அதிக பெலவானாய் இருக்கிறோம்.

banner image

த்திரிக்கைகளில் பாருங்கள். அதன் எண்ணற்ற தலைப்புகள் அன்பை கண்டுபிடித்தவர்கள், அன்பை தொலைத்தவர்கள் மற்றும் அன்பை அடைவது எப்படி, அன்பாய் இருப்பது எப்படி என்று எண்ணிலடங்கா. திரைப்படம் அல்லது பாடல்களைப் பாருங்கள். உறவுகளுக்காக நம் ஆழ்ந்த ஏக்கத்தை வெளிப்படுத்தும். அன்பு தான் ஆதிக்கம் செலுத்தும் கருப்பொருளாகும்.

        நிபுணர்களின் கூற்றுப்படி, வலுவான உறவுகள்தான் மீள்திறனை வளர்க்க முக்கியமானது. “தனிமை மிகக் குறைவான நேர்மறை”என்று உளவியலாளர் மார்ட்டின் செலிக்மேன் கூறுகிறார். “மற்ற மனிதர்கள் தான் வாழ்வின் வீழ்ச்சிகளுக்கு சிறந்த மாற்று மருந்து மற்றும் நம்பகமானது”. நமக்கு நல்ல திருமணங்கள், நட்பு, சமுதாய இணைப்பு இருந்தால் நம்மால் வாழ்வின் புயல்களை எதிர்கொள்ள முடியும் பிரச்சினை என்னவெனில் நாம் இவற்றிற்காக ஏங்கினால், பலமான சக்திகள் நம்மை பிரித்து விடுகின்றன.

        இயேசு தம் பிரசங்கத்தில் கணிசமான நேரத்தை உறவுகளுக்கு ஒதுக்கி அவற்றை அழிக்கும் நான்கு முக்கிய சக்திகளை முன்னிலைப்படுத்துகிறார்- கோபம், விசுவாசம் இன்மை, பொய்யான சத்தியங்கள் மற்றும் பதிலடி (மத்தேயு 5:21-42). உறவுகள் வாழ்வின் இருதயத்தில் தேவனுடன் இருப்பதால் (22:37-40), அவை அவரின் போதனையின் மையமாக இருக்கிறது. அவை மிக முக்கியமாக இருப்பதால் அவர் தம் வார்த்தைகளை சமரசம் செய்ய விரும்பவில்லை.

கோபத்திலிருந்து நல்லிணக்கம் வரை

இயேசு ராஜ்யத்தின் ஆசீர்வாதங்களை விளக்கிவிட்டு கோபம் பற்றி சொல்கிறார். சண்டையின் ஆரம்பம், அடிப்பது அல்லது கத்திக்குத்து போன்றவற்றின் மூலத்தைப் பார்த்தால் கோபத்தின் விதையை காணலாம். இயேசு ஒரு கொலைக்கான ஆவியை வெளிப்படுத்துகிறார் (மத்தேயு 5:22). மற்றவர்களை நாம் வார்த்தைகளால் சிறுமைப் படுத்துவது தான் முதல் அறிகுறி ஆகும் (5:22).

        இந்த உண்மையை அனைத்து இடங்களிலும் காண்கிறோம். பள்ளியில் கொடூரமான பெயர்கள் வடுவை விட்டுச்செல்லும், விளையாட்டு மைதானத்தில் ஆட்டக்காரர் இனம் சார்ந்த அவதூறுகளால் அவமதிப்பது, சமூக ஊடகத்தில் விரோதம் கலை வடிவமாக ஆகிவிட்டது, 1994 ரவான்டன் இனப் படுகொலையில் ஹியுடஸ் மக்கள் மத வெறி பிடித்த தலைவர்களால் தூண்டப்பட்டு டுட்ஸி எதிரிகளை “கரப்பான் பூச்சிகள்” என்று அழைத்தனர்.

        நாம் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் என்று இயேசு அறிவார். அவ்வாறு ஏற்பட்டால் அவதூறு செய்யாமல் ஒப்புரவு ஏற்பட முயற்சிக்கவும் :

ஆகையால் நீ பலிபீடத்தின் இடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டு என்று அங்கே நினைவு கூருவாயாகில் அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்து விட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து. எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக் கொடாமலும் இருக்கும்படியாக நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து (மத்தேயு 5:23-25).

        நீங்கள் யாரையாவது சபையில் புண்படுத்தியிருந்தால், ஆராதனை செய்வதை நிறுத்திவிட்டு பிரச்சினையைத் தீர்க்கவும். அண்டை அயலாரிடம் சர்ச்சை ஏற்பட்டால், நீதிமன்றத்துக்கு போவதற்கு முன்பு, பிரச்சினையை வேகமாக தீர்க்கவும். ஒப்புரவாகு என்று இயேசு சொல்கிறார்.

விசுவாசத்திற்கு

பத்திரிக்கையாளர் விக்டர் மாலரேக் தம்முடைய ‘த ஜான்ஸ்’ புத்தகத்தில் ஆண்களின் தவறான நோக்கத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். கற்பனையானதை செயல்கள் தொடர்கிறது.

        இதே மாதிரியை இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்பு இயேசு வெளிப்படுத்தினார். விபச்சாரம் ஒரு கற்பனையுடன் தொடங்குகிறது, கற்பனையையே பாவமாக்குகிறது (மத்தேயு 5:28). இயேசுவிற்கு, எல்லாவற்றிலும் இதயம் மையமாக இருப்பதால், அவர் தனது திருத்தமான செய்திக்கு மிகைப்படுத்தலைப் பயன்படுத்துகிறார்: உண்மையாக இருங்கள்.

உன் வலது கண் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதைப் பிடுங்கி எறிந்து போடு;…உன் வலது கை உனக்கு இடறல் உண்டாக்கினால் அதை தறித்து எறிந்து போடு; (மத்தேயு 5:29 -30).

        உன் கண்ணும் கையும் தவறிழைத்தால், உன் இருதயமும் உடலும் தொடருவதற்கு முன்பு கண் தெரியாமலும், கால் நடக்காமலும் இருக்கட்டும். கண்ணை மூடி, கணினியை மூடி, அப்புறமாய் போய், பாவம் நடக்காமல் பார்த்துக் கொள்ளவும். திருமணம் என்பது ஓர் அர்ப்பணிப்பு (5:32). எனவே மனைவிக்கு உண்மையாய் இருங்கள்.

பொய்யான சத்தியங்களிலிருந்து நம்பிக்கைக்கு

நம்பிக்கையின்மை தான் ஒவ்வொரு நாளும் திருமணங்கள், நட்பு மற்றும் வணிக உறவுமுறை கெட்டுப்போவதற்கு காரணம். அளிக்கப்பட்ட சத்தியங்கள் மறைக்கப்படுகின்றன. ஒப்பந்தகள் தவறாக பயன்படுத்தப்படுகிறது. இயேசு இதைப்பற்றி அடுத்ததாக உரையாற்றினார்.

        இயேசுவின் காலத்தில், ஆணையிட்டு சத்தியம் செய்தல் சாதாரண விஷயம். நீங்கள் வார்த்தையில் புத்திசாலித்தனமாக இருந்தால், உங்களால் சட்டரீதியாக ஒப்பந்தங்களை தவறாக பயன்படுத்தத முடியும். தேவன் மீது சத்தியம் செய்தால் தவறு என்று, “பரலோகம்”,”பூமி”,எருசலேம்” அல்லது வேறு ஏதாவதில் செய்தால் தவறில்லை என்கிறோம்.

        தேவன் இல்லாமல் எதுவும் இல்லை- பரலோகம் பூமி அல்லது வேறு ஏதாவது – எதன் மேல் ஆணை இட்டாலும் அது தேவன் பேரில் இட்டதாகும். இயேசு எதன்மேலும் சத்தியம் பண்ண வேண்டாம் என்கிறார்.(5:33-36) இயேசு உண்மை உள்ளவராய் இருக்கச் சொல்கிறார்:

உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லது என்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும் (மத்தேயு 5:37)

பழிவாங்குவதிலிருந்து கிருபைக்கு

இறுதியாக இயேசு பழிவாங்கும் விருப்பத்தை சமாளிக்கிறார். யூத சட்டம் குற்றத்திற்கான பழிவாங்கலை வரம்பிற்குள் வைத்து இருந்தது .(நீங்கள் என் பல்லை உடைத்தால்; நான் உங்கள் உயிரை எடுக்க முடியாது – யாத்திராகமம் 21:23-25, மத்தேயு 5:38), இயேசு அநீதிக்கு வரலாற்றையே அசைக்கும் பதிலைத் தருகிறார். அவர் மூன்று காட்சிகளை வழங்குகிறார்.

        இயேசுவின் காலத்தில் கன்னத்தில் ஓர் அறை அறைவது பெரிய தாக்குதலாக இல்லாமல் அவமதிப்பாகக் கருதப்பட்டது; சட்டைக்கு நான் வாதம் செய்தால் ஏழையாக, பணம் கட்ட முடியவில்லை என்று அர்த்தம். யூதர் ரோம வீரரின் மூட்டையைத் தூக்கிச் செல்வது இழிவுபடுத்தும் செயலாகும். இயேசு இந்த அவமானப்படுத்தும் அனுபவங்களை அநீதிக்கு எதிரான பதிலாக, பதிலடி தராமல் பதிலளிக்கவும், பாதிக்கப்பட்டவரை அதிகாரம் மிக்கவராகவும் செய்கிறார் (மத்தேயு 5:39-41). அறைந்தவரை திருப்பி அடிக்காமல், மறு கன்னத்தை காட்டு. உன் சட்டைக்கு வழக்காடினால், அங்கியையும் விட்டுவிடு. ரோமர் உத்தரவை எதிர்க்காமல், தேவைக்கு மேலும் செல்லவும். சுருக்கமாக, கருணை காட்டுவதல்- முறைகேடுக்கு கீழ்ப்படியாது, திருப்பி அடிக்கவும் செய்யாமல் பதில் அளிக்கும் ஓர் உயர்ந்த செயல்.

நான் உங்களுக்கு சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். இப்படி செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்கும் புத்திரராய் இருப்பீர்கள் (மத்தேயு 5:44-45).

        இதைத்தான் ரே ஹின்டன் தமது நீண்ட சிறைவாசத்தில் செய்தார், தினமும் எதிரிகளுக்காக ஜெபித்தார். சில நேரங்களில் அந்த கிருபை எதிரிகளையும் மாற்றலாம்.

        1996 ல் ஒரு சனிக்கிழமை இரவில் 19 வயதான டேனி கிவென்ஸ் ஆயுத கொள்ளை நடத்த, போர் வீரர் சங்கத்திற்கு சென்றான். அங்கு காவலர் ஆர்ட் பிளேகி அலுவல் ஓய்வில் இருந்ததை அவன் அறியவில்லை. ஆர்ட் எதிர்கொள்ள டேனி பக்கவாட்டில் சுட்டுவிட்டான். டேனி சிறைக்குச் சென்றான்.

        கொலை முயற்சி மற்றும் ஆயுத கொள்ளைக்காக டேனி 30 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றான். ஆர்ட் அவனுக்காக வாதாடி அவனை அதிக காலம் சிறையில் வைக்காமல், அவனுக்கு ஒரு வாய்ப்பு வழங்குமாறு நீதிபதியிடம் வேண்டினார். நீதிபதி உருகி கண்ணீர் விட்டு, டேனிக்கு தண்டனையை குறைத்து, 18 ஆண்டுகள் தண்டனை விதித்தார்.

        ஆர்ட் டேனியின் முன்னேற்றத்தை தொடர்ந்து கவனித்தார். அவனுடைய தாயையும் கவனித்துக் கொண்டார். டேனி சிறையில் கிறிஸ்தவனாக மாறியதும், அதிகாரிகளிடம் அவன் விடுதலையை சீக்கிரம் வழங்குமாறு கோரிக்கை வைத்தார். டேனி,” நான் சிறையில் இருந்த காலம் முழுவதும் இவர் என்னிடம் அன்பாய் இருந்தார். நான் ஒரு தேவதூதரை சுட்டதாக நினைக்கிறேன்”, என்றான்.

        12 ஆண்டுகள் கழித்து டேனி நன்னடத்தை சோதனை நிலையில் விடுவிக்கப்பட்டான். தெருவில் நடந்தபோது, ஒருநாள் காவல் வண்டியில் வந்த காவலர், “நான் பெருமைப்படுகிறேன்” என்று கூறி கட்டிப்பிடித்துக் கொண்டார்.” நான் உன்னை நேசிக்கிறேன் மற்றும் மன்னிக்கிறேன்” என்றார். அவர்தான் ஆர்ட்.

        “அதிலிருந்து வாழ்வில் என் அழைப்பே ஆர்ட் போல நான் வாழ வேண்டும் என்பதே” என்றான் டேனி. ஆர்ட்டின் கருணையால் டேனி சமுதாய ஊழியரானான். ஆர்ட் பழிவாங்க நினைத்திருந்தால் அவர் எதிரி போல மாறி இருப்பார். எதிரியை நேசித்ததால் எதிரி அவரைப்போல மாறினான்.

        இயேசுவின் பிரசங்கத்தின் இந்த பகுதி அதிக எதிர்பார்ப்பு நிறைந்தது- ஆனால் உறவுக்காக நம் ஏக்கம் வெறும் உணர்ச்சிகளால் நிறைவேறுவதில்லை. நாம் அடிக்கடி இந்த தகுதிகளில் தோற்கும் போது -அவர்களை நோக்கி அடி எடுத்து வைக்க, பரிசுத்த ஆவியானவர் உதவுகிறார். மீண்டெழும்பும் வாழ்க்கை கோபம், விசுவாசமின்மை, பொய் சத்தியங்கள் மற்றும் பழிவாங்குதலால் கட்டப்படுவதில்லை. ஒப்புரவு, விசுவாசம், உண்மை மற்றும் அன்பு அதிகமாய் தொடர நாம் ஆவியானவரின் உதவியை தேடுகிறோம். நாமும் டேனி போன்றோரும் வலுவானவர்களாய் வளர்வோம்.

banner image

னிதர்கள் உணவு மற்றும் தண்ணீருக்காக மட்டுமே பசிப்பதில்லை. அர்தத்திற்கும் பசியோடு இருக்கிறோம்-நம் வாழ்வில் பெரிய நோக்கம் இருக்கிறது. நாம் இருப்பதற்கும் உலகம் இருப்பதற்கும் பதில் இருக்கிறது. மீள் திறன் ஆராய்ச்சியாளர்கள் நம்மைவிட பெரிய காரியத்துக்கு நாம் சேவை செய்யும் அர்த்தத்தை உணரும்போது நாம் பெலன் உள்ளவர்களாய் இருக்கிறோம் என்கின்றனர்.

        மலைப்பிரசங்கம் கூறுகிறது பணம் சம்பாதிப்பதை விட பெரிய காரணம் இருக்கிறது (6:19-24), சுய-மைய ஆன்மீகத்தை விட பெரிது (6:1-18), ஆபத்தும், வெகுமதியும் (7:13-23) மற்றும் முழு அர்ப்பணிப்பு தேவை (6:24, 33). தேவனுடைய ராஜ்யத்துக்கு காரணம்- தேவனுடைய பராமரிப்பிலும், அவருடைய நோக்கத்திலும் வாழும் ஒரு வாழ்வு .

மீண்டெழும்பும் ஜெபம்

பிரசங்கத்தில் இயேசு இந்த காரணத்தை ஒரு ஜெபத்தில் சுருக்கமாகக் கூறுகிறார். அக்காலத்தில் ரபீக்கள் தம்முடைய சீடர்களுக்கு அவர்கள் போதனைகளை உள்ளடக்கிய ஒரு ஜெபத்தை தருவர். இயேசு, தற்போது “கர்த்தரின் ஜெபம்” என்று அழைக்கப்படும் ஜெபத்தை வழங்குகிறார் (மத்தேயு 6: 9 -13 ). இந்த ஜெபம் எவ்வாறு ஜெபிப்பது என்பதற்கு வழிகாட்டல், காலத்தால் சோதிக்கப்பட்ட மற்றும் நம் வாழ்வுக்கு வழிகாட்டும் மதிப்புகளை அளித்து, தேவன் உடனான வாழ்வு பற்றிய தரிசனம் அர்த்தம் தருகிறது.

பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே…

        ஜெபம் தேவனிடம் இருந்து ஆரம்பிக்கிறது, வாழ்வின் அஸ்திபாரத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. தேவன் தொலைவில் அன்று, நம்முடன் நெருக்கமாக, பராமரிப்பவராக மற்றும் பாதுகாப்பாக இருக்கிறார். மீள்திறன் உறவுகளின் அடிப்படையில் ஏற்படுவதால் இதுவே முதன்மையானது. தேவன், பிதாவைப் போன்று நேசித்து நம்மை விலைமதிப்பற்ற பிள்ளைகளாய் அணைத்துக் கொள்கிறார்.

…உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.

        பேராசை, ஏமாற்றுதல் மற்றும் பதிலடி போன்ற தீயவைகள் தவறானது. ஏனெனில் இருதயத்தில் நல்ல, தூய, பரிசுத்த தேவன் இருக்கிறார். டல்லாஸ் வில்லார்ட், “நம் வாழ்வு தேவனை சுற்றியும் அவர் நாமத்தை உயர்த்தவும் இல்லாமல் இருக்கும் வரை, நம் மனித திசைகாட்டி எப்போதும் தவறான திசையை தான் காட்டும்”, என்றார்.

உம்முடைய ராஜ்யம் வருவதாக.

        நம் தேவன் சரியான ஆட்சியாளராக இருந்தாலும், அவர் தம்மை மறுப்பதற்கு சுதந்திரம் தந்துள்ளார். வரலாற்றுப் போர்களை அறிவோம். அதனால் உலகம் அவருடைய ராஜ்யத்திலே அவர் பராமரிப்பும் வழிகாட்டுதலும் மீண்டும் கிடைக்க, தீமை அழிந்து சமாதானம் மீண்டு வர நாம் ஜெபிக்கிறோம்.

உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக.

        தேவனின் சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது; நாம் பூமியிலேயும் செய்யப்பட வேண்டும் என்று ஜெபிக்கிறோம்-நம் வீட்டில், அலுவலகத்தில், கல்வி சாலைகளில் மற்றும் அண்டை அயலகத்திலும். இதுவே “மாபெரும் காரணம்” நம் வாழ்வின் இறுதி நோக்கம்- குழந்தைகளை வளர்ப்பது, வகுப்பில் கற்பிப்பது, சாலைகள் போடுவது, கலைப்படைப்பு மற்றும் நமக்கு வழங்கப்பட்ட பணிகளை தேவன் செய்வதுபோல செய்வது. நாம் அவரின் மாற்று- முகவர்கள், அவர் ஒருநாள் பரலோகமாய் மாற்றுவார்.

எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்…

        நம் தினசரி தேவைகளை தேவன் சந்திக்கிறார், உணவு, துணி, வேலை அல்லது வீடு. நாம் தனியாய் இல்லை. நாம் அவரிடம் நம் தேவைகளை சந்திக்க வேண்டுகிறோம்.

. . . எங்கள் பாவங்களை எங்களுக்கு மண்ணியும் . . .

        எண்ணம் அல்லது செயலால் நாம் ஒவ்வொருவரும் கோபம், விசுவாசம் இன்மை, உடைந்த சத்தியங்கள் போன்றவற்றால் பழிவாங்க முயல்கிறோம். தேவ சித்தத்தை விட நம் சித்தம் நிறைவேற விரும்புகிறோம். உலகின் தீமையில் நம் பங்கிற்கு நாம் மன்னிப்பைக் கண்டுபிடிக்கிறோம். இயேசு மரணமடைந்து சுத்தப்படுத்தும் மழை சேறை கழுவுவது போல நம் பாவங்களை கழுவ, உயிர்த்தெழுந்தார். மன்னிக்காத பாவங்கள் நம்மை பலவீனமாக்கும். ஆனால் தேவனுடைய மன்னிப்பு நம்மை பெல மானவர்களாய் ஆக்குகிறது.

…எங்களுக்கு எதிராகப் பாவம் செய்தவர்களை நாங்கள் மன்னிப்பது போல…

        வெறுப்பு மற்றும் மனக்கசப்பு சுலபமாக வளர்ந்துவிடும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். யார் நமக்கு அநீதி இழைத்தார்கள்? இப்பகுதி நாம் யாருக்கு அநீதி இழைத்தோமோ அவர்களை நினைவு படுத்தலாம். அதனால் நம் உறவுகளை சீர்செய்ய முடியும்.

எங்களை சோதனைக்கு உட்பட பண்ணாமல் தீமையினின்று எங்களை இரட்சித்து கொள்ளும்.

        உலகின் பிரச்சினைகள் மனிதர்களால் மட்டும் இல்லை, “தீய ஒன்று” வேலை செய்கிறது, அது தூண்டுகிறது, குற்றம்சாட்டுகிறது மற்றும் கண்டனம் செய்கிறது.
தேவனின் உண்மையுள்ள இயற்கையுடன் வாழ நாம் தேர்ந்தெடுப்பதற்கு நாம் பெலத்தை வேண்டுகிறோம். தூண்டுதலின் வேளையில் நாம் இருக்கும் சூழ் நிலைகளில் இயேசு இருந்தால் எப்படி வாழ்வாரோ அப்படி நம்மை அதிகாரம் உள்ளவராக்க நாம் அவருடைய ஆவியானவரை அழைக்கிறோம்.

ராஜ்யமும் வல்லமையும் மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே. ஆமென்

        இது ஆரம்ப வேதாகம கையெழுத்துப் பிரதிகளில் காணப்படவில்லை. இந்த ஜெபத்தின் நிறைவு பொருத்தமானதே. ஜெபத்தை தேவனிடம் ஆரம்பித்து , தேவனிடமே நிறைவு செய்கிறோம். இந்த உலகின் உரிமையாளர் மற்றும் நம் வாழ்வை நேராக நடத்த தகுதி படைத்தவர் என்றும் அடையாளம் காண்கிறோம். இறுதியில் வாழ்வும் அவற்றின் அர்த்தமும் அனைத்தும் அவரை பற்றியதாகும்.

        மனிதர்கள் உலகின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முற்படுகிறார்கள். தன்னை விட பெரிய காரணத்திற்கு சேவை செய்ய ஏங்குகின்றனர். பிரசங்கத்தில் இயேசு ஒரு வழியை காட்டுகிறார். “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும் (மத்தேயு 6:33).

பெலத்துடன் இருங்கள்

ரே ஹின்டன் கண்டுபிடித்த ஒரு பெலன் அவருடைய 30 ஆண்டு அநீதியை சகித்து, ஆத்திரத்தில் மூழ்கி விடாமல் காத்தது. ஆர்ட் பிளேகி கண்டுபிடித்த பெலன் அவரை தாக்கிய வரை மாற்றியது. சுய விருப்பத்தினால் மட்டும் பெலன் கிடைப்பதில்லை. பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை; அவர்கள் இயேசுவின் மலைப் பிரசங்கத்தை நடைமுறையில் கடைபிடித்ததால் சோதனையிலிருந்து பிழைத்தனர் (மத்தேயு 7:24- 25).

        நம் வாழ்விலும் ஜன்னலில் மழை வீசலாம், நம் கூரைகளை இடி இடிக்கலாம். நஷ்டம், ஏமாற்றம் அல்லது தவறான தேர்வுகள் போன்ற காற்று அடித்து நம்மை தாக்கலாம். இயேசு நாம் வாழ்வின் புயலை தவிர்க்கமுடியும் என்று சொல்லவில்லை. ஆனால் அவை வரும்போது அவர் நம்முடனே இருக்கிறார் (8:23-27). மலைப் பிரசங்க போதனை அஸ்திபாரமாக அமைந்து நம்மை, காற்றை எதிர்கொள்ள வைத்து அதன் மூலம் நம்மை வளர வைக்கும் என்று சமகால உளவியல் உறுதி செய்கிறது .

       ஓர் ஆரோக்கியமான இருதயம், குறிப்பிடத்தக்க சாதனை, வலுவான உறவுகள், அர்த்தமுள்ள அறிவு இயேசுவின் ஆட்சியில் அவையெல்லாம், வசதியுள்ளவர்கள் அல்லது நிலைமைக்கு ஒதுக்கப்படவில்லை. அவற்றை வாங்கிக் கொள்ள தயாராக இருக்கும் பெலவீனமானவர்கள் மற்றும் சாதாரணமானவர்களுக்கு வழங்குகிறார். கிறிஸ்துவின் பிரசங்கம் கருவிகளை வழங்குகின்றன. அவருடைய ஆவியானவர் நம்மை போன்ற சிறியோர்கள் பெலமாக வளர வல்லமையைத் தருகிறார் .

banner image