வாசிக்க: மத்தேயு 4:1-11
அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார். (வச. 1)
ஜேம்ஸ் ஜாய்ஸின் “உலிஸஸ்” என்ற புத்தகம் பெரும்பாலும் நவீன கதைகளின் தலைசிறந்த படைப்பாகப் போற்றப்படுகிறது. ஆனால் சிலருக்கு இது முற்றிலும் புரிந்துகொள்ள முடியாத புத்தகமாகும். ஜாய்ஸும் வித்தியாசமானவராக கருதப்பட்டார். அவர் எழுதும்போது படுத்துக்கொண்டு, பெரிய பென்சிலைப் பிடித்துக்கொண்டு, முகத்தின் அருகே நோட்டுப்புத்தகத்தை வைத்துக்கொண்டு எழுதுவாராம். அவருடைய முகத்திற்கும் நோட்டுப் புத்தகத்திற்கும் இருந்த தூரம் சில அங்குலங்கள் மட்டுமே. இதைப் பற்றி பலர் இதை ஒரு விசித்திரமான மனிதனின் ஆர்வமுள்ள நடத்தை தவிர வேறில்லை என்றனர். ஆனால் உண்மை என்னவென்றால், ஜாய்ஸுடைய இத்தகைய நடத்தைக்கான காரணம், அவர் கிட்டத்தட்ட ஒரு பார்வையற்றவராக இருந்ததாகும். மேலும் பக்கத்தைத் தெளிவாகப் பார்ப்பதற்காக, அவர் இந்த முறையில் எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது, இயேசுவானவர் வனாந்தரத்தில் சோதிக்கப்பட்டதும் வித்தியாசமானதாகத்தான் தெரிகிறது. அக்காலத்தின் வல்லமை வாய்ந்த தீர்க்கதரிசியான யோவான் ஸ்நனால் (மத்தேயு 3:13-16) இயேசுவானவர் ஞானஸ்நானம் பெற்றார். அதற்குப் பிறகு முதற்படியாக அவர் உபவாசித்தார், பிசாசினால் வனாந்திரத்தில் சோதிக்கப்பட்டார். (4: 1). ஒரு ஊழியத்தைத் தொடங்க இது ஒரு வித்தியாசமான வழியே! ஆனால் இயேசுவை பாலைவனத்திற்கு அழைத்துச் சென்றது தேவ ஆவியானவர் என்பதை இப்பத்தியில் காண்கிறோம். இது அறிவற்ற தெரிந்து கொள்ளுதல் அல்ல, தேவனின் ஞானமும் அக்கறையும், இயேசுவானவர் எதிரியாகிய பிசாசை எதிர்கொண்ட அந்த சவாலான தருணத்தில், அவருடன் இருந்தது. உண்மையில், ஆவியானவர் கிறிஸ்துவை இங்கே மட்டும் வழி நடத்தவில்லை, இயேசுவானவர் ஞானஸ்நானம் பெரும் பொழுது ஆவியானவர் அவருடன் இருந்து (3:16) அவருடைய முதல் ஊழிய வார்த்தைகளை வழங்கினார் (லூக்கா 4:18).
இயேசுவைப் பின்பற்றுபவர்களின் தெரிந்தெடுப்புகள் வெளியில் பார்ப்பவர்களுக்கு எப்போதும் புரியாது. ஏனென்றால், நம் வாழ்க்கை பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படுகிறது (ரோமர் 8:9), அவருடைய வழிகள் பெரும்பாலும் உலகிற்கு புரியாது (1 கொரிந்தியர் 2:10-12). ஆனால் நாம் ஆவியானவரால் வழிநடத்தப்பட்டு நம் வாழ்க்கையில் என்ன தெரிந்தெடுப்புகளை செய்தாலும், தேவ பிரசன்னம், அன்பு மற்றும் ஞானம் நம்முடன் வருகிறது என்பதை நாம் நம்பலாம்.
– பீட்டர் சின்
மேலும்
நம்பமுடியாத மற்றும் முற்றிலும் அதிசயமான ஒன்றைச் செய்ய ஆவியானவர் ஒருவரை வழிநடத்த முடியும் என்பதற்கான மற்றொரு உதாரணத்திற்கு அப்போஸ்தலர் 8:26-40ஐப் படியுங்கள்.
அடுத்து
மற்றவர்கள் புரிந்துகொள்ள முடியாத ஒன்றைச் செய்ய நீங்கள் எப்போதாவது ஆவியானவரால் வழிநடத்தப்பட்டிருக்கிறீர்களா? ஆவியின் வழிநடத்துதலையும், உங்கள் சொந்த இதயத்தின் விருப்பங்களையும் எவ்வாறு வேறுபடுத்திப் பார்க்கிறீர்கள்?