டந்த சில ஆண்டுகளாக திருச்சபையில் கடினமான சூழல் நிலவுகின்றது. அது வெளிப்புற அச்சுறுத்தலால் அல்ல, நமது ஒழுக்கம் மற்றும் ஆவிக்குரிய தரக் குறைவால் விளைந்தது. கவனச்சிதறல், ஏமாற்றம் மற்றும் விரக்தியில் விழுந்தவர்களை தூக்கிட இதைவிட சிறந்த நேரம் இருக்க முடியாது. நேர்த்தியாய் நிறைவு செய்கின்ற இலக்கை நினைவுபடுத்துவதற்கு இதைவிட சிறந்த நேரம் இருக்க முடியாது.

மார்ட்டின் ஆர்.டி ஹான்

நேர்த்தியாய் நிறைவுசெய்தல் என்பது, வாழ்க்கை என்னும் புத்தகத்தை கிறிஸ்தவர்கள் நிறைவுசெய்யும் நேர்த்தியான வழியாகும். அது நம்முடைய மெய்யான விசுவாசத்தைப் பரிசோதிக்கக்கூடியது. மற்றவர்கள் நினைவு வைத்துக்கொள்ளக்கூடிய வகையில் அது நினைவுகளை விட்டுச்செல்ல உதவுகிறது.

தங்களுடைய வாழ்க்கையை அமைதியாய், கனத்தோடும், கிருபையோடும் நிறைவுசெய்யும் தேவபக்தியுள்ளவர்களை மக்கள் மனநிறைவோடு பார்ப்பர். திருமதி. ரிச்சர்ட் நீஸ் அவர்கள் ஒரு சில வாரங்களே உயிரோடு இருப்பார் என்பது தெரிந்த மாத்திரத்தில் அவர் செய்த செயல் எனக்கு ஞாபகம் வருகிறது. அவர் தன்னுடைய வீட்டை திறந்துவைத்து, எங்கள் அனைவருக்கும் பிரிவு விடை கொடுத்து, கிறிஸ்துவோடு இருப்பதை தான் விரும்புவதாக அறிவித்தார். அவர் தன்னுடைய வாழ்க்கையை நேர்த்தியாய் நிறைவுசெய்தார்.

நேர்த்தியாய் நிறைவுசெய்யும் இந்த குணாதிசயம் வெறும் வயது முதிர்ந்தவர்களுக்கு மட்டும் பொருந்தக்கூடியது அல்ல. பிரிவுவிடை கொடுப்பதற்கு வெகு காலத்திற்கு முன்னமே இது ஞானமுள்ளவர்களின் பாதையாயிருக்க வேண்டும். தெளிந்த புத்தியுள்ள எந்த மனிதனும் கெட்டபெயரோடு இந்த உலகத்தை விட்டு கடந்துசெல்ல விரும்பமாட்டான். எதிர்காலத்தைக் குறித்த எந்த சிந்தையும் இல்லாமல் மதியீனனாய் தங்களை அடையாளப்படுத்த எவரும் விரும்புவதில்லை.

நேர்த்தியாய் நிறைவுசெய்யும் வாழ்க்கையானது இன்று எடுக்கும் தீர்மானங்களினால் பாதிக்கப்படுகிறது என்பதை நாம் உணரவேண்டும். இன்று தான் நம்முடைய வாழ்க்கையின் கடைசி நாள் என்னும் மனப்பான்மையோடு நம்முடைய வாழ்க்கையை நாம் வாழ வேண்டும். இறந்து 30 மணி நேரத்திற்குள்ளான இருவருடைய இறுதிச்சடங்கை சமீபத்தில் நான் நடத்தி வைக்க நேரிட்டது. அதில் ஜேக் வேன் டைக், 39 வயது நிரம்பிய கணவர் மற்றும் மூன்று பிள்ளைகளுக்கு தகப்பன். இவர் தன்னுடைய குடும்பத்தோடு ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தபோது மாரடைப்பு வந்து காலமானார். அவரை நன்கு அறிந்த நாங்கள், அவர் எவ்வளவு மென்மையான நபர் என்பதை அவருடைய மரணத்தில் நினைவுகூர்ந்தோம். அவர் அன்பான கணவனாகவும், சாந்தமான தகப்பனாகவும், உண்மையான கிறிஸ்தவனாகவும், மரியாதைமிக்க வேலையாளாகவும், மகிழ்ச்சியான நண்பனாகவும் வாழ்ந்தார்.

19 வயது நிரம்பிய கெவின் ரோட்மேன், வேலைஸ்தலத்தில் ஏற்பட்ட ஒரு விபத்தில் உயிரிழந்தார். அவர் ஒரு நல்ல விசுவாசியாகவும், நல்ல மகனாவும், பேரனாகவும், தம்பிக்கு சிறந்த அண்ணனாகவும், அவர் திருமணம் செய்ய நிச்சயித்திருந்த பெண்ணுக்கு ஒரு நல்ல நண்பனாகவும் இருந்தார். இந்த இரண்டு இளைஞர்களும் சிறந்த வாழ்க்கை வாழ்ந்தினால் தங்களின் ஓட்டத்தை நேர்த்தியாய் முடிக்க நேர்ந்தது.

ஆகையால் நேர்த்தியாய் நிறைவுசெய்தல் என்பது இளைஞருக்கும் முதியவர்களுக்கும் என்று அனைத்து வயதினருக்கும் பொருந்தக்கூடிய ஒரு வரையறை. மரணம் எப்போது வேண்டுமானாலும்; நேரிடலாம். சிறுபிராயத்திலிருந்தே கிறிஸ்தவ நெறிகளை கற்று வளர்ந்த நாம், ஒரு நற்சாட்சி பெற்ற நபராய் நினைவுகூரப்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நாம் ஒரு நல்ல நபராய் பிற்காலத்தில் அறியப்படவேண்டுமாகில், தற்போதே சரியான வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்தல் அவசியம்.

தங்களுடைய கிறிஸ்தவ ஓட்டத்தை நேர்த்தியாய் நிறைவுசெய்த அநேகர், தங்களுடைய வாழ்க்கையை நேர்த்தியாய் வாழ்ந்திருக்கின்றனர். அவர்களின் திருமண வாழ்க்கை நன்றாய் இருந்துள்ளது. சிறந்த பெற்றோராய் வாழ்ந்திருக்கின்றனர். தேவனுக்கு உண்மையாய் ஊழியம் செய்திருக்கின்றனர். தங்களுடைய ஆவிக்குரிய ஜீவியத்திலும் தொடர்ந்து முன்னேறியுள்ளனர். அவர்கள் சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ மரணத்தைத் தழுவினாலும், நேர்த்தியாய் நிறைவுசெய்துள்ளனர்.

ஒவ்வொரு கிறிஸ்தவனும் இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தால் நலமாயிருக்கும். ஆனால் அப்படி வாழ்வது கடினமான இலக்கு. சிலர் விபச்சார பாவத்தில் சிக்குண்டு வாழ்கின்றனர். சிலர் விவாகரத்து செய்கின்றனர். சிலர் மதுபானத்தோடும் ஓரிணைச்சேர்க்கை பாவத்தோடும் போராடி, தோற்றுவிடுகின்றனர். இப்படிப்பட்ட நபர்களை என்ன செய்வது? அவர்களுடைய பாவங்கள் மாற்றப்படமுடியாது என்பதினால் அவர்களால் நேர்த்தியாய் நிறைவுசெய்ய முடியாது என்று சொல்லிவிடலாமா? அப்படி சொல்லக்கூடாது! பெரிய பாவங்கள் செய்த பின்னரும் அவர்களுடைய வாழ்க்கையை நேர்த்தியான நிறைவுக்கு நேராய் நடத்திச் செல்ல முடியும் என்பதை வேதாகமமும் அனுபவங்களும் உறுதிசெய்கிறது.

மனாசேவைக் குறித்து பார்ப்போம் (2 இராஜ. 21; 2 நாளா. 33). அவருடைய தகப்பனும் யூதேயாவின் ராஜாவுமாகிய எசேக்கியாவைத் தொடர்ந்து வந்த மனாசே, விக்கிரக செய்கைகளில் ஈடுபட்டான். தனக்கு பிரியமில்லாதவர்களை கொலை செய்தான். அவனுடைய சொந்த குமாரர்களை மோலோகுக்கு நரபலியாய் கொடுத்தான். ஆனால் அவனுடைய 55 ஆண்டுகள் ஆட்சியின் இறுதியில் அவன் மனந்திரும்பினான். அவனுடைய பழைய பாவ வாழ்க்கையை மாற்றுவதற்கு என்ன முயற்சி எடுக்கமுடியுமோ அதை அவன் ஏறெடுத்து சமாதானத்தோடே மரித்தான். அவன் தன்னுடைய ஓட்டத்தை நேர்த்தியாய் நிறைவுசெய்தான்.

ஒழுக்க ரீதியாய் பாதிக்கப்பட்டும், தங்களுடைய வாழ்க்கையை நேர்த்தியாய் நிறைவுசெய்த ஒருவரை எனக்கு தெரியும். அறுபது வயதை நெருங்கிய அவர், உத்தமமான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்தவர். ஆனால் ஒரு இளம்பெண்ணோடு தகாத நட்புகொண்டதினிமித்தம், தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்தார். அவ்வாறு செய்ததினிமித்தம் தன்னுடைய பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கு அவமானத்தைக் கொண்டுவந்தார். அவருடைய அந்த புதிய வாழ்க்கை அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. ஒரு வழியாய் அவர் மனந்திரும்பினார். அவர் தன்னுடைய நிஜ மனைவியை மறுபடியும் சேர்த்துக்கொள்ள முடியாவிட்டாலும், அவர் மரிப்பதற்கு முன்பாக தன்னுடைய குடும்பம் இழந்த மகிழ்ச்சியையும் மரியாதையையும் திரும்பப் பெற்றுக்கொள்ள பிரயாசப்பட்டார்.

மரண தண்டனைக் கைதியான ரஸ்டி வூமர்ஸின் மனமாற்றம் மற்றும் இறுதி நாட்களைப் பற்றி சக் கால்சன் கூறுகிறார். தான் செய்த தவறுகளை எண்ணி வருந்திய ரஸ்டி, தான் கொலை செய்தவர்களின் நெருங்கிய உறவுகளை சந்தித்து அவர்களிடம் மனமுடைந்து மன்னிப்புக் கேட்டார். தன்னுடைய அன்புக்குரிய உறவுகளிடம் விடைபெற்று, மரண தண்டனை நிறைவேற்றப்படும் மின்சார நாற்காலிக்கு திருப்தியுடன் சென்றார்.

மனாசே ராஜா, அந்த மூத்த தகப்பனார் மற்றும் ரஸ்டி வூமர்ஸ் ஆகியோர்களை பாவமே செய்யாதவர்களோடு ஒப்பிடமுடியாவிட்டாலும், இவர்கள் மூவரும் தங்களுடைய வாழ்நாட்களின் இறுதியில் தேவனோடு உறவுகொண்டு சமாதானத்தோடே மரித்தனர். மனந்திரும்பி மறுவாழ்வு பெறுவதற்கு இன்னும் அவகாசம் இருக்கிறது.

எப்படி வேண்டுமானாலும் வாழுவதற்கான வாய்ப்பாய் இதை எடுத்துக்கொள்ளாதீர்கள். கடைசி நாட்களில் மனந்திரும்பலாம் என்று நினைக்கும் கிறிஸ்தவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மேலும், தேவனோடு நெருங்கி நடக்கும் வாய்ப்பை அவர்கள் இழக்க நேரிடும்; மற்றவர்களை பாதிக்காத சுவடுகளை அவர்கள் விட்டுச் செல்ல நேரிடலாம்; கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பு சிங்காசனத்திற்கு முன்பாக தன்னுடைய வாழ்க்கையை இழக்கும் அபாயம் அவர்களுக்கு சம்பவிக்கலாம்.

வாழ்க்கைப் பயணத்தில் நீங்கள் எங்கிருந்தாலும் சரி, இப்போது நன்றாக வாழ வேண்டிய நேரம் வந்துவிட்டது, ஆகையால் உங்களால் நேர்த்தியாய் நிறைவுசெய்ய முடியும்.

banner image

மது பூமிக்குரிய வாழ்க்கையை நாம் எவ்வளவு சிறப்பாக நிறைவுசெய்கிறோம் என்பது வாழ்க்கையின் தவிர்க்க முடியாத மாற்றங்களை நாம் எவ்வளவு சிறப்பாகக் கையாளுகிறோம் என்பதைப் பொறுத்தது.

நாம் குழந்தை பருவத்திலிருந்து இளமை பருவத்திற்கும் முதுமைக்கும் நகர்கிறோம். ஆடவர்களாகிய நாம், தனிமையான வாழ்க்கை முறையிலிருந்து திருமண உறவுக்கும், பெற்றோர் என்னும் ஸ்தானத்திலிருந்து தாத்தா பாட்டி என்னும் நிலைக்கும் வேகமாய் நகர்த்தப்படுகிறோம். வேலைஸ்தலத்தில் உயர்ந்த இடத்திலிருந்து தீடீர் சரிவையும் சந்திக்கிறோம். நம்முடைய உறவுகளில் மாற்றங்கள் நிகழுகிறது. பெற்றோர்கள், சொந்தங்கள் மற்றும் அந்த தலைமுறையின் பிற உறுப்பினர்கள் வயதாகி இறந்துவிடுகிறார்கள். நம்முடைய பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகின்றனர். நம் தலைமுறை மக்கள் ஒவ்வொருவராக நம்மை விட்டு பிரிந்து செல்கிறார்கள். நம் மரணம் வெகு தொலைவில் இல்லை என்பதை நாம் அறிவோம்.

பாடலாசிரியர் ஹென்றி எஃப். லைட், “சுற்றிலும் மாற்றத்தையும் சிதைவையும் நான் காண்கிறேன் – ஓ மாறாதவரே, என்னோடு இருங்கள்” என்று எழுதியபோது அதில் ஆழமான அர்த்தம் இருந்தது. வாழ்க்கையை நேர்த்தியாய் நிறைவுசெய்ய இந்த மாற்றங்களை நாம் நேர்த்தியாகவும் தன்னம்பிக்கையுடனும் சமாளிக்கவேண்டும். தொடர்ந்து வகும் பகுதிகளில், நாம் வாழ்க்கையின் பாதையில் செல்லும்போது மனம் மற்றும் ஆன்மீக ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தவேண்டிய எட்டு பகுதிகளைக் கருத்தில் கொள்வோம்:

1. சரீர பெலவீனத்தைக் கையாள்வது
2. தொழில் சார்ந்த ஏமாற்றத்தை சமாளித்தல்
3. குடும்ப மாற்றத்திற்கு ஏற்றாற்போல் அனுசரித்தல்
4. பணி ஓய்வை ஏற்றுக்கொள்ளுதல்
5. உங்கள் வாழ்க்கைத் துணையின் மரணத்திற்கு தயாராகுதல்
6. உங்களின் சுதந்திரத்தை இழத்தல்
7. உங்கள் நற்சாட்சியை திட்டமிடுதல்

சரீர பெலவீனத்தைக் கையாள்வது

நானும் என் மனைவியும் எங்கள் 50வது திருமண நாளைக் கொண்டாடியபோது, எங்கள் விருந்தில் கலந்து கொண்ட பலர், “நீங்கள் இருவரும் மாறாமல் அப்படியே இளமையாய் இருக்கிறீர்கள்” என்றார்கள். இந்த வார்த்தைகளை நாங்கள் கேட்டு மகிழ்ந்தோம். ஆனால் அவை உண்மையல்ல என்று எங்களுக்குத் தெரியும். எங்கள் திருமண புகைப்படத்தில் எனக்கு நிறைய முடி இருந்தது மற்றும் 138 பவுண்டுகள் எடையுள்ளவனாய் இருந்தேன். இன்று அப்படியில்லை! 1950 களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் நாங்கள் இன்னும் இளமையாகவே இருந்தோம். ஆனால் 1941ல் இருந்த அளவுக்கு இளமையாக இல்லை. ஆண்டுகள் வேகமாய் கடந்துபோயிற்று. எங்களுக்கு மட்டுமல்ல. எங்களுடைய இளமையில் எங்களுக்கு அறிமுகமானவர்களில் பலர் முதியவர்களாக இருப்பதையும் கவனித்தோம்.

எழுபதிலிருந்து எண்பது வயதில் உள்ளவர்கள், “எனக்கு ஒன்றும் பெரிதாய் வயதாகிவிடவில்லை” என்று சொல்வதை நான் அடிக்கடி கேட்டிருக்கிறேன். நானும் அப்படி சொல்லியிருக்கிறேன். ஆனால் உடல் ரீதியாக நாம் பெலவீனமடைந்து வருகிறோம் என்ற உண்மையை, ஆரோக்கியமாயுள்ள நம்மால் கூட மறுக்க முடியாது. சாப்ட்பால் விளையாட்டில், தரையில் பந்தை அடிக்கும்போது நான் எவ்வளவு கடினமாக ஓடினாலும், முதல் தளத்திற்கு வருவதற்கு எனக்கு நீண்ட நேரம் எடுக்கும். என்னால் எனது முழு பலத்துடன் ஒரு பந்தை வீச முடியும், ஆனால் அது ஒரு வளைவில் பயணிக்கிறது. காலையில் கடுமையான வேலைக்குப் பிறகு, ஆஸ்பிரின் மாத்திரை இருக்கும் கேபினெட்டுக்கு விரைந்து செல்லவேண்டியிருக்கிறது. நான் இருப்பதைப் போலவே தொடர்ந்து இருப்பது சிலாக்கியமாகவே கருதுகிறேன். எனது வயதில் இருக்கும் எனது நண்பர்கள் பலர், என்னைப் போல் உடல் உறுதியுடன் இருப்பதில்லை.

30 வயதில் நாம் சரீர ரீதியாக சரிவடையத் தொடங்குகிறோம் என்பதை மறுக்க முடியாது. உடல்நிலை சரிவைக் கையாள்வதில் எனக்கு மூன்று வேதாகம ஆலோசனைகள் உதவுகின்றது: (1) சரீரப்; பிரகாரமான சரிவை நன்றியுடனும் பொறுப்புடனும் ஒப்புக்கொள்ளுதல் (2) அந்தந்த நாளுக்குரிய வாழ்க்கையை வாழுதல் (3) சுறுசுறுப்பாய் செயல்படுதல்.

1. சரீரப் பிரகாரமான சரிவை நன்றியுடனும் பொறுப்புடனும் ஒப்புக்கொள்ளுதல். வயது முதிர்வது என்பது அவமானம் அல்ல. வயோதிகராவது என்பது தாழ்ச்சியடைவது அல்ல. வரம்புகளுக்கு உட்படுவது வெட்கக்கேடான ஒன்றாகக் கருதப்படக்கூடாது. முதுமையை அடைவது ஒரு ஆசீர்வாதம் என்று வேதம் சொல்லுகிறது. ஆபிரகாம் தன்னுடைய 175 வயதில் “பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்” (ஆதி. 25:8). இஸ்ரவேலின் ராஜாவான ரெகொபெயாம், மூத்த ஆலோசகர்களின் ஆலோசனையை அலட்சியப்படுத்தியபோது, பெரிய பாவம் செய்ய நேரிட்டது (1 இராஜ. 12). வயதானவர்கள் இஸ்ரவேலில் “மூப்பர்கள்” என்று அழைக்கப்பட்டனர் (யோசு. 24:31). அவர்கள் கனம்பெற்றவர்களாகவும் (லேவி. 19:32) ஞானமுள்ளவர்களாகவும் கருதப்பட வேண்டும் (யோபு 12:12). நரை முடி ஒரு முதியவரின் “மகிமை” (நீதி. 20:29). எனவே, வாழ்க்கையின் ஒவ்வொரு வருடத்தையும் நாம் தேவனின் பரிசாக நன்றியுணர்வோடு அனுபவிக்கவேண்டும்.

கூடுதல் ஆண்டுகள் கூடுதல் பொறுப்புகளை கொண்டு வருகின்றன. நமது சரீர பெலவீனம் தேவனுக்கு ஊழியம் செய்யும் வேகத்தை ஒருபோதும் குறைக்காது. பவுல் தனது இளம் சிநேகிதனான தீத்துவுக்கு நிருபம் எழுதி, சபையில் உள்ள இளைஞர்களுக்கு ஆவிக்குரிய விதத்தில் எவ்வாறு உதவியாக இருக்க வேண்டும் என்பதை, வயதில் மூத்தவர்களுக்கு கற்பிக்குமாறு கூறுகிறார் (தீத்து 2:1-4).

வயது முதிர்ந்த ஆண்கள், (1) நிதானமாக இருக்க வேண்டும் – தெளிவான சிந்தனை, எண்ணம், பேச்சு மற்றும் செயலில் விவேகம்; (2) மரியாதைக்கு தகுதியானவர்களாயிருக்க வேண்டும் – நடத்தையில் கண்ணியம் மற்றும் ஆவிக்குரிய காரியங்களில் தீவிரம் (3) சுய கட்டுப்பாடு வேண்டும் – கோபம், உணர்ச்சிகள் மற்றும் பலவீனங்களை வெல்வது (4) தெளிந்த புத்தியுடையவர்களாயிருக்க வேண்டும் – ஆவிக்குரிய முதிர்ச்சி மற்றும் இளைஞர்கள் நம்பி, நேசித்து, நிலைத்திருக்கக்கூடிய விதத்தில் மாதிரியாய் இருத்தல்.

வயது முதிர்ந்த பெண்களுக்கு, “முதிர்வயதுள்ள ஸ்திரீகளும் அப்படியே பரிசுத்தத்துக்கேற்றவிதமாய் நடக்கிறவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், மதுபானத்துக்கு அடிமைப்படாதவர்களுமாயிருக்கவும், தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்குப் பாலிய ஸ்திரீகள்… அவர்களுக்குப் படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்குப் புத்திசொல்லு” (தீத்து 2:3-5).

முதிர்வயதுள்ள ஸ்திரீகள், (1) பயபக்தியுடன் இருங்கள் — தேவன்; மீதும் ஆவிக்குரிய சத்தியங்களின் மீதும் இத்தகைய பயபக்தியைக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் மது அல்லது வதந்திகளுக்கு அடிமையாகவும் இருக்கக்கூடாது (2) நல்லதைக் கற்றுக்கொடுங்கள் — கணவன் மற்றும் குழந்தைகளை நேசிப்பது அவர்களின் வாழ்க்கையில் இன்றியமையாத அங்கம் என்பதை வாலிப பெண்களுக்குக் கற்றுக்கொடுங்கள்.

முதுமை பருவத்தை அடைவது தெய்வீக ஆசீர்வாதம். பெரும்பாலான மக்கள் இளமையில் மரிப்பதை விட வயதாகி மரிக்க விரும்புவர். ஆனால் நாம் கோபமடையாமல், நம்முடைய சுய வழியில், எதற்கும் உடன்படாமல் முதிர் வயதை அடைய விரும்புகிறோம். இந்த வேதப்பகுதியில் விசுவாசிகளுக்கு பவுல் ஆலோசிக்கும் மாதிரியான நபர்களாக நாம் இருக்க வேண்டும். இந்த ஆவிக்குரிய வளர்ச்சி தொடங்குவதற்கான நேரம் இதுவே. நீங்கள் சரீரப்பிரகாரமாய் பெலவீனமடைவதால், ஆவிக்குரிய ரீதியில் எதிர் திசையில் சென்று முதிர் வயதை அடையும்போது தீத்து 2:1-4 இன் சவாலை எதிர்கொள்ள தயாராக இருக்க முடியும்.

2. அந்தந்த நாளுக்குரிய வாழ்க்கையை வாழுதல். சரீர பெலவீனத்தைக் கையாள்வதில் இரண்டாவது காரியம், அந்தந்த நாளுக்குரிய வாழ்க்கையை வாழுவதாகும். இயேசு எல்லோரையும் குறித்து இப்படி பொதுவாக சொன்னார் என்பது உண்மைதான், ஆனால் நாம் சரீரப் பிரகாரமாக பெலவீனமடைவதை உணரும்போது இது நமக்கு மிகவும் பிரயோஜனமானது. நாளைய தினத்தைக் குறித்து கவலைப்பட வேண்டாம் என்று அவர் நமக்கு கூறுகிறார். அத்துடன் “அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்” (மத். 6:34) என்று தன் ஆலோசனையை நிறைவுசெய்கிறார். சிலர் இளமையாக இருக்கும்போதே இதை எப்படி செய்வது என்பதை கற்றுக்கொள்கிறார்கள். எனக்குத் தெரிந்த ஒரு செவிலியருக்கு மல்டிபிள் ஸ்களீரோசிஸ் என்ற கடுமையான நோய் இருந்தது. அவளுடைய எதிர்காலத்தில் என்ன நேரிடப்போகிறது என்பது அவளுக்கு தெரிந்திருந்ததால், அவள் அவ்வப்போது பெலவீனமடைவாள். ஆகிலும் அவள் மகிழ்ச்சியாகவே இருந்தாள். ஒரு நாள் அவள் என்னிடம், “இந்த நோயின் பிரச்சனை என்னவென்றால், ஒரு மனிதனைக் கொல்ல இவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறது; நான் இப்போதே மரிக்க தயாராக இருக்கிறேன். ஆகையால் ஒவ்வொரு நாளும் என்னால் முடிந்த அளவு மகிழ்ச்சியை கொண்டாடப் போகிறேன்” என்று சொன்னாள். அவள் சக்கர நாற்காலியில் சுற்றி வந்தாலும், பேசுவதற்கும் விழுங்குவதற்கும் சிரமப்பட்டாலும், அவள் நல்ல மனம் கொண்டவள்; அந்தந்த நாளுக்குரிய வாழ்க்கையை அவள் வாழ்கிறாள்.

எனக்குத் தெரிந்த மற்றொரு பெண்மணி, மல்டிபிள் மைலோமா எனப்படும் வேதனையளிக்கும் வியாதியுடன் சுமார் 12 வருடங்கள் போராடினார். வலி கட்டுப்பாட்டிற்குள் இருந்த நாட்களில் அவள் உற்சாகமாகவும் அன்பாகவும் இருந்தாள். அவள் அடுத்த நாளின் வலியைக் குறித்தோ அல்லது மரணத்தைப் பற்றியோ கவலைப்பட்டிருக்கலாம். ஆனால் அவள் அவ்வாறு செய்யவில்லை. அவள் ஒவ்வொரு நாளும் தேவனை நம்பினாள். மரணம் வந்தபோது அழகாகவும் அமைதியாகவும் அதை ஏற்றுக்கொண்டாள்.

இவைகள் நியாயமாய் கவலைப்படவேண்டிய விஷயங்கள் தான். ஆனால் வரவிருக்கும் ஆபத்துகளைக் குறித்து வியாதிப்பட்டவர்களாய் வாழ்வதற்குப் பதிலாக, இன்றைய நாளுக்காய் தேவனுக்கு நன்றி செலுத்தி, எதிர்காலத்தை அவரிடம் ஒப்படைத்து, தற்போது நம்மால் முடிந்ததை அனுபவிக்க பிரயாசப்படுவோம். தேவன் எந்த சூழ்நிலையை அனுமதித்தாலும், நம்முடைய தேவையை அவர் சந்திப்பார் என்று வேதம் உறுதியளிக்கிறது. அவர் நமக்குத் தேவையான அனைத்து கிருபைகளையும் கொடுக்காமல் நம்மைச் சோதிக்க விடமாட்டார் என்று அவர் நமக்கு சொல்லியிருக்கிறார் (1 கொரி. 10:13). எல்லா வழிகளிலும் இயேசு நம்முடன் இருப்பதாக வாக்களித்துள்ளார் (மத். 28:20). நாளைய தினத்தைக் குறித்து கவலைகொள்ளாமல் அன்றன்றுள்ள வாழ்க்கையை அன்றன்று வாழும்போது, நாம் தேவனை கனப்படுத்தி, நற்சாட்சியைப் பெற்று, நம்முடைய பிற்காலத்திற்கு தேவையான மகிழ்ச்சியை உறுதிசெய்கிறோம்.

3. சுறுசுறுப்பாய் செயல்படுதல். சரீர பெலவீனத்தை நன்கு கையாள்வதற்கான மூன்றாவது நடைமுறை ஆலோசனை, சுறுசுறுப்பாக செயல்படுதலாகும். நமக்கு வயதாகும்போது, நம்முடைய பெலன் குறைந்து நாம் ஆங்காங்கே அமர்ந்துகொள்வது இயல்பு. இது ஒரு பெரிய தவறு. அதே நேரத்தில் முதுமையை மேற்கொள்வதற்கு ஏறெடுக்கும் முயற்சிகளும் தவறு. முதுமையின் சரீர பாதிப்புகளை எதிர்த்து போராடி விரும்பி, சிலர் அதிக அளவு வைட்டமின்கள், மருந்துகள் எடுத்துக்கொள்கின்றனர். உடற்பயிற்சிகளையும் மேற்கொள்கின்றனர். மேலும் இளமையாக இருக்க அதிக பணத்தை செலவிடுகிறார்கள். முடிந்த அளவிற்கு போராடினால் முதுமையை கட்டுப்படுத்த முடியும் என்று அவர்கள் எண்ணுகிறார்கள்.

சரீரப்பிரகாரமான உடற்பயிற்சிகள் “அற்ப பிரயோஜனமுள்ளது” (1 தீமோ. 4:8) என்று பவுல் தீமோத்தேயுக்கு சொல்லுகிறார். ஏனென்றால், என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய ஆசீர்வாதங்களையுடைய வாழ்க்கையின் ஆவிக்குரிய காரியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும்படிக்கு அறிவுறுத்துகிறார். உடற்பயிற்சியும் ஆகாரத்தில் சுயக்கட்டுப்பாடும் பாராட்டுக்குரியது. அவை நம்முடைய சரீரத்தை ஆரோக்கியமாக இருக்கப்பண்ணி, நம்முடைய பூமிக்குரிய வாழ்க்கையின் ஆயுசு நாட்களை பெருகப்பண்ணலாம். அவ்வளவுதான்! சுறுசுறுப்பாக இருப்பது நல்லது. அதே நேரத்தில் உங்களுடைய ஆவிக்குரிய ஜீவியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள்.

தொழில் சார்ந்த ஏமாற்றத்தை சமாளித்தல்

நாம் அனைவரும் பாராட்டப்படுவதை விரும்புகிறோம். மேலும் நம்முடைய வேலைகளில் நாம் அதிக திருப்தியடைகிறோம். வேலையில் உயர்வு மற்றும் சம்பள உயர்வு ஆகியவற்றில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் இன்றைய சிக்கலான மாற்றத்திற்குரிய தொழில்நுட்ப வளர்ச்சியுற்ற சமுதாயத்தில், பலருடைய முன்னேற்றம் தடைபட்டுவிடுகிறது. ஒரு மனிதன் தன் வேலையில் தான் மிகவும் திறமையானவன் என்பதைக் கண்டுபிடித்தான். அவர் நாற்பது வயதைக் கொண்டவராய் இருக்கலாம். ஆனால் புதிதாகப் பயிற்சி பெறும் இளைஞர்கள் அவரைக் கடந்து செல்வதை அவர் பார்க்கத் துவங்குகிறார். அதினிமித்தம் அவர் படிப்படியாய் வேலையை இழக்க நேரிடலாம். அவருடைய திறமைக்கான வேலை எங்கும் கிடைக்காமல் போகும் நிலையும் ஏற்படலாம்.

இது ஏறத்தாழ 50 வயது கொண்ட என்னுடைய உறவினர் ஒருவருக்கு நிகழ்ந்தது. அவர் ஓய்வுபெறும் வயதை இன்னும் நெருங்கவில்லை. ஆகையால் அவர் வேறு வழியில்லாமல், வேறொரு வேலைக்கான பயிற்சியில் சேர்ந்து புதிய வேலையை துவங்க நேரிட்டது.

50 வயதைக் கடந்த ஒவ்வொருவரும், மரியாதையான வேலையைச் செய்து தங்களுடைய குடும்பத்தை நலமாய் நடத்துகிற யாவரும், தங்களுடைய வாழ்க்கையை தோல்வியைப் போல உணரத் தொடங்குகின்றனர். “நான் என் வாழ்நாள் முழுவதும் கார்களை விற்பனை செய்வதையே தொழிலாய் செய்தேன்! என் வேலை நாட்கள் முடிந்தவுடன், நான் சுயமாய் என்ன சாதித்திருக்கிறேன்?” என்கிற கேள்வி தொற்றிக்கொள்கிறது.

திறமையற்றவர்கள், திறமைசாலிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் அல்லது நிர்வாகிகளாக இருந்தாலும் சரி, தீவிரமான சிந்தனையுடன் வாழ்க்கையை நடத்துபவர்கள், தங்கள் இளம்பிராயத்தின் எதிர்பார்ப்புகளாகிய கவர்ச்சி, மற்றும் இலட்சியம் ஆகியவைகளை தங்களைக் குறித்த சுயமதிப்பீட்டால் மாற்றப்படும் நிலையை அடைகின்றனர். ஆகையால் தான், 52 வயதான ஒரு திறமையான அறுவை சிகிச்சை நிபுணர், ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், அவருடைய திருப்திக்காக சற்று வேடிக்கையாக இருக்க முயற்சிப்பதாக அறிவித்தார். எல்லோருக்கும் சம்பவிக்கும் இயல்பான நிகழ்வுகளை சற்று தள்ளிப்போடுவதே இவர் செய்த ஆக்கப்பூர்வமான ஒரு முயற்சி.

மூன்று பெரிய நிறுவனங்களில் முதல் ஸ்தானத்தை எட்டிய ஒரு நபர், அவரது வெற்றி அவருக்கு அதிக மகிழ்ச்சியைத் தரவில்லை என்று என்னிடம் கூறினார். வாழ்க்கையின் அடுத்த திசையில் இருக்கும் மற்றொரு நடுத்தர வயதும், வயோதிகர்களுமான ஒரு கூட்டம், தாங்கள் வாழ்க்கையில் பணம் சம்பாதிக்கவில்லை என்றும் மனிதனாய் பிறந்து எதையும் சாதிக்கவில்லை என்று நொந்துகொள்கிறது.

“வெற்றிபெற்ற, ஆனால் திருப்பதியில்லாத” மற்றும் “வெற்றிபெறாமல் திருப்தியடையாத” என்ற இரண்டு வகையறாக்களில் எதில் நீங்கள் இடம்பெற்றிருந்தாலும், நாம் எவ்வளவு சாதித்திருக்கிறோம் அல்லது எவ்வளவு சொத்தைக் குவித்திருக்கிறோம் என்பதல்ல நம்முடைய மதிப்பு. இன்று இளைஞர்களும் பெண்களும் “செயல்பாடு” மற்றும் “பொருள் முதல்வாதம்” என்னும் இரண்டு ஆபத்தான இராட்சதர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருக்கவேண்டும். “நீங்கள் என்ன சாதித்தீர்கள்” என்று செயல்வாதம் கூறுகிறது. “நீங்கள் எவ்வளவு சொத்தைக் குவித்துள்ளீர்கள்” என்று பொருள்முதல்வாதம் கூறுகிறது. மொத்தத்தில் இவை இரண்டுமே துன்பத்தை உருவாக்கி வாழ்க்கையை ஒன்றுமில்லாமல் ஆக்குகின்றன.

கடவுளுடைய பார்வையில் நம்முடைய மதிப்புக்கும் இந்த உலகத் தரத்தின்படி நாம் எவ்வளவு வெற்றிபெறுகிறோம் அல்லது எவ்வளவு சேர்த்திருக்கிறோம் என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று வேதம் காட்டுகிறது. தேவன் தம்முடைய சாயலில் நம்மைப் படைத்து, அவருடைய பிரதிநிதிகளாக பூமியை ஆளும் அதிகாரத்தை நமக்குக் கொடுத்தார் என்பதில் நமது மதிப்பு தென்படுகிறது (ஆதி. 1:27-30; சங். 8). எனவே, நம் ஒவ்வொருவருக்கும் பூமியில் ஒரு தனித்துவமான கண்ணியம் மற்றும் அதிகாரம் உள்ளது.

தேவன் நம்மை படைத்த நோக்கத்தை முழுமையாய் அடையவிடாமல் பாவம் நம்மை தடுத்தது. ஆனால் அவர் நம்மைக் கைவிடவில்லை. சரியான நேரத்தில், திரித்துவத்தின் இரண்டாம் நபரை மாம்சத்தில் பிறக்கச்செய்து, பாவமில்லாமல் வாழச்செய்து, சிலுவையில் நம்முடைய பாடுகளை சுமந்து தீர்க்கச்செய்து (யோவா. 3:16; 2 கொரி. 5:21), மரணத்திலிருந்து அவரை உயிரோடே எழும்பப்பண்ணினார் (1 கொரி. 15:25-58). ஒவ்வொரு விசுவாசியும் மன்னிப்பையும் நித்திய ஜீவனையும் தேவனிடத்திலிருந்து பெறுவதற்காய் தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளனர் (எபே. 1:3-6). இதுவே தேவனுடைய பார்வையில் நம்முடைய மதிப்பை விளங்கச்செய்கிறது.

விசுவாசிகள், தேவ தூதர்களுக்கு முன்பாகவும் அறிவார்ந்த உயிரினங்களுக்கு முன்பாகவும் தேவனுடைய அன்பு மற்றும் கிருபையின் பிரதிநிதிகளாக நிறுத்தப்படுவார்கள் (எபே. 2:6-7; 3:10-11), என்பதினால், நாம் அனைவரும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்று நம்பலாம்.

இந்த கருத்து சங்கீதம் 116:15ல் அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. “கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது.” “அருமையானது” என்பதற்கு பயன்படுத்தப்பட்ட எபிரெய வார்த்தையானது “மதிப்புமிக்கது” என்ற அர்த்தங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது (“இரத்தினங்கள்” 2 சாமுவேல் 12:30). எனினும், நீதிமொழிகள் 12:27ல், “அருமையானது” என்று உழைப்பை அடையாளப்படுத்துகிறது. தன்னை மரணத்திலிருந்து விடுவித்ததற்காக சங்கீதக்காரன் தேவனை துதித்துப் பாடுவதால், “விலையுயர்ந்த” என்ற வார்த்தை சூழலுக்கு மிகவும் பொருத்தமானது. கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு விலையுயர்ந்ததாகும். ஏனென்றால் அவர் நித்தியத்திலிருந்து தேர்ந்தெடுத்த ஒரு நபரை பூமிக்குரிய சேவைக்காக இழக்கிறார்; குமாரனின் மரணத்தின் மூலம் மன்னித்தார்; மறுபிறப்பின் மூலம் மறுரூபமடைய செய்தார்; மேலும் ஆவியானவரை அவருக்குள் வாசம்செய்யும்பொருட்டு அனுமதிக்கிறார். ஆகையினால் தான் தேவன் தம்முடைய பிள்ளைகளை எளிதில் மரணமடைய விடுவதில்லை.

லுகேமியா என்னும் வியாதியினால் மரித்துக்கொண்டிருந்த 32 வயது நிரம்பிய, மனைவியும் தாயுமான சிண்டிக்கு ஊழியம் செய்யும்போது இதைப் பற்றி யோசித்தேன். அவளுடைய சூழ்நிலையை எண்ணி வருத்தப்பட்டேன். தேவனும் மிகவும் வருத்தமடைந்திருப்பார் என்பதை உணர்ந்தேன். ஒரு அடைக்கலான் குருவியைப் பொருட்படுத்தும் தேவன் (மத். 10:29-31), அத்தருணத்தில், சிண்டியும் அவளுடைய அன்புக்குரியவர்களும் அனுபவித்த வலியைப் பகிர்ந்து கொண்டார். அவர் சிண்டியை மேன்மையாய் கருதினார். அவர் உங்களையும் என்னையும் அப்படியே மதிப்பிடுகிறார். அவர் நம்மீது வைத்திருக்கும் மதிப்பானது நம்முடைய ஐசுவரியத்தையோ புகழையோ பொருத்தது அல்ல.

குடும்ப மாற்றத்திற்கு ஏற்றாற்போல் அனுசரித்தல்

நாம் அனுசரித்துப்போகவேண்டிய மற்றுமொரு முக்கியமான இடம், நம்முடைய குடும்பம். ஒரு பாரம்பரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த குழந்தைக்கு, குடும்பம் என்பது அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, வளர்ப்பு பிராணி ஆகியவற்றை உள்ளடக்கலாம். இளைஞர்களாயிருக்கும் கட்டத்தில், அவர்களோடு இருக்கும் உறவுகளின் இடங்களை இன்னொரு நபர் ஆக்கிரமிப்பதை அவர்களால் பொருத்துக்கொள்ள முடியாது. அப்பா, அம்மா, குழந்தைகள் நம்மை சுற்றிலும் அமர்ந்து நம்மை மகிழ்விக்கும் உணர்வுகளை விட்டுக்கொடுக்க முடியாது.

ஆனால் சிறந்த குடும்பங்களில் கூட, உறவுகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. குழந்தைகள் படிப்படியாக தன்னிறைவு பெற்றவர்களாகி சுதந்திரவாளிகளாக மாறுகிறார்கள். பெற்றோர்கள் அவர்களுக்கு மேலும் மேலும் சுதந்திரம் கொடுக்க கற்றுக்கொள்ள வேண்டும். குழந்தைகள் தங்கள் அம்மாவையும் அப்பாவையும் விட்டுவிட்டு புதிய குடும்பங்களை உருவாக்கும் முயற்சியில் சீக்கிரமாகவே ஈடுபடுகிறார்கள். பெற்றோர், தாத்தா பாட்டியாகிறார்கள். அவர்கள் தங்களை நடுத்தர வயதினராகக் கருதுவதற்கு முன், அவர்கள் இருவரும் மீண்டும் தனிமையாக்கப்படுகிறார்கள். அவர்கள் பலவகையான உணர்வுகளுக்கு ஆளாகின்றனர். ஒருபுறம், குழந்தை வளர்ப்பின் சோதனைகள் மற்றும் இன்னல்களை தாங்கள் கடந்துவிட்டதாக அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். மறுபுறம், குழுந்தைகள் வீட்டில் இருந்தபோதான மகிழ்ச்சியை அவர்கள் இழக்க நேரிடுகிறது. இந்த கட்டத்தில்தான் பல திருமணங்கள் சோகமாகி, சில பெற்றோர்-குழந்தை உறவுகள் முறிந்து போவது வருத்தம் அளிக்கிறது. அந்த நேரம் வருவதற்கு முன்பே அதற்குத் தயாராகிவிடுவதே ஞானத்தின் பாதை.

திருமண உறவு. குழந்தைகள் சிறுவர்களாய் இருக்கும்போதே, கணவனும் மனைவியும் அவர்களுக்குள் இருக்கும் உறவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறவர்களாய் இருக்கவேண்டும். தேவன் நியமித்தபடி, திருமணத்தின் மூலம் அவர்கள் இருவரும் “ஒரே சரீரமாய்” மாறுகின்றனர். அதே போலவே, குழுந்தைகளும் ஒரு நாள் தங்களுடைய பெற்றோரை விடுத்து, தங்களுக்கான குடும்பத்தை அமைத்துக்கொள்வர். அவர்கள் தங்களுடைய பிள்ளைகள் தவறான குடும்பத்தை அமைத்துக்கொள்ளும் தவறான முன்னுதாரணமாய் இருக்க விரும்பமாட்டார்கள்.

எபேசியர் 5:22-33ல் கற்பிக்கப்படுகிற சுயத்தை இழக்கும் அன்பும், பரஸ்பர சமர்ப்பணமும், இளம் பெற்றோருக்கு மிகவும் முக்கியமானது. குழுந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, தன்னுடைய வாழ்க்கைத் துணையை இரண்டாம் இடத்திற்கு தள்ளும் அநேக குடும்பங்களை ஒரு போதகனாய் நான் பார்த்ததுண்டு. சிலவேளைகளில், தன்னுடைய பிள்ளைகளால் தான் அதிகம் நேசிக்கப்படவேண்டும் என்று விரும்பும் தாயானவள், தன் கணவன்மார்களுக்கு அவமதிப்பை ஏற்படுத்தத் துணிகிறார்கள். சிலவேளைகளில் தகப்பன்மார்கள் தன்னுடைய மகன்களை தன்னுடைய குழுவில் சேர்த்துக்கொண்டு, “நாங்கள்” “நீங்கள்” (அம்மா மற்றும் மகள்) என்று பிரிவினை பேதத்துடன் நடந்துகொள்கிறார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில் வாழும் குழந்தைகள், திருமண வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும்போது அதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

சில காலத்திற்கு முன்பு, பல இளம் தம்பதிகள் தங்கள் சிறு பிள்ளைகளுடன் சேர்ந்து ஷாப்பிங் செய்வதைப் பார்த்தபோது நானும் என் மனைவியும் மிகுந்த உற்சாகமடைந்தோம். எங்களைச் சுற்றிலும் இளம் கணவன்-மனைவிகள் தங்கள் ஒற்றுமையைக் காட்டுவதையும் குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பைப் பகிர்ந்து கொள்வதையும் பார்த்தோம். “இவர்கள் நம்முடைய வயதை எட்டும்போதும் ஒருவரையொருவர் அதிகமாய் நேசிப்பார்கள்” என்று என் மனைவி என்னிடத்தில சொன்னாள்.

காலங்கள் அனைத்து திருமணங்களிலும் மாற்றத்தை கொண்டு வருகின்றன. பாலியல் உறவு முன்பு இருந்ததைப் போல இருக்காது. ஆனால் இது இயல்பான ஒன்று. அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். பாலியல் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் அல்லது ஆபாச புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களைப் பார்த்து பாலியல் ஆசையைத் தூண்ட முயற்சிக்கும் ஆண்கள் கடுமையான தவறு செய்கிறார்கள். பாலியல் மந்தநிலை பற்றி கவலைப்படுவதைத் தவிர்ப்பதே நல்லது. கணவனும் மனைவியும் நல்ல உறவில் இருந்து ஒருவரையொருவர் அன்புடன் நடத்தும்போதும், பொதுவான ஆர்வங்களை வளர்த்துக் கொள்ளும்போதும், ஒன்றாக ஜெபிக்கும்போதும், வயதான போதிலும் அவர்களின் பாலுறவு வாழ்க்கை சுமூகமாய் அமையும்.

பெற்றோர் – பிள்ளைகள் உறவு. வாகனங்களின் பம்பர் ஸ்டிக்கர்கள், முதியவர்கள் மற்றும் அவர்களின் பேரப்பிள்ளைகள் பற்றி பரவலாக மாறுபட்ட செய்திகளை பதிவிடுகின்றது. சிலர், “நான் ஒரு தாத்தா பாட்டியாக இருக்க விரும்புகிறேன்” அல்லது “ஒரு தாத்தா பாட்டியாக இருப்பது மகிழ்ச்சி” என்று பதிவிடுகின்றனர். மற்றவர்கள், “நான் என் குழந்தைகளின் பணத்தை செலவழிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளனர். பல வயதானவர்கள் தங்கள் வளர்ந்த குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளை மிகவும் ரசிக்கிறார்கள். இளம் பெற்றோராயிருப்பதைக் காட்டிலும் இது சிறந்தது என்று கூறுகிறார்கள். 65 வயதுடைய ஒரு பெண்மணியிடம், நான் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கிறேன் என்று கேலியாகச் சொன்னபோது, அவள் தீவிரமாகத் திரும்பி, “நன்றி, ஆனால் நான் கணவனைத் தேடவில்லை. எனது குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் எனக்கு நல்ல உறவு இருக்கிறது. அதை இழக்கும் அபாயத்தை நான் விரும்பவில்லை” என்றாள். ஆனால் ஒரு 80 வயது முதியவர் என்னிடம் மிகவும் வேதனையுடன், “என் குழந்தைகள் என்னைப் பற்றி கவலைப்படுவதில்லை; அவர்கள் என் சொத்தை விரும்பி, என்னுடைய மரணத்திற்காய் காத்திருக்கிறார்கள்” என்றார்.

கிறிஸ்தவர்களிடையேயான உறவு அற்புதமானதாக இருக்கிறது. தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவாயாக என்ற கட்டளைக்குக் கீழ்ப்படியும் வளர்ந்த பிள்ளைகள், நல்ல உறவில் நிலைத்திருப்பார்கள். ஞானமுள்ள பெற்றோர்கள் தங்களால் இயன்றதைச் செய்வதன் மூலம் பிள்ளைகளின் நேசத்திற்குரியவராகின்றனர். அவர்கள் தங்கள் பேரக்குழந்தைகளை நேசிப்பார்கள், ஆனால் அவர்கள் மீதான பெற்றோரின் கண்டிப்பை அலட்சியப்படுத்த மாட்டார்கள்.

பல வயதான விதவைகள் தங்கள் சந்ததியினரால் புறக்கணிக்கப்பட்டு முதியோர் இல்லங்களில் வசிப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஒருவேளை தங்களுடைய பெற்றோர் அநேக மக்களுடன் சேர்ந்து வசிக்கும் மாற்றத்தை பார்க்க விரும்பி பிள்ளைகள் மகிழ்ச்சியடையலாம். அவர்கள் தங்கள் தாயார் வசிக்கும் இடத்தில் பல தோழர்களும் நண்பர்களும் இருப்பதாக எண்ணுகிறார்கள். காரணம் எதுவாக இருந்தாலும், அது தவறு. தாய்மார்கள் மற்றும் பாட்டிமார்கள் பொதுவாக தங்கள் பிள்ளைகளுடன் நெருக்கமாக இருக்கவே விரும்புவார்கள். அதைப் புறக்கணிப்பது, வேத வார்த்தைகளுக்கு கீழ்ப்படியாமல், அடுத்த தலைமுறைக்கு தவறான மாதிரியை ஏற்படுத்துவதாகும். பாட்டி-தாத்தா மீது பெற்றோர்கள் அன்பையும் மரியாதையையும் காட்டுவதைப் பார்க்கும் குழந்தைகள், அவர்கள் வளரும்போது நிச்சயமாக அதையே கடைபிடிக்க முயற்சிப்பர்.

பரஸ்பர சமர்ப்பணம், கனிவான அன்பு, ஆழ்ந்த மரியாதை ஆகியவற்றைக் கடைப்பிடிக்கும் குடும்பங்களில் தேவனுடைய ஆசீர்வாதம் தங்கும். குடும்ப உறவுகளைக் கையாளுவதைக் குறித்த தன்னுடைய போதனையில் பவுல் இதை மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்: எபேசியர் 5:22-6:3. கணவன்-மனைவியை அவர் எச்சரித்த உடனேயே, யாத்திராகமம் 20:12 இன் கட்டளையை நினைவுகூர்ந்து, பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியும்படி அறிவுறுத்துகிறார்.

முதுமை பருவத்தின் மகிழ்ச்சிக்கு நெருங்கிய குடும்ப உறவுகளுக்கு நிகரான காரணம் வேறு எதுவும் இல்லை. குளிர்காலத்தை எளிதாகக் கழிக்கக்கூடிய ஒரு வயதான தம்பதியினர், சமீபத்தில் என்னிடம், அவர்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு அருகில் இருப்பதை மிகவும் விரும்புவதாக என்னிடம் சொன்னார்கள். முதியோர் இல்லத்தில் வசிக்கும் ஒரு விதவை தாயார், தன் கணவனையும், வாழ்ந்த வீட்டையும் தவறவிட்டாலும், தேவன் தனக்கு பிள்ளைகள், பேரக்குழந்தைகள் மற்றும் பல நண்பர்களைக் கொடுத்திருப்பதால், அவள் முழு திருப்தியுடன் இருப்பதாக என் மனைவியிடமும் என்னிடமும் கூறினார்.

நான் ஒரு தீர்க்கதரிசியும் அல்ல; தீர்க்கதரிசியின் புத்திரனும் அல்ல. ஆனால் தன் சந்ததியினருடன் நெருங்கிய குடும்ப உறவில் இருக்கும் இத்தகைய பெற்றோர்கள், வயதாகும்போது அதே அன்பிற்கும் அரவணைப்பிற்கும் பாத்திரவான்களாவார்கள் என்று நான் எண்ணுகிறேன். குடும்ப உறவுகளை நேர்த்தியாய் கட்டியெழுப்புவது, எதிர்காலத்தில் பெரும் பலனைக் கொடுக்கும்.

பணி ஓய்வை ஏற்றுக்கொள்ளுதல்

ஒரு நபர் பணி ஓய்வுபெறும்போது, அவருக்கு கிடைக்கும் அதிகமான நேரமே அவர் சரிசெய்ய வேண்டிய மற்றுமொரு மாற்றமாகும். நாம் பணியாற்றும் நாட்களில் பணி ஓய்வு பெற்றவர்களை பொறாமையுடன் பார்க்க நேரிலாம். அவர்கள் கோல்ஃப் விளையாடலாம் அல்லது மீன் பிடிக்கலாம். அவர்கள் விரும்பும் எதையும் அவர்கள் செய்யலாம். அவர்கள் தினமும் காலையில் தூங்கலாம். என்ன ஒரு வாழ்க்கை! ஆனால் உண்மை என்னவென்றால், ஓய்வு பெற்றவர்கள் வழக்கமாய் தூங்கும் நேரத்தை அதிகப்படுத்த விரும்புவதில்லை. கோல்ஃப் விளையாடுவது மற்றும் மீன்பிடிப்பது, மற்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகள், ஆகியவற்றை அவர்களால் வெகுநேரம் அனுபவிக்க முடியாது. இதினிமித்தம் சில ஓய்வு பெற்றவர்கள் சலிப்படைந்துள்ளனர். தங்கள் வாழ்க்கைத் துணையுடன் நன்றாகப் பழகுவதில்லை. இங்கும் அங்கும் அமர்ந்துகொண்டு காலத்தைக் கழித்து மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

மறுபுறம், சில ஓய்வு பெற்றவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்கள் ஓய்வு பெற்ற பிறகும் வேலையில் கவனம் செலுத்த முடியும் என்கின்றனர். தின தியானங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குகிறார்கள். வீட்டு வேலைகளில் மும்முரமாய் செயல்படுகின்றனர். மற்றவர்களுக்கு எந்த விதத்தில் உதவி செய்ய முடியும் என்று எதிர்பார்க்கிறார்கள். திருச்சபையின் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். அவர்கள் தங்கள் பிள்ளைகளுடனும் பேரக்குழந்தைகளுடனும் நேரம் செலவழிக்கின்றனர். வேதபாட வகுப்பில் சேர்ந்திருக்கிறார்கள். வாழ்க்கையை மும்முரமாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்த்துவதைக் கண்டு அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.

பின்வரும் நான்கு காரியங்கள் மகிழ்ச்சியான ஓய்வுக்கான முக்கிய காரணிகள்:
(1) அர்த்தமுள்ள தியானங்கள்,
(2) மகிழ்ச்சியான நடவடிக்கைகள்,
(3) சேவை செய்தல் மற்றும்
(4) தீவிரமாய் கற்றுக்கொள்ளும் சிந்தை.

1. அர்த்தமுள்ள தியானங்கள். உங்கள் ஆத்துமாவை போஷிக்கும் விதத்தில், உங்கள் மனைவியுடன் சேர்ந்தும், தனிப்பட்ட விதத்திலும் ஜெயம் செய்தவற்கு நேரம் ஒதுக்குங்கள். ஒவ்வொரு நபரும் தங்களுடைய நேரம், அளவு மற்றும் விதங்களை நீங்களாகவே தீர்மானம் செய்துகொள்ள முடியும். பணி ஓய்வு பெற்ற ஆயிரக்கணக்கானோர் எங்களின் அனுதின மன்னாவை தங்களின் கூட்டு தியானங்களுக்கும் தனிப்பட்ட தியானங்களுக்கும் பயன்படுத்துகின்றனர். சிலர், ஜெபக்குறிப்புகளை உருவாக்கி, முறைப்படி ஜெபிக்கிறார்கள். மற்றவர்கள் தங்களின் நினைவில் இருக்கும் காரியங்களை ஜெபங்களாக ஏறெடுத்து, பரிசுத்த ஆவியானவரை சார்ந்து மற்றவர்களுக்காக மன்றாடுகிறார்கள்.

கர்த்தருடைய மனிதன், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருப்பான் (சங். 1:2). அவன் “கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்” (சங். 5:3) என்று வேண்டிக்கொள்ளுவான். வயது முதிர்ந்த மனிதனான தானியேல், தன் சொந்த ஜனத்தை விட்டு வெகு தொலைவில் அடிமைப்பட்டாலும், எருசலேம் இருக்கும் திசைக்கு நேராய் தன் ஜன்னலைத் திறந்து, “தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்” (தானி. 6:10). ஜெபத்தில் “கேளுங்கள்,” “தேடுங்கள்” மற்றும் “தட்டுங்கள்” என்று இயேசு சொன்னார் (மத். 7:7). பவுல் ஜெபிக்கும்படி பலமுறை அறிவுறுத்துகிறார் (ரோ. 12:12; எபே. 6:17-18; பிலி. 4:6; கொலோ. 4:2; 1 தெச. 5:17; 1 தீமோ. 2:1). பணி ஓய்வு பெற்ற ஒரு கர்த்தருடைய மனிதனுடைய வாழ்க்கையில் வேதத்தைப் படிப்பதும், தேவனிடத்தில் மன்றாடுவதும் இன்றியமையாத அங்கமாகும்.

2. மகிழ்ச்சியான நடவடிக்கைகள். ஓய்வு பெறுபவர் சில மகிழ்ச்சிகரமான செயல்களில் ஈடுபட வேண்டும். வேதம் இதைச் சொல்லவில்லை. ஆனால் மகிழ்ச்சியாயிருப்பதற்கான மனிதனுடைய தேவையை வேதம் அங்கீகரிக்கிறது. சுறுசுறுப்பானவர்கள் மட்டுமே ஓய்வை அனுபவிக்க முடியும். ஏழை, பணக்காரர், ஆண், பெண் என்று அனைத்து தரப்பட்ட மக்களும் தங்களுடைய அன்றாட உழைப்பிலிருந்து ஓய்வெடுக்கும்படி தேவன் இஸ்ரவேலுக்கு ஓய்வுநாளை ஆசரிக்கும்படிக்குக் கட்டளையிட்டார். ஆனால் பணி ஓய்வு பெற்ற பின்பு ஓய்வெடுப்பது என்பது முற்றிலும் வேறுபட்டது.

நீதிமொழிகளின் ஆசிரியர், சோம்பேறிகளை (6:6,9; 12:24) மீண்டும் மீண்டும் எச்சரிக்கிறார். சும்மா இருப்பதை பவுலும் எச்சரிக்கிறார் (1 தெச. 4:11; 1 தீமோ. 5:13). மகிழ்ச்சியாயிருப்பது நல்லது; ஆனால் சும்மாயிருப்பது நல்லதல்ல. ஆரோக்கியமான காரியங்களில் ஈடுபாடு செலுத்துவதே இன்பத்தைக் கண்டறிவதற்கான நேரடி வழி. சிலர் வீட்டு மேம்பாடு மற்றும் பழுதுபார்ப்புகளில் ஈடுபடலாம். ஒரு ஓய்வு பெற்றவர் என்னிடம், அவருடைய வீட்டில் குழாய் கசிவைப் பற்றியோ அல்லது பழுதுபார்க்க வேண்டிய ஏதோ ஒன்றைப் பற்றியோ அவருடைய மனைவி கூறும்போது அவர் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார். சிலர் பொழுதுபோக்கை தேர்வு செய்கிறார்கள். மற்றவர்கள் கோல்ஃப் அல்லது மீன்பிடித்தல் அல்லது விளையாட்டு நிகழ்வுகளைப் பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சியைக் கண்டடைகிறார்கள். வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கும் பல பொழுதுபோக்குகள் உள்ளன. நீங்கள் விரும்பக்கூடிய ஒன்றைக் கண்டுபிடித்து, அதைச் செய்வதற்கு சிறிது நேரம் செலவிடுங்கள். நீதிமொழிகள் 17:22 “மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்” என்று கூறுகிறது.

3. சேவை செய்தல். ஓய்வுபெறும் நேரத்தைக் கையாள்வதில் மூன்றாவது இன்றியமையாத அம்சம், மற்றவர்களை அணுகுவதாகும். கிறிஸ்தவர்கள் தங்கள் சாட்சியை வெளிப்படுத்துவதற்கு இது ஒரு சிறந்த வழியாகும்.

எனக்கு ஒரு வயதான தாயாரைத் தெரியும். அவர் ஒரு நல்ல சமையல்காரர். பெற்ற தாய், நோய்வாய்ப்பட்டோ அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோ தவிக்கும் குடும்பங்களுக்கு உணவு கொண்டு வருவதற்கான வாய்ப்புகளை அவர் தேடுகிறார். அந்த பணியில் மற்ற பெண்களையும் ஈடுபடுத்துகிறார். அதேபோன்று, கைத்தொழில் நன்கு தெரிந்த ஓய்வு பெற்ற ஒருவர், சிறிய தச்சு மற்றும் பிளம்பிங் வேலைகளைச் செய்ய முடியாத வயதானவர்களுக்கு தனது சேவைகளை இலவசமாக வழங்குகிறார். ஒரு சிறிய சமூகத்தில் ஓய்வு பெற்ற அமைச்சர் ஒருவர், செய்தித்தாளில் இடம்பெறும் இரங்கல் கட்டுரைகளை சரிபார்த்து, அக்குடும்பத்திற்கு தனிப்பட்ட விதத்தில் கடிதம் எழுதி, அதின் மூலம் தனது அனுதாபத்தை தெரிவிப்பார். மேலும் அவர்களுக்கு இலவசமாக ஆலோசனைகளையும் வழங்குவார். எண்பது வயதாகிய ஒரு பெண், பட்டம்பெறும் மாணவர்கள், பணிநிறுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், துக்கமடைந்தவர்கள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு ஊக்கமளிக்கும் குறிப்புகளை அனுப்பி அவர்களை உற்சாகப்படுத்துவதை வாடிக்கையாய் கொண்டுள்ளார். இன்னொரு வயதான பெண், தனிமையில் இருப்பதான உணர்பவர்களுக்கு தொலைபேசியில் உரையாடி ஆறுதல் சொல்கிறார்.

நாம் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் வகையில் நமது நேரத்தைப் பயன்படுத்த முடியும். தேவனை நேசிக்கும் முதியவர்களின் ஆசீர்வாதத்தையும் சங்கீதக்காரன் இவ்வாறு சித்தரிக்கிறார்:

நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான். கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள். கர்த்தர் உத்தமரென்றும், என் கன்மலையாகிய அவரிடத்தில் அநீதியில்லையென்றும், விளங்கப்பண்ணும்படி, அவர்கள் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள் (சங்கீதம் 92:12-15).

4. தீவிரமாய் கற்றுக்கொள்ளும் சிந்தை. நமது ஓய்வு காலத்தை சிறந்ததாக மாற்றுவதில் மற்றொரு முக்கிய அம்சம், சுறுசுறுப்பான மனதை உடையவர்களாய் இருப்பதாகும். ஒருசிலருக்கு நினைவாற்றல் இழப்பு மற்றும் அல்சைமர் நோய் போன்ற குறைபாடுகள் ஏற்பட்டாலும், பெரும்பான்மையானவர்கள் இன்னும் கற்றுக்கொண்டேயிருக்கலாம். மனப்பாடம் செய்யலாம். தங்கள் முதிர்வயதில் சுறுசுறுப்பாகவும் துடிப்பாகவும் இருந்த பலரை வேதம் குறிப்பிடுகிறது.

ஏறத்தாழ 150 வயதாகிய யாக்கோபு, தனது குமாரர்களை அருகில் அழைத்து, எதிர்காலத்தைக் குறித்த தீர்க்கதரிசன செய்திகளை அவர்களிடம் பகிர்ந்துகொண்டார் (ஆதி. 48-49). மோசே தன்னுடைய 120 வயதில், அவர் கடைசியாய் மரணமடையப்போகிற மலையில் ஏறியபோது தெளிவான சிந்தையைக் கொண்டிருந்தார் (உபா. 34). காலேப் தன்னுடைய 85ஆம் வயதில், ஹெப்ரோன் என்று பெயரிடப்பட்ட மலைநாட்டை சுதந்தரிக்கும் இராணுவ வெற்றியில் முன்னணியில் இருக்கும் பாக்கியத்தை கேட்டார் (யோசு. 14). சிங்கங்களின் குகையிலிருந்து அற்புதமாக விடுவிக்கப்பட்ட 90 வயது நிரம்பிய தானியேல், “தரியுவின் ராஜ்யபார காலத்திலும், பெர்சியனாகிய கோரேசுடைய ராஜ்யபாரகாலத்திலும் தானியேலின் காரியம் ஜெயமாயிருந்தது” (தானி. 6:28). கிறிஸ்து பிறப்பின்போது, முதிர்வயதான சிமியோன் மற்றும் 84 வயதான விதவை அன்னாள் ஆகிய இருவரும் இயேசுவை வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவாக அங்கீகரித்து, அவர் உலகிற்கு வந்ததன் முக்கியத்துவத்தைப் பற்றி மனந்திரும்பக்கூடிய வகையில் பிரசங்கித்தனர் (லூக். 2:25-38).

வயது முதிர்ந்தவர்கள் பொதுவான மறதியுள்ளவர்கள் என்னும் கருத்து வேதாகமத்தினாலும், 30 ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட எந்த ஆவணங்களிலும் இடம்பெறவில்லை. முதியவர்கள் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்படுவதால் இந்த வகையான மறதிக்கும் மனச் சோர்வுக்கும் ஆளாகின்றனர். பிரபலமான டாக்டர். வில்லியம் காஸர், இதுபோன்ற ஒதுக்கப்பட்ட முதியவர்களை பொறுப்புகளில் ஆழ்த்தும்போது, அவர்கள் இந்த மனநிலையிலிருந்து விடுபடுகின்றனர் என்று குறிப்பிடுகிறார்.

காலம் கடக்கும்போது, நம்முடைய சிந்தையின் வீரியம் குறைய நேரிடுகின்றது. பொருட்களை எங்கு வைத்தோம் என்பதை பெரியவர்கள் பொதுவாக மறந்துவிடுவர். அதை சீக்கிரம் நினைவுபடுத்திப் பார்ப்பதும் அவர்களுக்கு சற்று கடினம். அதற்கு முக்கிய காரணம், அவர்கள் அதை ஒரு பொருட்டாய் எண்ணுவதில்லை என்பதே. அவர்கள் அதை நினைவுகூர முயற்சிக்கும்போது, மற்ற கவலைகளால் அவர்களின் மனம் நிரப்பப்படுவதால், அவற்றை எளிதில் நினைவுகூருவதற்கு சிரமப்படுகின்றனர். இதுபோன்ற குணாதிசயங்களை தங்களில் கண்டுபிடிக்கும் முதியவர்கள் பயப்பட தேவையில்லை. அதேபோன்று, இவ்வகை குணாதிசயங்களை தங்கள் பெற்றோர்களிடம் கண்டறியும் பிள்ளைகள் அவர்களுக்கு மறதி வியாதி வந்துவிட்டது என்று உடனடியான தீர்மானத்திற்கு வந்துவிடவேண்டாம்.

தான் படித்த காரியங்களை அல்லது மற்ற காரியங்களை நினைவில் வைத்துக்கொள்ள விரும்பும் முதியவர்கள், முயன்றால் அதைச் செய்வது எளிது. வேதபாடங்களையும் ஜெபத்தையும் முக்கியமாய் கருதினால் அவர்கள் ஆவிக்குரிய ரீதியாய் வளர்ச்சியடைய முடியும். இயற்கைக்காட்சிகள், சத்தங்கள், வாசனைகள், சிறுபிள்ளைகளின் கூச்சல் மற்றும் சிரிப்பொலிகள்; நேசத்திற்குரியவர்கள் மற்றும் சிநேகிதர்களின் தோழமை போன்ற கடந்த கால நினைவுகளின் மீதான புதிய ஆர்வத்தை ஏற்படுத்திக்கொள்வதின் மூலம் நம்முடைய மகிழ்ச்சியின் அளவைக் கூட்ட முடியும். வேதனையும் வியாகுலத்தையும் அனுபவிக்கும் வயது முதிர்ந்த விசுவாசிகளையும் இந்த உணர்வுகள் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும். பணி ஓய்வுபெற்ற வருடங்கள் மேன்மையானதாகவும் பயன்படக்கூடியதாகவும் தேவனை மகிமைப்படுத்தக்கூடியதாகவும் இருக்கக்கூடும்.

உங்கள் வாழ்க்கைத் துணையின் மரணத்திற்கு தயாராகுதல்

நம்முடைய வாழ்க்கைத் துணையின் மரணத்தைச் சந்திக்கும்போது, வாழ்க்கையின் மிக முக்கியமான மாற்றத்திற்கு நேராய் கடந்துபோக நேரிடுகிறது. இது நாம் இளமையாயிருக்கும் போதும் சம்பவிக்கலாம் அல்லது முதுமையில் சம்பவிப்பதும் இயல்பு. இந்த சம்பவத்தை இரண்டு கோணங்களில் இருந்து ஆய்வு செய்வோம்: சம்பவிப்பதற்கு முன்பு மற்றும் சம்பவித்த பிறகு.

சம்பவிப்பதற்கு முன்பு. தன் வாழ்க்கைத் துணை தனக்கு முன்பாக மரணத்தை சந்திக்கலாம் என்னும் நிஜத்தை நாம் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். எஞ்சியிருப்பவர் சந்திக்கக்கூடிய வாழ்க்கைப் பிரச்சனைகளைக் குறித்து விவாதிக்க தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். மருத்துவ சிகிச்சைக்கு அவர்கள் உட்பட நேரிடுமானால், அது அவர்களுடைய வாழ்நாட்களை நீட்டிக்கக்கூடியது என்கிற பட்சத்தில், அதை ஆமோதிப்பது நல்லது. எஞ்சியிருக்கும் நபர் முதியோர் ஆசிரமத்திற்க செல்லுவதற்கோ அல்லது, தன் வீட்டில் தொடர்ந்து தனிமையில் வசிப்பதற்கோ மனதளவில் ஆயத்தப்படவேண்டும். அதைத் தவிர்த்து, முன்னமே நேர்த்தியாய் கலந்தாலோசிக்கப்படாத எந்த விபரீத முடிவையும் அவசரப்பட்டு எடுப்பது நல்லதல்ல. நடைமுறைக் காரியங்களைக் குறித்த தெளிவாய் பேசிய பின்பு, தனிமையான வாழ்க்கையை தொடர்வது சிறந்தது.

வேதாகம பாடங்கள் மூலமாகவும் கிறிஸ்தவ ஐக்கியங்களின் மூலமாகவும் நாம் கற்றுக்கொண்ட வாழ்க்கைப் பாடங்கள் இந்த சூழ்நிலையை மேற்கொள்வதற்கு உதவியாயிருக்கும். “நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்” (ரோ. 8:16) என்ற ஆவிக்குரிய நிலையை நாம் அடையும் பட்சத்தில், நம்முடைய வாழ்க்கைத் துணையின் இழப்பை நாம் துணிவுடன் ஏற்றுக்கொள்ள முடியும்.

சம்பவித்த பின்பு. வாழ்க்கைத் துணை மரிக்கும்போது, எஞ்சியிருப்பவர் உடைந்துபோகிறார். இது உடனடி வலியை ஏற்படுத்துகிறது. அத்தருணத்தில், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நமக்கு ஆதரவாய் இருப்பார்கள். ஆனால் சில வாரங்கள் கடந்த பின்பு, அந்த வேதனையின் வீரியம் அதிகரிக்கும். வாழ்க்கை வாழ்வதற்கு தகுதியுள்ளதல்ல என்று எண்ணத் தோன்றும். இத்தருணங்களில் முக்கியமான தீர்மானங்களை எடுப்பது நல்லதல்ல.

இதுபோன்ற வலிமிகுந்த தருணங்களில் அநேகர் தீர்மானம் எடுக்கின்றனர். என்னுடைய முதிர்வயது நண்பர் ஒருவர், அவருடைய மனைவியின் மரணத்திற்கு பின்பு, தன்னுடைய பூங்கா வீட்டை விற்றுவிட்டு தன்னுடைய பிள்ளைகளோடு தங்கியிருக்க தீர்மானித்து புறப்பட்டு சென்றார். அவர் அதுவரை வாழ்ந்திருந்த அந்த பூங்காவில் அவரோடு வசித்த மற்ற நண்பர்களின் நினைவுகள் ஆறுமாத காலம் கழித்து அவருக்கு ஏற்பட்டது. ஆனால் அதற்குள் அந்த பூங்காவில் இருந்த மற்ற வீடுகள் விற்கப்பட்டுவிட்டது. அதற்கு பின்பு அவர் முதியோர் ஆசிரமத்திற்கு சென்றார். அந்த இடத்தையும் அவர் விரும்பினார். ஆனால் அவருடைய மனைவியின் மரணத்திற்கு பின்பு அந்த வீட்டை விற்கும் முக்கிய தீர்மானத்தை தான் உடனே எடுத்திருக்கக்கூடாது என்று என்னிடம் மனம் வருந்தினார்.

இதுபோன்ற தருணங்கள் ஏற்படும்போது, இனி வாழக்கையில் மகிழ்ச்சியே கிடையாது என்று எண்ணத் தோன்றும். ஆனால் அது உண்மையில்லை. சங்கீதம் 30ன் ஆசிரியர், தன்னுடைய நன்றிப்பாடலில், தன்னுடைய உபத்திரவத்தில் தேவன் தன் கூக்குரலைக் கேட்டதற்காய் நன்றி சொல்லுகிறார். தேவனுடைய கீழ்ப்படிதலுள்ள ஜனத்தின் வாயிலிருந்து வரும் கடைசி வார்த்தைகளானது, ஆனந்த களிப்புடன் கூடிய கூக்குரல்கள் என்று அவர் உறுதியாய் நம்புவது தெளிவாகிறது. பரலோகத்தில் வீற்றிருக்கும் மீட்கப்பட்டவர்கள் அனைவரின் துதி சத்தமும் இதுவாகத்தான் இருக்கக்கூடும். பூமியிலும் கூட, மாலையில் ஏற்படும் கண்ணீர்களை காலையின் ஆனந்த களிப்பு மாற்றிவிடும். “சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்” (சங்கீதம் 30:5).

தன்னுடைய வாழ்க்கை சீக்கிரம் முடிந்துவிடப்போகிறது என்பதை கரோலின் நன்கு அறிந்திருந்தார். அவர் நிமித்தம் கவலைப் பட்டுக்கொண்டிருக்கிற அவருடைய குடும்பத்தினர் மீண்டும் மகிழ்ச்சியை சுதந்தரித்துக்கொள்வார்கள் என்பதை அவள் நன்கு அறிந்திருந்தார். அவளுடைய கணவனான யூஜின், மிகவும் மென்மையான ஒரு நபர். கரோலினின் இழப்பு மற்றெல்லாரைக்காட்டிலும் அவரை பெருமளவு பாதிக்கும். ஆனால் அவர், வாழ்க்கை மீண்டும் மகிழ்ச்சிகரமானதாய் மாறியிருக்கிறது என்று என்னிடம் சொன்னார். அவருடைய மனைவியை அவர் இழக்கவில்லை. அவள் எங்கிருக்கிறாள் என்பது அவருக்குத் தெரியும், அவளை மீண்டும் அவர் சந்திப்பார்.

உங்களின் சுதந்திரத்தை இழத்தல்

மற்றொரு மாற்றம் என்னவெனில், மற்றவர்களை சார்ந்து வாழும் சார்பு வாழ்க்கை. நமக்கு வயதாகிவிட்டால், நாம் மற்றவர்களைச் சார்ந்து வாழவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த சார்பு அளவு ஒருவருக்கொருவர் பெரிதளவு மாறுபடுகிறது. சிலர் இறக்கும் வரை தன்னிறைவாக இருக்கிறார்கள். மற்றவர்கள் பல ஆண்டுகளாக உதவியற்றவர்களாக இருக்கிறார்கள். நாம் எந்த அளவு சார்ந்து வாழவேண்டியிருக்கும் என்பதைக் கணிக்க முடியாது. அதை தெரிந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. நாம் அவரை விசுவாசிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். கவலைப்படவேண்டாம் என்னும் தேவனுடைய கட்டளைக்கு இது நம்மைத் திரும்பக் கொண்டுவருகிறது. ஏனென்றால் கவலைப்படுவது என்பது நமது பரலோகத் தகப்பன் மீது நம்முடைய நம்பிக்கையற்ற தன்மையைக் காட்டுவதாகும். “ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்” (மத். 6:34) என்று இயேசு சொன்னார்.

மக்கள் மனதளவில் ஒரு நாள் வாழ்க்கையின் யதார்த்தத்திலிருந்து பிரிக்கப்படுவார்கள் என்பதை அறிவார்கள். அல்சைமர் நோயின் ஆரம்ப கட்டத்தில் இருந்ததால் ராஜினாமா செய்த 52 வயதான போதகர், அவரது மனம் அவ்வப்போது குழப்பமடைந்தாலும், அவருடைய உள்ளான மனிதன் தேவனோடு உறவில் இருப்பதாகக் கூறினார். தனது மனைவிக்கும் தன்னுடைய குடும்பத்தினருக்கும் இன்னும் தான் மோசமாய் தெரிவாய் கூறினார். அவர் ஒரு நாள் பரலோகத்தில் இருப்பார்; அங்கு அவர் பரிபூரணமாக இருப்பார் என்ற நம்பிக்கையில் அவர் பெரும் ஆறுதலைக் கண்டார்.

மற்றவர்களுடைய உதவியை எதிர்பார்ப்பதில் நம்முடைய பெருமையே நமக்கு பெரிய எதிரி

மற்றவர்களுடைய உதவியை எதிர்பார்ப்பதில் நம்முடைய பெருமையே நமக்கு பெரிய எதிரி. ஆகையினால் நம்முடைய பெலவீனங்களை, கிறிஸ்துவைப் போல நம்முடைய சரீரத்தை ஒடுக்கி தாழ்மையை பிரதிபலிக்கும் வாய்ப்புகளாய் பார்க்கவேண்டும். மற்றவர்களுக்கு ஊழியம் செய்யும் மனப்பான்மையை பலர் வாய்ப்புகளாய் கருதுகின்றனர். குறைந்த சம்பளத்தில் ஒரு மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் மார்க்ரெட் என்னும் ஒரு தோழி, அப்பணி தனக்கு மனநிறைவை ஏற்படுத்துவதாக தெரிவித்தார். பல வயது முதிர்ந்த பெண்கள் தங்கள் வயதான கணவருக்கு சேவை செய்வதில் திருப்தியடைகின்றனர்.

இயேசு “தாகமாயிருக்கிறேன்” என்று சிலுவையில் சொன்னதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, அவருக்கு யாரேனும் தன்னுடைய அன்பை வெளிப்படுத்தவேண்டும் என்று ஏக்கமே. ஆனால் கசப்பான காடியை அவருக்குக் குடிக்கக்கொடுத்ததின் மூலம் இரட்சகர் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்திருக்கக்கூடும் (யோவான் 19:28-3

உங்கள் நற்சாட்சியை திட்டமிடுதல்

நாம் மரிக்கும்போது மற்றுமொரு பெரிய மாற்றம் ஏற்படக்கூடும். நாம் நம்முடைய புதிய வீட்டிற்கு செல்ல நேரிடும். நம்முடைய பழைய சிநேகிதங்களை தொலைக்க வேண்டியிருக்கும். நம்முடைய பூமிக்குரிய சொத்துக்களையும் நம்முடைய நற்சாட்சிகளையும் தொலைக்க வேண்டியிருக்கும். நாம் இளமையாக இருக்கும்போது, நம் அன்புக்குரியவர்கள் நமது சொத்துக்களை எவ்வாறு பங்கிடுவார்கள் என்பதைப் பற்றி அதிகம் யோசிப்பதில்லை. மரணம் எப்போது வேண்டுமானாலும் நேரிடலாம் என்பதினால், நாம் உயிரோடு இருக்கும்போது, சொத்தை எவ்வாறு பங்கிடவேண்டும் என்ற உயிலை தெளிவாய் ஏற்படுத்திவிடுவது நல்லது. மீதமிருக்கம் நம்முடைய குடும்பத்தினருக்கு இந்த பாதுகாப்பு அவசியப்படும். நாம் முதிர்வயதை அடையும்போது இதைச் செய்வது மிகவும் அவசியம்.

நித்தியத்தின் பார்வையில் பார்க்கும்போது, பூமிக்குரிய வாழ்க்கையில் நாம் எவ்வளவு சம்பாதித்தோம் என்பதை விட நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை மற்றவர்களுக்கு எவ்விதத்தில் ஆசீர்வாதமாய் இருந்துள்ளது என்பதே மிகவும் முக்கியமானது. இது இளமையில் அனைவரும் உறுதியாக மனதில் கொள்ள வேண்டிய விஷயம். இறந்த மகன்கள் அல்லது மகள்களின் அழகான நினைவுகளைக் கொண்ட பெற்றோரை நான் அறிவேன். வாழும்போது நாம் எந்த மாதிரியான நபர்களாக இருக்கிறோம் என்பதுதான் நாம் இறந்த பிறகு நாம் விட்டுச் செல்லும் “சுகந்த வாசனையை” தீர்மானிக்கிறது என்பது உண்மை. பவுல், இந்த வாசனை உருவகத்தை ஆலோசனையாய் உபயோகிக்கிறார்:

கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம். இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம். கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம். இவைகளை நடப்பிக்கிறதற்கு எவன் தகுதியானவன்? (2 கொரி. 2:14-16).

நீங்கள் இந்த பூமியை விட்டு கடந்துபோன பின்பும் வெகுகாலம் வரைக்கும் மறுரூபமாக்கப்பட்ட மகிமையான சரீரத்தின் மூலம் தொடர்ந்து வீசக்கூடியது. பூமியில் இருக்கும் போது செல்வாக்கு செலுத்தும்போதே, பரலோகத்திலிருந்து செல்வாக்கை செலுத்தும் ஒரு வாழ்க்கைக்கு ஆயத்தப்படவேண்டும்.

உங்கள் செயல்திறனை மதிப்பீடு செய்தல்

பூமியில், நமது செயல்திறன் நமது சிநேகிதர்களால் மதிப்பிடப்படுகிறது. ஆனால் நாம் பரலோகத்தை அடையும்போது, நம் செயல்திறன் இயேசு கிறிஸ்துவால் மதிப்பாய்வு செய்யப்படும், “சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையம்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்” (2 கொரி. 5:10).

நாம் கிருபையினால் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்படுகிறோம்

நாமும் தண்டிக்கப்படுவோமோ இல்லையோ என்று இந்த நியாயத்தீர்ப்பு சிங்காசனத்திற்கு நாம் பயப்பட வேண்டியதில்லை. நாம் கிறிஸ்துவை விசுவாசித்தபோது நம்முடைய இரட்சிப்பு சாத்தியமாக்கப்பட்டது. நியாயத்தீர்ப்பு சிங்சானத்திற்கு முன்பு, நம்முடைய வாழ்க்கை நியாயந்தீர்க்கப்படும். தேவன் கொடுத்த வரங்களை எப்படிப் பயன்படுத்தினோம்? நமது நேரத்தை எவ்வளவு நன்றாகப் பயன்படுத்தினோம்? கிடைத்த வாய்ப்புகளை எவ்வளவு உண்மையாகப் பயன்படுத்திக் கொண்டோம்? நாம் கிருபையினால் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்படுகிறோம். ஆனால் விசுவாசம் மட்டும் தனித்து செயல்படுவதை தேவன் ஒருபோதும் விரும்புவதில்லை. நம்முடைய விசுவாசம் அன்பிலும் கீழ்ப்படிதலிலும் வெளிப்பட வேண்டுமென அவர் எதிர்பார்க்கிறார். நேர்த்தியாய் செயல்பட்டால் பாராட்டினை பெறுவோம். எந்த பாராட்டுக்கும் பாத்திரமாகாத வாழக்கையானது அதிக இழப்பை ஏற்படுத்தக்கூடியது.

1 கொரிந்தியர் 3:10-15ல், பவுல் கிறிஸ்தவ வாழ்க்கை முறையை, “பொன், வெள்ளி, விலையுயர்ந்த கற்கள்” அல்லது “மரம், புல், வைக்கோல்” ஆகியவற்றைக் கொண்டு அடையாளப்படுத்துகிறார். அஸ்திவாரத்தில் நாம் வைத்திருப்பது எதுவோ, அது நெருப்பால் சோதிக்கப்படும். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பிறகு, நாம் அர்ப்பணிப்புடனும் கீழ்ப்படிதலுடனும் வாழ்ந்தால், நாம் வெகுமதியைப் பெறுவோம். தங்கம், வெள்ளி, விலையுயர்ந்த கற்கள் நெருப்பைத் தாங்கக்கூடியது. அவருடைய பாராட்டையும் வெகுமதியையும் நாம் பெறுவோம். மறுபுறம், நாம் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பிறகு கீழ்ப்படியாத வாழ்க்கை வாழ்ந்தால், அவருடைய பாராட்டைப் பெற மாட்டோம்.

கிறிஸ்துவின் நியாயாசனத்தை இந்நாட்களில் மக்கள் இலகுவாய் கருதுகிறார்கள். நாம் வாழும் இந்த சுகமான சமுதாயத்தில் வாழும் மக்கள், இரண்டு உலகத்திலும் சுகமான வாழ்க்கையை வாழ விரும்புகின்றனர். நாம் பெற்றுக்கொள்ளப்போகிற பரிசுகள் சிறியதோ அல்லது பெரியதோ, அது முக்கியமல்ல என்ற சிறுபிள்ளைகளின் மனநிலையை அவர்கள் தத்தெடுத்துக்கொண்டனர். ஆனால் பவுல் அப்போஸ்தலர் நியாயத்தீர்ப்பு சிங்காசனத்தை அப்படி பார்க்கவில்லை. நியாயத்தீர்ப்பு நாம் ஆளாகவேண்டியிருக்கும் என்பதைத் தொடர்ந்து, “ஆகையால் கர்த்தருக்குப் பயப்படத்தக்கதென்று அறிந்து, மனுஷருக்குப் புத்திசொல்லுகிறோம்; தேவனுக்கு முன்பாக வெளியரங்கமாயிருக்கிறோம்; உங்கள் மனச்சாட்சிக்கும் வெளியரங்கமாயிருக்கிறோம் என்று நம்புகிறேன்” (2 கொரி. 5:11) என்று சொல்லுகிறார். தன் எஜமானை கனவீனப்படுத்தக்கூடிய ஏதாவது ஒன்றைச் செய்து மாய்மாலமான வாழ்க்கை வாழ்ந்துவிடுவோமோ என்ற பயம் பவுலுக்கு இருந்தது.

நீதிமொழிகள் 16:6, “கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்” என்று சொல்லுகிறது. நியாயத்தீர்ப்பைக் குறித்த சரியான பயமானது சுத்திகரிக்கக்கூடியது. தேவனுடனான இந்த அற்புதமான வாழ்க்கையை வெளிப்படுத்தும் சந்திப்பை நாம் லேசாக நினைக்கும் போது நாம் ஒரு பெரிய தவறு செய்கிறோம்.

இயேசுவைப் பார்ப்பதும், “நன்றாகச் செய்தீர்கள்” என்ற அவருடைய பாராட்டைப் பெறுவதுமே நம்முடைய ஜீவியத்தின் மேன்மையான நோக்கம்

இயேசுவைப் பார்ப்பதும், “நன்றாகச் செய்தீர்கள்” என்ற அவருடைய பாராட்டைப் பெறுவதுமே நம்முடைய ஜீவியத்தின் மேன்மையான நோக்கம்

நியாயத்தீர்ப்பின் நாளிலே தேவனை சந்திப்பது ஒரு அற்புதமான நிகழ்வாய் இருந்தாலும், அதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. அதை ஆவலுடன் எதிர்பார்க்கப்பட வேண்டும். கீழ்ப்படிந்தவர்களுக்கு அது முடிசூடும் நாளாக இருக்கும். நாம் நேசித்த மற்றும் ஆராதித்த இரட்சகரை நேருக்கு நேர் சந்திக்கும் நாள் அது. அப்போஸ்தலனாகிய பவுல், “நீதியின் கிரீடத்தை” பெறுவதற்கான சந்தர்ப்பமாக அதை எதிர்நோக்கிக் காத்திருந்தார். அந்த வெகுமதியை “அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்” (2 தீமோத். 4:8).

நம்மை நியாயந்தீர்க்கப்போகிறவர், நமக்காக சிலுவைக்கு சென்றவர்; நமக்காக மரணத்தின் வல்லமையை தகர்த்தெரிந்தவர்; நம்மைப் புரிந்துகொள்ளும் சிநேகிதனாய், நமக்காய் பரிந்துபேசும் மத்தியஸ்தராய் பரலோகத்தில் வீற்றிருப்பவர். அவரைப் பார்ப்பதும், “நன்றாகச் செய்தீர்கள்” என்ற அவருடைய பாராட்டைப் பெறுவதுமே நம்முடைய ஜீவியத்தின் மேன்மையான நோக்கம்.

banner image

ஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீது நேர்த்தியாய் துவங்கினான் (1 சாமு. 16 – 1 இராஜ. 2:10; 1 நாளா. 1-29). அவன் ஒரு சிறுவனாய் கோலியாத்தைக் கொன்றபோது, தேவன் மீதான தன்னுடைய அசாத்தியமான நம்பிக்கையை வெளிப்படுத்தினான் (1 சாமு. 17). அவன் திறமையான பாடகன், இசையமைப்பாளர் மற்றும் எழுத்தாசிரியர். “கர்த்தருடைய இருதயத்திற்கு ஏற்ற தாசன்” (1 சாமு. 13:14) என்று சாமுவேல் தீர்க்கதரிசி தாவீதைக் குறித்து பேசுகிறான். பல வழிகளில் தாவீது ஒரு சிறந்த ராஜாவாகவே அடையாளப்படுத்தினான். ஆகிலும் புறஜாதி ராஜாக்களைப் போல பல மனைவிகளை திருமணம் செய்துகொண்டான். தன்னுடைய ஐம்பதாம் அகவையில், பத்சேபாளோடு விபச்சாரம் செய்து, அவளுடைய கணவனைக் கொல்லும் துணிகரமான பாவத்தை செய்தான்.

தாவீதின் ஓட்டத்தை அவன் நேர்த்தியாய் நிறைவுசெய்யவில்லை என்பதை அவனுடைய இறுதி வருடங்கள் வெளிப்படுத்துகிறது. தன் மகன் அம்னோன் தன் மகள் தாமாரைக் கற்பழித்ததை தாவீது கேள்விப்பட்டபோது கோபமடைந்தான். ஆனால் வெளிப்படையாக எதுவும் செய்யவில்லை. பின்னர், அவரது மகன் அப்சாலோம் அம்னோனைக் கொன்றபோது, அவர் அம்னோனின் மரணத்திற்காக துக்கங்கொண்டாடினான். அப்சலோமுடன் பேச விரும்பினான். ஆனால் மீண்டும் அவனைத் தொடர்பு கொள்ள எந்த முயற்சியும் எடுக்கவில்லை (2 சாமு. 13-14). சில ஆண்டுகளுக்குப் பிறகு, தாவீது தனது இராணுவ வலிமையை தீர்மானிக்க, மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு உத்தரவிட்டான். குதிரைகள், இரதங்கள் மற்றும் இராணுவத்தின் மீது நம்பிக்கை வைக்காமல், அவரையே நம்ப வேண்டும் என்று அவனுக்குத் தெளிவாய் வெளிப்படுத்தியிருந்தபோதிலும், தாவீது துணிந்து கணக்கெடுப்பை நடத்தினான் (உபா. 17:15-16). தன் சத்துருக்களையும் சிநேகிக்கும்படியான தேவனுடைய கட்டளையை மீறி, யோவாபையும் சிமேயியையும் தூக்கிலிடுவதற்கான வழியைக் கண்டுபிடிக்குமாறு தன்னுடைய மரணப் படுக்கையிலும்; கூட சாலொமோனுக்குக் கட்டளையிடுகிறான். இந்த நபர்களினால் அவன் பாடுகளை சந்தித்தபோதிலும், அவன் பழிவாங்குதலை ஊக்குவிக்காமல் இருந்திருப்பாரேயாகில், அவருடைய சில சங்கீதங்களின் உயர்ந்த ஆவிக்குரிய குறிப்பை அவர் சிறப்பாக எடுத்துக்காட்டியிருப்பார்.

banner image

வுல் நன்கு கற்றுத்தேர்ந்த ஒரு பரிசேயன் மற்றும் வைராக்கியமான ஒரு யூதனாய் வாழ்ந்தான் (அப். 9-28). மோசேயின் நியாயப்பிரமாணத்தை அவர் உறுதியாய் கைக்கொண்டதால், கிறிஸ்தவர்களால் அறிவிக்கப்பட்ட நற்செய்தியை அவர் வெறுத்தார். அவர் ஸ்தேவானை கல்லெறிந்து கொல்ல உத்தரவிட்டார். திருச்சபையை துன்புறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். ஆனால் கிறிஸ்து அவருக்குத் தரிசனமாகியபோது அவர் ஆச்சரியமான விதத்தில் மனமாற்றம் அடைந்தார். அந்த நேரத்தில் அவர், “ஆண்டவரே, நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீர்?” (அப்போஸ்தலர் 9:6) என்று கேட்டார். அந்த கேள்வியே அவருடைய இருதய பாரமாய் மாறியது.

பவுல் அயராது 30 ஆண்டுகளுக்கும் மேலாக தேவனுக்கு ஊழியம் செய்து பாடனுபவித்தார் (2 கொரி. 11:23-33). சக விசுவாசிகள் அவரைத் தவறாகப் புரிந்துகொண்டு அவரைக் கனவீனப்படுத்தினாலும் அவர் ஒருபோதும் சோர்ந்துபோகவில்லை (பிலி. 1:14-18).

இறுதியாக, பவுல் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு, ரோம சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். ஒருவேளை சிரச்சேதம் செய்யப்பட்டிருக்கலாம். அவருடைய பூமிக்குரிய வாழ்க்கை முடியப்போகிறது என்பதை அறிந்து:

நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாக கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார் (2 தீமோ. 4:7-8) என்று எழுதுகிறார்.

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்த நாள் முதற்கொண்டு, ஆச்சரியமான ஒரு ஜீவியத்தை பவுல் வாழ்ந்தார். அவர் தன்னுடைய வாழ்க்கையை வெற்றிகரமாய் நிறைவுசெய்தார் என்பதில் சந்தேகமேயில்லை! “அவர் நேர்த்தியாய் நிறைவுசெய்தார்” என்று நாம் சொல்லத்தக்க வகையில் அவருடைய வாழ்க்கை இருந்தது.

banner image

மூளை புற்றுநோயால் படுக்கையில் இருந்த மிச்சிகன் காங்கிரஸ்காரர் பால் ஹென்றி, “தேவனுடனான என்னுடைய பயணம் தொடர்கிறது” என்று தனது நிலையை கூறுகிறார். சிறிது நேரம் கழித்து கர்த்தர் அவரை பரலோகத்திற்கு அழைத்துச் சென்றார். மூளை புற்றுநோயால் படிப்படியாய் வேதனையை அனுபவித்து மரணத்தை சந்திப்பது சரியான வழியில்லாததுபோல் தெரிந்தாலும், பால் ஹென்றி நேர்த்தியாய் நிறைவுசெய்தார் என்று கூறலாம். அவர் மெய்சிலிர்க்கும் விசுவாசம் மற்றும் மறுரூபமாக்கப்பட்ட வாழ்க்கையின் வாசனையை தன்னில் பிரதிபலித்தார்.

உங்களாலும் நேர்த்தியாய் நிறைவுசெய்ய முடியும். அதை உறுதிசெய்வதற்கு, முதலில் நீங்கள் தேவனுடைய குடும்பத்தின் அங்கத்தினராய் இருக்கிறீர்களா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். இதுவரை நீங்கள் அதை செய்யவில்லையெனில், உங்கள் பாவம் மன்னிக்கப்படவேண்டியதின் அவசியத்தை அறிந்து, இயேசு உங்களுக்காய் மரித்ததைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது என்பதையும் அறிந்து அவரை சொந்த இரட்சகராய் ஏற்றுக்கொள்ளுங்கள் (ரோம.3:23; 6:23; 10:9-10, 13). இது உங்களை சரியான பாதையில் பொருத்தும். ஆனால் இதுவே உங்கள் வாழ்க்கைப் பயணத்தின் துவக்கம்.

நான் சிறுவனாய் இருந்தபோது படித்த பழைய கேட்பாட்டில் கூறப்பட்டுள்ளபடி, “மகிழ்ச்சியாக வாழவும் மரிக்கவும்” நீங்கள் விரும்பினால், தேவன் கொடுத்த இரட்சிப்பிற்காய் உங்கள் நன்றியுணர்வை வெளிப்படுத்துவை உங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாய் ஏற்கவேண்டும். உங்கள் பாவங்களை அறிக்கையிடுவதன் மூலமும் (1 யோவா. 1:8-9), உங்கள் சத்துருக்களை நேசிப்பதன் மூலமும் (மத். 5:44), பரிசுத்த ஆவியானவர் உங்கள் ஜீவியத்தைக் கட்டுப்படுத்த அனுமதிப்பதன் மூலமும், அவருடன் தொடர்பில் இருப்பதன் மூலம் நீங்கள் ஆவிக்குரிய ரீதியில் வளர வேண்டும் (எபே. 5:18-21).

தேவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்தப் பாதையை நீங்கள் பின்பற்றினால், நீங்கள் நேர்த்தியாய் நிறைவுசெய்ய முடியும். வாழ்க்கையில் இதை விட நேர்த்தியானது வேறு என்ன இருக்க முடியும்?

VOLUNTEER