கிறிஸ்தவர்கள் ஒரே தெய்வத்தை நம்புவதாக கூறுகிறார்கள்; ஒரே தேவன். ஆனால் அவ ர்மூன்று நபர்களாய்வெளிப்படுகிறார்: பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர். இது இனனும் நம்மை குழப்பத்திற்குள்ளாக்குகிறது.
திரித்துவத்தைப் புரிந்து கொள்ள முயற்சிப்பது மிகவும் குழப்பமாக இருக்கிறது. அது அந்த அளவிற்கு உகந்த ஒன்றா என்று நம்மை ஆச்சரியப்படவைக்கிறது. தேவனுடனான நம் உறவை திரித்துவம் எந்தவிதத்தில் பாதிக்கிறது? உபதேசத்தின் இந்த கடினமான காரியத்தைக் குறித்து நாம் சிந்திப்பது அவசியமா?
இயேசு தன்னுடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு “சகல ஜாதிகளையும் சீஷராக்கும்படி”சீஷர்களை அனுப்பிய இயேசுவின் வார்த்தைகளை நாம் நினைவு கூரவேண்டும். “பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்” (மத். 28:19) என்று அவர்களுக்கு கட்டளையிடுகிறார்.
இயேசுவைப் பொறுத்தவரையில், சீஷர்களை உருவாக்குவது என்பது தேவனையோ அல்லது இயேசுவையோக் குறித்து மற்றவர்களுக்கு சொல்லுவது அல்ல. தேவனை யார் என்று நாம் அறிவதும் அவரை மற்றவர்களுக்கு சரியாக அடையாளப் படுத்துவதாகும். அவர் மூன்று வெவ்வேறு நபர்கள் ஒரே கர்த்தர்த்துவத்தில் இருக்கிறார்கள். இதை வெறும் தகவலாகவோ அல்லது சுவாரஸ்யமான ஒன்றாகவோ மட்டும் பார்க்க வேண்டாம். தெய்வீகத்தின் இந்த மூன்று நபர்களும் தேவனுடைய ஜனங்களாகிய நமக்கு மிகவும் இன்றியமையாதவர்கள்.
அப்படியானால், தேவனின் நபர்கள் யாவர்?
தெய்வீகத்தின் மூன்று நபர்கள்
சிலகிறிஸ்தவர்கள், தேவனின் இந்த மூன்றில் ஒன்றான தன்மையை, மூன்று வெவ்வேறு வழிகளில் ஒரே தேவன் தன்னை வெளிப்படுத்தியுள்ளதாகக் கருதுகிறார்கள். சில சமயம்பிதாவாகவும், சில சமயங்களில் குமாரனாகவும், சில சமயம் ஆவியானவராகவும் அவர் தம்மை வெளிப்படுத்துகிறார். மற்றும் சிலர், முட்டையை உதாரணப்படுத்தி திரித்துவத்தை விளக்க முயற்சிக்கின்றனர். ஒரு முட்டையில் மூன்று முக்கிய பாகங்கள் உள்ளன (மஞ்சள்கரு, வெள்ளை மற்றும் ஓடு). ஆனால் அது எண்ணிக்கையில் ஒரே முட்டையாகக் கருதப்படுகிறது. ஆனால் தேவன் தம்முடைய குணநலனை மட்டும் மாற்றுவகிறவரில்லை. எனவே அவர் உண்மையில் ஒரு முட்டை போன்றவர் இல்லை. வேதம் தேவனை மூன்று நபர்களை உள்ளடக்கிய ஒருவராய் விவரிக்கிறது. ஆனால் அவர்களின் உறவும் ஒற்றுமையும் அவர்களுக்குள் ஒருசிறப்பான “ஒற்றுமை” இருப்பதையும் அந்த ஒற்றுமை, அவர்களை ஒரே தேவனாய் மாற்றுகிறது. பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் என்று தனித்தனியாய் இதை நாம் பார்ப்போம்.
பிதாவாகிய தேவன்: இயேசு தம்முடைய சீஷர்களுக்கு எவ்வாறு ஜெபிக்க வேண்டும் என்று கற்பித்தபோது, அவர்கள் “பரலோகத்திலுள்ள எங்கள் பிதாவே” (மத். 6.9) என்று பிதாவிடத்தில் ஜெபிக்கவேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறார். கிறிஸ்தவர்கள் நிஜத்தில் தேவனுடைய பிள்ளைகள் என்று நமக்கு அறிவிக்கப்படுகிறது: “நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப்பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்!” (1 யோவான் 3:1).
பரலோகத்திலுள்ள பிதாவானவர்தாம் சிருஷ்டித்த தன்னுடைய மக்களோடு ஒரு குடும்ப உறவைப் போன்று தனிப்பட்டவிதத்தில் உறவு கொள்ள விரும்புகிறார். இருப்பினும், அவருடைய குமாரனாகிய இயேசுவை அறியாமல், நாம் பிதாவை அறிய முடியாது என்பது வேதாகமத்தில் தெளிவாக உள்ளது.
குமாரனாகிய தேவன்:இயேசு 2,000 ஆண்டுகளுக்கு முன்பு “நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” (யோவான் 10:30) மற்றும் “என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்” (யோவான் 14:7) என்று அறிவித்து பூமிக்கு வந்தார். இது “நானும் என் மனைவியும் ஒன்று”என்று ஒரு கணவன் சொல்வதை போன்று சாதாரணமானது அல்ல. பிதாவைப் போலவே தானும் தேவன் என்று இயேசு கூறுகிறார்.
நாம் அவரை அறிந்தால் பிதாவையும் அறிவோம் என்று கூறுகிறார். அவர்கள் ஒரே தேவன், ஆனால் வெவ்வேறு நபர்கள்.
இயேசுவின் மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுவதற்கு முன், அவர் நம்முடன் என்றென்றும் இருக்கும் ஒரு “தேற்றரவாளரை”அனுப்புவதாக உறுதியளித்தார் (யோவான் 14:16). பிதாவுடனான நமது உறவு இயேசுவைச் சார்ந்திருப்பது போல, இயேசுவுடனான நமது உறவு பரிசுத்த ஆவியானவர் என்னும் “தேற்றரவாளனை” சார்ந்துள்ளது.
ஆவியான தேவன்: சில சமயங்களில் பரிசுத்த ஆவியானவர் ஒரு “விசை அல்லது வல்லமை”என்று குழப்பமடைகிறோம். எனவே அவரை மின்சாரத்திற்கு ஒப்பிடுகின்றனர். ஆனால் பரிசுத்த ஆவியானவர் ஒரு நபர் என்பதை இயேசு தெளிவுபடுத்துகிறார். தேவன் நமக்கு நித்திய ஜீவனை தருவார் என்று கிறிஸ்துவுக்குள் நம்பும் விசுவாசிகள், நிலையான பரிசுத்த ஆவியை பெறுகிறார்கள். பரிசுத்த ஆவியானவர் நம்மை வழி நடத்துகிறார் (ரோமர் 8:14). தேவன் யார், அவர் நம்மையாராக மாற்றினார் என்பதைப் பற்றி நமக்குக் கற்பிக்கிறார் (யோவான் 14:26; 16:12-15).
பரிசுத்த ஆவியானவர் உலகம் முழுவதும் “பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும்,” (யோவான் 16:8) மக்களைக் கண்டித்து உணர்த்துவார் என்றும் இயேசு முன்னறிவிக்கிறார். சத்தயத்தை வெளிப்படுத்தவும், பரிசுத்த ஆவியை நிராகரிப்பதின் (பாவம்) விளைவை மக்களுக்கு அறிவிக்கவும், கிறிஸ்து மூலமாய் தேவனுடைனான புதிய ஒப்புரவாகுதலையும் (நீதி), இயேசுவை நிராகரிப்பதினால் ஏற்படும் “நியாயத் தீர்ப்பை”அறிவிக்கவும் தேவன் தொடர்ந்து செயல்படுகிறார்.
நாம் அவரை அறிந்துகொள்ளவும், மீண்டும் அவருக்கு சொந்தமானவர்களாகவும் இருக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். மேலும் இந்த பணியில் தேவனின் மூன்றுநபர்களும் ஒன்று பட்டுள்ளனர். பிதா தன்னுடைய குமாரனை நமக்காக மரிக்க ஒப்புக்கொடுத்து நமக்கு புதுவாழ்வைக் கொடுக்கிறார்; குமாரன் பரிசுத்த ஆவியானவரை அனுப்பி, தேவன் நமக்காக என்ன செய்திருக்கிறார் என்பதையும் அவரை நம்புவதினால் ஏற்படும் நன்மைகளையும் நாம் புரிந்து கொள்ளுவதற்கு வழி செய்கிறார்.
தேவனின் ஐக்கியம்
பிதாதேவ னென்றும், குமாரன் தேவனென்றும், ஆவியானவர் தேவனென்றும் வேதம் தெளிவாக அறிவிக்கிறது. ஒவ்வொரு நபருக்கும் தனித்துவமான குணாதிசயங்களும் பங்கும் இருக்கிறது. அவர்களை நாம் வேறுபடுத்திப் பார்க்க முடியும், ஆனால் அவர்களைப் பிரிக்க முடியாது. அவர்கள் ஒரே தேவன். அதின் ஒவ்வொரு நபர்களும் மற்றவர்களுடன் சரியான ஒற்றுமையுடன் இருந்து தங்களுடைய பங்கை செயல்படுத்துகிறார்கள். உண்மையில், தேவன் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் இந்த மூன்று நபர்களின் ஈடுபாடு இருக்கின்றனது.
தேவன் உலகைப் படைத்த போது, மூன்று நபர்களின் பங்களிப்பும் சிருஷ்டிப்பில் இடம் பெற்றுள்ளது (ஆதி. 1:1-2; யோவான் 1:1,14). பின்பு அவர் மனிதனை உண்டாக்கிய போது, “நம்முடைய சாயலின் படி மனிதனை உருவாக்குவோம்” (ஆதி. 1:26, வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது) என்று கூறுவதை நாம் பார்க்கமுடியும். மேலும், நம்மை தேவனோடு ஒப்புரவாக்கவும், நம்முடைய கிறிஸ்தவ ஜீவியத்தை வழி நடத்தவும், நம்மனப்பான்மையிலும் குணாதிசயங்களிலும் நம்மை தேவனை போல மாற்றும் பணியிலும் இந்த மூன்று நபர்களின் பங்களிப்பு உள்ளது.
மூன்று நபர்களான ஒரே தேவன். இது தான் கிறிஸ்தவ தேவன். அவர் பிரம்மிக்கத்தக்க ஆச்சரியமான தேவன. அவர் தேவன் என்பதால் நாம் அவரை முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. அவரது அளவற்ற வல்லமை, அன்பு மற்றும் குணாதிசயங்களை புரிந்து கொள்ள நம்முடைய அறிவு குறைவுள்ளது. ஆனால் அதுவும் ஒரு அற்புதமான விஷயம். நாம் தேவனை அவருடைய ஆவியின் மூலமும் வேதத்தின் மூலமும் அறிந்து கொள்ள முடியும். ஆனால் அதே வேளையில், நம்முடைய புரிந்து கொள்ளுதைக் காட்டிலும் எப்போதும் அவர் பெரியவராகவும் சிறந்தவராகவுமே இருக்கிறார். அவரே மெய்யான தேவன்!
இது முக்கியமா?
தேவன் ஒருவராகவோ அல்லது மூவராகவோ இருந்தால் என்ன பெரிய வித்தியாசம் வந்துவிடப் போகிறது இது உண்மையில் நம் வாழ்க்கையை பாதிக்கப் போகிறதா? நிஜத்தில், தேவனின் மூன்று நபர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்: தேவனின் இந்த மூன்று நபர்கள் தேவன் நம்மிடத்தில் முற்றிலும் அர்ப்பணிப்புடன் இருப்பதைக் காட்டுகிறார்கள்: தேவனின் மூன்று நபர்களும் நம்மை அவருடைய பிள்ளைகளாய் மாற்றுவதில் முழுமூச்சாக செயல்படுகிறார்கள். பவுல் இதை இவ்வாறு விளக்குகிறார்:
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்… தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, தம்முடைய தயவுள்ளசித்தத்தின்படியே, நம்மை இயேசு கிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகார புத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார், அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார். எபேசியர் 1:3-14
நம்மை மீட்கும் பொருட்டு பிதாவானவர் இயேசுவை நமக்காக ஒப்புக் கொடுத்ததால், நாம் அவருடைய புத்திரர்களாய் மாறுகிறோம். நாம் இயேசுவை நம்பிய மாத்திரத்தில், நாம் “குறியிடப்படுகிறோம்,” “பரிசுத்த ஆவியானவரால் முத்திரையிடப் படுகிறோம்.” அதின் மூலமாய், நம்முடைய மரணத்திற்கு பின்பாக, தேவனின் வீட்டில் நமக்கென்று ஒரு நீத்தியவாசஸ்தலத்தை வாக்குப் பண்ணியிருக்கிறார்.
“எல்கிப்போர்” என்னும் பராக்கிரமமான தேவனை பிரதிபலிப்பதே ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தின் நோக்கம். அவரே நம் உண்மையான கதாநாயகன். ஏழாம் நூற்றாண்டில் இந்ததீர்க்கதரிசி எதிர்பார்த்ததை, புதிய ஏற்பாடு உறுதிப்படுத்துகிறது. மேசியா தேவனாக இருப்பார் மற்றும் அவருக்கு தேவனுடைய வல்லமை இருக்கும் என்று முன்னறிவிக்கிறார். ஆனால் ஏசாயாவைப் பொறுத்தவரை, ஆச்சரியமான விஷயம் என்ன வென்றால், மேசியா தேவனின் வல்லமையை மட்டும் கொண்டிருக்கவில்லை; அவர் வல்லமையின் தேவனாக இருப்பார்! நம்மைக் குறித்த தேவனுடைய திட்டம் முழுமையானதும் பரிபூரணமானதுமாய் இருக்கிறது. இயேசுவின் மேல் நம்பிக்கை உள்ள அனைவரையும் பாதுகாப்பாக பரலோகத்திற்குக் கொண்டு வருவதற்கான செயல்பாட்டில் மூன்று நபர்களும் ஒன்றுபட்டிருப்பதால், நாம் மிகுந்த நம்பிக்கையையும் உறுதியையும் கொண்டிருக்கமுடியும்.
தேவன் நம்மை முழுமையாகப் புரிந்துகொள்கிறார்: தேவன் என்றைக்காவது ஒரு நாள் நம்மை கவனிப்பார் என்று நாம் எதிர் பார்க்குமளவிற்கு அவர் வெகுதொலைவில் இருக்கும் ஒரு தேவனல்ல. இயேசுவின் திருவுருவத்தில் தேவன் பூமிக்கு வந்து, நமக்காக பாடுபட்டு மரித்தார். வேதனையையும் இழப்பையும் கடந்து செல்வது என்னவென்று அவருக்குத் தெரியும். பசி, சோர்வு, வெறுப்பு என்றால் என்னவென்று அவருக்குத்தெரியும். இயேசு பூமியில் உலாவின போது, தேவன் பூரணமாய் மனிதனானார் (அதே நேரத்தில் அவர் முழுமையான தேவனாகவும் இருந்தார்). “நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப் போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்” (எபி. 4:15).
நாம் அவரிடம் கொண்டு வரும் ஒவ்வொரு பிரச்சனையையும் தேவன் புரிந்துகொள்கிறார். மேலும் அவர் நம் மீது அக்கறை கொண்டுள்ளார் (1 பேதுரு 5:7). தொலைவிலிருந்து நம்மை புரிந்து கொள்ளுகிறவராய் அல்ல; மாறாக, நாம் கடந்து செல்லும் அதே பாதையின் வழியாய் கடந்து, பாடுபட்டவராய் இருப்பதால், அவர் நம்மை நேர்த்தியாய் புரிந்து கொள்ளுகிறார். இய?