விதை ஒன்று போட சுரை ஒன்றா முளைக்கும்? எதை விதைத்தாயோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும் என்பதே அறுவடையின் விதிமுறை. முதலாம் நூற்றாண்டில் அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்தியருக்கு எழுதின நிருபத்தில், “மோசம் போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம் பண்ண வொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்”(கலாத்தியர் 6:7) என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே எண்ணம் யோபு புத்தகத்திலும் பிரதிபலிக்கப்படுகிறது. யோபின் நண்பர்களில் ஒருவர் யோபின் அழிவை நியாயமான தண்டனையாகவே கருதினார். “குற்றம் இல்லாமல் அழிந்தவன் உண்டோ? சன்மார்க்கர் அதம்பண்ணப்பட்டது எப்போ? இதை நினைத்துப் பாரும். நான் கண்டிருக்கிறபடி, அநியாயத்தை உழுது, தீவினையை விதைத்தவர்கள் அதையே அறுக்கிறார்கள்” (யோபு 4:7-8).
அறுவடையின் இந்த விதி பெரும்பாலும் தவறாய் அர்த்தங்கொள்ளப்படுகிறது. எனவே, பில் கிரவுடர் எழுதியதைக் கொண்டு, வேதாகமத்தின் மிகவும் பழமையான இந்த சம்பவத்தின் மீதான ஆர்வம் புதுப்பித்துத் தூண்டப்படும் என்று நான் நம்புகிறேன்.
.
– பில் கிரவுடர்
இந்தக் கட்டுரை ஐந்து தலைப்புகளில் பகுக்கப்பட்டுள்ளது.
- கடினமான கேள்விகளும் மழுப்பலான பதில்களும்
- சுக்குநூறாய் சிதறிய இருதயம்
- இருமுனைப் போர்
- வலியின் மூலமாய் கிடைத்த ஞானம்
- வாழ்க்கைப் பாடங்கள்
“வாழ்க்கை என்பது முழுமையாய் துயரம், தனிமை மற்றும் வேதனை நிறைந்த ஒன்று. அத்துடன் அது சீக்கிரமாய் முடிந்துவிடக்கூடிய ஒன்று” என்று வூடி ஆலன் வஞ்சப்புகழ்ச்சியாய் கூறுகிறார். ஆலன் நமக்கு தெரியாத புதிய விஷயத்தைக் கூறவில்லை. வலியும் வேதனையும் நம்முடைய வாழ்க்கையில் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்துள்ளது. உலக அளவில் போர், பூகம்பங்கள், சுனாமிகள், வெள்ளங்கள் மற்றும் சூறாவளிகள் மூலம் பேரழிவுகள் ஏற்படுகிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் சொந்தங்களின் இழப்பு, ஆரோக்கியத்தின் இழப்பு, குழந்தையின் இழப்பு, திருமணத்தின் இழப்பு, வேலையின் இழப்பு போன்றவை அதே போன்று வேதனையைத் தருகிறது. .
வேதனை என்பது நாம் சிறிதும் ஆயத்தமாய் இல்லாதநேரத்தில் அழையா விருந்தாளியாய் நம் வாழ்வில் வரும். விவரிக்கமுடியாத வலியும் வேதனையோடு இணைந்து வரும். அது நம்முடைய சரீரத்தில், உணர்ச்சியில், உறவில், ஆவியில் என்று எல்லா விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். நாம் உபத்திரவப்படும்போது பெயரில்லாத, முகமறியாத, இதயம் இல்லாத எதிரியை எதிர்க்கிறோம். மேலும் அந்த எதிரி நம்மால் பதில் சொல்லமுடியாத கேள்விகளை நமக்குள் எழுப்புகிறான்.
ஆனாலும், அந்தக் கேள்விகள் எவ்வளவு கடினமாக இருந்தாலும் நாம் அதற்கு சரியான பதில்களைத் தேட வேண்டும். நாம் புத்தகங்களை வாசிக்கிறோம்; சிந்தனையாளர்களிடமும், தத்துவஞானிகளிடமும், வேத நிபுணர்களிடமும் ஆசிரியர்களிடமும் விவாதிக்கிறோம். உபத்திரவத்திற்கான காரணங்கள் எதுவென கண்டுபிடிப்பதற்கு நாம் பிரயாசப்படுகிறோம். நம்முடைய எதிர்பார்ப்பு அதிகமாய் இருந்தாலோ அல்லது மூலாதாரங்கள் எவ்வளவு உறுதியாய் இருந்தாலும் அவை நமக்கு விடை தெரியாத கேள்விகளையே விட்டு வைக்கிறது. அக்கேள்விகள் நம்மை பைத்தியமாக்கும் மர்மங்களாகி, நம்மை தேவனிடத்திலிருந்து பிரிக்கவோ அல்லது இன்னும் அவரிடத்தில் நெருங்கவோ செய்கிறது.
இந்த சிறு புத்தகத்திலே, கடினமான இந்த கேள்விகளுக்கு விடை காண முயற்சிப்போம். உபத்திரவம் எப்படிப்பட்டது? உபத்திரவம் நம்மை பேர்சொல்லி அழைக்கும்போது அதற்கு எப்படி பதிலளிப்போம்? இந்த கடினமான சூழ்நிலையில் தேவனை நாம் எப்படி காண்பது?
யோபுவின் சம்பவத்தைக்காட்டிலும் உபத்திரவத்தைக் குறித்து நாம் அறிந்துகொள்வதற்கு வேறு எந்த நல்ல ஆரம்பமும் நமக்கு இருக்க வாய்ப்பில்லை. வேதாகமத்தில் மிகவும் பழமையான புத்தகத்தில் யோபுவின் சம்பவம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
பண்டைய சரித்திர தகவல்களில் அடிப்படையில், யோபு ஊத்ஸ் தேசத்திலே வாழ்ந்தவர் என்பதை அறியமுடிகிறது. அவர் “உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்” (யோபு 1:1) என்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவர் நன்மை செய்வதையும் தேவனைப் பிரியப்படுத்துவதையும் நாடினார் என்று குறிப்பிடுகிறது. ஆகிலும் ஒன்றன்பின் ஒன்றாய் தொடர்ச்சியாய் நடைபெற்ற அதிர்ச்சியான சம்பவங்களால் அவருடைய உலகம் நொறுக்கப்பட்டது. தேவனோடு அவருக்கிருந்த உறவை அது கேள்விக்குள்ளாக்கியது.
வேதாகமத்தில் உள்ள பழமைவாய்ந்த யோபு புத்தகத்தில் வலி, துன்பம் போன்ற பொதுவான மனித அனுபவங்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. யோபுவின் கதை பெரும்பாலும் பலர் அறிந்திருந்தாலும், நம்முடைய கற்பனைக்கு எட்டாத அளவுக்கு அதில் கருத்துக்கள் உண்டு. உலகத்தைக் குறித்தும் நம்மைக் குறித்தும் தேவனைக் குறித்தும் அதில் அதிகமாய் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பாடங்களை நாம் சுருக்கமான விளக்கங்களைக் கொண்டு எளிமையாய் அறிய முயற்சிக்கிறோம். ஆனால் அந்தச் சூழ்நிலையில் அவற்றை நாம் முழுமையாய் விளங்கிக்கொள்ள முடியாது. பேராசிரியர் ஹோவர்ட் ஹென்ட்ரிக்ஸ் என்பவர், நீச்சலைத் தபால் கல்வியின் மூலம் பயில முடியாது, அதேபோன்று, தொலைதூரக் கல்வியின் மூலம் உபத்திரவத்தின் பாடங்களையும் கற்க முடியாது. அவற்றை தவிர்க்கமுடியாத தனிப்பட்ட அனுபவங்கள் மூலமாகவே கற்க முடியும். நம்முடைய எந்த வேதனையான பாரமான கடினமான அனுபவங்கள் துன்பத்தைத் தருகின்றன?
பின்வரும் யோபுவின் அனுபவங்களின் மூலமாய் ஆழ்ந்த அறிவை நாம் பெறலாம்.
வேதனை உணர்வது என்பது மர்மம் (யோபு 1:1-12)
இரண்டாம் உலகப்போரில் அஷ்விட்ஸ் சித்திரவதை முகாமில் கைதுசெய்யப்பட்ட பிரைமா லீவை என்னும் சிறைக் கைதி, உபத்திரவத்தைப் பின்வருமாறு விவரித்தார். அவரைப் படைவீரர்கள் தங்குமிடத்தில் நெருக்கமாய் அடைத்து வைத்திருந்தனர். ஒரு சமயத்தில் அவருக்கு தாகத்தால் நாக்கு வறண்டது. அவருடைய உதடுகளை ஈரப்படுத்த ஜன்னலின் மீதிருந்த பனித்துகள்களை எடுத்து சாப்பிட்டார். அதைக் கண்ட காவலாளி, உடனே அவர் கையில் இருந்த பனித்துகள்களைப் பறித்து எறிந்தார். அந்த இரக்கமில்லாத செயலால் லீவை காவலாளியிடம் ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அந்த காவலாளி “இங்கு ஏன் என்ற கேள்விக்கே இடமில்லை” என்று பதிலளித்தானாம்.
வாழ்க்கையில் சில நேரத்தில் நாமும் இவ்வாறு உணருகிறோம். நாம் ஏன் வேதனை அனுபவிக்கிறோம் என்ற கேள்விக்கு சரியான பதில் கிடைக்காத போது மௌனம் நம்மைப் பார்த்து ஏன் கூடாது? என்று பரிகசிக்கிறது. யோபுவும் வேதனை அனுபவிக்கும்போது இவ்வாறுதான் நினைத்திருப்பார் அவருடைய ஆவிக்குரிய வாழ்க்கை பாதிக்கப்படும், பின்னடைவு ஏற்படும் என்று அவர் கனவில் கூட நினைக்கவில்லை. யோபுவின் கதையின் முதல் காட்சியில் யோபு இல்லை. தேவனுடைய தூதர்கள் அவருடைய சிம்மாசனத்தை சூழ்ந்ந்திருக்கின்றனர். சாத்தானும் அங்கே இருந்தான். அப்போது “கர்த்தர் சாத்தானை நோக்கி என் தாசனாகிய யோபின் மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப் போலப் பூமியில் ஒருவனும் இல்லை என்றார்,” “அதற்குச் சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்திரமாக, யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்?” என்றான் (யோபு 1:8-9).
தேவன் நம்முடைய ஆவிக்குரிய எதிரியான சாத்தானிடம் கேள்வி கேட்கிறார். உலகத்திலே உள்ள மனிதர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்றும் குறிப்பாக யோபுவைப் பற்றி தற்பெருமையுடன் கேட்டார். கேட்டதும் சாத்தான் பின்வாங்கினான். அவன் நீங்கள் யோபுவுக்கு அனைத்தையும் அளித்திருக்கிறீர்கள்; அவன் உங்களுக்கு சேவை செய்யாமல் இருப்பானோ என்று யோபு தேவன் மீது கொண்ட நேசத்தின் நோக்கத்தை சந்தேகித்து சாத்தான் கேள்வி கேட்கிறான். அக்கேள்வியைக் கேட்டதால் தேவன் சாத்தானுக்கு யோபுவின் விசுவாசத்தைச் சோதிக்க அனுமதி அளித்தார். பிரபஞ்சம் முழுமைக்கும் சோதனையின் ஒரு மாதிரியாக யோபு இங்ஙனம் சோதிக்கப்படுகிறார். யோபுவின் விசுவாசத்திற்கான காரணமும் தேவனோடு அவனுக்கு இருந்த உறவும் தற்போது பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகிறது.
மனுக்குலத்தின் வீழ்ச்சி பாவத்தினால் உண்டானதால் பாடு அனுபவிப்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. நாம் ஒவ்வொருவரும் வேதனையை வித்தியாசமான கோணங்களில் அனுபவிப்பதால் உபத்திரவம் என்பது உலகத்திலுள்ள அனைவருக்கும் பொதுவான ஒரு அனுபவமாகிறது. ஆதலால் தான் இதுபோன்ற விடாமுயற்சிக் கதைகள் மிகவும் வல்லமை வாய்ந்ததாக விளங்குகிறது.
இதன் மூலம் தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையே உள்ள தொடர்பும் நம்முடைய வாழ்வும் மற்றும் ஆவிக்குரிய முடிவில்லாத ஆதிக்கமும் அதன் சம்பந்தமும் விளங்குகிறது. யோபுவிற்கு அவர் வேதனையின் காரணம் தெரியாது என்பதும் புரிகிறது. அவருக்கு வேதனையை அனுபவிப்பது மட்டும் தான் தெரியும் அதன் காரணம் ஒரு விளங்கிக்கொள்ள முடியாத மர்மமாகும். “வாழ்க்கை என்பது கடினமானது மட்டுமல்ல; அது நம்மை அச்சுறுத்தக் கூடிய விதத்தில் அநீதியினால் நிறைந்திருக்கிறது. அது நம்முடைய நிலையை நிற்கமுடியாத அளவிற்கு அசைக்கிறது” என்று ஒஸ்கின்னஸ் கூறுகிறார்.
திடீரென்று உண்டான வலி, துன்பம், இறப்பு, இழப்பு போன்றவற்றால் யோபுவின் இதயம் பல கேள்விகளால் பதைபதைக்கிறது. அதற்கு எந்த பதிலும் இல்லை.
வேதனையின் உணர்வு நம்மை மூழ்கடிக்கிறது (யோபு 1:13-19)
ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் என்னும் காவியத்தில், கிளாடியஸ் என்னும் கதாபாத்திரம், “வேதனை வரும்போது ஒற்றையாய் வருவதில்லை, மொத்தமாய் தான் வருகிறது” என்கிறது. யோபுவின் அனுபவத்தில் அது மிகவும் உண்மையானது. வேலைக்காரர்கள் ஒருவர் பின் ஒருவராய் அழிவின் செய்தியைக் கொண்டு வந்தனர்.
பின்பு ஒரு நாள் யோபுடைய குமாரரும், அவன் குமாரத்திகளும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்து, திராட்சரசம் குடிக்கிறபோது, ஓரு ஆள் அவனிடத்தில் வந்து: எருதுகள் உழுகிறபோது, கழுதைகள் அவைகளின் பக்கத்திலே மேய்ந்து கொண்டிருக்கையில், சபேயர் அவைகள்மேல் விழுந்து, அவைகளைச் சாய்த்துக்;கொண்டுபோனார்கள்; வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான். இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: வானத்திலிருந்து தேவனுடைய அக்கினி விழுந்து, ஆடுகளைபும் வேலையாட்களையும் சுட்டெரித்துப்போட்டது; நான் ஒருவன்மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான். இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: கல்தேயர் மூன்று பவுஞ்சாய் வந்து, ஒட்டகங்கள்மேல் விழுந்து, அவைகளை ஓட்டிக்கொண்டுபோனார்கள்; வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான். இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: உம்முடைய குமாரரும் உம்முடைய குமாரத்திகளும்; தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்துத் திராட்சரசம் குடிக்கிறபோது, வனாந்தர வழியாய்ப் பெருங்காற்று வந்து, அந்த வீட்டின் நாலு மூலையிலும் அடிக்க, அது பிள்ளைகளின்மேல் விழுந்ததினால் அவர்கள் இறந்து போனார்கள்; நான் ஒருவன்மாத்திரம்தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான் (யோபு 1:13-19).
அழிவைப் பற்றிய விரைவுச் செய்திகள் யோபுவின் இதயத்தை நொறுக்கியது. துக்கச் செய்தியைக் கொண்டு வந்த வேலைக்காரர்கள் ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொண்டனர். யோபுவின் காலத்தில் செல்வம் என்பது ஒருவரிடம் உள்ள சொத்தையும் வேலையாட்களையும் வைத்தே கணக்கிடப்பட்டது. இந்த இரண்டும் ஆயுதங்களாகி யோபுவின் இதயத்தை தகர்த்தது. முதலில் கழுதைகள், எருதுகள் மற்றும் வேலைக்காரர்களின் இழப்பு (1:14-15). அடுத்ததாக, “வானத்திலிருந்து தேவனுடைய அக்கினி விழுந்து” (1:16) ஆடுகளையும் வேலையாட்களையும் சுட்டெரித்துப் போட்ட செய்தி வந்தது. அதற்கடுத்து கல்தேயர் வந்து ஒட்டகங்களைத் திருடிக்கொண்டு வேலையாட்களையும் வெட்டிக் கொன்றார்கள் என்ற துக்க செய்தி வந்தது (1:17). கொண்டுவரப்பட்ட ஒவ்வொரு செய்தியும், இழப்பின் விகிதத்தை அதிகரித்துக்கொண்டே போனது. ஆனால் இறுதியாக வந்த செய்தி, யோபுவின் குமாரர்கள?