நாம் அனைவரும் ஏதோ ஒரு காலத்தில், இருட்டில் பயப்படுவது போன்ற சிறியது முதல் முழுதாக பாதிக்கும் வரை கவலையை அனுபவிக்கிறோம். கவலை தாக்கும்போது தேவனைப் பற்றி நாம் அறிந்தவற்றை நினைவு கூருவது கடினமாக இருக்கிறது. சற்று நிதானித்து நிலைமையை முழுவதுமாக பார்ப்பது கடினமாக இருக்கிறது.

நிலைமை மூச்சு முட்டும் போது, நாம் திரும்பிப் பார்க்க ஓரிடம் இருக்கிறது. கவலைதாக்கும் போது நம் கவனத்தை தேவன் மீது வைத்து இந்த சத்தியங்களை நினைவு கூரவேண்டும்.

banner image

“அவர் தம்முடைய ஜீவனை நமக்காக கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்” (1 யோவான் 3:16). உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? சர்வவல்லவர், பரிபூரணர், பாவமற்ற தேவன், நமக்காக சிலுவையில் மரித்தார்? அவர் நம்மை அவ்வளவாக அன்புகூர்ந்தார்!

சில சமயம், அதை மறப்பது சுலபம். “இதை தேவன் எப்படி அனுமதித்தார்?” என்று கேட்கத் தூண்டும். ஆனால் இதை நினைவு கொள்வோம்: அவர் நம்மில் அன்பு கூருகிறார். அவர் நம்மில் மிகுந்த அன்பு கூருகிறார். நம் சூழ்நிலைகளோ அல்லது நம் தனிப்பட்ட தோல்விகளோ-அந்த அன்பை விட்டு நம்மை பிரிக்க முடியாது (ரோமர் 8:35-39).

banner image

அதை எப்பொழுதும் உணருவதில்லை. சமயத்தில் – குறிப்பாக நம் மனதின் பொய்களை கேட்கும்போது – நம் சூழ்நிலைகளில் நாம் தனிமையாக இருப்பதாக உணர்கிறோம். அந்நேரத்தில் நாம் உணர்வுடன் நமக்கு நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.

“நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லி இருக்கிறாரே, அதினாலே நாம் தைரியங் கொண்டு கர்த்தர் எனக்கு சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே” (எபிரெயர்13:5-6).

தேவன் நம்மை விட்டு விலகுவதுமில்லை நம்மை கைவிடுவதுமில்லை அவர் நம் வழியின் ஒவ்வொரு அடியிலும் நம்முடனே இருக்கிறார். இப்பொழுதே, இங்கே – இந்நிலைமையில் – அவர் நம்முடனே நிற்கிறார். அவர் நாம் கடந்து வர உதவுகிறார்.

banner image

நாம் அனுபவிக்கும் பிரச்சினையை யாரும் அறியார் என நினைக்கிறோம் -ஆனால் தேவன் அறிவார். அவர் அனைத்தையும் நம் உட்காரு தலையும் எழுந்திருக்குதலையும் அறிவார் (சங்கீதம் 139 :2), நம் உள்ளிருக்கும் எண்ணங்களையும் மற்றும் நம்மைச் சுற்றியுள்ளவர்களின் எண்ணங்களையும் அறிவார் (அப்போஸ்தலர்1:24).

மிக முக்கியமாக, அவர் நம் பலவீனங்களை ,நம் பயங்களை மற்றும் நம் நிச்சயமில்லா தன்மையை அறிவார். “நம்முடைய பலவீனங்களைக் குறித்து பரிதபிக்கக் கூடாத பிரதான ஆசாரியர் நமக்கு இராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும் – பாவம் இல்லாதவராய் இருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கு இருக்கிறார் ” (எபிரெயர்4:15). நாம் அனுபவிப்பதை யாரும் புரிந்துகொள்ளாவிட்டாலும், அவர் அறிவார்.

banner image

தேவனின் கட்டுப்பாட்டிற்கு வெளியே எதுவுமே இல்லை.தேவனின் சித்தம் இல்லாமல் ஒரு குருவி கூட தரையிலே விழாது என்று இயேசு நினைவுபடுத்துகிறார் (மத்தேயு 10 :29-31).

சில சமயங்களில் கவலைஅல்லது மனநோய், புற்று நோய், மரணம் மற்றும் துன்பத்தின் வேறு வடிவங்கள் போன்றவற்றை நம் வாழ்வில் தேவன் ஏன் அனுமதிக்கிறார் என்பதை புரிந்து கொள்வது கடினமே. தேவன் எப்பொழுதும் உடனடியாக பதில்களை தருவதில்லை. அவர் வாக்களிப்பது – அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் (ரோமர் 8:28).

கவலைக்கு மத்தியில் நாம் சிக்கிக் கொள்ளும் போது அது நம்மை மூழ்கடிக்கும். ஆனால் நாம் வியாகூல சோதனைகளை சந்தித்தாலும் அதை “மிகுந்த சந்தோஷமாக “எண்ணலாம். ஏனெனில் தேவன் நம்மை பூரணராயும் நிறை உள்ளவர்களயும் இருக்கும்படி நமக்குள் கிரியை செய்கிறார் என்பதை நினைவு கூரலாம் (யாக்கோபு1:4).

banner image

தேவன் மல்கியா 3:6 “நான் கர்த்தர், நான் மாறாதவர்” என்று சொல்லுகிறார். யாக்கோபு, தேவன் சோதிகளின் பிதா, “அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலும் இல்லை” என்கிறார் (யாக்கோபு 1:17 ).

தேவன் மாறாதவர். எந்த சூழ்நிலை ஆனாலும் தேவன் நம் கன்மலை. எதுவுமே இல்லை என்றாலும் அவரை சார்ந்து இருக்க முடியும். அவர் நம்மில் அன்பு கூரவும், நம்முடனே இருக்கவும் மற்றும் நம்மை கண்காணிக்கவும் வாக்களித்துள்ளார். நம் துன்பத்தில் இந்த வாக்குத்தத்தங்கள் நிரந்தரமாக இருக்கும். வாக்குத்தத்தங்களை நாம் நம் வாழ்வில் நம்ப முடியும்.

தேவன் உடனடியாக நம் வியாகூலத்தை எடுக்காமல் இருக்கலாம். ஆனால் அதன் மத்தியில் தேவன் நம்மை காண்கிறார் மற்றும் ஆறுதலின் தேவனுமாய் இருக்கிறார் (2 கொரிந்தியர் 1:3-4). கவலை நம்மை தாக்கும் போது, அவர் வார்த்தையை நம் இருதயங்களில் மறைத்து, அவரை நோக்கி ஜெபிக்க நினைவுகூர்ந்து மற்றும் அவருடைய சத்தியங்களை பற்றிக் கொள்வோம்!