னைத்து தலைமுறையினரும் காலத்தால் அழியாத தன்மையை உடைய பரிசுத்த வேதாகமத்தைக் கவனிக்க வேண்டும். சிங்கங்களின் கெபியில் போடப்பட்ட தானியேலின் வாழ்க்கைக்கூட எஞ்சியுள்ள வாழ்நாள் முழுவதும் நம் சிந்தனைக்கு உணவாக மாறமுடியும்.

    பரிசுத்த வேதாகம் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் கூறாமல் நம் வாழ்வையே அவை மறுரூபப்படுத்துவதாயிருக்கிறது. வேதாகமத்தின் ஒவ்வொரு அதிகாரமும் கடவுளைப் பற்றியும் நம்மைப்பற்றியும் கூறுவதோடு அவா் செய்துவரும் கிரியைகளோடு நாம் இனைந்து செயல்பட வேண்டிய வழியைக் காண்பிக்கிறது.

    இதுவே வானொலி வேதாகமப் பாடத் திருச்சபை ஊழியத்தின் இயக்குநர் பில் கிரவடரின் தீர்க்கமான நம்பிக்கையாகும். பின்வரும் பக்கங்களில், தானியேல் வாழ்க்கையின் மூலம் தேவன் தம்மைப் வெளிப்படுத்தி, காலத்தால் அழியாத மகத்தான வாழ்வின் நோக்கங்ககளை நாம் அறிந்து அத்துடன் தொடர்புகொள்ள அவர் நமக்கு உதவுகிறார்.

மாா்டிக் டி ஹான் II

 

banner image

பி ளவுபட்ட கலாச்சாரத்தில் தனிப்பட்ட வாழ்வின் நம்பிக்கையின் பங்கு தவிர்க்க முடியாதது.

அழைப்பு என்ற தன் புத்தகத்தில் ஓ. எஸ். கின்னஸ் இவ்வாறாக எழுதியுள்ளாா் :

“இன்றைய உலகில், வேறுபாடுகள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதைக் காணலாம். நம்பிக்கைகளுக்கு ஏற்ற விளைவுகள் உண்டு” (பக்.59).

கடவுள், உலகம், நீதி, மனிதநேயம் மற்றும் சுதந்திரம் பற்றிய மாறுபாடான நம்பிக்கைகளின் வாழ்வை ஆரம்பிப்பது, முற்றிலும் மாறுபட்ட வழிகளில் வாழ்வதற்கும் இறப்பதற்குமான முடிவை அடைகிறது.

மற்றவர்கள் தங்களை அரசியலைச் சார்ந்த குழுக்களாக அமைத்துக் கொண்டனா். வேறுசிலா் கடவுளின் கரத்தினால் கிடைத்த மாற்றம் பெற்ற வாழ்க்கையைக் வெளிக்காட்டுபவர்களாக, அந்நிய கலாச்சாரத்தின் நடுவிலும் தனிஉரிமைகள் மற்றும் எந்த உத்தரவாதமில்லாமலும் வாழ்ந்தனா்.

தாக்கத்தை ஏற்படுத்தும் தனி வாழ்வு

கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு, தானியேல் தனது தேசம் அடிமைப்படுத்தப்பட்டதையும், வேரோடு தான் பிடுங்கப்பட்டதையும் அனுபவித்தாா். தன் இனமக்களுடன் அடிமையாக சிறைபிடிக்கப்பட்டு அந்நிய கலாச்சாரமுடைய பாபிலோன் தேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அந்நகரம் தன் சொந்த இடமாகிய எருசலேமிலிருந்து பல நுறு மைல்களுக்கு அப்பால் இருந்தது. தற்சமயம் அந்த இடம் இராக் என அழைக்கப்படுகிறது. தானியேலுக்கு இந்த அந்நியக் கலாச்சாரம் மற்றும் மாறுபட்ட மதிப்பீடுகளை பின்பற்றுவோர் என அனைத்தும் சவாலாக இருந்தது.

தானியேலும் அவரது நண்பர்களும் இந்தப் மாறுபட்ட அந்நிய தேசத்திற்குள் கொண்டு செல்லப்பட்டாா்கள். ஆனாலும் தங்கள் பலம் வாய்ந்த எதிராளிகளின் மத்தியில் கைதிகளாகயிருப்பினும், தங்கள் மத நம்பிக்கையை பின்பற்ற தவறவில்லை. அந்நிய தெய்வங்களை வழிபடும் மக்கள் மத்தியில் தானியேல் இருந்ததாலும் அவன் :

  • 3 இராஜாக்களின் அரசாட்சியில் அரசாங்க உயர் அதிகாரியாயிருந்தான்
  • ஒரு சரித்திர ஆசிரியனாகி, கடவுள் அவன் நாட்களில் செய்தவைகளை எழுதினான்
  • தேவனுடைய தீர்கதரிசியாயிருந்து, வருங்கால நிகழ்வுகளை எச்சாிப்பாக இராஜாக்களுக்கும் அதிகாரிகளுக்கும் அறிவித்தான்.

பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள தானியேலின் இந்த வரலாற்றுச் சான்று அந்நிய நாட்டின் எதிர்மறையான கலாச்சாரத்தில் தனிமனிதனின் விசுவாசத்தின் பலன் ஆகும்.

banner image

தானியேலின் கதை ஆரம்பத்திலேயே நாம் பாா்ப்பது, யூதா நாட்டின் மீது படையெடுக்கப்படுகிறது, அனைத்து பணிகளும் ஸ்தம்பித்திவிட்டன, இதன் காரணத்தை எரேமியா தீர்க்கதரிசி நன்கு அறிந்திருந்தார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் யூதாவின் குடிமக்களிடம் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பி வரும்படி தீர்கதரிசனம் உரைத்தார். அவர்கள் மனந்திரும்பி கடவுளுடைய பக்கம் திரும்ப மறுத்ததால், பாபிலோனியர்களால் அடிமைகளாக 70 ஆண்டுகள் சிறைபிடிக்கப்படுவார்கள் என்று அவர்களை எச்சரித்தார் (எரே. 25:1-11). யூதா ஆண்டவருடைய சத்தத்திற்கு செவிகொடுக்காததால், தானியேல் இப்போது படையெடுப்பின் வரலாற்றை சாட்சியாகவும், அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதையும் எழுதுகிறார்

இராஜாவின் திட்டம் (1:1-7)

யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து, அதை முற்றிக்கை போட்டான். அப்பொழுது ஆண்டவர் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமையும் தேவனுடைய ஆலயத்தின் பாத்திரங்களில் சிலவற்றையும் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் அந்தப் பாத்திரங்களைச் சினேயார் தேசத்திலுள்ள தன் தேவனுடைய கோவிலுக்குக் கொண்டுபோய், அவைகளைத் தன் தேவனுடைய பண்டசாலைக்குள் வைத்தான். வ 1:1.2

பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் சிறைபிடிக்கப்பட்ட யூதா தேசத்திலிருந்து வந்த வாலிபா்களில் அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணரும், ராஜாவின் அரமனையிலே சேவிக்கத் திறமையுள்ளவர்களுமாகிய சில வாலிபரைக் கொண்டுவந்து, தன் சுய இன்பத்திற்காகப் பெண்களைச் சிறைப்பிடித்த எஸ்தரின் புஸ்தகத்தில் வரும் அகஸ்வேருவைப் போலல்லாமல், நேபுகாத்நேச்சார் தன் தேசத்தை மேம்படுத்த சிறந்தவா்களை தேர்ந்தெடுத்தார்.

ராஜாவின் அரமனையிலே சேவிக்கத் திறமையுள்ளவர்களுமாகிய சில வாலிபரைக் கொண்டுவர ராஜா தன் பிரதானிகளின் தலைவனாகிய அஸ்பேனாசுக்குக் கற்பித்தான் (1:3-4).

நேபுகாத்நேச்சார் தன் தேசத்தை மேம்படுத்த மிகச் சிறந்தவா்களைத் தேர்ந்தெடுக்க மேன்மையான தரக்கட்டுபாடுகளையும் தகுதிகளையும் நியமித்தான்

ராஜகுலத்தார்களிலும் துரைமக்களிலும் யாதொரு மாசும் இல்லாதவர்களும், அழகானவர்களும், சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணரும் அரமனையிலே சேவிக்க கட்டளையிட்டாா், (1:4)

அவை ஓர் கவர்ச்சிகரமான தரவரிசைப் பட்டியல்! அவர்கள் அழகாகவும், உடல் குறைபாடு இல்லாதவர்களாகவும், ஞானத்தில் வல்லவர்களாகவும், கற்றுக்கொள்ளக் – கூடியவர்களாகவும், பகுத்தறியும் துறையில் திறமையானவர்களாகவும் இருக்க வேண்டும்.

இந்த இளைஞர்கள் ஞானிகளாக மாற்றப்படப் போகிறார்கள். 4பி-7 வசனங்களைக் கவனியுங்கள்:

அவர்களுக்குக் கல்தேயரின் எழுத்தையும் பாஷையையும் கற்றுக்கொடுக்கவும் ராஜா தன் பிரதானிகளின் தலைவனாகிய அஸ்பேனாசுக்குக் கற்பித்தான்.
ராஜா, தான் உண்ணும் போஜனத்திலேயும் தான் குடிக்கும் திராட்சரசத்திலேயும் தினம் ஒரு பங்கை அவர்களுக்கு நியமித்து, அவர்களை மூன்றுவருஷம் வளர்க்கவும், அதின் முடிவிலே அவர்கள் ராஜாவுக்கு முன்பாக நிற்கும்படி செய்யவும் கட்டளையிட்டான்.அவர்களுக்குள் யூதா புத்திரராகிய தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள் இருந்தார்கள். பிரதானிகளின் தலைவன், தானியேலுக்கு பெல்தெஷாத்சார் என்றும், அனனியாவுக்கு சாத்ராக் என்றும், மீஷாவேலுக்கு மேஷாக் என்றும், அசரியாவுக்கு ஆபேத்நேகோ என்றும் மறுபெயரிட்டான். (1:4 -7)

இந்த திட்டயுக்தி கடினமாக சவால்களை கொண்டு வந்தது. ஆம், பாபிலோனில் இருந்த அடிமைகளைவிட அவர்கள் நன்றாக இருப்பார்கள், ஆனால் அவர்களுடைய வாழ்வில் மற்றவர்கள் எதிர்கொள்ளாத சவால்களை சந்திக்க வேண்டியாதாயிருந்தது. அவைகள் பல வடிவங்களில் வந்தன:

சூழ்நிலை. பிரச்சனைகள்தான் நம் குணத்தை வடிவமைக்கின்றன அல்லது வெளிப்படுத்துகின்றன. இங்கே முக்கியமானது என்னவென்றால், ஒரு அந்நிய விக்கிரக வழிபாடு நிறைந்த புறமத தேசத்திற்கு இளம், வயதில் கொண்டுச் செல்லப்பட்ட தானியேல் தன்னை இவைகளால் கறைப்படுத்தமாட்டாா் என்பதே.

வாழ்க்கை முறை. “அரசனின் உணவுகள்” மோசமான உணவு முறையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் பாபிலோனின் பொய்க் விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டு அர்ப்பணிக்கப்பட்ட உணவாயிருந்தது. அந்த உணவை உண்பது அந்த சிலை வழிபாட்டை அங்கீகரிப்பதாகும்.

நம்பிக்கைக்கு பாத்திரமாக. இராஜாவின் இந்தத் திட்டம் இளைஞர்களின் வாழ்வின் மைய நம்பிக்கையின் மீதான ஓர் நுட்பமான தாக்குதலாகும். முதலாவதாக, பாபிலோனின் சோதிடர்களின் கீழ் அவர்கள் படிக்க வேண்டும் என்று கோருவதன் மூலம் அவர்களின் சிந்தனையை மாற்ற முயல்வதாகும். இரண்டாவது பெயர்களை மாற்றுவதன் மூலம் அவர்களின் வழிபாட்டை மாற்றுவதாகும். அவர்கள் அனைவருக்கும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைச் சுட்டிக்காட்டும் பெயர்கள் இருந்தன. இந்த பெயர் மாற்றங்கள் பாபிலோனியக் கடவுள் மீது நம்பிக்கை உடையவர்கள் என வெளிக்காட்ட கொடுக்கப்பட்டன.

நேபுகாத்நேச்சார் இலக்கு எதுவாகயிருந்தது? அவர்களுடைய சிந்திக்கும் வழிமுறையை, உணவை, ஆராதனையை மாற்றியமைப்பதின் மூலம் அவா்கள் வாழ்வின் முறையையே மாற்றிவிடலாம் என்று எண்ணினான். ஆனால். இந்த வாலிபா்கள் வாழ்வு இந்த சோதனையின் விளைவாக எப்படி இருந்தது?

தானியேலின் செயல்பாடு (1:8-14)

வ (1:8). தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்.

இராஜாவின் போஜனம் தானியேலின் விசுவாசத்திற்கு முறனாக இருந்ததால் அது அவனுக்கு ஒரு சவாலாக இருந்தது, தாவீது சங். 119:11ல் நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன் என்று கூறியபடியே இருந்தது,

தானியேல் பாா்த்தது என்ன? ராஜா கொடுத்த போஜனம் இஸரவேல் நாட்டின் யூத முறைப்படி தயாரிக்கப்பட்டதல்ல, பாபிலோனின் அடிமைத்தன வாழ்வில், யூத மத புனித நூலான தோராவின் ஆலய வழிபாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பது சாத்தியமற்றது, ஆனால் அவர்கள் இங்கு கடைப்பிடித்து வந்த யூத நெறிமுறைகளின் வெளிப்பாடு அவர்களுக்கு இன்னொறு பிரச்சனையைக் கொண்டு வந்தது, அந்நிய தெய்வங்களுக்கு மகிமையைக் கொடுக்கும் காரியங்களை அவர்கள் செய்ய விரும்பவில்லை. தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்துவது கா்த்தருக்கு விரோதமானது என அவன் அறிந்திருந்தான். ஏனெனில் அது பரேலாகத்தின் தேவனுக்கு மகிமையைத் தராது.

சக பாபிலோனியா்களுடன் ஒத்துப்போவது தானியேலுக்கு எளிதானது ஆனால் அவன் இந்த மாறுபட்ட சூழ்நிலையிலும் பரேலாகத்தின் தேவனுக்கு கீழ்ப்படிவதையே தெரிந்து கொண்டான்.

இப்படிப்பட்ட கறைபடாத பரிசுத்த வாழ்விற்கான உறுதியான நிலைப்பாட்டை தானியேலும் அவன் நண்பா்களும் எடுத்தனா். ஆனால் மற்ற யூத அடிமைகளாயிருந்தவா்கள் அப்படி செய்யவில்லை. இப்படி தன்னைத் தீட்டுப்படுத்த மாட்டேன் என உள்ளத்தில் தீர்மானம் செய்திருந்தான். பாிசுத்த வாழ்விற்கு முக்கியத்துவம் கொடுத்தபடியால் இது அவனுடைய முக்கிய நிலைப்பாடாயிருந்தது. நீங்களும் கா்த்தரின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதும் அதன் மீது வாஞ்சையாயிருப்பதும் மிக அவசியம். தானியேலுக்கு மற்ற மாற்று வாய்ப்புகள் இருப்பினும் அவன் கா்த்தருக்குக் கீழ்ப்படிவதையே தொிந்துகொண்டான். இருதயத்தில் நாம் செய்யும் இந்த தீர்மானமே அா்ப்பணத்திற்கு நேராக நம்மை வழி நடத்துகிறது. தானியேலுக்கு 3 ஆண்டு பயிற்சியின் ஆரம்ப நாட்களில் இருந்தே இப்படிப்பட்ட சவால்களைச் சந்திக்க வேண்டியதாயிருந்தது.

வ (1:9-10) தேவன் தானியேலுக்குப் பிரதானிகளின் தலைவனிடத்தில் தயவும் இரக்கமும் கிடைக்கும்படி செய்தார்.பிரதானிகளின் தலைவன் தானியேலை நோக்கி: உங்களுக்குப் போஜனத்தையும் பானத்தையும் குறித்திருக்கிற ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு நான் பயப்படுகிறேன்; அவர் உங்களோடொத்த வாலிபரின் முகங்களைப்பார்க்கிலும் உங்கள் முகங்கள் வாடிப்போனவைகளாகக் காணவேண்டியதென்ன? அதினால் ராஜா என்னைச் சிரச்சேதம்பண்ணுவாரே என்றான்.

தானியேல் குழப்பமான சூழ்நிலையைச் சந்தித்தாலும் நல் மனசாட்சியை, தன் பொறுப்புக்கள் மத்தியிலும் காத்துக்கொண்டான். கா்த்தரின் கரம் அவனை இதற்கென ஆயத்தப்படுத்தியதையும் நாம் காணலாம். இந்த தீர்மானத்தினால் கா்த்தா் அவனுக்கு அதிகாரிகளின் கண்களில் தயைகிடைக்கப்பண்ணினாா்.

தானியேல் தனக்கு அதிகாரியாக நியமிக்கப்பட்டவனை நோக்கி:

வ (1:11-13) அப்பொழுது பிரதானிகளின் தலைவனாலே, தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள்மேல் விசாரிப்புக்காரனாக வைக்கப்பட்ட மேல்ஷார் என்பவனை தானியேல் நோக்கி: பத்துநாள்வரைக்கும் உமது அடியாரைச் சோதித்துப்பாரும்; எங்களுக்குப் புசிக்க பருப்பு முதலான மரக்கறிகளையும், குடிக்கத் தண்ணீரையும் கொடுத்து, எங்கள் முகங்களையும் ராஜபோஜனத்தில் புசிக்கிற வாலிபருடைய முகங்களையும் ஒத்துப்பாரும்; பின்பு நீர் காண்கிறபடி உமது அடியாருக்குச் செய்யும் என்றான்.

தானியேல் மேல்ஷார் என்பவனிடம் பத்துநாள்வரைக்கும் எங்களுக்குப் புசிக்க பருப்பு முதலான மரக்கறிகளையும், குடிக்கத் தண்ணீரையும் கொடுத்து சோதித்துப்பாரும் என வேண்டினான். நான் ஒரு கோழி பிாியானிப் பிாியன் எனவே என்னை இந்த மரக்கறி உணவு கவரவில்லை, 10 நாட்கள் மட்டும் வெறும் மரக்கறியா? எனக்கு வேண்டாம். இந்த சோதனை மூலம் சரீரத்தில் எப்படி வெளிப்படையான மாற்றத்தை 10 நாட்களில் காணமுடியும்? இந்த சிறிய சோதனை தானியேலை வரும் நாட்களில் வரப்போகும் பெரிய சவால் மிக்கச் செயல்களுக்கென ஆயத்தப்படுத்தியது.

கடவுளின் விடுதலை (1:15-20)

இந்த முதலாம் சோதனை வெற்றியைத் தந்தது, ஆனால் ஏனைய சிறைபிடிக்கப்பட்ட மற்ற இஸ்ரவேல் மக்கள் இதை மறந்திருந்தாா்கள், கடவுள் தனக்கு கீழ்ப்படிகிறவா்களை கனம்பண்ணுகிறாா்,

வ (1:15 -16) பத்துநாள் சென்றபின்பு, ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது. ஆகையால் மேல்ஷார் அவர்கள் புசிக்கக் கட்டளையான போஜனத்தையும், அவர்கள் குடிக்கக் கட்டளையான திராட்சரசத்தையும் நீக்கிவைத்து, அவர்களுக்குப் பருப்பு முதலானவைகளைக் கொடுத்தான்.

இராஜாவின் போஜனத்தை உண்டவா்களைப் பாா்க்கிலும் தானியேலும் அவன் நண்பா்களும் களையுள்ளவா்களாயும், சரீரம் புஷ்டியுள்ளவா்களாயும் காணப்பட்டனா். எனவே மேல்ஷார் அவர்களுக்குத் தொடா்ந்து மரக்கறிகளையே புசிக்கக் கொடுத்தான்.

வ (1:17-19) இந்த நாலு வாலிபருக்கும் தேவன் சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார்; தானியேலைச் சகல தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ளவனாக்கினார். அவர்களை ராஜாவினிடத்தில் கொண்டுவருகிறதற்குக் குறித்த நாட்கள் நிறைவேறினபோது, பிரதானிகளின் தலைவன் அவர்களை நேபுகாத்நேச்சாருக்கு முன்பாகக் கொண்டுவந்து விட்டான். ராஜா அவர்களோடே பேசினான்; அவர்கள் எல்லாருக்குள்ளும் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்களைப்போல வேறொருவரும் காணப்படவில்லை; ஆகையால் இவர்கள் ராஜசமுகத்தில் நின்றார்கள்.

வ 20 பரலோத்தின் தேவன் அவர்களை ஆசீர்வதித்தப்படியால் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் அவர்கள் பத்துமடங்கு சமர்த்தராகக் காணப்பட்டாா்கள்.

பயிற்சியின் முடிவு நாட்களில் தானியேலுக்கு கிட்டதட்ட 20 வயதேயிருக்கும், அவா்களுக்கு இப்படிப்பட்ட சோதனை வந்தபோது 16-17 வயதில், இந்த அடிமைத்தன அந்நிய நாட்டின் வாழ்வில் தானியேல் பிாித்தெடுக்கப்பட்ட வாழ்வை மேற்கொண்டு வாழ்ந்தான்.

banner image

கீழ்கண்ட எந்தக் காரியங்கள் பொதுவாக இருந்தன?

 

  • உலக கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற அணியின் ஒரு பேட்ஸ்மேன், ஒரு பந்தில் ஸ்கோரை எட்ட வேண்டும்,
  • கடினமான இருதய அறுவை சிகிச்சையின் நடுவில் பதட்டத்துடன் இருக்கும் மருத்துவா்,
  • இரண்டு இயந்திரமும் பழுதடைந்த நிலையில் தலையிறங்க முயலும் விமானின் நிலை,

மேற்கண்ட சூழ்நிலையில் தனிமனிதன் அதிக பிரயாசத்தையும் தன் திறமைகளையும் பயன்படுத்துவது அவசியமாகிறது. இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையில்தான் தானியேலும் அவனது நண்பா்களும் இருந்தனா், தேவனாகிய கா்த்தா் மீது அவர்கள் கொண்டிரு்நத அசைக்க முடியாத நம்பிக்கை அவா்களுக்கு நிச்சயம் வெற்றியைத் தரும்.

மேடை அமைக்கப்பட்டுள்ளது (2:1-13)

வ 2:1 நேபுகாத்நேச்சார் ராஜ்யபாரம்பண்ணும் இரண்டாம் வருஷத்திலே, நேபுகாத்நேச்சார் சொப்பனங்களைக் கண்டான்; அதினால், அவனுடைய ஆவி கலங்கி, அவனுடைய நித்திரை கலைந்தது.

இந்தக் காரியம் ஷேக்ஸ்பியரின் ஹென்றி lVல் கூறப்பட்டுள்ள “மகுடம் அணிந்த தலையில் இருக்கும் இலகுவற்ற பொய்கள் ” என்ற கூற்றின்படி நேபுகாத்நேச்சார் தூக்கம் ஒரு சொப்பனத்தால் கலைகிறது, ஒரு குறிப்பிட்ட கனவு அவரை கலகத்துக்குள்ளாக்கியது. ஒரு ஆசிரியா் இவ்வாறு எழுதுகிறார், “பகல் கால கரிசனை இரவுக் கால கரிசனையாயிற்று”. குழப்பத்திலிருந்த இராஜா அனைத்து ஆலோசனைக்காரா்களையும் வர அழைப்பித்தான். (தானியேலும் அவனது நண்பா்களும் அழைக்கப்படாத காரணம் அவர்கள் பயிற்சியில் இருந்ததாக இருக்கும்) இராஜா யாரை அழைப்பித்தான்? வ. 2 இராஜா சாஸ்திரிகளையும் ஜோசியரையும் சூனியக்காரரையும் கல்தேயரையும் அழைத்தான்.

சாஸ்திரிகள் மதத்தின் புனித புத்தகத்தை எழுதுபவா்கள் மற்றும் அறிஞா்கள், ஜோசியா்கள் மதசம்பந்தமான மந்திரங்களை ஓதுபவா்கள் மற்றும் கோயில் ஆசாரியா்கள், சூனியக்காரகள் சூனியம் செய்பவா்கள் மற்றும் மதசம்பந்தமான கீரை மற்றும் சிறு செடிகளை விற்பவா்கள், கல்தேயரா்கள் ராஜாவின் ஆலோசனைக்காரா்கள் மற்றும் ஞானிகள்.

இவா்கள் அனைவரும் இராஜாவின் சமூகத்திற்கு அழைக்கப்பட்டனா். அவா்கள் அங்கு சந்தித்த சவால் மிகவும் கடுமையானதாக இருந்தது, இதை வ 2:3-9 ல் விவரிக்கப்பட்டுள்ளது:

வ 2:3-9. ராஜா அவர்களை நோக்கி: ஒரு சொப்பனம் கண்டேன்; அந்தச் சொப்பனத்தை அறியவேண்டுமென்று என் ஆவி கலங்கியிருக்கிறது என்றான். அப்பொழுது கல்தேயர் ராஜாவை நோக்கி: ராஜாவே, நீர் என்றும் வாழ்க; சொப்பனத்தை உமது அடியாருக்குச் சொல்லும், அப்பொழுது அதின் அர்த்தத்தை விடுவிப்போம் என்று சீரியபாஷையிலே சொன்னார்கள். ராஜா கல்தேயருக்குப் பிரதியுத்தரமாக: என்னிடத்திலிருந்து பிறக்கிற தீர்மானம் என்னவென்றால், நீங்கள் சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் எனக்கு அறிவியாமற்போனால் துண்டித்துப்போடப்படுவீர்கள்; உங்கள் வீடுகள் எருக்களங்களாக்கப்படும். சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் தெரிவித்தீர்களேயாகில், என்னிடத்தில் வெகுமதிகளையும் பரிசுகளையும் மிகுந்த கனத்தையும் பெறுவீர்கள்; ஆகையால் சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் எனக்குத் தெரிவியுங்கள் என்றான்.அவர்கள் மறுபடியும் பிரதியுத்தரமாக: ராஜா அடியாருக்குச் சொப்பனத்தைச் சொல்வாராக; அப்பொழுது அதின் அர்த்தத்தை விடுவிப்போம் என்றார்கள். அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: என்னிடத்திலிருந்து தீர்மானம் பிறந்தபடியினாலே நீங்கள் காலதாமதம் பண்ணப்பார்க்கிறீர்களென்று நிச்சயமாக எனக்குத் தெரியவருகிறது. காலம் மாறுமென்று நீங்கள் எனக்குமுன்பாக பொய்யும் புரட்டுமான விசேஷத்தைச் சொல்லும்படி எத்தனம்பண்ணி இருக்கிறீர்கள்; நீங்கள் சொப்பனத்தை எனக்குத் தெரிவிக்காமற்போனால், உங்களெல்லாருக்கும் இந்த ஒரே தீர்ப்பு பிறந்திருக்கிறது; ஆகையால் சொப்பனத்தை எனக்குச் சொல்லுங்கள்; அப்பொழுது அதின் அர்த்தத்தையும் உங்களால் காண்பிக்கக்கூடுமென்று அறிந்துகொள்ளுவேன் என்றான்.

இவா்கள் தங்கள் உயிருக்காக இராஜாவை மன்றாடுவதைப் வ 10-13ல் பாா்க்கும்போது அவா்கள் அகப்பட்டுள்ள பிரச்சனை எத்தனை சவால்மிக்கது ஆபத்தானது என அறியலாம்.

வ 2:10-13 கல்தேயர் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக: ராஜா கேட்கும் காரியத்தை அறிவிக்கத்தக்க மனுஷன் பூமியில் ஒருவனும் இல்லை; ஆகையால் மகத்துவமும் வல்லமையுமான எந்த ராஜாவும் இப்படிப்பட்ட காரியத்தை ஒரு சாஸ்திரியினிடத்திலாவது ஜோசியனிடத்திலாவது கல்தேயனிடத்திலாவது கேட்டதில்லை.ராஜா கேட்கிற காரியம் மிகவும் அருமையானது; மாம்சமாயிருக்கிறவர்களோடே வாசம்பண்ணாத தேவர்களேயொழிய ராஜசமுகத்தில் அதை அறிவிக்கத்தக்கவர் ஒருவரும் இல்லை என்றார்கள். இதினிமித்தம் ராஜா மகா கோபமும் உக்கிரமுங்கொண்டு, பாபிலோனில் இருக்கிற எல்லா ஞானிகளையும் கொலைசெய்யும்படி கட்டளையிட்டான். ஞானிகளைக் கொலைசெய்யவேண்டுமென்கிற கட்டளை வெளிப்பட்டபோது, தானியேலையும் அவன் தோழரையும் கொலைசெய்யத் தேடினார்கள்.

கல்தேயர் ராஜசமூகத்தில், நீா் கேட்கும் காரியத்தை தெரிவிக்க தேவர்களேயொழிய மற்ற எந்த மனுஷனும் பூமியில் இல்லை என்றாா்கள். இது தானியேல் வணங்கும் கடவுளைப் பற்றி மற்றவா்கள் அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது.

இப்படி கல்தேயா் தங்கள் இயலாமையைக் கூறியவுடன், நேபுகாத்நேச்சார் கடுங்கோபம் கொண்டு அனைவைரயும் கொல்லக் கட்டளையிட்டான், இக்கூட்டத்தில் தானியேலும் அவனுடைய நண்பா்களும் அடங்குவாா்கள்,

அடிபணியும் இருதயம் (2:14-23)

இராஜாவினுடைய தலையாரிகளுக்கு அதிபதியாகிய ஆரியோகோவிடம் அனைத்து ஞானிகளையும் கொல்ல கட்டளை பிறப்பிக்கப்பட்டதை அறிந்த தானியேல் யோசனையும் புத்தியுமாய்ப் பேசி, இந்தக் கட்டளை ராஜாவினால் இத்தனை அவசரமாய்ப் பிறந்ததற்குக் காரணம் என்ன என்று கேட்டறிந்தான். தானியேல் இந்த சந்தா்ப்பத்தைப் பயன்படுத்தினான்,

வ 16 தானியேல் ராஜாவினிடத்தில்போய், சொப்பனத்தின் அர்த்தத்தை ராஜாவுக்குக் காண்பிக்கும்படித் தனக்குத் தவணைகொடுக்க விண்ணப்பம்பண்ணினான்.

தானியேல் சிறிது காலம் எனக்கு தவணை கொடுக்கும்படி அனுமதி கேட்டு தேவனுடைய தயவால் பெற்றுக்கொள்கிறான். மற்ற அனைவராலும் கூடாத ஒரு காரியத்தை செய்து முடிக்க தானியேல் தன்னுடைய தகுதிக்கு மிஞ்சிய ஒரு வாக்கை அவனுக்கு கொடுக்கிறான்.

வ 2:17-18. பின்பு தானியேல் தன் வீட்டுக்குப்போய், தானும் தன் தோழரும் பாபிலோனின் மற்ற ஞானிகளோடேகூட அழியாதபடிக்கு இந்த மறைபொருளைக்குறித்துப் பரலோகத்தின் தேவனை நோக்கி இரக்கம் கேட்கிறதற்காக, அனனியா, மீஷாவேல், அசரியா என்னும் தன்னுடைய தோழருக்கு இந்தக் காரியத்தை அறிவித்தான்.

இத்தருணத்தில் தானியேல் தன் இருதய பாரத்தை தன் நண்பா்களுடன் பகிர்ந்து, அவர்களுடன் இணைந்து கா்த்தருடைய சமூகத்திற்கு வந்து விண்ணப்பம் செய்தான். பரலோகத்தின் தேவனின் இரக்கத்திற்காக அவா்கள் ஒன்று சோ்ந்து மன்றாடினாா்கள்,

இது அவர்களுடைய ஆவிக்குரிய ஸ்த்திரத்தன்மையையும், விசுவாசத்தையும் வெளிக்காட்டுகிறது. கொலை செய்யப்பட நியமிக்கப்பட்டுள்ள தங்களை நிச்சயம் கடவுள் காப்பாற்றுவாா் என்பதே அவா்களுடைய நல் நம்பிக்கை,

வ 2:19-23 பின்பு இராக்காலத்தில் தரிசனத்திலே தானியேலுக்கு மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது; அப்பொழுது தானியேல் பரலோகத்தின் தேவனை ஸ்தோத்திரித்தான். பின்பு தானியேல் சொன்னது: தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது.அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர். அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளில் இருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும். என் பிதாக்களின் தேவனே, நீர் எனக்கு ஞானமும் வல்லமையும் கொடுத்து, நாங்கள் உம்மிடத்தில் வேண்டிக்கொண்டதை இப்பொழுது எனக்கு அறிவித்து, ராஜாவின் காரியத்தை எங்களுக்குத் தெரிவித்தபடியினால், உம்மைத் துதித்துப் புகழுகிறேன் என்றான்.

அவா்களுடைய மன்றாட்டை பரலோகத்தின் தேவன் கேட்டு தானியேலுக்கு இராஜாவின் சொப்பனத்தையும் அற்கான அா்த்தத்தையும் வெளிப்படுத்தினாா். தானியேலின் உயிருக்கு ஆபத்தான ஒரு கட்டளை அவன் மீதும் இருந்தது ஒரு பெரிய ஆச்சரியமான காாியம் இல்லை, ஆனால் தானியேல் காரியம் வெளிப்படுத்தப்பட்டவுடன், தான் தண்டனையில் இருந்து தப்பிக்க வழியைத் தேடாமல், மாறாக அவன் நேரத்தை எடுத்து பரலோகத்தின் தேவனுக்கு ஆராதனை செய்தான் இதுவே ஆச்சரியமாக இருந்தது. அவன் கா்த்தருடைய வல்லமையை, ஈவுகளை மையப்படுத்தி அவருக்கு ஸ்தோத்திரங்களை ஏறெடுத்து அவரையே உயா்த்தி மையப்படுத்தினான். அவன் கூறியது :

  • தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக.
  • ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது.
  • அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; இது அவருடைய ஆளுகையைக் குறிக்கிறது.
  • ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; இது அவருடைய கா்த்தர்த்துவத்தைக் குறிக்கிறது.
  • ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர். யாக், 1:5 ல் குறிப்பிடபட்டுள்ள வாக்குத்ததம்.
  • அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; வெளிப்படாத சொப்பனத்தை அவா் வெளிப்படுத்துகிறாா்.
  • இருளில் இருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும்.

இவ்வாறு தானியேல் சொப்பனத்தை வெளிப்படுத்திய பரலோகத்தின் தேவனுக்கு கனத்தையும், மகிமையையும் செலுத்தி ஆராதனை செய்தான் (வ 23). இது எத்தனை அற்புதமான ஆராதனையின் தோற்றமாயிருக்கிறது. தன் உயிரைக் காத்த தேவனை ஆராதிப்பது தகுதியற்றதாயிருக்குமோ? இல்லவே இல்லை. இங்கு அவனுடைய உயிா் காக்கப்பட்டது இரண்டாவது காரியமே, தானியேலின் சிந்தையில் இருந்ததெல்லாம் பரலோகத்தின் தேவனின் மாண்புகளே.

தானியேல் வாழ்வில் கண்ட இந்த காரியம் நம் வாழ்வில் உள்ளதா? நம்மை நாம் ஆராய்ந்து பாா்த்து பரலோகத்தின் தேவனுக்கு மகிமையைச் செலுத்துவோம்,

  • நம்மை ஆசீா்வதிப்பவருக்கா? அல்லது தந்த ஆசீா்வாதங்களுக்காகவா?
  • மகத்துவ கிரியைகள் செய்த தேவனுக்கா? அற்புதங்களுக்கா?
  • ஜெபத்தை கேட்ட தேவனாகிய கா்த்தருக்கா? கிடைத்த பதிலுக்காகவா?

நாம் நம் நம்பிக்கையை பரலோகத்தின் தேவனிடம் வைக்காது போனால் நம்முடைய கூா்மையான பாா்வை திசை திரும்பிவிடும்.

நம்முடைய பாா்வை மங்கிவிடும் நாம் மரங்களையே காண்போமே தவிர அடா்ந்த காடுகளை அல்ல. தன்னுடைய மரண போராட்டத்தின் மற்றும் அழுத்தத்தின் மத்தியிலும் தானியேல் தன் சிந்தனையை கடவுளைவிட்டு திருப்பவில்லை. அவன் தேவனையே சாா்ந்திருந்தான் எனவே அவா் காரியத்தை வாய்க்கச் செய்தாா். தனக்கு வந்து அழுத்தத்தில் அவன் அமிழ்ந்து போகவில்லை.

வெளியான இரகசியம் (2:24-30)

தானியேல் தேவன் மீதுள்ள நம்பிக்கையினால் இந்த சவால் நிறைந்த காரியத்தை வெளிப்படுத்த இராஜாவிடம் சென்றான்.

வ 2:24-25 பின்பு தானியேல் பாபிலோனின் ஞானிகளை அழிக்க ராஜா கட்டளையிட்ட ஆரியோகினிடத்தில் போய்: பாபிலோனின் ஞானிகளை அழிக்காதேயும், என்னை ராஜாவின் முன்பாக அழைத்துக்கொண்டுபோம்; ராஜாவுக்கு அர்த்தத்தைத் தெரிவிப்பேன் என்று சொன்னான். அப்பொழுது ஆரியோகு தானியேலை ராஜாவின் முன்பாகத் தீவிரமாய் அழைத்துக் கொண்டுபோய்: சிறைப்பட்டுவந்த யூதேயா தேசத்தாரில் ஒரு புருஷனைக் கண்டுபிடித்தேன்; அவன் ராஜாவுக்கு அர்த்தத்தைத் தெரிவிப்பான் என்றான்.

முதலாவது தானியேல் ஆரியோகினிடத்தில் போய் காரியத்தை அறிவித்தான். தானியேல் இராஜாவின் சமூகத்திற்கு வந்தபோது (இதுதான் இளம் வயதில் அவனுடைய முதல் சந்திப்பாக இருந்திருக்கும்) அவனிடம் ராஜா, நான் கண்ட சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் நீ எனக்கு அறிவிக்கக்கூடுமா என்று கேட்டான்.

வ 26 ராஜா பெல்தெஷாத்சாரென்னும் நாமமுள்ள தானியேலை நோக்கி: நான் கண்ட சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் நீ எனக்கு அறிவிக்கக்கூடுமா என்று கேட்டான்.

இங்கு மற்ற ஞானிகள் வெளிப்படுத்த முடியாத சொப்பனத்தையும் அதற்கான அா்த்தத்தையும் தானியேல் கூறுகிறான். கீழ்கண்ட வசனங்கள் இதை விளக்குகிறது. ஆம். இது மெய்யானதே, தானியேல் இராஜாவிடம் மறுமொழியாக கூறியது :

வ 27-30 தானியேல் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக: ராஜா கேட்கிற மறைபொருளை ராஜாவுக்குத் தெரிவிக்க ஞானிகளாலும், ஜோசியராலும், சாஸ்திரிகளாலும், குறிசொல்லுகிறவர்களாலும் கூடாது. மறைபொருள்களை வெளிப்படுத்துகிற பரலோகத்திலிருக்கிற தேவன் கடைசிநாட்களில் சம்பவிப்பதை ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்குத் தெரிவித்திருக்கிறார்; உம்முடைய சொப்பனமும் உமது படுக்கையின்மேல் உம்முடைய தலையில் உண்டான தரிசனங்களும் என்னவென்றால்: ராஜாவே, உம்முடைய படுக்கையின்மேல் நீர் படுத்திருக்கையில், இனிமேல் சம்பவிக்கப் போகிறதென்ன என்கிற நினைவுகள் உமக்குள் எழும்பிற்று; அப்பொழுது மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவர் சம்பவிக்கப்போகிறதை உமக்குத் தெரிவித்தார். உயிரோடிருக்கிற எல்லாரைப்பார்க்கிலும் எனக்கு அதிக ஞானம் உண்டென்பதினாலே அல்ல; அர்த்தம் ராஜாவுக்குத் தெரியவரவும், உம்முடைய இருதயத்தின் நினைவுகளை நீர் அறியவும், இந்த மறைபொருள் எனக்கு வெளியாக்கப்பட்டது.

இது ஒரு மாய்மாலமான தாழ்மையல்ல. தேவன் தானியேலுக்கு கொடுத்த வாய்ப்புக்களை புாிந்துகொண்டு செயல்பட்டதாகும். இந்த வாலிபா்களுக்கு வந்த சவால் என்னவெனில் அது பரலோகத்தின் தேவனைப் பற்றியதாகும். மாறாக தானியேலைப் பற்றியது அல்ல. அவனுடைய செயல்பாடுகள் அவன் தேவனிடத்தில் கொண்டுள்ள அசைக்கமுடியாக நம்பிக்கையைக் காட்டுகிறது.

நடைமுறைப்படுத்து

தானியேல், சொப்பனத்தையும் அதன் விளக்கத்தையும் 31-45 வசனங்களில் துல்லியமாக வெளிப்படுத்துகிறார், ஆனால் 46-47 வசனங்களில்தான் தானியேலின் கடவுளை மகிமைப்படுத்துகிற முக்கிய விளைவைப் பாா்க்கிறோம்.

வாழ்க்கையில், வானிலையைப் போலவே, அதிக அழுத்தம் அல்லது குறைந்த அழுத்தத்தின் நேரங்கள் உள்ளன, ஆனால் ஒருபோதும் அழுத்தம் இல்லாத நேரங்கள் இல்லை. இந்த மாறிவரும் காலங்களில் நமது தேர்வுகள் நம்மைப் பற்றி நிறைய காரியங்களைக் கூறுகின்றன.

நெருக்கடியான நேரங்களில் நம் கவனம் எங்கே இருக்கிறது? எப்படியாவது எதைச் செய்தாவது நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள முணைகிறோமா? நம் செயல்பாடுகள் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் மோசமான விஷயங்களாக இருக்கின்றதா? அல்லது நம்முடைய செயல்கள் கடவுளை எவ்வாறு உலகிற்கு பிரதிபலிக்கின்றது என்பதைப் பற்றி அதிக அக்கறை கொண்டிருக்கிறோமா?

இப்படிப்பட்ட நேரங்களில் உங்கள் சிந்தனையை, தேவபிரசன்னம் நிரப்ப கடவுளிடம் விண்ணப்பம் செய்யுங்கள். இந்த தருணத்தை நித்திய நோக்கத்திற்காகவும் கடவுளைக் கனப்படுத்தவும் பயன்படுத்துங்கள்.

banner image

ஓ. எஸ். கின்னஸ் என்பவரின் “அழைப்பு ” என்ற புத்தகத்தில் 60 வயதை அடைவது என்பது “ஒரு பெரிய பாக்கியம்” என்று எழுதுகிறார். யாரும் எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. சிந்திக்கும் மக்களுக்கு, அனைத்தும் சவாலாகவே இருந்து அவர்களை அது மீண்டும் ஆரம்ப கட்டத்திற்கே கொண்டு செல்லும். கின்னஸ் தொடர்ந்து கூறுகிறாா்:

எந்த இடத்திலும் இல்லாத இந்த சவால், நாம் எதற்காக, ஏன் நம்பினோம் என அறிந்திருக்கும் போது வருவதால் கடினமாகவே இருக்கும்.

. . . ஏபிசி என்ற புத்தகத்தின் (ப.145). (அல்லது “கிறிஸ்தவத்தைத் தவிர வேறு எதுவும்”) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் மனதிற்கு புராதன பாரம்பரிய, கிறிஸ்தவத்தை தவிர பெரும்பாலும் எந்தவொரு மதமும் புதிதாக, பொருத்தமானதாக மற்றும் உற்சாகமானதாக இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு புதிய ராஜா (5:1-4)

நாம் தானியேல் 5-ம் அதிகாரத்தில், எல்லாவற்றிற்கும் குறிப்பாக நேபுகாத்நேச்சார் பல ஆண்டுகளுக்கு முன்பு தானியேலின் தெய்வமே உண்மையானவா் எனஅறிந்து கொண்ட பரலோகத்தின் தேவனுக்கு (4:34-37) சவால் விட்ட ஒருவனை இங்கு நாம் காண்கிறோம். இந்தக் காரியம் கிமு 538ல், நேபுகாத்நேச்சார் இறந்து, 23 ஆண்டுகளுக்குப் பின் நடந்தது. புதிய ராஜாவாகிய பெல்ஷாத்சார், நேபுகாத்நேச்சாரின் பேரன். உண்மைக் கடவுளைத் அல்லாமல் வேறு தெய்வத்திற்கு தன்னை அர்ப்பணித்தவன். இப்படி தெய்வமல்லாததை அவன் வணங்கினபடியால் அது அவன் இராஜ்ஜியத்தின் வீழ்ச்சிக்கு காரணமாயிற்று. பாபிலோன் நகரம் மெடோ பாரசீகப் பேரரசின் படைகளால் முற்றுகையிடப்பட்டது. அச்சமயம் 80-85 வயதுடைய தானியல் அந்த இராஜாவை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

ரோம் நகரம் எரிந்தபோது வயலின் இசைத்துக் கொண்டிருந்து நீரோ ராஜாவைப் போலவே, பெல்ஷாத்சார் நகரத்தை அச்சுறுத்திய முற்றுகையின் போது ஒரு தேசிய விடுமுறைக்கு உத்தரவிட்டார்.

வ 5:1, பெல்ஷாத்சார் என்னும் ராஜா தன் பிரபுக்களில் ஆயிரம்பேருக்கு ஒரு பெரிய விருந்துசெய்து, அந்த ஆயிரம்பேருக்கு முன்பாகத் திராட்சரசம் குடித்தான்.

அவர் ஏன் அப்படிச் செய்தார்? இதற்கு பல காரணங்கள் உள்ளன. முதலில், மக்களை பிரச்சனைகளில் இருந்து திசைதிருப்பி அமைதிப்படுத்துவதாகும். அது கல்றைத் தோட்டத்தின் வழியாக பதற்றத்துடன் விசில் அடிப்பதைப் போல இருந்தது. ஆபத்து இருந்தபோதிலும் தேசத்தின் 1,000 பிரதானமானத் தலைவர்களை அழைத்து நம்பிக்கையான சூழ்நிலை இருப்பது போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தினார். இரண்டாவதாக, பெல்ஷாத்சார் தனது ராஜ்யத்தின் அதிகாரத்தைக் காட்ட விரும்பி இதைச் செய்திருக்கலாம். மூன்றாவதாக, அவர் பாபிலோனிய கடவுள்களுக்கு பண்டிகை கொண்டாட விரும்பினார். இந்த தெய்வங்களின் படங்கள் விருந்து மண்டபத்தின் சுவர்களில் காட்சிக்கு வைக்கப்பட்டன, விருந்தின் உணவுகளை பெல்ஷாத்சார் அவைகளுக்கு படைத்தப்பின் அனைவரும் அவைகளை அருந்த வழி செய்தான். விருந்தினா்கள் குடிபோதையில் இருந்தபோது, ராஜா இந்த துணிகரமான தவறைச் செய்தார்.

வ 5:2-4, பெல்ஷாத்சார் திராட்சரசத்தை ருசித்துக்கொண்டிருக்கையில், அவன் தன் தகப்பனாகிய நேபுகாத்நேச்சார் எருசலேம் தேவாலயத்திலிருந்து கொண்டுவந்த பொன் வெள்ளி பாத்திரங்களில், ராஜாவாகிய தானும் தன் பிரபுக்களும் தன் மனைவிகளும் தன் வைப்பாட்டிகளும் குடிக்கிறதற்காக அவைகளைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டான். அப்பொழுது எருசலேமிலுள்ள தேவனுடைய வீடாகிய ஆலயத்திலிருந்து எடுக்கப்பட்ட பொற்பாத்திரங்களைக் கொண்டுவந்தார்கள்; அவைகளில் ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் அவனுடைய மனைவிகளும் அவனுடைய வைப்பாட்டிகளும் குடித்தார்கள். அவர்கள் திராட்சரசம் குடித்து, பொன்னும் வெள்ளியும் வெண்கலமும் இரும்பும் மரமும் கல்லுமாகிய தேவர்களைப் புகழ்ந்தார்கள்.

அவனுடைய ராஜ்யம் தற்சமயம் முற்றுகையில் உள்ளது நிலையற்றது என்பதை நினைவில்கொள்ளுங்கள், இதை ராஜா மறைக்க முயற்சிக்கிறார். எனவே, குடிபோதையில், எருசலேமிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட யூத ஆலய வழிபாட்டில் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்களை கொண்டு வரச் செய்கிறார். அவர் ஏன் இதைச் செய்தார்? ஒருவேளை…

  • அவன் யூத கடவுளை இழிவுபடுத்த விரும்பினான்;
  • பாபிலோனின் அழிவைப் பற்றிய பழைய தீர்க்கதரிசனம் (தானியேல் முதல் பெல்ஷாத்சாரின் தாத்தா வரை) பொய்யானது என்பதை நிரூபிக்க அவர் விரும்பினார்;
  • தானியேல் நேபுகாத்நேச்சாரை எப்படித் தாழ்த்தினார் என்பதை அவர் நினைவுகூர்ந்து தான் மேன்மையானவன் எனக் காட்ட முடிவு செய்திருக்கலாம்.

காரணம் எதுவாக இருந்தாலும், பெல்ஷாத்சார் உபவாசம் இருக்க வேண்டிய நேரத்தில் விருந்து சாப்பிடுகிறான். உன்னதமான கடவுளிடம் தனது முழு வெறுப்பைக் காட்டினார். அவர் தனது சிலைகளை யூதகடவுளின் வழிபாட்டிற்கான பாத்திரங்களால் அலங்கரித்தார்.

ஒரு புதிய சவால் (5:5-12)

தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பை கையெழுத்தாக சுவரில் எழுதியதை ராஜா கண்டார்!

வ 5:5-7, அந்நேரத்திலே மனுஷ கைவிரல்கள் தோன்றி, விளக்குக்கு எதிராக ராஜ அரமனையின் சாந்து பூசப்பட்ட சுவரிலே எழுதிற்று; எழுதின அந்தக் கையுறுப்பை ராஜா கண்டான்.அப்பொழுது ராஜாவின் முகம் வேறுபட்டது; அவனுடைய நினைவுகள் அவனைக் கலங்கப்பண்ணினது; அவனுடைய இடுப்பின் கட்டுகள் தளர்ந்தது, அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டது. ராஜா உரத்த சத்தமிட்டு; ஜோசியரையும் கல்தேயரையும் குறிசொல்லுகிறவர்களையும் உள்ளே அழைத்துவரும்படி சொன்னான். ராஜா பாபிலோன் ஞானிகளை நோக்கி: இந்த எழுத்தை வாசித்து, இதின் அர்த்தத்தை எனக்கு வெளிப்படுத்துகிறவன் எவனோ, அவன் இரத்தாம்பரமும் கழுத்திலே பொற்சரப்பணியும் தரிக்கப்பட்டு, ராஜ்யத்திலே மூன்றாம் அதிபதியாய் இருப்பான் என்று சொன்னான்.

பெல்ஷாத்சார் சட்டென்று நிதானமடைந்தான். அவனுடைய முகம் வெளிறியது, பலவீனமடைந்தார், அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டது. முன்பெல்லாம் குடிபோதையில் அவனால் நிற்க முடியாதிருந்தது இப்போதோ பயந்ததின் மிகுதியால் நிற்கமுடியவில்லை.

அவன் உடனே சுவரில் எழுதப்பட்டதை விளக்கக்கூடியவருக்கு சன்மானம் வழங்கப்படும் என அறிவித்தான் (வ.7). அவருடைய ஞானிகள் அனைவரும் அதை அறிவிக்க முடியாமல் தோல்வியுற்றபோது (வ.8), அவர் ”இன்னும்” அதிகமாக கலங்கினார், அவருடைய முகம் ரூபம் மாறியது, அவனுடைய பிரபுக்கள் செய்வதறியாது திகைத்தார்கள்” (வ.9).

தன்னால் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையை எதிர்கொண்டதால் ராஜா தனது நிதானத்தை முற்றிலுமாக இழந்தார். அவன் விரும்பாத ஒரு இடத்திலிருந்து இதற்காகத் தீர்வு வரும் அறியாதிருந்தாா்.

5:10-12 ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் சொன்னவைகளை ராஜாத்தி கேள்விப்பட்டு விருந்துசாலைக்குள் பிரவேசித்தாள். அப்பொழுது ராஜாத்தி: ராஜாவே, நீர் என்றும் வாழ்க; உமது நினைவுகள் உம்மைக் கலங்கப்பண்ணவும், உமது முகம் வேறுபடவும் வேண்டியதில்லை. உம்முடைய ராஜ்யத்திலே ஒரு புருஷன் இருக்கிறான், அவனுக்குள் பரிசுத்த தேவர்களுடைய ஆவி இருக்கிறது; உம்முடைய பிதாவின் நாட்களில் வெளிச்சமும் விவேகமும் தேவர்களின் ஞானத்துக்கு ஒத்த ஞானமும் அவனிடத்தில் காணப்பட்டது; ஆகையால் உம்முடைய பிதாவாகிய நேபுகாத்நேச்சாரென்னும் ராஜாவானவர் அவனைச் சாஸ்திரிகளுக்கும் ஜோசியருக்கும் கல்தேயருக்கும் குறிசொல்லுகிறவர்களுக்கும் அதிபதியாக வைத்தார். ராஜாவினால் பெல்தெஷாத்சாரென்னும் பெயரிடப்பட்ட அந்த தானியேலுக்குள் சொப்பனங்களை வியார்த்திபண்ணுகிறதும், புதைபொருள்களை வெளிப்படுத்துகிறதும், கருகலானவைகளைத் தெளிவிக்கிறதுமான அறிவும் புத்தியும் விசேஷித்த ஆவியும் உண்டென்று காணப்பட்டது; இப்போதும் தானியேல் அழைக்கப்படட்டும், அவன் அர்த்தத்தை வெளிப்படுத்துவான் என்றாள்.

ஒரு புதிய வாய்ப்பு (5:13-31)

மிகவும் வயதான தானியேல் ராஜாவினிடத்தில் கொண்டு வரப்பட்டான் (வ.13). என்ன ஒரு அற்புதக் காட்சி! தானியேல் விருந்து மண்டபத்தையும் அங்கிருந்த சிலை வழிபாடு, ஒழுக்கக்கேடு மற்றும் கடவுளை இழிவுப்படுத்தும் செயல்களைக் கண்டபோது, பரிசுத்தமான வாழ்க்கையை வாழ விரும்பிய அவன் இருதயம் எத்தனை மன வேதனையை சந்தித்திருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.

அந்தச் சுவரில் எழுதப்பட்டதை விளக்கியதற்காக பெல்ஷாத்சார் தானியேலுக்கு வெகுமதியைக் கொடுத்தார், ஆனால் தானியேல் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அரசன் கூறினான்:

5:14-16 உனக்குள்ளே தேவர்களின் ஆவி உண்டென்றும், வெளிச்சமும் புத்தியும் விசேஷித்த ஞானமும் உன்னிடத்தில் காணப்பட்டதென்றும் உன்னைக்குறித்துக் கேள்விப்பட்டேன்.இப்போதும் இந்த எழுத்தை வாசிக்கிறதற்கும், இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கிறதற்கும் சாஸ்திரிகளும் ஜோசியரும் எனக்கு முன்பாக அழைத்துக்கொண்டுவரப்பட்டார்கள்; ஆனாலும் இந்த வசனத்தின் அர்த்தத்தை வெளிப்படுத்த அவர்களால் கூடாமற்போயிற்று. பொருளை வெளிப்படுத்தவும், கருகலானவைகளைத் தெளிவிக்கவும் உன்னாலே கூடுமென்று உன்னைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்போதும் நீ இந்த எழுத்தை வாசிக்கவும், இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கவும் உன்னாலே கூடுமானால், நீ இரத்தாம்பரமும் கழுத்திலே பொற்சரப்பணியும் தரிக்கப்பட்டு, ராஜ்யத்திலே மூன்றாம் அதிபதியாய் இருப்பாய் என்றான்.

நாம் கவனிக்கவேண்டியது, தானியேல் நேபுகாத்நேச்சாருக்குக் காட்டிய அதே அளவு இரக்கத்தை இந்த ராஜாவிடம் காட்டவில்லை என்பதாகும். ராஜாவின் வெகுமதிகளை திட்டவட்டமாக மறுத்து தானியேல் அவனுடைய பாவத்தை வெளிப்படுத்தினான். முன்பு, அவர் இரக்கத்துடன் ஆலோசனை வழங்கினார். ஆனால் இப்போது அவர் கோபத்துடன் பிரசங்கம் செய்தார்.

தானியேல் அரசனிடம் இருந்து வெகுமதிகளை வாங்க மறுத்துவிட்டாா். பின்னர் கடந்தகால வரலாற்றுச் சான்று மூலம் ஒரு பாடத்தை அவருக்கு கற்றுக் கொடுத்தாா். இந்த வரலாற்றுப் பாடம் நேபுகாத்நேச்சார் (வ.18-19) காலத்தில் நடந்தவைகள் பெருமையினால் அவன் தாழ்த்தப்பட்ட நிகழ்ச்சியாகும், பெல்ஷாத்சாரின் பிரச்சினையைகளுக்கு காரணம் அவனின் பெருமையே என்பதை திட்டவட்டமாக அவனுக்கு வெளிப்படுத்தினாா் தானியேல் (வ. 20-21).

தானியேல் இந்த சுவரில் எழுதப்பட்ட எழுத்துக்களுக்கான அர்த்தத்தை தெரிவிப்பதற்கு முன், பெல்ஷாத்சார் மீதான கடவுளின் நியாயத்தீர்ப்பை அறிவித்து, அவரது பாவம் அறியாமையின் பாவம் அல்ல என்பதை உறுதிப்படுத்தினார்: “நீங்கள் … இவையெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருந்தும், உன் இருதயத்தைத் தாழ்த்திக்கொள்ளவில்லை” (வ. 22). அறியாமையினால் உண்டான பாவம் இல்லையென்றால், அது என்னவாக இருக்கும்?

  • ராஜாவின் ஆணவம் (வ.23). மன்னரின் பிடிவாத மனப்பான்மையினால் வந்தது.
  • அது தெய்வ நிந்தனையிருந்தது, கா்த்தாின் ஆலயப் பாத்திரங்களை அசுத்தப்படுத்தி அவருக்கு மகிமைத் தராதது (வ.23).
  • சிலை வழிபாடு (வ.23). அவர்கள் வணங்கும் சிலைகளை பற்றிக் கூறும்போது தானியேலின் தேவனை கேலியாக பேசுவதை நாம் காணலாம்.
  • எதிா்த்து நிற்பது. கா்த்தராகிய தேவனை கடவுளாக ஏற்க ராஜா மறுத்தது (வ.23).
  • அது கடவுளின் நியாயத்தீர்ப்புக்கு உரியது. சுவரில் கையால் எழுதப்பட்ட செய்தி நியாயத்தீர்ப்பு வரப்போகிறது என்பதைக் குறிக்கிறது (வ.24).

பெல்ஷாத்சார், உன்னதமான பரேலாகத்தின் கடவுளின் வல்லமையையும் அவருடைய ஆளுகையையும் கருத்தில் கொள்ளத் தவறிவிட்டார்.

சுவரில் எழுதப்பட்ட எழுத்துக்கள் அா்த்தம் 25ம் வசனத்தில் வெளிப்படுத்தப்பட்டது:

” மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின் .”

எழுதப்பட்ட எழுத்துக்களின் அா்த்தத்தை தானியேல் 26-28 வசனங்களில் கூறினாா்:

இந்த வசனத்தின் அர்த்தமாவது: மெனே என்பதற்கு, தேவன் உன் ராஜ்யத்தை மட்டிட்டு, அதற்கு முடிவுண்டாக்கினார் என்றும், தெக்கேல் என்பதற்கு, நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய் என்றும், பெரேஸ் என்பதற்கு, உன் ராஜ்யம் பிரிக்கப்பட்டு, மேதியருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது என்றும் அர்த்தமாம் என்றான்.

கடவுளின் நியாயத்தீர்ப்பு வந்தது. நீதிமொழிகள் 29:1-ன், “அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.” இங்கு அது பரிகாரமோ, நிவாரணமோ, விடுதலையோ வாக்குப்பண்ணப்படவில்லை; இதிலிருந்து தப்பிக்க வழி இல்லை, எந்த வாய்ப்பும் இல்லை, தொழில்நுட்பமும் இல்லை. இது மதியீனமான தேர்வின் விளைவாகும்.

(வ. 29-31) அப்பொழுது பெல்ஷாத்சார் தானியேலுக்கு இரத்தாம்பரத்தையும், அவனுடைய கழுத்தில் பொற்சரப்பணியையும் தரிப்பிக்கவும், ராஜ்யத்திலே அவன் மூன்றாம் அதிகாரியாயிருப்பவன் என்று அவனைக்குறித்துப் பறைமுறையிடவும் கட்டளையிட்டான். அன்று இராத்திரியிலே கல்தேயரின் ராஜாவாகிய பெல்ஷாத்சார் கொலைசெய்யப்பட்டான். மேதியனாகிய தரியு தன் அறுபத்திரண்டாம் வயதில் ராஜ்யத்தைக் கட்டிக்கொண்டான்.

அன்று இரவே இவைகள் நடந்தன. பாபிலோனின் தகா்க்க முடியாத சுவர்களை மேடோ பாரசீகப் படைகள் ஊடுருவி நகரம் வீழ்ந்தது. இதைக் குறித்து வரலாற்றாசிரியர் செனோஃபோன் இவ்வாறு கூறுகிறார்; கோரேசின் தளபதியான உக்பாரு, நகரின் மையப்பகுதியில் ஓடிய நதியைக் தடுப்பணைக் கட்டி பாபிலோனை வென்றார். பின்னர் இராணுவம் தடுப்புச் சுவர்களின் கீழ் அணிவகுத்து அதை தகா்த்து நகரத்தைக் கைப்பற்றியது. ஆனால், பெல்ஷாத்சார் கொல்லப்பட்டு, அவருடைய ராஜ்யம் கைப்பற்றப்படுவதற்கு முன்பு, தானியேலுக்குக் கொடுக்கப்பட வேண்டிய வெகுமதிகளை கொடுக்கவும், அவர் ராஜ்யத்தின் மூன்றாவது நிலையில் மிக உயர்ந்த அதிபதியாக நியமிக்கப்பட வேண்டும் என்பதே அவர் கொடுத்தக் கட்டளை என்பதைக் கவனியுங்கள்.

நடைமுறைப்படுத்து

பெல்ஷாத்சாரின் தாத்தா தன் மன மேட்டிமையாலும் பரேலாகத்தின் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாததினாலும் அழிக்கப்பட்டான். இன்று பெல்ஷாத்சார் கடவுளுக்கு மேலாக தன்னை உயா்த்த முயன்று தோல்வியடைந்தார். இதன் விளைவாக, அவன் தேவனுடைய நியாத்தீர்ப்பாக தராசிலே நிறுக்கப்பட்டு, குறைவாய் காணப்பட்டான். நாம் ஒவ்வொருவரும் பதிலளிக்க வேண்டிய ஒரு முக்கிய கேள்வியை இது எழுப்புகிறது: கடவுளுக்கு முன் நான் எவ்வாறு தராசிலே நிறுக்கப்பட்டு அளவிடப்படுவேன் என்பதாகும் ?

மக்களின் பார்வையில் அல்ல, கடவுளின் பார்வையில், நான் எப்படி அளவிடப்படுவேன் என்பதே?

நாம் ஒருபோதும் மறக்கக் கூடாத விஷயம் என்னவென்றால், நாம் முதலில் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறவரின் முன் வாழ அழைக்கப்படுகிறோம், மனிதர்கள் முன் அல்ல. இது தெளிவாக நம் முன் உள்ள பிரச்சினை. கடவுள் நம்மைப் படைத்ததின் நோக்கத்திற்கும் அளவிற்கும் ஏற்றபடி நாம் வாழவேண்டும். தானியேல் போல் கறைபடாமல் வாழ்வதால் மட்டுமே நாம் கர்த்தரால் நிறுக்கப்படும் போது சரியாகக் காணப்படுவோம்.

banner image

ண்மையிலேயே உங்களுக்கு என்ன தேவை? என்று கடலின் ஆழத்திலிருந்து மேற்பரப்பு வரும்படி நீந்தி வரும் நிலையில் இருக்கும் போது டிவி விளம்பரம் கேட்க்கும் கேள்விகள் இவைகள், உங்களுக்கு மிகவும் அவசியமான தேவை எது? சுறா விரட்டி கருவியா ? நீச்சல் துடுப்புகளா? வலுமையான தசை சக்தியா? அதற்காக பதில்? உங்களுக்கு மிகவும் தேவை ஆக்ஸிஜன். இது இல்லாமல் நீங்கள் வாழ முடியாது கடலில் நீந்தவும் முடியாது.

இது இல்லாமல் நீங்கள் வாழ முடியாதது என்கிற காரியம் எது? இந்தக் கேள்வியை அடுத்து சந்திப்பவா் தானியேல்.

கிமு 538-ம் ஆண்டுவரை தானியேல் தன் வாழ்நாள் முழுவதையும் சிறைபிடிக்கப்பட்ட அடிமை என்ற நிலையில் அந்நிய நாட்டில் வாழ்ந்தாா். ஆனாலும் கடவுளால் உயா்த்தப்பட்டு 3 வது ராஜாவாகிய மேதியனாகிய தரியு அரசாட்சியில் முக்கியப் பதவியில் சேவை செய்யும் ஒரு முதியவராயிருந்தா்.

ஆறாம் அதிகாரம் தொடங்கும்போது, தரியு ராஜா பாபிலோனில் தனது இராஜாங்கத்தை அமைத்திருந்தார். தானியேல் முழு ராஜ்யத்தையும் ஆளும் ராஜாவின் மூன்று பிரதானிகளுள் ஒருவராக நியமிக்கப்பட்டார் (வ. 1-2). பிளவுபட்ட இராஜ்ஜியத்தின் (பாரசீக ராஜா கோரஸ் மற்றும் மேதிய ராஜா தாியுவினால்) மற்றும் இரட்டை அதிகாரத்தினால் இந்நாடு பலவீனமாகவும் மிகுதியான சிக்கலான காரியங்கள் உடையதாயும் காணப்பட்டது.

தரியு ராஜா தானியேலை உயர்த்தி, முழு ராஜ்யத்திற்கும் (வ.3) பிரதானியாக நியமிக்க முடிவு செய்தபோது, தானியேலுக்கு மீண்டும் சோதனைகள் காத்திருந்தன.

பொறாமையினால் வரும் பிரச்சினை (6:4-9)

(6:4-9) அப்பொழுது பிரதானிகளும் தேசாதிபதிகளும் ராஜ்யத்தின் விசாரிப்பிலே தானியேலைக் குற்றப்படுத்தும்படி முகாந்தரம் தேடினார்கள்; ஆனாலும் ஒரு முகாந்தரத்தையும் குற்றத்தையும் கண்டுபிடிக்க அவர்களால் கூடாதிருந்தது; அவன் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் அவன்மேல் சுமத்த யாதொரு குற்றமும் குறைவும் காணப்படவில்லை. அப்பொழுது அந்த மனுஷர்: நாம் இந்த தானியேலை அவனுடைய தேவனைப்பற்றிய வேதவிஷயத்திலே குற்றப்படுத்தும் முகாந்தரத்தைக் கண்டுபிடித்தாலொழிய அவனை வேறொன்றிலும் குற்றப்படுத்தும் முகாந்தரத்தைக் கண்டுபிடிக்கக்கூடாது என்றார்கள். பின்பு அந்தப் பிரதானிகளும் தேசாதிபதிகளும் கூட்டங்கூடி ராஜாவினிடத்தில் போய், அவனை நோக்கி: தரியு ராஜாவே, நீர் என்றும் வாழ்க. எவனாகிலும் முப்பது நாள்வரையில் ராஜாவாகிய உம்மைத்தவிர எந்த தேவனையானாலும் மனுஷனையானாலும் நோக்கி, யாதொரு காரியத்தைக்குறித்து விண்ணப்பம்பண்ணினால், அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்பட, ராஜா கட்டளை பிறப்பித்து, உறுதியான தாக்கீது செய்யவேண்டுமென்று ராஜ்யத்தினுடைய எல்லாப் பிரதானிகளும், தேசாதிபதிகளும், பிரபுக்களும், மந்திரிமார்களும், தலைவர்களும் ஆலோசனைபண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆதலால் இப்போதும் ராஜாவே, மேதியருக்கும் பெர்சியருக்கும் இருக்கிற மாறாத பிரமாணத்தின்படியே, அந்தத் தாக்கீது மாற்றப்படாதபடி நீர் அதைக் கட்டளையிட்டு, அதற்குக் கையெழுத்து வைக்கவேண்டும் என்றார்கள். அப்படியே ராஜாவாகிய தரியு அந்தக் கட்டளைப்பத்திரத்துக்குக் கையெழுத்து வைத்தான்.

தானியேலுக்கு கீழாகப் பணியாற்றிய அதிகாரிகள் அவனை விரும்பவில்லை அவனை வெறுத்தனா். எதிராக ஒரு குற்றச்சாட்டைக் கண்டுபிடிக்க முயன்றனர்; அவரை நீக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். மனமேட்டிமையினால் இது ஒரு அதிகாரப் போட்டியானது. தோல்வியுற்ற மேட்டிமையினால் அவர்களில் பொறாமை மலா்ந்தது.

சி. எஸ்.  லூயிஸ் இவ்வாறு எழுதியுள்ளா்:

அடிப்படையில் பெருமை என்பது போட்டிகளால் நிறைந்தது. பெருமை என்பது எதையாவது வைத்திருப்பதால் மகிழ்ச்சி அடைவதில்லை, அது அடுத்த மனிதனை விட அதிகமாக பெற்றுவிட வேண்டும் என்றே விரும்பும். பொதுவாக மக்கள் செல்வந்தர்களாக, புத்திசாலிகளாக, நல்லவர்களாக இருக்கும்போது பெருமிதம் கொள்கிறார்கள் என்று நாம் நம்புகிறோம், ஆனால் அப்படி இல்லை. அவர்கள் மற்றவர்களை விட பணக்காரர்கள், அல்லது புத்திசாலிகள் அல்லது சிறந்த தோற்றம் கொண்டவர்கள் என்றே பெருமிதம் கொள்கிறார்கள் (கிறித்தவம் மட்டுமே என்ற புத்தகத்தின், ப.122).

நேர்மையுள்ள ஒரு மனிதனின் உயர்வினால் இந்த பெருமைக்கார மனிதர்கள் காயப்படுகின்றனர் தாக்கத்திற்கு உள்ளாகி அவர்கள் அவனை அழிக்க விரும்புகிறாா்கள்.

அவர்கள் எப்படி தாக்குவார்கள்? தானியேல் மீது குற்றம் சாட்டுவதற்கான காரணங்களைத் தேடி, அவர் மீது எந்தக் குற்றத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏன்? ஏனெனில் “அவர் உண்மையுள்ளவராக இருந்தாா்” (வ.4). குறிப்பாக இது அவரது எதிரிகளிடமிருந்து வருகிற சிறந்த ஒரு சாட்சியாகும். கறை நிறைந்த சூழ்நிலையில் வாழ்ந்த போதிலும், தானியேல் குற்றமற்ற, தூய்மையான வாழ்வை மேற்கொண்டிருந்தார்.

இந்தக் குற்றமற்ற குணம் கொண்ட ஒருவரைத் தாக்குவதே ஒரு பிரச்சினைதான். எனவே தானியேல் வாழ்வில், அவா்களுக்கு பலவீனம் என அறியப்பட்ட அதாவது கடவுளிடம் அவர் கொண்டிருந்த பக்தி என்ற காரியத்தின் மூலம் தாக்கப்பட்டார். என்ன ஒரு சாட்சி! தானியேலைத் தாக்குவதற்கான ஒரே வழி கடவுளுடனான அவரது உறவைத் முறிப்பதாகும் என கண்டு கொண்டனா்.

தானியேலுக்கு கீழ் பணியாற்றிய இந்த அதிகாரிகள் சேர்ந்து சதி செய்து தரியு ராஜாவிடம் ஒரு கூட்டு விண்ணப்ப மனு கொடுத்தனர் (வ.6-7), தரியு அரசனின் பெருமை என்ற குணத்தின் வழியாக இந்த ஏமாற்று வேலையை ஆரம்பித்தனா். அடுத்த 30 நாட்களுக்கு தரியு ராஜாவைத் தவிர வேறு எந்த கடவுளிடமோ அல்லது மனிதரையோ வணங்க மற்றும் விண்ணப்பிக்கக் கூடாது என்று ஒரு சட்டத்தை உருவாக்குமாறு அவர்கள் அவரைக் ஏமாற்றி கேட்டுக்கொண்டனர். பாரசீகரான கோரேசுக்கு தரியு இரண்டாவது பிடில் வாசித்துக் கொண்டிருந்ததால், இந்த ஆணை அவரை ஒரு கடவுளின் நிலைக்கு உயர்த்தியது போலிருந்தது, மற்றும் கோரேஸால் மட்டுப்படுத்தப்பட்ட அவருக்கு தான் மேலானவன் என்ற உணர்வை அதிகரித்தது.

இந்த ஆணையை மீறினால் அந்த மனிதன் “சிங்கங்களின் கெபிக்குள் தள்ளப்படுவான்” (வ.7). இந்த அதிகாரிகளின் பொறாமைக்கு மட்டுப்பாடே இல்லை. அவா்கள் தானியேல் மரிக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.

தரியு ராஜா தனது ஆணையை உறுதிப்படுத்தினார் (வ.9), மேலும் இது “மேதியர் மற்றும் பாரசீகர்களின் சட்டம்” என்பதால், அதை திரும்பப் பெற முடியாது. ஆனால் இந்த கட்டளை ஏன் 30 நாட்களுக்கு மட்டுமே என மட்டுப்படுத்தப்பட்டது என்பதற்கான காரணம் என்னவெனில்; தானியேல் இறந்த பிறகு, அவர்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும் என்பதற்காகவே.

அடிப்படையில் தரியு ராஜா ஒரு நல்ல மனிதர் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால், நம் எல்லோரையும் போலவே அவருக்கும் சில பலவீனங்கள் இருந்தன. இந்தத் நெருக்கடியானத் தருணத்தில், தன் சுய பெருமையினால் அவசர அவசரமாக முடிவெடுத்து, மக்கள் அனைவரின் தனிப்பட்ட தொழுகையைத் தடைசெய்யும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்.

சாட்சியின் வல்லமை (6:10-11)

தானியேல் பரலோகத்தின் தேவனுக்கு பயந்து மிகவும் அர்ப்பணிப்புடன் அவருக்கே கீழ்படிந்திருந்தார், அநீதியான சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதை விட தேவனுக்கு கீழ்ப்படிவது மிக அவசியம் என்று அறிந்திருந்தாா். கீழ்ப்படிதல் மற்றும் கீழ்ப்படியாமை என்ற வேதாகமச் சத்தியத்தை இது விளக்குகிறது, இதில் நாம் கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதா அல்லது மனிதனுக்குக் கீழ்ப்படிவதா என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். புதிய ஏற்பாட்டில், கிறிஸ்துவை எங்கும் பிரசங்கிக்கக் கூடாது என கட்டளையிடப்பட்டபோது அப்போஸ்தலர்கள் கடைப்பிடித்த இந்தக் கொள்கையை நாம் காண்கிறோம். “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது” என்றார்கள் (அப்போ 5:29)

6:10 தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்.

தானியேல் தன் வழக்கத்தின்படியே ஜெபிப்பதன் மூலம் அநீதியான சட்டத்திற்குக் கீழ்ப்படியவில்லை. அசுத்தமான சூழ்நிலையிலும்கூட கறைபடாமல் தூய்மையான வாழ்க்கையின் ரகசியம் இதுதான். மக்கள் கூட்டத்தை திருப்திப்படுத்துவதற்காக தன்னை மாற்றிக் கொள்ளவோ அல்லது அனுசரிக்கவோ விரும்பாத அவர் தனது வழக்கமான ஜெப வாழ்வை மேற்கொண்டார்.

வ 11, அப்பொழுது அந்த மனுஷர் கூட்டங்கூடி, தானியேல் தன் தேவனுக்கு முன்பாக ஜெபம்பண்ணி விண்ணப்பம்செய்கிறதைக் கண்டார்கள்.

கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை மீற விரும்பாமல், தானியேல் இராஜாவின் சட்டத்தை மீறினார், அதனால் அவர் பிடிக்கப்பட்டார். ஆனால் நாம் கைது செய்யப்படுவோம் என்ற பயம் அவரைத் தடுக்கவில்லை. கடவுளுக்குக் கீழ்ப்படிவதால் ஏற்படும் விளைவுகளை ஏற்றுக்கொள்ள தானியேல் தயாராக இருந்தார். இது ஒரு கடினமான ஆனால் முக்கியமான பாடம். இதில் நாம் இரண்டு காரியங்களை நினைவில் கொள்ளவேண்டும்:

  • நோ்மையான காரியத்தைச் செய்வதால் வரும் விளைவுகளை ஏற்க நாம் தயாராக இருக்க வேண்டும். அப்போஸ்தலனாகிய பேதுரு சொன்னார், “நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து,” (1 பேதுரு 3:14).
  • நம்மை அநியாயமாக சிங்கங்களின் குகைக்கு நம்மை தள்ளினாலும், இன்னும் உலகம் கடவுளுடைய ஆளுகையின் கீழ்தான் உள்ளது என அறியவேண்டும்.

தானியேல் வழக்கத்தின்படி பரலோகத்தின் தேவனிடம் ஜெபித்து வந்ததால், அவர் நீதிக்காக பாடுபட்டார். இதன் மூலம் அவர் கடவுளை மகிமைப்படுத்தத் தயாராக இருந்தார்.

தேவனுடைய சமாதானம் (6:12-17)

வ 6:12-13. பின்பு அவர்கள் ராஜாவுக்கு முன்பாக வந்து, ராஜாவின் தாக்கீதைக்குறித்து: எந்த மனுஷனாகிலும் முப்பது நாள்வரையில் ராஜாவாகிய உம்மைத்தவிர எந்த தேவனையானாலும் மனுஷனையானாலும் நோக்கி யாதொரு காரியத்தைக்குறித்து விண்ணப்பம்பண்ணினால், அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்படவேண்டும் என்று நீர் கட்டளைப்பத்திரத்தில் கையெழுத்து வைத்தீர் அல்லவா என்றார்கள்; அதற்கு ராஜா: அந்தக் காரியம் மேதியருக்கும் பெர்சியருக்கும் இருக்கிற மாறாத பிரமாணத்தின்படி உறுதியாக்கப்பட்டதே என்றான். அப்பொழுது அவர்கள் ராஜாவை நோக்கி: சிறைபிடிக்கப்பட்ட யூதேயாதேசத்தின் புத்திரரில் தானியேல் என்பவன் உம்மையும் நீர் கையெழுத்து வைத்துக்கொடுத்த கட்டளையையும் மதியாமல், தினம் மூன்று வேளையும் தான் பண்ணும் விண்ணப்பத்தைப் பண்ணுகிறான் என்றார்கள்.

நிச்சயமாக இந்த மனிதர்கள் தந்திரசாலிகள். முதலாவதாக, அவர்கள் மாற்ற முடியாத கட்டளையை தரியு ராஜாவிற்கு நினைவூட்டினர். பின்னர் உண்மையும், அவதூறும் கலந்த குற்றச்சாட்டை முன்வைத்து தங்கள் தாக்குதலை நடத்த ஆரம்பித்தனா். தானியேல் ராஜாவைப் புறக்கணிக்கவில்லை, ஆனால் தான் வணங்கும் கடவுளைப் புறக்கணிக்க மறுத்துவிட்டார்.

வ 14, 15. ராஜா இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன்னில் மிகவும் சஞ்சலப்பட்டு, தானியேலைக் காப்பாற்றும்படிக்கு அவன்பேரில் தன் மனதை வைத்து, அவனைத் தப்புவிக்கிறதற்காகச் சூரியன் அஸ்தமிக்குமட்டும் பிரயாசப்பட்டுக்கொண்டிருந்தான். அப்பொழுது அந்த மனுஷர் ராஜாவினிடத்தில் கூட்டமாய் வந்து: ராஜா கட்டளையிட்ட எந்தத் தாக்கீதும் கட்டளையும் மாற்றப்படக்கூடாதென்பது மேதியருக்கும் பெர்சியருக்கும் பிரமாணமாயிருக்கிறதென்று அறிவீராக என்றார்கள்.

தரியுவின் மாறுத்திரம், இறுதியாக என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொண்டதைக் காட்டுகிறது. ஏனென்றால் அவர் “தன்னைப் பற்றி மிகவும் அதிருப்தியடைந்தார்.” அவருடைய இந்த மோசமான தீர்ப்பிற்காக மேலும் வருத்தப்பட்டார். அவர் தானியேலின் மீதோ அல்லது தானியேல் கடவுளிடம் செய்த ஜெபத்தைக் குறித்தோ அதிருப்தி அடையவில்லை, மாறாக அவரது சொந்த பெருமையினால் வந்த இந்தக் காரியத்தைக் குறித்து அதிருப்தி அடைந்தாா்.

ஞானமற்ற தன் கட்டளையின் விளைவுகளை தானியேல் அனுபவிப்பதை விரும்பாததால் தாியு ராஜா அவனுடைய விடுதலையையே விரும்பினாா் (வ.14). அவர் இந்த சட்டத்தில் ஏதாவது ஓட்டை இருக்கிறதா எனத் தேடினார், ஆனால் எதுவும் இல்லை. தனது செயல்களின் தாக்கத்தைப் பார்த்த அவர், தான் மிகவும் தாமதமாக இதைக் கண்டுகொண்டதாக உணர்ந்தார். உண்மையில், தரியு தனது சொந்த சட்டத்தின் பிடியில் சிக்கினார் (வ.15). தப்பிக்க வழி இல்லாதபடியால் தானியேலுக்கு மரணதண்டனையாக சிங்கக் கெபியில் இடவேண்டியதாயிற்று.

வ 16, 17. அப்பொழுது ராஜா கட்டளையிட, அவர்கள் தானியேலைக் கொண்டுவந்து, அவனைச் சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள்; ராஜா தானியேலை நோக்கி: நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார் என்றான். ஒரு கல் கெபியினுடைய வாசலின்மேல் கொண்டுவந்து வைக்கப்பட்டது; தானியேலைப்பற்றிய தீர்மானம் மாற்றப்படாதபடிக்கு ராஜா தன் மோதிரத்தினாலும் தன் பிரபுக்களின் மோதிரத்தினாலும் அதின்மேல் முத்திரைபோட்டான்.

தானியேல் வழக்கத்தின்படி பரலோகத்தின் தேவனிடம் ஜெபித்து வந்தக் குற்றத்திற்காக பாடுபட்டார் (வ.16) சட்டத்தின்படி குற்றவாளியாகக் கண்டறியப்பட்டதால், தானியேல் சிங்கங்களின் கெபிக்குள் தள்ளப்பட்டார். கைதிகளை கடித்துக் குதறி சித்திரவதை செய்வது மரணமடையச் செய்வதற்காக இந்த சிங்கங்கள் அங்கு இருந்தன. அவைகள் பொதுவாக பட்டினி போடப்பட்டு, மற்றும் மோசமாக நடத்தப்படுவதால் கோபமூட்டப்பட்டிருக்கும், இதனால் சிங்கங்கள் கெபியில் போடப்படும் மனிதனை துண்டு துண்டாக பீறி தின்றுவிடும்,

தரியு இந்த தண்டனையால் விரக்தியுற்ற நிலையில் தானியேலின் மரணதண்டனையில் இருந்து காப்பாற்ற வாஞ்சையோடிருந்தாா் (வ.16). பின்னர் கெபி பெரிய கல்லால் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது (வ.17).

சிங்கக் கெபிக்குள் போடப்பட்டு, கல் சீல் வைக்கப்பட்டவுடன் என்ன நடந்ததிருக்குமென நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஒரு வேதஅறிஞர் குறிப்பிடுகிறார், தானியேல் கெபியின் தரையை அடைந்தவுடன் சிங்கங்களால் அவர் சூழப்பட்டாா். அவைகள் அந்தக் கெபியின் குளிர்ந்த இரவுக்கு வெப்பத்தையும் தேறுதலையும் அளிக்க அவனைச் சுற்றிலும் அமைதியாக படுத்துக்கொண்டன!

கடவுள் தரும் பாதுகாப்பு (6:18-23)

தானியேல் சிங்கங்களுடன் நிம்மதியாகத் தூங்கியபோது, தரியுவுக்கு மிகவும் வித்தியாசமான தூக்கமற்ற கடினமான இரவாயிருந்தது. இது தெளிவான மனசாட்சிக்கும் (தானியேலின்) மற்றும் குற்ற உணா்வால் நிறைந்த (தரியுவின்) இதயத்திற்கும் இடையிலான வேறுபாட்டை எடுத்துக்காட்டுகிறது.

பின்பு ராஜா தன் அரமனைக்குப்போய், இராமுழுதும் போஜனம்பண்ணாமலும், கீதவாத்தியம் முதலானவைகளைத் தனக்கு முன்பாக வரவொட்டாமலும் இருந்தான்; அவனுக்கு நித்திரையும் வராமற்போயிற்று (வ.18).

தரியு ராஜாவின் தனது அதிகாரிகளின் தீய சதியைப் புரிந்துகொள்ளத் தவறியதால் அவன் கவலை, குற்றவுணர்ச்சி, தூக்கமின்மை, பசியின்மை போன்ற விளைவுகளைச் சந்தித்தான். எனவே, அரசன் எழுந்து சிங்கங்களின் கெபிக்கு அருகே சென்றான்.

வ 6:20-23 ராஜா கெபியின் கிட்டவந்தபோது, துயரசத்தமாய்த் தானியேலைக் கூப்பிட்டு: தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவரா யிருந்தாரா என்று தானியேலைக் கேட்டான். அப்பொழுது தானியேல்: ராஜாவே, நீர் என்றும் வாழ்க. சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்கு தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றான். அப்பொழுது ராஜா தன்னில் மிகவும் சந்தோஷப்பட்டு, தானியேலைக் கெபியிலிருந்து தூக்கிவிடச் சொன்னான்; அப்படியே தானியேல் கெபியிலிருந்து தூக்கிவிடப்பட்டான்; அவன் தன் தேவன் பேரில் விசுவாசித்திருந்தபடியால், அவனில் ஒரு சேதமும் காணப்படவில்லை.

தூக்கமில்லாத இரவுக்குப் பிறகு, ராஜாவாகிய தாியு என்ன நடந்தது என்று பார்க்கச் கெபிக்குச் சென்றார். கெபிக்குள் மனிதா்கள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லாத நிலையில், கிட்டத்தட்ட பரிதாபமாயிருந்த அவர் தானியேலை பெயா் சொல்லி அழைத்தார். இந்த வார்த்தைகளில் தானியேலின் வாழ்க்கையின் மூலம் தாியு ராஜா பெற்ற ஆழமான தாக்கத்தை நாம் காணலாம்: “ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா என்று தானியேலைக் கேட்டான்”. இந்த வாா்த்தைகள் மிக ஆச்சரியத்தோடு தாியு ராஜாவிற்கு ஜீவனுள்ள தேவன் மீதுள்ள நம்பிக்கையையும் காட்டுகிறது. கெபியின் இருளில் இருந்த தானியேல் உண்மையில் கடவுள் தன்னைப் பாதுகாத்தார் என்ற அமைதியான, நம்பிக்கையான பதிலைக் கொடுத்தாா்.

தன் தேவன் பேரில் விசுவாசித்திருந்தபடியால், தானியேலுக்கு ஒரு சேதமும் காணப்படவில்லை வ 6:23. தானியேலின் விசுவாசமே “சிங்கங்களின் வாயை கட்டியது” என்றும் எபிரெயர் 11:33 நமக்குச் கூறுகிறது. எபிரெயர் 11:35-40 குறிப்பிடுவது போல, அவருடைய பிள்ளைகளை விடுவிப்பது எல்லா நேரங்களிலும் கடவுளுடைய சித்தம் அல்ல. ஆரம்பகால திருச்சபையில், சொல்லப்படாத ஆயிரக்கணக்கான இரத்தச் சாட்சிகள் சிங்கங்களுக்கு உணவாக கொடுக்கப்பட்டு நித்தியத்திற்கு சென்றனர். ஆனால் கடவுள் எந்த ஒரு குறிப்பிட்ட தருணத்திலும் காப்பாற்றினாலும், காபாற்றாமல் பாடுகளை அனுபவிக்க அனுமதித்தாலும், அவருடைய விடுவிக்கும் வல்லமை ஒருபோதும் குறைவதில்லை. அவர் எப்போதும் வல்லமை உடையவரே.

தரியுவின் கட்டளைகள் (6:24-28)

வ 6:24. தானியேலின்மேல் குற்றஞ்சாற்றின மனுஷரையோவென்றால், ராஜா கொண்டுவரச்சொன்னான்; அவர்களையும் அவர்கள் குமாரரையும் அவர்கள் மனைவிகளையும் சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள்; அவர்கள் கெபியின் அடியிலே சேருமுன்னே சிங்கங்கள் அவர்கள்மேல் பாய்ந்து, அவர்கள் எலும்புகளையெல்லாம் நொறுக்கிப்போட்டது.

எஸ்தரின் புஸ்தகத்தில் உள்ள ஆமான் தான் உண்டாக்கின தூக்குமரத்தில் தூக்கிலிடப்பட்டதைப் போலவே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிங்கங்களின் கெபிக்குள் தள்ளப்பட்டனர், அங்கு அவர்கள் தானியேலுக்கு நினைத்த தண்டனையை தாங்கள் அனுபவித்தனர்.

வ 6:25-27. பின்பு ராஜாவாகிய தரியு தேசமெங்கும் குடியிருக்கிற எல்லா ஜனங்களுக்கும், ஜாதியாருக்கும் பாஷைக்காரருக்கும் எழுதினது என்னவென்றால்: உங்களுக்குச் சமாதானம் பெருகக்கடவது. என் ராஜ்யத்தின் ஆளுகைக்குள் எங்குமுள்ளவர்கள் யாவரும் தானியேலின் தேவனுக்கு முன்பாக நடுங்கிப் பயப்படவேண்டுமென்று என்னாலே தீர்மானம்பண்ணப்படுகிறது; அவர் ஜீவனுள்ள தேவன், அவர் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவர்; அவருடைய ராஜ்யம் அழியாதது; அவருடைய கர்த்தத்துவம் முடிவுபரியந்தமும் நிற்கும். தானியேலைச் சிங்கங்களின் கைக்குத் தப்புவித்த அவரே தப்புவிக்கிறவரும் இரட்சிக்கிறவரும், வானத்திலும் பூமியிலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கிற வருமாயிருக்கிறார் என்று எழுதினான்.

இது நேபுகாத்நேச்சார் தானியேலின் தேவன் மீது செய்த விசுவாச அறிக்கை விட மிகவும் வலுவான விசுவாச அறிக்கையாகும் (4:34-35,37).

இவ்வாறு தானியேலின் உயா்வை அங்கீகரிப்பதோடு இக்கதை முடிகிறது:

தரியுவின் ராஜ்யபார காலத்திலும், பெர்சியனாகிய கோரேசுடைய ராஜ்யபாரகாலத்திலும் தானியேலின் காரியம் ஜெயமாயிருந்தது. (வ.28)

தானியேல் சங்கீதம் 1:3 ன் வசனங்களுக்கு சாட்சியாக இருந்தார், ” அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்”. தேவன் தானியேலை உண்மையிலேயே ஆசீர்வதித்தார்.

நடைமுறைப்படுத்து

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கதையைப் படிக்கும்போது, அதன் விளைவு நமக்குத் தெரியும். ஆனால் தானியேலுக்கு அப்படியல்ல. அவர் கடவுளின் வல்லமையை அறிந்திருந்தார், ஆனால் கடவுளின் செயல் திட்டத்தை அவர் அறிந்திருக்கவில்லை. தன்னுடைய கடவுளை மகிமைப்படுத்தவே தான் வாழ விரும்புகிறேன் என்பதை மட்டுமே அவர் அறிந்திருந்தார். எப்படியெனில் தானியேல், அவருடைய காலத்தில் மிகவும் வல்லமை மிக்க இராஜாக்களுக்கு அடிபணியாமல் கடவுளுக்கு மட்டுமே கீழ்ப்படிந்து வாழ்ந்தாா்.

பரலோகத்தின் தேவனிடம் தன் இருதயத்தை வெளிப்படுத்தாமல் தன்னால் உயிர்வாழ முடியாது என்பதையும் தானியேல் அறிந்திருந்தார். ஆவிக்குரிய மனிதன் உயிா்வாழ கடவுளுடைய வார்த்தையே பால், இறைச்சி மற்றும் அப்பமாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஜெபமே நம் உயிா்மூச்சு, நீங்கள் உணவு இல்லாமல் நீண்ட காலம் வாழ முடியும், ஆனால் மூச்சு இல்லாமல் சில நிமிடங்களுக்கு மேல் உயிர்வாழ முடியாது. அந்த அளவுக்கு ஜெபம் முக்கியத்துவத்தைப் பெறுகிறது. ஆனால், நம் வாழ்க்கையில் ஜெபத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோமா? மதச்சார்பற்ற சமுதாய கலாச்சாரத்தின் மத்தியில் ஆவிக்குரிய வாழ்க்கையின் சாராம்சம் இதுதான்.

banner image

கிறிஸ்தவ செய்தியாளா் இ. எம். பவுண்ட்ஸ் இவ்வாறு எழுதியுள்ளார், “திருச்சபை சிறந்த வழிமுறைகளைத் தேடுகின்றது; ஆனால் தேவன் சிறந்த மனிதர்களைத் தேடுகிறார்” (ஜெபத்தின் மூலம் வல்லமை, ப.9).

தானியேலின் வாழ்க்கை வரலாறு நமக்கும் அதே செய்தியைத்தான் கூறுகிறது. நாம் பாபிலோன் போன்ற உலகில் வாழ்கிறோம். நம்மைச் சூழ்திருப்பது, எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் மற்றும் தொடர்ந்து சீரழிந்து கீழ்நிலைக்குச் செல்லும் கலாச்சாரமாகும். ஆனால், இப்படிப்பட்ட உலகத்தில் வாழும் நாம் நம் தலைமுறையின் தானியேல்கள் என்று அழைக்கப்படுகிறோம். நாம் நம் கலாச்சாரத்தின் அச்சுக்குள் ஊற்றப்பட்டு அவைகளைப் போல் மாறலாம், அல்லது தானியேலைப் போல, இந்த உலகிலுள்ள இருளை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி நாம் கடவுளின் ஒளியைப் பிரதிபலிக்கலாம்,

இப்படிபட்ட தேர்வுசெய்யும் வாய்ப்பு நம் முன் உள்ளதால், தேவனுடைய பிள்ளைகளான நாம் நம் தலைமுறையில் கடவுளுக்கு எப்படி பணியாற்ற முடியும்? பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்துவதற்காக வாழத் துணிந்திருந்த தானியேலின் வாழ்க்கை நமக்கு நல்ல மாதிரி மட்டுமல்ல அவா் விட்டுச் சென்ற அடிச்சுவடாகும்,

தானியேலின் கடவுளின் ஆவியின் உதவியால் நீங்கள் இன்னும் வாழத் தொடங்கவில்லை எனினும் இது சாத்தியமே. இப்படிப்பட்ட வாழ்வை இன்னும் ஆரம்பிக்கவில்லை என்றால், புதிய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சந்திக்கலாம். சுவிசேஷ எழுத்தாளர்கள் எழுதிய வசனங்களின்படி, தானியேலின் தேவன் தம்முடைய திருக்குமாரனை உலகிற்கு இரட்கராக அனுப்பினாா். இயேசு மூன்று ஆண்டுகளின் ஊழிய வாழ்விற்குப்பின், நம்முடைய பாவங்களுக்காக ஜீவ பலியாக தன்னைக் கொடுத்து, சிலுவை மரணம் மூலம் நமக்கு பாவமன்னிப்பை சம்பாதித்தாா். மரித்த அவா் 3ம் நாள் உயிரோடே எழுந்தாா். இன்று நம் இயலாமையையும் பாவத்தையும் அறிக்கையிட்டு அதனின்று விடுதலை பெற, அவரை நம்பி அவரண்டை வரும்போது அவர் இலவசமாக பாவமன்னிப்பை ஈவாக தருகிறாா், இதுவரை நீங்கள் உங்கள் இருதயத்தை அவருக்கு திறக்காமல் இருந்தால், அப்போஸ்தலன் யோவான் தன் சுவிசேஷத்தில் 3:16ல் கூறியுள்ள இந்த வாக்குத்தத்த வசனத்தின்படி அவருடைய பிள்ளை என்ற சிலாக்கியத்தையும் அவா் தரும் நித்திய வாழ்வையும் பெற்றுக் கொள்ளலாம்.

அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார் (யோவான் 3:16.)

 

banner image