தேவனோடு ஆழமான உறவை வளர்ப்பது எப்படி!

நாம் தனிமையில் இருக்கும்போது நமது பாரங்களைப் பகிர்ந்துகொள்ளவும் அல்லது ஆறுதல்படுத்தப்படவும் யாரேனும் ஒருவர் நம் இதயத்தில் உள்ளதை இயேசுவிடம் சொல்வதை விரும்புகின்றோம். ஆனால் நாம் எப்படி இயேசுவின் நண்பர்களாக இருக்கிறோம் என்பதைப் பற்றி எத்தனை முறை நினைக்கின்றோம்? அவரிடமிருந்து பெற்றுக்கொள்வது என்ற மேலோட்டமான உறவைத் தாண்டி அவருடன் அந்த ஆழமான நெருக்கத்தை வளர்த்துக்கொள்வது எப்படி?

எல்லா சூழ்நிலைகளிலும், கைகளைத்தட்ட இரண்டு கைகள் தேவை. தேவனை ஒர் பரிபூரணமான, நிலையான நண்பராக எண்ணி நாம் வளரும்போது, அவருடன் இன்னும் ஆழமாக வளர்வது எப்படி என்பதை அறிய உதவும் சில ஆலோசனைகள் இங்கே உள்ளன.

    1. நம் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் தேவனை அழைக்கவும்

    2. தேவனை அறிந்துகொள்ளவும் செயல்படவும் நேரம் ஒதுக்குங்கள்

    3. தேவன் நம்மிடம் எவ்வளவு கணிவுடனிருக்கிறார் என்பதைனை நினைவில்கொள்ளுங்கள்

    4. அவருடைய ஆலோசனையை வெளிப்படையாகவும் விருப்பத்துடனும் பெற்றுக்கொள்ளுங்கள்

    5. தேவனுடைய பணியில் அவருடன் சேருங்கள்

1. நம் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் தேவனை அழைக்கவும்

யோவான் 15:15ல் இயேசுவைப் பின்பற்றுகிறவர்களாகிய நம்மை அவர் ஊழியக்காரர்கள் என்று சொல்லாமல் சிநேகிதர் என்று அழைக்கிறார்; மேலும் அவர் “பிதாவிடமிருந்து கற்றுக்கொண்ட அனைத்தையும்” பகிர்ந்துகொள்கிறார்.

தேவன் நம்மை வழிநடத்துவது-போலவே நமது எண்ணங்க-ளையும் யோசனை-களையும் அவரே செயல்படுத்த ஒப்புக்கொடுப்-போம்.

இத்தகைய நெருக்கமான உறவைதான், அதாவது, அவரது “உள் வட்டத்தின்” ஒர் பகுதியாக இருப்பது மற்றும் தேவனின் திட்டங்களை நேரடியாக அணுகுவது போன்றதான காரியங்களையே அவர் நம்மிடம் எதிர்ப்பார்க்கிறார் என்றால் நாம் நமது திட்டங்களை உருவாக்கும் முடிவுக்கு அவரை அழைப்பதைவிட நாம் அவருக்கு நண்பராக இருப்பதற்கான சிறந்த வழி என்ன?

தேவனை நாம் நண்பராகப் பார்ப்பது என்பது பிரச்சனையின்போது அல்லது நமது திட்டங்களை நிறைவேற்றும் தருவாயில் இருக்கும்போது (பின்னர் அவர்களை ஆசீர்வதிக்கும்படி அவரிடம் கேட்பது) மட்டும் அவரிடம் செல்வதற்காக அல்ல. அவருடைய ஆலோசனையைப் பெற்று நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் அவரே செயல்படும்படி “நம்முடைய எல்லா வழிகளிலும்” அவருக்குக் கீழ்ப்படிவோம் (நீதிமொழிகள் 3:5-6). அப்பொழுது நாம் எல்லா காலத்திலும் அவருடன் நெருக்கமாக நடந்து நீதியின் பாதைகளில் நிலைத்திருப்போம்.

2. தேவனை அறிந்துகொள்ளவும் செயல்படவும் நேரம் ஒதுக்குங்கள்

நம் வாழ்வின் ஒவ்வொரு நாளின் சிறப்பம்சங்களையும் நமது நண்பருடன் பகிர்ந்து கொள்வதுபோலவே தேவனுடனும் செய்யலாம். ஓர்நாளில் எப்போதெல்லாம் சிறிய சந்தோஷங்களை நாம் அனுபவிக்கின்றோமோ அவற்றில் அவரது கரத்தின் கிரியைகளைப் பார்க்கலாம், அல்லது நாம் தியானித்துக்கொண்டிருக்கும் வேத வசனம் நிறைவேறுவதனைப் பார்க்கலாம், அல்லது அவரது யோசனைகள் ஒன்றாகக் கூடிவருவதைக் காணலாம். அந்த தருணங்களை தேவனுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அவ்வாறு செய்யும்போது அவர் நமக்கு அளித்திருக்கும் ஆசீர்வாதங்கள் நமது மகிழ்ச்சியை மேலும் பூரணப்படுத்துகிறது.

அவருடைய ஆசீர்வாதங்களை அனுபவிப்பதோடு நின்றுவிடாமல் கொடுப்பவரையே மென்மேலும் உண்மையாக அறிந்துகொள்ள நேரத்தையும் முயற்சியையும் எடுத்துக்கொள்-வோம்.

ஆனால் அவர் நமக்குக் கொடுத்துள்ள நல்ல வரங்களை அனுபவிப்பதோடு மட்டுமல்லாமல் யாத்திராகமம் 33:13, ல் மோசே கூறிய “உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்” என்ற வாஞ்சையை பிரதிபலிக்க வேண்டும்.

நாம் அவரை அறிந்துகொள்ளவும் அவருடைய தயவைத் தொடர்ந்து காணவும் அவருடைய வழிகளை நமக்குக் கற்றுக்கொடுக்கும்படி கர்த்தரிடம் கேட்போம். அவர் அவ்வாறு செய்யும்போது அவருடைய வார்த்தையை நம் இதயங்களில் பொக்கிஷமாக வைத்து நம் போக்கையும் செயல்களையும் வழிநடத்த அனுமதிப்போம். அவருடன் எவ்வளவு நேரம் செலவிடுகிறோமோ அவ்வளவு அதிகமாக அவருடனான நட்பு நம் இதயங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் (சங்கீதம் 37:4).

3. தேவன் நம்மிடம் எவ்வளவு கணிவுடனிருக்கிறார் என்பதைனை நினைவில்கொள்ளுங்கள்

ஒர் நல்ல நண்பர் உங்களை ஏமாற்றினால் அல்லது உங்களால் புரிந்துகொள்ள முடியாத ஒர் முடிவை எடுத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

தேவனுடைய திட்டங்களை நம்மால் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் அவரைவிட்டு அலைந்து-திரியாமல், உள்ளான தியாகத்தோடு நேசிக்க முயல்வோம்.

நாம் அனைவரும் தேவனுடன் இந்த தருணங்களை வைத்திருக்கிறோம்-நமது நெருக்கத்தின் நேரங்களில் அவர் ஏன் ஒர் குறிப்பிட்ட வழியில் செயல்பட்டார் என்பதனைப் புரிந்துகொள்ள போராடும்போது அல்லது நாம் தேர்ந்தெடுக்காத பாதையில் அவர் நம்மை வழிநடத்தும்போது நாம் அவரைக் கைவிடுவோமா அல்லது அவரை இன்னும் உறுதியாக ஆழமாக நேசிக்கத் தேர்ந்தெடுப்போமா?

இதனைப்போன்ற சமயங்களில் முதலில் நாம் யாருடன் தொடர்புகொள்கிறோம் என்பதை நினைவில்கொள்வது அவசியம். நம்மைப் போன்று பாவத்தில் உலர்ன்ற மனித நண்பர்களைப் போலல்லாமல் இயேசுவை நோக்கவேண்டும். அவர் நம்மைப் போன்ற மனிதராக இருந்தாலும் எந்த பாவமும் இல்லாதவர். அவர் நம்மைப் போலவே எல்லா வழிகளிலும் சோதிக்கப்பட்டு நம்முடைய பலவீனங்களை ஏற்றுக்கொண்டு நமக்கு ஒர் சிறந்த வழியைக் காட்டக்கூடிய பிரதான ஆசாரியர் (எபிரெயர் 4:15).

இந்த வாழ்க்கையின் சோதனைகள் துன்பங்கள் மற்றும் பின்னடைவுகளின் மத்தியிலும் நாம் அவருடன் நடக்கும்போது அவர்மீது மட்டுமே நம் நம்பிக்கையை வைக்க முடியும் என்பதை அறிந்துகொள்கிறோம்.

4. அவருடைய ஆலோசனையை வெளிப்படையாகவும் விருப்பத்துடனும் பெற்றுக்கொள்ளுங்கள்

நீங்கள் எப்போதாவது ஒர் நண்பர் உங்களுக்கு அனுப்பிய செய்தி கொஞ்சம் ஆழமாகச் சென்று காயங்களை அளித்து உங்களை தவறாக வெளிக்காட்டும் சமயங்களில் ப்ளூ டிக் செய்திருக்கிறீர்களா (நீதிமொழிகள் 27:6). குறிப்பாக அநீதி என்றுணரப்பட்ட தருணங்களில், சுயநலத்துடன் கூடிய போராட்டம் அல்லது உங்கள் முடிவுகளில் இருந்து ஏமாற்றங்களை செயலாக்குகிறீர்களா? இதேபோல் நாம் தேவனை “மாய்மாலம்” செய்ய வஞ்சிக்கப்படுவதால் அவருடைய அறிவுரைக்கு செவிசாய்க்க வேண்டியதாய் இல்லாமல் நமது காயங்கள் அல்லது இரகசிய பாவங்களைத் தொடர முயற்சிக்கிறோம்.

தேவனுடைய சத்தத்துக்கு நம் இதயங்களை கடினப்படு-த்தாமல் நாம் எப்போதும் அவருடன் நடப்போம்.

உண்மையான நண்பர்களின் இயல்பு இதுதான். நாம் தாங்க முடியாத மற்றும் விரும்ப்படாத சமயங்களில் கூட அவர்கள் நம்முடன் இருப்பார்கள். ஆனால் நம்மைப் பாரப்படுத்தும் விஷயங்களை விட்டுவிட்டு உண்மையான விடுதலையோடு நடக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் (எபிரெயர் 12:1).

தேவனுடைய குரலுக்கு நம் இதயங்களை கடினப்படுத்த வேண்டாம் (எபிரேயர் 3:12-14); அல்லது அவர் நம்மிடம் கேட்பது மிகவும் கடினமானது என்று நாம் உணரும்போது அவரைவிட்டு விலகவேண்டாம். அந்த தருணங்களில் தேவனுடைய இருதயத்தைப் புரிந்துகொண்டால் நமது சுய அழிவின் பாதைகளிலிருந்து நம்மை மீட்க அவர் விரும்புகிறார் என்பதனையும் மனந்திரும்புவதற்கு வழிவகுக்கும் இரக்கத்தைக் காணவும் நமக்கு உதவுகிறது (ரோமர் 2:4).

5. தேவனுடைய பணியில் அவருடன் சேருங்கள்

நம்மில் அநேகர் யோவான் 15:4, -ல் உள்ள இயேசுவின் இந்த வார்த்தைகளின்படி வாழ போராடுகின்றோம். “நான் உங்களுக்குக் கட்டளையிடுவதை நீங்கள் செய்தால் எனக்கு நண்பர்களாயிருப்பீர்கள்”. ஏனென்றால் அவர் நம்மை கீழ்ப்படிதலுக்கு அழைக்கிறார் என்பதை அறிந்திருந்தாலும், அவை நமது வசதி வாய்ப்புகளுக்கேற்றார்போல் இல்லாமல் அவருடனான நமது உடன்படிக்கை உட்பட்டிருக்கிறது (சங்கீதம் 25:14).

அவருடைய பாரத்தில் பங்குகொண்டு தொலைந்த, உடைக்கப்பட்ட இதயம் மற்றும் ஒடுக்கப்பட்ட-வர்களை நம் பரலோகத் தகப்பனிடம் ஒப்புரவாக்க அவர் உடன்பங்காளி-களாய் இருப்போம்.

ஆனால் இந்த கீழ்ப்படிதலையும் நட்பையும் ஒர் பாக்கியமாக எண்ணி தேவனின் இதயத்தையும் நமக்கான திட்டங்களையும் புரிந்துகொள்வதற்கான ஒர் வழியாக நாம் பார்த்தால் என்ன செய்வது (யோவான் 15:15)? நாம் விரும்பும் ஒர் செயலைச் செய்யும் நண்பருடன் நேரத்தைச் செலவிடுவது நட்புக்கு இன்பத்தைத் தருவதுபோல் தேவனுடனான நட்பில் ஆழ்ந்த மகிழ்ச்சியை வளர்த்துக்கொள்ள அவருடன் நடப்பதையும் அவரது உடன்பங்காளியாக வாழ்வதையும்விட சிறந்த வழி எதுவுமில்லை.

இயேசுவின் பணி தெளிவாக உள்ளது: எல்லா மனிதர்களையும் தேவனின் ஆச்சரியமான ஒளியினிடத்தில் இழுத்து நம்மை பிதாவுடன் ஒப்புரவாக்க வேண்டும் என்பதே (2 கொரிந்தியர் 5:18-20). அவருடைய பணியின் ஒரு பகுதியாக இருப்பது (மத்தேயு 25:40) என்பது நமக்கு அசௌகரியத்தை உண்டாக்கும் காரியங்களைச் செய்வதைக் குறிக்கலாம்; அதாவது கடவுளின் இதயத்திற்கு மிக நெருக்கமானவர்களுடன் நட்புகொள்வது – இருதயம் உடைக்கப்பட்டவர்களுடன் (சங்கீதம் 38:14), நம்மிடம் இருப்பதை ஏழைகளுடன் பகிர்ந்துகொள்வது (நீதிமொழிகள் 19:17), அல்லது ஒதுக்கப்பட்டவர்களுக்காக பேசுவது (நீதிமொழிகள் 31:8-9).

ஆனால் அவ்வாறு செய்வது அவருக்கு நம்மீதுள்ள கருணையின் அளவைப் புரிந்துகொள்ள உதவுகிறது. அவர் எவ்வளவு பரிசுத்தமானவர், நாம் எவ்வளவு பாவம் மற்றும் உதவியற்றவர்கள் என்பதை இது நமக்கு நினைவூட்டி ராஜாதி ராஜா நம்மீது தனது அன்பையும் நட்பையும் நீட்டிக்க விரும்புவது எவ்வளவு அற்புதமானது என்பதனை உணர்த்துகிறது. நம்பிக்கையற்றவர்களின் இதயங்களில் கடவுளின் நம்பிக்கையை நாம் கொண்டு செல்லும்போது அவருடைய அன்பின் தாராளமான வெளிப்பாட்டிற்கு நன்றியுள்ள இதயத்தைத் வெளிக்காட்டுகின்றது.


மாற்றாக நீங்கள் மற்ற ஆண்களையும் தந்தையர்களையும் ஊக்குவிக்க விரும்பினால் உங்கள் மின்னஞ்சல் இன்பாக்ஸிற்கு அனுப்பப்படும் எங்களின் தினசரி மின்-பக்திகளுக்கும் பதிவு செய்யலாம்.
இங்கே பதிவு செய்யவும்

 

banner image