அறிமுகம்

ந்த ஒரு நல்ல செயலும் தண்டிக்கப்படாமல் போவதில்லை என்ற எதிா்மறையான அவநம்பிக்கயோடு ஒத்துப்போகும்படி நாம் அடிக்கடி சூழ்நிலையால் சோதிக்கப்படுகிறோம். நடந்தவைகளைத் திரும்பி பாா்க்கும்போது வாழ்வின் அனுபவத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் நாம் பாா்க்கிற நியாயமற்ற நிலை, சமத்துவமின்மை மற்றும் அநீதியால் கசப்படைகிறோம்.

நீதி எங்கே? கடவுளை சாராமல் அவரை கனம்பண்ணாதவா்களுக்கு வாழ்க்கையில் நடக்கும் காரியங்கள் அனுகுலமாகவே இருப்பதாகத் தோன்றும்போது, நாம் எப்படி கடவுளில் நம்பிக்கை வைக்க முடியும்?

அடுத்து வரும் பக்கங்களில் பில் கிரவுடர் அநீதியை பாா்த்த ஒரு மனிதன் கிட்டத்தட்ட தனது நம்பிக்கையிலிருந்து விலகிச் சென்ற போராட்டங்கள் வழியாக நம்மை அழைத்துச் செல்கிறார்.

மார்ட் டிஹான்

உள்ளடக்கம்

banner image

“இது நியாயமல்லை! ” என ஒரு சிறு பையன் அடம் பிடித்து அழுததற்குக் காரணம், அவன் நண்பன் வைத்திருக்கும் அதே விளையாட்டு பொருளை நீ பெற முடியாது என அப்பா, அம்மா கூறியதால்தான்.

வாழ்க்கையில் எல்லாமே விரும்புகிற வண்ணம் நியாயமாக இருப்பதில்லை. நாம் குழந்தைகளிடம் வாழ்க்கை நியாயமானதல்ல என்று சொல்கிறோம், ஏனென்றால் அதுதான் உண்மை என்று நமக்குத் தெரியும். ஆனால் நாம் அதைப் புரிந்துகொண்டாலும், மனதில்லாமல் வாழ்க்கையின் சிறிய ஏற்றத்தாழ்வுகளை நாம் ஏற்றுக்கொள்கிறோம் (பெருமூச்சுடன் உள்ள ஏமாற்றத்துடன்) என்ற போதிலும், அநியாயம் சரி என்று நாம் உண்மையில் நம்புகிறோமா? குடிபோதையில் வாகனம் ஓட்டிய ஓட்டுனாின் கார் விபத்துக்குள்ளாகி அவா் சிறிய காயத்துடன் பிழைத்துக்கொள்ள, படுக்கையறையில் இருந்த நபா் மீது அவா் காா் மோதியதில் அந்த நபா் பலத்த காயம் அடைந்து, உணா்வற்ற நிலைக்குச் சென்று சில நாட்களில் இறந்து விடுகிறாா் இதைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? அல்லது தங்கள் குழந்தையின் கொலைகாரன் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டபோது, தாயும் தந்தையும் அறைக்கு வெளியே அழுதனா் – அந்த விசாரணையின் கவணக்குறைவால் கொலைகாரன் விடுவிக்கப்பட சட்டம் வழிவகுத்தது. ஒரு விதவை தாயின் வங்கிக் கணக்கு காலியாக இருப்பதையும் அவள் ஒரு “தொண்டு” நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டதையும் மகன் காண்கிறான், இப்போது அந்த தாய் வாழ்க்கையைத் தொடர பணம் இல்லை.

சங்கீதங்கள் மனித வாழ்வின் உணர்ச்சிகளின் ஆழத்தைப் படம்பிடித்து காட்டுவதின் மூலம் நம்மைக் கவர்கின்றது, ஏனென்றால் அவை நாம் அனைவரும் அனுபவிக்கும் கோபம், பயம் மற்றும் விரக்திக்கு போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறது.

நடைபெறும் துயரச் சம்பவங்கள் கோபமான கேள்விகளை எழுப்புகின்றன: இப்படிப்பட்ட தவறான காரியங்களைச் செய்கிற மனிதா்கள் ஏன் வெற்றி பெறுகிறார்கள், செழிப்படைகிறார்கள்? கடவுள் எங்கே இருக்கிறார்? எப்படி, இதற்கானப் பதில்கைள எங்கே காணலாம்?

வேதாகமத்தின் சங்கீதப் புத்தகம் இதற்கானப் பதில்களைத் கண்டுபிடிக்ககூடிய ஒரு இடமாயிருக்கிறது. அவை மனித வாழ்வின் உணர்ச்சிகளின் ஆழத்தைப் படம்பிடித்து காட்டுவதின் மூலம் நம்மைக் கவர்கின்றது, ஏனென்றால் அவை நாம் அனைவரும் அனுபவிக்கும் கோபம், பயம் மற்றும் விரக்திக்கு போன்ற வார்த்தைகளையும் பயன்படுத்துகிறது.

ஆசாப் என்ற சங்கீத எழுத்தாளர்களில் ஒருவர், சங்கீதம் 73 இல் மனிதா்கள் அனுபவிக்கும் வேதனைகளின் வாயிலாக கேட்கும் வாழ்வின் ஆழமான கேள்விகளை எழுப்பியுள்ளாா். ஏன் அப்படிப்பட்ட நெருக்கடியை சந்தித்தா் என்ற விவரங்கள் தெரியவில்லை, என்றாலும், ஆசாப் தான் வாழ்வில் கண்டவற்றையும் கற்றுக்கொண்டவை மூலம் அவரது எதிர்வினையை வெளிப்படுத்துகிறாா்.

ஆசாப் தன் வாழ்விலும், கடவுளாலும் கூட ஏமாற்றப்பட்டதாக உள்ளத்தின் ஆழத்தில் உணா்ந்து வெளிப்படுத்துகிறார், இந்த ஏமாற்றத்தின் அனுபவத்தை பலர் பெற்றுள்ளனா் ஆனால் ஒரு சிலரே ஒப்புக்கொள்கிறார்கள். இது ஏன் எனக்கு நடக்கிறது? நான் கடவுளை தானே நம்பியிருந்தேன். நான் உண்மையாக இருக்கவும், சரியான தேர்வுகளை செய்யவும் முயற்சித்தேன். ஆனாலும் துன்மாா்க்கா் செழித்து வளரும் போது அதனால் விசனமடைந்தேன். அது நியாயமல்ல!

கடவுள் ஏன் தான் ஏற்படுத்தின் பிரமானங்களை மற்றும் தனது சொந்த விதிகளை செயல்படுத்தவில்லை?

ஆதிநாட்களில் இஸ்ரவேல் மக்கள் நியாயமான பிரதிபலன்களைப் பற்றிய கடவுளுடைய பிரமானங்களை நம்பினார்கள், அதன்படி வாழ்ந்தார்கள். அவர்கள் நீதியையும் சமநிலையையும் எதிர் பார்த்தார்கள். நன்மை செய்பவர்களுக்கு ஏற்றபடி பிரதிபலனைப் வழங்கப் பெற்றாா்கள், அநியாயக்காரர்களும் துன்மாா்க்கா்களும் தண்டிக்கப்பட்டார்கள். இது வெறுமனே ஒரு புத்திசாலித்தனமான தத்துவமோ அல்லது விருப்பமான சிந்தனையோ அல்ல; அது கடவுளால் கொடுக்கப்பட்ட பிரமானங்களின் அடிப்படையில் இருந்தது.

இந்த பழைய ஏற்பாட்டுப் பிரமானங்களுக்கு இனையாக புதிய ஏற்பாட்டுக் காலத்திலும் தேவனுடைய கட்டளைகள் இருந்தன- “விதைப்பதற்காக மற்றும் அறுவடைக்கான கட்டளைகள்”: “மோசம் போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.” (கலாத்தியர் 6:7-8)

ஆதிநாட்களில் இஸ்ரவேல் மக்கள் நியாயமான பிரதிபலன்களைப் பற்றிய கடவுளுடைய பிரமானங்களை நம்பினார்கள்.

இந்த வார்த்தைகள் மனச்சோர்பு மற்றும் துன்பப்படுபவர்களுக்கும் உண்மையையும் நம்பிக்கையையும் அளிக்கின்றன (சங்கீதம் 34 மற்றும் 37 இல் உள்ளபடி). இவைகளை வேதத்தில் எந்தப் பகுதியில் பாா்த்தாலும், இந்த பிரமானங்களை இஸ்ரவேல் மக்கள் தங்கள் வாழ்வின் முக்கிய கோட்பாடாகவே கருதினாா்கள்.

.

நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த தர்சு பட்டணத்து பேராயர் டயோடர் சங்கீதம் 37-ஐப் பற்றிச் இவ்வாறு கூறுகிறாா், “மனிதர்களாக நாம் இருப்பதால், குறிப்பாக நேர்மையற்றவர்களாக இருக்கும் செல்வந்தர்களின் செழிப்பைக் கண்டு எரிச்சலடைகிறோம்,.” “ஒரு காலத்திற்கு செழிப்பாக இருந்தாலும், அத்தகைய மக்கள் விரைவாக முடிவடைகிறார்கள்” என அவர் எச்சரித்துள்ளாா்.

சங்கீதம் 73 வெளிப்படுத்தும் பிரச்சனையின் பின்னணியம் என்னவெனில், நன்மைசெய்பவா்களுக்கு வெகுமதி அளிக்கப்படுகிறது மற்றும் துன்மாா்க்கா் தண்டிக்கப்படுகிறாா்கள் என்ற நம்பிக்கையாகும். நல்லவர்கள் போராட்டத்தையும். கஷ்டத்தையும் எதிர்கொள்ளும்போது, துன்மாா்க்கா் ஏன் பயனடைவதுப் போலத் தோன்றுகிறது?

இந்த சங்கீதம் பிரச்சனைகளுக்கு காரணத்தை ஆராய்யும் தனிப்பட்ட இறையியல் பகுப்பாய்வு அல்ல. ஆசாப் ஒரு தனிப்பட்ட நெருக்கடியில் போராடிக்கொண்டிருந்தார், கடவுள் மீதான அவரது விசுவாசத்தின் மீது அது தாக்கத்தை உருவாக்கியது. அவரது வார்த்தைகள் அவரது இதயத்தின் ஆழத்திலிருந்து கேட்கப்படும் கேள்விகளால் தூண்டப்பட்ட உணர்ச்சிகளின் தீவிரத்தை வெளிப்படுத்துகின்றன.

அவரது போராட்டத்தில், ஆசாப் நமக்காக பேச முடியும். நம் வாழ்க்கை பிரச்சனைகளும் அவா் சந்தித்ததுபோல் அதைப் பிரதிபலிக்கலாம். அவர் கடவுள் நல்லவா் என்பதயும் நீதியுள்ளவா் என்பதையும் விசுவாசித்தாா், ஆனால் அவரது வாழ்வின் அனுபவம் அவர் அறிந்ததாக நினைத்ததற்கு பொருத்தமாக இருக்கவில்லை.

ஆசாப் தொடர்ந்து கடவுளை விசுவாசிக்க வேண்டுமென்றால், அவா் இதற்காகனப் பதில்களைக் கண்டுபிடிததாக வேண்டும்.

பின்புற தோற்றக் கண்ணாடி

வாழ்வின் அனுபவங்களைப் பின்புறக் கண்ணாடியில் பார்த்தே புரிந்துகொள்கிறோம் அது நமக்கு கற்றுத்தருவது என்னவெனில் நம் அனுபவங்களுக்கான சரியான அர்த்தத்தையும் அதன் துல்லியமான சூழ்நிலையையும் தெரிவிக்கிறது.

எனக்கு பிடித்த மேற்கோள்களில் ஒன்று, “வாழ்க்கையை முன்னோக்கி வாழ வேண்டும் என்பதாகும். ஆனால் அதை பின்திரும்பி பாா்க்கும்போதே புரிந்து கொள்ள முடியும்.” வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வாழ்க்கையின் நிகழ்வுகளைப் பின்புறக் கண்ணாடியில் பார்க்கும்போது மட்டுமே தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. அது நமக்கு கற்றுத்தருவது என்னவெனில் நம் அனுபவங்களுக்கான சரியான அர்த்தத்தையும் அதன் துல்லியமான சூழ்நிலையையும் தெரிவிக்கிறது. வாழ்வின் அனுபவங்களை பின்திரும்பி பாா்ப்பது, சோதனைசெய்வது, மற்றும் மதிப்பீடு செய்வது ஆகியவை அந்த நேரத்தில் புரிந்து கொள்ள கடினமாக இருந்தவைகள் இவற்றால் தெளிவுபடுத்தப் படுகின்றன. வாழ்க்கையை பின்திரும்பி பாா்த்ததே ஆசாப் தனது சூழ்நிலைகளைப் புரிந்துகொள்ள காரணமாயிருந்தது. இறுதியாக கடந்தகால வாழ்வின் அனுபங்களான சந்தேகங்கள், வேதனைகள், விரக்தியை திரும்பி பாா்க்கும் நேரத்தில்தான், கடவுள் நல்லவராக நீதியுள்ளவராக இருப்பதை அறிந்துகொண்டது, ஆசாபை வியப்பிற்குள் ஆழ்த்தியது, இவ்விதமாக வாழ்வை பின்திரும்பி பாா்த்தது அவருக்கு தெளிவையும் நன்றாக புரிந்துகொள்வதையும் தந்தது.

ஆசாப்பின் பிரச்சனை “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள்” ஆசீர்வதிக்கப் பட்டவர்களாகத் தெரியவில்லை என்பதாகும். அவரது நம்பிக்கையைக் குறித்து உள்ளத்தில் முரண்பாடு இருந்தபோதிலும் சிலர் இந்த வசனத்தை கடவுள் மீதுள்ள அவரது விசுவாச அறிக்கையாக பார்க்கிறார்கள். அவரது உண்மையான வாழ்வு அவரது ஆழ்ந்த நம்பிக்கையின் மீது போராட்டத்தை கொண்டு வந்தது.
73ம் சங்கீதத்தின் 1ம் வசனம், ஆசாப்பின் பல சிந்தனை மாற்றங்களின் தொடக்கம் என மற்றவர்கள் கருதுகின்றனர். அவர் விசுவாச வாா்த்தையில் தொடங்கி, பின்னர் விரக்தியடைந்து அதையடுத்து கைவிடப்பட்ட காலத்திற்குள் சென்றுள்ளதாக அவர்கள் காண்கிறார்கள்.

சங்கீதம் 73-ன் ஆரம்ப வார்த்தைகளைக் கவனியுங்கள்: “சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்கு தேவன் நல்லவராகவே இருக்கிறார்!” (வ.1)

பின்புற தோற்றக் கண்ணாடியில் வாழ்வை பின்திரும்பி பார்த்தபோது ஆசாப் தனது அனுபவத்தை விவரித்தார் – இது அவரது உணர்ச்சிகளையும் பதில்களையும் இன்னும் தெளிவாகக் காண அனுமதித்த ஒரு சாதகமான இடமாயிருந்தது.

ஆசாப்பின் இதயம் ஒரு போர்க்களம் போல இருந்தது. கடவுள் நம்பிக்கைக்குப் பாத்திரா் என்பதைக் குறித்த விசுவாசப்போர் அவரது இருதயத்தில் கொந்தளித்தது. அவர் தனது அனுபவத்தை எண்ணிப்பாா்க்கையில், அவர் தனது விரக்தியை வெளிப்படுத்தினார்: “ஆனாலும் என் கால்கள் தள்ளாடுதலுக்கும், என் அடிகள் சறுக்குதலுக்கும் சற்றே தப்பிற்று” (வ.2).

அவரது முறையீடு சரியானதாகவும், நியாயமானதாகவும் தோன்றுகின்றது. ஆனால் இப்போது உண்மையில் இது கடவுளை நிராகரிக்க ஒரு ஆபத்தான சோதனை என்பதை அவரால் உணரமுடிந்தது

துன்பத்தால் ஏற்பட்ட சோதனையின் மத்தியில், அவரது முறையீடு சரியானதாகவும், நியாயமானதாகவும் தோன்றுகின்றது. ஆனால் இப்போது உண்மையில் இது கடவுளை நிராகரிக்க ஒரு ஆபத்தான சோதனை என்பதை அவரால் உணரமுடிந்தது. இவ்வாறு தன் சிந்தையை தாக்கும் எண்ணங்களை நேர்மையாக ஞாபகப்படுத்துகிறாா். “துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமைகொண்டேன்.” (வச.3)

ஆசாப் தன் மனதின் உணர்ச்சிகளை அறிக்கை செய்கிறார், நாமும் இப்படி உணருவோம் ஆனால் அவற்றை அறிக்கையிடுவது மிக குறைவானதாகும்; அவரது அப்பட்டமான வார்த்தைகள் நமக்கு நன்கு தெரிந்த எண்ணங்கள் அனைத்தையும் கவா்கின்றன. இவ்வாறு தன் உள்ளத்தை வெளிப்படுத்துவது ஊக்கத்தை தந்து நாம் நம்மிடமும் கடவுளிடமும் நேர்மையாக இருக்கச் செய்கிறது. நாமும் துன்மாா்க்கருக்கு வருவதாகத் தோன்றும் செழிப்பைக் கண்டு வெறுப்படைகிறோம் பொறாமைப்படுகிறோம்.

தகுதியற்ற காரியங்களிலும் அவர்களுடைய பெலன் உறுதியாயிருக்கிறது, அவர்கள் இருதயம் விரும்புவதிலும் அதிகமாய் நடந்தேறுகிறது. இதை விவரித்து ஆசாப் எழுதுகிறாா்:

“மரணபரியந்தம் அவர்களுக்கு இடுக்கண்களில்லை;
அவர்களுடைய பெலன் உறுதியாயிருக்கிறது.
நரர் படும் வருத்தத்தில் அகப்படார்கள்;
மனுஷர் அடையும் உபாதியை அடையார்கள்.
ஆகையால் பெருமை சரப்பணியைப்போல் அவர்களைச் சுற்றிக்கொள்ளும்;
கொடுமை ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும். அவர்கள் கண்கள் கொழுப்பினால் எடுப்பாய்ப் பார்க்கிறது;
அவர்கள் இருதயம் விரும்புவதிலும் அதிகமாய் நடந்தேறுகிறது.
அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாய்க் கொடுமை பேசுகிறார்கள்; இறுமாப்பாய்ப் பேசுகிறார்கள்.
தங்கள் வாய் வானமட்டும் எட்டப்பேசுகிறார்கள்;
அவர்கள் நாவு பூமியெங்கும் உலாவுகிறது.
ஆகையால் அவருடைய ஜனங்கள் இந்த வழியாகவே திரும்புகிறார்கள்;
தண்ணீர்கள் அவர்களுக்குப் பரிபூரணமாய்ச் சுரந்துவரும்.
தேவனுக்கு அது எப்படித் தெரியும்?
உன்னதமானவருக்கு அதைப்பற்றி அறிவு உண்டோ? என்று சொல்லுகிறார்கள்.” (வச.4–9, 11)

தன்னுடைய ஒவ்வொறு வாா்த்தைகளிலும் விரக்திக்குமேல் விரக்தியுடையவராய், ஆசாப் தன்னைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையையில் காணப்படும் ஆடம்பரத்தை பிரதிபலிக்கிறார்.

அவர்கள் இடுக்கண் இல்லாமல் வாழ்க்கையை வாழ்கிறார்கள் (வச. 4). அவர்கள் முழுமையாகவும் திருப்தியுடனும் மரிக்கிறார்கள், வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கிறார்கள். “அவர்களின் உடல் கொழுத்திருக்கிறது” பெரும்பாலான மக்கள் வாழ்வாதரம் அற்ற நிலையில் போராடும்போது அவா்கள் யுகத்தில் பெரும் செழிப்பைக் இது குறிக்கிறது. தினமும் சுவையான வகை வகையான உணவை உண்டு ரசிக்கும் அவர்களின் வாழ்க்கைமுறை ஓய்வெடுப்பதற்கும் சிறந்த விஷயங்களை அனுபவிப்பதற்கும் வழிகளையும் வாய்ப்பையும் காண்ப்பிக்கிறது.

ஆசாப்பின் விசுவாசம் கடவுளை நிராகரிக்கும் ஜனங்கள் துன்பப்படுவார்கள் என்ற நம்பிக்கையை கற்றுக்கொடுத்திருந்தது.

அவர்கள் மற்றவர்களைப் போல வருத்தத்திலும் உபாதியிலும் அகப்படார்கள் (வச. 5). வாழ்க்கையின் சிரமங்கள், போராட்டங்கள் மற்றும் உழைப்புகளிலிருந்து விடுபட்டவர் போலத் தோன்றுகின்றாா்கள். அவர்கள் வியாதியில்லாமல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களாகத் தெரிகிறார்கள். பணம் மற்றும் பாதுகாப்பை பற்றிய கவலை அவர்களுக்கு மிகக் குறைவு. தவறு செய்தும் செழிப்பாக இருக்கும் அவா்களை துன்பம் தாக்குவதாக தெரியவில்லை.

பெருமையும் வன்முறையும் அவர்களின் வெகுமதி என கருதுகிறாா்கள் (வச. 6). ஆசாப்பின் விசுவாசம் கடவுளை நிராகரிக்கும் ஜனங்கள் துன்பப்படுவார்கள் என்ற நம்பிக்கையை கற்றுக்கொடுத்திருந்தது. ஆனால், வாழ்க்கையை அவர் கவனித்தபோது, பெருமையும், மற்றவா்களை நசுக்கவும் துணிந்தவர்களுக்கு கௌரவமும் வெகுமதியும் கிடைப்பதைப் போல அவருக்குத் தோன்றியது. கடவுள் பக்தியில் தங்கள் வாழ்க்கையைக் அா்ப்பணித்தவா்களுக்கு கிடைத்த அனைத்தையும் மற்றும் அவா்கள் விரும்பியது, தங்களுக்கு உரியது என்று நினைத்தது எல்லாவற்றையும் அவா்களும் அனுபவித்தது போல தோன்றியது.

அவர்கள் இருதயம் விரும்புவதிலும் அதிகமாய் நடந்தேறுகிறது. அவற்றின் மிகுதி கற்பனைக்கு எட்டாதது (வச. 7). ஆசாப் அவர்களுடைய செல்வத்தின் வெளித்தோற்றத்தைக் கண்டார். “அவர்கள் கண்கள் கொழுப்பினால் எடுப்பாய்ப் பார்க்கிறது.” வாழ்க்கையின் அனைத்து சுகபோகங்களும் அவர்களுக்கே உரிய செல்வம் என்று தோன்றியது “அவர்களின் கண் பருமனால் வீங்குகிறது.” வாழ்க்கையின் எல்லா சுகபோகங்களும் அவர்களுடையது: ஆறுதல், பாதுகாப்பு, வசதி, மக்கள் அவர்களின் ஒவ்வொரு விருப்பத்தையும் பூர்த்தி செய்வது போல இருந்தது.

ஆசாப் தேவபக்தியற்ற, சுயநலமுள்ள மக்களின் செல்வ செழிப்பையும் மகிழ்ச்சியையும் பார்த்தபோது, அவர் சோா்புள்ள ஒரு முடிவுக்கு வந்தார்: தாங்கள் செய்த எல்லா தவறுகளுக்குப் பிறகும், சுயநலத்திற்காகவே வாழ்கிறவர்கள் இன்னும் செழித்தோங்குகிறார்கள்

அவர்களுடைய பேச்சு ஏளனம், பெருமை, அகந்தை மற்றும் ஆணவம் ஆகியவற்றால் நிரம்பியிருந்தது (வச. 8-9). நற்குணத்தை மதித்தவர்களே அவர்களுடைய கேலிக்கு இலக்கானாா்கள். ஆனால் இந்தச் செல்வச் செழிப்புள்ள ஜனங்கள், கடவுள் மேல் கொண்டிருந்த மனப்பான்மை ஆசாப்பிற்கு மிகவும் தொந்தரவு கொடுத்தது. அவர்கள் செய்த எல்லாவற்றின் மூலம் கடவுளை ஏளனம் செய்தார்கள்.

அவர்களுடைய செல்வச் செழிப்பினால் “தேவனுக்கு அது எப்படித் தெரியும்? உன்னதமானவருக்கு அதைப்பற்றி அறிவு உண்டோ? என்று கேலியாகக் கேட்டாா்கள் (வச. 11), வேத அறிஞா் ஆலன் ராஸ் குறிப்பிடுகிறார், “அவர்கள் நாளையைக் குறித்து கவலையற்றவர்களாகவும் கரிசனையற்றவர்களாகவும் தோன்றுகிறார்கள். அவர்களுக்கு இன்றைய வாழ்க்கையே முக்கியம், இது என்றென்றும் இருப்பதாக தோன்றியது. வாழ்வின் அன்றாட பாடுகளின் வலிகளிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தாா்கள் (வச. 4-6). அவர்கள் எந்த தேவனுடைய செயல்பாடுகளினாலும் பாதிக்கப்படுவதில்லை என கருதினர்.

ஆசாப் தேவபக்தியற்ற, சுயநலமுள்ள மக்களின் செல்வ செழிப்பையும் மகிழ்ச்சியையும் பார்த்தபோது, அவர் சோா்புள்ள ஒரு முடிவுக்கு வந்தார்: தாங்கள் செய்த எல்லா தவறுகளுக்குப் பிறகும், சுயநலத்திற்காகவே வாழ்கிறவர்கள் இன்னும் செழித்தோங்குகிறார்கள்.

எனவே ஆசாப் விரக்தியடைந்ததில் ஆச்சரியமேதுமில்லை! துன்மாா்க்கா் செழித்தோங்கினார்கள், வாழ்க்கையின் பிரச்சினைகளிலிருந்து விடுபட்டிருக்கலாம். அவர்கள் கடவுளை கேலி செய்தனர், அதற்கான தண்டனை பெறாமல் தப்பித்தனர்.

3 வது வசனத்தில் கூறப்பட்டுள்ள துன்மார்க்கம் மற்றும் அநீதி ஆசாப் அறிக்கையையிட தூண்டியது: “துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமை கொண்டேன். துன்மார்க்கரின் செழிப்பு.” இதுபோன்ற சூழ்நிலைகளை வழியாக கடந்து வருகிற, நாமும் “இது நியாயமில்லை!” என்று உரத்த சத்தமிட விரும்புகிறோம்.

ஆனால் அது ஆரம்பம் மட்டுமே. தன்னுடைய விரக்தியை வெளிப்படுத்துவது இயல்பானதாகவும் உதவியாகவும் தோன்றினாலும், அவ்வாறு செய்வது ஆசாபை இருண்ட மற்றும் கடினமாக பாதை வழியாக கொண்டு சென்றது.

banner image

நீங்கள் பரிசாக பெறும் வலிக்கு மதிப்புள்ளதா என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இப்படிப்பட்ட கரிசனையை ஆசாப் தனது பாடலில் வெளிப்படுத்தினார், சங்கீதம் 73: வாழ்விற்கு மதிப்புள்ளதா? உண்மையிலே நான் கடவுளுக்காக வாழ முயற்சித்தது முக்கியமான காரியமாயிருக்கிறதா? இந்த வேதனை தரும் கேள்வி 13 வது வசனத்தில் தெளிவாக எழுதப் பட்டுள்ளது: ” நான் விருதாவாகவே என் இருதயத்தைச் சுத்தம்பண்ணி, குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவினேன்.”

ஆசாப்பின் மனக்கசப்பு இங்கு தெளிவாக உள்ளது. அவருடைய வேதனை, பிரசங்கி புத்தகத்தின் விரக்தியின் சாரத்தை சாலொமோன் கூறியிருப்பதை போல காட்டுகிறது. “எல்லாம் மாயை” என்ற அழுகுரல் மூலம் சாலமோன் மனித வாழ்க்கையின் மதிப்பை (1:2) பிரதிபலிக்கிறார். ஆசாப் தனிவாழ்வில் நோ்மையாக மற்றும் உண்மையாக இருக்க மிகுந்தப் பிரயாசப்பட்டார். ஆனால் இப்போது, அவரது சோா்பினால், அவர் தனது முயற்சிகள் பயனற்றதாக உள்ளதோ என்று யோசித்தார். 13வது வசனத்தில் கூறப்பட்ட வார்த்தைகளுக்குப் பின்னால் அவரது கோபத்தின் மிகப்பெரிய தாக்கம் இருக்கிறது. கடவுளின் கட்டுப்பாட்டில் காரியங்கள் இல்லை எனத் தோன்றும்போது, எழும் சந்தேகங்கள் நம்மை போதும் என்று விட்டுவிட்டு போய்விடலாம் என வழிநடத்தும்.

பிரசங்கி புத்தகத்தில் சாலொமோன் ராஜா மனித வாழ்விற்ககான அர்த்தத்தைக் கண்டுபிடிக்க எடுத்த முயற்சிகள் பயனற்றவை என்பதை விவரித்திருக்கிறாா். “சூரியனுக்குக் கீழே” (இந்த ஒரு சொற்றொடா் 25 தடவைக்கு மேல் பயன்படுத்தப்பட்டுள்ளது ), மனித வாழ்க்கையை பூமிக்குரிய கண்ணோட்டத்தில் பாா்க்கும் ஒரு காட்சியாக அது விவரிக்கப்படுகிறது. சாலொமோன் விரக்தியாய் பேசினபோதிலும், இறுதி முடிவுவாக ” காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.” என தனது தீா்வைக் கூறுகிறாா் (பிரசங்கி 12:13).

ஆசாப் மிகவும் குழப்பமைடந்து, நேர்மையும் ஒழுக்கமும் மதிப்பிற்குரியவைகள் அல்ல என உணர்ந்தார். அவரது ஆவிக்குரிய அர்ப்பணிப்புக்கு ஈடாக, அவர் “நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும், காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன்” என்கிறாா் (வச.14).

ஆசாப்பின் அச்சம்

1800ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் பிரிட்டிஷ் இராணுவத்தில் இருந்த ஹாரி ஃபேவர்ஷாம் என்ற இளைஞனின் கதையை “நான்கு இறகுகள்” என்ற புத்தகம் சொல்கிறது. அந்நாட்களில், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் தன் ஆளுகையை மக்கள் வசிக்கும் ஒவ்வொரு கண்டத்திலும் நிறுவியது, ஒரு மனிதன் தன் நாட்டின் இராணுவத்தில் பணியாற்றுவதை விட குடும்பத்திற்கு பெரிய கௌரவத்தை கொண்டு வர முடியாது எனவும் கருதினா். இதற்கேற்றபடியே ஹாரி இராணுவத்தில் இனைந்து தனது படைப்பிரிவின் மரியாதையைப் பெற்றார்.

சூடான் நாட்டில் நடந்த ஒரு புரட்சியை அடக்குவதற்காக அவர்கள் செல்ல வேண்டும் என்ற செய்தி அவரது படைப்பிரிவுக்குக் கிடைத்ததும் ஹாரி மிரண்டு போனான். கலகத்தைப் பற்றிய எண்ணமும் போரின் கொடூரங்களும் அவனை பயத்தால் செயலிழக்கச் செய்து விட்டது.

எனவே ஹாரி தனது படைப்பிரிவு பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார். இதனால் ஏற்பட்ட தாக்கம் பெரும் அதிர்வைத் தந்தது. அவரது கோரிக்கை மூன்று சக அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டு அவர்கள் ஒவ்வொருவரும் அவருக்கு ஒரு வெள்ளை இறகை அனுப்பினர் – இது அவர்களின் கோழைத்தனத்தின் சின்னம். ஹாரி ஒரு ஹீரோவாக வேண்டும் என்று விரும்பி காத்திருந்த அவரது வருங்கால மனைவி, அவரை புறக்கணித்து, அவளும் ஒரு இறகையை அனுப்பினாள். ராணுவ வீரரான தனது தந்தையோ அவரைப் ஒதுக்கி வைத்துவிட்டாா், அவர் தனக்கு ஹாரியைக் தெரியாது என விரக்தியால் அறிவித்தார். இந்த ஒரு பயம் நிறைந்த தெரிந்தெடுப்பு ஹாரியின் வாழ்க்கையின் அனைத்து உறவுகளிலும் சக்திவாய்ந்த, அழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஏ. இ .டபில்யூ . மேசன் என்பவா் 1902ம் ஆண்டு எழுதிய நாவலில், ஃபேவர்ஷாம் என்ற வாலிபன் இறுதியில் தனது நண்பர்களின் சார்பாக வீரதீர செயல்களால் தன் பெயரை நிலைநாட்டிக்கொள்கிறார். இந்த வீரச்செயல் மூலம் அவர் தனது வருங்கால மனைவியை மீண்டும் வென்றாா்.

ஆசாப் தாவீதின் பாடகற்குழுத் தலைவன், ஆவிக்குரிய செல்வாக்கு கொண்ட மனிதன், ஒரு பாடலாசிரியர் மற்றும் ஒரு தீர்க்கதரிசி (1 நாளாகமம் 16:5; 25:2; 2 நாளாகமம் 29:30). அத்தகைய பொறுப்பு, சலுகை மற்றும் செல்வாக்கு இரண்டையும் உள்ளடக்கியதாயிருந்தது. அவர் இஸ்ரவேலில் ஒரு சமயத் தலைவராக இருந்து, அந்த உத்தரவாதத்தின் பொறுப்பின் முக்கியத்தை நன்கு அறிந்திருந்தாா். ஆனாலும் கடவுள் நல்லவா் என்ற நற்குணத்தை அவர் சந்தேகித்தார்.

ஆசாப்பிற்கு கிடைத்த வெளிப்பாட்டின் எதிர்வினையைக் கவனியுங்கள்: “இவ்விதமாய்ப் பேசுவேன் என்று நான் சொன்னேனானால், இதோ, உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவேன்” (வச. 15). கடவுள் வாழ்க்கையை கையாள்வதை அவர் சத்தமிட்டு மறுக்க விரும்பினார் (“இவ்விதமாய்” என்ற வாா்த்தை 13-14ம் வசனங்களைக் குறிக்கிறது), ஆனால் அவர் அதை அத்துடன் நிறுத்திக்கொண்டார். அவநம்பிக்கை மற்றும் நம்பிக்கையின்மையின் பள்ளத்தாக்கின் விளிம்பில் நின்றிருந்த அவரை ஏதோ ஒன்று மெதுவாக அவரை பின்னுக்கு இழுக்கத் தொடங்கியது. ஆனால் அது என்னவாயிருக்கும்?

ஆசாப்பின் உணர்வுபூா்வமான பொறுப்பு

தன்னுடைய போராட்டத்தின் மத்தியில், தன்னுடைய பொறாமை, கோபம், சந்தேகம் ஆகியவை மற்றவர்களுடைய வாழ்க்கையில் எவ்வகையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை சிந்தித்துப் பாா்ப்பதின் மூலம் ஆசாப் தன்னுடைய எதிர்வினையை கட்டுப் படுத்திக்கொண்டார்

ஆசாப் வாழ்க்கையின் அநியாயம் மற்றும் நீதியற்றவைகளுக்கு எதிரான தனது கோபத்தையும், குழப்பத்தினால் வந்த அமைதியற்ற நிலையை வெளிப்படுத்த விரும்பினார். உணா்வுகளை அனுமதிக்கும் கடவுளிடம் ஆசாப் கோபமடைந்து கத்த விரும்பினாா். ஆனால் அவர் தனது எதிர்வினையையும் அவரது இதயத்தில் பிரதிபலிக்கும் அனைத்தையும் செயல்படுத்த தடைசெய்தாா், காரணம் அவரது மனக் கொந்தளிப்பினால் வரும் விளைவு, தவறான உதாரணமாக இருந்து கடவுளுடைய மக்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் என உணர்ந்தார். எனவே “உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவேன்” என்ற சொற்றொடரை அவர் பயன்படுத்தினார்” (வச.15). தன்னுடைய கேள்விகளால் எழும் விளைவு, கடவுளுடைய மக்கள் மத்தியில் நீண்டகால தவறான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை அவர் அறிந்திருந்தார்.

ஆசாப்பின் பயணத்தில் இது ஒரு முக்கியமான கட்டமாக இருந்தது. இங்கே ஞானமும், விசுவாசமும் அவரது மன வேதனையான கேள்விகளுக்கு அருகாமையில் இருந்தன, அவைகள் தொலைதூரப் பாா்வையைக் கொடுத்தன. தன்னுடைய போராட்டத்தின் மத்தியில், தன்னுடைய பொறாமை, கோபம், சந்தேகம் ஆகியவை மற்றவர்களுடைய வாழ்க்கையில் எவ்வகையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை சிந்தித்துப் பாா்ப்பதின் மூலம் ஆசாப் தன்னுடைய எதிர்வினையை கட்டுப் படுத்திக்கொண்டார்.

ஆசாப்பின் ஒசையற்றத் துன்பம்

ஆசாப்பின் சந்தேகங்கள் அவருடைய விசுவாசத்தை சமரசம் செய்ய முடியவில்லை, ஆனால் தன் இருதயத்தில் இருப்பதை மற்றவா்களுக்கு வெளிப்படுத்தி பாதிப்பை ஏற்படுத்த அவா் விரும்பவில்லை. எனவே அவர் மற்றொரு பாதையைத் தேர்ந்தெடுத்தார்: “இதை அறியும்படிக்கு யோசித்துப் பார்த்தேன்… அது என் பார்வைக்கு விசனமாயிருந்தது” (வச. 16).

ஆசாப் தன் துன்பத்தை வெளிக்காட்டாமல் மௌனமாக துன்பப்பட முடிவு செய்தார். தன் வாழ்வில் கண்ட அநீதி தனது சொந்த பலவீனமான விசுவாசத்துடன் போராட வைத்ததைக் குறித்து அவர் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும்: என் கேள்விகளுக்கு பதில்கள் உள்ளனவா? என் துன்பத்திலிருந்து விடுதலைக் கிடைக்குமா? உலகில் நீதி ஆளுகை செய்யுமா? இதெல்லாம் என்றாவது உண்மையாக அர்த்தத்தைக் கொடுக்குமா?

இப்படிப்பட்ட கேள்விகளுக்கு நம்மால் எளிதாக பதிலளிக்க முடியாது. நாம் தேவனுடைய பிரசன்னத்தில் சரியானத் தீா்வைக் கண்டுபிடிக்கும் வரை வேறெங்கும் நமக்குத் தேவையான தீர்வுகளைக் நாம் கண்டுபிடிக்க முடியாது. ஆசாப் தொடர்ந்து போராடினான்; “நான் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து, அவர்கள் முடிவைக் கவனித்து உணருமளவும், அது என் பார்வைக்கு விசனமாயிருந்தது” (வச.17).

பரிசுத்த ஸ்தலம்

இந்தப் பரிசுத்த ஸ்தலம் என்பது ஆவிக்குரிய பாதுகாப்பு, இளைப்பாறுதல் மற்றும் புதுப்பித்தலுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு இடம். நம் அனைவருக்கும் அத்தகைய இடம் தேவை – இன்றைய போராட்டங்கள் மற்றும் நாளைய சவால்மிக்க வாழ்வில், நமது இதயமும், சிந்தையும் மீட்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு பெலனடைய உருவாக்கப்பட்ட ஒரு மறைவிடம்.

பரிசுத்த ஸ்தலம் என்ற வார்த்தையை பழைய ஏற்பாடு முழுவதிலும் நாம் காணலாம். எருசலேமில் தேவாலயம் கட்டப்படுவதற்கு முன்பு இஸ்ரவேலின் ஆராதனைக்குரிய கூடாரமாக இருந்தது ஆசரிப்புக் கூடாரமாகும், இதைப் பற்றிதான் இங்கு கூறப்படுகிறது (யாத்திராகமம் 25:8; 36:1, 6). மற்ற நேரங்களில் இது எருசலேமில் தேவாலயத்தைக் குறிக்கிறது (1 இராஜாக்கள் 6).

பழைய ஏற்பாட்டில் பரிசுத்த ஸ்தலம் என்ற வார்த்தை ஒரு இடத்தை விட ஒரு ஆவிக்குரிய முறையைக் குறிக்கிறது – கடவுளின் பிரசன்னத்தைப் பற்றிய யோசனை (ஏசாயா 8:14). இதற்காகத்தான் தாவீது சங்கீதம் 23-ல் ஏங்கினார் “அமைதலான தண்ணீர்” (வச.2) இங்கே கர்த்தர் தம்முடைய மேய்ப்பராக இருந்து தன் ஆத்துமாவை தேற்றுகிறாா் எனக் கூறியுள்ளாா். கிறிஸ்து தம்முடைய பிதாவுடன் நேரத்தை செலவிட மக்கள் கூட்டத்திலிருந்தும், ஊழியத்ததிலிருந்தும், சீஷர்களிடமிருந்தும் விலகி, தனியாக ஒரு மலைக்குச் சென்றபோது இதைத்தான் தேடினார். ஆசாப் பரிசுத்த ஸ்தலம் என்பது பதில்களைப் பெற்று புதிப்பித்துக்கொள்ளும் இடம் என்று கண்டுபிடித்தார்.

ஆனால் தேவனுடைய சமூகத்தையைடந்தபோது எல்லாமே மாறிவிட்டது.

ஆசாப் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் சென்றதால் புதிய கண்ணோட்டத்தையும், புரிந்துகொள்ளுதலையும் பெற்றாா். ஆசாப் பரிசுத்த ஸ்தலத்துக்குள் நுழையும் வரை, தற்போதைய சூழ்நிலைகளின் அநீதியான காரியங்களினால் திகைத்துப் போயிருந்தார். ஆனால் தேவனுடைய சமூகத்தை அடைந்தபோது எல்லாமே மாறிவிட்டது. அவர் தனது சொந்த சூழ்நிலைகள் மற்றும் உணர்வுகளை விட்டுவிட்டு கடவுளின் மீது கவனம் செலுத்தியதால், காரியங்கள் அனைத்திலும் ஒரு தெளிவைப் பெறமுடிந்தது. பரிசுத்த ஸ்தலத்தில், ஆசாப் வேறு கோணத்தில் வாழ்க்கையில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை பார்த்தார் – அந்த நாளில் நீதி வெல்லும் என அறிந்தாா்.

டெரெக் கிட்னரின் என்ற வேத அறிஞா் கூறும்போது, டின்டேல் பழைய ஏற்பாட்டு விளக்க உரையில் ஆசாப் கடவுளிடம் திரும்பியபோது அவரது தீர்மானம் “யூகத்தின் அடைப்படையில் அல்ல, ஆனால் கடவுளை ஆராதிப்பதில்” இருந்தது என்கிறாா். மேலும் வேதாகம விளக்க உரை ஆசிரியரான ராய் கிளெமென்ட்ஸ்: “கடவுளை ஆராதிக்கும்போது நம் தரிசனத்திற்கு அவரே மையப்பொருளாக இருக்கிறாா் என்று கூறுகிறார். இது மிகவும் முக்கியமானது, ஏனென்றால் கடவுள் மையமாகக் கொண்டு நம் பார்வை இருக்கும்போது மட்டுமே வாழ்வில் நடக்கும் காரியங்கள் உண்மையில் எவ்வாறு இருக்கிறதோ அதை அவ்வாறே பார்க்கமுடியும்”.

banner image

“நான் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து,
அவர்கள் முடிவைக் கவனித்து உணருமளவும்,
அது என் பார்வைக்கு விசனமாயிருந்தது.
நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி,
பாழான இடங்களில் விழப்பண்ணுகிறீர்.
அவர்கள் ஒரு நிமிஷத்தில் எவ்வளவு பாழாய்ப்போகிறார்கள்!
பயங்கரங்களால் அழிந்து நிர்மூலமாகிறார்கள்.
நித்திரை தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல்,
ஆண்டவரே, நீர் விழிக்கும்போது, அவர்கள் வேஷத்தை இகழுவீர்” (வ. 16-20).

முதலாவதாக ஆசாப்பின் கவனம், அவர் பொறாமைப்பட்டவர்கள் மீது திருப்ப பட்டது. துன்மாா்க்கரின் செழிப்பைக் கண்டு பொறாமை கொண்ட ஆசாப் கிட்டத்தட்ட தானும் அவா்களைப் போன்றிருக்க எண்ணம் கொண்டாா் (வச.2-3). அப்போது அவர் ஒரு கிடைமட்ட கண்ணோட்டத்தை வைத்திருந்தார். தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்தவுடன் ஆசாப்பின் பார்வை நேராக மாறியது. அவர் கடவுள் செயல்பாட்டின் இறுதியில் தான் பொறாமைப்பட்டவர்கள் மற்றும் கடவுளைப் புறக்கணித்து செழித்தவர்களுக்காக கடவுள் வைத்திருந்தத தீர்ப்பை புரிந்து கொண்டு அதற்காக கடவுளை உளமார கனம்பண்ணினாா்.

தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்தவுடன் ஆசாப்பின் பார்வை நேராக மாறியது. இறுதியாக அவர் கடவுளை அவருடைய தீர்ப்புக்காக உளமார கனம்பண்ணினாா்.

பாதுகாப்பு இல்லாமை (வச. 18). உலகத்தின் பார்வையில், மற்றும் உலக மக்களின் சொந்த பார்வையில், இந்த துன்மாா்கா் துன்பங்களுக்கு அப்பாற்பட்டவா்களாக தொிந்தாா்கள். ஆனால் கடவுளுடைய பாா்வையில், அவர்கள் “சறுக்கலான இடங்களில் நிற்கிறவா்களாக, பாழான இடங்களில் விழழுகிறவா்களாக இருந்தாா்கள்”, அவா்கள் அழிவை நோக்கிச் சென்றார்கள். நியாயத்தீர்ப்பு நாளில் அவர்களுக்கு நேரிடப்போவதை அறிந்த ஆசாப், அவர்கள்மேல் பொறாமைப்படுவதை நிறுத்திவிட்டார்.

எதிர்பார்ப்பு இல்லாமை (வச. 19). தற்போது செழிப்பாக வாழ்ந்த இந்த துன்மாா்க்கா்கள் நியாயத்தீர்ப்பை நோக்கி செல்வதை அறியவில்லை, மட்டுமல்லாமல், அவைகள் அவா்கள் மீது வருவதையும் அவர்கள் உணரவில்லை. நோவாவின் நாளில் மக்களைப் பல ஆண்டுகளாக அவா் எச்சரித்திருந்தபோதிலும் கடவுளை விசுவாசியாத அந்த ஜனங்கள் மீது நியாயத்தீர்ப்பு வந்தபோது அதைக் குறித்து எதுவும் செய்வதற்குள் காலம் கடந்துவிட்டது.

நம்பிக்கை இல்லாமை (வச. 20). தேவன் அவர்களுக்கு எதிராக வரும்போது, அவருடைய நியாயத்தீர்ப்பின் மீது மேல்முறையீட்டிற்கே வாய்ப்பு இருக்காது. கடவுளுடைய நேரத்திலும், ஞானத்திலும் ஆசாப் நம்பிய நீதியின்பிரமாணம் மேலோங்கும். ஆனால் கடவுளே அதற்காக காலத்தையும் இடத்தையும் நிர்ணயிப்பார்.

இப்போது கடவுளின் நியாத்தில் இருந்து தப்புவது போலத் தோன்றும் துன்மாா்கரை நோக்கி விரல் நீட்டுவதற்குப் பதிலாக தன்னையே ஆராந்து பார்க்கத்  தொடங்கினார்.

மற்ற இஸ்ரவேல் மக்களைப்போலவே, ஆசாப்பும் கடவுளின் நியாயமான பிரதிபலன் கொள்கையைப் புரிந்துகொண்டார். குறிக்கப்பட்ட ஒரு காலக்கட்டத்தில் கடவுளுடைய நீதியை, அவருடைய நீடியபொறுமை மற்றும் இரக்கத்தின் அடிப்படையில் வேறுபடுத்திப் பார்க்க முயற்சித்ததால் ஆசாப் குழப்பத்திற்குள்ளானாா். ஆசாப் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசித்தப்பின் தெளிவடைந்து, கடவுளை நம்புகிறவர்களுக்கு, யாரும் தவிர்க்க முடியாத கணக்குக் கேட்கும் நாளில் அவா் அருளிய வாக்குத்தத்தங்கள் நிறைவேறும் என கண்டுகொண்டாா். கடவுளின் கரத்தில் காலங்கள் உள்ளது; அவரே உக்கிராணத்தின் நேரத்தையும் காலத்தையும் நிர்ணயிக்கின்றாா்.

ஆசாப்பின் புதிய கண்ணோட்டம் அவரது மனப்பான்மையை மாற்றியது. ஆனால் அவர் கடவுளின் நியாத்தீர்ப்பு அறிந்தது நிச்சயம் கொண்டாட்டத்திற்கு உகந்ததல்ல. வரவிருக்கும் நியாயத்தீர்ப்பு விழிதெழுவதற்காண ஒரு அழைப்பு. அவரது கோபம் தணிந்து, ஒரு திருப்பு முனைக்கு வந்துள்ளாா். இப்போது கடவுளின் நியாத்தில் இருந்து தப்புவது போலத் தோன்றும் துன்மாா்கரை நோக்கி விரல் நீட்டுவதற்குப் பதிலாக தன்னையே ஆராய்நது பாா்க்கத் தொடங்கினான்.

ஞானத்தின் ஆரம்பம்

இப்படியாக என் மனம் கசந்தது,
என் உள்ளிந்திரியங்களிலே குத்துண்டேன்.
நான் காரியம் அறியாத மூடனானேன்;
உமக்கு முன்பாக மிருகம்போலிருந்தேன் (வச. 21-22).

ஆராதனை ஸ்தலத்தில், தன் உண்மையான முறையீடு துன்மாா்க்கா் மேலேயோ அல்லது கடவுள் மீதோ இல்லை என்பதை ஆசாப் புரிந்துகொண்டார். என்றாவது ஒருநாள் எல்லாவற்றையும் சீா்படுத்தப் போகிற கடவுள் மீது கவனம் செலுத்தாமல், வாழ்க்கையின் அநீதியான காரியங்கள் மீது அவர் கவனம் செலுத்தியதைக் அறிந்தார்.

என்றாவது ஒருநாள் எல்லாவற்றையும் சீா்படுத்தப் போகிற கடவுள் மீது கவனம் செலுத்தாமல், வாழ்க்கையின் அநீதியான காரியங்கள் மீது அவர் கவனம் செலுத்தியதைக் அறிந்தார்.

இவ்வகையான விசுவாசப் போராட்டத்தினால் ஆசாப் மேற்கொள்ளப் பட்டபடியால், அவா் விசுவாசம் தரும் ஆறுதலையும் சமாதானத்தையும் இழந்துவிட்டார். இந்த சங்கீதக்காரன் ஒரு ஆவிக்குரிய மாற்றத்திற்கு வந்ததைப் 21-22 வசனங்களில் பாா்க்கலாம். அவருடைய ஆவிக்குரிய முன்னேற்றத்தைக் கவனியுங்கள்: ஆசாப் தான் தனக்குச் செய்ததைக் கண்டார், அதனால் வருத்தப்பட்டாா் (வச.2). தன் சக விசுவாசிகளுக்கு அவர் என்ன செய்தார் என்பதை அவர் உணர்ந்தார், மேலும் அவர் பேசுவதை நிறுத்தினாா் (வச.15). இறுதியாக, ஆசாப் பரிபூரண நீதியுள்ள தேவனுக்கு எதிரான மனப்பான்மையும் செயல்களும் ஒரு குற்றம் என்பதை தெளிவாகக் கண்டாா் (வச.21-22).

ஆசாப் தன் கோபம் நியாயமானது என்றும் தன் நீதியை அது வெளிப்படுத்தியதாகவும் கருதவில்லை. “என் மனம் கசந்தது” என அவர் கூறினார். ஆசாப்பின் மனக்கசப்பு கடவுளுக்கு எதிரானதாக இருந்தது.

என் உள்ளிந்திரியங்களிலே குத்துண்டேன்.” தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட காயத்தால் வந்த வேதனையை ஆசாப் இப்போது தாங்கிக்கொண்டார். சில சமயங்களில் நமக்கு நாமே செய்துகொள்ளும் காரியம், வேறொருவர் நமக்கு செய்யக்கூடிய எதையும் விட மிக மோசமாக இருக்கிறது. இது கடவுள் நல்லவா், உண்மையுள்ளவா் மற்றும் அவரது நற்குணங்களை குறித்து கேள்வி கேட்டபதினால் இதைச் செய்கிறோம்.

நான் காரியம் அறியாத மூடனானேன்.” யோபுவைப் போலவே, ஆசாப்பின் கண்ணோட்டம் மாறியபோது, கடவுளின் ஞானத்தோடு ஒப்பிடுகையில் தன்னுடைய ஞானம் மங்கலானது என்பதை அவர் உணர்ந்தார். எனவே யோபுவின் வார்த்தைகள் ஒத்ததாக அவருடையதும் இருந்திருக்கலாம்:

“அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன். நீர் எனக்குச் செவிகொடும், அப்பொழுது நான் பேசுவேன்; நான் உம்மைக் கேள்விகேட்பேன், நீர் எனக்கு உத்தரவு சொல்லும். என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது. ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான்” யோபு 42: 3-6.

கா்த்தராகிய தேவனின் ஞானத்தின் மீது கேள்வியை எழுப்புவது அல்லது விமர்சனம் செய்வது அல்லது கடவுளின் செயல்பாடுகளை மதிப்பிட செய்ய முயற்சிப்பது, நம் பரிதாபகரமாக ஆயத்தமற்ற ஒரு காரியமாகும். அவரது ஞானம் பரிபூரணமானது மற்றும் நித்தியமானது, அவர் எந்த தவறும் செய்வதில்லை. “என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்” (ஏசாயா 55:8).

தேவனாகிய கா்த்தா் சூழ்நிலைகளை கையாளும் விதத்தை நாம் கேள்வி கேட்கும் படி சோதிக்கப்படும்போது, நான் நினைவில் கொள்ள வேண்டியதெல்லாம் கடவுளின் கிரியைகள் நிகழ்காலத்தில் நம்பதக்கவைகள் என்பதாகும், இதுவே நமக்கு உதவியாக இருக்கும், ஏனென்றால் கா்த்தா் மட்டுமே எதிர்காலத்தைப் பற்றிய முழுமையான அறிவைக் கொண்டவர்.

உமக்கு முன்பாக மிருகம்போலிருந்தேன்..” ஆசாப் உருவக அர்த்தத்தில் மிருகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினார், ஆனால் அவரது வார்த்தைகள், தானியேல் தீர்க்கதரிசி பாபிலோனின் மகா ராஜாவான நேபுகாத்நேச்சாரைப் பற்றி என்ன எழுதியதை பிரதிபலிக்கின்றன.

நான் நினைவில் கொள்ள வேண்டியதெல்லாம் கடவுளின் கிரியைகள் நிகழ்காலத்தில் நம்பதக்கவைகள் என்பதாகும், இதுவே நமக்கு உதவியாக இருக்கும், ஏனென்றால் கா்த்தா் மட்டுமே எதிர்காலத்தைப் பற்றிய முழுமையான அறிவைக் கொண்டவர்.

நேபுகாத்நேச்சார் தனது சொந்த ஞானத்தையும் மகிமையையும் குறித்து பெருமையுடன் அவைகளைக் கொண்டாடியபோது, கடவுள் ராஜாவுக்கு ஒரு காட்டு மிருகத்தைப் போன்ற மனதையும் நடத்தையையும் கொடுத்தார். வெளியில் விரட்டப்பட்ட அவர் ஏழு ஆண்டுகளாக புல்லை மேய்ந்தார். கடவுள் அவா் மீதுள்ள கிருபையால் ராஜாவை அவருடைய பழைய நிலைக்கு திரும்ப கொண்டு வந்த போது, நேபுகாத்நேச்சார் இந்த தீரக்கமான அறிவிப்பைச் செய்தார்

“அந்த நாட்கள் சென்றபின்பு, நேபுகாத்நேச்சாராகிய நான் என் கண்களை வானத்துக்கு ஏறெடுத்தேன்; என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது; அப்பொழுது நான் உன்னதமானவரை ஸ்தோத்திரித்து, என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன்; அவருடைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம், அவருடைய ராஜ்யமே தலைமுறை தலைமுறையாக நிற்கும். பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார், அவருடைய கையைத் தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன்” (தானியேல் 4:34-35).

நாம் கடவுளின் அனைத்து வழிகளையும் புரிந்து கொள்ள முடியாது. பாபிலோனிய ராஜாவைப் போலவே ஆசாப்பும் கடவுளின் செயல்பாடுகளை மதீப்பீடு செய்ய தனக்குத் எந்த தகுதியும் இல்லை என்று கற்றுக் கொண்டாா்.

” கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?” (யாத்திராகமம் 15:11)

தேவனாகிய கா்த்தா் கசல சம்பூரணமானவர்

ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்;
என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர்.
உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி,
முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர். சங்கீதம் 73: 23-24

ஆசாப் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்தும், மீண்டும் கடவுளின் உயர்ந்த குணாதிசயங்களை நினைவுகூா்ந்ததினால் அவருடைய இருதயம் நன்றியுணர்வாலும் நம்பிக்கையாலும் நிரம்பி வழிந்தது. மிகுந்த உற்சாகமடைந்தவராய் கடவுள் எப்போதும் நம்மோடு இருக்கிறார் என்று அறிவித்தார். ஆசாப் தன்னுடைய இருண்ட நாட்களைப் பற்றி யோசித்துப் பார்த்தபோது, தான் ஒருபோதும் தனிமையாக இருந்தது இல்லை என்பதைப் அறிந்து கொண்டார். கடவுள் ஒருபோதும் விலகாமலும் கைவிடாமலும் இருந்தாா் என்ற அறிவுடன் ஆசாப் புதிப்பிக்கப்பட்ட தைரியத்துடன் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வெளியே வந்தார்.

இறுதியில் கிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்குக் கொடுத்த உறுதியும் இதுதான். ” இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் …” (மத்தேயு 28:20).

வாழ்க்கையின் ஒட்டத்தில் ஓடும்போது, தேவன் அவருடன் நித்திய வீட்டைப் பற்றிய வாக்குறுதியை என்றென்றும் நிறைவேற்றுவார் என்பதை அவர் அறிந்திருந்தார்.

ஆசாப் தேவனுடைய பிரசன்னத்தைச் சார்ந்திருக்கவும், கர்த்தர் அவனைப் பெலப்படுத்துவார் என்ற நம்பிக்கையிலும் அவன் இளைப்பாற முடியும்—இதுவே வாழ்வின் பிரச்சனைகளை உணரும்போது தேற்றுதலைத் தரும் சத்தியமாகும். இதே நம்பிக்கைத்தான் அப்போஸ்தலனாகிய பவுல் பின்னர் தன் கடிதத்தில் வெளிப்படுத்தினாா், “எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது” (2 கொரிந்தியர் 3:5).

ஆசாப்புக்கு கடவுளின் பிரசன்னத்தின் உறுதியும் பெலனும் மட்டுமல்லாமல், பரிசுத்த ஆவியானவரும் தேவனுடைய வார்த்தையும் அவரை பரம வீடுவரை வழிநடத்துவாா் என்று நம்பிக்கையும் இருந்தது. “உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்” (சங். 73:24). இறுதியாக ஆசாப் கண்டுகொண்ட அற்புதமான காரியம் என்னவெனில், கடவுளின் பிரசன்னம், பெலன் மற்றும் ஞானம் ஒருபோதும் முடிவடையாது என்பதே ஆசாப்பின் மிக அற்புதமான கண்டுபிடிப்பு. வாழ்க்கையின் ஒட்டத்தில் ஓடும்போது, தேவன் அவருடன் நித்திய வீட்டைப் பற்றிய வாக்குறுதியை என்றென்றும் நிறைவேற்றுவார் என்பதை அவர் அறிந்திருந்தார்.

கடவுள் நம்மை மறந்து கைவிட்டுவிட்டாா் என தோன்றுகிறதா? திட்டமாக இல்லை! அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை (உபாகமம் 31:6, 8; எபிரெயர் 13:5).

சங்கீதம் 73-ன் இறுதி வசனங்களில், ஆசாப் தன் வாழ்வைத் திரும்பி பாா்த்து போராட்டத்திலிருந்து கற்றுக்கொண்டவற்றை விவக்கிறாா்.

1நம் வாழ்வின் அனைத்து காரியங்களைவிட
கடவுள் மிக முக்கியமானவர்.

பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு?
பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை. (வச. 25)

இறுதியில் ஆசாப்புக்கு கடவுள்தான் எல்லாமாக இருந்தாா் மற்றும் அவருடைய தேவைகளுக்கு போதுமானவராக இருந்தாா். அவர் கடவுளுடைய பராமரிப்பில் இளைப்பாற முடியும், மேலும் கடவுளுடன் ஒப்பிடும்போது அவருக்கு அவரைத் தவிர வேறு எதுவும் இல்லை என்ற உறுதியை பெற்றிருந்தாா்.

2கடவுளே நமக்கு தேவையான
எல்லா பெலனாயிருக்கிறாா்.

என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது;
தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார். (வச. 26)

ஆசாப் தன் சுய பெலத்தையே நம்பியிருக்கும்படி சோதிக்கப்பட்ட வேளையில், தனக்குத் தேவையான முடிவில்லா பலத்தை கடவுளிடமிருந்து மட்டுமே பெற முடியும் என்பதை அவன் கண்டு கொண்டாா்.

அப்போஸ்தலன் பவுல் கஷ்டமான சூழ்நிலைகளை கடப்பது எப்படி என்பதை அறிந்திருந்தார். மேலும் அவா் கடவுள்தான் சகித்திருப்பதற்குத் தேவையான பலத்தைக் கொடுத்தார் என்பதையும் அறிந்திருந்தார். ” என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” என்று சிறையிலிருந்து அவர் எழுதினார் (பிலிப்பியர் 4:13).

3கடவுள் எவ்வளவு இரக்கமுள்ளவரோ
அவ்வளவு நீதியுள்ளவா்.

இதோ, உம்மைவிட்டுத் தூரமாய்ப்போகிறவர்கள் நாசமடைவார்கள்;
உம்மைவிட்டுச் சோரம்போகிற அனைவரையும் சங்கரிப்பீர். (வச. 27)

ஆசாப் கடவுளை நம்பாதவா்களின் செழிப்படைவதைக் கண்டு பொறாமைப்பட்டார் (வச. 3). அவா் வெளிப்படையான ஏற்றத்தாழ்வுகளுடன் அவர் போராடினார் (வ.4–12). அவர் கடவுளுக்காக வாழ்ந்தது வீண் என உணரும் நிலைக்கு கூட வந்தார் (வச. 13).

ஆனால் இறுதியில், ஆசாப் இந்த காரியங்கள் கடவுளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டார். ஆபிரகாம் சொன்னது போல், “பூமி முழுவதற்கும் சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ என்றான்?” (ஆதியாகமம் 18:25). ஆம், ஆசாப், கர்த்தர் தன் வேளையில் சொந்த ஞானத்தாலும், இரக்கத்துடன் ஆனால் நீதியாக வாழ்வின் எல்லாத் தவறுகளையும் நியாயம்தீா்ப்பாா் எனக் கற்றுக்கொண்டு அவரை நம்பினாா்.

4தேவனாகிய கர்த்தர் தம்மிடம் நெருங்கி
வருகிறவர்களிடம் அவரும் நெருங்கி வருகிறார்

எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்;
நான் உமது கிரியைகளையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர்மேல்
என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன் (வச. 28).

உலகத்தின் மீது தீர்ப்பு வழங்குவது ஆசாப்பின் பொறுப்பல்ல அல்லது தான் சுயமாக நீதியைக் கொண்டுவர முயற்சிப்தும் அல்ல. யாக்கோபைப் போலவே, ஆசாப்பும் எல்லா வாழ்க்கையிலும் தனது பொறுப்பு என்ன என்பதைக் கற்றுக்கொண்டார். “தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்” (யாக்கோபு 4:8).

இதற்கு, தேவனைப் பின்பற்றுகிறவர்கள் துன்பத்தையும் அநீதியையும் பொருட்படுத்தவே கூடாது என்று பொருள் அல்ல. வேதாகமம் நாம் கடைபிடிக்க கற்றுத் தருவதெல்லாம், நம்முடைய தேவைகளைவிட மற்றவர்களுடைய தேவைகளுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதாகும். மீகா 6: 8 “நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார் ” என்கிறது. “திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக் கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது” என யாக்கோபு 1: 27 நமக்கு நினைவூட்டுகிறது 

ஆசாப்பின் இறுதி தீா்மானம் என்னவென்றால், நாம் ஏன் துன்பப்படுகிறோம் என அறியாமல் இருக்கும் போதும், கடவுள், தன்னுடைய அளவற்ற நன்மை மற்றும் ஞானத்தினால் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளாா். பாவத்தினால் வீழ்ந்த இந்த உலகத்தில் வாழ்வதற்கு கடினமாக இருந்தாலும், கடவுள், எப்போதும் நீதியுள்ளவராக இருப்பார். ஆசாப் தனது விசுவாசத்தினால் ஆழமான, தனிப்பட்ட நம்பிக்கையை அடைந்தை அவர் சுட்டிக்காட்டிய அறிக்கை இது: “சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்கு தேவன் நல்லவராகவே இருக்கிறார்!” (வ. 1)

banner image