வாசிக்க: அப்போஸ்தலர் 4:13-37
நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள்.(வச. 20).
ஒரு நாள், எனது பறவை தீவனம் தூரத்தில் தொங்குவதை நான் கவனித்தேன். அதை மீண்டும் நிரப்பி சிறிது நேரம் ஆனதை உணர்ந்தேன். நடந்து சென்று நிரப்பும் மூடியின் உட்புறம் ஒரு குளவி கூடு ஆக்கிரமித்துள்ளதை கவனித்து நிறுத்தினேன். குளவி கூடு மற்றும் பறவை விதைகள் ஒரே இடத்தை ஆக்கிரமிக்க முடியாததைப் போலவே, பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படுவதற்கான நமது விருப்பம் முற்றும் முழுமையாக இருக்க வேண்டும் என்பதை இது எனக்கு நினைவூட்டியது.
அப்போஸ்தலர் 4 இல், ஆவியால் நிரப்பப்பட்டு தேவனையும், அவருடைய நோக்கங்களையும் வெளிப்படுத்தும் அசாதாரண வழியைக் காண்கிறோம். ஆவியால் நிரப்பப்பட்டவர்களின் பணி மற்றும் அணுகுமுறைகள் தனித்துவமானவை. ஆரம்பகால தேவாலயத்தில், விசுவாசிகள் தங்களைச் சுற்றியுள்ள மதத்தையும், கலாச்சாரத்தையும் சாராமல் பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கையை ஆர்வமுடன் வாழ்ந்தனர். இப்படிப்பட்ட வாழ்க்கை இயேசு தம்முடைய சீஷர்களின் இருதயங்களில் ஆரம்பித்தது (வ.13) இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தது. இயேசுவை விசுவாசித்தவர்களிடத்தில் ஆவியானவர் செயல்படுவதன் மூலம் சுவிசேஷம் மற்றவர்களுக்கு பரவியது (வச. 31).
சாதாரண மக்கள் எப்படி “முழு உலகத்தையும் கலக்கினார்கள்” மெத்தனமான சமூகங்களில் “தாக்கத்தை” ஏற்படுத்தினார்கள்?” (அப்போஸ்தலர் 17:6). தேவனின் ராஜ்யமும் அதன் ஆட்சிக்கான போரும் உண்மையானவை என்று உறுதியாக நம்பி, கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் தைரியமாக உண்மையை அறிவித்தனர்: இயேசு உயிருடன் இருக்கிறார், அவருடைய மரணம், மக்கள் தங்கள் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படுவதை சாத்தியமாக்கியது (4:12). இதன் விளைவாக, அவர்கள் அற்புதங்களைக் காண்பது இயற்கையானது (வ. 14,16), கிறிஸ்துவுக்கு முன் தங்கள் நிலையை அதிகாரப்பூர்வமாகப் புரிந்துகொண்டு ஜெபிப்பது (வ. 24-30) மற்றும் மற்ற விசுவாசிகளுடன் ஒற்றுமை மற்றும் பெருந்தன்மையுடன் தொடர்புகொள்வது (வ. 32-37) ஆகியவற்றைச் செய்தனர்.
இவ்வாறாக அனைத்தையும் செய்த தேவன் இன்றும் உயிரோடும், செயல்படும் நிலையிலும் இருக்கிறார் (சங்கீதம் 102:26-27). நாமும் ஆவியின் செயலுக்கு அடிபணிவோமாக, “நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள்” (அப்போஸ்தலர் 4:20).
– ரெஜினா பிராங்க்ளின்
மேலும்
அப்போஸ்தலர் 1-8ஐப் படித்து, பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலர்கள் மீது வரும்போது என்ன நடக்கும் என்று தேவன் சொன்னதைக் கவனியுங்கள்.
அடுத்து
பரிசுத்த ஆவியின் செயலுக்கான ஆதாரத்தை உங்கள் வாழ்க்கை எப்படி வெளிப்படுத்துகிறது?அப்போஸ்தலர் 4:31 மற்றும் எபேசியர் 5:18 இல் விவரிக்கப்பட்டுள்ளபடி நாம் எவ்வாறு ஆவியால் நிரப்பப்பட முடியும்?