வாழ்க்கை மிகவும் பெரியதாக உள்ளதா?
“தேவனே, உமது கடல் மிகவும் பெரியது, என் படகு மிகவும் சிறியது.”

இது ஒரு மிகவும் வயதான மீனவரின் வேண்டுதல் என்று நம்பப்படுகிறது. நமது வாழ்வில் உள்ள சிக்கலையும், நம்மால் நிர்வகிக்க முடியாத சூழ்நிலையில் வாழ்க்கையை அணுகுவதற்கான பயனுள்ள ஜெபமாக இது இருக்கிறது. வாழ்க்கை உங்களுக்கு மிகவும் பெரியதாக உள்ளது என்று நீங்கள் உணர்கின்றீர்களா? நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு எளிதான பதில்கள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் வாழ்க்கையின் மிகப்பெரிய சவால்களை நீங்கள் தனியாக எதிர்கொள்ள வேண்டியதில்லை என்று தேவன் உறுதியளிக்கிறார். ஏனென்றால், நம்முடைய எல்லா பிரச்சனைகளையும் விட அவர் மிகவும் பெரியவர்.

தேவனை நாம் நெருங்கிட, அவர் இயேசுவை இந்த உலகத்தில் நாம் மரிக்க வேண்டிய சிலுவையில் நமக்காக மரித்து நமது பாவத்தை தன் மீது ஏற்றுக்கொள்ள அனுப்பினார். “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” (யோவான் 3:16) என்று இயேசு கூறினார்.

பாவத்திற்கான விலைக்கிரயம் செலுத்தப்பட்டதால், நாம் தேவனிடம் கிட்டி சேருவதை எதாலும் தடுத்து நிறுத்த முடியாது. உங்கள் கவலைகளையும் துக்கங்களையும் உங்கள் வாழ்க்கையுடன் தேவனிடம் ஒப்படைக்க நீங்கள் தயாராக இருந்தால், நித்திய வாழ்வின் நிச்சயத்தைப் பெறுவீர்கள். அவருடன் பேசுவதின் மூலம், அவருடன் ஒரு உறவை நீங்கள் தொடங்கலாம். உங்கள் சொந்த வார்த்தையைப் பயன்படுத்தி அவருடன் பேசலாம் அல்லது கீழே உள்ள ஜெபத்தைப் போல நீங்களும் ஜெபிக்கலாம்:

தேவனே, என் வாழ்க்கையில் நான் உம்மை நிராகரித்ததற்காகவும் புறக்கணித்ததற்காகவும் என்னை மன்னியும். என் பாவத்திற்கான கிரயத்தைச் செலுத்த இயேசு சிலுவையில் மரித்ததற்காக உமக்கு நன்றி. நீர் அருளின உமது முழுமையான மன்னிப்பையும் நித்திய வாழ்வையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். என் வாழ்நாள் முழுவதும் உமக்களித்து, உம்மை நம்ப எனக்கு உதவிச்செய்யும்

உங்கள் ஜெபம் உண்மையானதாக இருந்தால், நீங்கள் தேவனுடன் ஒரு புதிய உறவில் நுழைந்துவிட்டீர்கள் என்பதில் உறுதியாயிருங்கள்! மேலும் தேவன் உங்கள் வாழ்க்கைப் படகைக் கட்டுப்படுத்துவார்.


 

| நாள் 1: துண்டிக்கப்பட்டுள்ளீர்களா?

அண்டார்டிக்காவின் 9 மாத நீண்ட குளிர்காலத்தில், அக்கண்டம் இருளில் மூழ்கி, அதின் வெப்பநிலை -82 °C வரை குறைந்துவிடும். அங்குப் பிப்ரவரி பிற்பகுதியிலிருந்து நவம்பர் வரை விமானச் சேவை நிறுத்தப்படும். 2001 ஆம் ஆண்டில்…

மேலும் வாசிக்க

 

| நாள் 2: திருச்சபைக்கு ஏன் செல்ல வேண்டும்?

வில்லியம் என்ற கல்லூரி போதகர் ஒரு நகரத்தின் சபையில் பிரசங்கிக்க அழைக்கப்பட்டார். சபை ஆராதனை 2 1/2 மணி நேரம் நீடித்தது. இறுதியாக அது முடிந்ததும், வில்லியம்ஸ் களைத்துப்போய், …

மேலும் வாசிக்க

 

| நாள் 3: புகைப்பட கிறிஸ்தவம்

நானும் என் கணவரும் எவரெஸ்ட் அடிவாரத்திலிருந்த முகாமுக்குச் சென்றபோது, எவரெஸ்ட் சிகரத்தின் மிக அருகாமையில் இருக்கும் கண்ணோட்டத்தில், சில கண்கவர் காட்சிகளைக் காண எதிர்பார்த்தேன்…

மேலும் வாசிக்க

 

| நாள் 4: சிலுவை பேசுகிறது

சிலுவைகள் தேவாலயத்தின் செங்குத்தான கோபுரங்களையும் அலங்கரிக்கின்றன, கல்லரைத் தோட்டங்களிலும் புதைக்கப்படுகின்றன. சில நேரங்களில் அவை சாலை விபத்துகளில் மக்கள் இறந்த இடத்தில் குறியீடுகளாக உள்ளன…

மேலும் வாசிக்க

 

| நாள் 5: அவரே போதுமானவர்

சில சமயங்களில் நாம் வாழ்க்கையால் மூழ்கடிக்கப்படுகிறோம். ஏமாற்றம், தீராத கடன், வேலை இழப்பு அல்லது பிறருடன் ஏற்படும் பிரச்சனை போன்ற நெருக்கும் அலைகள் நமக்கு நம்பிக்கையின்மை, மனச்சோர்வு அல்லது…

மேலும் வாசிக்க

 


உங்கள் இன்பாக்ஸில் தினசரி மின்-தின தியானங்களைப் பெற விரும்பினால், கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்து பதிவு செய்யவும்!
இங்கே பதிவு செய்யவும்