விசுவாச வாழ்க்கை என்பது மிக எளிதானதல்ல, ஏனெனில் நமது அன்றாட வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் நாம் விரும்புவது போல் நடைபெறுவதில்ல. இந்தப் பயணத்தில் நீங்கள் துயரங்களை எதிர்கொள்வ தாயிருந்தாலும், பதிலளிக்கப்படாத கேள்விகளுடன் போராடிக் கொண்டிருந்தாலும், இன்னும் நிறைவேறாத வேத வாக்குறுதிகள் நிறைவேறக் காத்திருப்பவர்களானாலும், அல்லது கிறிஸ்துவுடன் நெருக்கமான நட்பை ஆவலுடன் விரும்புகிறவர்களாக இருந்தாலும் — உங்கள் நம்பிக்கையை ஊக்கப்படுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஆவிக்குரிய கட்டுரைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன. உங்கள் விசுவாசம் மிகவும் பெரிதானதாக இருக்க வேண்டியதில்லை, ஆனால் அது உண்மையானதாக இருந்தாலே போதும் என்பதை இவைகள் நினைவூட்டுகின்றன. இக்கட்டுரைகளைப் வாசிக்கும்போதே, உங்கள் விசுவாசம் வளர்ந்து, அந்த விசுவாச வாழ்வின் மூலம் கிறிஸ்துவில் வல்லமையைப் பெற உங்களுக்காக ஜெபிக்கிறோம்.

 

உடைக்கமுடியாத விசுவாசம்

ங்கள் முதலாம் குழந்தைக்கு நரம்பியல் வளர்ச்சிக்  கோளாறு  (ஆட்டிசம்) என மருத்துவர் கூறியபோது, டயானும் அவள் கணவரும் வாழ்நாள் முழுவதும் தங்கள் குழந்தை பாடுகளை சகிக்க வேண்டுமே எனப்  பெரும் துக்கத்தில் மூழ்கியிருந்தார்கள். “ உடைக்க முடியாத விசுவாசம் ” என்ற தனது நூலில், டயான் தங்கள் கனவுகளையும் எதிர்பார்ப்புகளையும், தங்கள் மகனின் எதிர்கால வாழ்விற்கேற்றவாறு மாற்றுவதில் கஷ்டப்படுவதாக ஒப்புக்கொள்கிறார். ஆனால் இந்த வலியுள்ள பயணத்தில், தேவனாகிய கர்த்தர் தங்கள் கோபம், சந்தேகம் மற்றும் பயங்களை கடந்து செல்ல  உதவ வல்லவர் என்பதை அவர்கள் கற்றுக் கெரண்டார்கள். அவர்கள் மகன் வாலிப வயதை கடந்த நிலையில், டயான் தன் அனுபவங்களைக் கொண்டு , இப்போது அவளைப் போன்று சிறப்பு குழந்தைகளுள்ள பெற்றோர்களை ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கிறார். தேவனின் மாறாத வாக்குறுதிகள், அளவிடமுடியாத வல்லமை , அன்பு நிறைந்த உண்மைத்தன்மையைக் குறித்து அவர் பிறரிடம் கூறுகிறார். நமது கனவுகள் ஒழியும் போதும்,நமது எதிர்பார்ப்புகள் நடக்காத போதும், நாம் எதிர்பார்த்த காலங்கள் மற்றும் வாழ்க்கை முறை  நமக்கு அமையாதபோதும், நாம் அதற்காக வருத்தப்படுவதை தேவன் அனுமதிக்கிறார் என்பதைக் கூறி அவர் உற்சாகப்படுத்துகிறார்.

ஏசாயா தீர்க்கன் 26ம் அதிகாரத்தில் நித்திய நம்பிக்கைக்குரியவர் நம் கர்த்தராகிய தேவன் என உரைக்கிறார். ” கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்.(4)கர்த்தாவே, எங்களுக்குச் சமாதானத்தைக் கட்டளையிடுவீர்; எங்கள் கிரியைகளையெல்லாம் எங்களுக்காக நடத்திவருகிறவர் நீரே.(12).இந்த ஜாதியைப் பெருகப்பண்ணினீர்; கர்த்தாவே, இந்த ஜாதியைப் பெருகப்பண்ணினீர்; நீர் மகிமைப்பட்டீர், தேசத்தின் எல்லை எல்லாவற்றையும் நெடுந்தூரத்தில் தள்ளி வைத்தீர்.(15)

நம் வாழ்க்கையில் ஏதேனும் இழப்புகளை நாம் சந்திக்கும்போதும், நாம் சோர்ந்து போன நேரங்களிலும், கடினமான பாதையில் நாம் செல்லும்போதும், உண்மையான உள்ளத்துடன் அவரிடம் வரும்படி தேவன் நம்மை அழைக்கிறார். அவரால்
நம் கடின சூழ்நிலைகளை மாற்றி, நம் கேள்விகளுக்குப் பதிலளித்து நம்மை உற்சாகப்படுத்த முடியும். அவர் நம்முடன் இருக்கிறார், நித்திய நம்பிக்கையால் நம்முடைய ஆவியை புதுப்பிக்கிறார். நம்முடைய வாழ்க்கை உடைந்து விழுந்தது என்று எண்ணிய வேளைகளில், அவர் நம் விசுவாசத்தை வலுப்படுத்தி நிலைவரப்படுத்துகிறார்.

— சாசிட்டில் டிக்சன்

 

மாற்றமடைந்த விசுவாசம்

ட அண்டார்டிக்காவில் ஆறு மாத வயதுடைய சுமார் 700 எம்ப்பரர் பென்குயின்கள், ஐம்பது அடி உயரமான பனிக்கட்டியின் விளிம்பின் மேல் நின்று கொண்டிருந்தன. இறுதியாக அதில் ஒன்று துணிவின் அடிப்படையில் முதலாவது குளிர்ந்த கடலுக்குள் பாய்ந்தது. தொடர்ந்து,  நூற்றுக்கணக்கான பென்குயின்கள் அதைப் பின்தொடர்ந்தன.

இந்த இளம் பென்குயின்கள் தங்கள் முதல் நீச்சலுக்காக வெறும் சில அடி உயரத்திலிருந்து தண்ணீருக்குள் குதிக்கின்றன. ஆனால், உயிரைப் பணயம் வைத்து இவைகள் செய்த இந்த தைரியமான செயல் முதல் முறையாக கேமராவில் பதிவாகியது.
“முன்பு அறிந்திராத செயல்பாட்டிற்கு” நம்பிக்கையோடு, அபாயங்களை யோசிக்காமலே பாய்ந்து செல்லும் இந்தப் பென்குயின்களின் செயலைப் போன்றதே கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலான நமது பயணமும் என சிலர் குறிப்பிடுகின்றனர். ஆனால் கிறிஸ்துவின் மீது நாம் வைக்கும் விசுவாசமானது முற்றிலும் மாறுபட்டது. விசுவாசத்தைக் குறித்து, எபிரெயரின் ஆக்கியோன் “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது” என்கிறார். (எபிரெயர் 11:1).
ஏனோக்கின் விசுவாசம் தேவனுக்குப் பிரியமானதாக இருந்தது: “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்” ( எபிரெயர் 11:6 ). உலகம் ஒருபோதும் கண்டிராத பெரிய வெள்ளம் வந்தபோது          “ விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்து தேவ எச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான் (வ 7), ஏனெனில் அவன் தேவனை விசுவாசித்தான். விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்(வ 8).

நாம் முதன்முறையாக இயேசுவை ஏற்றுக்கொண்டது விசுவாசத்தினால் மட்டுமே. நாம் தொடர்ந்து அவரைப் பின்பற்றிய போது, நம்முடைய விசுவாசம் சோதிக்கப்படுகிறது, இந்நேரத்தில், தேவன் எவ்வாறு நம் முற்பிதாக்களுக்கு உதவினார் என்பதை நம் ஞாபகத்தில் கொண்டுவரலாம். ஏன், எப்படி என்று நாம் அறியாமல் இருந்தாலும், நம் முடிவை நம்பிக்கையுடன் தேவனிடம் ஒப்படைக்கலாம்.

— நான்சி கவிலான்ஸ்

 

விசுவாசத்தின் சோதனை

தேவன் நம்முடைய விசுவாசத்திற்காக வெகுமதி அளிக்கிறார் என்ற எண்ணம் ஆரம்ப நாட்களில் நமக்கு இருக்கலாம். ஆனால் விசுவாசத்தினால் நாம் எதையும்  சம்பாதிப்பதில்லை. விசுவாசம் நாம் தேவனோடு உள்ள உறவை ஆரம்பிக்க உதவுகிறது. அவர் நம்மில் கிரியைகளை ஆரம்பிக்க காரணமாயிருக்கிறது. தேவன், சில வேளைகளில் அவருடைய பரிசுத்தவான்களாகிய நாம் அவருடன்  நேரடியான உறவை  ஏற்படுத்த, நம்முடைய அனுபவத்தின் அடித்தளத்தையே அசைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. தேவன் விரும்புவதெல்லாம் விசுவாச வாழ்க்கையை நாம் அறிந்துகொள்ள வேண்டும் என்பதேயாகும் .அவரது ஆசீர்வாதங்களை உணர்ச்சிப்பூர்வமாக அனுபவிப்பதற்காக அல்ல.  நம் விசுவாச வாழ்க்கையின் துவக்கத்தில் நமது விசுவாசமானது சுவையானதாகவும், எளிதானதாகவும் இருந்தது. ஆனால் தேவன் வெளியரங்கமான ஆசீர்வாதங்களை நிறுத்தி, விசுவாசத்தின் மூலம் நம்மை நடக்கப் பழக்குகிறார்.எனவே, நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம் (2 கொரிந்தியர் 5:6). இப்போது, நாம் கடந்த காலத்தில் பெற்ற ஆனந்த அனுபவத்துடன் கூடிய சாட்சியங்களைவிட, தேவனுக்கு  இன்னும் மிகப் பெரிய சம்பத்தாக  இருக்கிறோம்.

விசுவாசமானது, தன் இயல்பின் காரணமாகவே, சோதிக்கப்பட  வேண்டியதாய் உள்ளது. ஆனால் உண்மையான விசுவாச சோதனை என்பது தேவனை இன்னும் அதிகமாக சார்ந்திருப்பதற்கு எதிரானதல்ல.
மாறாக, தேவனின் நற்குணங்களை  நம் சிந்தையில் நிச்சயமாக விசுவாசிப்பதேயாகும். உண்மையான விசுவாச வாழ்க்கையை அனுபவிக்க, உடைக்கப்படாத தனிமையின் காலங்களை அனுபவிக்க வேண்டியது அவசியம். விசுவாச சோதனையையும் வாழ்க்கையின் சாதாரண வாழ்வில் நிகழும் சீர்படுத்தப்படுவதையும்  ஒருபோதும் குழப்பக்கூடாது.ஏனெனில்  இவ்வுலகில் வாழும் அனைவருக்கும் சோதனைகள் வரும்.பரிசுத்த வேதாகமம் கற்றுத்தரும் விசுவாசம்  என்பது தேவனுக்கு  எதிராகச் சொல்லப்படும் அனைத்தையும் எதிர்த்து நிற்கும் விசுவாசமாகும். “தேவன் என்ன செய்தாலும், நான் அவருடைய செயல்பாட்டிற்கு ஏற்றபடி உண்மையாகவே இருப்பேன்” என்று அறக்கையிடுவதே விசுவாசம் என்பது. வேதத்தில் கூறப்பட்டுள்ள விசுவாசத்தின் உச்சக்கட்ட நம்பிக்கையின் வெளிப்பாடு என்னவெனில்  ” அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன்” (யோபு 13:15).

“அவரின் உன்னத உயர்வுக்காக எனது முழு அர்ப்பணம்” என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

(My Utmost for His Highest)

 

காணப்படாதவைகள்

நியூ மெக்சிகோவின் பாலைவனப்பகுதியில் 1945ம் ஆண்டு 16ம் தேதி ஜூலை மாதம் வெடிக்கப்பட்ட முதல் அனுகுண்டு நாளே  “அணுக்காலம்” தொடங்கிய யுகமாகும். ஆனால் கிரேக்க தத்துவவாதி டெமோக்ரிட்டஸ் (460-370 BC) அணுவின் சக்தியை, அணுவையே கண்டுபிடிக்கும் வெகு நாட்களுக்கு முன்பே, அவைகளின் வல்லமையை அறியாத மற்றும் வானளாவிய கட்டிடங்கள் இந்த உலகில் இல்லாத நாட்களில், அணு சக்தி உள்ளதை  யூகித்திருந்தார். டெமோக்ரிட்டஸ் கண்களால் காணாத நிலையில் அணு சக்தியை பற்றிய காரியம் பின் நாட்களில் அணு கோட்பாட்டினை கண்டு பிடிக்க முன்னோடியாயிருந்தது.

பரிசுத்த வேதம் விசுவாசத்தின் ஆரம்பம் காணக்கூடாதவைகளின் நிச்சயமாயிருக்கிறது எனக் கூறுகிறது. எபிரேயர் 11:1 கூறுகிறது: “ விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.” இது விரும்புகிறதை பெற்றுக் கொள்வதின் நிச்சயமல்ல அல்லது நேர்மறை சிந்தனையின் வெற்றியும் அல்ல. இது நம்மால் காண முடியாத ஆனால் இவ்வூலகத்தில் யதார்த்தமாகவும் மெய்யாகவே இருக்கும் தேவனாகிய கர்த்தரின் மீதான உறுதியான நம்பிக்கை. மெய்யாகவே தேவன் இருக்கிறார் என்பதை அவரின் படைப்புக்கள் நமக்கு வெளிப்படுத்துகின்றன (சங்கீதம் 19:1) அதரிசனமான தேவனுடைய சாயல் அவருடைய தற்சுரூபமும் இயேசு கிறிஸ்துவில் வெளிப்படுத்தப் பட்டுள்ளது. ஒரேபேறான குமாரனே தேவனுடைய அன்பை நமக்கு வெளிப்படுத்தினார் (யோவான் 1:18). ).

இவரே தேவனாகிய கர்த்தர் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம் உன்று அப்பேரஸ்தலன் பவுல் அப்,17`28ல் கூறுகிறார். எனேவ,  ” நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்”. (2 கொரிந்தியர் 5:6). நாம் தனித்துப் பயணிக்கவில்லை, ஆனால் காணக்கூடாத தேவன் நம் ஒவ்வாறு நடையிலும் நம்முடன் நடக்கிறார்.

 —  பில் கிரவுடர்

 

🍃❋🍃❋🍃

நீங்கள் இதைப் வாசித்தபோது, இன்று கிறிஸ்து இயேசுவை விசுவாசிக்கும்படி  அவர் உங்கள் மனதிலே எவ்வாறு கிரியைச் செய்கிறார்?

காண்பதினால் அல்லாமல் விசுவாசத்தினால்  நடக்க  உங்கள் வாழ்வில் சவாலாக உள்ள பகுதி எதாகிலும் உண்டா ?

விசுவாசத்தினால் ஒரு அடி முன் வைக்க பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு உதவக்கூடும் என்பதை சிந்தியுங்கள், இன்று நீங்கள் அதை எடுத்து வைக்க முடியுமா?

🍃❋🍃❋🍃

 

If you’ve been encouraged by these resources, you’re welcome to support our mission of making the life-changing wisdom of the Bible understandable and accessible to all.
To donate, please visit our website.