வாழ்க்கை நம்பிக்கையற்றதாகத் தோன்றுகையில் தொடர்ந்து பயணித்தல்

சில ஆண்டுகளுக்கு முன்பு, வழிகாட்டி இல்லாமல் நேபாளத்தின் ஹெலம்புவில் சற்றே எளிமையான மலையேற்றம் செய்ய நானும் எனது நண்பரும் முயன்றோம். சில ஆய்வுகளுக்குப் பின், எங்கள் தொலைப்பேசியில் வரைபடங்களை பதிவேற்றிய பிறகு பயணத்தைத் தொடங்கினோம்.

மலையேற்றத்தின் முதல் பாதி சுமுகமாகச் சென்றது. ஒவ்வொரு நாளும் திட்டமிட்டபடி ஓய்விடத்தை அடைய முடிந்தது, அற்புதமான இயற்கைக் காட்சிகளால் தொடர்ந்து வியப்படைந்தோம். இருப்பினும், அதிக பனி பொழிவால் மலைப்பாதைகள் அடர்ந்த பனியால் மூடப்பட்டிருந்தன. ஆகிலும் சில உள்ளூர்வாசிகள் நம்பிக்கையூட்டும் விதமாக கவலைப்பட வேண்டாம், “உங்களுக்கு முன் சென்ற மலையேற்றக்காரர்களின் கால்தடங்களைப் பின்பற்றுங்கள்” என்று வழக்கமான நேபாள பாணியில் எங்களுக்கு உற்சாகப்படுத்தினர்

நாங்கள் கவலையோடு பயணத்தை தொடர்ந்த போதிலும், அழகான பனி மூடிய நிலப்பரப்பு எங்களுக்கு ஊக்கமளித்து உற்சாகமூட்டியது, நாங்கள், எங்களுக்கு முன்சென்ற அடிச்சுவடுகளின் திசையில் தொடர்ந்து சென்றோம், ஆனால் அவர்களின் பாதை திடீரென மறைந்தது. நாங்கள் திரும்ப கூடாதபடிக்கு வெகுதூரம் வந்தடைந்ததால், சோர்ந்து பதற்றமடைந்த சுழ்நிலையிலும், தொடர்ந்து முன் செல்ல எண்ணினோம்.

நாங்கள் திரும்ப கூடாதபடிக்கு வெகுதூரம்…. தொடர்ந்து முன் செல்ல

இறுதியில் நாங்கள் பனி பொழிந்த இடத்தை விட்டு கடந்து வந்தோம், நிலச்சரிவு ஏற்பட்ட ஓரிடத்தில் நடந்தோம், ஏதாகினும் உதவி கிட்டுமா அல்லது நாங்கள் திட்டமிட்ட மலையேற்றத்தை முடிப்போமா என்று தெரியவில்லை. அதிர்ஷ்டவசமாக, நாங்கள் சில கிராமவாசிகளைக் கண்டு வழி கேட்டோம். சோர்வுற்றவர்களாய் சரீரத்தில் கொப்புளங்களோடு காணப்பட்ட எங்களுக்கு அவர்கள் தங்குவதற்கு இடத்தையும் இரவு உணவையும் கொடுத்தார்கள்.அதை நங்கள் நன்றியுடன் ஏற்றுக்கொண்டோம்..

சமீபத்தில், நேபாள மலையேற்றத்தை எனக்கு நினைவூட்டும் ஒரு சூழ்நிலையில் நான் இருந்தேன். கடந்த சில வருடங்களாக எனது வேலை சீராக முன்னேறி வந்தது. வேலையில் எனக்கு வழிகாட்டும் அறிவுரையாளர்களால் நான் ஆசீர்வதிக்கப்பட்டேன், எனது வேலையும் தொடர்ந்து முன்னேறி வந்தது, மேலும் புதிய திறன்களைப் பெற்றுக்கொண்டதில் மகிழ்ச்சியடைந்தேன்.

இருப்பினும், ஒரு நாள் நான் என்னை அடையாளமற்றவனாக உணர ஆரம்பித்தேன் மற்றும் எனது தொழில் வாழ்க்கை சரியானதா? என்று பல கேள்விகளுடன், வேறு வேலை தேட ஆரம்பித்தேன்.. விரக்தி, ஆழ்ந்த சிந்தனை மற்றும் தேடுதலென சில காலத்திற்குப் பிறகு, எனது “இலட்சிய வேலையாக” தோன்றிய வேலை கிடைத்தது ஆனால் அதுவும் எதிர்பாராத சூழ்நிலைகளால் தள்ளிப்போனது. இதன் விளைவாக நான் சிலகாலம் வேலையின்றி, அரசாங்க உதவியை நாட வேண்டியிருந்தது. இதுபோன்ற தருணங்களில், இருளில் வெளிச்சம் உதிக்குமாவென்று எனக்குச் சந்தேகமாயிருந்தது.

இவ்வேளையில் நேபாளத்தில் காலை நேரத்தில் நாங்கள் எதிர்கொண்ட சூழ்நிலை நினைவுக்கு வந்தது. பலவகையில் நாங்கள் சரியான பாதையில் செல்ல ஊக்கமளிக்கப்பட்டபோதிலும் திசைமாறி, புதர்களின் மத்தியில் கால் தடம் கிடைக்குமா என்று தேடி அலைந்ததும் மற்றும் , சரியான பாதையில் பயணிக்கிறோமா? என்ற கேள்விகளும் எழும்ப, கடைசியில் நாங்கள் தேடின கால் தடங்களை கண்டுபிடித்து குறித்த நாட்களுக்கு முன்பாக சரியான பாதைக்கு திரும்பினோம்.

நேபாள பயணத்தின் போது கிறிஷ் டாம்லின் பாடல் தொகுப்பை வாங்கி சென்று இருந்தேன். “நான் அறிந்த தேவன்” என்ற பாடல் மலையேற்றத்தின் கடினமான பாதையின் சூழலிலும் மற்றும் நெருக்கமான நேரங்களிலும் உண்மை மாறாத தேவனின் நன்மையும், தயவும் என் வாழ் நாட்களெல்லாம் பின் தொடரும் என்ற வாக்குறுதி அதிக நம்பிக்கையை அளித்து, நான் முன் செல்ல வழிவகுத்தது.

இந்த முறை, சங்கீதம் 139:7-12-ல் தாவீது எழுதியது என் நினைவுக்கு வந்தது.

 

உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தை விட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்திற்கு ஏறினாலும் நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும், அங்கேயும் உமது கரம் என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும். இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாயிருக்கும். உமக்கு மறைவாக இருளும் அந்தகாரப்படுத்தாது; இரவும் பகலைப்போல வெளிச்சமாயிருக்கும்; உமக்கு இருளும் வெளிச்சமும் சரி.

என் சூழ்நிலையில் பயணிக்கையில் நான் இருளில் மூழ்கியது போல் உணர்ந்தாலும், வேதனையும் நம்பிக்கையின்மையும் என்னைத் தின்று கொண்டிருந்தாலும், அங்கும் என் தேவன் என்னுடன் இருக்கிறார் என்பதை இந்த சங்கீதம் எனக்கு நினைவூட்டுகிறது

கர்த்தாதி கர்த்தரும், இருக்கின்றவராகவே இருக்கிறவருமான நமது தேவன் நமக்கு ஒருபோதும் தூரமானவர் அல்லவே மேலும் உதவி கேட்டு நிற்கும் நம் குரலை அவர் கேட்கிறார்.

கடந்த சில மாதங்களாக அந்த ஹெலம்பு மலையேற்றத்தின் நீட்டிக்கப்பட்ட அனுபவத்தில் இருப்பது போல் உணர்ந்தேன். ஆனால், எனக்கு ஒரு வழிகாட்டி உண்டென்றும், என்னை ஊக்குவித்து முன்னெடுத்துச் செல்லும் அவரது வார்த்தைகளான மறையாத கைவிடாத அடிச்சுவடுகள் உள்ளன என்பதையும் (யோவான் 14:16, 25) அவருடைய வார்த்தைகளாலும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஊக்கம் மற்றும் இரக்கத்தின் மூலமாகவும் மீண்டும் நினைவூட்டப்படுகிறேன்.

நீங்களும் இதேபோன்ற சூழ்நிலையில் சிக்கியுள்ளீர்களா? அது உங்களைக் கீழ்நோக்கி இழுக்கும் வேலையாக இருக்கலாம் அல்லது நீண்டகால குடும்ப தகராறாக இருக்கலாம் அல்லது மேற்கொள்ள முடியாத பாவ போராட்டமாக இருக்கலாம். இத்தகைய சூழ்நிலைகள் ஆழ்ந்த நம்பிக்கையின்மை மற்றும் திக்கற்ற உணர்வுக்கு வழிவகுக்கும். நாம் எத்தகைய சவால்கள் அல்லது நிச்சயமற்ற நிலைகளை எதிர்கொண்டாலும், அங்கேயும் அவருடைய கரம் நம்மை வழிநடத்தும், அவருடைய வலது கரம் நம்மைப் பற்றிக்கொள்ளும் (சங்கீதம் 139:10) என்ற தேவனின் வாக்குத்தத்தத்தை நாம் உறுதியாகப் பற்றிக்கொள்வோமாக. மற்றும் அவருடைய கோலும் அவருடைய தடியும் நம்மைத் தேற்றும் (சங்கீதம் 23:4).


உங்கள் இன்பாக்ஸில் தினசரி மின்-தின தியானங்களைப் பெற விரும்பினால், கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்து பதிவு செய்யவும்!
இங்கே பதிவு செய்யவும்