மன்னிப்பின் உறுதி

நமது அனுதின மன்னாவில்
இருந்து 10 பிரதிபலிப்புகள்


முன்னுரை | கேரன் ஹுவாங், நமது அனுதின மன்னா ஆசிரியர்

விடுதலை செய்யப்பட்டோம்

து காலை 11:00 மணி. நான் படுக்கையிலேயே இருந்தேன்.
எனக்கு தூங்க வேண்டும். நான் விழிப்பற்ற தூக்க நிலையை வேண்டினேன். மாதக் கணக்காய் இடைவிடாத வேலை மற்றும் ஒரு வெற்றிகரமான திட்டத்தின் தொடக்கம் என்னை முற்றிலும் சோர்வடைய செய்தது. என் குடும்பத்துடன் நேரம் செலவிட வில்லை, ஓய்வு நேரத்தையும் வார இறுதி நாட்களையும் தியாகம் செய்தேன். வெற்றி கடினமானது, ஏனெனில் நான் அதிகமாய் அக்கறை கொண்டுள்ளேன் என்று நினைத்தேன்.

இல்லை, உண்மையில் நான் திட்டத்தை பற்றிய கவலையால் அன்று. நான் தவறுகள் செய்வது பற்றி கவலைப் பட்டேன். நான் தோற்றுப் போவதை குறித்து எப்போதும் பயந்தேன். அந்த பயத்தால் எப்போதும் செய்ய வேண்டிய வேலை பட்டியலை சரி பார்ப்பதும் அனைத்து வேலைகளிலும் எல்லா விவரங்களையும் சரி பார்த்தும் உறுதி செய்வேன். ஒரு முறை ஒரு நண்பர் கேட்டார்,” நீங்கள் தவறுகளுக்கு ஏன் பயப்படுகிறீர்கள்?” மற்றவர்கள் ஏமாற்றமடைவார்கள் என்பதற்காகவா? அல்லது கட்டுப்பாட்டை இழப்பதனாலா?

“மற்றவர்களால் நேசிக்கப்பட மாட்டோம்,” என் வாயிலிருந்து வார்த்தைகள் அவசரமாய் வந்தன, எனக்கு அதை கேட்கவே ஆச்சரியமாக இருந்தது. அதிக பயமே என் குரலில் எதிரொலித்தது.

வேலைக்கு மட்டும் பயப்படவில்லை. என் உறவுகளில் கூட, உள்ளிருந்து ஒரு குரல் கேட்டது, அடுத்தவரை நேசிப்பது சுவரின் பூச்சு போன்றது. நீ தவறினால், ஒரு சில்லு உடையும்.

நான் இயேசுவின் விசுவாசியாக பல ஆண்டுகளாக இருந்தாலும் தேவ அன்பை இப்படித்தான் புரிந்துகொண்டு இருக்கிறேன். என் நன்னடத்தை சார்ந்து தேவ அன்பு இருக்கும் என நம்பினேன் என் பாவ பழக்கங்களை மறுத்தேன். அதை சொந்தமாக நினைத்தால் தேவ அன்பு குறைந்துவிடும் என்ற நிஜத்தை எதிர்கொள்வது ஆகும்.

மன்னிப்பின் நிஜத்தை நம்முடையதாக
அனுமதித்தால், நாம் தேவன் நம்மில்
கிரியை செய்ய தடையின்றி
அனுமதிக்கிறோம்.

இந்த பயங்களால் துன்பங்களை அனுபவித்த போது, ஒரு நாள் காலையில் நான் ஒரு “வசனத்தை கண்டேன்.” நாம் பாவிகளாயி ருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார் (ரோமர் 5:8). முன்பு எப்போதும் இல்லாத அளவு அந்த வார்த்தைகள் ஆறுதலைத் தந்தன. என் பசியுள்ள இருதயம் என் கண்களை, அந்த வசனங்களை விழுங்க வைத்தன. இது நிஜமா? நாம் பாவிகளாய் இருந்தபோதே தேவன் நம்மை நேசித்தார்.

அவர் தாம் தேர்ந்தெடுத்த வழியில் நமக்கு பதிலளிக்கலாம். நாம் பாதுகாப்பற்றவர்கள், நம் மீறுதல்கள் அவருடைய பரிசுத்தத்திற்கு எதிரானது. தேவன் நம்மை நேசித்ததால், அவர்தம் குமாரனை நமக்காக மரிக்க ஒப்புக்கொடுத்தார். சிலுவையில் அவர் சிந்திய ரத்தமே நாம் அவருக்கு செலுத்த வேண்டிய கடனிலிருந்தும் மற்றும் அவரிடமிருந்து நித்திய பிரிவில் இருந்தும் நமக்கு விடுதலையை தந்தது (ரோமர் 6:23; எபேசியர் 1:7).

நான் தவறுகள் செய்தால் நான் நேசிக்கப்பட மாட்டேன் என்று நம்பினேன். ஆனால் நான் அவரை எப்போதும் தோற்க செய்கிறேன் என்னும் பாவ சுபாவத்தோடு இருக்கும் போதே: தேவன் என் மீது அன்பாய் இருந்தார் என்று வேதாகமம் கூறுகிறது. இயேசு என்னை பாவத்தில் இருந்து மீட்டு என் பாவத்தை சுமந்தார் (2 கொரிந்தியர் 5:21).

எபேசியர் 1:7 கூறுகிறது, ”(கிறிஸ்து) நம் விடுதலையை தம் குமாரனின் ரத்தத்தினால் வாங்கி நம் பாவத்தை மன்னித்தார்”. (பார்க்க கொலோசெயர் 1:14; எபிரெயர் 9:15)” நம் விடுதலையை வாங்கி” என்பதற்கு கிரேக்கத்தில் விலை கொடுத்து மீட்டார் என்று அர்த்தம்.

இதுவே கிறிஸ்து உயிர்த்தெழுதலின் நம்பிக்கையூட்டும் செய்தி! நாம் இயேசுவின் கிரியையை அவரின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் விசுவாசிக்கும் போதும் அவரை நம் சொந்த இரட்சகராக பின்பற்றும் போதும் அவருடைய பரிபூரணம் நமதாக மாறும். இல்லை, அதனால் நீங்கள் பாவமற்ற மனிதராக மாறவில்லை, ஆனால் சிலுவையில் இயேசுவின் கிரியை தான் நமக்கு அடையாளமாகவும் தேவன் முன்பு நம்மை எப்போதும் நிற்க வைக்கிறது. அவரின் இரத்த பலியின் மூலம் தேவன் முழுமையாக மன்னிப்பை அளிக்கிறார்; அது எல்லாவற்றையும் மறுரூபப்படுத்துகிறது. தேவன் நம்மை பார்ப்பதும், நம்மை நாம் எவ்வாறு பார்க்க வேண்டும் என்பதையும் இந்த உலகத்தில் நாம் எவ்வாறு வாழவேண்டும் மற்றும் நம்முடைய சரீர படியான மரணம் எவ்வாறு தேவன் உடனான நித்தியத்திற்கான ஆரம்பம்.

“அவர்களின் அக்கிரமத்தை மன்னித்து அவர்கள் பாவங்களையும் இனி நினையாமல் இருப்பேன்” என்று தேவன் எபிரேயர் 8:12 ல் கூறியுள்ளார் நாம் நிச்சயமாக பாவம் செய்யும்போது அவர் மன்னிப்பார் நாம் மனம் வருந்தி அறிக்கையிட்டால் பாவத்தை மேற்கொள்வோம் (1 யோவான் 1:9).

ஏனென்றால் நம்முடைய கடன்களில் இருந்து நமக்கு விடுதலை அளிக்கிறார், நமக்கு மற்றவர்கள் பட்ட கடன்களிலிருந்து அவர்களை மன்னிப்பதன் மூலம் நாம் விடுவிக்க வேண்டும். மனிதப் பிரகாரமாக நம்மால் மற்றவர்களை நம்முடைய சுய பெலனால் மன்னிக்க முடியாது தேவனும் அதை அறிவார். நாம் தேவனின் உதவியை கேட்க வேண்டும் என்று விரும்புகிறார். தேவனின் அன்பு நம்மை எவ்வாறு அவரிடம் ஈர்க்கின்றதோ அவ்வாறே மற்றவர்களையும் மன்னிக்க நமக்கு உதவுகின்றது. தேவனின் அன்பு நம்முடைய வலிகளை உறிஞ்சுகின்றது.

தேவனின் மன்னிப்பை ஏற்றுக் கொள்வதும் மற்றும் மற்றவர்களை மன்னிக்கும் வாழ்க்கையை தழுவுவதன் மூலம் பாவம் சிலுவையை விட வலிமையானது என்ற பொய்க்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். மன்னிப்பின் யதார்த்தத்தை நம்முடையதாக அனுமதிக்கும் போது நாம் தேவனை தடையின்றி நமக்குள் கிரியை செய்ய அனுமதிக்கிறோம்.

கீழ்க்கண்ட கட்டுரைகள் இயேசு தம் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் வாங்கிய புதிய வாழ்வை பிரதிபலிக்கின்றன. என் ஜெபம் இந்த ஈஸ்டரில் நீங்கள் தேவனிடம் அவர் மன்னிப்பை பெறவும் மற்றவர்களுக்கு அதை வழங்கவும் ஜெபியுங்கள். அவ்வாறு செய்வதால் அது உங்களை உங்கள் வாழ்வில் புதிய ஆழங்களுக்கும் மகிழ்ச்சிக்கும் கொண்டுசெல்லும்.

banner image

இயேசுவின் சிலுவை மரணத்தை நிராகரிப்பவர்கள் பாவத்தின் விளைவுகளில் இருந்து மீட்க தேவகுமாரன் மரணமடைந்து உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசிப்பது பைத்தியமாய் இருக்கலாம். ஆனால் அதை விசுவாசிப்பவர்கள் இரட்சிக்கப்பட்டவர்களுக்கு சிலுவையே “தேவ பெலனாய் இருக்கிறது” (வசனம் 18). தேவன் பைத்தியமானதை ஞானமாக ஆக்கியிருக்கிறார், ஆனால் “இந்த பைத்தியம் என்னப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாய் இருக்கிறது”.

banner image

வேதம் சொல்கிறது நமக்கு மதிப்பு உண்டு ஏனெனில் தேவன் நம்மை அவர் பிள்ளைகளாக உண்டாக்கினார். நாம் அவருக்கு ஒன்றும் வழங்கிய தாலோ அல்லது சாதித்ததாலோ அன்று.”தேவன்… சகல ஆசிர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்”. நாம் என்ன திருப்பித் தரப் போகிறோம் என்ற எண்ணம் இன்றி ஆசீர்வதித்திருக்கிறார் (எபேசியர் 1:3).தேவன் நம்மீது கண்களை பதித்திருக்கிறார் ஏனெனில் அது “அவருக்கு அதிக புகழ்ச்சியை தருகிறது” நம்மை தம்முடைய வராக ஏற்க.

banner image

நாம் தேவனுடைய எப்போதும் போதுமான கிருபைக்கு பதிலாக நம் பற்றாக்குறைகளை கவனித்தால் நம் தேவனை விசுவாசித்து வாழ்வது கடினமாக இருக்கும். ஆனால் அந்த போராட்டத்திலும் தேவனால் நம்மை அழைக்கப்பட்டவர்களாயும் அதிகாரம் உள்ளவர்களாயும் இயேசுவுக்காக வாழ்பவர்களாய் மீட்கப்பட்டவர்களாய் காண தேவனால் நமக்கு உதவி செய்ய முடியும்- நாம் அவர் மேல் வைத்திருக்கும் விசுவாசத்தை மற்றவர்களுக்கும் சுட்டிக்காட்ட முடியும்

banner image

இயேசு சிலுவையில் தொங்கிய போது, அவரைச் சுற்றி நடந்த நிகழ்வுகள் தங்களுக்கென்று கதை கள் உடைய மக்களையும் ஈடுபடுத்தியது. ஆண்டு கணக்காய் போரில் ஈடுபட்டதால் மிருகத்தனமான படைவீரர்கள்,ஆண்டு கணக்காய் நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிய முயற்சிசெய்து கடினமாகிய மதவாதிகள், உண்மையான நம்பிக்கையின்றி மீட்பிற்காக ஆற்றொணாமல் ஏங்கும் மக்கள் கூட்டம், ஒருவர் கூட தங்களுடைய வெறுப்பு நிரம்பிய செயல்களுக்கு மன்னிப்புக் கோரவில்லை. ஆனால் சிலுவையில் கிறிஸ்து இரக்கம் காட்டி தற்கான விளக்கத்திற்கு உதவுகிறது. இயேசு, “பிதாவே, இவர்களுக்கு மன்னியும்,தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்றார்.

banner image

கரீனாவின் மன்னிப்பும்- ரேஞ்சரின் கருணையுள்ள பதிலும்- நமக்கு பாவத்திலிருந்து திரும்பி தேவனின் மன்னிப்பை வேண்டுவதற்கு மாதிரிகளாக திகழ்கின்றன. அப்போஸ்தலர் யோவான் “நாம் பாவங்களை அறிக்கையிட்டால்” தேவன் நம்மை மன்னிப்பார் (1யோவான் 1:9). நாம் அவருக்கு செய்த தவறுகளையும் மற்றும் நாம் மற்றவர்களுக்கு செய்த தவறுகளையும் ஒப்புக் கொள்வது, நாம் சரியான திசையில் செல்வதற்கான முதல் படியாகும். நாம் நம் தவறுகளை ஒத்துக் கொள்ள விரும்புவதில்லை. நாம் சரியானவர் அல்லது பாவ மற்றவர் என்று பாசாங்கு செய்வது நம்மை நாமே சுய- ஏமாற்றுவது ஆகும்.

banner image

மீட்பு என்னும் வார்த்தையின் எபிரேய பதம் படாஹ் (padah) அதற்கு -மீட்கும் தொகை என்று அர்த்தம் தேவையான விலையைக் கொடுத்து தண்டனையிலிருந்து விடுதலை பெறுவதாகும்.இதை தான் இயேசுவின் மரணம் நமக்கு சாதித்தது. இன்று நாம் அவருடன் வாழ்வின் புதுமையில் நடக்கும்போது, நாம் இப்பவும் பாவம் செய்து மனம் திருந்தி மன்னிப்பு வேண்டும்போது, அவர் மன்னிப்பை வழங்குவேன் என்று வாக்களிக்கிறார்.

banner image

அப்பமும் திராட்சை ரசமும் ஒவ்வொருவருக்கும் கடந்து சென்றது. முதல் வரிசையில் எட்னாவின் சகோதரி அமர்ந்திருந்தார். அவர் தம் கணவரை விவாகரத்து செய்ய இருந்தார். ஆனால் இப்போது அன்பாக அவர் கணவரின் கையைப் பிடித்து இருந்தார். அடுத்ததாக மோசே, ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கர், எட்னாவுக்கு பண்ணையில் உதவுவார். யுனைடெட் ஸ்டேட்ஸின் அக்கால பிரிக்கப்பட்ட சகாப்தத்தில் அது ஓர் ஆச்சரியமான பார்வை.

banner image

யாருக்காவது கிருபையை நீட்டித்து வழங்கினால் அது எதிர்பாராத ஈவு ஆகும்.அது இருதயத்தின் கனத்தை உயர்த்தும். தேவன் நமக்கு கொடுத்திருக்கும் நம்பமுடியாத கிருபையின் ஒரு கிளையாகும். நம் பாவத்தினால் தேவனிடமிருந்து நித்தியமாக பிரிந்திருக்கும் தகுதி உள்ளவர்களாக இருக்கிறோம். ஆனால் அதற்கு பதிலாக தகுதி இல்லாத நமக்கு ஓர் ஈவை தந்தார்—அவர் குமாரன், இயேசு தாமே “கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவர்”.

banner image

நிஜத்தில் எவ்வாறு சிறிய குறைபாடு தொலைநோக்கியின் பயன்பாட்டை தடுக்கிறதோ அதற்கு மாறாக அவர் முற்றிலும் பரிபூரண ராக பாவமற்ற மற்றும் களங்கமற்ற சமமற்ற மதிப்புடன் இயேசு திகழ்கிறார். இயேசு பிறந்தார், வாழ்ந்தார், மரணமடைந்தார் மற்றும் உயிர்த்தெழுந்தார். அத்துடன் அவர் தம்முடைய வார்த்தைகளிலும் எண்ணங்களிலும் செயல்களிலும் பாவமே செய்யவில்லை. ஒரு முடியின் அகலத்தின் அளவில்கூட குறைபாடு இல்லை.

banner image

“இஸ்ரவேலே உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு;…. வார்த்தைகளைக் கொண்டு கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்… அவரிடம் சொல்லுங்கள் “எங்கள் பாவங்களை மன்னித்து எங்களை கிருபையுடன் ஏற்றுக்கொள்ளும்”. பெரியதோ அல்லது சிறியதோ, குறைவோ அல்லது அதிகமோ நமது பாவங்கள் நம்மை தேவனிடமிருந்து பிரிக்கின்றன. ஆனால் நம் பாவங்களில் இருந்து திரும்பி அவர் கிருபையால் இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் பெற்ற மன்னிப்பால் அந்த இடைவெளியை மூட முடியும்.

banner image

தேவன் இயேசுவின் மூலம் நம் பாவங்களை மன்னிக்கும் போது அவர் புதிய வாழ்வை நமக்குள் சுவாசிக்கிறார். அவருடைய மன்னிப்பு முழுமையானது. அவர் குறைவற்று நேசிக்கிறார் மற்றும் முழுமையாக மன்னிக்கிறார். தேவன் இறந்தகாலத்தை முழுமையாக விலக்கினார் எனவே நாம் அவருடன் புதிய ஆரம்பத்தை துவக்க முடியும். அவரிடத்தில் வருகிற ஒவ்வொருவருக்கும்- அவர்கள் எங்கிருந்தாலும் அல்லது என்ன செய்திருந்தாலும் ஒரு விஷயமும் இல்லை -அவர் வாக்களிக்கிறார்,” நான் அவர்களின் அநியாயங்களை மன்னித்து பாவங்களை இனி நினையாமல் இருப்பேன்”(எபிரெயர் 8: 12).

banner image