வாசிக்க: தீத்து 2:11-15

அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார் (வ. 14).

ஆண்டி சியர்லஸ், ஒரு போதகர் மற்றும் பகுதிநேர விளையாட்டுப் பயிற்சியாளர். சமீபத்தில் ஒரு நண்பர்கள் குழுவிற்கும், எனக்கும் சிந்தனைக்கு ஏற்ற ஞானமான ஆலோசனையை கொடுத்தார். அவர் “நமது உரையாடல்களில் நாம் எப்போதும் எதையாவது ஊக்குவிக்கிறோம் அல்லது பிரதிபலிக்கிறோம். ஒருவேளை அவை நமது மதிப்பீடுகள், நமது கடந்த காலம், நமது நம்பிக்கைகள் அல்லது நம்மையே கூட இருக்கலாம். இயேசுவைப் பின்பற்றுவதாகக் கூறுபவர்களின் முதன்மையான நோக்கங்களில் ஒன்று, ‘ஆரோக்கியமானவற்றை’ (தீத்து 2:1) ‘பிரசித்திப்படுத்துதல்’ மற்றும் ‘பிரதிபலித்தல்’ ஆகும். இயேசு கிறிஸ்துவில் காணப்பட்ட தேவனின் அன்பை நாம் பிரசித்திப்படுத்துகிறோம், மேலும் இந்த அன்பை ஒரு இருண்ட உலகத்திற்குள் நம்மூலமாக பிரகாசிக்க செய்வதின் மூலம் நாம் பிரதிபலிக்கிறோம்.

ஆண்டி எங்களிடம் கேட்டார், “உங்கள் வாழ்க்கை எதை பிரசித்திப்படுத்துகிறது? அது எதைப் பிரதிபலிக்கிறது?” தீத்து 2-ஐ குறிப்பிட்ட அவரது இந்த மேற்கோள் காட்டப்பட்ட பயன்பாட்டைப் பற்றி நான் யோசித்தபோது, ​​”பிரசன்னமான” “தேவகிருபையை”, எனது வாழ்க்கை எவ்வாறு பிரசித்திப்படுத்துகிறது என்பதையும்; இயேசு அருளும் “இரட்சிப்பை” “எல்லா மனுஷருக்கும்” எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதையும் நான் கருதினேன் (வ. 11). அவருடைய பெலத்தால் அவர் அளிக்கும் கிருபை, மன்னிப்பு மற்றும் குணப்படுத்துதலை நான் வாழ்கிறேனா? அல்லது அதற்குப் பதிலாக நான் கடந்த கால பாவத்தின் எண்ணங்களுக்கு கட்டுப்பட்டு, உணர்ச்சிக் காயங்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறேனா?

நாம் “லெளகிக இச்சைகளையும் வெறுத்து” (வ. 12) விடும்படி பவுல் நமக்கு அறிவுறுத்துகிறார். இது கிறிஸ்துவைப் பிரதிபலிக்காத பாவ வாழ்க்கையிலிருந்து திரும்புவதை மட்டும் அர்த்தப்படுத்துவதில்லை. தேவனற்றவர்களாக “லெளகிக இச்சைகளில்” வாழ்வது என்பது இயேசுவின் இரட்சிப்பை காட்டிலும் நம்மை நமது பாவங்களே அடையாளப்படுத்தும் விதத்தில் வாழுதலாகும். ஏனெனில், “அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்” (வ. 14). கிறிஸ்துவின் விசுவாசிகளாக, நாம் தேவனின் கிருபையால் தான் இரட்சிக்கப்பட்டோம் என்பதை நிரூபிக்கும் சிலாக்கியம் நமக்கு இருக்கிறது (எபேசியர் 2:8). அவருடைய பெலத்தால், “நாம் அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்தபுத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணி” (தீத்து 2:12) வாழமுடியும்.

கடந்த காலத்தையே பற்றிக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, நம்முடைய மகாதேவன் நமக்காகச் சேமித்து வைத்திருக்கும் அனைத்தையும் நாம் நம்பிக்கையுடன் எதிர்நோக்கலாம் (வ. 13).

-ராக்ஸான் ராபின்ஸ்

மேலும் வாசிக்க

எபிரெயர் 9:14-ன்படி, நாம் கடந்த காலத்தில் பாவம் செய்திருந்தாலும், ஜீவனுள்ள தேவனை பிரதிபலிக்க நமக்கு எது உதவி செய்கிறது?

சிந்திக்க

சுவிசேஷத்தையும், அது உங்களுக்குள் நடப்பிக்கும் கிரியையையும் எவ்வாறு பிரசித்திப்படுத்துகிறீர்கள்? கடந்த கால பாவத்தின் காரணமாகவோ அல்லது நீங்கள் சொல்வதை மக்கள் நம்பாமல் புறக்கணிப்பார்கள் என்றோ நீங்கள் சாட்சி பகிர்வதை நிறுத்தும்படி என்றாவது தூண்டப்பட்டுள்ளீர்களா?

,,,,,

banner image