வாசிக்க: ஆதி. 28:10-22, 35:9-14

“அவனை ஆசீர்வதித்து: இப்பொழுது உன் பேர் யாக்கோபு, இனி உன் பேர் யாக்கோபு என்னப்படாமல், இஸ்ரவேல் என்று உனக்குப் பேர் வழங்கும் என்று சொல்லி, அவனுக்கு இஸ்ரவேல் என்று பேரிட்டார்” (35:9-10).

“பயம் என்பது கிறிஸ்தவ மனப்பான்மை அல்ல” என்று நாவலாசிரியர் மார்லின் ராபின்சன் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் பயம் என்பது மனித நடத்தையில் மிகவும் ஆற்றல்வாய்ந்த மற்றும் நிலையான தாக்கங்களில் ஒன்றாகும். வெளிப்புறமான கீழ்ப்படிதல்கூட அன்பை காட்டிலும் பயத்தால்தான் செயல்படுகிறது. பயத்தால் தூண்டப்படாமல் வாழ்வது என்றால் என்ன? என்று கூட நாம் ஆச்சரியப்படலாம்.

இதற்கு நமக்கு வழிகாட்ட யாக்கோபின் கதை உதவலாம். நான் இந்த கதையை வாசிக்கையில், பயத்தால் இயக்கப்பட ஒரு நபரையே பார்க்கிறேன். தேவனுடைய ஆசிர்வாதத்தை இழந்துவிடுவோமோ என்ற பயத்தால், அதனை சுதந்தரிக்க இவர் எதையும் செய்ய தயாராயிருந்தார். பெலவீனமான, முதிர்ந்த தனது தகப்பனையும்கூட லாவகமாக வஞ்சித்தார் (ஆதியாகமம் 27:27-41). ஆனால் யாக்கோபின் கதை முழுவதும், அவர் தேவனால் நேசிக்கப்படுவதையும் அவர் ஒரு நோக்கத்திற்காக தெரிந்துகொள்ளப்பட்டதையும் அவர் அறியும்படிக்கு தேவனால் நடத்தப்படுகிறார்.

பெத்தேலில் அவருக்கு தேவன் தமது வாக்குத்தத்தங்களை முதன்முறையாக தெரிவிக்கையில் (28:10-15), அவைகள் சாத்தியமோவென்றே யாக்கோபு வியக்கிறார். “தேவன் என்னோடே இருந்(தால்)” கர்த்தர் தனக்கு தேவனாயிருப்பார் என்றும், பெத்தேல் தேவனுக்கு வீடாகும் என்றும் சொல்கிறார் (வ.20-22). யாக்கோபு நம்ப தடுமாறினாலும், தேவன் அவரோடிருந்தார். மீண்டும் அதே சாலையில் திரும்புகையில், தனது சகோதரன் ஏசாவால் தனது உயிருக்கு ஆபத்து என்று அஞ்சுகையில் (32:3-5), ஒரு அந்நியனைப்போல் தேவன் அவருக்கு மீண்டும் தரிசனமானார். மேலும் ஒரு ஆசிர்வாதத்திற்காக தீவிரம் காட்டின யாக்கோபு அவரோடு இரவெல்லாம் போராடினார் (வ.26-30). அந்த போராட்டத்தின் முடிவில், தேவன் அவரை ஆசீர்வதிக்கிறார்; இந்தமுறை “யாக்கோபு” (எத்தன்) என்ற அவரது பெயரை “இஸ்ரவேல்” (தேவனோடு போராடுகிறவன் என்பது பொதுவான அர்த்தம்) என்று மாற்றுகிறார்.

ஒரு நீண்ட மற்றும் கடினமான போராட்டத்தின் மூலம், தேவன் யாக்கோபுக்கு அவனுடைய அச்சத்தை தன்னிடம் கொண்டு வரவும், அவருடன் போராடவும், அவருடைய வாக்குறுதிகளை பற்றிக்கொள்ளவும் கற்றுக் கொடுத்தார். யாக்கோபு இறுதியாக காரியத்தை உணர்ந்துகொண்டார், தேவனை ஆராதிப்பதாக அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற மீண்டும் ஒருமுறை பெத்தேலுக்குத் திரும்புகிறார் (35:6-7). அங்கு தேவன் யாக்கோபுக்கு அவர் உண்மையில் யார் என்பதை நினைவூட்டினார்—ஒரு தந்திரக்காரன் அல்ல, மாறாக தேவனுடன் போராடி தேவனை பின்பற்ற கற்றுக்கொண்ட ஒருவர் (வ. 10).

– மோனிகா பிராண்ட்ஸ்

மேலும் அறிய

பயத்திற்கும் அன்புக்கும் இடையே உள்ள தொடர்பைக் காண 1 யோவான் 4:9-19 ஐ வாசியுங்கள்.

சிந்திக்க

பயம் உங்கள் வாழ்க்கையையும், நீங்கள் யார் என்பதைப் பற்றிய உங்கள் நம்பிக்கைகளையும் எவ்விதத்தில் ஊக்குவிக்கிறது? தேவனுடன் போராடஉங்களுக்கு எத்தகைய பயங்கள் தேவைப்படலாம்?