சக் அசிமோவ் ஓர் அமெரிக்க எழுத்தாளர் மற்றும் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் உயிர்வேதியியல் பேராசிரியராக இருந்தார். 500 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி அல்லது திருத்தம் (எடிட்டிங்) செய்த அவர் கண்டுணர்ந்தது, “தற்போதைய வாழ்வியலின் சோகமான அம்சம் என்னவென்றால், சமூகம் ஞானத்தை சேகரிப்பதைவிட விஞ்ஞானம் விரைவாக அறிவை சேகரிக்கிறது”. வேறொரு சந்தர்ப்பத்தில் அவர் எழுதினார், “இளைஞராக இருந்தாலும் . . . அறிவு ஆபத்தை விளைவித்தால், அறியாமைதான் தீர்வு என்று என்னால் நம்ப முடியவில்லை. எனக்கு எப்போதுமே தீர்வு ஞானமாக இருக்கவேண்டும் என்று தோன்றியது. நீங்கள் ஆபத்தை எதிர்கொள்ள மறுக்கவில்லை, அதை எவ்வாறு பாதுகாப்பாக கையாளவேண்டும் என்பதை நீங்கள் கற்றுக்கொண்டீர்கள்”.

அசிமோவ் கனித்தபடியே, நாங்கள் வாழ்ந்தோம். மனத்தாழ்மையோ, அன்போ, ஞானமோ இல்லாமல் உண்மையைச் சிந்தித்துப் பேசுவதால் ஏற்படும் வலியை நம்மில் யார்தான் பார்க்கவில்லை? அறிவியலும் தொழில்நுட்பமும் இல்லாத யுகத்தில் வாழ்க்கைச் செலவுகளை யாரால் கணிக்க முடியும்?

எனவே, சிகாகோ பல்கலைக்கழகத்தைப் போலவே மதிப்புமிக்க ஓர் நிறுவனம், விஸ்டம் ரிசர்ச் ப்ராஜெக்ட் என்றால் என்ன என்பதனை பற்றிய ஆராய்ச்சியைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அம்முயற்சியின் அறிமுகம் என்னவெனில், “ஞானம் ஓர் காலத்தில் அதன் தன்மை மற்றும் நன்மைகளைப் புரிந்துகொள்வதற்காக கடுமையான அறிவார்ந்த விசாரணைக்கு தகுதியான பொருளாக கருதப்பட்டது; இருப்பினும் சமீப காலம் வரை ஞானமானது தீவிரமான அறிவார்ந்த மற்றும் விஞ்ஞான விசாரணைக்கான தலைப்பாக ஒப்பீட்டளவில் கவனிக்கப்படவில்லை. மனுஷிகனாக இருந்து மிக உயர்ந்த விருப்பங்களுக்கு மையமான ஓர் விஷயத்தை கற்பனை செய்வது கடினம்.

ஓர் பழங்கால நற்பண்புக்கு சான்றாக, வேதாகமத்தை வாசிப்பவர்கள் சாலொமோனின் எதிரொலிப்புகளைக் கேட்கலாம். “ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள். அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது. முத்துக்களைப்பார்கிலும் அது விலையேறப்பெற்றது; நீ இச்சிக்கத்தக்கதொன்றும் அதற்கு நிகரல்ல” (நீதி 3:13-15).

நமது இன்றய சூழலில், சாலொமோன் என்பதற்கு பொருள் ஞானம் மட்டுமல்ல. . . பொறுப்பற்ற சுய-பரிசோதனையுடன் சேர்ந்தது. ஆயினும்கூட, அவருடைய வாழ்க்கையின் முதன்யாக ஞானத்தைத் தேடுவதை நாம் முட்டாள்தனம் என்று நிராகரிக்கவில்லை. மாறாக, ஞானத்தினால் நாம் தொடங்கியதைவிட சிறப்பாக முடிப்பதற்கும், உலகைவிட நாம் கண்டறிந்ததை சிறப்பாக வெளிக்காட்டுவதற்கும், செயல்பாட்டில் மற்றவர்களின் முகத்தில் புன்னகையைக் கொண்டுவருவதற்கும் நாங்கள் ஏங்குகிறோம்.

ஞானம் மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிக்கிறது. வேதாகமக் கூற்றுப்படி, நம்முடைய படைப்பாளர் ஞானத்தில் உலகைப் படைத்தார், பின்னர் நமது முட்டாள்தனத்தின் குழப்பத்திலிருந்து அதனைக் காப்பாற்ற தன்னைத்தானே தியாகம் செய்தார்.

பைபிளில் ஞானத்திற்கு மிகவும் பிரபலமான புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தைப் பற்றிய ஆலிஸ் மேத்யூஸின் நுண்ணறிவுகளுக்கு இத்தகைய எண்ணங்கள் ஆழ்ந்த பாராட்டுக்களைத் தந்துள்ளன. நாம் அவளுக்குச் செவிசாய்க்கும்போது, நீதிமொழிகள் 31-ன் பாராட்டப்பட்ட மற்றும் வெறுக்கப்படும் “நல்லொழுக்கமுள்ள ஸ்திரீயில்” புதிய நுண்ணறிவைக் காண்கிறோம். அடுத்த பக்கங்களில் ஆலிஸ் விளக்குவதுபோல், ஞானத்தைப் பற்றிய நமது ஒட்டுமொத்த புரிதல் வேதத்தின் இந்தப் பகுதியில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது, குறைத்து மதிப்பிடப்பட்டது மற்றும் அவை பங்களிக்கும் விஷயங்களில் கவனிக்கப்படாமல் உள்ளது.

ஆலிஸின் கூற்றுகள் முடிவதற்குள், சாலொமோன் ஏன் ஞானத்தின் கடைசி அத்தியாயத்தை எழுதவில்லை என்பதையும் நாம் புரிந்துகொள்ளலாம். 700 மனைவியரையும் 300 மறுமனையாட்டிகளையும் கொண்டு ஞானத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்திய ஓர் அரசனால் இந்த விளக்கம் எழுதப்படவில்லை என்பது நல்ல காரணத்திற்காக இருக்கலாம். ஆலிஸ் காட்டுவதுபோல், லெமுவேல் மன்னரின் ஞானம், அதற்கு நேர்மாறாக, லேடி விஸ்டமை விவரிக்கிறது, அது அவளை மதிக்கும் எந்த ஆண் அல்லது பெண்ணின் வாழ்க்கையை மேம்படுத்தும்.

ஆலிஸ் ஞானத்திற்கான நமது தேவையின் பார்வையை புதுப்பிப்பதைவிட அதிகம் செய்திருக்கிறார். சாலொமோன் சேகரித்துப் பேசிய ஞானமான வார்த்தைகள் ஓர் தொடக்கமோ முடிவோ அல்ல என்பதை நினைவில்கொள்வதற்கான காரணத்தை அவர் நமக்குத் தருகிறார்.

மதச்சார்பற்ற கல்வியாளர்கள் தொலைந்துபோன கலையையும் ஞானத்தின் பொக்கிஷத்தையும் நினைவுகூரும் ஓர் நாளில், ஞானத்தின் உண்மையான மூலத்தை மீண்டும் கண்டுபிடிப்பதைவிட முக்கியமானது என்ன? தேவன் அருளிய புத்தகம் எவ்வாறு அறிவின் பொருட்டு நம்மை அறிவிற்கு அப்பால் அழைத்துச் செல்கிறது!

    மார்ட் டிஹான்

 

banner image

வே தாகமத்தில் உள்ள சில பகுதிகள் ஓர் பிரபல நகைச்சுவை நடிகர் சொல்வதை போல்  ‘இது எந்த மரியாதையையும் பெறாதே”  நினைக்கிறோம். அந்த பகுதிகளில் ஒன்று நீதிமொழிகள் 31:10-31. பல ஆண்கள் இந்த உரையை அப்படியே கடந்துபோகிறார்கள், ஏனெனில் இது பெண்களுக்காக மட்டுமே எழுதப்பட்டது என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். பல பெண்களும் அதனை கடந்துபோகிறார்கள், ஏனென்றால் அவர்கள் கேட்க விரும்பாத ஒன்றை அவை கூறுகிறது என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர். பெரும்பாலான கிறிஸ்தவர்கள் பத்தியைப் பற்றி ஏதாவது அறிந்திருந்தாலும், பலர் அதைப் புறக்கணிக்கத் தேர்வு செய்கிறார்கள். ஆனால் நம் அனைவருக்கும் – ஆண்கள் மற்றும் பெண்கள் – இந்த முக்கியமான பகுதி மூன்று காரணங்களுக்காக தேவைப்படுகிறது. அடிப்படையில் முதலாவது, நமக்கு இது தேவை, ஏனெனில், தேவனுடைய பரிசுத்த ஆவியின் தூண்டுதலினால், அவை பைபிளில் சேர்க்கப்பட்டுள்ளது. எல்லா வேதவாக்கியங்களும் தேவனுடைய ஏவுதலால் கொடுக்கப்பட்டவை என்றும், உபதேசத்திற்காகவும், கண்டிப்பதற்காகவும், திருத்தத்திற்காகவும், நீதியின் போதனைக்காகவும் நமக்குப் பிரயோஜனமாக இருக்கிறது என்று அப்போஸ்தலன் பவுல் தீமோத்தேயுவுக்கு நினைவுபடுத்தினார். அதில் நீதிமொழிகள் 31ம் அடங்கும்.

இரண்டாவதாக, இந்த பத்தியில் சுருக்கமாக தேவனுடைய மக்களின் ஞானத்தைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிமொழிகளின் புத்தகம் கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பமாகப் கூறுகிறது (1:7), மேலும் அவை கர்த்தருக்குப் பயப்படுபவரைப் புகழ்ந்து முடிவடைகிறது (31:30). அத்தியாயம் 1, நகரத்தின் வீதிகளில் கதறி அழும் லேடி விஸ்டத்தை நமக்கு அறிமுகப்படுத்துகிறது, இளைஞர்களை தங்கள் வாழ்க்கையையும் அவர்களின் விருப்பங்களையும் மறுபரிசீலனை செய்ய அழைக்கிறது, மேலும் கர்த்தருக்கு பயப்படுவதைத் தேர்ந்தெடுக்கச் அறிவுறுத்துகிறது. அத்தியாயம் 31 லேடி விஸ்டமை வீதிகளில் நிறுத்தி, கர்த்தருக்குப் பயப்படுவதை ஞானமாகத் தேர்ந்தெடுத்த ஒருவர் எப்படி இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

அத்தியாயம் 31 லேடி விஸ்டமை வீதிகளில் நிறுத்தி, கர்த்தருக்குப் பயப்படுவதை ஞானமாகத் தேர்ந்தெடுத்த ஒருவர் எப்படி இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

இந்த முக்கியமான பகுதி நமக்குத் தேவைப்படுவதற்கு மூன்றாவது காரணம், அத்தியாயத்தின் கடைசி இருபத்தி இரண்டு வசனங்களின் அமைப்பு. நீதிமொழிகள் 31:10-31 ஓர் அக்ரோஸ்டிக் கவிதை. அந்தப் பிரிவின் ஒவ்வொரு வசனமும் முதன்மையான எபிரேய (அலெஃப், பெத், கிமெல், டேலேத், ஹீ, வாவ், முதலியன) எழுத்துடன் தொடங்குகிறது. அதன் பயன் என்ன? பண்டைய உலகில், அக்ரோஸ்டிக்ஸ் நினைவக சாதனங்களாக பயன்படுத்தப்பட்டது. முதன்மையான (அல்ஃப்பபெட்ஸ்) எழுத்துக்களை நீங்கள் அறிந்திருந்தால், அடுத்த எழுத்தை நினைவுபடுத்துவதன் மூலம் நீங்கள் தொடர்ச்சியான யோசனைகளை நினைவுபடுத்தலாம். இன்று நாம் இதைப் பயன்படுத்துகிறோம், ஆனால் பண்டைய உலகில், வாய்வழி கலாச்சாரங்களில் இது மிகவும் முக்கியமானது, இதில் ஓர் மக்களின் ஞானம் ஓர் தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு வாய்மொழியிலிருந்து செவிவழிக்கு அனுப்பப்பட்டது. குழந்தைகள் தாங்கள் அறியவேண்டியதை வாய்மொழியாகக் கற்றுக்கொண்டனர். அக்ரோஸ்டிக் கவிதை அவர்கள் நினைவில்கொள்ள உதவும் ஓர் வழியாகும். நீதிமொழிகள் 31:10-31 எளிதாக மனப்பாடம் செய்யக்கூடிய ஓர் அக்ரோஸ்டிக் கவிதையாக எழுதப்பட்டது. இது மனதார புரிந்து கற்றுக்கொள்ள ஏற்றப்பட்டது.

ஏன்? ஏனென்றால், நீதிமொழிகள் புத்தகம் முழுவதும் காணப்படும் கடவுளுடைய மக்களின் ஞானத்தை அது சுருக்கமாகக் கூறுகிறது. வாழ்க்கையை எவ்வாறு புத்திசாலித்தனமாக வாழ்வது என்பதை அறிய நாம் அனைவரும் உதவுவது.

முதல் பிரதி ஹீப்ரு வேதாகமம் உயிரெழுத்துக்கள் இல்லாமல் எழுதப்பட்டது. வார்த்தைகளைப் படிப்பதும் புரிந்துகொள்வதும் உயிர் ஒலிகளைக் கேட்டு அறிந்துகொள்வதை அடிப்படையாகக் கொண்டது.

ஓர் கேள்வி மற்றும் அறிக்கையுடன் வசனம் 10 தொடங்குகிறது: “குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது”. பைபிளின் புதிய சர்வதேச பதிப்பு எபிரேய உரையை இவ்வாறு மொழிபெயர்க்கிறது. நீங்கள் ஓர் புதிய அமெரிக்கன் ஸ்டாண்டர்ட் பைபிளைப் படிக்கிறீர்கள் என்றால், “ஒரு சிறந்த மனைவியை யார் காணலாம்?” ஆனால் நீங்கள் நியூ கிங் ஜேம்ஸ் பதிப்பில் படிக்கிறீர்கள் என்றால், “நல்லொழுக்கமுள்ள மனைவியை யார் காணலாம்?” என்று கேட்கிறது. ஓர் எபிரேய வார்த்தையின் வெவ்வேறு மொழிபெயர்ப்புகளைப் பார்க்கும்போது, அது ஒரே பொருளைக் குறிக்கவில்லை என்று தோன்றுகிறது, பழைய ஏற்பாட்டின் பிற பகுதிகளில் அந்த எபிரேய வார்த்தை எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்று நாம் திரும்பிச் சென்று கேட்க வேண்டும். மிகவும் விரும்பத்தக்க இந்தப் பெண், மாணிக்கக் கற்களைவிட மிக உயர்ந்த மதிப்புள்ள பெண், எபிரேய மொழியில் ஓர் தைரியமான பெண். ஒரு வகையில், நம்முடைய எந்த மொழிபெயர்ப்பும் — உன்னத குணம், சிறந்த, அல்லது நல்லொழுக்கம் — இந்த எபிரேய வார்த்தையின் உணர்வைப் பிரதிபலிக்கவில்லை. அத்தியாயம் 31 ஏற்கனவே 2-3 வசனங்களில் அந்த எபிரேய வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளது: “என் மகனே, என் கர்ப்பத்தின் குமாரனே, என் பொருத்தனைகளின் புத்திரனே, ஸ்திரீகளுக்கு உன் பெலனையும், ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன் வழிகளையும் கொடாதே”.

பைபிளில் – வலிமையும் வீரமும்  ஆண்களுக்கு மட்டுமே சொந்தமான பண்புகளாக கொடுக்கப்படவில்லை. பைபிள் ஓர் ஆணின் அடையாளத்தை அவனது பலத்திலும், ஓர் பெண்ணின் அடையாளம் அவளுடைய அழகிலும் காணப்படுவதாகக் கற்பிக்கிறது என்று பலர் வலியுறுத்துகின்றனர். இவை ஓர் கட்டத்தில் உண்மையாக இருந்தாலும், பெண்களும் ஆண்களும் தேவனருளிய பலத்தை அவருடைய நோக்கங்களுக்காகப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பழைய ஏற்பாடு முழுவதும் இந்த எபிரேய வார்த்தையின் பயன்பாட்டைப் பார்க்கும்போது, வசனம் 3 அதை குணசாலி என்று இன்னும் துல்லியமாக மொழிபெயர்ப்பதைக் காண்கிறோம். இது பைபிளில் ஓர் பொதுவான வார்த்தை, 246 முறை பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு பெண்ணைப் பற்றி மூன்று முறை பயன்படுத்தப்படுகிறது (ரூத் 3:11, நீதிமொழிகள் 12:4, மற்றும் இங்கே நீதிமொழிகள் 31:10), ஆனால் பெரும்பாலும் இது வீரர்கள் அல்லது படைகளை விவரிக்கிறது. வார்த்தையின் அடிப்படை அர்த்தம் வலிமை அல்லது சக்தி, மற்றும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது இராணுவ வலிமையைக் குறிக்கிறது. தாவீதின் வலிமைமிக்க மனிதர்கள் பெலசாலியான மனிதர்கள்.

நீதிமொழிகள் புத்தகம் முழுவதும் காணப்படும் கடவுளுடைய மக்களின் ஞானத்தை [நீதிமொழிகள் 31] சுருக்கமாகக் கூறுகிறது. வாழ்க்கையை எவ்வாறு புத்திசாலித்தனமாக வாழ்வது என்பதை அறிய நம் அனைவருக்கும் உதவுகிறது.

இந்த வார்த்தை பெரும்பாலும் வீரம் என்று மொழிபெயர்க்கப்படுகிறது, இது போரில் தேவைப்படும் வீரத்தின் தரத்தைக் குறிக்கிறது. ஓர் சிப்பாய் போரில் உறுதியாக நின்று, தனது பதவியைவிட்டு வெளியேறவோ அல்லது கடமையிலிருந்து ஓடவோ மறுத்துவிட்டார். எனவே குணசாலியாக இருக்கும் ஓர் நபர் (தாவீதின் வலிமைமிக்க மனிதர்களைப்போல்) பொறுப்புகளைச் சுமந்து செல்வதற்கும் தடைகளைத் தாண்டுவதற்கும் ஓர் உள் வலிமையைக் கொண்டிருக்கிறார். நீதிமொழிகள் 31:10 இந்த வகையான நபரைப் பற்றியது – வலிமையானவர், வீரம் மிக்கவர், தடைகளைத் தாண்டக்கூடிய உள்ளார்ந்த வலிமை கொண்டவர்.

“கோத்திரங்களின் தலைவரும், ராஜாவைச் சேவிக்கிற வகுப்புகளின் தலைவரும், ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளும் ராஜாவுக்கும் ராஜகுமாரருக்கும் உண்டான எல்லா ஆஸ்தியையும் மிருகஜீவன்களையும் விசாரிக்கிற தலைவருமாகிய இஸ்ரவேலின் சகல பிரபுக்களையும், பிரதானிகளையும், பலசாலிகளையும், சகல பராக்கிரமசாலிகளையும் தாவீது எருசலேமிலே கூடிவரச்செய்தான்” (1 நாளாகமம் 28:1).

குணசாலி ஆன ஓர் நபர் (தாவீதின் வலிமைமிக்க மனிதர்களைப்போல்) பொறுப்புகளைச் சுமந்து செல்வதற்கும் தடைகளைச் சமாளிப்பதற்கும் ஓர் உள் வலிமையைக் கொண்டிருக்கிறார்.

10ஆம் வசனத்தின் சில மொழிபெயர்ப்புகள், “குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்?” என்று கேட்கிறார்கள். மனைவி என்று மொழிபெயர்க்கப்பட்ட வார்த்தை பெண்ணுக்கு சமம். அடுத்த இரண்டு வசனங்கள் கணவனைப் பற்றிப் பேசுவதால் சில மொழிபெயர்ப்பாளர்கள் மனைவி என்ற வார்த்தையைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால் இது ஒற்றை நபரை மட்டும் குறிக்காது! இந்த வலிமையான, துணிச்சலான நபருக்கு ஞானம் அல்லது வாழ்வதற்கான திறமை உள்ளது, மேலும் நீதிமொழிகள் 31இல் அவை ஓர் ஞானமுள்ள பெண்ணில் உருவகப்படுத்தப்படுவதைக் காண்கிறோம். நாம் அவளைப் பார்க்கும்போது, அன்றாட வாழ்க்கையில் ஞானம் எப்படி இருக்கிறது என்பதைக் காண்கிறோம். இந்த பெண்ணின் குணங்கள் தேவ மக்களின் ஞானத்தை சுருக்கமாகக் கூறும் குணங்கள். அவை ஒற்றையர்களுக்கும் திருமணமானவர்களுக்கும், ஆண்களுக்கும் பெண்களுக்குமான குணங்கள்.

வேதாகமத்தின் கிரேக்க மற்றும் எபிரேய நூல்கள் இரண்டிலும் பெண் அல்லது மனைவிக்கான ஒரே வார்த்தையைப் பயன்படுத்துவது பொதுவானது. கொடுக்கப்பட்ட பத்தியில் உள்ள வார்த்தையின் பொருளை சூழல் தீர்மானிக்கிறது.

 

banner image

னவே வலிமையான ஓர் நபரின் சிறப்பியல்பு என்ன? ஓர் புத்திசாலி பெண்ணின் முதல் பண்பு அவள் நம்பகமானவள். வசனங்கள் 11 மற்றும் 12ல் நாம் வாசிக்கிறோம்: “அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்; அவன் சம்பத்துக் குறையாது. அவள் உயிரோடிருக்கிற நாளெல்லாம் அவனுக்குத் தீமையையல்ல, நன்மையையே செய்கிறாள்.” இதில் தெளிவாக விளங்குவது இந்தப் பெண் வீண் செலவுகளைத் தவிர்த்து புறம்பான மனிதர்களுக்கு விலகி ஓடுவாள் என்ற அவளது புருஷனின் உறுதியான நம்பிக்கை. அவள் மிகவும் நம்பகமானவள்.

வலிமையான மற்றும் புத்திசாலி பெண் நம்பகமானவள், நம்பிக்கைக்குரியவள் மட்டுமல்ல. அவளுடைய குணத்தின் காரணமாக அவளது புருஷனின் நம்பிக்கை இருக்கிறது. உட்குறிப்பு மூலம், இந்த வலிமையான, புத்திசாலியான பெண்ணைக் கையாளும் அனைவரும் அவளை நம்பலாம், ஏனென்றால் அவள் புருஷனுக்குத் தகுதியானவள் போலவே அவர்களுடைய நம்பிக்கைக்கும் தகுதியானவள்.

நீங்கள் நம்பகமான நபரா? உங்கள் வாழ்நாளின் எல்லா நாட்களிலும் நீங்கள் நன்மை செய்வீர்கள், தீங்கு விளைவிக்மாட்டீர்கள் என்று நம்ப முடியுமா? அப்படியானால், நீங்கள் ஓர் உண்மையான நீதிமொழிகள் 31ஐ போன்ற புத்திசாலித்தனமான வலிமையான நபராக இருப்பீர்கள்.

13 முதல் 18 வரையிலான வசனங்களில், இந்த வீரம் மிக்க, வலிமையான, உறுதியான, ஞானமுள்ள நபரும் புத்திசாலி என்பதை நாம் காண்கிறோம். நம்மில் பெரும்பாலோர் அந்த வார்த்தையின் ஒலியை விரும்புவதில்லை, ஆனால் அது அறிவாளி அல்லது ஞானவான் என்று வெறுமனே அர்த்தம் என்று அகராதி சொல்கிறது. ஓர் புத்திசாலி நபர் மற்றவர்களைப் பயன்படுத்திக்கொள்பவர் அல்ல, ஆனால் வாய்ப்புகளைப் பயன்படுத்துபவர். வசனங்கள் 13-18ல் புத்திசாலித்தனம் இப்படித்தான் விவரிக்கப்படுகிறது: இந்த ஞானமுள்ள, வலிமையான பெண் “ஆட்டுமயிரையும் சணலையும் தேடி, தன் கைகளினால் உற்சாகத்தோடே வேலைசெய்கிறாள்” என்று வசனம் 13 கூறுகிறது. அவள் எளிமையான எதையும் பற்றிக்கொள்ளமாட்டாள், ஆனால் அவளுடைய பணிகளையும் பொருட்களையும் கவனமாக தேர்வு செய்கிறாள்.

வசனங்கள் 14 மற்றும் 15 இந்த ஞானமுள்ள பெண்மணியை, “அவள் வியாபாரக் கப்பல்களைப் போலிருக்கிறாள்; தூரத்திலிருந்து தன் ஆகாரத்தைக் கொண்டுவருகிறாள். இருட்டோடே எழுந்து தன் வீட்டாருக்கு ஆகாரங்கொடுத்து, தன் வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள்.” இந்த புத்திசாலியான பெண் தொலைநோக்கப் பார்வையுடன், நிகழ்காலத்திற்கு மட்டுமல்லாது எதிர்காலத்திற்கும் தயாராகிறாள். தன் வீட்டில் உள்ள அனைவருக்கும் அவர்களுக்குத் தேவையானவை கிடைக்கும்படி அவள் தன் வேலையைச் செய்கிறாள்.

ஓர் புத்திசாலி நபர் மற்றவர்களைப் பயன்படுத்திக்கொள்பவர் அல்ல, ஆனால் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்பவர்.

இந்த பெண்ணின் புத்திசாலித்தனத்தை வசனம் 16 நமக்குக் காட்டுகிறது: “ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்; தன் கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சத்தோட்டத்தை நாட்டுகிறாள்.” அவள் சொத்துக்களை வாங்குவதில் புத்திசாலியாக இருக்கிறாள், பின்னர் அதை லாபம் ஈட்டுவதில் ஈடுபடுகிறாள். அவள் தனது திட்டங்களை கவனமாக சிந்தித்து அவற்றை எவ்வாறு வெற்றிகரமாக செயல்படுத்துவது என்று திட்டமிடுகிறாள்.

வசனம் 17 நமக்குச் சொல்கிறது, “தன்னைப் பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, தன் கைகளைப் பலப்படுத்துகிறாள்.” உண்மையில் எபிரேய மொழியில் குறிப்பிடுவது அவள் தன் பணிகளுக்கு தன் கைகளை பலப்படுத்துகிறாள், அதனால் அவள் தன் வேலைகளை வீரியத்துடன் செய்ய முடியும். புத்திசாலித்தனமான நபர் தனது அறிவையும் திறமையையும் மேம்படுத்துவது கெட்டிக்காரத்தனமாக வேலை செய்வதற்காகவே அன்றி, கடினமாக அல்ல.

சில சமயங்களில் கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியைப் பின்பற்றுவது என்பது ஒரு  திட்டம் அல்லது நன்கு சிந்திக்கப்பட்ட செயல்முறையைத் தவிர்த்து செயல்படுவதுஎன நினைக்கிறார்கள். வலிமையான மற்றும் புத்திசாலி நபர் இந்த நேரத்தில் ஆவியின் தூண்டுதலுடன் ஒத்துப்போகிறார், ஆனால் திட்டமிடல் மற்றும் தயாரிப்பு நிலைகளின்போது ஆவியின் பேச்சைக் கேட்கிறார்.

வசனம் 18 தெளிவாக உள்ளது, “தன் வியாபாரம் பிரயோஜனமுள்ளதென்று அறிந்திருக்கிறாள்; இரவிலே அவள் விளக்கு அணையாதிருக்கும்.” இந்த புத்திசாலி பெண் வெட்கமோ பயமோ இல்லாமல் வியாபாரிகளுக்கு விற்கக்கூடிய தரமான பொருட்களை தயாரிக்கிறார்.

சுருக்கமாகச் சொன்னால், குணசாலியான மனிதன் புத்திசாலி. எனவே உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: எனது அன்றாட நடவடிக்கைகளில் நான் எவ்வளவு புத்திசாலியாக இருக்கிறேன்? எனது திட்டங்கள் மூலம் நான் அவற்றை வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியுமா? நான் முன்கூட்டியே திட்டமிடுகிறேனா? நல்ல வேலையைச் செய்ய நான் என்னை ஒப்புக்கொள்கிறேனா? இந்தக் கேள்விகளுக்கு ஆம் என்று உங்களால் பதிலளிக்க முடிந்தால், நீதிமொழிகள் புத்தகத்தில் ஞானத்தின் இரண்டாவது பண்பு உங்களுக்கு உள்ளது. நீங்கள் புத்திசாலி அல்லது அறிவாளி அல்லது ஞானவான்.

புத்திசாலித்தனம் எப்போதும் பெருந்தன்மையோடு நிதானமாகவும் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் பேராசையாகிவிடும்.

வசனங்கள் 19 மற்றும் 20இல், ஓர் குணசாலியான நபரின் மூன்றாவது குணாதிசயத்திற்கு நாம் செல்கிறோம்: “தன் கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்; அவள் விரல்கள் கதிரைப் பிடிக்கும். சிறுமையானவர்களுக்குத் தன் கையைத் திறந்து, ஏழைகளுக்குத் தன் கரங்களை நீட்டுகிறாள்.” ஒரு ஞானியின் மூன்றாவது பண்பு பெருந்தன்மை. நமது ஆங்கில மொழிபெயர்ப்புகள் வசனம் 19 மற்றும் 20வது வசனத்திற்கும் இடையே உள்ள தொடர்பைப் விளக்காததால், அது உடனடியாக உரையில் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் ஹீப்ருவில் இரண்டு வசனங்களையும் இந்த காரணத்திற்காகப் பிரிக்க முடியாது: வசனம் 19இன் முதல் பாதி மற்றும் 20ஆம் வசனத்தின் கடைசி பாதி ஒரே இலக்கண அமைப்பையும் அதே வினைச்சொல்லையும் கொண்டுள்ளது; 19 ஆம் வசனத்தின் கடைசிப் பகுதிக்கும், 20 ஆம் வசனத்தின் முதல் பகுதிக்கும் இதுவே பொருந்தும் – அதே அமைப்பு மற்றும் அதே வினைச்சொல். அது நிகழும்போது, ​​எங்களிடம் எதிர்ச்சொல் (கியாசம்) என்று அழைக்கப்படுகிறது (இது ஒரு பெரிய எக்ஸ் xபோல் தெரிகிறது). இந்தப் புத்திசாலிப் பெண், ஏழைகளுக்கும் தேவையுள்ளவர்களுக்கும் தாராளமாக இருக்கவேண்டும் என்பதற்காக, நூல் நூற்பு மற்றும் புடவைகளை நெய்து, வியாபாரிகளுக்கு விற்பதற்காக ஆடைகளைச் தயார்செய்தார். புத்திசாலித்தனம் எப்போதும் பெருந்தன்மையோடு நிதானமாக இருக்கவேண்டும். இல்லையெனில் அது பேராசையாகிவிடும். பேராசையுள்ள மக்களைப் பற்றி வேதாகமத்தில் நல்ல விஷயங்களைச் சொல்லவில்லை. எனவே, ஓர் புத்திசாலி நபர் தேவைப்படுபவர்களுக்கு ஏதேனும் கொடுப்பதற்காக வாய்ப்புகளைப் பயன்படுத்துகிறார்.

புத்திசாலி மற்றும் வலிமையான நபர் திறந்த கைகளால் தன்னிடம் இருப்பதைப் இருகப்பிடிக்கக் கற்றுக்கொண்டனர். அவர்கள் அதற்குகாக நன்றி செலுத்துகிறார்கள் ஆனால் அதனை வரையறுக்கவில்லை.

குணசாலியான நபரின் நான்காவது குணாதிசயம் அடுத்த ஐந்து வசனங்களில் (21-25) காணப்படுகிறது, இது ஓர் ஞானி விடாமுயற்சியுடன் இருப்பதை நமக்குக் காட்டுகிறது: வசனம் 21 கூறுகிறது, “தன் வீட்டார் அனைவருக்கும் இரட்டைப்புரை உடுப்பிருக்கிறதால், தன் வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படாள்.” மத்திய கிழக்கில் எத்தனை முறை பனிப்பொழியும்? அடிக்கடி இல்லை. ஆனால் பனி பெய்யும்போது, இந்த விடாமுயற்சியுள்ள ஞானி தன் வீட்டாருக்கு ஏற்பாடு செய்திருக்கிறாள். அந்த வசனத்தின் இறுதி வார்த்தையின் மொழிபெயர்ப்பு சற்று வேடிக்கையாக உள்ளது. ஸ்கார்லெட் என்று மொழிபெயர்க்கப்பட்ட எபிரேய வார்த்தையானது உள்துணை (லைனிங்) ஆடைகள் என்றும் மொழிபெயர்க்கலாம். வெளியில் பனிப்பொழிவு இருந்தால், சிவப்பு நிறத்தில் இருக்கும் ஆடைகளைவிட, என்னை சூடாக வைத்திருக்கும் லைனிங் கொண்ட ஆடைகளை அணிவதில் எனக்கு ஆர்வம் அதிகம்.

வசனம் 22 நமக்குச் சொல்கிறது, “இரத்தினக் கம்பளங்களைத் தனக்கு உண்டுபண்ணுகிறாள்; மெல்லியபுடவையும் இரத்தாம்பரமும் அவள் உடுப்பு.” இந்த பெண் தன் சொந்த தேவைகளையும் மற்றவர்களின் தேவைகளையும் கவனித்துக்கொள்வதில் விடாமுயற்சியுடன் இருக்கிறாள் என்பதை “மெல்லியபுடவையும் இரத்தாம்பரமும்” உறுதிப்படுத்துகிறது. நேர்த்தியாக உடுத்துகிறாள்.

வசனம் 23 அவள் விடாமுயற்சியை சமூகத்தில் புருஷரின் நிலைப்பாட்டுடன் இணைக்கிறது: ” அவள் புருஷன் தேசத்து மூப்பர்களோடே நியாயஸ்தலங்களில் [சமூக மையம்] உட்கார்ந்திருக்கையில் பேர்பெற்றவனாயிருக்கிறான்.” இந்த புத்திசாலித்தனமான பெண்ணின் வாழ்க்கையைக் கையாளும்விதம் சமூகத்தின் தலைவர்களிடமிருந்து தனது புருஷனுக்கு மரியாதை அளிக்கிறது.

ஓர் புத்திசாலி நபர் தேவைப்படுபவர்களுக்கு ஏதாவது கொடுப்பதற்காக வாய்ப்புகளைப் பயன்படுத்துகிறார்.

வசனம் 24 இந்த ஞானமுள்ள பெண்ணின் சம்பாதிக்கும் சக்தியின் சில விவரங்களை விளக்குகிறது: “மெல்லிய புடவைகளை உண்டுபண்ணி விற்கிறாள்; கச்சைகளை வர்த்தகரிடத்தில் ஒப்புவிக்கிறாள்.” அவளது வேலை வெறுமனே ஓர் பொழுதுபோக்கு அல்ல; இது தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்காக அவரது குடும்பத்திற்கு வருமானம் ஈட்டுவதற்கான ஓர் வழியாகும்.

இதன் விளைவாக, வசனம் 25 முடிவடைகிறது, “அவள் உடை (மெல்லியபுடவையும் இரத்தாம்பரமும் மட்டுமல்ல) பலமும் அலங்காரமுமாயிருக்கிறது; வருங்காலத்தைப்பற்றியும் மகிழுகிறாள்.” சிலர் விடாமுயற்சியை உழைப்பு அல்லது வெறித்தனம் என்று நிராகரிக்கிறார்கள். ஆனால் விடாமுயற்சி என்பது ஞானத்தின் அவசியமான பகுதியாகும்.

ஓர் ஞானியின் ஐந்தாவது பண்பை வசனம் 26 நமக்குத் தருகிறது: “தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது.” வலிமையான, புத்திசாலி நபர் எப்போதும் புத்திசாலித்தனமாகவும் கனிவாகவும் பேசுவார். புத்திசாலியான நபர் நடக்கவேண்டிய வழியில் நடப்பது மட்டுமல்லாது, பேசவேண்டியதையும் பேசுவார்.

வசனம் 25 இல் வலிமைக்கான ஹீப்ரு வார்த்தை oz ஆகும். இதன் பொருள் பெலன், வலிமை மற்றும் சக்தி. இவை பெரும்பாலும் ஒரு கோட்டையை விவரிக்கப் பயன்படுகிறது.

banner image

ந்த கட்டத்தில் நீங்கள் புத்திசாலியாகவோ அல்லது வலிமையாகவோ அல்லது வீரமாகவோ இருப்பது அதிக வேலை என்று நினைக்கலாம். இவை மிகவும் அவசியப்படுகிறது! என் வேலையைப் பற்றி நான் நம்பிக்கையுடனும் சிந்தனையுடனும் இருப்பது உண்மையில் முக்கியமா? அல்லது நான் செய்யும் எல்லாவற்றிலும் நான் தாராளமாகவும் விடாமுயற்சியுடனும் இருக்கிறேனா? அல்லது நான் என் நாவை அடக்கி புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துகிறேனா? நீதிமொழிகள் புத்தகம் முழுவதிலும் விவரிக்கப்பட்டுள்ளபடி, ஞானம் என்பது வாழ்க்கையின் மையத்தில் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுப்பதாகும். நீதிமொழிகள் 8:35-36இல் நமக்குச் சொல்லப்படுகிறது, அவளை நேசிப்பவர்கள் வாழ்ந்திருப்பார்கள், ஆனால் அவளுக்கு எதிராக பாவம் செய்பவர்கள் தங்கள் சொந்த ஆத்துமாக்களுக்கு அநீதி செய்வார்கள். ஞானம் என்பது அன்றாட வாழ்க்கையின் பிரதிபலிப்பு, மேலும் அது வாழ்க்கை மற்றும் மரணத்தின் பிரதிபலிப்பு.

ஆனால் இந்த 31ஆம் அத்தியாயம் வசனம் 26 உடன் முடிவடையவில்லை. அவ்வாறு செய்தால், நமக்கு ஓர் தார்மீக நெறிமுறை இருக்கும், ஆனால் அதைச் செயல்படுத்துவதற்கான நம் சொந்த உறுதிப்பாட்டைத் தாண்டி எந்த ஆதாரமும் இருக்காது. நம்மை ஞானவான்களாக்கும் வசனங்கள் 11 முதல் 26 வரை காணப்படவில்லை. இது வசனம் 30இல் காணப்படுகிறது: “சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண்; கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.” இங்கே முக்கிய விஷயம்: புத்திசாலி, வலிமையான, உறுதியான நபர், கடந்து சென்றதற்கும் நீடித்திருப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை அறிவார். ஞானமுள்ளவன் நித்தியமானவைக்காக வாழத் தேர்ந்தெடுக்கிறான். சௌந்தரியம் வஞ்சகமானது, அழகு என்பது வீணானது என்று வசனம் 30 கூறுகிறது. அழகு நல்லது, ஆனால் அது நீடிக்காது. என்றென்றும் நிலைத்திருப்பது தேவனுடனான நமது உறவு.

நீதிமொழிகள் புத்தகம் முழுவதும் விவரிக்கப்பட்டுள்ளபடி, ஞானம் என்பது வாழ்க்கையின் மையத்தில் ஞானமான முடிவுகளை எடுப்பதாகும். ஞானம் என்பது அன்றாட வாழ்க்கையின் பிரதிபலிப்பு, ஆனால் அது வாழ்க்கை மற்றும் மரணத்தின் பிரதிபலிப்பு.

நீதிமொழிகள் 31 இல்லிருந்து நான் கேட்ட பிரசங்கங்கள் அனைத்தும் பெண்ணின் திறமைகள், அவளது தொடர் செயல்பாடுகள் ஆகியவற்றையே மையப்படுத்தியது. இவை அவளுடைய ஞானத்தின் சான்றுகள், ஆனால் இந்தப் பகுதி குறிப்பது அதனை அல்ல. உண்மையான ஞானம் தேவன் மற்றும் அவருடனான நமது உறவிலிருந்து தொடங்குகிறது. அவை “கர்த்தருக்குப் பயப்படுதல்” என்று தொடங்குகிறது. இந்த “கடவுள் பயம்” என்றால் என்ன? கடவுளின் முன்னிலையில் இது பயங்கரமா? இல்லை, கடவுள் யார் என்பதையும், அவருடனான நமது உறவில் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதையும் பற்றிய ஓர் பயபக்தியான புரிதல். நீங்களும் நானும் தெரிந்துகொள்ளக்கூடிய மிக முக்கியமான விஷயம் கடவுள் யார் என்பதுதான். நாம் அவரை நம் படைப்பாளராகவும், நம் மீட்பராகவும், நம் ஆதரவாளராகவும் அறிந்துகொள்ள வேண்டும்.

கடவுள் நம் படைப்பாளர் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். சங்கீதக்காரன் இதை அறிந்துகொண்டார்:

நீர் என் உள்ளிந்திரியங்களைக் கைக்கொண்டிருக்கிறீர்; என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர். நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும். நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது, என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை; என் கருவை உம்முடைய கண்கள் கண்டது (சங்கீதம் 139:13-15).

நம்மை உண்டாக்கிய தேவன் நம்மை வழிநடத்தவில்லையெனில் நமது அடுத்த மூச்சினை சுவாசிக்கமாட்டோம். அப்போஸ்தலனாகிய பவுல் ஏதெனியர்களிடம், அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம் என்று கூறினார் (அப்போஸ்தலர் 17:25-28).

கடவுள் நம் மீட்பர் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். சங்கீதக்காரன் தாவீது மீண்டும் நமக்காக குரல் கொடுத்தார்:

என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி, உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயது போலாகிறது. (சங்கீதம் 103:2-5).

நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதன் மூலம் நமக்குப் புது வாழ்வு கிடைக்கிறது. அவர் நம்முடைய பாவங்களுக்கான தண்டனையை ஏற்றுக்கொண்டு, சாத்தானிடமிருந்து நம்மை மீட்டெடுத்தார் (அல்லது திரும்பப் பெற்றார்). கடவுள் நம் மீட்பர் என்பதை நாம் நிச்சயமாக அறிந்துகொள்ள வேண்டும்.

கடவுள் நம் மீட்பர் என்பதை நாம் நிச்சயமாக அறிந்துகொள்ள வேண்டும். அன்றாட வாழ்க்கையின் வழக்கத்திலோ அல்லது நம்மை முந்திக்கொள்ளும் நெருக்கடிகளிலோ, கடவுளே நம்மை ஆதரிப்பவர்.

கடவுளே நம்மை ஆதரிப்பவர் என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசி ஏசாயா இவ்வாறு கூறினார்:

பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது. சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார். இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். (ஏசாயா 40:28-31).

அன்றாட வாழ்க்கையின் வழக்கத்திலோ அல்லது நம்மை முந்திச்செல்லும் நெருக்கடிகளிலோ, கடவுள் நம்மை ஆதரிப்பவர்.

1994-ல் ஓர் சனிக்கிழமை காலை 4:30 மணிக்கு எங்கள் தொலைபேசி ஒலித்து, எங்களை எழுப்பியது. அத்தகைய அழைப்பு பெரும்பாலும் கெட்ட செய்தி, குறும்பு அழைப்பு அல்லது குடிபோதையில் தவறான எண்ணை அழைப்பது போன்றவையே. எங்களுக்கு அது கெட்ட செய்தியாக இருந்தது. தொலைபேசியின் மறுமுனையில் எங்கள் மூத்த மகள் சூசன், அவளும் அவளுடைய குடும்பமும் வசிக்கும் தொலைதூர மாநிலத்திலிருந்து அழைக்கிறாள். நாட்டின் மறுமுனையில் உள்ள அரசாங்கத்திடம் இருந்து அவளுக்கு ஓர் அழைப்பு வந்தது, அங்கு எங்கள் ஒரே மகன், முற்றிலும் ஊனமுற்ற பெரியவர்களுடன் பணிபுரிந்தான். கூட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, குடிபோதையில் ஓட்டுனரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். அந்த நேரத்தில் மக்கள் எல்லாவிதமான கேள்விகளையும் கேட்கிறார்கள்: கடவுள் இறையாண்மையுள்ளவரா – அவை நடைபெறாமல் செய்திருக்க முடியுமா? கடவுள் அன்பானவரா? கடவுள் கவலைப்படுகிறாரா? கடவுள் இருக்கிறாரா? ஓர் துயரத்தின் மத்தியிலும், துக்கத்தின் மத்தியிலும், வேதத்தில் வெளிப்படுத்தப்பட்ட கடவுளைப் பற்றிய உண்மையை நாம் எப்படியாவது புரிந்துகொள்ள வேண்டும்: கடவுள் இறையாண்மையுள்ளவர் மற்றும் ஒருவிதத்தில் துயரத்தின் மூலமும் செயல்படுகிறார். இந்த வாழ்க்கையில் நாம் புரிந்துகொள்ள முடியாத வழிகளில் கடவுள் அன்பாக இருக்கிறார், ஆனால் அவை ஓர் நாள் நமக்கு தெளிவாக விளங்கும். கடவுள் கரிசனைக் காட்டுகிறார், இதை நம் வாழ்வில் நன்மைக்காகப் பயன்படுத்துவார். கடவுள் இருக்கிறார். அவர் எங்களுடன் இருக்கிறார். எபிரேயருக்கு எழுதிய கடிதத்தின் எழுத்தாளர், நம்முடைய பயங்களும் கண்ணீரும் நம்மை மூழ்கடிக்க அச்சுறுத்தும் மோசமான காலங்களில், கடவுள் ஒருபோதும் நம்மை விட்டு விலகுவதுமில்லை அல்லது நம்மைக் கைவிடுவதுமில்லை என்பதை நினைவூட்டுகிறார் (எபிரெயர் 13:5, உபாகமம் 31:6ஐ மேற்கோள் காட்டி).

ஒரு துயரத்தின் மத்தியிலும், துக்கத்தின் மத்தியிலும், வேதத்தில் வெளிப்படுத்தப்பட்ட கடவுளைப் பற்றிய உண்மையை நாம் எப்படியாவது புரிந்துகொள்ள வேண்டும்: கடவுள் இறையாண்மையுள்ளவர், ஒருவிதத்தில் துயரத்தின் மூலமும் செயல்படுகிறார்.

துயரத்தின் மத்தியிலும் கடவுளின் இந்த விழிப்புணர்வு வாழ்க்கையைப் பார்க்கவும் வலியைப் நோக்கவும் வித்தியாசமான வழியை நமக்கு வழங்குகிறது. கடவுளை அறிவது நம் இருண்ட தருணங்களில் நம்மைத் தாங்குகிறது மற்றும் இருந்ததற்கும் இருப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நமக்குக் கற்பிக்கிறது. ஆனால் கடவுளை அறிவது அன்றாட வாழ்விலும் நம்மை நிலைநிறுத்துகிறது. நம்பகமானவராக இருப்பது எளிதானது அல்ல, ஆனால் கடவுள் இருக்கிறார், நாம் நம்பப்படுவதைக் காண்கிறார். புத்திசாலித்தனமாக இருப்பது எளிதானது அல்ல, ஆனால் கடவுள் நம் வேலையைப் பார்க்கிறார், அதனால் பெருமைப்படுகிறார். தாராளமாக இருப்பது எளிதல்ல, ஆனால் கடவுள் நம் தாராள மனப்பான்மையில் கரிசனையுள்ளவராயிருக்கிறார். விடாமுயற்சியுடன் இருப்பது வேடிக்கையாக இல்லை, ஆனால் நம்மை உருவாக்கிய கடவுளை மகிமைப்படுத்த நாங்கள் வேலை செய்கிறோம். எல்லா நேரத்திலும் புத்திசாலித்தனமாகவும் அன்பாகவும் பேசுவது எளிதானது அல்ல, ஆனால் நாம் சொல்வதைக் கடவுள் கேட்கிறார். கடவுளுடனான நமது உறவு, வாழ்க்கையைப் பற்றிய வித்தியாசமான கண்ணோட்டத்தை நமக்குத் தருகிறது. முக்கியமானது என்னவென்று நமக்குத் தெரியும். எது நிலைத்திருக்கிறது, எது மறைந்துபோகக்கூடியது என்பதை நாம் அறிவதால், நித்தியமாக இருப்பவற்றைத் தேர்ந்தெடுக்கிறோம். நாம் செய்யும் ஒவ்வொரு தேர்வுக்கும் இந்த முன்னோக்கைக் கொண்டு வருகிறோம் – நம்பகமானதாக இருக்கவேண்டுமா இல்லையா, முன்கூட்டியே திட்டமிட்டு கவனமாக வேலை செய்யலாமா வேண்டாமா, இரக்கத்தைக் காட்டலாமா வேண்டாமா, விடாமுயற்சியுடன் நமது இலக்குகளைத் தொடரலாமா இல்லையா, நமது நாவை கட்டுப்படுத்தலாமா வேண்டாமா என்பதாய். நாம் எவ்வளவு புத்திசாலித்தனமாக வாழ்க்கையை வாழ்கிறோம் என்பதை கடவுள் பற்றிய நமது நம்பிக்கை தீர்மானிக்கிறது. தேவ பயம் அல்லது பயபக்தி, நித்திய வெளிச்சத்தில் நமது நேரத்தை புத்திசாலித்தனமாக நிர்வகிக்க நம்மைத் தூண்டுகிறது. கர்த்தருக்குப் பயப்படும் பயம், நம்முடைய வளங்களை மற்றவர்களுக்கு நன்மை செய்ய புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த நம்மைத் தூண்டுகிறது. ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் ஒவ்வொரு தேர்வையும் மதிப்பீடு செய்ய கர்த்தருக்கு பயப்படுவது நமக்கு உதவுகிறது.

இக்கட்டான நேரங்களில், நமது ஒரே கோட்டை இறைவன் என்பதை நாம் காண்கிறோம். “என் பெலனும், என் கோட்டையும், நெருக்கப்படுகிற நாளில் என் அடைக்கலமுமாகிய கர்த்தாவே, புறஜாதிகள் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து உம்மிடத்தில் வந்து: ‘மெய்யாகவே, எங்கள் பிதாக்கள் பிரயோஜனமில்லாத பொய்யையும் மாயையையும் கைப்பற்றினார்கள்’ என்பார்கள்” (எரேமியா 16:19)

நாம் எவ்வளவு புத்திசாலித்தனமாக வாழ்க்கையை வாழ்கிறோம் என்பதை கடவுள் பற்றி நமது நம்பிக்கை தீர்மானிக்கிறது.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு, எல்லா வீலர் வில்கோஎக்ஸ் ஓர் சிறு கவிதையை வெளியிட்டார், அதன் வரிகள் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இருந்ததைப் போலவே இன்றும் உண்மையாக இருக்கின்றன:

ஓர் கப்பல் கிழக்கே பயணிக்கிறது, மற்றொன்று மேற்கு நோக்கி,
வீசும் அதே காற்றினால்; ‘இது படகோட்டிகளின் தொகுப்பு
மற்றும் புயல்கள் அல்ல
அவை நாம் செல்லும் வழியைக் கூறுகிறது.

இவை படகோட்டிகளின் தொகுப்பு மற்றும் புயல்களால் அல்ல. அவை உங்கள் விருப்பம். ஆண்களும் பெண்களும், திருமணமாகாதவர்களும், திருமணமானவர்களும், 31ஆம் நீதிமொழிகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். என்றென்றும் நிலைத்திருக்கும் ஒளியில் உங்கள் வாழ்க்கையை புத்திசாலித்தனமாக வாழத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் செய்தால், நீங்கள் ஓர் வலுவான அர்ப்பணிப்பு, நம்பகத்தன்மை, புத்திசாலித்தனம், தாராள மனப்பான்மை, விடாமுயற்சி மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட நாவு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுவீர்கள். இன்னும் அதிகமாக, இருந்ததற்கும் இருப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் அறிவீர்கள் – மேலும் நித்தியத்திற்கும் நீடித்திருப்பதற்கு நீங்கள் உங்களை அர்ப்பணிப்பீர்கள். திறமையுடன் வாழ்வதற்கான கடவுளின் சூத்திரம் அவை. புத்திசாலியாக இருங்கள். வலிமையான நபராக இருங்கள். அவை உங்கள் விருப்பத்தேர்வு.

banner image