விதை ஒன்று போட சுரை ஒன்றா முளைக்கும்? எதை விதைத்தாயோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும் என்பதே அறுவடையின் விதிமுறை. முதலாம் நூற்றாண்டில் அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்தியருக்கு எழுதின நிருபத்தில், “மோசம் போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம் பண்ண வொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்”(கலாத்தியர் 6:7) என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே எண்ணம் யோபு புத்தகத்திலும் பிரதிபலிக்கப்படுகிறது. யோபின் நண்பர்களில் ஒருவர் யோபின் அழிவை நியாயமான தண்டனையாகவே கருதினார். “குற்றம் இல்லாமல் அழிந்தவன் உண்டோ? சன்மார்க்கர் அதம்பண்ணப்பட்டது எப்போ? இதை நினைத்துப் பாரும். நான் கண்டிருக்கிறபடி, அநியாயத்தை உழுது, தீவினையை விதைத்தவர்கள் அதையே அறுக்கிறார்கள்” (யோபு 4:7-8).

அறுவடையின் இந்த விதி பெரும்பாலும் தவறாய் அர்த்தங்கொள்ளப்படுகிறது. எனவே, பில் கிரவுடர் எழுதியதைக் கொண்டு, வேதாகமத்தின் மிகவும் பழமையான இந்த சம்பவத்தின் மீதான ஆர்வம் புதுப்பித்துத் தூண்டப்படும் என்று நான் நம்புகிறேன்.
.

– பில் கிரவுடர்

இந்தக் கட்டுரை ஐந்து தலைப்புகளில் பகுக்கப்பட்டுள்ளது.

banner image

“வாழ்க்கை என்பது முழுமையாய் துயரம், தனிமை மற்றும் வேதனை நிறைந்த ஒன்று. அத்துடன் அது சீக்கிரமாய் முடிந்துவிடக்கூடிய ஒன்று” என்று வூடி ஆலன் வஞ்சப்புகழ்ச்சியாய் கூறுகிறார். ஆலன் நமக்கு தெரியாத புதிய விஷயத்தைக் கூறவில்லை. வலியும் வேதனையும் நம்முடைய வாழ்க்கையில் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்துள்ளது. உலக அளவில் போர், பூகம்பங்கள், சுனாமிகள், வெள்ளங்கள் மற்றும் சூறாவளிகள் மூலம் பேரழிவுகள் ஏற்படுகிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் சொந்தங்களின் இழப்பு, ஆரோக்கியத்தின் இழப்பு, குழந்தையின் இழப்பு, திருமணத்தின் இழப்பு, வேலையின் இழப்பு போன்றவை அதே போன்று வேதனையைத் தருகிறது. .

நாம் உபத்திரவப்படும்போது பெயரில்லாத, முகமறியாத, இதயம் இல்லாத எதிரியை எதிர்க்கிறோம். மேலும் அந்த எதிரி நம்மால் பதில் சொல்லமுடியாத கேள்விகளை நமக்குள் எழுப்புகிறான்.

வேதனை என்பது நாம் சிறிதும் ஆயத்தமாய் இல்லாதநேரத்தில் அழையா விருந்தாளியாய் நம் வாழ்வில் வரும். விவரிக்கமுடியாத வலியும் வேதனையோடு இணைந்து வரும். அது நம்முடைய சரீரத்தில், உணர்ச்சியில், உறவில், ஆவியில் என்று எல்லா விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். நாம் உபத்திரவப்படும்போது பெயரில்லாத, முகமறியாத, இதயம் இல்லாத எதிரியை எதிர்க்கிறோம். மேலும் அந்த எதிரி நம்மால் பதில் சொல்லமுடியாத கேள்விகளை நமக்குள் எழுப்புகிறான்.

ஆனாலும், அந்தக் கேள்விகள் எவ்வளவு கடினமாக இருந்தாலும் நாம் அதற்கு சரியான பதில்களைத் தேட வேண்டும். நாம் புத்தகங்களை வாசிக்கிறோம்; சிந்தனையாளர்களிடமும், தத்துவஞானிகளிடமும், வேத நிபுணர்களிடமும் ஆசிரியர்களிடமும் விவாதிக்கிறோம். உபத்திரவத்திற்கான காரணங்கள் எதுவென கண்டுபிடிப்பதற்கு நாம் பிரயாசப்படுகிறோம். நம்முடைய எதிர்பார்ப்பு அதிகமாய் இருந்தாலோ அல்லது மூலாதாரங்கள் எவ்வளவு உறுதியாய் இருந்தாலும் அவை நமக்கு விடை தெரியாத கேள்விகளையே விட்டு வைக்கிறது. அக்கேள்விகள் நம்மை பைத்தியமாக்கும் மர்மங்களாகி, நம்மை தேவனிடத்திலிருந்து பிரிக்கவோ அல்லது இன்னும் அவரிடத்தில் நெருங்கவோ செய்கிறது.

இந்த சிறு புத்தகத்திலே, கடினமான இந்த கேள்விகளுக்கு விடை காண முயற்சிப்போம். உபத்திரவம் எப்படிப்பட்டது? உபத்திரவம் நம்மை பேர்சொல்லி அழைக்கும்போது அதற்கு எப்படி பதிலளிப்போம்? இந்த கடினமான சூழ்நிலையில் தேவனை நாம் எப்படி காண்பது?

யோபுவின் சம்பவத்தைக்காட்டிலும் உபத்திரவத்தைக் குறித்து நாம் அறிந்துகொள்வதற்கு வேறு எந்த நல்ல ஆரம்பமும் நமக்கு இருக்க வாய்ப்பில்லை. வேதாகமத்தில் மிகவும் பழமையான புத்தகத்தில் யோபுவின் சம்பவம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

பண்டைய சரித்திர தகவல்களில் அடிப்படையில், யோபு ஊத்ஸ் தேசத்திலே வாழ்ந்தவர் என்பதை அறியமுடிகிறது. அவர் “உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்” (யோபு 1:1) என்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவர் நன்மை செய்வதையும் தேவனைப் பிரியப்படுத்துவதையும் நாடினார் என்று குறிப்பிடுகிறது. ஆகிலும் ஒன்றன்பின் ஒன்றாய் தொடர்ச்சியாய் நடைபெற்ற அதிர்ச்சியான சம்பவங்களால் அவருடைய உலகம் நொறுக்கப்பட்டது. தேவனோடு அவருக்கிருந்த உறவை அது கேள்விக்குள்ளாக்கியது.

வேதாகமத்தில் உள்ள பழமைவாய்ந்த யோபு புத்தகத்தில் வலி, துன்பம் போன்ற பொதுவான மனித அனுபவங்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. யோபுவின் கதை பெரும்பாலும் பலர் அறிந்திருந்தாலும், நம்முடைய கற்பனைக்கு எட்டாத அளவுக்கு அதில் கருத்துக்கள் உண்டு. உலகத்தைக் குறித்தும் நம்மைக் குறித்தும் தேவனைக் குறித்தும் அதில் அதிகமாய் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner image

குறிப்பிட்ட பாடங்களை நாம் சுருக்கமான விளக்கங்களைக் கொண்டு எளிமையாய் அறிய முயற்சிக்கிறோம். ஆனால் அந்தச் சூழ்நிலையில் அவற்றை நாம் முழுமையாய் விளங்கிக்கொள்ள முடியாது. பேராசிரியர் ஹோவர்ட் ஹென்ட்ரிக்ஸ் என்பவர், நீச்சலைத் தபால் கல்வியின் மூலம் பயில முடியாது, அதேபோன்று, தொலைதூரக் கல்வியின் மூலம் உபத்திரவத்தின் பாடங்களையும் கற்க முடியாது. அவற்றை தவிர்க்கமுடியாத தனிப்பட்ட அனுபவங்கள் மூலமாகவே கற்க முடியும். நம்முடைய எந்த வேதனையான பாரமான கடினமான அனுபவங்கள் துன்பத்தைத் தருகின்றன?

பின்வரும் யோபுவின் அனுபவங்களின் மூலமாய் ஆழ்ந்த அறிவை நாம் பெறலாம்.

வேதனை உணர்வது என்பது மர்மம் (யோபு 1:1-12)

இரண்டாம் உலகப்போரில் அஷ்விட்ஸ் சித்திரவதை முகாமில் கைதுசெய்யப்பட்ட பிரைமா லீவை என்னும் சிறைக் கைதி, உபத்திரவத்தைப் பின்வருமாறு விவரித்தார். அவரைப் படைவீரர்கள் தங்குமிடத்தில் நெருக்கமாய் அடைத்து வைத்திருந்தனர். ஒரு சமயத்தில் அவருக்கு தாகத்தால் நாக்கு வறண்டது. அவருடைய உதடுகளை ஈரப்படுத்த ஜன்னலின் மீதிருந்த பனித்துகள்களை எடுத்து சாப்பிட்டார். அதைக் கண்ட காவலாளி, உடனே அவர் கையில் இருந்த பனித்துகள்களைப் பறித்து எறிந்தார். அந்த இரக்கமில்லாத செயலால் லீவை காவலாளியிடம் ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அந்த காவலாளி “இங்கு ஏன் என்ற கேள்விக்கே இடமில்லை” என்று பதிலளித்தானாம்.

வாழ்க்கையில் சில நேரத்தில் நாமும் இவ்வாறு உணருகிறோம். நாம் ஏன் வேதனை அனுபவிக்கிறோம் என்ற கேள்விக்கு சரியான பதில் கிடைக்காத போது மௌனம் நம்மைப் பார்த்து ஏன் கூடாது? என்று பரிகசிக்கிறது. யோபுவும் வேதனை அனுபவிக்கும்போது இவ்வாறுதான் நினைத்திருப்பார் அவருடைய ஆவிக்குரிய வாழ்க்கை பாதிக்கப்படும், பின்னடைவு ஏற்படும் என்று அவர் கனவில் கூட நினைக்கவில்லை. யோபுவின் கதையின் முதல் காட்சியில் யோபு இல்லை. தேவனுடைய தூதர்கள் அவருடைய சிம்மாசனத்தை சூழ்ந்ந்திருக்கின்றனர். சாத்தானும் அங்கே இருந்தான். அப்போது “கர்த்தர் சாத்தானை நோக்கி என் தாசனாகிய யோபின் மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப் போலப் பூமியில் ஒருவனும் இல்லை என்றார்,” “அதற்குச் சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்திரமாக, யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்?” என்றான் (யோபு 1:8-9).

தேவன் நம்முடைய ஆவிக்குரிய எதிரியான சாத்தானிடம் கேள்வி கேட்கிறார். உலகத்திலே உள்ள மனிதர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்றும் குறிப்பாக யோபுவைப் பற்றி தற்பெருமையுடன் கேட்டார். கேட்டதும் சாத்தான் பின்வாங்கினான். அவன் நீங்கள் யோபுவுக்கு அனைத்தையும் அளித்திருக்கிறீர்கள்; அவன் உங்களுக்கு சேவை செய்யாமல் இருப்பானோ என்று யோபு தேவன் மீது கொண்ட நேசத்தின் நோக்கத்தை சந்தேகித்து சாத்தான் கேள்வி கேட்கிறான். அக்கேள்வியைக் கேட்டதால் தேவன் சாத்தானுக்கு யோபுவின் விசுவாசத்தைச் சோதிக்க அனுமதி அளித்தார். பிரபஞ்சம் முழுமைக்கும் சோதனையின் ஒரு மாதிரியாக யோபு இங்ஙனம் சோதிக்கப்படுகிறார். யோபுவின் விசுவாசத்திற்கான காரணமும் தேவனோடு அவனுக்கு இருந்த உறவும் தற்போது பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகிறது.

மனுக்குலத்தின் வீழ்ச்சி பாவத்தினால் உண்டானதால் பாடு அனுபவிப்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. நாம் ஒவ்வொருவரும் வேதனையை வித்தியாசமான கோணங்களில் அனுபவிப்பதால் உபத்திரவம் என்பது உலகத்திலுள்ள அனைவருக்கும் பொதுவான ஒரு அனுபவமாகிறது. ஆதலால் தான் இதுபோன்ற விடாமுயற்சிக் கதைகள் மிகவும் வல்லமை வாய்ந்ததாக விளங்குகிறது.

வாழ்க்கையில் சில நேரத்தில் நாமும் இவ்வாறு உணருகிறோம். நாம் ஏன் வேதனை அனுபவிக்கிறோம் என்ற கேள்விக்கு சரியான பதில் கிடைக்காத போது மௌனம் நம்மைப் பார்த்து ஏன் கூடாது? என்று பரிகசிக்கிறது.

இதன் மூலம் தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையே உள்ள தொடர்பும் நம்முடைய வாழ்வும் மற்றும் ஆவிக்குரிய முடிவில்லாத ஆதிக்கமும் அதன் சம்பந்தமும் விளங்குகிறது. யோபுவிற்கு அவர் வேதனையின் காரணம் தெரியாது என்பதும் புரிகிறது. அவருக்கு வேதனையை அனுபவிப்பது மட்டும் தான் தெரியும் அதன் காரணம் ஒரு விளங்கிக்கொள்ள முடியாத மர்மமாகும். “வாழ்க்கை என்பது கடினமானது மட்டுமல்ல; அது நம்மை அச்சுறுத்தக் கூடிய விதத்தில் அநீதியினால் நிறைந்திருக்கிறது. அது நம்முடைய நிலையை நிற்கமுடியாத அளவிற்கு அசைக்கிறது” என்று ஒஸ்கின்னஸ் கூறுகிறார்.

திடீரென்று உண்டான வலி, துன்பம், இறப்பு, இழப்பு போன்றவற்றால் யோபுவின் இதயம் பல கேள்விகளால் பதைபதைக்கிறது. அதற்கு எந்த பதிலும் இல்லை.

வேதனையின் உணர்வு நம்மை மூழ்கடிக்கிறது (யோபு 1:13-19)

ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் என்னும் காவியத்தில், கிளாடியஸ் என்னும் கதாபாத்திரம், “வேதனை வரும்போது ஒற்றையாய் வருவதில்லை, மொத்தமாய் தான் வருகிறது” என்கிறது. யோபுவின் அனுபவத்தில் அது மிகவும் உண்மையானது. வேலைக்காரர்கள் ஒருவர் பின் ஒருவராய் அழிவின் செய்தியைக் கொண்டு வந்தனர்.

பின்பு ஒரு நாள் யோபுடைய குமாரரும், அவன் குமாரத்திகளும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்து, திராட்சரசம் குடிக்கிறபோது, ஓரு ஆள் அவனிடத்தில் வந்து: எருதுகள் உழுகிறபோது, கழுதைகள் அவைகளின் பக்கத்திலே மேய்ந்து கொண்டிருக்கையில், சபேயர் அவைகள்மேல் விழுந்து, அவைகளைச் சாய்த்துக்;கொண்டுபோனார்கள்; வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான். இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: வானத்திலிருந்து தேவனுடைய அக்கினி விழுந்து, ஆடுகளைபும் வேலையாட்களையும் சுட்டெரித்துப்போட்டது; நான் ஒருவன்மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான். இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: கல்தேயர் மூன்று பவுஞ்சாய் வந்து, ஒட்டகங்கள்மேல் விழுந்து, அவைகளை ஓட்டிக்கொண்டுபோனார்கள்; வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான். இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: உம்முடைய குமாரரும் உம்முடைய குமாரத்திகளும்; தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்துத் திராட்சரசம் குடிக்கிறபோது, வனாந்தர வழியாய்ப் பெருங்காற்று வந்து, அந்த வீட்டின் நாலு மூலையிலும் அடிக்க, அது பிள்ளைகளின்மேல் விழுந்ததினால் அவர்கள் இறந்து போனார்கள்; நான் ஒருவன்மாத்திரம்தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான் (யோபு 1:13-19).

அழிவைப் பற்றிய விரைவுச் செய்திகள் யோபுவின் இதயத்தை நொறுக்கியது. துக்கச் செய்தியைக் கொண்டு வந்த வேலைக்காரர்கள் ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொண்டனர். யோபுவின் காலத்தில் செல்வம் என்பது ஒருவரிடம் உள்ள சொத்தையும் வேலையாட்களையும் வைத்தே கணக்கிடப்பட்டது. இந்த இரண்டும் ஆயுதங்களாகி யோபுவின் இதயத்தை தகர்த்தது. முதலில் கழுதைகள், எருதுகள் மற்றும் வேலைக்காரர்களின் இழப்பு (1:14-15). அடுத்ததாக, “வானத்திலிருந்து தேவனுடைய அக்கினி விழுந்து” (1:16) ஆடுகளையும் வேலையாட்களையும் சுட்டெரித்துப் போட்ட செய்தி வந்தது. அதற்கடுத்து கல்தேயர் வந்து ஒட்டகங்களைத் திருடிக்கொண்டு வேலையாட்களையும் வெட்டிக் கொன்றார்கள் என்ற துக்க செய்தி வந்தது (1:17). கொண்டுவரப்பட்ட ஒவ்வொரு செய்தியும், இழப்பின் விகிதத்தை அதிகரித்துக்கொண்டே போனது. ஆனால் இறுதியாக வந்த செய்தி, யோபுவின் குமாரர்களும் குமாரத்திகளும் இறந்த செய்தி பேரிடியாக யோபுவின் இதயத்தை நொறுக்கியது. அதுவே யோபுவின் பேரிழப்பாகும் (1:18-19).

நம் இருதயத்தை உடைக்கும் பேரலைகள் நம்மை தாக்கும்போது, அது தனித்து வந்தாலும் அல்லது மொத்தமாய் வந்தாலும் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. வேதனை நம்மை மூழ்கடிக்கிறது.

உபத்திரவம் தனித்தே அனுபவிக்கப்படுகிறது (யோபு 2:13)

அவன் துக்கம் மகா கொடிய துக்கம் என்று கண்டு, ஒருவரும் அவனோடு ஒரு வார்த்தையையும் பேசாமல், இரவு பகல் ஏழு நாள், அவனோடு கூடத்தரையிலே உட்கார்ந்திருந்தார்கள் (யோபு 2:13).

சாத்தான் யோபுவின் சரீரத்தின் மீது தன்னுடைய இறுதித் தாக்குதலை நடத்துகிறான் (யோபு 2:1-8). அதன்பிறகு யோபு ஒரு ஓட்டை எடுத்து, கொடிய பருக்களைச் சுரண்டிக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்திருக்கிறான். அவன் வாழ்வில் எதிர்பாராமல் ஏற்பட்ட துன்பங்களை எண்ணிக் கலங்கினான். யோபுவின் மனைவியும் நண்பர்களும் அவன் உடனே இருந்தாலும் உண்மையில் அவன் தன் வலியை தனிமையாகவே அனுபவித்தான். தனிமையாய் இருந்தாலும், தேவனின் சமுகத்திலே இருந்தான்.

இருபதாம் நூற்றாண்டின் பிரெஞ்சு தத்துவஞானி சைமன் வெயில் கூறும்போது, “பாடனுபவிக்கும் போது ஒரு குறிப்பிட்ட காலம் வரை தேவன் ஒரு செத்த நபரைப்போன்றும், ஒளியில்லாத இருளைப் போன்றும் நமக்குத் தோன்றும். திகில் நம்மை முற்றிலும் சூழ்ந்துகொள்ளுகிறது” என்கிறார்.

சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் அழுகுரல் அவருடைய வலியையும் வேதனையையும் தனிமை உணர்வையும் வெளிப்படுத்துகிறது. “ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலி ஏலி லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்” (மத்தேயு 27:46). யோபு சாம்பலில் அமர்ந்து தன்னுடைய பெரும் இழப்பை எண்ணி வருந்தும் போது அவருடைய இருதயமும் அவ்வாறே கலங்கி இருக்கும்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்தாலும் வேதனையின் தன்மையோ அல்லது காரணங்களோ மாறுவதேயில்லை. சிலருக்கு யோபுவின் திகிலான அனுபவத்தைப் போல் வேதனை நெருங்கவில்லை. மற்றவர்கள் யோபுவின் அனுபவத்தைக் கடந்திருக்கலாம். எதுவாயினும், ஒவ்வொருவருக்கும் வேதனை என்பது தனிப்பட்ட அனுபவமாகவே இருக்கிறது. உபத்திரவம் மர்மமாகவும், நம்மை மூழ்கடிக்கக்கூடியதாகவும் இருப்பதால் அதை தனிமையில் அனுபவிப்பது மிகுந்த பாரமாய் தெரிகிறது.

banner image

டோல்ப் ஹிட்லரின் இரண்டாம் உலகப்போரின் தோல்விக்கான காரணங்கள் சிலவற்றை வரலாற்று ஆசிரியர்கள் வரையறை செய்கின்றனர். ஹிட்லர் இங்கிலாந்தை எதிர்த்து போரிடும்போது ரஷ்யாவையும் எதிர்த்து போரிட்டது தான் அவரின் தோல்விக்கு காரணமாம். இருமுனைப் போர் வேண்டாம் என்று இராணுவத் தலைவர்கள் எச்சரித்தனர். ஆயுதங்கள் போன்ற வளங்கள், சக்தி, யுக்தி மற்றும் கவனம் பிரிக்கப்பட்டதால் இருமுனைப் போரை வெல்வது சாத்தியமில்லாமல் போய்விட்டது.

யோபுவும் தான் விரும்பாத இருமுனைப் போரை அனுபவித்தார். அவரின் போர் பூமிக்குரியது மட்டுமல்ல, மாறாக, அது ஒரு ஆவிக்குரிய யுத்தமுமாகும். அவரின் நேர்மையை நிரூபிக்க அவர் தம் “நண்பர்களை” எதிர்த்துப் போராடிய அவருடைய முதல் போரோ அவருடைய இருதயத்தை சுக்குநூறாய் நொறுக்கியது. அவர் விசுவாசித்து, சேவித்த தேவனை எதிர்த்துப் போராடிய இரண்டாவது போரோ வலி மிகுந்த ஒன்றாய் இருந்தது.

யோபுவின் கதை சொல்லப்பட்ட விதம் மிகவும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. பெரும்பாலும் நாம் யோபுவின் வேதனையையே நோக்குகின்றோம். அந்த பயமுறுத்தும் வேதனையின் அனுபவம் நம் புரிதலுக்கு அப்பாற்பட்டது. யோபுவின் துயரங்களை புத்தகம் இரண்டே அதிகாரங்களில் விவரிக்கின்றது (1-2). யோபுவின் புத்தகத்திலே மீதியுள்ள 40 அதிகாரங்களிலும் யோபு தன் நண்பர்களோடும் தேவனோடும் தன் வேதனையின் காரணத்தைக் கொண்டு சண்டையிட்டதையே விவரிக்கின்றது.

இதுபோன்ற நண்பர்கள் இருந்தால்…

துயரத்தின் முதல் செய்தி யோபுவின் காதிற்கு எட்டியபோது, அவர் விசுவாசத்துடனும் தன்னம்பிக்கையுடனும் அதை எதிர்கொண்டார்: “நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன்; கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்” என்றான் (யோபு 1:21). விசுவாசத்தின் வல்லமையான யோபுவின் இந்த வார்த்தைகள் சீக்கிரத்தில் பெரிய வேதனையைக் குறிக்கும் வார்த்தைகளாய் மாறியது. வருத்தத்தின் வார்த்தைகள் முதலில் யோபுவின் மனைவியிடம் இருந்து வந்தது. யோபுவின் மனைவி பிள்ளைகளை இழந்த வருத்தத்தினால் நம்பிக்கையின்மையின் உச்சத்தில் இருந்தார். அவள் தன் கணவனிடம் கோபமாய், “தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்றாள்” (யோபு 2:9). யோபு மறுத்தாலும் யோபுவின் மூன்றாம் அதிகாரத்தின் தொடக்கம் அவருடைய வேதனையின் பாரத்தையும், அதனால் ஏற்படும் விசுவாசத்தின் பாதிப்பையும் தீர்மானத்தையும் எதிரொலிக்கிறது: “அதற்குப் பின்பு யோபு தன் வாயைத் திறந்து தன் பிறந்தநாளை சபித்து” (யோபு 3:1).

யோபுவின் மனைவியை விசுவாசமில்லாதவள் என்று சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவளுடைய இடத்தில் நாம் இருந்தால் எவ்வாறு நடந்திருப்போம்? யோபுவைப் போல அவளும் தன் பிள்ளைகளையும் சொத்தையும் இழந்தார். இப்பொழுது அவர் தன் கணவனின் வியாதியையும் நோயையும் பார்க்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

யோபுவின் வாழ்க்கையில் உபத்திரவமும் வியாகுலமும் வந்ததுடன் அவரின் ஒளிரும் விசுவாசம் அணையத் தொடங்கியது. அவரின் வலி உச்சத்தில் இருக்கும்போது அவர் அழுது புலம்புகிறார். “மரணத்துக்கு ஆசையாய்க் காத்திருந்து, புதையலைத் தேடுகிறதுபோல அதைத் தேடியும் அடையாமற்போகிறவர்களும், பிரேதக்குழியைக் கண்டுப்பிடித்ததினால் மிகவும் களிகூர்ந்து, அதற்காகச் சந்தோஷப்படுகிற நிர்ப்பாக்கியருமாகிய இவர்களுக்கு வெளிச்சமும், மனச்சஞ்சலமுள்ள இவர்களுக்கு ஜீவனும் கொடுக்கப்படுகிறதினால் பலன் என்ன?” (யோபு 3:20-22).

மரணத்திற்கு பதிலாய் அவர் இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தார். தொல்லைகளும் பயங்களும் அவருடைய சமாதானத்தின் நம்பிக்கையையே பறித்துக் கொண்டது (யோபு 3:22-26).

யோபுவின் சகிக்கமுடியாத வலியைப் புரிந்து கொள்ள எவருமில்லை. ஆறுதலுக்கு பதிலாய் வெறுப்பையும் தண்டனையையும் கிடைத்ததை எண்ணி யோபு புலம்பல் பாடுகிறார். பார்வையாளர்களுக்கு முன்பு அவர் நிற்கும் போது அவருடைய வலியையும் துக்கத்தையும் அவரால் மறைக்கவும் மறுக்கவும் முடியவில்லை. அவருக்கு இரக்கத்திற்கு பதிலாய் குற்றச்சாட்டும் ஆறுதலுக்கு பதிலாய் கண்டனமும் கிடைத்தது. அவரின் சோகங்களின் அலைகள் ஓயவில்லை. அவரின் மனைவியின் ஆலோசனை வெறும் ஆரம்ப அலையே.

யோபுவின் நண்பர்களைப் போல நாமும் பாடு அனுபவிப்பவருக்கு ஆறுதல் அளிப்பதாக நினைத்து அதிகம் பேசுகிறோம். நம்முடைய நோக்கம் சரியாகவே இருப்பினும், மற்றவர்கள் பாடு அனுபவிக்கும் நேரத்தில், “தேவனுக்காய் நாம் பேசவேண்டும்” என்ற எண்ணத்தை தவிர்ப்பது நல்லது. அதன் நோக்கம் நல்லதாய் இருந்தாலும் வேதனையின்போது வார்த்தைகள் போதுமானவையாக இருப்பதில்லை.

ஏழு நாட்களுக்கு யோபுவின் நண்பர்கள் (எலிப்பாஸ், பில்தாத் மற்றும் சோபார்) அமைதியாய் துக்கம் தெரிவித்தனர். “ஒருவரும் அவனோடு ஒரு வார்த்தையையும் பேசாமல், இரவு பகல் ஏழுநாள், அவனோடு கூட தரையிலே உட்கார்ந்திருந்தார்கள் (யோபு 2:13). எட்டாம் நாள் யோபுவின் நண்பர்கள் விமர்சிக்கத் தொடங்கினர் (யோபு 4-31). எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல விமர்சித்தனர். அவர்கள் குற்றஞ்சாட்டுவதும், பின்பு யோபு அவர்களுக்கு பதிலளிப்பதுமாகவே விவாதங்கள் தொடர்கிறது. மூன்று நண்பர்களும் அவர்களின் வேதாகம அறிவைக்கொண்டு யோபுவின் அனுபவத்தை சோதித்தனர். யோபு நேர்மையான வாழ்க்கையை வாழவில்லை என்று ஒவ்வொருவரும் அவர் மீது குற்றம் சாட்டினர். பாவம் செய்யாதவர்களை தேவன் இப்படி தண்டிக்கமாட்டார், ஆதலால் நீ ஏதோ பாவத்தை மறைக்கிறாய் என்று அவரை குற்றஞ்சுமத்தினர். யோபு 4 முதல் 31 ஆம் அதிகாரம் வரை யோபு தான் குற்றமற்றவர் என்றும் அவர்களின் குற்றச்சாட்டு அர்த்தமற்றது என்றும் யோபு வாதாடுகிறார். அவரின் நண்பர்கள் வார்த்தைகளால் தாக்குதல் நடத்தினர். ஏற்கனவே மனதளவிலும் ஆவிக்குரிய வாழ்விலும் சரீரத்திலும் காயப்பட்ட யோபுவை இன்னமும் அதிகமாய் இவர்கள் துளைத்தெடுத்தனர். அவர்களின் இரக்கமற்ற தாக்குதல் அனைவரையும் சோர்வுக்குள்ளாக்கி, கடைசியில் அந்த முயற்சி பிரயோஜனமற்றது என்பது நிருபிக்கப்பட்டது.

யாராவது ஒருவர் வேதனையை சகித்துக் கொண்டிருக்கும் போது மக்கள் வழக்கமாக இரண்டு வழிகளை கையாளுவார்கள். முதலாவது வழி அந்த உபத்திரவத்திற்கான காரணங்களைத் தேட முயற்சிக்கும் தத்துவ ரீதியானது. இரண்டாவது வழி ஆறுதல் தேட முயற்சிக்கும் போதக ஆலோசனை ரீதியானது.

யோபுவின் மனைவியும் அவருடைய மூன்று நண்பர்களும் குற்றம்சாட்டி ஓய்ந்த பிறகு, எலிகூ என்பவன் நான்காவதாக தாக்குதலைத் தொடங்குகிறான் (யோபு 32-37). மற்றவர்களைப் போலவே எலிகூவும் யோபுவின் வேதனையின் சாட்சியைக் கண்டு தேவனை யோபு கோபமூட்டியதாக எண்ணினான். மற்றெல்லாருடைய வாதத்தைக் காட்டிலும் எலிகூவின் வாதம் உச்சகட்டத்தை நெருங்கியது. யோபு 32:2 அவனுடைய அதிகப்படியான கோபத்தைத் தெரிவிக்கிறது. எலிகூவின் கோபமான விவாதம் யோபுவின் பாவமில்லாமையைக் குற்றச்சாட்டுவதாகவும், யோபுவுக்கு நேரிட்டது தெய்வீக தண்டனை என்பதையும் ஊர்ஜிதப்படுத்தியது.

இந்த வாதம் அனைவருக்கும் பரீட்சையமானது. மக்கள் உபத்திரவப்படும்போது நாம் இதை கூறுவது வழக்கம். யோபுவின் நண்பர்களும் இந்த நம்பிக்கையில் ஊறிப்போனவர்கள். தேவன் நீதிமான்களை ஆசீர்வதிப்பார் மற்றும் துன்மார்க்கனை அழிப்பார் என்னும் தெய்வீக நியாயத்தீர்ப்பின் உபதேசத்தை அவர்கள் உறுதியாய் நம்பியிருந்தனர்.

இதே நம்பிக்கையை எதிரொலிக்கும் சங்கீதம் 34 மற்றும் 37ன் உபதேசத்தை பிரதிபலிக்கும் இந்த மூன்று நண்பர்களும் யோபுவை எதிர்த்து வாக்குவாதம் செய்வது நியாயம் என எண்ணினர். இந்த அறியப்படாத போராட்டத்திற்கு பதில் சொல்ல முயற்சிப்பது யுத்தத்தில் தோல்வியையே தழுவச் செய்தது. யோபுவால் எலிகூவின் குற்றச்சாட்டிற்கு எதிராக போராடி வெற்றி பெற முடியவில்லை. யோபு மௌனமாய் சாதித்தார்.

யோபுவின் மனைவியும் அவருடைய நண்பர்களும் அவருடன் வாக்குவாதம் செய்யத் துவங்கினபோது அவருடைய யுத்தமும் துவங்கியது. ஆனால் அந்த இருமுனைப் போருக்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது.

தேவன் எங்கே?

யோபுவுக்கும் அவருடைய நண்பர்களுக்கும் இடையே நடந்த வாக்குவாத போரில் தன்னுடைய நேர்மையை நிரூபித்து தான் குற்றமற்றவர் என்று யோபு அறிவித்தார். ஆனால் அவர் வாதத்தில் ஒரு தாக்குதல் இருந்தது. அவர் தனக்குத் தானே குற்றம் சாட்டிக்கொள்ளுகிறார். ஆனால் தன்னுடைய மனைவியையும் நண்பர்களையும் யோபு தன்னுடைய எதிரியாய் நினைக்கவில்லை. யோபுவின் இலக்கு தேவனே. யோபு தேவனை நோக்கி கேள்விகள், சந்தேகங்கள், விசாரங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் என்று அடுக்குகிறார். கோபமும் அசட்டையும் அவரின் விவாதத்தில் இடம்பெற்றிருந்தது.

யோபுவின் வெளிப்படையான தன்மையே, அவருடைய சம்பவத்தை சுவாரஸ்யமானதான வாசிப்பவருக்கு மாற்றித் தருகிறது. நாம் அவரின் துன்பத்தையும் வலியையும் உணர்கிறோம். அவருடைய துன்பத்தின் ஆழத்தையும் குழப்பத்தையும் அவரின் மன வேதனைகளையும் நம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது. அதன் விளைவாய் யோபுவின் புலம்பல் நம்முடைய கண்ணீராய் மாறுகிறது.

யோபுவின் போராட்டங்கள் மூன்று கேள்விகளை குறிப்பாக உள்ளடக்கியுள்ளது. நாம் உபத்திரவப்படும்போது அவை இயல்பாய் நம் மனதில் எழுகின்ற கேள்விகள்.

  • ஆறுதலின் தேவனிடம் பயத்தைக் குறித்த கேள்வி

“என் வருத்தங்களைப் பற்றி பயமாய் இருக்கிறேன்; என்னை குற்றம் இல்லாதவனாக எண்ணமாட்டீர் என்று அறிவேன்” (யோபு 9:28).

நாம் நம் பாடுகளிடமும் அதை அனுமதித்த தேவனிடமும் பயத்தோடு சண்டையிடுகிறோம். சில நேரத்தில் தேவனின் உறவில் ஆறுதலைத் தேடுவதற்கு பதிலாக நாம் நமக்கும் தேவனுக்கும் இருக்கும் உறவையே கேள்வியெழுப்புகிறோம். வலி என்னும் ஆழ்ந்த பள்ளத்திலிருந்து வெளிவர இயலாமல், நம் கால்களை ஊன்ற முடியாமல் தவிக்கும்போது, ஆறுதலின் தேவன் நம்மை பாடுகளை அனுபவிக்க ஏன் அனுமதிக்கிறார் என்று எண்ணி ஆச்சரியப்படுகிறோம்.

  • நீதியின் தேவனிடம் அநீதியைக் குறித்த கேள்வி
உலகத்தின் விதிகளில் சிலவைகள் தவறாய் தெரிகிறது. என்ன செய்வதென்று நமக்கு தெரியவில்லை. பலவீனமானவர்கள், குற்றமற்றவர்கள் மற்றும் இளைஞர்கள் உபத்திரவப்படும்போது நாம் அவ்வாறே நினைக்கிறோம்.

“இதோ, கொடுமை என்று கூப்பிடுகிறேன், கேட்பார் ஒருவருமில்லை. கூக்குரலிடுகிறேன், நியாயவிசாரணை இல்லை” (யோபு 19:7).

நம்முடைய உபத்திரவம் எந்த அளவிற்கு மர்மமாய் இருக்கிறதோ, எந்த அளவிற்கு அது காரணமற்றதாய் தெரிகிறதோ அந்த அளவிற்கு அது அநீதியாய் தென்படுகிறது. உலகத்தின் விதிகளில் சிலவைகள் தவறாய் தெரிகிறது. என்ன செய்வதென்று நமக்கு தெரியவில்லை. பலவீனமானவர்கள், குற்றமற்றவர்கள் மற்றும் இளைஞர்கள் உபத்திரவப்படும்போது நாம் அவ்வாறே நினைக்கிறோம். யோபுவைப் போல நம் வாழ்க்கையில் அநீதி நிகழும் போது, நமக்கு எவ்வாறு நியாயம் கிடைக்கும் என்று நாம் ஆச்சரியமடையலாம்.

  • பெலனான தேவனிடம் பெலவீனமான கேள்வி

“தேவன் என் இருதயத்தை இளக்கரிக்கப்பண்ணினார். சர்வவல்லவர் என்னைக் கலங்கப்பண்ணினார்” (யோபு 23:16).

உபத்திரவம் நம்மை ஆட்கொள்ளும்போது, உலகம் எவ்வளவு பெரியது என்பதையும் நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதையும் நாம் அறிய நேரிடுகிறது. அந்த தருணங்களில் தேவனின் பெலனை நாடுகிறோம். ஆனால் அதே நேரத்தில், வாழ்க்கையை வெறுக்கச் செய்யும் காரியங்களை தேவனே அனுமதிப்பது போல் தோன்றும். நம்முடைய பெலவீனமான நேரங்களிலும் யோபுவின் இந்த திகிலான வார்த்தைகள் நம்முடைய இருதயங்களிலும் எதிரொளிக்கிறது.

யோபுவின் கேள்விகள் குற்றச்சாட்டுவதாகவும், மனச்சோர்வை பிரதிபலிப்பதாகவும், சந்தேகங்களை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது. ஜீவனுள்ள தேவனுடைய சமுகத்திற்கு அவர் வரும்வரை அக்கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை.

வேதாகம சம்பவங்கள் நிகழ்ந்த காலத்தில் மக்கள், பாடுகளையும் வியாதியையும் தனிநபரின் பாவத்தோடு தொடர்புப்படுத்திப் பார்த்தனர். சுவிசேஷத்தில் இயேசுவின் சீஷர்கள் அவரிடம் “ரபீ இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ? என்று கேட்டார்கள்” (யோவான் 9:2).

யோபு தேவனை எதிர்க்க விரும்பினார்; அவருக்கு மக்களின் ஆதரவு வேண்டும் என்று எதிர்பார்த்தார். அவரின் கேள்விகளுக்கு பதில் கிடைக்க வேண்டும் என்று விரும்பினார் (யோபு 38:1)! அப்பொழுது தேவன் பெருங்காற்றிலிருந்து குற்றஞ்சாட்டுகின்ற, கோபப்படுகின்ற, ஏமாற்றமடைந்த, இன்னமும் வேதனை அனுபவிக்கின்ற யோபுவிற்கு உத்தரவளித்தார். தேவன் தன்னுடைய தொடர்ச்சியான கேள்விகள் மூலம் யோபுவிற்கு சவால்விட்டார்:

“நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி. அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு. அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்? அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே” (யோபு 38:4-7).

4 ஆம் வசனம், “நான் (தேவன்) பூமியை அஸ்திபாரப்படுத்துகிற போது நீ (யோபு) எங்கே இருந்தாய்?” என்று எபிரெய மொழியிலிருந்து நேரடியான மொழியாக்கம் செய்யப்படுகிறது.

அளவிடமுடியாத சிந்தை, ஞானம் மற்றும் நோக்கங்களுக்கு காரணரான சர்வ சிருஷ்டிகரை யோபு முகமுகமாய் சந்திக்கிறார். சர்வவல்லவரோடே வழக்காடி அவருடைய ஞானத்தைப் பற்றி கேள்வி கேட்க யோபுவுக்கு என்ன உரிமை இருக்கிறது? ஜீவனின் அதிபதியை அவர் குற்றஞ்சாட்டலாமா? பரிசுத்த தேவனுடைய பிரசன்னத்தில் தன்னுடைய தகுதியை அவர் வெளிப்படையாகத் தெரிவிக்கலாமா?

யோபுவின் அனுபவங்கள் ஆசாபின் சங்கீதத்தை பிரதிபலிக்கின்றது. தேவனுடைய பிரசன்னத்தை நாடும்வரைக்கும் ஆசாபின் உபத்திரவத்திற்கான காரணம் அவருக்கு புலப்படவில்லை (சங்கீதம் 73:17). யோபுவின் உபத்திரவத்திற்கான காரணம் அவருக்கு கிடைக்கவில்லை என்றாலும், அவருடைய உபத்திரவத்திலிருந்து அவருக்கு மீட்பு கிடைக்கவில்லையென்றாலும், தேவனுடைய பிரசன்னத்தில் யோபு தீர்வை கண்டைகிறார்:

அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன். நீர் எனக்குச் செவிகொடும், அப்பொழுது நான் பேசுவேன்; நான் உம்மைக் கேள்விகேட்பேன், நீர் எனக்கு உத்தரவு சொல்லும். என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது. ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான் (யோபு 42:1-6).

யோபுவின் உபத்திரவத்திற்கான காரணத்தை அறிவிக்காமல், அவருடைய வேதனைகளிலிருந்து அவரை விடுவிக்காமல், தேவன் தன்னுடைய வல்லமையும் ஞானமும் யோபுவின் அறிவிற்கு அப்பாற்பட்டது என்பதை அவருக்கு விளங்கச்செய்கிறார்.

உபத்திரவத்தின் தீர்வும், அது ஏற்படுத்தும் சந்தேகங்களையும் நிவிர்த்தி செய்வதற்கு விவாதம் என்பது தீர்வாகாது. தேவனுடைய கிருபையைச் சார்ந்து, அவருடைய வல்லமையை நம்பும் போது தான் தீர்வு கிடைக்கிறது. அந்த உபத்திரவம் குழப்பமாயும் நம்மை மூழ்க்கடிக்கிறதாயும் இருந்தாலும் அதற்கு நிச்சயமாய் தீர்வு கிடைக்கும்.

banner image

பத்திரவத்தின் நாட்கள் கடினமானது. ஆனால் அவைகள் வீணடிக்கப்பட்டுவிடக்கூடாது. பாடுகள் நம்மை போதித்து நடத்துகிறது. பெஞ்சமின் டிஸ்ரேலி, “அதிகமாய் பார்ப்பதும், அதிகமாய் பாடு அனுபவிப்பதும், அதிகமாய் படிப்பதும் கற்றுக்கொள்ளுதலின் மூன்று முக்கிய தூண்களாகும்” என்று கூறுகிறார். உபத்திரவம் என்பது வரவேற்கக்கூடிய ஆசிரியர் அல்ல. ஆனால் இழப்பு, வியாகுலம், வலி போன்ற இருளின் பாதையிலிருந்து யோபு என்ன கற்றுக்கொண்டார்?

உபத்திரவம் தவிர்க்க முடியாதது

“தீங்கு புழுதியிலிருந்து உண்டாகிறதுமில்லை; வருத்தம் மண்ணிலிருந்து முளைக்கிறதும் இல்லை. அக்கினிப் பொறிகள் மேலே பறக்கிறது போல, மனுஷன் வருத்தம் அனுபவிக்கப் பிறந்திருக்கிறான்” (யோபு 5:6-7).

“பிறந்தேன், துன்பப்பட்டேன், இறந்தேன்,” என்ற ஆங்கில இலக்கியத்தின் மிகச் சிறிய கவிதையை கார்ல் சான்ட்பர்க் எழுதுகிறார்.

ரால்ப் வால்டோ எமர்சன், “அவர் பார்த்திருக்கிறார்; ஆனால் உலகத்தில் பாதி மக்கள் அந்த வலியின் வேதனையை பார்த்ததில்லை. உலகை மூன்றில் இரண்டு பங்கிற்கு மேலாகக் கடல் சூழ்ந்துள்ளது போலவே மகிழ்ச்சியான மனிதனை துன்பமே சூழ்ந்துள்ளது” என்று எழுதியுள்ளார்.

தேமானியனாகிய எலிப்பாஸ் ஊக்கமான வார்த்தைகளை சொல்லியிருந்தாலும் (யோபு 5:6-7), அது ஆறுதலுக்காகவோ அல்லது குற்றம் சாட்டுகிறதற்காகவோ இருக்கலாம். ஆனால் அதிலும் உண்மையில்லை. பாவத்தால் சீர்கெட்டுள்ள உலகத்தில் அக்கினிப் பொறிகள் மேலே பறக்கிறது போல மனுஷன் வருத்தம் அனுபவிக்கவே பிறந்திருக்கிறான். உடைந்த இந்த உலகத்தில் உபத்திரவம் என்பது விதிவிலக்கு அல்ல; அது தவிர்க்கமுடியாதது. பாடுகளோடு கூடிய வாழ்க்கை தான் இவ்வுலக மக்களின் இயல்பு வாழ்க்கை.

தேவன் உயிரோடு இருக்கிறார்  

“என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்” (யோபு 19:25).

மீட்பர் என்பதைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட எபிரெய மொழியின் வார்த்தை “கால்.” பழைய ஏற்பாட்டு வரலாற்று புத்தகங்களில் “கால்” என்றால் அடைமானம் வைக்கப்பட்ட சொத்தை மீட்பவர் அல்லது அடிமைத்தனத்திலிருந்து ஒரு நண்பனையோ அல்லது உறவினரையோ விலைகொடுத்து வாங்குபவர் என்று பொருள் தருகிறது.

உடைந்த இந்த உலகத்தில் உபத்திரவம் என்பது விதிவிலக்கு அல்ல;
அது தவிர்க்கமுடியாதது.

நம்மால் தவிர்க்க முடியாத வேதனை மற்றும் இழப்புகளுக்கு நாம் எவ்வாறு பதிலடி கொடுப்பது? தலை விதியா? யதார்த்தமா? சந்தேகமா? நம்பிக்கையின்மையா? விசுவாசமா? அனைத்தும் கலந்த கலவையா? இதில் எதன் மூலம் நாம் பதிலடி தருவது? நம் இதயங்களும் நம் மனங்களும் இவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று தடுமாறும். சில நேரங்களில் நாம் விதியின் மேல் உள்ள நம்பிக்கையை இழக்கிறோம். சில நேரங்களில் சந்தேகங்களுக்கு மத்தியிலே நாம் நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறோம். தேவன் இருக்கின்றாரா என்று சந்தேகப்படுவதைத் தவிர்த்து, யோபுவின் உபத்திரவம் அதை அவருக்கு உறுதிப்படுத்தியது. நம்முடைய சூழ்நிலைகள் கைமீறிப் போகும்போது, தேவனுடைய வல்லமையை முழுமையாய் நம்ப முற்படுவோம். அது நம்முடைய உபத்திரவத்தின் பாதையில் நம்மை நேர்த்தியாய் நடத்தும். இன்னும் மேன்மையான அனுபவத்தை அடையலாம். அவர் நம்மோடு இருப்பதால் நாம் ஸ்திரப்படுத்தப்படுவோம்.

தேவன் அறிவார்

“ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்த பின் நான் பொன்னாக விளங்குவேன்” (யோபு 23:10).

தேவன் உயிரோடிருப்பது மட்டுமன்றி நாம் சந்திக்கும் சோதனைகளை முழுவதும் அறிந்திருக்கிறவராய் இருக்கிறார். கிறிஸ்துவில் தேவன் நம் பலவீனங்களைக் குறித்து பரிதபிக்கக்கூடியவராகவே இருக்கிறார் (எபி. 4:15). தேவன் நம் உபத்திரவத்தின் பாதையை அறிவார் என்பதை யோபு கற்றுக்கொண்டார், அது அடிக்கடி நடக்கின்ற ஒன்று அல்ல. நம்முடைய வாழ்க்கையின் இருளான பாதையை அவருடைய சித்தத்திற்கு ஏற்றவாறு நம்மை உருவாக்கி வடிவமைப்பதற்கான கருவியாய் கர்த்தர் பயன்படுத்திக்கொள்ளுகிறார்.

நம்முடைய வாழ்க்கையைக் குறித்தும், நம்மைக் குறித்தும், நம்முடைய பரலோக தேவனைக் குறித்தும் நாம் அறிந்துகொள்ளுவதற்காக, நம்முடைய உபத்திரவத்தின் பாதையை வீணாக்காமல் அவற்றையும் நேர்த்தியாய் பயன்படுத்துகிறார்.

உபத்திரவத்தின் பாதையில் பயணிக்கிறவரிடம் என்ன கூறுவது: “எனக்குத் தெரியாது…” “என்னை மன்னித்துவிடு…” “எனக்கும் புரியவில்லை…” “நான் உன்னை நேசிக்கிறேன்…” “தேவன் உன்னை பாதுகாப்பார்…”

தேவன் நம்பகமானவர்

“கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்” (யோபு 1:21) என்று யோபு சொல்லுகிறார்.

யோபுவின் இந்த முதல் பதிலே சிறந்த பதிலாகும். இந்த விசுவாசத்தின் வார்த்தைகளே உண்மை என்று நிரூபிக்கப்பட்டது. இந்த உபத்திரவத்தின் பாதையில் தேவனை நம்பும் நம்பிக்கையே நாம் கற்றுக்கொள்ளும் சிறந்த பாடம். நம்முடைய அறிவிற்கு புலப்படாத தேவனின் உன்னத ஞானமும் அவரின் நம்பகத்தன்மையும் தான், புயல்வீசும் வாழ்க்கைத் தருணங்களில் நங்கூரமாய் நம்மைக் காக்கிறது.

banner image

ழமையான கிரேக்கக் கவிஞர் எஸ்கைலஸ் தன்னுடைய கற்றலின் தத்துவத்தை துன்பத்தின் பாதையில் தான் நிலைநிறுத்தினார். அவரின் இதே வார்த்தைகளைத் தான், டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் கொலை செய்யப்பட்ட நினைவு நாளை ஆசரிக்கும் 4 ஏப்ரல் 1968 அன்று இந்தியானா கூட்டத்தின் முன்பு ராபர்ட் கென்னெடி மேற்கோள் காட்டினார்.

உறங்கிக்கொண்டிருக்கும்போதும், இனம்புரியாத ஒரு வலி
துளித் துளியாய் இதயத்தில் சிந்தி,
நாம் சற்றும் விரும்பாத வேதனையை அனுபவிக்கச்செய்து,
தேவ கிருபையினால் ஞானத்தைக் கற்றுக்கொடுக்கிறது.”

“தேவ கிருபையினால் வரும் ஞானம்.” விலையேறப்பெற்ற ஞானம். யோபு கற்றுக்கொண்ட ஞானத்தை நாம் பார்க்கும்போது அது பழமையான ஒன்றாக நமக்குத் தெரியும். ஆனால் நாம் அந்த உபத்திரவத்தின் பாதையில் பயணிக்கும்போது இந்த கொள்கைகளை நாம் உறுதியாய் பற்றிக்கொள்ள பிரயாசப்படுகிறோம்.

சிலுவையில் தேவன் நம்முடைய பாடுகளுக்குள் உட்பிரவேசித்து, நம்மை அதிலிருந்து நித்தியமாய் மீட்டுக்கொண்டார்.

எலீ வீசல் என்பவர் ஆஷ்விட்ஸ் சித்திரவதை முகாமில் கைதியாக இருந்தபோது அவரைக் கட்டாயப்படுத்தி ஒரு சிறுவனின் மரணதண்டனையை பார்க்கும்படி செய்தனர். அச்சிறுவன் இறந்தபோது எலீ விம்மி அழுதுகொண்டு திணறிய குரலில், “தேவன் எங்கே? தேவன் எங்கே?” என்று கேட்டுக் கொண்டிருந்தார். அந்த 15 வயது சிறுவனின் மரணத்திற்கு கிடைத்த ஒரே பதில், “தேவன் அங்கே தூக்கு மேடையில் தான் தொங்கிக் கொண்டிருக்கிறார்” என்பதே.

வீசலின் பார்வையில் ஒரு உண்மை இருக்கிறது. உபத்திரவத்தின் பிரச்சனைக்கு தேவனுடைய சிலுவையே தீர்வு. சிலுவையில் தேவன் நம்முடைய பாடுகளுக்குள் உட்பிரவேசித்து, நம்மை அதிலிருந்து நித்தியமாய் மீட்டுக்கொண்டார். “தேவன் சிந்திய கண்ணீரே இயேசு” என்று பீட்டர் கிரீப்ட் பொருத்தமாய் கூறுகிறார்.

ஹென்றி நவென், தேவன் நம்மிடம் இருந்து உபத்திரவத்தை நீக்கி நமக்கு விடுதலை அளிப்பது இல்லை; மாறாக, நம்முடைய அந்த வேதனையை பகிர்ந்துகொள்ளுகிறார் என்று கூறுகிறார். இயேசு கிறிஸ்து “நம்மோடு – சேர்ந்து – பாடனுபவிக்கும் – தேவன்” என்பது சிலுவையில் நேர்த்தியாய் நிருபிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் ஜார்ஜ் மாக்லீட் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

தேவாலயத்தின் இரண்டு மெழுகுவர்த்திகளின் நடுவில் கிறிஸ்து சிலுவையில் அறையப்படவில்லை, இரண்டு கள்ளர்களுக்கு மத்தியிலே சிலுவையில் அறையப்பட்டார். நகரத்தின் குப்பைக் குவியலின் மேலே, குறுக்குச் சாலையிலே, எபிரெயம், கிரேக்கம், லத்தீன் ஆகிய மொழிகளிலே பட்டப் பெயர் எழுதப்பட்டு, குற்றப்படுத்துகிறவர்களின் பேச்சும், படைவீரர்களின் சூதாட்டமும் நிகழ்ந்த இடத்திலே இயேசு சிலுவையில் அறையப்பட்டார். ஏனெனில் அவர் அதற்காகத் தான் அங்கு மரித்தார். அவர்களுக்காக தான் அவர் மரித்தார்.

சிலுவையிலே பாடுபட்ட இரட்சகர், “நம்மோடு – சேர்ந்து – பாடனுபவிக்கும் – தேவன்” என்ற உண்மையால் தூண்டப்பட்டவராய் ஜான் ஸ்டாட், “சிலுவை இல்லை எனில் என்னால் தேவனை ஒருபோதும் நம்பியிருக்க முடியாது. ‘சிலுவையில் தெய்வம்’ என்று நீட்சே கேலி செய்த அந்த ஒரே தேவனைத் தான் நான் விசுவாசிக்கிறேன். பாடுகள் நிறைந்த இந்த உலகத்திலே பாடுகளின் உணர்ச்சி சற்றும் இல்லாத ஒரு தெய்வத்தை யாரால் ஆராதிக்க முடியும்?”

நாத்திகவாதியான ஒரு புத்திக் கூர்மையுள்ள தத்துவஞானியாய் சிறந்து விளங்கிய பிரெட்ரிக் நீட்சே, தன்னுடைய வாழ்க்கையின் இறுதி நாட்களை ஒரு மனநல மருத்துவமனையில் கழித்தார். மீட்கமுடியாத, இரக்கமற்ற, கருணையற்ற ஒரு உலகம் நம்மை அதிகமாக ஆட்கொள்வதாகவும் பயமுறுத்துவதாகவும் தெரிகிறது.

தேவன் அவருடைய அநாதி சிநேகத்தினால் நம்மை நேசிக்கிறார். கிறிஸ்துவை நேசிப்பவர்கள் இதை முழுமையாய் நம்பி, பாடுகளின் மத்தியில் பயணித்துக்கொண்டிருக்கும் உலகத்திற்கு இந்த உண்மையை தெரியப்படுத்தலாம். நாம் மதம், சித்தாந்தம், கோட்பாடு, இறையியல் என்று எதையும் கொடுக்கவில்லை. “நம்மோடு – சேர்ந்து – பாடனுபவிக்கும் – தேவன்” என்ற உயரிய அங்கீகாரம் கொண்ட இயேசுவையே நாம் கொடுக்கிறோம்.

read_more