2004-ல் ஸ்ரீலங்காவையும் மற்ற ஆசிய நாடுகளையும் சுனாமி தாக்கியபோது, அச்சமயத்தில் கிறிஸ்துவுக்கு வாலிபர் அமைப்பின் தேசிய இயக்குநராக இருந்த அஜித் பெர்னாண்டோ அவர்கள் தான் பார்த்த பெருந்துயர் சம்பவங்களின் அடிப்படையில் “சுனாமிக்குப் பின்” என்ற ஒரு புத்தகத்தை எழுதினார். பின்னாட்களில் அமெரிக்க வளைகுடாவை தாக்கிய கேட்ரீனா மற்றும் ரீடா புயல் பேரழிவுக்குப் பின் அந்தப் புத்தகம் சில மாற்றங்களுடன் பயன்படுத்தப்பட்டது.

சொல்லொணா இழப்புகள் மற்றும் பயங்கரங்கள் ஆகியவற்றைப் புரிந்து கொள்ள முயற்சிப்பவர்களுக்கு அவருடைய புத்தகம் சொல்லும் செய்தி மிகவும் உதவியாக இருக்கிறது. ஆகவே, அதை தற்காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி, இந்த கோவிட்-19 பெருந்தொற்றின் பயங்கரமான காலத்தில் திரும்பவும் வெளியிடுவது அவசியமானது என்று உணர்கிறோம்.

~நோயல் பெர்மன்

ஆசிரியரிடமிருந்து…

நகரங்கள், நாடுகள் அல்லது உலகளாவிய பேரழிவுகள் நம்மைத் தாக்கும்போது, வழிகாட்டுதலுக்கும் தேவையான பலத்தைப் பெறுவதற்கும் கிறிஸ்தவர்கள் வேதாகமம் என்ன சொல்கிறது என்று பார்த்து, கஷ்டப்படுகிற ஜனங்களை கிறிஸ்துவின் அன்புடன் சந்திக்க வேண்டும். பேரழிவுகள் ஏற்படும்போதும், அதற்குப் பின்னரும் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் என்ன செய்ய வேண்டும் என வேதாகம அடிப்படையில் சிந்தனை செய்ததன் விளைவாக இந்த புத்தகத்தை எழுதினேன். கடுமையான பிரச்சனைகளை அல்லது நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொள்கிறவர்களுக்கு இந்த புத்தகம் உதவியாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

~அஜித் பெர்னாண்டோ

பலம் மற்றும் வழிகாட்டுதலைப் பெற நாம் வேதாகமத்தைப் பார்க்க வேண்டும்.

banner image

அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு; புலம்ப ஒரு காலமுண்டு, நடனம்பண்ண ஒரு காலமுண்டு” என்று வேதம் சொல்கிறது (பிரசங்கி 3:4). அழிவு ஏற்படும் காலம் என்பது நிச்சயமாக அழுவதற்கும் துக்கப்படுவதற்குமான ஒரு காலம்.

தேவனுக்கு உண்மையாக இருந்த ஜனங்கள் தாங்கள் அனுபவித்துக் கொண்டிருந்த அல்லது ஏன் கடவுள் தங்களுக்கு இவைகளை அனுமதித்தார் என்று கேள்வி கேட்டு பாடிய/எழுதிய புலம்பல்கள் என்றழைக்கப்படுகிற முக்கியமான பகுதிகள் வேதாகமத்தில் உண்டு. சில புலம்பல்கள் கஷ்டத்தை அனுபவித்த தனி நபர்கள் எழுதியது. மற்றவை தங்கள் தேசத்தை நேசித்து, அதன் பாடுகளுக்காக துக்கப்பட்டவர்கள் எழுதியது ஆகும். தேசத்தின் பாடுகளுக்காக துக்கத்தை வெளிப்படுத்துகிறதற்காக எழுதப்பட்ட புலம்பல்கள் என்ற ஒரு புத்தகம் வேதாகமத்தில் உண்டு.

“ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் ஜனமாகிய குமாரத்தி கொலையுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும்பகலும் அழுவேன்” என்று எரேமியா கதறினார் (எரேமியா 9:1). அவர் தன் ஆத்துமாவில் வேதனையின் நிமித்தம் அழ விரும்பினார். இந்த வாக்கியத்திற்குப் பின் எரேமியா சொல்லும் வார்த்தைகள் அழுகையானது அவனுடைய ஆத்துமாவிற்கு ஒரு குணமாகுதலைக் கொண்டு வர உதவியாக இருந்தது என்பதைக் காண்பிக்கிறது.

நம் குடும்பம், சமுதாயம், அல்லது தேசம் மீது வந்த வேதனையுடன் நாம் போராடிக்கொண்டு இருக்கும்போது, நம் துக்கத்தை வெளிப்படுத்துதல் மன அழுத்தத்தத்தில் இருந்து விடுபட உதவி செய்து, நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு நாம் பயனுள்ளவர்களாக இருக்கும்படி செய்கிறது

நெகேமியாவுக்கு நடந்தது இதுதான். எருசலேமின் பாழான நிலையைக் குறித்து அவன் கேள்விப்பட்ட போது, அவன் துக்கமுகமாயிருப்பதை ராஜா காணுமளவும் அவன் அழுது, துக்கப்பட்டு, உபவாசித்து, ஜெபித்தான். ஆனால், துக்கத்தின் நாட்கள் முடிந்த பின்னர், அவன் செயல்பட ஆரம்பித்து, அவன் நாடறிந்த கதாநாயகனாக மாறினான். அவனுடைய சிறந்த தலைமைத்துவ மாதிரியானது ஒரு சிறந்த உதாரணம் ஆகும். 2500 ஆண்டுகள் கடந்த பின்னர் அது இன்றும் பயன்படுத்தப்படுகிறது.

உபவாசித்தல் (2 சாமு.1:12), இரட்டு உடுத்துதல் (சாக்கு ஆடை அணிதல்) (ஆதி.37:34; 2 சாமு.3:31), மற்றும் சாம்பலில் உட்காருதல் (எஸ்தர் 4:1-3; எரே.6:26; 25:34) என ஜனங்கள் தங்களுடைய துக்கத்தை பல்வேறு விதங்களில் வெளிப்படுத்துவது பற்றி நாம் வேதாகமத்தில் வாசிக்கிறோம். நம் கலாச்சாரத்திற்கேற்ப துக்கத்தை வெளிப்படுத்துவது எப்படி என்பதை நாம் கண்டறிய வேண்டும்.

நிச்சயமாக, ஒரு குடும்பத்திற்காக, சபைக்காக, சமுதாயத்திற்காக, அல்லது தேசத்துக்காக உபவாசிப்பது ஜெபித்தல் என்பது பயங்கரமான காலங்களில் அதிகம் விரும்பப்படுகிறதாக இருக்கிறது. ஸ்ரீலங்காவில் சுனாமிக்குப் பின், ஜனங்கள் வெள்ளைக் கொடியை ஏற்றுதல் மற்றும் அசைவாட்டுதலை துக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு அடையாளமாக காண்பித்தனர். ஒவ்வொரு கலாச்சாரத்திலும் அதற்கே உரித்தான முறையில் துக்கத்தை வெளிப்படுத்துகின்ற வழிமுறைகள் உண்டு.

தொற்காள் மரித்த பின் பேதுரு அவளுடைய வீட்டிற்குச் சென்ற போது, “அப்பொழுது விதவைகளெல்லாரும் அழுது, தொற்காள் தங்களுடனேகூட இருக்கையில் செய்திருந்த அங்கிகளையும் வஸ்திரங்களையும் காண்பித்து, அவனைச் சூழ்ந்து நின்றார்கள்” (அப்.9:39). இது போன்ற காட்சியை வேதாகமத்தில் பல இடங்களில் நாம் காணலாம்.

நம் சபைகளில் புலம்பலைப் பற்றிய வேதாகமப் புரிதலுடன் நம் கலாச்சாரத்திற்கு ஏற்ற விதத்தில் துக்கத்தை வெளிப்படுத்துவது எப்படி என்பது குறித்து நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டியதாக இருக்கிறது.

நம் கலாச்சாரத்திற்கு பொருந்தும் விதத்தில் துக்கத்தை வெளிப்படுத்தும் வழிமுறைகளை நாம் கண்டறிய வேண்டும்.

banner image

தேவனுடைய ஆளுகையை உறுதியாகப் பற்றிக் கொள்ளுதல்

ஏன் ஒரு பயங்கரம் நிகழ்ந்தது என கேட்பது வேதாகம அடிப்படையிலான புலம்பலின் ஒரு தன்மை ஆகும். யோபு, எரேமியா மற்றும் சங்கீதங்களை எழுதியவர்களைப் பற்றிய உதாரணங்களைத் தந்து, இந்த கேள்வியைப் பற்றி பிடித்துக் கொள்ளும்படி வேதாகமம் நம்மை உற்சாகப்படுத்துகிறது. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள யோபு நீண்டகாலம் போராடினான். வழக்கமாக, பற்றிப் பிடித்துக் கொள்ளும் காலத்தின் இறுதியில், தேவன் ஆளுகை செய்கிறார் மற்றும் என்ன நடக்கிறது என்பதை அவர் அறிந்திருக்கிறார் என்கிற படியால் தேவனை நம்புவதுதான் ஞானம் நிறைந்த ஒரு செயல் என தேவ ஜனங்கள் உறுதிப்படுத்துகின்றனர். சங்கீதங்களில் இதை நாம் அடிக்கடி காணலாம் (எ.கா. சங்.73).

பயங்கரமான காலத்தில் தேவனுடைய ஆளுகையை நம்புவது என்பது போராட்டத்தின் மத்தியில் எழும் நம்பிக்கையின்மையை தவிர்க்க நமக்கு உதவுகிறது. மோசமான பயங்கரத்தில் இருந்தும் கூட தேவன் அவரை நேசிக்கிறவர்களுக்கு நன்மையான ஒன்றை கொண்டு வரமுடியும் என விசுவாசித்து, தேவனுடைய வாக்குத்தத்தத்தைச் சார்ந்து நாம் இருக்க வேண்டும் (ரோமர் 8:28). தேவனுடைய ஆளுகையைப் பற்றிய இந்தக் கண்ணோட்டம் உடனடியாக வந்துவிடுவதில்லை. சில நேரங்களில் நாம் இது சம்பந்தமாக தேவனுடன் போராட வேண்டியது அவசியமானதாக இருக்கிறது. இது போன்ற தருணங்களில், ஜெபிப்பதும், தேவனுடைய வார்த்தையை தியானிப்பதும் மிகவும் உதவியாக இருக்கிறது (சங்.27). ஒரு பயங்கர அழிவுக்கு மத்தியில் அல்லது மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்தியில் பணி புரிகிறவர்களாக நாம் இருக்கக் கூடும். ஆனாலும், நாம் தேவனுடன் மற்றும் அவருடைய வார்த்தையுடன் இருப்பதற்கு நேரத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்.

துன்ப காலத்தில் தேவனுடைய ஆளுகையை நம்புவது, போராட்டங்களின் நடுவே நம்பிக்கை இழப்பதை தவிர்க்க நமக்கு உதவுகிறது.

ஆகவேதான் தேவனுடைய ஜனங்கள் எப்பொழுதும் ஆராதிக்கிற சமுதாயத்துடன் இணைந்து, நிலைமையானது எவ்வளவு மோசமானதாக இருந்தாலும், இணையத்தின் வழியாக நடப்பதாக இருந்தாலும் கூட, எப்பொழுதும் தொடர்ந்து தேவனை ஆராதிக்க வேண்டும். நாம் ஒன்றிணைந்து ஆராதிக்கும்போது, தேவனுடைய ஆளுகையை நமக்கு நினைவுபடுத்துகிற நித்திய உண்மைகளை நாம் நோக்கிப் பார்க்கிறோம்.

இந்த உண்மைகளை அறிந்து கொள்வது, நம்மைச் சூழ்ந்திருக்கிற காரிருளை விலக்க உதவுகிறது. மேலும், தேவன் நம்மைப் கவனித்துக் கொள்ளும்படி அவரை நம்புவதற்கான பலத்தையும் நமக்குத் தருகிறது. தேவனால் மற்றும் தேவனுடைய வார்த்தையினால் நாம் ஆறுதலைப் பெறும்போது, பாடுபடுகிற மற்றவர்களுக்காக தியாகத்துடன் பணிபுரிவதற்கான பலத்தைப் பெறுகிறோம்.

சிருஷ்டியுடன் இணைந்து வேதனையை வெளிப்படுத்துதல்

ஆதாமும் ஏவாளும் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்த போது, பாவமானது உலகத்தில் பிரவேசித்து, இந்த பிரபஞ்சத்தில் சமநிலை அற்றுப் போனது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சிருஷ்டியானது ஒரு சாபத்தின் கீழ் இருப்பதாக வேதாகமம் காண்பிக்கிறது (ஆதி.3:17; ரோமர் 8:20). ஆகவே, தேவன் புதிய வானத்தையும் புதிய பூமியையும் உண்டாக்கும் நாள் வரைக்கும் இயற்கைப் பேரழிவுகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும் (2 பேதுரு 3:13; வெளி.21:11). “சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது” என்று பவுல் சொல்கிறார் (ரோமர் 8:22). இப்படி சொல்லிய பின்பு, கிறிஸ்துவை அறிந்திருக்கிறவர்களும் இந்த வேதனையில் பங்கெடுத்துக் கொள்கிறார்கள் என அவர் சொல்கிறார் (வ.23). 2004ல் நிகழ்ந்த சுனாமிக்கும் பின் ஏற்பட்ட விளைவுகளின் போது அல்லது பெருந்தொற்றுக் காலத்தில் துடித்துக் கொண்டிருக்கும் காலத்தில், சிருஷ்டியின் மற்றும் தேவ ஜனங்களின் வேதனையையும் தெளிவாகப் பார்த்திருக்கிறோம். கிறிஸ்தவர்கள் வேதனையை வெளிப்படுத்துதல் எப்படி என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். நாம் கற்றுக் கொள்ள வில்லை எனில், தேவன் நம்மை ஊழியம் செய்ய அழைக்கும் இடங்களில் பிரச்சனைகள் எழும்பும் போது, நாம் தேவனுடைய சித்தத்தை விட்டு விலகி ஓடுவதற்கும் மற்றும் பாதுகாப்பான ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றும் சோதிக்கப் படலாம். வேதனையை வெளிப்படுத்துதல் என்பது கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க நமக்கு உதவுகிறது.

ரோமர் 8ல் சொல்லப்பட்டிருக்கிற வேதனையை வெளிப்படுத்துதல் என்பது பிரசவ வேதனையாக குறிப்பிடப்பட்டிருக்கிறது (வ.22). பிள்ளை பிறக்கும் நேரத்தில் தாங்கமுடியாத வேதனையை அனுபவிக்கும் பெண்களால் அந்த வேதனையை சகிக்க முடிகிறது. ஏனெனில் அவர்கள் குழந்தை பிறந்த பின் உண்டாகும் மகிமையான தருணத்தை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

அது போல, நம் வேதனைகளை வெளிப்படுத்துதல் என்பது நிச்சயமாக வரப் போகிற மகிமையான முடிவை நமக்கு நினைவுபடுத்துகிறதாக இருக்கிறது (2 கொரி.5:2-4 ஐ பார்க்கவும்). தேவன் நம்மை வைத்திருக்கிற கடினமான சூழ்நிலைகளில் இருந்து விலகி ஓடாதபடி இருப்பதற்கு இது நமக்கு உதவுகிறது. நாம் பாடுகளை சகிக்க முடியும். ஏனெனில் நிலையான, நித்தியமான விடுதலையானது பரலோகத்தில் நிச்சயம் நமக்குக் கிடைக்கும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.

நம் மன கசப்பை உள்ளேயே வைத்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, தேவனுடைய சமூகத்தில் மற்றும் அவருடைய ஜனங்களுக்கு மத்தியில் வேதனைகளை வெளிப்படுத்த நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

வேதனைகளை வெளிப்படுத்துவதும் கூட நாம் அனுபவித்த வேதனையின் கசப்பை நீக்குகிறது. நம் மன கசப்பை உள்ளேயே வைத்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, தேவனுடைய சமூகத்தில் மற்றும் அவருடைய ஜனங்களுக்கு மத்தியில் வேதனைகளை வெளிப்படுத்த நாம் கற்றுக் கொள்ள வேண்டும். நாம் இதைச் செய்யும்போது, நம் வேதனையை வெளிப்படுத்தி, நம் வேதனையான அனுபவத்தில் உருவான அழுத்தத்தை வெளியேற்றுகிறோம். அதன் பின், கசப்பானது வளரவோ அதிகரிக்கவோ முடியாது. நாம் வேதனைகளை வெளிப்படுத்துவது என்பது, தனிப்பட்ட முறையிலோ அல்லது நம் நண்பர்கள் மூலமாகவோ, தேவன் நம்மை ஆறுதல்படுத்த அனுமதிக்கிறது. நாம் உண்மையிலேயே ஆறுதல்படுத்தப் படும்போது, நம்மால் கசப்புணர்வுடன் இருக்க முடியாது. ஏனெனில் கசப்பின் அடிநாதமாக இருக்கிற கோபத்தை விரட்டி அடிக்கும் அன்பை நாம் அனுபவிக்கிறோம். ஆகவே, நாம் தனிப்பட்ட முறையில் அல்லது பலருடன் சேர்ந்து வேதனைகளை வெளிப்படுத்தும்போது, தேவனுடைய ஆளுகையின் கீழ் இந்த உலகம் இருக்கிறது என்ற நம்பிக்கை நம் மனதின் ஆழத்தில் இருந்தாலும் கூட, ஏன் இப்படி ஒரு காரியம் நடந்தது என நம் வேதனைகளை வெளிப்படுத்துவதுலின் ஒரு பகுதியானது தேவனிடம் கேட்கிறது.

வேதனைகளை வெளிப்படுத்தும் தேவன்

தேவனைப் பற்றிய ஆச்சரியமான வேதாகம போதனைகளில் ஒன்று என்னவெனில், நாம் வேதனைகளை வெளிப்படுத்தும்போது, அவரும் நம்முடன் கூட சேர்ந்து பெருமூச்சு விடுகிறார் என்பதாகும் (ரோமர் 8:26). நம்முடைய கசப்பான அனுபவம் இன்னதென்பதை தேவன் அறிந்திருக்கிறார், அவர் நம் வேதன