இ ந்த கொந்தளிப்பான உலகில் நாம் எங்கே அமைதியைக் காண கூடும்? வன்முறையை இன்னும் அதிக வன்முறையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். சிலர், “வாழுங்கள், வாழ விடுங்கள்” என்கிறார்கள். இன்னும் சிலர், “அன்புதான் பதில்” என்கிறார்கள். இன்னும் அதிகாரம் உள்ளவர்கள் அதை தங்கள் சொந்த நலனுக்காக அடிக்கடி பயன்படுத்துகிறார்கள் என்றே தோன்றுகிறது. பலமுள்ளவன் எளியவர்களை ஆளும்போது, உண்மையான அமைதிக்கு வாய்ப்பு உண்டா?
நம் பிரச்சனை என்னவென்றால், கொந்தளிப்பு நம் ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்கிறது. நம் உள்ளங்கள் பயத்தாலும் பீதியாலும் கலங்குகின்றன. அமைதி சாத்தியமற்றதாகத் தெரிகிறது.
ஆசிரியரும் பேச்சாளருமான பில் கிரவுடர், அமைதிக்கான நமது புரியாத தேடலை, இயேசுவின் வாழ்க்கையிலிருந்து படம்பிடித்து நமக்காக எழுதுகிறார். இயேசு தம்முடைய சொந்த மரணத்தை எதிர்கொண்டபோதும், மற்றவர்களுக்கு ஆறுதல் கூறினார். “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக” (யோவான் 14:27) என்றார்.
இயேசு நமக்கு அளிக்கும் உன்னதமான சமாதானத்தை பற்றி மேலும் படிக்க உங்களை அழைக்கிறோம்.
எ லி வீசல் யுத்தத்தின் விளைவுகளை குறித்த தனது எழுத்து பணிக்காக 1986 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். இரண்டாம் உலகப் போரின் இனப்படுகொலையிலிருந்து தப்பிய வீசலின் நைட் என்ற புத்தகம், ஆஷ்விட்ஸ்-பிர்கெனாவ் என்ற மரண முகாமில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் ஒரு இளம் யூத சிறுவனாக அந்த அனுபவம் அவரது உள்ளத்திற்கும் ஆத்துமாவிற்கும் என்ன செய்தது என்பதை விவரிக்கிறது. வீசல் முகாமில் இருந்து தப்பினார், ஆனால் ஹிட்லரின் “யூதப் பிரச்சனையின் இறுதித் தீர்வு” க்கு தனது தங்கை, தாய் மற்றும் தந்தையை இழந்தார்.
எலி வீசலின் அனுபவங்கள் கடந்த நூற்றாண்டின் மரணத்தையும் அழிவையும் பிரதிபலிக்கும் ஒரு சிறிய ஆனால் கடுமையான சித்திரமாகும். கிட்டத்தட்ட உலகெங்கிலும் நிழுவிய இடைவிடா மோதல்நிலை காரணமாக இருபதாம் நூற்றாண்டு, மனித வரலாற்றில் இரத்தக்களரியான நூற்றாண்டு ஆகும். தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மனித இனத்தின் பல்லாயிரக்கணக்கான மனிதர்களை அழிக்கும் திறனை நாடுகளுக்கு அளித்தது. இருபதாம் நூற்றாண்டு மோதல்களில் கொல்லப்பட்டவர்கள் கிட்டத்தட்ட 88 மில்லியன் நபர்கள், அந்த உயிரிழப்புகளில் ஐம்பத்து நான்கு மில்லியன் பொதுமக்கள் அடங்குவர் (ஆதாரம்: http://necrometrics.com/all20c.htm).
இன்று, சுருங்கி கொண்டே வரும் நமது உலகளாவிய மனித சமூகத்தைச் சுற்றியுள்ள நிகழ்வுகளின் செய்திகள் வன்முறை, ஆபத்து, வெறுப்பு மற்றும் அழிவு ஆகியவற்றின் இடைவிடாத அமைதியற்ற இரைச்சலில் நம்மை நிலைகுலையச் செய்கிறது. இத்தகைய செய்திகள் பெருகும்போது, பயம் மற்றும் விரக்தியின் வலிமையை உணர்கிறோம்.
நிலை என்பதைக்கா- ட்டிலும் அதிகம்
ஆனால் சமாதானத்தையும் பாதுகாப்பையும் பறிப்பது வன்முறை மட்டும் அல்ல. சமாதானம் என்பது உணர்ச்சி, அறிவுசார்பு மற்றும் உடல் ரீதியானது, மேலும் இது இந்த முனைகளில் எதிலும் அச்சுறுத்தப்படலாம். அப்படி நடக்கையில், திரும்பப் பெறுவது எப்படி என்று தெரியாத ஒன்றை நாம் இழக்கிறோம். நமது அமைதி உணர்வுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது உண்டாகும் நிச்சயமற்ற தன்மை, உடல் ரீதியாகவோ அல்லது உணர்ச்சி ரீதியாகவோ நம்மை பீதி அடையச் செய்யலாம், ஓடி ஒளிந்து கொள்ள நாம் விரும்பலாம் அல்லது அந்த அமைதியை நாம் தவறான இடங்களிலும் காரியங்களிலும் தேடலாம். நம் மனதையும், ஆன்மாவையும், உடலையும் அழிக்கும் வன்முறைக்கு முடிவுகட்ட ஆசைப்படும் உலகில் நாம் வாழ்வதில் ஆச்சரியமில்லை.
மக்கள் அமைதிக்காக பாடுபடுகிறார்கள், ஏங்குகிறார்கள். இறுதியில் நாம் விரும்பும் அமைதியும், வேதாகமம் விவரிக்கும் அமைதியும் சண்டைகள் இல்லாத ஒரு நிலை என்பதைக்காட்டிலும் அதிகம். ஷாலோம் என்ற எபிரேய வார்த்தையின் முழுமையே இந்த சமாதானம் ஆகும். இது “இரண்டு வஸ்துகளுக்கு இடையே (குறிப்பாக மனிதனுக்கும் தேவனுக்கும் இடையில் அல்லது இரு நாடுகளுக்கு இடையே) அல்லது ஒரு தனிநபர் அல்லது குழுவின் நல்வாழ்வு, நலன் அல்லது பாதுகாப்பு ஆகியவற்றைக் குறிக்கும் ஒரு நிலையாகும்”.
உண்மையில், இரண்டையும் பிரிக்க முடியாது. நம்மை நேசிக்கும் தேவனுடன் நாம் சமாதானம் ஆவதின் மூலம், ஒருவரோடு ஒருவர் சமாதானமாக இருக்கும் போதுதான் நம் இதயங்களில் நாம் ஏங்கும் சமாதானம் கிடைக்கும். இது சமாதானத்தை மோதல் இல்லாத நிலை என்பதிலும் மேலானதாக உருவாக்குகிறது; அது நம் தேவனின் நன்மையை சுவாசிக்கும் வாழ்க்கைத் தரம். ரோமர் 14:17ல் பவுலின் வார்த்தைகளின் சாராம்சமும் இதுதான்: “தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.”
ராஜ்யத்தைப் பற்றிய பவுலின் விளக்கம், தற்போது உள்ளவற்றின் தன்மையைப் பற்றி பேசுகிறது; இல்லாததை பற்றி அல்ல. ராஜ்யம் நீதியையும் மகிழ்ச்சியையும் பற்றி பேசுகிறது, அகிலும் . . .
சோர்ந்துபோன நம் இதயங்களை அமைதிப்படுத்தும் சமாதானம்;
நம் பசியுள்ள ஆத்துமாக்களை போஷிக்கும் சமாதானம்;
நமது தனிப்பட்ட உறவுகளை பலப்படுத்தும் சமாதானம்.
ஆகியவற்றை குறித்தும் பேசுகிறது.
பயம் என்பது ஆபத்தான உலகில் வாழ்வதின் இயற்கையான விளைவு. பயம் நம் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும், அமைதியையும் பறித்து, பிரச்சனையின் ஒரு பகுதியாக நம்மையும் மாற்றுகிறது. உதவிக்கு நாம் எங்கு செல்லலாம்? மெய்யான, அர்த்தமுள்ள சமாதானத்தின் வாக்குத்தத்ததை நாம் எங்கே காணலாம்? இதற்கான பதில்களுக்கு, இயேசுவைப் பின்பற்றுபவர்களின் இதயங்களில் பயமும் குழப்பமும் ஆட்சி செய்த ஒரு இரவை நாம் நீண்ட காலத்திற்கு முன்பு பார்க்கலாம், மேலும் அந்த அச்சங்களைச் சமாளிக்க அவர் அவர்களுக்கு அமைதியை வழங்கினார்.
அச்சத்தின் இரவு
சிறுவனாக இருந்தபோது, ஒரு பழைய கல்லறையுடன் இணைக்கப்பட்ட இரண்டு தெருக்களிலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு காலை செய்தித்தாள்களை விநியோகித்தேன். இருட்டில் (அதிகாலை சுமார் 3:00 மணியளவில்) அந்த மயானத்தின் வழியாக நடப்பது எனக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது. ஒவ்வொரு ஒலியும் அதிர்வுக்குள்ளாக்கியது, ஒவ்வொரு அசைவும் அச்சமாக இருந்தது. நாம் அனைவரும் அத்தகைய பயத்தை அனுபவித்திருக்கிறோம். இரவின் இருளில் ஏதோ ஒரு அச்சுறுத்தல் உள்ளது, அது நம் அச்சங்களை எடுத்து அவற்றைப் பெருக்குகிறது. பகலில் சாதாரணமாக தோன்றும் விஷயங்கள் இரவில் அச்சமூட்டுகின்றன.
பெரியவர்களாகிய நாம் மிகவும் வித்தியாசமான அச்சங்களை எதிர்கொள்கிறோம். அச்சங்கள் வெறும் மாயை அல்ல, ஆனால் ஒரு எழுத்தாளர் கூறியது போல், “காயப்பட்ட மக்கள் மக்களை காயப்படுத்துகிறார்கள்” என்று ஒரு உடைந்த உலகத்திலிருந்து வெளியேறும் பயங்கரங்கள் அவை.
யோவான் 14ல் இதுவே காலத்தின் தேவையாக இருந்தது. சிலுவைக்கு முந்தைய இரவில், ஒரு மேல்வீட்டு அறையில், அந்த நேரத்தின் பதற்றத்தால் சூழ்நிலையே நீண்டு, பதற்றமடைந்தது. தீவிர மோதல்கள் என்று எதுவமில்லாதபோதும் அங்கே நிச்சயமாக அமைதி இல்லை. அன்றிரவு, சீடர்களுக்கு சோகமும் பயமும் பரவியது.
பல நாட்களாக, இயேசுவின் சீடர்கள் உணர்ச்சிகளோடு போராடிக்கொண்டிருந்தனர். எருசலேமில் தமக்கு காட்டிக்கொடுப்பு, துன்பம் மற்றும் மரணம் காத்திருப்பதை பற்றி இயேசு கடந்த சில மாதங்களாக அவர்களை எச்சரித்திருந்தார். இயேசு எருசலேமை நோக்கிச் செல்வதைக் கேட்ட தோமா, “அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள்” (யோவான் 11:16) என்று சொன்னது, இந்தச் செய்தி சீடர்களை வெகுவாகப் பாதித்ததை காண்பிக்கிறது.
அவர்கள் இறுதியாக அந்த பண்டைய நகரத்தில் நுழைகையில், அவர்கள் எதிர்பார்த்திருந்ததுபோல மூர்க்கமான மக்கள் கூட்டமோ, மிரட்டல்களோ அங்கேயில்லை. மாறாக நேரெதிராக நடந்தது. ஜனக்கூட்டம் போதகர் இயேசுவை “ஓசன்னா” என்று வாழ்த்தி, குருத்தோலைகளை அசைத்து வரவேற்றது. இது சீடர்கள் எதிர்பாராத ஒன்று. அந்த குருத்தோலை ஞாயிறில் தனக்கு கிடைத்த மதிப்புமிக்க வரவேற்பின் மத்தியிலும், இயேசு தனது சீடர்களை அந்த மேல்வீட்டுரையில் தனது கடைசி இராபோஜனத்திற்காக ஒன்று சேர்க்கையில் (யோவான் 13), அவர்களது மனநிலை மீண்டும் கவலையால் மூழ்கியது.
இயேசு, மிக உயர்ந்த ஊழியத்தின் செயலாக, இஸ்ரேலின் பஸ்காவின் கூறுகளை எடுத்துக்கொள்வதற்கு முன்பு அவர்களின் கால்களைக் கழுவி, அவருடைய துன்பத்தையும் மரணத்தையும் குறிக்கும் அவரது புதிய நினைவு போஜனத்தை உருவாக்கினார். எகிப்தில் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரேலின் மீட்பை அடையாளப்படுத்துவதற்காக ஒரு காலத்தில் இருந்த போஜனம், இப்போது பாவம் மற்றும் உடைந்த நிலையிலிருந்த மனிதகுலத்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்பதை சித்தரிக்கிறது.
இயேசு அவர்களுக்குச் சொல்வதையெல்லாம் புரிந்து கொள்ள அவர்களின் மனம் போராடி கொண்டிருக்கையில், யூதாஸ் திடீரென்று இயேசுவைக் காட்டிக் கொடுப்பதற்குத் தயாரானான் (வச. 21-30). அந்த நினைவு விருந்தின் நடுவில் யூதாஸ் ஏன் வெளியேறினான் என்பது மீதமுள்ள சீடர்களுக்குத் தெரியவில்லை, மேலும் அந்த குழப்பம் அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களால் மறக்க இயலாத அந்த மாலையின் வேதனையின் எடையை அதிகரித்தது.
இறுதியாக, பேதுருவின் வரவிருக்கும் மறுதலிப்புகளை இயேசு முன்னறிவித்தார் (வச. 36-38). தலைவரும் வலிமையானவருமான பேதுரு கூட விலகுவார் என்ற இந்த இறுதி வெளிப்பாடுதான் அவரது சீடர்களை குழப்பத்திற்கும் சந்தேகத்திற்கும் உள்ளாகியது. ஒருவேளை அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து இவ்வாறு முணுமுணுத்திருக்கலாம், “இது எப்படி சாத்தியம்? யூதாஸ் எங்கே போனான்? இயேசு ஏன் வெளியேறுகிறார்? இப்போது நமது நிலை என்ன? பேதுரு உண்மையில் தோல்வியடைவாரா? நானும் மறுதலிப்பேனா?”
எல்லா இடங்களிலும் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களுக்குப் பரிச்சயமான ஆறுதல் வார்த்தைகளை இந்தக் குழப்பத்தின் மத்தியில் இயேசு பேசினார். மேலும் அவர் அவற்றை குறிப்பாக பேதுருவிடம் பேசினார். இயேசுவின் வார்த்தைகளின் முதன்மை மையமாக பேதுரு இருந்தபோதிலும், மற்ற சீடர்களைப் போலவே, அந்த வார்த்தைகள் நம்முடைய சொந்த போராட்டக் காலங்களிலும் நமக்கு ஆறுதலைத் தரக்கூடும் என்பதைக் காண்கிறோம்.
“மி ன்னுவதெல்லாம் பொன்னலல்ல” என்ற இந்த பழமொழி நமக்கு அத்தியாவசியமான எச்சரிப்பை தருகிறது. சமீபத்திய வியத்தகு தயாரிப்பு (தயாரிப்பை குறிப்பிடத்தக்க யாராலும் சோதிக்கப்படவில்லை அல்லது அங்கீகரிக்கப்படவில்லை என்றால்) நம்ப முடியாத முடிவுகளை வழங்குவதாக ஒரு தொலைக்காட்சி விளம்பரம் வெளிவந்தால், கவனமாக இருங்கள். எடுத்துக்காட்டாக, ஒரு உணவு மாத்திரை ஒரு மாதத்தில் முப்பது கிலோ எடையை இழக்க உதவும் என்றால், அந்த சலுகையின் நம்பகத்தன்மையை நீங்கள் ஆராய்வது புத்திசாலித்தனமாக இருக்கும். வாக்குறுதியை நிறைவேற்ற கூடிய நபரின் திறன், அவர்கள் விற்கும் எதையும் வாங்குவதில் நமக்கு நம்பிக்கை ஏற்படுவதற்கு முக்கியமானது.
அந்த மேல்வீட்டு அறையில் கலக்கமடைந்த தம்முடைய சீடர்களுக்கு ஒன்றை வழங்கினார். அவர் அவர்களுக்கு சமாதானத்தை வழங்கினார்; மேலும் அவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றுவார்.
யோவான் 14 ஆரம்பிக்கையில், இயேசு தம் சீடர்கள் தம்மை நம்பலாம் என்பதை நினைவூட்டுகிறார். அவர்களின் குழப்பத்தின் நடுவே அவரது வார்த்தைகள் அமைதியின் குரலாக இருந்திருக்கும்; அது நமக்குள்ளும் இருக்கலாம். “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்” (யோவான் 14:1).
இந்த வார்த்தைகள் அமைதியான மக்கள் ஒன்றாக ஒரு இனிமையான மாலையை அனுபவிக்கும் போது பேசப்படவில்லை. பேதுரு போன்ற துக்கத்திலும், கலக்கத்திலும், குழப்பத்திலும் இருந்த மனிதர்களிடம் இயேசு அந்த வார்த்தைகளைப் பேசினார். அவர்களின் எண்ணங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இயேசு ஆறுதலளிக்கும் இரண்டு யோசனைகளைக் கூறினார்:
உங்கள் இருதயம் கலங்குவதை நிறுத்துங்கள். இது எதிர்மறையான கட்டளை, அது வலிமையானது. கலக்கம் என்ற வார்த்தையின் அர்த்தம் “கலக்கப்பட்டது, தொந்தரவு செய்யப்பட்டது, குழப்பத்தில் தள்ளப்பட்டது.” “உங்கள் இதயத்தின் நடுக்கத்தையும் அதிர்ச்சியையும் நிறுத்துங்கள்” என்று இயேசு அப்பட்டமாக சொல்லியிருக்கிறார். இருதயம் என்பது புரிந்துகொள்ளும் இடம், அது ஒரு தனிப்பட்ட உலகம், உங்களை “உங்களாகவே” ஆக்குகிற பகுதி. நம்மை யார் என்று தீர்மானிக்கும் மைய புள்ளியில், கலக்கமடைவதை நிறுத்துங்கள் என்று இயேசு கூறுகிறார்.
அவர்களின் இதயம் ஏன் கலங்கியது? தெரியாத எதிர்காலத்தை குறித்த பயம், ஒருவேளை எல்லாவற்றிற்கும் மேலாக தங்களைப் பற்றிய பயம். அவர்களுடைய இருதயங்களில் பயமும் குழப்பமும் ஆட்சி செய்ய அனுமதிப்பதை நிறுத்தும்படி இயேசு அவர்களிடம் கூறினார். இருப்பினும், இயேசு வெறுமனே, “கவலைப்படாதே, மகிழ்ச்சியாக இரு; எல்லாம் சரியாகிவிடும்.” என்று சொல்லவில்லையென்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும். கலங்குவதை நிறுத்த அவர் ஒரு காரணத்தைக் கூறினார். தன்னையே சமாதானத்திற்கான காரணமாக அவர்களுக்களித்தார்.
தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். இயேசு அவர்களிடம் வெறுமனே அரையை கட்டிக்கொள்ளுங்கள், பேசாதிருங்கள் அல்லது இதனை கடந்து போங்கள் என்று சொல்லவேயில்லை. அவர்களின் சமாதானத்திற்கான ஆரம்ப புள்ளியை கொடுத்தார், அது விசுவாசம். அவர் மீதுள்ள நம்பிக்கையை கொண்டு அவர்களுடைய பயம் மற்றும் விரக்தியைப் போக்க அவர்களுக்கு அறைகூவல் விடுத்தார். இயேசுவின் வார்த்தைகள், தேவனை நம்புவதற்கு அவர்களுக்குக் கற்பிக்கப்பட்ட அதே வழியில் அவரை நம்பும்படி அறைகூவல் விடுத்தன.
பயத்தில் மூழ்கிக்கொண்டிருந்த அவர்களுக்கு, இந்த வார்த்தைகள் ஒரு உயிர்காக்கும் படகு. மீட்பையும் பாதுகாப்பையும் வழங்கிய வார்த்தைகள். ஏதோ இயேசு அவர்களிடம், “நீங்கள் என்னை கைவிடக்கூடும், ஆனால் நான் ஒருபோதும் கைவிட மாட்டேன். வரப்போகும் இருளான காலத்தில் என்னை நம்புங்கள்,என்னை விசுவாசியுங்கள். நீங்கள் என்னை புறக்கணித்தாலும் நான் உங்களை புறக்கணிக்கமாட்டேன். நீங்கள் எத்தகைய சூழலை எதிர்கொண்டாலும் என்னை நம்பலாம்” என்று சொன்னதுபோலிருந்தது. சமாதானத்திற்கான அவருடைய வாக்குத்தத்தம், அவர்மீதும் நம்மை மீட்கும் அவருடைய திறன் மீதும் நாம் வைத்திருக்கும் நம்பிக்கையுடன் பிணைக்கப்பட்டுள்ளது.
சிலுவை மற்றும் உயிர்த்தெழுதலுக்கு பின்பாக கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களுக்கு, இந்த நம்பிக்கை இன்னும் ஆழமானது. அவருடைய உயிர்த்தெழுதலால் பெற்ற வெற்றியின் சத்துவதை நாம் அனுபவித்திருக்கிறோம். மரணத்தை பரிகரித்தவர் ஒருபோதும் கைவிட்டதில்லை, கைவிடவுமாட்டார் (பார்க்கவும் 1 கொரிந்தியர் 15) அவருடைய ஆறுதல் மெய்யாகவும், வாக்குத்தத்தம் நம்பத்தக்கதாகவும் இருப்பதால் நமக்கு சமாதானம் உண்டு (ரோமர் 5:1–2).
பிரச்சனைகளும் போராட்டங்களும் இல்லாத வெற்று விசுவாசத்தை இயேசு நமக்கு வழங்கவில்லை என்பதை நினைவில் கொள்வது அவசியம். அவர் இதயத்தின் வலிகள் மற்றும் தோல்விகளின் யதார்த்தத்தை அவர் ஒப்புக்கொள்கிறார், மேலும் அவர் எல்லாவற்றையும் விட பெரியவர் என்பதைக் காண நம்மை அழைக்கிறார்.
ஆனால் இயேசு அதோடு நிறுத்தவில்லை. அவர் வரவிருக்கும் சோதனைகளில் சமாதானத்தை உறுதியளிப்பது மட்டுமல்லாமல், இந்த சிதைந்த உலகின் சோதனைகள் நித்தியமாக அகற்றப்படும் சமாதானமான இடத்தைப் பற்றியும் அவர்களுக்குச் சொல்கிறார்.
மைகேல் பப்பிலே என்பவரின் “வீடு” என்ற தலைப்பிலுள்ள நாட்டுப்புற பாடலின் வரிகள், தான் சொந்த வீட்டில் இல்லையென்ற ஏக்கத்தை புலம்பும் சஞ்சாரியின் கதையை பதிவிடுகின்றன. அவர் வீட்டிற்குச் செல்லவும், வீட்டில் இருக்கவும், ஒருவிதத்தில் வீட்டிலேயே தங்கிவிடவும் ஏங்குகிறார்.
பாடலின் வலிமையான உணர்ச்சியானது, வீடென்பது எப்படியாக இருக்க வேண்டும், சிறந்த வீடு நமக்கு எவ்வாறாக இருக்க நாம் ஏங்குகிறோம் என்பதில் வேரூன்றியுள்ளது. மிகச் சிறப்பாக, வீடு என்பது நாம் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் உணரும் இடமாகும். நம்மை வரவேற்கும் இடம். நமக்கு சொந்தமான இடம். இங்குள்ள நமது வீடுகள் அபூரணமானவை, மேலும் அவற்றுக்கான நம் ஆசைகள் அனைத்தும் பெரும்பாலும் குறைந்துவிடுகின்றன என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். ஆனால் அதன் சிறந்த தருணங்களில் நாம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஒருபோதும் ஏமாற்றம் அடையாமலும் இருக்க வேண்டுமென்ற ஏக்கத்தையும் பசியையும் வீடு நம்மில் ஏற்படுத்துகிறது.
நாம் இதுவரை அறிந்திராத வீட்டைப் போன்ற ஒரு வீட்டைப் பற்றிய கற்பனையைப் பயன்படுத்தி இயேசு அந்த ஆழமான ஆசையைத் தூண்டுகிறார். வரவிருக்கும் வாழ்க்கையில் நமக்குக் காத்திருக்கும் வீடு அது. சில சமயங்களில் இந்த வாழ்க்கை எல்லாம் ஒன்றும் இல்லை என்பதையும், இதற்குப்பின் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதையும் நினைவில் கொள்வது கடினம். இந்த வருங்கால வீட்டை இந்த வாழ்க்கையிலிருந்து தப்பிக்கும் போக்காக கருத கூடாது என்றாலும், “என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்” (யோவான் 14:2) என்று இயேசு விளக்குவது போல், அது நமக்கு உறுதியளிக்கிறது.
சீடர்களின் அச்சுறுத்தும் சூழ்நிலைகளில், இயேசு அவர்களுக்கான இந்த இறுதி ஏற்பாட்டைப் பற்றி பேசுகிறார்:
“என் பிதாவின் வீடு”: முரண்பாடாக இந்த பூமியில் அவருக்கு இடம் இருந்ததில்லை. அவர் பிறக்கும் போது, சத்திரத்தில் அவருக்கு இடமில்லை (லூக்கா 2:7), மற்றும் அவரது இளம்பருவத்தில் இயேசு அடிப்படையில் வீடற்றவராக இருந்தார் (மத்தேயு 8:20). இங்கு அவருக்கு இடமில்லை, ஆனால் தம்மிடம் வரும் அனைவருக்கும் அவர் அங்கே இடமளிக்கிறார். அனைவரும் வந்து விருந்துண்ணுமாறு அழைக்கப்படும் ஏராளமான பந்திகளுள்ள தந்தையின் இல்லம் இது.
“அநேக வாசஸ்தலங்கள்”: பிதாவின் வீட்டில், ஒருகாலத்தில் சோர்வுற்றுப்போன யாத்ரீகர்களுக்கு நித்திய இல்லங்கள் உள்ளன. அதாவது, குடியேறி வீட்டிலேயே தங்கிக்கொள்ளலாம்.
“நான் போய்”: ஒரு எழுத்தாளர் கூறியது போல், “இயேசு முக்கியமாக கூறுகிறார், ‘என் பணி இப்போது செல்வது, நான் அதை தனியாக செய்ய வேண்டும். எனது வேலையைச் செய்வதில் எனக்கு உதவ நான் உங்களுக்குப் பயிற்சி அளிக்கவில்லை, மாறாக நான் என்ன செய்தேன் என்பதை உலகுக்குச் சொல்ல நான் உங்களுக்குப் பயிற்சியளித்தேன்’.
“ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்”: நம்முடைய நம்பிக்கையின் இந்த அம்சம் இங்கே இல்லை, அது அங்கே இருக்கிறது; ஏனென்றால் அவர் அவர்களுக்காக ஒரு இடத்தைத் தயார் செய்யப் போவதைப் போலவே அவர் நமக்கும் ஒருபோதும் முடிவடையாத இடத்தைத் தயார் செய்கிறார்.
இந்த வார்த்தைகளைக் கேட்ட மாத்திரத்தில், சீடர்கள் யூத திருமண வழக்கங்களைப் பற்றி சிந்திக்காமல் இருந்திருக்க முடியாது. திருமண நிச்சயதார்த்தத்தின் போது, மணமகன் தனது புதிய மணமகளுக்கு ஒரு வீட்டை தயார் செய்ய ஒரு வருடம் ஆகும். பல சமயங்களில், அந்த இடம் அவரது தந்தையின் வீட்டில் கட்டப்பட்ட கூடுதலாக இடமாகும். அங்கு அவரும் அவரது மணமகளும் குடும்பத்துடன் இணைந்து, வேலைச் சுமையையும் வாழ்க்கையின் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்வர். அந்த வசிப்பிடத்தை தயார் செய்தவுடன், திருமணதிற்கான, ஒன்றாக வாழ்க்கை கொண்டாட்டத்திற்கான நேரம் ஆரம்பம்.
மேலும், பிதாவின் வீட்டில் ஆயத்தமாகும் ஒரு இடத்தின் இந்த உருவகம், அந்த மேல்வீட்டறையில் வெளிப்படுத்தப்பட்ட புதிய ஏற்பாட்டு காரியம் அல்ல என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். இதே சிந்தனைதான் இஸ்ரவேலின் ராஜாவாகிய மேய்ப்பன் தாவீதுக்கும் ஆறுதல் அளித்தது “என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்” (சங்கீதம் 23:6).
யோவான் 14 இல் இயேசுவின் வார்த்தைகளைப் போலவே, தாவீதின் வார்த்தைகளும் தற்போதைய யதார்த்தத்தையும் எதிர்கால நம்பிக்கையையும் கொண்டுள்ளன. பிதாவின் நன்மையிலும் கிருபையிலும் இளைப்பாறும் இவ்வாழ்க்கையின் தற்போதைய யதார்த்தம் (சங்கீதம் 23:6) வாழ்க்கையின் புயல்களில் இயேசுவை நம்புவதுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது (யோவான் 14:1).
விரக்தி மேலோங்குகையில், கர்த்தருடைய வீட்டில் ஒரு இடத்தைப் பற்றிய நித்திய வாக்குறுதி நமக்கு நம்பிக்கையை அளிக்கிறது. இது மிகவும் அற்புதமாக இருக்ககூடிய வீட்டை குறித்த அற்புதமான உணர்வு.
அகஸ்டின் தனது சுயசரிதையில், “உம்மில் இளைப்பாறும் வரை எங்கள் இதயங்கள் அமைதியற்றவை.” என்று ஞானமாக தேவனை குறித்து எழுதியது போலத்தான். அவ்வாறே, நாம் அவரில் சமாதானமாக இருப்பதைக் காணும் வரை, நாம் விரும்பும் அமைதியை ஒருபோதும் முழுமையாகவும் பூரணமாகவும் அறிய மாட்டோம். அதனால்தான் தந்தையின் வீடு மிகவும் முக்கியமானது. வேதனையின் பிரச்சனை குறித்து எழுதுகையில், சி.எஸ். லூயிஸ்:
“நாம் பரலோகத்தை விரும்புவதில்லை என்று நான் நினைக்கும் நேரங்கள் உண்டு; ஆனால் நம் இதயத்தில் நாம் எப்போதாவது வேறு எதையாவது அதிகமாக விரும்பியிருக்கிறோமா என்று நான் அடிக்கடி வியக்கிறேன்… இது ஆத்துமாவின் அந்தரங்கமான முத்திரை, இது வெளிக்காட்டமுடியாத மேலும் தணியாத விருப்பம், நாம் நமது மனைவிகளைச் சந்திப்பதற்கு முன்பு அல்லது நம் நண்பர்களை உருவாக்குவதற்கு அல்லது வேலையை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு விரும்பிய காரியம்; மற்றும் மனது இனி வாழ்க்கையையோ அல்லது நண்பனையோ அல்லது வேலையையோ அறியாமல் மறக்கப்போகும் நமது மரணப் படுக்கையிலும் இதற்காக ஆசைப்படுவோம்.” என்கிறார்
இப்படியாக நான் பிதாவுக்காக மற்றும் அவரது அமைதிக்காக ஏங்குகிறேனா? என்று சிந்திக்கிறேன். இருப்பினும்; பிதாவின் வீடு எவ்வளவு அற்புதமாக இருந்தாலும், அந்த வாக்களிக்கப்பட்ட வீடு வரப்போகும் வாழ்க்கையின் மிக முக்கியமான அம்சம் அல்ல.
சி லசமயம் வேலை என்பது பலரை குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்து நாட்கள் அல்லது வாரங்களுக்கு பிரிக்கிறது. அதிர்ஷ்டவசமாக பல செயலிகள், தொழில்நுட்பங்கள் மூலம் நாம் வீட்டாரோடு இணைந்திருக்க முடியும். பிரியமானவர்களை நிகழ்நேரத்தில் பார்க்கவும் பேசவும் கூடியதென்பது ஆச்சரியமாக இருக்கிறது, மேலும் அந்த இணைப்பு நாம் தொலைவாக பிரிந்திருக்கும் நீண்ட நாட்களைக் கடந்து செல்ல உதவும். ஆனால் நாம் இன்னும் வீட்டை விட்டு விலகி இருக்கிறோம். தொழில்நுட்பம் சிறந்தது, ஆனால் நம் அன்புக்குரியவர்களுடன் மேசையின் குறுக்கே அமர்ந்து, நம் நாளைப் பற்றி பேசுவதற்கும் அல்லது நாம் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளைப் பற்றி ஒன்றாகச் சிந்திப்பதற்கும் இது மாற்று இல்லை.
ஒன்றாக என்பது ஒரு தனித்துவமான சொல், ஏனென்றால் அதற்கு போதுமான அளவாக எந்த மாற்றும் இருக்க முடியாது. அதனால்தான் இயேசு தாம் திரும்பிவருவது நமக்கு ஒரு மெய்யான மற்றும் சிறந்த வீட்டை வழங்குவதற்காக மட்டும் அல்ல, ஆனால் நாம் ஒன்றாக இருக்கக்கூடிய இடம் என்று மேலான சத்தியத்தை தெளிவாக்கினார்.” நான் போய் உங்களுக்காக ஒரு இடத்தை ஆயத்தம் செய்தால், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே நீங்களும் இருப்பதற்காக, நான் மீண்டும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்வேன்.” என்றார் (யோவான் 14:3, வலியுறுத்தப்பட்டது).
யூத திருமண பழக்கவழக்கங்களின் உருவகங்கள் மீண்டும் காட்சிப்படுத்தப்படுகின்றன. மணமகன் தனது மணமகளுக்கு ஒரு வீட்டைத் தயாரிக்கும் பொறுப்பை முன்பு பார்த்தோம். இருப்பினும், அந்த வீட்டின் ஏற்பாடுகளை முடித்துவிட்டு, மணப்பெண்ணின் பெற்றோரின் வீட்டிற்கு வந்து, அவளை தன்னுடன் இருக்க தன் வீட்டிற்கு அழைத்துச் செல்வார். இதுவே இயேசுவின் வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள பிம்பம்; ஒன்றாக இருப்பதற்கான ஒரு வருகை.
“பரலோகத்தின்” தன்மை, இருப்பிடம் மற்றும் சூழலைப் பற்றி பலர் பல விதமாக சிந்திக்கின்றனர். சிலர் நமது நித்திய வீட்டை புதிய பூமியில் இருப்பதாக பார்க்கிறார்கள், மற்றவர்கள் அதை புதிய எருசலேமில் பார்க்கிறார்கள், இன்னும் சிலர் மூன்றாம் வானத்தில் பிதாவின் பிரசன்னத்தின் அடிப்படையில் சிந்திக்க விரும்புகிறார்கள் (பார்க்க 2 கொரிந்தியர் 12:4). உண்மையில் அது எங்கிருந்தாலும் நாம் இறுதியாக அங்கே இருக்கும் வரை விவாதம் தீர்க்கப்படாது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இருப்பினும், பிதாவின் வீட்டிலுள்ள நமது நித்திய இல்லத்தின் இருப்பிடம் குறித்து நாம் அதிகம் கவனிக்க வேண்டியதில்லை. இயேசுவின் வார்த்தைகள் நம்முடைய நித்திய வீட்டைப் பற்றிய மிக முக்கியமான விஷயத்தை நமக்கு தெரிவிக்கின்றன; அது அவர் இருக்கும் இடத்தில் உள்ளது. நாம் எப்போதும் வாழ விரும்பும் ஒரே இடமாக அதை மாற்றுபவர் இயேசுவே. “நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி” அவர் நமக்காக வருவார் என்று கூறினார்.
இயேசு தம்முடைய சீடர்களுக்கு மேல்வீட்ட அறையில் வழங்கிய சமாதானத்திற்கான திறவுகோல், நம்முடைய சொந்த பிரச்சனைகளுக்கு பொருந்தும்; அது அவரிடமிருந்து நாம் பிரிந்திருப்பது நிரந்தரமானது அல்ல (சீடர்களின் விலகலும் அல்ல). வலிமிகுந்த பிரிவின் தருணத்தில் மீண்டும் இணைவதை விட பெரிய ஆறுதல் எதுவாக இருக்க முடியும்? தற்போதைய சோதனைகளுக்கு அப்பால் உள்ள எதிர்காலத்தை, அவருடனான நித்திய எதிர்காலத்தை பார்க்க சீடர்களை இயேசு அனுமதித்தார்.
அவ்வளவுதான், இல்லையா? நமது ஆறுதல் ஒரு இடத்தில் இல்லை, ஆனால் ஒரு நபரில் உண்டு; அவர் இயேசுவே. அவருடன் இருக்க ஆசைப்படுகிறோம். நீங்கள் பாருங்கள் கிறிஸ்துவைப் பின்பற்றுபவருக்கு, பிதாவின் வீடு ஒரு மனநிலை அல்ல அது இயேசு இருக்கும் இடத்தில் இருப்பதே. நமது நித்திய வீடு எப்படி இருக்கும் என்று நாம் ஊகிக்கலாம், ஆனால் உண்மையில் அவர் இருப்பார், நாம் அவருடன் என்றென்றும் இருப்போம் என்பதை அறிவதே போதுமானது. அதனால்தான், அவருடன் ஒன்றாக இருப்போம் என்று நாம் எதிர்பார்ப்பதால், நித்தியத்திற்கான நம்பிக்கையும், இப்போது சமாதானமும் நமக்கு இருக்கிறது.
அது எவ்வளவு உண்மையானது? அப்போஸ்தலன் பவுலின் வார்த்தைகளைக் கேளுங்கள்:
ஆகிலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் கிரியைக்குப் பலனுண்டாயிருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னதென்று அறியேன். ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன், தேகத்தைவிட்டுப்பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும் (பிலிப்பியர் 1:22–23).
கிறிஸ்துவுடன் இருப்பது; அவ்வளவுதான். அவர்தான் நமது நித்திய வீட்டை நமக்கு உண்மையிலேயே வீடாக மாற்றுகிறார். நம்முடைய நித்திய வீடு அதின் அர்த்தத்தை இழக்காது, ஏனென்றால் இயேசு என்றென்றும் இருப்பார். மேலும் நாம் அவருடன் இருப்போம்.
என்றென்றும் நிலைத்திருக்கும் சமாதானம், ஆனால் இப்போதும் நாம் அறியக்கூடிய சமாதானம். நாம் பிதாவின் வீட்டை எதிர்நோக்குகையில், அந்த பரிபூரண சமாதானமான இடத்தில் இயேசுவோடு இருப்பதற்கான நம்பிக்கை, இங்கே இப்போது நாம் சகிப்பதற்கான பலத்தை நமக்கு அளிக்கும். ஏனென்றால் அவர் அங்கே இருக்கிறார், நமக்காக ஒரு இடத்தை ஆயத்தப்படுத்துகிறார். எனக்காக. உனக்காக. என்றென்றுமாக.
அடுத்து என்ன நடக்கும் என்பதை இயேசுவின் அடுத்த கூற்று விளக்கியது. “நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார்” (யோவான் 14:4).
அவர் செல்லும் “வழி” அவர்களுக்குத் தெரியும் என்று அவர்களிடம் கூறும்போது, இயேசு பல மாதங்களாக அவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்ததை அவர்களுக்கு நினைவூட்டுவதாகத் தோன்றியது; அவர் சிலுவைக்கு நேராக கொண்டிருந்தார். பிலிப்பு செசரியாவில், இயேசு தம்முடைய சீடர்களிடம் அவர் யார் என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்று கேட்டார். அதற்கு பேதுரு, “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” (மத்தேயு 16:16) என்றார்.
அந்த தருணம், ஒரு வகையில், இயேசுவின் ஊழியத்தின் முக்கிய புள்ளியாக இருந்தது. அவரது பொது ஊழியத்தின் முதல் பாதி அவரது அடையாளத்தை மறுக்கமுடியாமல் நிரூபிப்பதாக இருந்தது. செசரியா பிலிப்பியில் பேதுருவின் பதிலுடன், அந்த பணி நிறைவேற்றப்பட்டது. அந்த நேரத்திலிருந்து, இயேசுவின் முதன்மையான கவனம் அவரது அடையாளத்தை நிரூபிப்பதில் அல்ல, மாறாக கல்வாரிக்கு தயாராவதில் இருந்தது. அவர் உடனடியாக தனது சீடர்களை அந்த நிகழ்வுகளுக்கு தயார்படுத்தத் தொடங்கினார்.
பிலிப்பு செசரியாவில் விசாரணையைத் தொடர்ந்து, “அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்” என்று மத்தேயு நமக்கு அறிவிக்கிறது.
இதைத்தான் இயேசு அவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார், அதனால்தான் அவர் செல்லும் வழியை அவர்கள் இந்த தருணத்தில் அறிந்திருக்க வேண்டும். அவர் சிலுவைக்குச் செல்வது இன்றியமையாததாக இருந்தது. அவர்களுக்காகவும் நமக்காகவும் பிதாவிடம் செல்லும் ஒரு வழியை உண்டாக்க சிலுவைக்குச் செல்கிறார். உண்மையில், இயேசு செல்லும் வழி தனக்குத் தெரியாது (யோவான் 14:5) என்ற தோமாவுக்கு அவர் பதிலளித்ததில், இந்த சத்தியம் அடங்கியுள்ளது. “அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6) என்றார்.
நாம் இரட்சிக்கப்படுவதற்கான வழியை வழங்குவதன் மூலம், இயேசு நமக்காகத் தயாராகும் இடத்திற்கு நம்மைத் தயார்படுத்தினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவரே நமக்கு இரட்சிப்பும் மற்றும் பிதாவுடனான உறவை மீட்டெடுக்கும் வழி. அவரது மரணம் இந்த சமாதானத்திற்கான வழியை உருவாக்கியது.
அதனால்தான் அவர் தனது மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதல் ஆகியவற்றின் மூலம் ஒரு வழியை உருவாக்க தனியாக செல்ல வேண்டியிருந்தது. அவர்கள் வாழ்வதற்கு அவர் மரிக்க வேண்டும் என்று அவர்களிடம் கூறினார். எப்படி? சிலுவை வழியில். அங்கே, மேல்வீட்டறையில், சிலுவையின் நிழல் அவர்கள் அனுசரித்த திருவிருந்து மீது விழுந்தது. ஒரே வழி சிலுவையின் வழி.
நான் அந்த வழியில் செல்கிறேன், அதனால் நீங்கள் செய்ய வேண்டியதில்லை.
நான் அந்த வழியில் செல்கிறேன், அதனால் நீங்கள் பின்தொடரலாம்.
அந்த ஸ்தலத்திற்கு உங்களை ஆயத்தப்படுத்த நான் அந்த வழியில் செல்கிறேன் என்று இயேசு முக்கியமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்.
இயேசு அவர்களிடமிருந்து விலகிச் செல்ல வேண்டியிருந்தது, ஏனென்றால் அவர் ஒருவரே சிலுவையின் வழியைத் ஆயத்தப்படுத்த முடியும்; அதுவே வீட்டிற்கான ஒரே வழி. இயேசு கிறிஸ்துவின் சிலுவை மட்டுமே நித்திய சமாதானமான பிதாவின் வீட்டிற்கு உள்ள ஒரே வழி, அதுதான் இங்கேயும் இப்போதும் அர்த்தமுள்ள சமாதானத்தை பெறுவதற்கான ஒரே வழி.
எ வ்வாறாயினும், எதிர்கால வீடு மற்றும் வாக்குறுதியளிக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிய இந்த கருத்துக்கள் அனைத்தும் “பின்பாகவுள்ள பெரிய இடத்திற்கு” ஒரு எளிய வெளியேற்றம் என்று தவறாக நினைக்கக்கூடாது. இந்த நம்பிக்கை வெறுமனே ஒரு தொலைதூரக் கனவோ அல்லது இந்த தற்கால உலக வாழ்க்கையிலிருந்து நம்மைத் துண்டிக்கும் குறுக்கு வழியோ அல்ல. யோவானின் அடுத்த அத்தியாயங்களில், இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு இங்கே இப்போதே அவர்கள் நம்பிக்கைக்கான காரணம் குறித்து விளக்கினார், இப்போது புதிய ஏற்பாட்டில் மிக விரிவான வாக்குறுதிகளில் ஒன்றின் மூலம் அவருடைய போதனையை முடிக்கிறார்: “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்” (யோவான் 16:33).
யோவான் 14 இல் காணப்படும் நித்தியத்திற்கான நம்பிக்கை, இங்குள்ள வாழ்க்கையின் சோதனைகளையும் சவால்களையும் தாங்கிக் கொள்ள உதவும் சமாதானத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை யோவான் 16:33 உறுதிப்படுத்துகிறது. பவுல் தனது இரண்டு நிரூபங்களில் இந்த தற்கால சமாதானத்தை உறுதிப்படுத்தி நாம் எதிர்கொள்ளும் கவலைகளில் அந்த சமாதானம் எவ்வாறு நமக்கு வருகிறது என்பதை நமக்குக் கூறுகிறார். பிலிப்பியர் 4:6-7ல், இந்த சமாதானம், ஒரு பகுதியாக, ஜெபமென்னும் சிலாக்கியத்தின் விளைவு என்று அப்போஸ்தலன் சுட்டிக்காட்டுகிறார்:
நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.
ற்கான அவரது வாக்குத்தத்தம், பின்பான வாழ்க்கைக்கு மட்டுமல்ல தற்கால வாழ்க்கைக்கும் மிகவும் முக்கியமானது.
நாம் போராடிக்கொண்டிருக்கும் எந்தவொரு சோதனைக்கும் மேலானவராக இருக்கும் அண்டசராசரத்தின் தேவனை அணுகுவதற்கு ஜெபம் நம்மை அனுமதிக்கிறது. யோவான் 14:1ல் இயேசு தம் சீடர்களிடம் கூறியதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்”. அவருடைய குமாரன் மூலம் பிதாவுடனான நமது உறவுதான் அந்த இணைப்பை நமக்குத் தருகிறது (யோவான் 14:6), அதனால் அவருடைய சமாதானத்திற்கான வாக்குத்தத்தம் பிற்கால வாழ்க்கைக்கு மட்டுமல்ல, இக்கால வாழ்க்கைக்கும் அதிகம் பொருந்தும்.
மேலும், கிறிஸ்துவைப் பின்பற்றுபவரின் வாழ்க்கையில் பரிசுத்த ஆவியின் கிரியையின் விளைவில் சமாதானமும் இருந்தது என்று கலாத்தியாவில் உள்ள சபைகளுக்கு பவுல் கூறினார்: “ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை” (கலாத்தியர் 5:22–23).
நாம் ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுகையில் (கலாத்தியர் 5:16), இயேசுவின் இருதயத்தை வெளிப்படுத்தும் கனியை நம் வாழ்வில் வெளிக்காட்ட ஆவியானவர் நமக்குள் கிரியை செய்கிறார். இதன் விளைவாக, நாம் நிலையான சமாதானத்தை அறிகிற நித்திய வீட்டிற்கான வாக்குத்தத்தம் மட்டுமல்ல; ஜெபமென்னும் பாக்கியமும், இருளிலும் வாழ்க்கை கட்டுப்பாட்டை மீறி சுழல்வது போல் தோன்றும் கடினமான நாட்களிலும் நம்மைக சுமந்துகொண்டு அனுதின சமாதானத்தை நமக்கு வழங்க ஆவியானவரின் பிரசன்னமும் நமக்கு இருக்கிறது.
நாம் எப்படி உறுதியாக இருக்க முடியும்? ஏனெனில் சமாதான பிரபு சிலுவைக்குச் சென்று மரணத்தை வென்றார். விவியன் க்ரெட்ஸின் உன்னதமான பாடலின் வார்த்தைகளில்:
உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன்
அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.
இருளோ இருண்ட நிழலோ சூழ்கையில்
அவன் உள்ளத்தில் அவர் சமாதானமருள்வார்
ஓ அவரே மெய்யான இளைப்பாறுமிடம்
அவரே பூரண சமாதானம் அருள்வார்.