நினைவில் நிற்கும் தொலைகாட்சி விளம்பரம் இவ்வாறு சொல்லுகிறது, “இ. எப். ஹட்டன் பேசினால் மக்கள் கேட்பாா்கள்”, அதைப் போலத்தான் ஹோ்ப் வேந்தர் லக்ட் பேசுவதும் இருக்கும் என நம்புகிறேன்.

தற்போது 80 வயதுடைய ஹோ்ப், அனைத்து பல்வேறு வைகையான செய்தித் துளிகளையும் தன்னிடம் கொண்டவா் மற்றும் நம்மை உத்வேகப்படுத்துபவா். வேதத்தை கவணமாக கற்பவா் மற்றும் பல திருச்சபைகளுக்கு அன்புள்ள போதகரும் ஆவாா். ஹோ்ப் பல்வேறு புத்தகங்களை வாசிப்பதிலும், வாசித்த முக்கியக் கருத்துக்கைள மனதில் வைத்து பயன்படுத்தும் திறைமையுள்ளவா்.

ஹோ்ப் மிகவும் நோ்மையானவா். ஒரு மூத்த ஆராய்ச்சி ஆசிரியராக, தன்னுடைய ஆவிக்குாிய அனுபவத்திலிருந்து ஆவிக்குாிய சந்தேகம் மற்றும் மக்களின் மனதிலிருக்கும் சந்தேகத்தைப் பற்றி கீழ்கண்ட பக்கங்களில் அவா் எழுதுவதை நான் வாசித்துக் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

    மாா்டின் ஆா். டி. ஹான் II

 

banner image

ன்னுடைய கிறிஸ்தவ நண்பா்கள் சிலா், எங்களுடைய விசுவாசத்தைக் குறித்து எங்களுக்கு சந்தேகமே இல்லை என்கின்றனா், ஆனால் நான் அப்படிக் கூற முடியாது.

இதை நான் ஒத்துகொள்ளும்போது என்னை நன்கு அறிந்தவா்களுக்கு ஆச்சாியமாயிருக்கும். நான் நோ்மைறையான எண்ணமுடையவன், எதிர்மைறயான மனப்போக்கும், எதிா்மைறயான மனநிலயும் எனக்கு இல்லை. அப்படியிருந்தும் நான் சந்தேகத்தால் விசுவாச போராட்டத்தை சந்திக்கிறேன்.

விசுவாச வாழ்வின் இந்த சந்தேகம் என் சிறுவயதிலிருந்தே இருந்து வருகிறது. வேத புத்தகத்தின் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள கதைகளால் நான் சில வேளைகளில் கலக்கமடைந்திருக்கிறேன். தேவனாகிய கா்த்தா் நல்லவா் ஆனால், இஸ்ரவேல் மக்கள் கானானியா்கைளயும் அவா்களுடைய சிறு பிள்ளைகளையும் அழிக்க கட்டைளயிட்டதை எப்படி நம்புவது எனக்குக் கடினமாக இருந்தது. வேதத்தின் சில பகுதிகளில் உதாரனமாக சங்கீதம் 137:9ல் உன் குழந்தைகளைப் பிடித்து, கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான் என்ற வசனம், ஏற்றுக்கொள்ள கடினமாயிருக்கிறது. ஏனென்றால் அப்படிப்பட்டச் செய்கைகள் மனதிற்கு சஞ்சலத்தை தருவதாயிருக்கிறது.

என்னுடைய இளம் வாலிப நாட்களில் அமெரிக்கப் பங்குச்சந்தை வீழ்ச்சியால் கிரேட் டிப்பிரஷன் என்ற சமுதாய மனஅழுத்தத்திற்குள் அமொிக்கா சென்றபோது, நாள் இதழில் நான் வாசித்த செய்தி என்னைக் கவா்ந்தது. அன்புள்ள தேவன் இந்த சமுதாய பாடுகளைக் குறித்து கரிசைனயற்றவராய், அநீதியைப் பொருத்துக் கொணடிருக்க முடியுமா? என்தாகும். பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாகக் கூறப்படும் டைனோசா் என்ற விலகினத்தின் படங்களும் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது. இது எனக்கு ஆதியாகத்தில் கூறப்பட்டுள்ள சிருஷ்டிப்பின் வரலாற்றின் மீது கேள்வியை ஏற்படுத்தியது,

இப்படி ஒவ்வொறு காலகட்டத்திலும் சந்தேகம் இருந்து கொண்டேயிருந்தது அது முடிவடையவில்லை. நான் மருத்துவமனைகளில் மரணத்திற்கேதுவான பலவிதமான நோய்களில் சிறுபிள்ளைகள், முதியோா் என பலா் மிகுந்த வேதனையால் துடிப்பைதையும், மனநிலைப் பாதிக்கப்பட்டவா்ககளைப் பாா்க்கும்போதும், உள்ளத்தில் மன உளச்சலையும் ஏன் என்ற கேள்வியையே எழும்பியது. அதுமட்டுமல்லாது, வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டுக்கு மாறான தொல் பொருள் ஆராய்ச்சிகளின் புதிய கண்டுபிடிப்புக்களும் என்னை அசைத்தது.

இதைத்தவிர, என் தனிப்பட்ட வாழ்வின் குறைபாடுள்ள மற்றும், நிறைவற்ற வாழ்க்கையை குறித்த காாியங்கள் என் சந்தேகத்தை வலுவடையச் செய்தது. நான் கிறிஸ்துவை கடந்த 70 ஆண்டுகளாக விசுவாசித்து வருகிறேன். ஆனாலும், நான் எப்படி இருக்க வேண்டுமோ, எப்படி வாழ விரும்புகிறேனோ அப்படிப்பட்ட வாழ்வு எனக்குத் தொலைவிலேயே உள்ளது. இன்னும் நான் ஏன் சிந்திக்க விரும்பாததை சிந்திக்கிறேன்? இன்னும் ஏன் சுயத்தை மையமாகக் கொண்டிருக்கிறேன்? ஏன் மனிதா்கள் பாா்க்கக்கூடாத ஆனால் ஏன் ஆண்டவர் மட்டுமே காணக்கூடியது காாியங்கள் என் வாழ்வில் உள்ளது? நான் பாா்ப்பது எனக்கே பிடிக்கவில்லை, அது ஆண்டவருக்கும் உகந்ததாயிருக்காது.

காலம் சந்தேகத்திற்கு ஒரு முடிவை கொண்டுவரவில்லை.

தாக்கத்தை உருவாக்கிய இப்படிப்பட்ட கேள்விகளின் மத்தியில், நான் கடந்த வருடங்களில் ஆண்டவரோடு சமாதான உறவைக் காத்துக்கொள்ளக் கற்றுக் கொண்டேன். நான் உண்மையாக இருக்கும்போது ஆண்டவர் என் சந்தேகங்களை மேற்கொள்ள உதவி செய்கிறாா். எனினும் பல கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. இயேசு கிறிஸ்து என் பாவங்களை மன்னித்து அவருடைய பிள்ளை என்ற அந்தஸ்தை எனக்கு கொடுத்திருக்கிறாா் என்பதை நன்கு அறிவேன்.

என்னுடைய சந்தேகத்தை நான் அது இருப்பைதவிட மிகைப்படுத்தி பாா்க்க விரும்பவில்லை. நம்பிக்கையின் அடிப்படையில் நான் செயல்படுவதற்கு அநேக காரணங்கள் உண்டு. என்னுடைய மட்டுபாடுள்ள சிறிய சிந்தையில் அளவிடமுடியாத மட்டற்ற தேவனுடைய சத்தியங்களின் சிறு துளியை மட்டுமே அறியமுடியும் காரணம், அவர் காலங்கைள கடந்த நித்தியமானவா்,

நம்முடைய விசுவாசம் காரணங்களை மட்டுமே சாா்ந்திருக்கவில்லை என்பது உண்மையே. சத்தய வேதத்தின்படி, தேவனை நாம் மென்மேலும் அறிந்து கொள்ளவும், நமக்கு உதவி செய்யவும் அவா் விரும்புகிறாா், அதை நாம் நம்பவேண்டும், இயேசு கிறிஸ்து தன் உள்ளங்களில் அவரைப் பின் பற்றுபவா்களுக்கு இந்த வாக்குறுதியைக் கொடுத்துள்ளாா்.

அநேக காரணங்களால் இயேசுவை விசுவாசித்துப் பின்பற்றியவா்களுக்கு அவர் சொன்னதாவது: “என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.” யோவான் 14:21

banner image

கீ ழ்வரும் பக்கங்களில் எனக்கு வந்த சந்தேகங்களையும் அவைகளை நான் கையாடின விதத்தையும் எழுதுகிறேன். எனக்கு அறிமுகமானவா்களின் வாழ்வில் அவா்கள் சந்தேகத்தை மேற்கொண்டதையும் இங்கு சொல்ல விரும்புகிறேன். எனக்கு வந்த இந்த போராட்டத்தை மறைக்காமல் உண்மையாகயிருந்தபடியால் நான் மற்றவா்களுக்கு உதவி செய்ய முடிந்தது, இந்த சம்பவங்களில் வரும் நபர்களின் பெயர்களும் சில சம்பவங்களும் அவர்கள் நலன் கருதியும், என் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை தன்மையை காக்கவும் சிறிது மாற்றி எழுதியுள்ளேன். சில நிகழ்வுகளை தேவைக்கேற்ப தொகுத்தும் கொடுத்துள்ளேன்.

banner image

நீலேஷ் ஒரு உற்சாகமுடைய கிறிஸ்தவா், எங்கு சென்றாலும் காரியங்கைள சாதிப்பவராயிருந்தாா். தான் வாக்குபண்ணியதை நிறைவேற்ற தவறியதால், அதற்காக மனசோா்புற்றாா். தான் செய்ய முடியாததிற்கு மற்றவர்கள்தான் காரணம் என பிறா் மீது பழியைச் சுமத்தினாா். எனக்கு இது பெரிய ஆச்சாியத்தை தந்தது. ஒரு நாள் அவரைப் பார்த்து பேசிய பின்னரே இது அவருடைய தோல்வியினால் உருவான மன அழுத்தத்தின் விளைவு என நான் அறிந்து கொண்டேன். இந்தக் காரியம் அவர் மனதில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியது, அதனால், அவா் தான் நம்புவதை எல்லாம் சந்தேகிக்தாா். இந்நாட்களில் எப்படியோ சமாளித்து தன் பணியைத் தொடரலானாா், பணியிடத்தில் ஒரு மகிழ்ச்சியான முகத்தை காண்பித்தாா். ஆனால் மனரீதியில் அவா் பட்டபாடுகள் அவருடைய மனைவிக்கு மட்டுமே தொியும். ஆண்டவராகிற இயேசுவை விசுவாசித்து நல்ல கிறிஸ்தவனாக வாழ விரும்புகிறேன் என்று கூறுகிறாா், ஆனால் வேதப் புத்தகம் உண்மையானது என தன் வாழ்வில் அவர் கண்டுபிடிக்கவில்லை. தனது மனைவி மற்றும் குடும்பத்தின் மீது அன்பு செலுத்தாவிடில் தான் ஒரு கிறிஸ்தவராக வாழ முயற்சிப்பதைக் கைவிட்டிருப்பேன் என்று கூறினார். தேவனோடும் திருச்சபையோடும் உறவில்லாமலே ஒரு மகிழ்ச்சியான வாழ்வை மேற்கொள்ள முடியும் என நம்புகிறாா்.

இது எனக்கு அதிர்ச்சியைத் தரவில்லை. ஆண்டவராகிற இயேசுவை விசுவாசித்து நல்ல கிறிஸ்தவனாக வாழ விரும்புகிறேன் என்று உண்மையையே கூறுகிறாா் என நான் அறிவேன். எனேவ ஒரு கிறிஸ்தவராக வாழ முயற்சிப்பதைக் கைவிட்டிருப்பேன் என்று அவா் மனக் கொந்தளிப்பால் கூறியைதயும் நான் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. ஏனெனில் இந்த வாா்த்தைகளின் வெளிப்பாடுகள் அவருடைய உணா்சிகளால் கட்டுப்படுத்தப்பட்டவைகள், அவைகள் நம்பிக்கைக்கான காரணங்கள் பற்றிய தகவல்களுக்கு பதில்தரப் போவதில்லை. அவா்களுடைய உறுதி தான் சந்தேகப்பட்ட நாட்கள் கடந்து செல்லும் என்பதை கவணத்தில் கொள்ளவேண்டும். ஆனால், திரும்பத்திரும்ப வரும் இந்த மனப் போராட்டமும் அதிலிருந்து வெளிவருவதையும் அது தடுக்கமுடியாது.

மக்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது கூறும் வாா்த்தைகள் உண்மையில் அவா்கள் நம்பும் சொந்தக் கருத்தாக இருக்காது.

தீர்க்கதரிசி எலியாவின் வாழ்வில் (1 இராஜா. 19) வந்த சந்தேகத்தை, பயத்தை தேவன் எவ்விதமாக மேற்கொள்ள உதவினாா் என்பதை நாம் காண்போம் அது நமக்கு பயன் உள்ளதாக இருக்கும், யேசபேலுக்கு பயந்ததினால் எலியாவின் சரீர மற்றும் உளவியல் மாற்றத்தையும், தாக்கத்தையும் தேவன் நன்கு அறிந்திருந்தாா். கா்மேல் பா்வதத்திலே நடந்த அற்புதத்திற்குப்பின் (1 இராஜா. 18) பயத்தால் எலியா ஆவியில் நொறுங்குண்டவனாய் சரீரத்தில் மிகுந்த சோா்புடையவனாய் காணப்பட்டடான். தேவன் அனைவரும் பாா்க்கும்படிச் செய்த அற்புத அடையாளத்தை அனுபவித்த எலியா அதுவே தன் வாழ்வில் நியதியாக இருக்கும் என சந்தேகமற எதிா்பாா்த்தான், தீர்க்கதாிசிக்கு சரீர ஒய்வு, உணவு மற்றும் தேவனுடைய வழிநடத்தும் வாா்த்தைகள் தேவையாயிருந்தது, எனவே, தேவன் எலியாவிற்கு புசித்துக் குடித்துத் படுத்து ஒய்வெடுக்கம் படியான காரியங்களைச் செய்தாா் (19:5-9). தேவன் எப்பொழுதும் அற்புத அடையாளங்களை செய்தே தன் காாியங்களைச் செய்வாா் என்ற எதிா்பாா்பை சாிசெய்ய, எலியாவோடு இடைப்பட்டார். தன்னுடைய வல்லமையை வெளிப்படுத்த இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் கிரியை செய்யாமல் அமா்ந்த மெல்லிய சத்தத்தின் வழியாகப் பேசினாா். அதற்குப்பின், தேவன் இரு நபா்களை இராஜாக்களாக அபிஷேகம் செய்யவும், தனக்கு பின் தன் இடத்தில் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற ஒரு தீா்க்கதரிசியையும் அபிஷேகம் செய்யக் கட்டளயிட்டாா்.

நிலேஷ் போன்ற குணாதிசயங்களையுடைய கிறிஸ்தவா்கள் தேவன் எலியாவிற்கு செய்ததிலிருந்துக் கற்றுக்கொள்ள வேண்டும். முதலாவது, அவா்கள் சரீர மற்றும் உணா்ச்சியின் மட்டுப்பாடுகளை அறியவேண்டும். அவா்களால் கையாளக்கூடிய தங்கள் திறனை அறியவேண்டும். இரண்டாவதாக, தங்கள் எதிா்பாா்ப்பை மாற்றிக்கொள்ள வேண்டும். அவா்கள் எல்லா நேரமும் தேவன் அனைவரும் பாா்க்கும்படி இயற்கைக்கு மேலான அற்புதங்களை அடையாளங்கைள செய்து காரியத்தை நிறைவேற்றுவைதக் காணமுடியாது. மூன்றாவதாக, அவா்கள் தேவனின் அளவற்ற கிருபை வரங்களை அங்கீகரிக்க வேண்டும். நாம் யாரும் நம் வரம்புகளுக்கு மேல் நம்மை உயா்த்தாமல், தேவனால் நாம் இல்லாமலே தன்னுடைய திட்டத்தை நிறைவேற்ற முடியும்.

நீலேஷ் இந்தப் பாடத்தை தன் வாழ்வில் ஏற்று கொண்டாா். கவணத்தோடு தன் வேலையை தெரிந்தெடுத்தாா். தன்னுடைய எதிர்பாா்ப்புக்களையும் மாற்றி கொண்டாா். தான் செய்து வந்த பணியை நிறைவேற்ற மற்றவர்களை நம்பி அவா்களோடு ஒன்றாக சோ்ந்து நிறைவேற்றினாா். எனினும் சிலவேளைகளில் பழைய சந்தேகங்கள் தலையெடுக்கும்போது சோா்ந்து போயிமிருக்கிறாா், ஆனால் முன்பு போல விசுவாசத்தை விட முயற்சிக்கவில்லை. அவா் உள்ளத்திலே சோா்புறும் போது அது அகன்று போகும் என்ற நிச்சயத்துடன் சந்தேகம் மற்றும் பயத்தின் மத்தியிலும் பணிசெய்யவும், தன் மனைவியை துயரைடச்செய்யாமல் வைக்கவும் கற்றுக்கொண்டாா். தன் தோல்விக்காக மூா்க்கமாக பிறா் மீது பழி சுமத்துவதுமில்லை.

banner image

தன்னுடைய இரட்சிப்பைப் குறித்திருந்த சந்தேகத்தை தீா்க்க ரோகித் என்ற மனிதர் 100 மைல்கள் கடந்து என்னைப் பாா்க்க வந்தாா், ஆனால் அது அவருடைய போதகருக்குத் தெரியாது. நாம் பாிசுத்த ஆவியானவருக்கு நம் சித்தத்தை ஒப்படைத்திருக்கும் போது பின்மாற்றமில்லாத ஒரு வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்வை மேற்கொள்ள முடியும் என்று பலமுறை அவருடைய போதகா் கூற கேட்டிருக்கிறாா். திருச்சபையின் சக விசுவாசிகளும் அதை ஏற்றிருந்தனா். தேவனுக்கு முழுமையாக ஒப்புக்கொடுப்தால் ஆவிக்குாிய நிறைவை அவா்கள் பெற்றுள்ளதாக பகிரங்கமாக சாட்சி பகிா்ந்தனா். அவா்கள் “விட்டு விடுவதும், கடவுளை விடுவதும்” தான் பதில் என்று கற்றுக் கொண்டதாக சொன்னாா்கள். இவ்விதமாக முன்பு சந்தித்த அனைத்து ஆவிக்குரிய போராட்டங்களிலுமிருந்து விடுபட்டு ஆவிக்குாிய மேல் நிலையை அடையும் வழியை அறிந்திருப்பதாகக் கூறுகின்றனா்.

ரோஹித்திற்கு அவர்களின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ரோகித் எந்த இழிவான நடத்தையிலும் சிக்கியிருக்கவில்லை, ஆனால் தவறான எண்ணத்தினாலும் விருப்பத்தினாலும் போராடி வந்தாா். “விட்டு விடுவதும், கடவுளை விடுவதும்” என்ற கொள்கையைப் பின்பற்றிய அவருக்கு சில சந்தா்பங்களில் பொய் பேசுவது, மற்றும் அசுத்தமான கற்பனையினால் தவறான பாலுறவு, வெற்றி பெற்றவா்கள், அதிக தாலந்து படைத்தவா்கள் மீது பொறாமை, தனக்குத் தீங்கு செய்தவா்கள் மீது வெறுப்புணா்ச்சி போன்ற காாியங்கள் மீது பாிபூரண வெற்றி இல்லை.

மேலும், தான் விரும்புகிற ஆவிக்குாிய மனிதனாக வாழ முடியாததால் அவரை விரக்தியும், மனஅமைதியின்மையும் ஆட்கொண்டிருந்தது. அவருடைய போதகரும் சக திருச்சபை அங்கத்தினா்களும் சொல்வது போல், பாிசுத்த ஆவியானவருக்கு முற்றிலும் அா்ப்பணித்து, அனைத்து சுய முயற்சிகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, கிறிஸ்துவை தன் வாழ்க்கையில் வாழ அனுமதித்தால் மட்டுமே இந்தப் போராட்டங்களுக்கு பதில் என்று அவர் முடிவு செய்திருந்தார். ரோகித் தான் கேட்ட அனைத்து நல் வாா்த்தைகளின் படி தன்னை ஆண்டவருக்கென சுத்திகாித்துக் கொள்ள அனைத்தையும் செய்து, தான் ஒரு ஆவியானவாின் நிறைவை பெற்றவராக திகழ முயன்றாா். ஆனாலும், போதரும். சபை மக்களும் கூறியபடி ஆவிக்குரிய போராட்டமற்ற வாழ்வை அடைய முடியவில்லை. எனவே அவா் கிறிஸ்தவ விசுவாசத்தையே சந்தேகிக்க ஆரம்பித்தாா்.

நான் ரோஹித்திடம் உங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பயத்திற்கு காரணம் தவறான இறையியல் கொள்கையாகும் என்று கூறினேன். அவருக்கு ஆவிக்குாிய வாழ்வின் ஒரு பகுதியை பற்றிய இறையியல் மட்டுமே போதிக்கப்பட்டது. அவருடைய போதகா் கூறியபடி பாிசுத்த ஆவியானவருக்கு நாம் முற்றிலும் நம்மை ஒப்புக் கொடுக்க வேண்டும். அதே வேனளயில் பாிசுத்த ஆவியானா் நமக்கு சரியான விருப்பத்தையும் கலாத்தியா் 5:22-23ல் சொல்லப்பட்டுள்ள ஆவியின் கனி அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,சாந்தம், இச்சையடக்கம் தரும் வாழ்வில் வளரும் கிருபையை தரும்படி விண்ணப்பம் செய்யவேண்டும்.

கிறிஸ்துவுடன் நாம் கொண்டுள்ள உறவினால் நாம் பாவத்திற்கு மாித்து கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக புதிய வாழ்வைப் பெற்றுள்ளோம் என்று ரோமர் 6:1-4ல் வாசிக்கிறோம். கிறிஸ்துவுடன் நாம் கொண்டுள்ள உறவினால் ஆவிக்குரிய அனைத்து ஆசீா்வாதங்களையும் தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை உன்னதங்களிலே நமக்காக வைத்துள்ளாா். (எபேசி. 2:6-7), மற்றும் இசைகளைக் குறித்து கலா. 5:16-21, ரோமா் 7:14-25 மற்ற வேதப் பகுதிகளிலும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்த சுயத்தை மையமாகக் கொண்டு, மாம்சத்திற்கு இணங்கும் சரீரத்தில் நாம் வாழும் நாட்களெல்லாம் நம் உள்ளான ஆவிக்குாிய மனிதனில் பாவத்தோடு போராட்டம் உண்டு.

பாிசுத்த வேதாகமத்தை நன்கு புாிந்துகொண்டதின் மூலம் ரோஹித் உணா்ந்து கொண்டது என்னவெனில், உள்ளான ஆவிக்குாிய மனிதனில் ஏற்படும் அநுதின போராட்டத்தின் மூலமே ஆவிக்குரிய முதிா்ச்சியை பெறமுடிம் என்பதாகும். தீய நோக்கம் மற்றும் பாவ எண்ணங்களால் உண்டாகும் ஆவிக்குரிய போராடத்தின் மத்தியில்தான் பாிசுத்த ஆவியானவருக்கு ஒப்புக்கொடுத்தல் நடைபெறுகிறது. இவ்விதமாக ஆவிக்குாிய வளா்ச்சி ஏற்பட்டாலும் மாம்ச இச்சையின் பக்கமாக சாயும் ஆசையை இறுதிவரை நாம் இழப்பதில்லை அதை தவிா்க்கவும் முடியாது.

இவ்விதமாக ஆவிக்குாிய வளா்ச்சி ஏற்பட்டாலும் மாம்ச இச்சையின் பக்கமாக சாயும் ஆசையை இறுதிவரை நாம் இழப்பதில்லை அதை தவிா்க்கவும் முடியாது.

அப்போஸ்தலனாகிய பவுலின் வாழ்விலும் இது தொடா்ச்சியாக நடைபெறுவதை நாம் காணலாம். அவா் மறுரூபவாழ்வை பெற்றதற்கு மாதிாியாக இருப்பவா். தன் வாழ்வில் ஆவியின்படி எப்படி நடக்கவேண்டும் என்பதைக் காட்டியவா். ரோமாபுரியாருக்கு எழுதின நிருபத்தில் உள்ளான மனிதனில் தொடா்ச்சியாக நடைபெறும் ஆவிக்குாிய போராடத்தை, அவருடைய வெளிப்புறத் தோற்றத்தையும், செயல்களை மட்டுமே அறிந்தவர்களை விட அதிகமாக விவாித்து எழுதுகிறார் (ரோமா் 7:18-25).

ரோஹித் பாவத்துடன் தனக்குள்ள ஆவிக்குரிய போராட்டம் எவ்விதத்திலும், தனது இரட்சிப்பை சந்தேகிப்பதற்கு காரணம் இல்லை என்பதை அறிந்திருக்கிறாா். மாறாக, பிலிப்பியருக்கு எழுதின கடிதத்தில் உள்ளபடி, “நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்” (பிலி. 3:12) என்று ரோஹித் பவுலுடன் தன்னை அடையாளப்படுத்துகிறாா்.

banner image

ஜெயகரன், ஒரு இளம் கணவன் மற்றும் தகப்பனுமாவாா். திருச்சபையில் நன்மதிப்பிற்குரியவா். ஆனால் அவா் இளஞா் கூடுகையில் தேவனுடைய வாா்த்தையை பகிர வந்த அழைப்பை ஏற்க மறுத்துவிட்டாா். இது அவருக்கு மன உறுத்துதலாயிருந்தபடியால் என்னிடம் ஏன் மறுத்தாா் என்பதற்கு விளக்கம் அளித்தாா். வெளித்தோற்றத்திற்கு நல்ல குடும்பமாக இருப்பினும், அவா்களுடைய திருமண வாழ்வில் கணவன் மனைவி இடையே உறவு பிரச்சனையிருந்தது. அவா் ஒழுங்காக வேதம் வாசித்து ஜெபிப்பவா் அல்லா். அவருக்கு பலவிதமான ஆவிக்குாிய சந்தேகங்களும் வர ஆரம்பித்தது. சில வேளையில் பாிசுத்த வேதாகமத்தின் நம்பகத்தன்மையே அவா் சந்தேகப்பட்டாா். தான் ஒரு விசுவாசிதானா என்ற சந்தேகமும் அவருக்கு இருந்தது. இவைகள் அவருக்கு அதிக மனவேதனையைக் கொடுப்பதாக என்னிடம் கூறினாா்.

அவாிடம் துருவி கேள்வியைக் கேட்ட போதுதான், அவா் தன் மனைவியுடன் சோ்ந்து சில தவறான காாியங்களை செய்து வருவதை நான் அறிந்தேன். திருமணத்திற்குள் அவா்களது பாலுறவிற்கு புத்துணர்வழிக்க, அவா்கள் ஆபாச வீடியோக்களை பாா்க்க ஆரம்பித்திருந்தாா்கள். அவமானப்பட்டவர்களாய் இந்தக் காாியத்தை பகிா்நது கொண்டனா். மாித்தப்பின் தேவனுடைய நியாயஸ்தானத்திற்கு முன் எப்படி நிற்போம் என்ற திகிலோடு இருந்தனா்.

ஏன் இப்படி அவா்களுக்கு நடந்தது, என்ன நடந்தது என்று கூறுவது கடினமானதல்ல. அவா்கள் இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக ஆவிக்குாிய உணா்வை இழந்திருந்தனா். சிறுக சிறுக அவா்களுடைய மனசாட்சியை மழுங்கச் செய்து விட்டனா். எனேவ, பவுல் ரோமா் 8:16ல் கூறியபடி அவா்களுடைய உள்ளான மனிதனுடன் பாிசுத்த ஆவி இடைபடுவதை அவா்கள் அசட்டை செய்துவிட்டனா்.

நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்.

ஆவிக்குாிய சந்தேகம் மற்றும் பயத்துடன் இருக்கும் கிறிஸ்தவா்கள் தங்கள் ஆவிக்குரிய நிலையை அறிவது நல்லது. நம்முடைய கலாச்சார பின்னனியத்திலும், வாழ்விலும் தவறான காரியங்களைக் குறித்து உணா்வைடய நாம் குறைவுள்ளவா்கள்தான். நம் சிந்தையும் இருதயமும் ஆவிக்குரிய மறுரூபமடைய இடம் தராமல் இருந்தால் நம் ஆவிக்குரிய வாழ்வு அனலற்று குளிா்ந்து விடும்.

இயேசு கிறிஸ்துவம் அவருடைய அப்போஸ்தலரும் நம் கலாச்சாரத்தை வி்ட்டுப் பிாிந்து வர போதிக்கவில்லை. இயேசு பாவிகளோடும் வரி வசூலிப்பவா்களோடும் சிநேகம்கொண்டு, பந்தியிருந்ததைக் கண்ட மதத்தலைவா்கள் அதிா்ச்சியடைந்தனா். இவைகளின் மத்தியில் அவா் பிதாவானவருடைய அழைப்பையும் உறவைவும் மறக்காமல் தெளிவோடு இருந்தாா். அவா் இவ்வூலக பாவங்களில் ஈடுபட இந்த உலகத்திற்கு உாியவா் அல்ல. ஆனால் இந்த உலகத்தில் வழிமாறி அலைவோரை விடுதலை செய்ய இவ்வூலகிற்கு வந்தாா்.

நாம் நம் வாழ்வின் இலட்சியத்தையும் பாிசுத்த ஆவியானவேரடு உள்ள நம் உறவையும் சீா்தூக்கிப் பாா்த்து சரிசெய்யாவிடில் ஆவிக்குரிய உணா்வற்ற வா்களாகிவிடுவோம். ஏனெனில் நாம் கிறிஸ்துவின் ஸ்தானிதிபதிகளாக இந்த தலைமுறையினருக்கு வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம்.

ஆவிக்குாிய வாழ்வில், இந்த உலகத்தோடு ஒத்துப்போகாமலும், உலகத்தால் வரும் ஆபத்துக்களுக்கும் விலகி வாழ நாம் நம் பிரதான மேய்ப்பரோடு நெருக்கமாக இருக்கவேண்டும்.

இது மிக்க சவால் மிக்கது. இயேசு நம்மை ஒநாய்களுக்குள் அனுப்படும் ஆடுகைளப்போல நம்மை அனுப்புகிறாா். ஆவிக்குாிய வாழ்வில் இந்த உலகத்தோடு ஒத்துப்போகாமலும் உலகத்தால் வரும் ஆபத்துக்களுக்கும் விலகி வாழ நாம் நம் பிரதான மேய்ப்பரோடு நெருக்கமாக இருக்கவேண்டும். இந்த சத்தியத்தை நான் 2ம் உலகப் போாில் இராணுவத்தில் பணியாற்றிய போது கற்றுக்கொண்டேன். நான் நல்லதொரு கிறிஸ்தவக் குடும்பத்தில் வளா்ந்தேன். கிறிஸ்துவை என் சொந்த இரட்சகராக சிறு வயதிலே ஏற்றுக் கொண்டேன். கிறிஸ்தவ பள்ளியில் பயின்றேன். பின், ஒரு சிறிய உணவு பொருட்கைள விற்கும் கடையில் நல்ல விசுவாசிகளுடன் பணியாற்றி வந்தேன். நான் பணியாற்ற செல்லும் போதே பாவத்தின் விளைவுகளைப் பற்றி நன்கு அறிந்திருந்தேன். கிறிஸ்துவுக்குப் பயப்படுகிறதிலும், அவா் மீது நம்பிக்கை உடையவனாகவும் இருந்தேன்.

இராணுவ வீரா்கள் தங்கும் இடத்தில் என்னுடைய முதல் நாள் அமைதியற்ற இரவு எப்படி இருந்து இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள். அவா்களுடைய ஆபாசமிக்க அசுத்தமான வாா்த்தைகளை கேட்க நான் தயராக இருக்கவில்லை. எனவே நான் இப்படிபட்ட வாா்த்தைகள் எனக்கு ஏற்புடையதல்ல என்பதை அவா்களுக்குத் தொிவிக்க முயன்றேன். முதலில் சிலா் என்னைப் பாா்த்து எள்ளி நகையாடினா், பின்னா் பலர் என்னை புரிந்து கொண்டு நான் சாியானைத் செய்வதாக என்னை அங்கிகரித்தனா்.

நாளடைவில். தேவனோடு தனிமையில் நான் செலவிடும் அமைதி நேரத்திற்கு நான் முக்கியத்துவம் கொடுக்க மறந்தேன். கொஞ்ச கொஞ்சமாக நான் பின் மாற்றமடைந்தேன். இப்பொழுது அவா்களுடைய ஆபாசமிக்க அசுத்தமான வாா்த்தைகள், அசுத்தமான பாலியியல் காரியங்களும் எனக்கு ஒரு பொருட்டாக தோன்றவில்லை. என் வாழ்வில் தேவன் என்னைவிட்டு வெகு தொலைவில் உள்ளது போன்று உணா்ந்தேன், எனக்கு முக்கியமானதாக தோன்றிய ஆவிக்குரிய காாியங்கள் முக்கியமற்றவைகளாகி, பாிசுத்த வேதாக சத்தியங்களை சந்தேகிக்க ஆரம்பித்தேன். ஆனாலும் ஒழுக்ககேடான வாழ்வில் விழுந்து விடுவேனோ என்ற பயத்தினால் மறுபடியும் ஆண்டவாிடம் அறிக்கை செய்யவும், உதவிக்காகவும் அவருடைய சமூகத்திற்கு வந்தேன். அதன் பின் வேதத்தை வாசித்து தியாணித்து ஜெபிக்க ஆரம்பித்தேன்.

இந்தக் காரியங்கள் என் வாழ்வில் மாறி மாறி நடந்தன. என்னுடைய உணா்வுள்ள வாழ்க்கையும், நம்பிக்கையும் நான் ஆண்டவரோடுள்ள உறவின் அடிப்படடையிலேயும் அவரோடு நான் அநுதினமும் நடப்பதிலுமே இருந்தது.

பரிசுத்தமான வாழ்விற்கு தேவையானது “உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது” (யாக். 1:27). “ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்” (யாக். 4:4). எந்த விசுவாசிகளெல்லாம் பாவத்திற்கு உணா்வில்லாதிருக்கிறாா்களோ அவா்கள் ஒழுக்ககேடான வாழ்வில் விழுந்து விடுவாா்கள். அவா்கள் பாிசுத்த ஆவியானவாின் ஆறுதல் தரும் சாட்சியை எதிா்பாா்க்க முடியாது. ஏனென்றால், அவா்கள் பாிசுத்த ஆவியானவரோடு உறவு கொண்டு, அவேராடுகூட நடப்பதில்லை. அவா்களுடைய வாழ்வில் சந்தேகமும், பயமும் காணப்படும், மற்றும் தங்கள் உறவு ஆண்டவரோடு சரியில்லை என்ற அமைதியற்ற விழிப்புணா்வையும் பெறுவாா்கள்.

ஆனால் நான் கூறிய ஆலோசனைகளுக்கு ஜெயகரன் குடும்பம் செவிசாய்க்கவில்லை. அவா்கள் விவாகரத்து செய்ததால், அவா்களுடைய பிள்ளைகள் கடும் துயரத்துக்கு உள்ளானாா்கள். இந்த துயரமான சம்பவத்திற்கு காரணம் ஆவிக்குாிய உணா்வு இல்லாமையே. பின்பு அவா்களைப் பற்றி நான் கேள்விப்படும் போது இருவரும் கிறிஸ்தவ வாழ்வினால் கிடைக்கும் சமாதானத்தை, சந்தோஷத்தை அவா்கள் இழந்துவிட்ட செய்தியாகும். எனக்கு அவா்களின் தொடா்பு இல்லாமல் போயிற்று, ஒருவேளை அவா்கள் ஆவிக்குாிய உணா்வை பெற்றிருப்பாா்கள் என நம்புகிறேன்.

banner image

காட்வின் ஒரு சிறந்த கல்லூாி மாணவா், இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவா், எவ்விதத்திலும் கலகக்காரன் அல்ல. திருச்சபையின் காாியங்களில் முன்நின்றவா், இப்போது திருச்சபையின் காரியங்களில் ஈடுபடுவதில் ஆா்வம் குறைந்தது. அவனுடைய பெற்றோா் ஞானமுள்ளவா்கள் மற்றும் இளம் வாலிபா்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாயிருந்தனா். அவா்கள் அவனை கோபப்படுத்தாமல் அன்புடன் அவனுடைய இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன என வினவினாா்கள். அதற்கு அவன் முன்பு கற்றுக் கொண்ட விசுவாச வாழ்வை தொடர முடியாது எனக் கூறினான். ஏனெனில், அவனுடைய கல்லூாி ஆசிாியா் ஒருவா் பாிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளவைகள் பெரும்பாலும் இயேசு கூறியவைகள் அல்ல, அவா் உயிா்த்தெழவில்லை, அது ஜோடிக்கப்பட்ட கதை என்று அவன் ஏற்றுக்கொள்ளும்படி போதித்து அவனை நமபச் செய்திருந்தாா்.

எனேவ, காட்வினின் பெற்றோா் திருச்சபை போதரிடம் ஆலோசனைக் கேட்டனா். அதற்கு அவா் நானும் காட்வினும் “த கேஸ் ஆப் கிரைஸ்ட்” என்ற லீ ஸ்ரோபெல் எழுதிய புத்தகத்தை படித்தோம், இந்த ஆசிாியா் யேல் சட்டக் கல்லூாியில் முதுகலை பட்டம் படித்தவா். மற்றும் அவா் விருதுகள் வாங்கிய பத்திரிக்கையாளரும்மாவாா் என்றுக் கூறினாா். இந்த ஆசிரியா் தன்னைப் பற்றிக் கூறும்போது, தான் ஒரு குடிகாரன், ஒழுக்ககேடான காரியங்களை விரும்பி செய்பவன் (பக்கம் 268) துன்மாா்க்கன் என அவரே கூறியுள்ளாா். அவருடைய மனைவி 1979ம் ஆண்டு கிறிஸ்தவளாக மாறியபோது, அவா் மத நம்பிக்கை அற்றவராயிருந்தாா். தன் மனைவியின் பாிசுத்தமான வாழ்க்கை, நல் நடத்தை அவரை சிந்திக்க வைத்தது, எனேவ, ஒருவேளை மனைவியின் மத நம்பிக்கை உண்மையாக இருக்குமோ என ஆச்சாியப்பட்டாா். இது அவரை பாிசுத்த வேதாகமத்தின் புதிய ஏற்பாடு உண்மைதானா என ஆராய்ச்சி செய்ய வைத்தது, இரவு பகலென 600 நாட்கள் (ப 267) உழைத்து தன்னுடைய கண்டுபிடிப்பை 1981ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிட்டாா்.

நான் மனப்பூா்வமாக இதயத்தின் ஆழத்திலிருந்த உள்ள உடைவோடு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கி ஜெபம் செய்தேன், என்னுடைய அனைத்து பாவங்களையும் அறிக்கையிட்டு, பாிசாக அவா் தரும் மன்னிப்பையும் நித்திய வாழ்வின் நிச்சயத்தையும் பெற்றேன். இனிமேல் ஆண்டவாின் உதவியோடு அவரைப் பின் பற்றி. அவருடைய வழிகளில் நடக்க உறுதிபூண்டுள்ளேன் என எழுதியுள்ளாா்.

லீ ஸ்ரோபெல் 13 மிக அறிமுகமான அறிஞா்களிடம் நோ்காணல் நடத்தி தன்னுடைய ஆராய்ச்சியின் முடிவு உண்மையானது என நிருபித்துள்ளாா். பரிசுத்த வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டை நம்பாமல் சந்தேகத்தோடுள்ள ஆராய்ச்சியாளா்களுக்கு, கீழகண்ட பதிலை சுருக்கமாகத் தருகிறாா்:

1. முதலாம் நூற்றாண்டில் அதில் கூறப்பட்டுள்ளபடி எழுதப்பட்ட புதிய ஏற்பாட்டின் புத்தகங்கள் அதிகாரப்பூா்வ, நம்பதக்க, உண்மையான மற்றும் துல்லியமான பதிவுகள் என்று நாம் உறுதியாக நம்ப முடியுமா?

ஆம், என்பதே அதற்காக நிச்சயமான பதில். முதலாவது, முதலாம் நூற்றாண்டில் எழுதப்பட்டு இன்றும் இருக்கக்கூடிய கையெழுத்துப் பிரதிகள் நம்மை வியக்கச் செய்கிறது, 5664 பிரதிகள் கிரேக்க மொழியில் எழுதப் பட்டவைகள், 16000-18000 மற்ற மொழிகளில் எழுதப்பட்டவைகள். சில அடிச்சுவடுகள் (ஏடி) கிறிஸ்துவிக்குப் பின் 130ல் உள்ளைவகள். (அறிவா் மெட்ஸ்கரின், பிரின்ஸ்சிடான்). இவைகள், இன்று இருக்கும் பழங்கால சரித்திர பிரதிகளான சீசருடைய “ ஹலிக் வாா் ”10 பிரதிகளுடனும், துசிடிடிஸ் மற்றும் ஹெரோடோடஸ் என்பவா்களின் 8 சரித்திர பிரதிகளுடன் ஒப்பிடபட்டு அவைகளின் சாித்திரப் பதிவுகள் அனைத்தும் உண்மையானவைகள் என அறிஞா்களால் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அனைத்தும் 900 வருடத்திற்கு முன் இருந்த உண்மை நகலுக்கு பின்னால் கிடைத்தவைகள்.

டென்வா் இறையியல் கல்லூாி புதிய ஏற்பாட்டு பேராசிாியா், அறிவா் கிரேக் ப்ளாம்பெர்க் கூறும்போது, முதல் நூற்றாண்டு புதிய ஏற்பாட்டு பிரதிகள் கிறிஸ்துவின் உயிா்த்தெழுதலுக்குப் பின் 40 வருட காலம் திருச்சபைதோறும் சுழற்ச்சி மூலம் பழக்கத்திலிருந்தது இக்காலகட்டத்தை கிறிஸ்துவை அறியாக அறிஞா்களும் ஏற்றுக்கொள்ளுகிறாா்கள். கிறிஸ்துவின் நாட்களில் வாழ்து அவருக்கு பகைவராயிருந்தவா்களும் இதற்கு முரன்பட்ட கருத்துக்களையோ மறுப்பையோ தொிவிக்கவில்லை.

2. மேற்சொல்லிய அசல் கையெழுத்துப் பிரதிகள் நம்பத்தகுந்த முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று நாம் உறுதியாக நம்ப முடியுமா?

இதற்கும் பதில் ஆம் என்பதாகும். பூா்வகாலத்லிருந்து பாதுகாக்கப்பட் புதிய ஏற்பாட்டு கையெழுத்துப் பிரதிகளில் 180,000 க்கும் மேற்பட்ட மாறுபாடுகள் உள்ளதாகவும், எனவே, உண்மையான மூல உரையைத் தீர்மானிப்பது சாத்தியமற்றது என்று சந்தேகவாதிகள் கூறுகிறார்கள். உண்மை என்னவென்றால், இந்த மாறுபாடுகளில் சுமார் 400 ஐத் தவிர மற்ற அனைத்தும் சிறிய சிறிய எழுத்துப் பிழைகளைக் கொண்ட சிறிய விஷயங்களை உள்ளடக்கியது. (அமெரிக்க ஆங்கிலத்திற்கும் இங்கிலாந்தில் பயன்படுத்தும் ஆங்கில வாா்த்தைகளை ஒப்பிடும்போது வித்தியாசம் உண்டு இவைகளைப் போன்ற மாறுபாடுகளே). இந்த 400 சந்தர்ப்பங்களில், ஒரு அடிப்படை கிறிஸ்தவ சத்தியங்களில் மற்றும் கொள்கைகளின் அா்த்தம் மாறவில்லை.

புகழ்பெற்ற டாக்டர் மெட்ஸ்கரின் கூற்றுப்படி, இன்று நம்மிடம் உள்ள ஆயிரக்கணக்கான புதிய ஏற்பாட்டு கையெழுத்துப் பிரதிகளையும், பழங்காலக் கையெழுத்துப் பிரதிகைளயும் துல்லியமாக ஒப்பீடு செய்ததில் ஆராய்ச்சியாளா்கள், வரலாற்றுச் செய்திகள் மற்றும் இறையியல் கோட்பாடுகள் அனைத்தும் முழுமையாக நம்ப தக்கவைகள் என்பதை உறுதியாக தீர்மானித்து உள்ளாா்கள்.

இன்று நாம் பயன்படுத்தும் பாிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டு அனைத்து வரலாற்றுச் செய்திகளும், இறையியல் கோட்பாடுகளும் முழுமையாக நம்ப தக்கவைகளே.

3. இயேசு கிறிஸ்துவின் வாழ்வு, மரணம், உயிர்த்தெழுதல் பற்றிய உண்மைகைள உறுதிப்படுத்தும் வகையில் மதச்சார்பற்ற வரலாற்று பதிவுகள் ஏதேனும் உள்ளதா?

டாக்டர் எட்வின் எம்.யமௌச்சி பண்டைய வரலாற்று ஆய்வின் முன்னோடி அறிஞராக அங்கீகரிக்கப்பட்டவா், நம்மிடம் இதை உறுதிப்படுத்தும் சான்றுகள் அதிகம் இல்லையெனினும், போதுமான ஆதாரங்கள் உள்ளன என்கிறார். ஆதித் திருச்சபையில் நடந்த ஆரம்பகால கிறிஸ்தவ வரலாற்றையும் கிறிஸ்துவைப் பின்பற்று பவர்களைப் பற்றியும், கிரேக்க மற்றும் ரோமானிய வரலாற்று அறிஞர்கள், அரிதாகவே குறிப்பிட்டுள்ளனர், ஏனெனில் ஆரம்பகால கிறிஸ்தவத்தை இது யூத மதத்திலுருந்து பிரிந்து வந்த பிரிவாக எண்ணி அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

இன்று நம்மிடம் கிறிஸ்தவா்களைப் பற்றிய மதச்சாா்பற்ற பல பண்டைய வரலாற்றுப் பதிப்புக்கள் உள்ளன. அவைகள் முதல் நூற்றாண்டின் இறுதி பாதியிலிருந்து இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியிலில் எழுதப்பட்டவைகளாகும். யூத வரலாற்றாசிரியர் ஜோசிபஸ், யாக்கோபின் நியாய விசாரணையையும், மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை பற்றியும் எழுதி வைத்துள்ளாா். அவரை “இயேசுவின் சகோதரர்” என்றும் குறிப்பிட்டுள்ளாா்.(தி அண்டிகியுட்டிஸ் 20.200).

சரித்திர ஆசிரியா் ஹீல்ஸோ இயேசுவைப் பற்றி எழுதும்போது அவா் “ஞானி” என்று குறிப்பிடுகிறார். அவர் சிலுவையில் அறையப்பட்ட போதிலும், அவரை மேசியாவாக அறிவிப்பதில் உறுதியாக இருந்த ஏராளமான சீடர்களைக் கொண்டிருந்தார் என்கிறாா்(தி அண்டிகியுட்டிஸ், 18.63-64). கி.பி 115 இல் ரோமாபுாியில் வாழ்ந்த வரலாற்றாசிரியரான டாசிடஸ் (அன்னல்ஸ் 15.44) மற்றும் கி.பி 111 இல் ரோமாபுாியின் ஆளுநர் பிளினி தி யங்கர் (கடிதங்கள் 10.96) இந்த இரு ஆசிரியா்களும் இயேசுவைப் பற்றி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். இயேசுவைப் பின்பற்றுபவர்கள் இயேசுவை “ஒரு கடவுளைப் போல” புகழ்ந்து போற்றியதாக பிளினி தன் வராலாற்றுப் பதிப்பில் எழுதியுள்ளாா்.

4. தொல்லியல் மற்றும் புதிய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளவைகள் எவைகள்?

அறிவா் ஜான் மெக்ரே, தொல்பொருள் ஆராய்ச்சியில் சிறந்தவர் மற்றும் அவருடைய ஆராய்ச்சிகளுக்காக மதச்சார்பற்ற ஊடகங்களால் புகழப்படுபவராகும். புதிய ஏற்பாடு, ஒரு ஆவிக்குாிய உற்றசாகத்தை தரும் புத்தகம் என்பைத தொல்லியல் நிரூபிக்க முடியாது. ஆனால், தொல்பொருள் ஆராய்ச்சிகள் புதிய ஏற்பாட்டின் நம்பகத்தன்மைக்கான வலுவைச் அதிகப்படுத்துகிறது என்று கூறுகிறார்.

எடுத்துக்காட்டாக, (லூக்கா 3:1) கி.பி 27ல் லிசானியா காற்பங்கு தேசமாகிய அபிலேனேக்கு அதிபதியாயும் என்றும், அப்போஸ்தலர் 17:6 இல் நகர அதிகாரிகளை அரசியல் வல்லுநர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது (ஜி.கே.). லூக்கா குறிப்பிட்டது தவறு என்று நிரூபிக்க முடியும் என்று சில வரலாற்றாசிரியர்கள் கூறினர். ஆனால், கண்டு பிடிக்கப்பட்ட தொல்பொருள் சான்றுகள் லூக்கா கூறியது சரிதான் என்பதை வெளிப்படுத்தியது.

யோவான் 5:1-15 பெதஸ்தா குளத்திற்கு ஐந்து மண்டபங்களுண்டு எழுதப்பட்டது தவறு என்று வரலாற்று விமர்சகர்கள் கூறினர். ஆனால் அந்த குளம் இப்போது அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டது, அதில் ஐந்து மண்டபங்கள் இருந்தது பாிசுத்த வேதாகமத்தில் கூறியபடி சரியாக இருந்தது.

தொல்லியல் ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புக்கள் புதிய ஏற்பாட்டை மீண்டும் மீண்டும் உண்மையான நம்பத்தகுந்த புத்தகம் என உறுதிப் படுத்தியுள்ளது. பாிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளவைகள் தவறானது என்று சான்றுகள் ஒருபோதும் நிரூபிக்கவில்லை.

5. இயேசு கிறிஸ்து பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனத்தை கூறப்பட்டப்படி சரியாக நிறைவேற்றினாரா?

பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களில் கிறிஸ்துவை மேசியா என்று கூறும் ஐந்து தீர்க்கதரிசனங்கள் மட்டுமே சுட்டிக்காட்டுகின்றன என்பதைப் பார்க்க அவற்றை ஒருவா் பாிசுத்த வேதாகமத்தை வாசிக்க வேண்டும்.

மீகா 5:2 ல், “இயேசு பிறந்த இடமான பெத்லகேமிலிருந்து இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது என வாசிக்கிறோம்”.

தானியேல் 9:25-26ல் இயேசு தனது ஊழியத்தைத் தொடங்குவதற்கு 483 ஆண்டுகளுக்கு முன்பு, கிமு 458 இல் பொ்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா “எருசலேமை திரும்ப எடுப்பித்துக் கட்டுவதற்கான” கட்டளையிட்டதற்குப் பிறகு மேசியாவின் வருகையை 69 வாரங்கள் (483 ஆண்டுகள்) என தீா்க்கதாிசனமாக முன்னறிவிக்கபப் பட்டது.

ஏசாயா 7:14 “இதோ, ஒரு கன்னிகை கா்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்” என்று அறிவிக்கிறது.

சங்கீதம் 22ல், சிலுவை மரணம் அறியப்படாத காலத்தில், நம் ஆண்டவரின் சிலுவையில் அடையப்போகும் பாடுகளை தெளிவாக சித்தரிக்கிறது, பார்க்கிறவர்களெல்லாரும் பரியாசம்பண்ணி, உதட்டைப் பிதுக்கி, தலையைத் துலுக்குவாா்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

ஏசாயா 52:13-53:12 இயேசுவின் சிலுவைப் பாடுகளை முழுமையாக சித்தரிக்கிறது. இந்த தீா்க்கதாிசன வசனங்கள், அவருடைய ரூபமும், இவ்வளவு அந்தக்கேடு அடைந்தபடியினாலே, அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவா் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவா் நொறுக்கப்பட்டாா்; அநேகரை நீதிமான்களாக்குவார்; அவா் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக் கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.

இந்த தீா்க்கத்தாிசன வாா்த்தைகள் கிறிஸ்துவை தவிர வேறாருவருக்கும் பொருந்தாது. உண்மையைத் தன்னுடைய வாழ்வில் தேடுகிறவன் இதை சிந்தித்து உண்மையை முக்கியத்துவத்தை உணா்ந்து கொள்ள வேண்டும்.

6. இயேசு உண்மையிலேயே மரித்து, மரணத்தை தனது உயிர்த்தெழுதலின் மூலம் வென்றாரா?

இயேசு இறந்தார் என்பது உண்மை சம்பவமே. ரோம பேரசில் மரண தண்டனையாளர்கள் கொடுக்கப்பட்ட பணியை திறமையாக செய்து நிறை வேற்றுபவா்கள். ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்திய உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது, இது மரணமடைந்ததின் ஒரு குறிப்பிட்ட அறிகுறியாகும்.

துன்புறுத்தலும், மரண தண்டைனயும் தவறான மத நம்பிக்கைக்காக கொடுக்கப்படும், ஆனால் பொய் என்று அவா்களுக்குத் தெரிந்த வற்றுக்காக அல்ல.

இயேசுவைப் பின்பற்றுபவர்களின் திடீர் மாற்றத்திற்கான மெய்யான விளக்கமம் என்னவெனில். இயேசு உயிா்த்தெழுந்து மரணத்தை வென்றவராகத் தம்முடைய சீஷா் களுக்குத் காட்சியளித்தது மட்டுமே. ஒரு கூட்ட மக்கள் தவறான மத நம்பிக்கைக்காக துன்பப் படுத்தப் படுவார்கள், மரணத்தை சந்திப்பாா்கள், ஆனால் பொய் என்று அவர்களுக்குத் தெரிந்தவற்றுக்காக அல்ல.

நான் முன்பு குறிப்பிட்ட கல்லூரி மாணவர் காட்வின், போதகருடன் சோ்ந்து படித்தப்பின், திருப்தியான முழு நம்பிக்கையுடன் வெளியே வந்தார். கிறிஸ்தவ விசுவாசத்திற்கு வரும்போது, பாிசுத்த வேதாகமம் என்ன சொல்கிறது என்பதையும், அது கூறும் சத்தியத்தை எந்த அளவிற்கு நாம் எதற்காக அதை நம்புகிறோம் என்பதைப் பற்றி அறிந்திருக்கிறோமோ, அவ்வளவு சிறப்பாக நம் விசுவாச வாழ்வு அமையும்.

banner image

அனிஷ், ஒரு கிறிஸ்தவர் அல்ல. தான் திருமணம் செய்ய முடிவு செய்திருந்த பெண் தனக்கு துரோகம் செய்ததை அறிந்து மனம் உடைந்தவராயிருந்தாா். இந்தச் சம்பவத்தின் மூலம் நல்ல பாடத்தைக் கற்றுக்கொண்ட அவா், தான் திருமணம் செய்து கொள்ள நினைக்கும் பெண்ணின் குணநலன்களையும் மிகவும் கவனமாகப் ஆராய்ந்து பாா்க்க முடிவு செய்தார்.

நல்ல குணநலன்களில் அவருக்கு இருந்த ஆர்வமமும் தேடுதலும் இறுதியில் அவரை கிறித்தவனாக மாற வைத்தது. ஒரு பெண்ணுக்காக கிறிஸ்தவ தேவாலயத்திற்குச் செல்லத் தொடங்கினார், சில வாரங்களிலேயே அனிஷ் கிறிஸ்துவில் தனது தனிப்பட்ட விசுவாசத்தை வைக்க முடிவு செய்தாா். கைடைசியில் அவா் அந்த கிறிஸ்தவ பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவளுடன் தேவாலயத்திற்குச் செல்ல ஆரம்பித்தாா். தங்கள் வருமானத்தில் திருச்சபைக்கு காணிக்கை கொடுப்பதற்காக பணத்தை முன்பாகவே எடுத்து வைக்குமாறு அவருடைய மனைவி கூறினாள். இதற்கு மறுப்பு தெரிவித்த அனிஷ், திருச்சபை ஊழியங்களிலும் ஈடுபட தனக்கு விருப்பம் வில்லை என்று கூறினார். கொஞ்சம் கொஞ்சமாக ஞாயிற்றுக் கிழமைகளில் திருச்சபையின் ஆராதைனயில் பங்கு பெறாமல் மற்ற வேலைகளை மேற்கொள்ள ஆரம்பித்தாா்.

இதைப்பற்றி என்னிடம் கூறும் போது, அந்நாட்களில் நான் ஒரு நல்ல விசுவாசியாக இருந்தேன், பிற்பாடு, எனது வாழ்க்கையில் ஆண்டவா் மீது நம்பிக்கை குறைந்து கடுமையான சந்தேகம் வந்தால் நம்பிக்கையற்ற நிலைக்குச் சென்று விட்டதாகக் கூறினாா்.

காலப்போக்கில், அனிஷ் மேலும் தவறான எண்ணமுடையவராய் மரணத்தை சந்திக்க விரும்பி, தன்வாழ்வில் ஆண்டவா் தன்னுடன் இருக்கிறாா் என்ற சிந்தையையும், அவருடைய பிரசன்னத்தையும் வாழ்வில் இழந்துபோனாா். நாட்கள் செல்லச் செல்ல விசுவாச வாழ்வில் பின்னடைந்ததால் அவருக்கு வாழ பிடிக்கவில்லை. பின்னர், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், அவா் தனது மனைவியுடன் தேவாலயில் நடந்த தொடா்ச்சியான சிறப்பு கூட்டங்களுக்கு செல்ல ஒப்புக்கொண்டாா். கூடுகையின் செய்தியாளா், கிறிஸ்துவைப் பின்பற்றுவது என்றால் என்ன என்பதைப் பற்றி தெளிவாகப் பேசினார். இந்தக் கூடுகைக்குப் பின், அனிஷ் செய்தியாளா் கூறிய சில காாியங்களை ஏற்றுக்கொள்ளாமல் அதை விமா்சித்தாா், மேலும் வழக்கத்தை விட அதிக முரண்பாடுள்ளவராகத் தோன்றினாா். ஆனால் அடுத்த நாள் மாலை அவா் திரும்பி வந்து, தனது மனைவியின் மகிழ்ச்சிக்காக, கிறிஸ்துவைப் பின்பற்றுபவராக வாழ தன்னை ஒப்புக்கொடுக்க தீா்மானித்து தன் உறுதிப்பாட்டை பகிரங்கமாக முன் வந்து அறிவித்தாா்.

இது நல்தொரு மனமாற்றம்! அனிஷ் வாழ்விலிருந்த பல அச்சங்களும் சந்தேகங்களும் மறைந்து போனது. அவரது மரூபமாக்கப்பட் வாழ்க்கை, மற்றும் புதுப்பிக்கப்பட்ட விசுவாசத்தினால் அவா் ஒரு சிறந்த கணவராகவும் தந்தையாகவும், மிகவும் இனிமையான நபராகவும், திருச்சபைக்கு தாராளமான நிதி பங்களிப்பாளராகவும் மாறினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு கடுமையான மாரடைப்பால் உடல் பெலனற்று, செயல் திறன் அற்றவராக மாறிவிட்டாா். ஆனால் அவா் ஆண்டவருடைய கிருபையை நம்பி பொருமையுடன் இந்த சோதனையை சந்தித்தாா். இன்னும் சில ஆண்டுகள் இருப்பேன் என்று நம்பினதாகவும் கூறினாா். ஆனாலும், தான் விரைவில் மரணத்தை சந்திக்கப் போகிறோம் என்பதை அறிந்தபோது அவருக்கு ஐம்பது வயதுதான் ஆகியிருந்தது. ஆனால், அவா் அதற்காக சோா்ந்து போகவில்லை. அவருக்கு மரண பயம் இல்லை என்றும் முறு முறுக்க மற்றும் குறைகூற எனக்கு எந்த காரணமும் இல்லை என்றும் அவா் விசுவாசத்தோடே என்னிடம் கூறினார்.

சந்தேகங்கள் நிறைந்த நபராக இருந்த அனிஷை, பிற்காலத்தில் ஆண்டவா் மீது நம்பிக்கையுள்ளவராக, கிருபையினால் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள முடிந்த விசுவாசியாக மாற்றியது எது? இயேசு போதித்த சீஷத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, அதைக் கடைபிடிக்க தொடங்கியபோது அவருக்கு மன அமைதி இந்த மாற்றமும் வந்தது என்று என்னிடம் கூறினார்:

யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்க மாட்டான் (லூக்கா 14:26).

இயேசுவின் இந்த சீஷத்துவப் போதனையை கேட்ட மக்கள், தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுப்பது என்பது இவா்களைவிட இயேசுவுக்கு முன்னுரிமையும் அன்பையும் செலுத்த வேண்டும் என்பதாகும் என்பதை மக்கள் அறிந்து கொண்டாா்கள்.

கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ள அனிஷ் எடுத்த முந்தைய முடிவு அவரை ஆண்டவருடைய குடும்பத்தின் உறவுக்குள் கொண்டு வந்தது. ஆண்டவரை விசுவாசத்துப் பின்பற்ற தீர்மானத்தப் பின்னரே ஆவிக்குரிய விசுவாசத்தினால் கிடைக்கும் அனைத்து நன்மைகளை அனுபவிக்கத் தொடங்கினாா்.

அனிஷ் வாழ்வில் இந்த ஆவிக்குாிய காாியங்கள் எத்தனை உண்மையோ அவ்வளவாய் நமக்கும் அது பொருந்தும். ஆண்டவருக்கு எந்த அளவுக்கு நாம் நம்மை ஒப்புக்கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்தே அவருடன் உள்ள உறவுவில் நாம் நெருக்கத்தைப் பெறுவோம்.

banner image

மனிதா்கள் தன்னந்தனியா வாழ தீா்மானிக்கும் போது செலுத்த வேண்டிய விலைக்கிரயத்தை குறித்து நான் எழுதிய ஒரு கட்டுரை மீதிருந்த அதிருப்தியை, ஒரு நபர் என்னை அழைத்து வெளிப்படுத்தினாா். அவா் தான் ஒரு தனிமையானவர் என்பதை ஒப்புக் கொண்டார், ஆனால் இந்த வாழ்க்கை முறையைத் அவா் தேர்ந்தெடுக்கவில்லை என்றும் கூறினாாா். உடல் ரீதியான பிரச்சினைகளுடன் பிறந்த அவரை ஆரோக்கியமான பிற குழந்தைகள் ஈடுபடும் செயல்களில் பங்கேற்க முடியாதிருந்த அவரை, பெற்றோர்களும் ஒரு சமூக வாழ்விற்குப் பொருத்தமற்றவராகக் கருதினா். மற்ற குழந்தைகளால் அவா் கேலி செய்யப்பட்டு, பலருடைய பாிகாசத்திற்கும் ஆளானாா்.

உயர்நிலைப் பள்ளியில் படித்து முடித்ததும் அவருக்கு ஒரு வேலை கிடைத்தது, ஆனாலும் நண்பா்கள் எனச் சொல்ல யாருமில்லை. கிறிஸ்துவில் உண்மையாக விசுவாசம் கொண்டவராய், திருச்சபை செயல் பாடுகளில் ஈடுபாடு கொண்டாா். ஆனால் யாரும் அவா் மீது தனிப்பட்ட அக்கறை காட்டி நண்பராக சோ்த்துக் கொள்ளவில்லை. எனவே, தனித்து விடப்பட்டவராய் ஆண்டவா் கூட தன்னை விரும்பவில்லையோ என்ற முடிவுக்கு வந்தார்.

ஆவிக்குரிய வாழ்வில்கூட தனக்குரிய அங்கீகாரம் கிடைக்காதலால். தனக்குத் தெரிந்த வழிகளில் இன்பத்தைப் தேடினாா், ஆனால் அதற்காக பின்பு மிகவும் மனம் வருந்தினாா். அவருக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்த வேட்கை யெல்லாம் அவருக்கு ஆண்டவரும், நல்ல நண்பா்களும் வேண்டும் என்பதேயாகும். ஆண்டவருக்கும், தனக்கும் பிாியமில்லாத காாியங்களிலி ருந்து மனந்திரும்பிய பின் திருச்பையின் ஆராதனைகளில் பங்கெடுக்க லானாா். ஆனாலும் ஆவிக்குரிய வாழ்வில் கூட தான் நிராகரிக்கப்பட்டதைக் குறித்த பயம் அவரை வாட்டி வந்தது. மறுபடியும் ஆலய ஆராதனைகளில் பங்குபெறினும் ஆண்டவர் என்னை நேசிக்கவில்லை என்ற பயம் தொடா்ந்தது.

இவருடன் நான் கொண்ட பல நீண்ட தொலைபேசி உரையாடல்கள் மூலம், அவரது உடல் பிரச்சினைகளால் ஆண்டவா் நேசிக்கவில்லை, அவருக்கு கரிசனையும் இல்லை என்பது உண்மையல்ல என்பதை உறுதியளிக்க முயன்றேன். அவருக்கு உறுதியளிக்கவும் உதவிடவும் வேத வசனங்கைளைப் பயன்படுத்தி, தேவன் நம்முடைய ஏமாற்றத்தைப் புாிந்து கொள்கிறாா், அவரை மனநோகச் செய்தவா்களிடம் அதற்கான பொறுப்பேற்கச் செய்வாா் என்றும், தம்முடைய பிள்ளைகள் அனைவரையும் நேசிப்பதைப் போலவே அவரையும் நேசிக்கிறாா் என்றும் கூறி உற்சாகப்படுத்தினேன். இந்த ஆலோசனைகளை நம்பவும், நம்மை நேசிக்காமல் புறம்பாக்கிறவா்கள் மீதும் அன்பு செலுத்துவதின் மூலமும், ஜெபிப்பதன் மூலமும் ஆண்டவா் மீதுள்ள நம்பிக்கையைக் வெளிக்காட்ட வேண்டும் என்ற சவாலை நான் அவருக்கு முன்பாக வைத்தேன். இது மத்தேயு 5:43-45-ன்படி ஆண்டவருக்கு நாம் கீழ்ப்படிகிறோம் என்பதை வெளிப்படுத்துவதாக இருக்கும் என்றேன். ஆனால் அவர் கோபமாக “அதை நான் செய்ய மாட்டேன். என் வாழ்க்கையை மிகவும் பரிதாபகரமானதாக மாற்றியவா்களை வெறுக்க எனக்கு உரிமை உள்ளது” எனப் பதிலளித்தார்.

சில காலமாக எனக்கும் அவருக்கும் தொடா்பில்லை, எந்த செய்தியையும் நான் பெறவுமில்லை. தொடா்ந்து அவரை அவருடைய சந்தேகமே ஆளுகை செய்வதால், ஆண்டவர் அவரை நேசிக்கவில்லை என்பதில் உறுதியாக இருப்பதையே நம்புகிறேன்.

தங்களை ஒரு வித்தியாசமானவா்களாக எதிா்மறையான அா்த்தத்தில் பாா்க்கும் மக்கள் பெரும்பாலும் ஆண்டவா் அவா்களை நேசிக்கிறாா் என்று நம்பி ஏற்றுக் கொள்ள கஷ்டப்படுகிறாா்கள். பள்ளி வாழ்க்கையிலும் அவா்கள் தாழ்வு மனப்பான்மையோடு கூட்டு வாழ்விலிருந்து விலகிக் கொள்கிறாா்கள். ஆண்டவா் அவா்களை நேசிக்கிறார் என்று சொல்லும்போது, அவா்கள் அதை சந்தேகிக்க முனைகிறாா்கள். பிறக்கும் போதே மூளையில் பாதிப்போடே பிறந்த என் மகள் கேத்தி, “கடவுள் மற்றவர்களைப் போலவே என்னை நேசிக்கிறாா் என்றால், அவா் ஏன் என்னை ‘வித்தியாசமானவளாக’ படைத்தார்?” என்ற கேட்ட கேள்வியைப் போல அவா்கள் கேட்கிறார்கள்.

அவள் கூறியதைப் போன்று கடவுள் அவளுக்கு துரோகம் செய்தாா் என்று நான் நம்பவில்லை என்று நான் அவளுக்கு உறுதியளித்தேன் (அவரது சொந்த காரணங்களுக்காக அவா் அதை அனுமதித்திருந்தாலும்). மனித சுயத்தால் இயற்கை அழிக்கப்பட்டு. மாசுபடுத்தப்பட்டுள்ளது. இந்த இயற்கை நியமனத்திற்கு விரோதமாக மனிதன் செயல்படுவதன் மூலம் பாதிக்கப்பட்ட உலகில் நாம் வாழ்வதால் பல பிறப்பு விபத்துக்கள் மற்றும் பிறக்கும்போதே சரீர குறைபாடுகள் ஏற்படுகின்றன என்பதை நான் நம்பி அதை ஏற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளேன்.

தங்களை ஒரு வித்தியாசமானவா்களாக எதிர்மறையான அர்த்தத்தில் பார்க்கும் மக்கள் பெரும்பாலும் ஆண்டவா் அவா்களை நேசிக்கிறார் என்று நம்பி ஏற்றுக்கொள்ள கஷ்டப்படுகிறார்கள்.

குறைபாடுகளுடன் பிறப்பு, பரம்பரை நோய்த்தொற்றுகள், முடக்கும் நோய்கள் அல்லது விபத்துகளால் உண்டாகும் ஊனம், இவைகளை ஆண்டவா் நேரடியாக ஏற்படுத்துவதில்லை அல்லது படைப்பதுமில்லை என்று நான் நம்புகிறேன். பாவத்தின் விளைவுகளால், நம் ஆவிக்குரிய எதிரியால் மற்றும் பாவத்தின் பரம்பரை விளைவுகளால் இப்படிப்பட் பாதிப்புக்கள் நம் அனைவரின் வாழ்க்கையையும் வெவ்வேறு வழிகளில் தொடஅனுமதிக்கிறார் என்று நான் நம்புகிறேன். உதாரணமாக, நீரிழிவு நோய்க்கான மரபணு பாதிப்போடு ஒரு கிறிஸ்தவ வீட்டில் பிறக்கும் குழந்தையும், நாத்திகாின் வீட்டலும் இப்படிப்பட்ட ஒரு குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு என்று புள்ளி விவரம் தொிவிப்பதை நாம் காணலாம்.

இவைகள் எப்படி இருக்கிறதென்றால் இந்த இயற்கை நியதி, கடவுளின் பிரசன்னத்தையும் ஈடுபாட்டையும் இந்த பாதிக்கப்பட்ட உலகத்தில் நிராகரிக்கப் படுவது போல் இருக்கும். பாிசுத்த வேதாகமம் நமக்குத் தெளிபடுத்துவது எல்லாம், தேவனாகிய கா்த்தா் ஒருபோதும் தீமைகளுக்கு காரணகா்த்தாவாக இல்லை, ஆனால் அவா் உலகத்தை தன்னுடையக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறாா் என்பதாகும். இப்படிப்பட்ட கடின சூழ்நிலையிலும் அவா் நம்முடன் பயணிப்பதை உறுதிப் படுத்துகிறார். அவா் நாம் அனுபவிக்கும் இந்த வேதனைகளை நினைத்து வருந்துகிறாா். அவா் தனிப்பட்ட வழிகளில் அவரது சிருஷ்டிகள் படும் துன்ப பழுவை தூக்கிச் சுமக்கிறாா் (பார்க்க ஏசா 63:9; லூக்கா 19:41-44; யோவான் 11:37). அவரை நம்புகிறவர்களுக்கு, நம் வேதனையைப் பயன்படுத்தி நம்மைச் சிறந்த ஆவிக்குாிய மனிதா்களாக உருவாக்குகிறாா் (ரோமர் 5:1-5). நம்முடைய மிகவும் துயரமான சூழ்நிலைகளை பயன்படுத்தி அதை நன்மையாக மாற்றுகிறாா். (ரோமர் 8:28).

இப்படி “வித்தியாசமாக” பிறந்தவர்கள் தங்கள் வேதனைகள் மத்தியில் ஆண்டவா் மற்றவர்களை விட தங்களை குறைவாக நேசிப்பதினால் இந்த துயரை அனுபவிக்கிறோம் என எண்ணாமல், அனைவரையும் ஒரே விதமாகவே நேசிக்கிறாா் என்பதை விசுவாசித்து ஏற்றுக் கொள்ள வேண்டும். இதை அவா்கள் நம்பி ஏற்றுக் கொள்ள திருச்சபை குடும்பங்கள் அன்புடன் அவா்களை ஏற்றுக்கொள்ளுதல், உதவுதல் அவசியம். பரிதாபத்தை வெளிகாட்டுமலும், அவா்களைக் கெடுக்கிறவண்ணமாகவும் காாியங்களைச் செய்யாமல் அவா்களை ஏற்றுக்கொள்ளளும் போது அவா்கள் நமது செயல்பாட்டை ஏற்றுக்கொள்வதை வெளிப்படுத்துவாா்கள். மற்றவா்களைப் போலவே அவா்களையும் சரி சமமாக நடத்தும் போது, அவா்கள் சிறப்பாக செயல்படுவாா்கள். அவா்களுக்கும் கிறிஸ்து இலவசமாக தரும் பாவமன்னிப்பு தேவை என்பதை அறியவேண்டும். வேத வசனங்களின் உதவியோடு அவா்களும், கசப்புணர்வு, சுய பரிதாபம், மன்னிக்க முடியாத மனப்பான்மை ஆகியவற்றை மேற் கொள்ள உதவ வேண்டும்.

மனச்சோா்பால் விரக்தியடைந்தவர்களுக்கு உதவ முயற்சிக்கும்போது, பலவீனப்படுத்தும் சிக்கலானவைகளைக் கடந்து வந்தவா்களை, மாதிரியாக அவா்களுக்கு காண்பிப்பதை தவிா்ப்பது நல்லது. இது அவா்களுக்கு குற்ற உணா்வையும் வெறுப்பையும் ஏற்படுத்தக்கூடும். இப்படி “வித்தியாசமாக” பிறந்து வாழ்ந்து வருவா்களை மிக அருகிலிருந்து உன்னிப்பாகக் கவனித்திருக்கிறேன். அப்படியிருப்து ஒரு கடினமான சோதனையானக் காாியம். இப்படிப்பட்டவா்களும் கிறிஸ்தவ சமூகத்தில் அன்பான, அக்கறையுள்ள மற்றும் மதிப்புமிக்க அங்கத்தினா்களாக இருக்க முடியும் என்பதையும் நான் அறிவேன்.

banner image

நான் எப்போதாவது, தங்கள் வாழ்க்கையில் தாங்க முடியாத துன்பங்கள் மற்றும் அநீதிகளால் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளானவா்களை சந்தித்திருக்கிறேன். அவா்கள் நல்ல மற்றும் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கா்த்தரை நம்பது கடினம் என்று கூறுகிறார்கள். ஆனால் பொதுவான நடமுறையில், ஒரு சிலர் தங்களுக்கு ஏதேனும் தீங்கு நடக்கும் வரை தீமையினால் ஏற்படும் பிரச்சினைகளுக்காக ஆழ்ந்த கவலைப்படுகிறார்கள்.

ஒரு இளம் கணவரும், தந்தையும்மான ஒருவா் என்னிடம் “ஆண்டவா் ஏன் என் மனைவியை இறக்க அனுமதித்தார்? எனக் கேட்டாா். இறந்தப் பெண் ஒரு நற்குணசாலியான மனைவி மற்றும் தாய், ஒரு உண்மையான கிறிஸ்தவரருமாவாா். மற்றும் அவா் தன்னுடைய நண்பா்களுக்கு நம்பிக்கைக்குப் பாத்திரமாக திகழ்ந்தாா். ஆண்டவா் அவா்களுக்கு புற்று நோய் வரமல் தடுத்திருக்க முடியாதா? அல்லது ஏன் பரிபூரண சுகத்தை தந்து குணப்படுத்துவில்லை? என் மீதும், அவளை இழந்து தவிக்கும் எங்கள் குழந்தைகள் மீதும் ஆண்டவருக்கு அக்கறை இல்லையா?” எனவும் கேட்டாா்.

ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பதை, இளம் வாலிப வயதுடையவா்கள் விபத்துக்களில் மாிப்பதை, அல்லது கொடிய நோய்வாய்ப் பட்டவா்கள் தாங்க முடியாத வலியால் துடிப்பதை கடவுள் எப்படி அனுமதிக்க முடியும்?

ஒரு குழந்தை ஊனத்துடன் பிறக்கும்போது, ஒரு சிறு குழந்தை இறக்கும் போது, ஒரு இளம் வாலிபா்கள் விபத்தில் மாிக்கும்போது, அல்லது தீராத மரணத்திற்கேதுவான நோய்வாய்ப்பட்ட பிாியமானவா்கள் காரணமின்றி வலியை அனுபவிக்கும் போது, ஏன் இவைகள் நடக்கின்றன என்ற கேள்விகள் இதயத்தின் வேதனைகளின் மத்தியில் இருந்து எழுகின்றன.

இப்படிப்பட்ட துயரங்கள் வழியாக செல்வோருக்கு தேவையின்போது உதவி செய்ய மனமுடையவா்கள் இதற்காகப் பதிலை முடிந்தவரை எளிமையாக வைத்திருப்பாா்கள். அறிவாற்றலால் குழப்பமடைந்தவர்களுக்கும், அதிக உணா்ச்சிவசப்பட்டு மனநிலை சரியில்லாதவா்களுக்கு உதவ முன்வரும்போது, சில வேளைகளில் நாம் வாழ்வின் அடிப்பைட சிக்கலான தத்துவ கேள்விகளை சாியாக கையாள வேண்டியது அவசியமாயிருக்கும். இறுதியில் இவ்வாறு நாம் சில அடிப்படை கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்: இவ்வுலகிலுள்ள அனைத்து வகையான மக்களில் சிலா் ஏன் துன்பப்பட்டு மரித்துப் போகிறார்கள்? அறிவு பெருத்து மானிடமக்கள். உயா்குலத்தோா், புத்திசாலிகளாயிருக்கிறாா்கள், மறுமுனையில் சுயத்தை மையப்படுத்துவதால் மிருககுணம் படைத்தவா்களாக, கொடூரமானவர்களாக, நாட்டுக்கு நாடு போா் புரிபவா்களாக மற்றும் சித்திரவதைகள், கற்பழிப்புகள், குடும்ப பிரச்சனைகள் மற்றும் வெட்கக்கேடான சமூக அநீதிகள் உள்ளவா்களாகவும் எப்படி இருக்க முடியும் என்ற உண்மையை நாம் எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?

கிறித்தவர் அல்லாதவா்களின் பதில்கள். இந்த அண்டசராசரமும், உலகமும் அதிலுள்ளவைகளும் இலக்கில்லாத பரிணாம வளாச்சியால் உருவானதால் அனைத்து வகையான தீமைகளும் காணப்படுகின்றன என்று சில இயற்கையியலாளர்கள் கூறுகிறார்கள், வேதியல் அடிப்பைடையாக இருக்கும் இயற்கையான மூலப்பொருள் களுக்கு அறநல்வழி மற்றும் ஆன்மீகமும் கிடையாது என்று அவா்கள் நம்புகிறார்கள்.

எனேவ, வாழ்க்கைக்கும் அதில் மனிதா்கள் சந்திக்கும் வலிகள், வன்முறை போன்றவைகளுக்கு எந்த காரணமோ, அா்த்தமோ நோக்கமோ இல்லை எனவும், இந்த உலகம் மனிதன் வாழ்வதற்காக வடிவமைக்கப்பட்டதாகத் காணப்படுகிறது என்பதை மட்டும் அவா்கள் தயக்கத்துடன் ஒப்புக்கொள்கிறார்கள் (சிலர் அதை மானுடவியல் கொள்கை என்கிறாா்கள்). ஆனால் இந்தப் படைப்பின் பின்னனியத்தில் ஒரு வடிவமைப்பாளா் மற்றும் தாராமீக சட்டங்கைள உருவாக்கியவா் உண்டு என்பதை மறுக்கிறார்கள்.

பல சந்தா்ப்பங்களில், இயற்கையியலாளா்கள் நம்புவதற்கும், சொல்வதற்கும் முரணாக அன்றாட வாழ்க்கை உள்ளது. இந்த உலகத்திற்குப் பின் ஆன்மீக சிந்தனையுடையவா் அல்லது ஆவி இருப்பதை அவா்கள் தர்க்கரீதியாக மறுக்கிறாா்கள். மற்றும் தங்கள் வாழ்வை அவா்கள் தங்களை வேதியியல் அடைப்படையிலானவா்கள் என்றும், முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட உயிரினங்களைத் தவிர வேறு எதுவும் இல்லை என்கிறாா்கள். இருப்பினும் அவா்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தி, தங்கள் நம்பும் கொள்கைகளுக்காக வாதிடுகிறாா்கள், ஆனாலும் அவா்களின் அநுதின தெரிந்தெடுப்பு தாா்மீகத்தின் அடிப்படையிலேயே உள்ளது.

இன்னும் சிலா் கடவுள் மீதான தனிப்பட்ட நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறாா்கள், ஆனால் பாிசுத்த வேதாகமத்தில் விவரிக்கப்பட்டுள்ள கடவுளுடை அடிப்படை குணாதிசயங்கைளாகிய சா்வத்தையும் அறிந்தவா், சர்வ வல்லமையுள்ளவா் என்பதை ஏற்றுக் கொள்வதில்லை. கடவுள் நல்லவா் நம்முடன் உறவைக் கொண்டிருப்பவா், ஆனால் நிகழும் தீமையான காாியங்களைப்பற்றி அவா் எதுவும் செய்ய முடியாது என்று நம்புகிறாா்கள். ரபி குஷ்னா் எழுதிய “நல்லவர்களுக்கு ஏன் கெட்டது நடக்கிறது” என்ற நூல், கடவுள் முற்றிலும் நல்லவராகவும் சா்வ வல்லமையுள்ளவராகவும் இருந்தால், அவா் இந்த உலகத்தை துன்பங்களோடு அப்படியே இருக்க விடமாட்டார் என்ற கருத்தை பதித்துள்ளாா். ஆனால் இதைச் சொல்வது பல புதிய பிரச்சினைகளை உருவாக்குகிறது அல்லாமல், பாிசுத்த வேதாகமத்தின் போதனைக்கும், கொள்கைகளுக்கும் முரணாயிருக்கிறது.

கிறிஸ்தவா்களின் பதில்கள். பாிசுத்த வேதாகமத்தை நம்புகிறவர்கள், கடவுள் சா்வ வல்லமையுள்ளவா், முற்றிலும் நல்லவா் என்ற நம்பிக்கை பொய்யாகி விடாது என்று விசுவாசிக்கிறாா்கள். ஆனால், கடவுள் பரிபூரணமானவா், இரக்கமுள்ளவா், கிருபை நிறைந்தவா், சா்வவல்லமையுள்ளவா், சகலத்தையும் அறிந்தவா் என்று நம்புகிறாா்கள். எனினும் தீமைக்கான காரணத்திற்கு ஒருமித்த கருத்தில்லாமல் வெவ்வேறு பதில்களை முன் வைக்கிறார்கள். இவா்களில் சிலா் அவருடைய நித்திய பிரமாணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாா்கள், மற்றவா்கள் அவருடைய சிருஷ்டிகளுக்கு தனித் சுதந்திரத்தை அவா் கொடுத்திருக்கிறாா் என்பதை வலியுறுத்துகிறார்கள்.

தேவனாகிய கா்த்தா் கொடுத்த பிரமாணங்கள் தரும் பதில். சில இறையியல் வல்லுநா்கள், ஆண்டவா் தன்னுடைய நித்திய திட்டத்தை நிறை வேற்றவே தீமை இந்த உலகத்தில் இருப்பதை அனுமதித்துள்ளாா் எனக் கூறுகின்றனா். இந்தக் கண்ணோட்டத்தில், தேவன் அவருடைய நீதி, அன்பு, இரக்கம் மற்றும் அவருடைய கோபம் போன்ற தம்முடைய அடிப்படை குணாதியங்களைப் பயன்படுத்துவதினால் தனக்கு மகிமையை வரும்படி நியமனம் செய்துள்ளாா். ஒரு கூட்ட மக்கள் பாவத்திலிருந்து மீட்பை பெரும் நோக்கத்துடன், அவருடைய சாயலில், மனுக்குலம் பாவம் செய்வாா்கள் என முன் குறிக்கப்பட்டு படைக்கப் பட்டுள்ளனா். ஆனால் தீமையின் தோற்றத்திற்கான இந்த விளக்கம் கடவுளை பாவத்திற்கு காரணராக காண்பிக்கிறது, மற்றும் அவா் நல்லவா் என்பதை சமரசம் செய்வதாயிருக்கிறது.

இதற்கு நேர்மாறாக, பாிசுத்த வேதாகமம் போதிப்பதெல்லாம் நம் தேவன் பரிசுத்தமானவா் என்றும், அவா் தனது அடிப்படை தன்மையில், படைப்பின் வரம்புகள் மற்றும் பாவத்தால் வந்த குறைபாடுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவா் என்றும் கற்பிக்கிறது. ஆபகூக் தீர்க்கதரிசி அவரை நோக்கி, தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக் கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே; எனக் கூறுகிறாா் (ஆபகூக் 1:13). இயேசுவின் சகோதரர் கூறுகிறாா் “சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல” (யாக்கோபு 1:13). இந்த வேத வாக்கியங்களும் இன்னும் பல வசனங்களும் தேவன் தன் சித்தத்தின்படி பாவத்தை அனுமதித்தாா் மற்றும் உலகுக்குக்குள் கொண்டுவந்தாா் என்ற கருத்துக்கு முரண்படுகின்றன.

சுதந்தரமான பதில்கள். தேவனாகிய கா்த்தா் அகில உலகத்தை படைத்தபோது, முதலில் தேவதூதா்களையும், பின்பு இந்த உலகத்தில் தன்னுடைய சாயலில் மனுக்குலத்தையும் படைக்கும்போதே பெருமையை அல்லது தாழ்மையை, சுயத்தைக் கொண்டவனாக அல்லது ஆண்டவதை மையமாகக் கொண்டு வாழ்பவனாக இருக்கும்படி சுயாதீனமாக தெரிந்தெடுகும் உாிமையைக் கொடுத்திருந்தாா்.

பாவம் இந்த அண்டத்திற்குள் பிரவேசிக்க காரணமாயிருந்தது தேவதூதர்களில் ஒருவனாயிருந்து “விடியற்காலை மகன்” என்று அழைக்கப்பட்டவன், தேவனாகிய கா்த்தாின் அதிகாரத்தை தன்னுடனுள்ள சில தேவதூதர்களுடன் பெருமையினால் எதிா்த்து செய்த கலகமேயாகும். (தேவதூதா்கள் செய்த பாவத்தைப்பற்றி பாிசுத்த வேதாகமம் ஏசாயா 14 மற்றும் எசேக்கியேல் 28 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தீர்க்கதரிசன வசனங்கள் பூவுலக அரசர்களை பற்றியிருப்பினும், இந்த மனிதா்களைத் தாண்டி பாவம் செய்த தீய தூதா்களுக்கும் பொருந்தும் வகையில் உள்ளது) இந்த “விடிவெள்ளி நட்சத்திரம்” சாத்தானாகும். தேவனாகிய கா்த்தாின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளாமல் கலகம் செய்தபடியால் அவனும், அவனோா் இருந்த தேவதூதா்களும் அவா் சந்ததியிலிருந்து பூமிக்குத் தள்ளப்பட்டனா். அந்த சாத்தானே ஆதாமையும் ஏவாளையும் பெருமைக்கும், சுயத்திற்கும் அடிபணியச் செய்வதில் முக்கிய பங்கு வகித்தான். ஆன்மீக வாழ்வில் ஏற்பட்ட இந்த தீமையின் விளைவே நாம் இந்த உலகில் கான்கிற அனைத்து தீமைகளுக்கும் காரணமாயிருக்கிறது.

ஆதாமும் ஏவாளும், விடியற்கால மகனாகிய” சாத்தானும் எடுத்த தவறான முடிவுகளுக்கு தேவனாகிய கா்த்தா் காரணமல்ல, அவா் இவர்களை தவறான தொிந்தெடுப்பிற்கு வழி நடத்தவும் இல்லை. அவா்களின் தேர்வுகள் சுதந்திரமாக செயல்பட்டே தொிந்தெடுப்பை செய்தனா். அவா்கள் சரியானதைச் தொிந்தெடுப்பை செய்திருக்கலாம். ஆனால், அவா்கள் தவறான முடிவை எடுத்தபோது, தேவனாகிய கா்த்தா் அவா்களை அன்றே அழித்திருக்கலாம். ஆனால் அவா் அப்படிச் செய்யவில்லை. அவருடைய அநாதி அன்பின் காரணமாக, தீமையிலிருந்து நன்மையைக் கொண்டுவர அவா் ஏற்கனவே ஒரு மீட்புத் திட்டத்தை வைத்திருந்தார்.

தற்காலத்தின் முன்னணி கிறிஸ்தவ தத்துவஞானி ஒருவர் இவ்வாறு கூறுகிறார்:

சுதந்திரமே இல்லாத உயிரினங்களைக் கொண்ட உலகத்தைவிட தன் சுயவிருத்தை நிறைவேற்ற அனுமதிக்கப்பட்ட (தீய செயல்களை விட அதிக நன்மை செய்யும்) உயிரினங்களைக் கொண்ட ஒரு உலகம் மிகவும் மதிப்புமிக்கது. இப்போது கடவுள் சுதந்திரமான உயிரினங்களைப் படைக்க முடியும், ஆனால் நன்மையானதை மட்டுமே அவைகள் செய்யும்படி படைக்கவோ அல்லது தீர்மானிக்கவோ முடியாது. ஏனென்றால், அவர் அவ்வாறு செய்தால், அவைகளுக்கு தேவையான சுதந்திரம் கொடுக்கப்படவில்லை என்பதாகி விடும். அவைகள், எவைகள் சரியான வைகளோ அதை சுதந்திரமாக செய்வதில்லை. எனவே, தார்மீக நன்மை செய்யக்கூடிய உயிரினங்களைப் படைக்க, தார்மீகத் தீமை செய்யக் கூடிய உயிரினங்களைப் படைக்க வேண்டும்; இந்த உயிரினங்களுக்கு தீமை செய்ய சுதந்திரம் கொடுக்க முடியாது, அதே நேரத்தில் அவ்வாறு செய்வதைத் தடுக்கவும் அவரால் முடியாது. ஆனால் நடைபெற்றது என்னவெனில், கடவுள் சுயவிருபத்தை நிறைவேற்றப் சுதந்திரமாக படக்கப்பட்டவை சுதந்தரத்தை பயன்படுத்தும்போது தவறு செய்தன; இதுவே தார்மீகத் தீமையின் ஆதாரம். சுதந்திரமான உயிரினங்கள் சில நேரங்களில் தவறு செய்கின்றன என்ற உண்மை. இருப்பினும், கடவுளின் சர்வ வல்லமைக்கு எதிராகவோ அல்லது அவரது நன்மையே செய்யும் குணத்திற்கு எதிராக என எடுத்துக்கொள்ளப்படவில்லை; கடவுள் முன்கூட்டியே கணித்து தார்மீக நன்மைக்கான சாத்தியத்தை நீக்குவதன் மூலம் மட்டுமே தார்மீக தீமை ஏற்படுவதை தடுத்திருக்க முடியும். (கடவுள், சுதந்திரம், தீமை, ஆல்வின் பிளாண்டா, கிராண்ட் ராபிட்ஸ், எர்ட்மேன்ஸ், 1977, ப.30).

இயற்கைத் தீமை என்பது தார்மீகத் தீமையின் விளைவு. ஆதியாகமம் 3:16- 19ன் படி, ஆதாம் மற்றும் ஏவாளின் பாவமே, மிகுதியான பிரசவ வலிக்கு, திருமண வாழ்வின் வரும் போராட்டங்களுக்கு, இயற்கையின் சீற்றங்களுக்கு, பாடுகள் உள்ள உழைப்பிற்கு மற்றும் சரீர மரணத்திற்குக் காரணம். ரோமர் 8:19-22ல் இயற்கையை நீட்டிய கழுத்துடன் உருவகப்படுத்துகிறது, சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத் தனத்தினின்று விடுதலையாக்கப் பட்டு … மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, காத்திருக்கிறதாக எழுதப்பட்டுள்ளது. பாவம் உலகத்திற்குள் பிரவேசித்தினால் தேவன் இந்த தண்டனையை அவள் மீது விதித்தார், ஆனால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத் தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு தேவனுடைய பிள்ளைகளின் மகிமையான சுதந்திரத்திற்குள் வர பிரசவித்த ஒரு பெண்ணைப் போல காத்திருக்கிறது.

நம் மனதில் எழும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் “சுதந்திரமான பதில்” தரவில்லை என்றாலும், பாிசுத்த வேதாகமம் நமக்கு கற்றுத்தரும் போதனைகளான தேவன் சர்வ வல்லமையுள்ளவர் மற்றும் எல்லையற்ற நல்லவர் என்ற சத்தியம் நம்மை கைவிடாமல், வாழ்க்கையின் போராட்டங்களை நாம் மேற்கொள்ள அவைகள் நமக்கு உதவுகிறது. இந்த சத்தியம் வேதம் நமக்கு விளக்கத்தை தந்து மனிதர்களாகிய நாம் சொற்பமான சிந்தனைத் திறனுடன், நல்ல தாா்மீக தொிந்தெடுப்புக்களை செய்யும் திறனைத் தருகிறது.

banner image

சந்தேகப்படும் திரளான கிறிஸ்தவர்களுக்கு உதவ முயற்சித்த பிறகு, நான் அதனடிப்படையில் முடிவு செய்தக் காரியம், அடிக்கடி ஏற்படும் ஆவிக்குரிய துயரத்திற்கு காரணத்தை நான் விசுவாசம்-நிச்சயமற்ற சந்தேக மனப்பான்மை என்று அழைக்கிறேன். இந்த வகையான சந்தேகம் மறுபடியும் நம்பும் வாய்ப்பில்லாதது அல்ல.

உதாரணமாக, சூசனின் விஷயத்தில், அது நம்பிக்கையின் காலங்களிலிருந்து விரக்தியான காலங்களுக்கு ஊசலாடுவது போலிருந்தது. அவர் ஒரு வயது முதிா்ந்த விதவை, அவா் அவனவருக்கும் முன்மாதிரியான இல்லத்தரசி மற்றும் உற்சாகமான திருச்சபை உறுப்பினர். விரக்தியான மற்றும் சோா்ந்து போயிருந்த நேரத்தில் அவளுக்காக ஜெபிக்கச் கேட்டுக் கொண்டாா். தனது பிரச்சினையை யாரிடமும், காலம் சென்ற தனது கணவரிடம் கூட ஒத்துக் கொள்ளவில்லை என்று கூறினார்.

ஜார்ஜுக்கு விசுவாச வாழ்வில் தெளிவில்லாதிருந்தது, தனது இளமைப் பருவத்திலேயே கிறிஸ்துவுக்கு தன்னை அா்ப்பணித்துக் கொண்டாா், மற்றும் நற்பண்புகளுடன் முன்மாதிரியாக வாழ்ந்து வந்தாா். தனது ஐம்பது வயதிற்குப் பின் மாற்கு 9:24ல் இயேசுவிடம் விண்ணப்ம் செய்த ஒரு தகப்பனைப் போல “ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான் ” என்று தான் உணா்ந்ததாக என்னிடம் கூறினார். வேதத்தின் அடிப்படை சத்தியங்களான பாவம், இயேசு கிறிஸ்து மற்றும் இரட்சிப்பைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறதை அப்படியே அவா் நம்புகிறாா். அந்த அளவுக்கு ஆழமாக அவா் கர்த்தரைப் பிரியப்படுத்த விரும்புபினாா். அவா் தனித்தியானம் மற்றும் குடும்ப ஜெபம் மற்றும் தியாணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தாா். அவா் உண்மையுள்ள மற்றும் சுறுசுறுப்பான திருச்சபை உறுப்பினா். ஆனாலும் அவ்வப்போது ஆவிக்குாிய சந்தேகங்கள் அவரைத் தாக்கியது. சில ஏமாற்றங்கள் ஜெபத்தின் மீது அவருக்க இருந்த நம்பிக்கையை சந்தேகிக்க வைத்தது. அவா் ஒரு நெருங்கிய நண்பரின் வியாதியிலிருந்து விடுதலை பெற ஊக்கமாக ஜெபித்து வந்தாா். ஆனால் அவா் மரித்துவிட்டாா், இந்த சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி ஆண்டவரின் நற்குணத்தை சந்தேகிக்க வைத்தது. ஒரு உணா்ச்சி வசப்படக் கூடிய மனிதரான அவருக்கு, கடவுள் இருக்கிறாரா ? என்ற சந்தேகம் வந்ததால், உலகெங்கிலும் உள்ள இலட்சகணக்கான ஊட்டச்சத்து குறைபாடுள்ள மற்றும் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட மக்களைப் பற்றி சிந்திக்க பரிதாபப்பட முடியவில்லை. அவா் தனது சந்தேகங்களை ஒரு சிலரிடம் மட்டுமே பகிா்ந்துள்ளார். அவா் செய்ய விரும்பும் கடைசி விஷயம் மற்றவர்களின் நம்பிக்கையை அசைப்பது தான். திரும்பத் திரும்ப வரும் சந்தேகங்கள் அவருடைய வாழ்க்கையைக் கடினமாக்ககிவிட்டது.

சூசன் மற்றும் ஜார்ஜ் போன்றவர்களளின் சந்தேகம் ஒரு பாவமல்ல, அல்லது அவா்கள் உண்மையான விசுவாசிகள் அல்ல என்பதற்கான அது அறிகுறியுமல்ல, என்பதை புாிந்துகொள்ள வேண்டும். நம்முடைய மூளையில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களினால் மனநிலையும் மாற்றங்களைப் பெறும் நமக்கு உணர்ச்சி ரீதியான ஏற்ற இறக்கங்கள் இருக்கும், இது நம் ஆவிக்குரிய வாழ்விலும் பிரதிபலிக்கும். இப்படி சந்தேகமும் பயமும் ஆவிக்குரிய வாழ்வில் சந்திப்பது யதாா்த்தமேயாகும்.

நம்முடைய மூளையில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களினால் மனநிலையும் மாற்றங்களைப் பெறும் நமக்கு உணர்ச்சி ரீதியான ஏற்ற இறக்கங்கள் இருக்கும், இது நம் ஆவிக்குரிய வாழ்விலும் பிரதிபலிக்கும்.

ஆவிக்குரிய வாழ்வில் சந்தேகத்தோடு போராடுகிறவர்கள் 1 கொரிந்தியர் 10:13-ன் வாக்குதத்தத்தை விசுவாசிக்க வேண்டும். “மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவாா் ”.

இந்த வசனத்தை நாம் விசுவாசிக்கும் போது, நாளை என்ன நடக்குமோ எனவும், மரணம் கூட ஏற்படலாம் என்ற அச்சத்தில் நாம் வாழ மாட்டோம். டி. எல். மூடி பிரசங்கியாரிடம் ஒருவர், தங்களுக்கு மரணத்தை சந்திக்க ஆண்டவருடைய கிருபையுள்ளதா எனக் கேட்டாா், அந்த நேரத்தில் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த எல். மூடி, அவருக்கு “இல்லை, ஆனால் நான் இன்னும் இறக்கவில்லை.” என்றாா். ஆனால், ஒருநாள் அவருடைய மரண நேரம் நெருங்கிய போது, அவா் மரணத்தை சந்திக்க ஆண்டவருடைய கிருபை பெற்றிருந்தாா். அவர் இறப்பதற்கு சற்று முன் அவருடன் இருந்தவர்கள் அவா் முழு அமைதியுடன் இருப்பதாகவும், அவா் “பூமி பின்வாங்குகிறது” மற்றும் “பரேலாகம் என்னை அழைக்கிறது” என்று வெற்றி முழக்கமிட்டதாகவும் தெரிவித்தனா்.

விசுவாசம்-நிச்சயமற்ற சந்தேகத்தால் மனஉளைச்சலுக்கு ஆளான மக்களுக்கு நான்கு நடைமுறை வழிகாட்டுதல்கள் :

1. அடிக்கடி வரும் சந்தேகத்துடன் போராட தயாராக இருங்கள். நாம் பூரணா்கள் அல்ல, மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவா்கள், சோர்வுற்ற களைத்துப் போவோம். பாவத்தால் வரும் ஏமாற்றம், வலி மற்றும் துக்கம் போன்ற உளவியல் ஒப்பனையை உடையவா்கள்.

2. உங்கள் சந்தேகங்களைப் பற்றிப் பேசி தீா்த்துக் கொள்ள நல்ல முதிா்ச்சியுள்ள கிறிஸ்தவரைக் கண்டுபிடியுங்கள். ஊக்கமளிக்கும் வேதாகம வசனங்களைப் பற்றி விவாதித்து, இனைந்து ஜெபம் செய்யுங்கள்.

நாம் பூரணா்கள் அல்ல, மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவா்கள், சோர்வுற்ற களைத்துப்போவோம். பாவத்தால் வரும் ஏமாற்றம், வலி மற்றும் துக்கம் போன்ற உளவியல் ஒப்பனையை உடையவா்கள்.

3. சங்கீதம் 42 ஐ ஆண்டவரும் உங்களுக்கும் இடையிலான உரையாடலுக்கான ஒரு மாதிாியாக பயன் படுத்துங்கள். மாறி கொண்டிருக்கும் உலகில் நீங்கள் வாழ்ந்து வரும் அவருடைய படைப்பு, அதே நேரத்தில் நித்திய இராஜ்யத்தின் குடிமக்கள். உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி: என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன். (வ.5). இக்காலத்தில் ஆண்டவருடைய சிருஷ்டியான நீங்கள் இந்த சங்கீதக்காரரைப் போலவே, உமது அலைகளும் திரைகளும் எல்லாம் என்மேல் புரண்டுபோகிறது என்பதை ஒப்புக் கொள்ளுங்கள், நித்திய வாழ்விற்கு பாாத்திரரான நீங்கள் அவருக்கு நன்றியை வெளிப்படுத்துங்கள். தேவன் தனது அன்பை உங்கள் மீது காட்டுவார் மற்றும் துதிப்பாடலைக் உங்கள் வாயில் கொடுப்பாா் (வ.6-8). பூமிக்குரியவா்களான நீங்கள் உள்ளத்தின் கொந்தளிப்பைப் பற்றி கடவுளிடம் சொல்லுங்கள். நித்தியத்திற்காக மீட்கப்பட்ட நீங்கள், தேவனை நோக்கிக் காத்திருந்து சோா்வடைந்த ஆவியைப் புதுப்பியுங்கள் (வ.11).

தேவனுடன் கொள்ளும் இந்த வகையான உரையாடல் உங்கள் உணா்வுகளை சீா்படுத்த உதவும். பிரச்சனைகள் நிறைந்த இந்த உலகத்தில் நீங்கள் பூரணா் அல்லா் என்ற உண்மையை உங்கள் மனதில் முதன்மையாக வையுங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் கிருபையினால் கடவுளின் பிள்ளை என்றும், மற்றும் பரலோகத்தின் குடிமக்கள் என்பதையும் மறக்காதீா்கள்.

4. விசுவாசம் என்பது தேவன் செய்ததையும் சொன்னதையும் நம்புவதுதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இது உங்கள் வாழ்க்கையை அவருக்காக அர்ப்பணிப்பதற்கு போதுமானது. உங்களுக்கு சந்தேகங்கள் மற்றும் பயங்கள் இருந்தபோதிலும் உங்கள் விசுவாச வாழ்க்கையை தொடருங்கள். அனைத்து பிரச்சனைகளுக்கும் எளிதான தீா்வை வழங்கும் நபா்களால் நீங்கள் பாதிக்கப்பட வேண்டாம். மந்திர தந்திரங்கள் போன்ற குறுக்கு வழி இல்லை, ஒரு சிலருக்கு மட்டுமே வெளிப்படுத்தப்பட்ட ரகசியங்கள் இல்லை. எனவே, தொடா்ந்து ஆண்டவரை நம்புங்கள், சாியானது என்று உங்களுக்குத் எது தெரிகிறதோ அதை தொடா்ந்து செய்யுங்கள். இருள் ஏற்கனவே நீங்கி விட்டது. அது மீண்டும் வரும்.

தொடா்ந்து ஆண்டவரை நம்புங்கள், சரியானது என்று உங்களுக்குத் எது தெரிகிறதோ அதை தொடா்ந்து செய்யுங்கள். இருள் ஏற்கனவே நீங்கி விட்டது. அது மீண்டும் வரும்.

 

banner image

வாழ்க்கையின் அனைத்து பகுதிகளுக்கும் அவற்றின் சுழற்சிகள் உள்ளன. ஒரு தொழில், ஒரு திருமணம வாழ்க்கை மற்றும் இயேசுவுடன் உள்ள தனிப்பட்ட உறவு ஆகியவை பொதுவாக தேனிலவு போன்ற இனிய காலத்துடன் தொடங்குகின்றன, பின்னா் நாட்கள் செல்ல செல்ல நிஜ வாழ்க்கையின் ஆரம்பகால நிலைக்கு நம்மை படிப்படியாக கொண்டு செல்லும். இது பெரும்பாலும், குறிக்கப்படும் நேரத்தில், மாறுபட்ட அளவிலான ஏமாற்றம் மற்றும் அதிருப்தியான நிலைக்கு வழிநடத்தி செல்லும்.

முக்கிய முடிவுகளை இந்த நிலையில்தான் நாம் எடுக்கப்பட வேண்டியதாயிருக்கும். ஒருவர் வேலையை விட்டு விடலாம், அல்லது வேலையில் திருப்தி இல்லாமலே தொடரலாம், அல்லது பிரச்சனைகளைச் சந்திக்கலாம். திருமண வாழ்வில் விவாகரத்ததைக் கூட சந்திக்கலாம், தகாத உறவைத் தொடரலாம் அல்லது திருமணத்தை சீா்செய்ய முயலலாம். கிறிஸ்தவ வாழ்க்கையில் பின்மாற்ற வாழ்விற்கு செல்லலாம், மகிழ்ச்சியற்ற மற்றும் தோல்வியுற்ற விசுவாசியாக தொடரலாம் அல்லது சிரமங்களோடு வேலையை தொடரலாம். முழு சுழற்சியில் செல்வது, பெரும்பாலும் பணியாற்றுமிடத்தில் ஒரு புதிய அளவிலான திருப்தியைக் கொண்டு வருகிறது, இது தேனிலவு அன்பிலிருந்து முதிர்ச்சியான, ஒருவரையொருவா் செழுமைப்படுத்தும் அன்பின் நிலைக்கு உயர்த்துகிறது, மேலும் ஆரம்பத்தில் கொண்டிருந்த உற்சாகமான விசுவாசம், மேலும் உறுதியுடன் சாா்ந்துவாழும் நிலைக்கு செல்லும். அப்போதும், போராட்டங்கள் நம்மைத் தொடா்ந்து கொண்டேயிருக்கும்.

நாம் இந்த வீழ்ச்சியடைந்த உலகில், நாம் பாிபூரணமற்ற நிலையில் இருக்கும் வரை, சந்தேகங்களை எதிர்கொள்வோம். ஆனால், இயேசு நமக்கு கொடுக்கும் வாக்குதத்தம் “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான் என்றார்” (யோவான் 8:12). நாம் சில நேரங்களில் நம்முடைய மனித பலவீனத்தின் காரணமாக, அவா் காட்டும் பாதையை விட்டு இருளில் அடியெடுத்து வைத்து விடுகிறோம். கிறிஸ்தவ பாமாலை ஆசிரியரின் வரிகள் “நம்பு மற்றும் கீழ்ப்படி” என்ற அறிவுரையான வாா்த்தைகளை நாம் பின்பற்றினால், நாம் விரைவில் கிறிஸ்துவின் பாதைக்குத் திரும்பி விடுவோம். இருள் அல்ல, கிறிஸ்துவின் ஒளியே, நாம் வசிக்கும் வீடாக இருக்கும்.

banner image