வாசிக்க: 1 இராஜாக்கள் 19:1-21
பூமி அதிர்ச்சிக்குப்பின் அக்கினி உண்டாயிற்று; அக்கினியிலும் கர்த்தர் இருக்கவில்லை; அக்கினிக்குப்பின் அமர்ந்த மெல்லியசத்தம் உண்டாயிற்று. (வ.12).
ஏழு ஆண்டுகளாக, நான் என் குழந்தைகளுடன் வீட்டில் இருந்தேன். ஓரளவு வருமானம் ஈட்டுவதற்காக நான் ஃப்ரீலான்ஸ் வேலைகளைச் செய்துகொண்டிருந்தபோது, அந்தப் பருவத்தின் நெகிழ்ச்சியையும், வழக்கத்தையும் அனுபவித்தேன். உணவு சரியான நேரத்தில் வழங்கப்பட்டது, என் வீட்டை நன்றாக, தவறாமல் சுத்தம் செய்ய முடிந்தது. வளைகாப்பு மற்றும் பிறரை ஆசீர்வதிக்கும் வழிகளை நான் ரசித்தேன். நான் முழுநேர வேலைக்குத் திரும்பியபோது, எனது இயல்பு நிலை மாறியது. எனது எதிர்பார்ப்புகளை நான் மாற்ற வேண்டியிருந்தது.
சங்கீதம் 1:1-3 நமக்குச் சொல்கிறது, “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்”. எவ்வாறாயினும், உண்மை என்னவென்றால், எல்லா நேரங்களும் ஒரே மாதிரியாக உணரப்படுவதில்லை, “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருப்பவர்களுக்கும்” கூட. விசுவாசிகள் பல்வேறு சூழ்நிலைகளிலும் திருப்தியடைய முடியும் என்பது உண்மை என்றாலும் (பிலிப்பியர் 4:11-12), சில நேரங்களில் மற்றவர்களை விட நாம் அனுசரித்துப் போக வேண்டியுள்ளது.
1இராஜாக்கள் 18:1-46ல் எலியாவின் மூலம் தேவன் ஆச்சரியமான காரியங்களைச் செய்ததைக் காண்கிறோம், அவர் ஆகாபின் இரதத்தை மிஞ்சும் அளவிற்குக் கூட (வச. 46). சிறிது நேரம் கழித்து, தீர்க்கதரிசி தனது உயிருக்கு பயந்து, தேவனின் திட்டத்தை புரிந்து கொள்ள போராடி, வனாந்தரத்தில் தங்குமிடம் தேடுனார் (19:3-4). அவர் எதிர்கொள்ளும் சவால்களுக்கான காரணத்தைக் காண போராடினார்.
சில சமயங்களில் நாமும் அவ்வாறே உணரலாம். காலங்கள் திடீரென மாறுகிறது, நம்மால் தாங்கிப் பிடிக்க முடிவதில்லை. எலியாவைப் பொறுத்தவரை, அவர் தேவ பிரசன்னத்தை காற்றிலோ, பூகம்பத்திலோ அல்லது நெருப்பிலோ அனுபவிக்கவில்லை. மாறாக “மெல்லிய சத்தத்தில்” அனுபவித்ததால் பதில் கிடைத்தது(19:11-12). குழப்பமான சூழ்நிலை பரிசுத்த ஆவியானவர் நம்மில் உயிருடன் இருப்பதை நினைவூட்டுகிறது. அவருடைய பிரசன்னத்தில் நம்மை உள்ளடக்கிக் கொள்ளவும், அவருடைய நோக்கங்களில் நம்பிக்கை வைக்கவும் தேவன் நம்மை அழைக்கிறார்.
– ரெஜினா பிராங்க்ளின்
மேலும்
பிரசங்கி 3:1-11ஐப் படித்து, தேவன் ஒரு பருவத்தை “அதன் காலத்திற்கு” அழகாக மாற்றிய இரண்டு சந்தர்ப்பங்களைப் (உங்கள் வாழ்வில் அல்லது வேறொருவரின் வாழ்வில்) பற்றி சிந்தியுங்கள்.
அடுத்து
நீங்கள் இப்போது எந்த பருவத்தில் இருக்கிறீர்கள், என்ன சரிசெய்தல்(களை) நீங்கள் செய்ய வேண்டும்? தேவனின் முன்னிலையில் ஓய்வெடுக்க நீங்கள் எவ்வாறு கற்றுக்கொள்ளலாம்?