கோபத்தை வெடித்தெழும்பும் ஆக்ரோஷமான செயலாக நாம் அடிக்கடி எண்ணிக்கொள்கிறோம். அது உருவாகும்போது, ​​நெருப்பைப்போல அதனை உள்ளத்தில் உணரலாம். முகம் சிவப்பதையும், உடல் சூடாவதையும், வியர்ப்பதையும் உணர்கிறோம். நம் வயிறு கலங்கி, இரத்த அழுத்தம் அதிகரித்து மேலும் நம் வேதனைக்குக் காரணமானவரைக் கடுமையாகச் சேதப்படுத்த நாம் தயாராகிறோம்.

இன்னும் சில நேரங்களில், நம் கோபத்தை உள்ளேயே பூட்டி வைத்து, அதை ஆழமாகப் புதைத்து, அது போய்விடும் என்று நம்புகிறோம். கோபத்திற்கான அந்த எதிர்வினை, நம்மைச் சுற்றியுள்ள மக்களிடமிருந்து நம்மைத் தனிமைப்படுத்தக்கூடிய ஒரு மௌனத்தை விளைவிக்கிறது.

கோபம் சரியா தவறா என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

மோதல்கள், தவறான புரிதல்கள் மற்றும் குழப்பமான உறவுகள் நிறைந்த உலகில் நாம் வாழும்போது, கோபமான எதிர்வினைகளுக்கு நம்மைத் தள்ளக்கூடிய பல தூண்டுதல்கள் உள்ளன. சில சமயங்களில் பொருத்தமானதாக இருந்தாலும், மற்ற நேரங்களில் நமது கோபம் மிகவும் ஆபத்தானதாக இருக்குமல்லவா? கோபம் சரியா தவறா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? வாழ்க்கையில் சந்திக்கும் இந்த கோபத்தால் வரும் தூண்டுதல்களுக்கான எதிர்வினைகளை நாம் ஞானமாக கையாள்வது எப்படி?

இந்த சிறு கையேடு, கோபத்தின் சில பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள உதவும் வகையில் உள்ளது. நம்முடைய கோபம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் அல்லது அது எவ்வளவு நியாயமானது என்று சில சமயங்களில் தோன்றினாலும், அது நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் சேதப்படுத்தும் ஆற்றலுடையது. கோபத்தைப் பற்றி உங்களிடமிருக்கும் எல்லா கேள்விகளுக்கும் இந்த புத்தகம் பதிலளிக்காது. ஏனெனில் இந்த கருப்பொருள் மிகவும் விரிவானது மற்றும் தனிப்பட்டது. ஆனால் இந்த அறிமுகம், கோபம் என்றால் என்ன? அது எங்கிருந்து வருகிறது? மற்றும் அதைச் எப்படி கையாள்வது என்பதை நாம் கற்றுக்கொள்ளக்கூடிய சில வழிகளைப் பற்றிச் சிந்திக்க ஒரு தொடக்கப் புள்ளியை இது வழங்கும் என்று நம்புகிறோம்.


உள்ளடக்கங்கள்

banner image

கோபம் பெரும்பாலும் தவறானது என்று கருதப்படுகிறது, நம் கோபமான எதிர்வினைகளால் நம்மில் பலர் மூழ்கடிக்கப்பட்டதையும் குற்ற உணர்ச்சியையும் அனுபவிக்கிறோம். கோபத்தைக் குறித்தும் அது எவ்வளவு ஆபத்தானது என்பதைக் குறித்தும் வேதாகமம் மிகவும் நேர்மையாகப் பேசுகிறது. இருப்பினும், கோபத்தின் முக்கியத்துவத்தையும் அது நமக்குச் சொல்கிறது. கோபம் என்பது ஒரு அல்லது கெட்ட விஷயம் என்றிருக்க வேண்டிய அவசியமில்லை. உண்மையில், சில நேரங்களில் கோபம் மிகவும் நல்லது தவறான.

உதாரணமாக, எபேசுவில் உள்ள சபைக்கு பவுல், “நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள், சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்” (எபே. 4:26-27) என்று எழுதினார். “கோபப்படவே வேண்டாம்” என்று கூறுவதற்குப் பதிலாக, பவுல் ஆச்சரியமாக “கோபமாக இரு” என்று கூறுகிறார். உடைந்த மற்றும் புண்படுத்தும் உலகில் கோபம் ஒரு முக்கியமான மற்றும் அவசியமான உணர்ச்சி என்பதை நம் சிருஷ்டிகரான தேவன் அறிவார். இந்த வேதவசனம், நல்ல மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கோபம் என்று ஒன்று இருப்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இருப்பினும், “பாவம் செய்யாதே” என்ற சவாலைப் புரிந்துகொள்ள நமக்கு உதவும்படி, கோபத்தைத் தகுதிப்படுத்தும் இரண்டு எச்சரிக்கைகளை பவுல் நமக்குத் தருகிறார்.

சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது: கோபத்தை நாம் உணர்ந்தவுடனேயே (கோபத்திற்கான காரணம் சரியானதாகத் தோன்றினாலும்) அதைச் எதிர்கொள்ளும்படி பவுல் கூறுகிறார். நாம் அதில் நிலைத்திருந்தால், கோபம் நம்மை மேற்கொண்டு நம்மை கசப்பாக்கக் கூடும்.

பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்: நியாயமான கோபம்கூட வெறுப்பை உமிழும்படி மாற்றி, தேவனையும் மற்றும் நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் குறித்த நமது கண்ணோட்டத்தைச் சிதைக்கும்படி செய்திட பிசாசுக்கு தெரியும். நம்முடைய கோபத்தையும், கிறிஸ்து தந்த அன்பான மற்றும் பொறுமையான சுபாவத்திற்கு எதிராக நாம் எடுக்க விரும்பும் எந்தச் செயலையும், கோபத்தையும் பரிசோதிக்க நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

banner image

மது பெரும்பாலான உணர்ச்சிகளைப் போலவே, கோபமும் சிக்கலானது. எபேசியர்களுக்கு பவுல் எழுதிய நிருபம், கோபத்திற்கு ‘கெட்ட’ இயல்பு இல்லை என்பதைத் தெளிவுபடுத்துவது போல் தோன்றினாலும், “மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.” (யாக்கோபு 1:20) என்று மற்றொரு இடத்தில் நாம் எச்சரிக்கப்படுகிறோம். தேவனுடைய “நீதி” என்பது அவரது பரிபூரண, அன்பான மற்றும் நியாயமான சுபாவத்தைக் குறிக்கிறது. நாம் சுயமாக நீதியை அடைய முடியாவிட்டாலும், இயேசுவே நமது நீதி (1 கொரி. 1:30) என்றும், ஒவ்வொரு நாளும் நம்மை இயேசுவைப் போல ஆக்குவதற்குப் பரிசுத்த ஆவியானவர் நம்மில் கிரியை செய்துகொண்டிருக்கிறார் என்றும் நமக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ளது (ரோ. 8:9-17; எபே. 4:13-15). எனவே, நம்முடைய கோபம் இயேசு கிறிஸ்துவின் கரிசனை, இயல்பு மற்றும் நோக்கம் ஆகியவற்றைக் காட்டாதபோது அது ‘தவறானது’.

நம்முடைய சொந்த விருப்பங்களுக்கு விடப்பட்டால், நம் கோபம் நமக்கான தற்காப்பு அல்லது தன்னம்பிக்கையின் பிரதிபலிப்பாக விரைவாக மாறும். நாம் நம் மீதும், நியாயம் பற்றிய நமது புரிதலின் மீதும் வெறும் உள்ளுணர்வாக நம்பிக்கை கொண்டால், ​​நாம் விரும்பியபடி காரியங்கள் நடக்காதபோது நாம் கோபப்படலாம். இந்த வகையான சுயநலமான கோபம் பிறருக்குப் பயனளிக்காது. நம்முடைய கோபம் நம்மைப் பற்றியதாகவே இருந்தால், அது இயேசுவின் முக்கியத்துவங்களையும் அல்லது கரிசனைகளையும் பிரதிபலிக்காது, மாறாக நம்முடையவைகளையே வெளிக்காட்டும். இவ்வகையான கோபம் நம் உறவுகளில் வலியையும் பிரிவினையையும் மட்டுமே உருவாக்குகிறது.

சில நேரங்களில் நாம் கோபப்படுகிறோம், ஏனென்றால் நாம் செய்த தவற்றுக்கு மன்னிப்பு கேட்பதை விட ஒருவரை எதிர்ப்பது எளிது. மற்ற நேரங்களில் கோபம் நம்மை மறைத்துக் கொள்ள உதவும். கோபத்தை ஒரு கேடயமாகப் பயன்படுத்தி, நம்மை வலிமையானவர்களாகவோ அல்லது கடுமையானவர்களாகவோ காட்டுகிறோம், இதனால் நமது பலவீனங்கள் மற்றும் பாதுகாப்பின்மைகள் கண்ணுக்கு மறைவாக இருக்கும். மற்றும் நிச்சயமாக, நாம் மோசமாக நடத்தப்படும்போது அல்லது ஏதாவது ஒரு வழியில் காயப்படும்போது நாம் கோபப்படுவோம். சில சமயங்களில் கோபம் என்பது சில சூழ்நிலைகளுக்குத் தகுந்த பதிலடியாக இருக்கும் அதே வேளையில், அந்த கோபத்தைக்கொண்டு நியாயம் அல்லது நீதியைக் குறித்த நமது உள்ளுணர்வின்படி மட்டுமே செயல்பட்டால், அது நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும்.

எனவே, பெரும்பாலும், நம்முடைய கோபம் நம்மைப் பற்றியதாகவோ, நமது நலன்களைப் பற்றியோ, நமது பாதுகாப்புக்காகவோ அல்லது நமது செயல்திட்டங்களைப் பற்றியதாகவோ இருந்தால், அது இயேசுவை இவ்வுலகில் அறியச் செய்யும் முதன்மையான “தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாது”.

வேதாகமத்தில் உள்ள ஒரு மனிதன், தேவனின் பூரணமான போஷிப்பிற்கும் அன்பிற்கும் கீழ் தன்னைத் தாழ்த்திக் கொள்வதற்கு மாறாக, கோபத்துடன் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் தேவைகளைச் சந்திப்பதற்கும் முயன்ற காயீன் ஒரு முக்கிய உதாரணம். ஆபேலின் காணிக்கை தேவனால் அங்கீகரிக்கப்பட்டபோது, காயீன் தனது சகோதரன் ஆபேலின் மீது கோபமடைந்த கதையை ஆதியாகமம் 4 சொல்கிறது. “கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று?… நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார்.” (ஆதி. 4:6-7)

தேவன் காயீனிடம் தனது கோபத்தைப் கையாள தேர்வு செய்யவேண்டியவற்றை முன்வைத்தார்; அவர் தேவனிடம் மன்னிப்புக் கேட்டு, தேவனின் சரியான நோக்கங்களுடன் தன்னை ஒழுங்குபடுத்துவதின் மூலம் “அதை ஆளலாம்”. அல்லது அழிவுண்டாக்கும் செயலில் முடியும்படி, தனது அவமானத்தால் ஏற்பட்ட கோபத்தைப் பேணலாம். காயீன் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தார், ஆபேலை கொடூரமாகக் கொன்றார் (வ. 8) அதனால் தேவனின் நியாயதீர்ப்பைப் பெற்றார் (வ. 11-12).

சுயநல நோக்கங்களில் வேரூன்றிய கோபம் பயனளிக்காது என்பதை காயீனின் கதை நமக்கு நினைவூட்டுகிறது. இத்தகைய கோபம் அன்புக்கு வழிவகுக்காமல், அழிவுக்கு வழிவகுக்கும்.

banner image

ம் கோபத்திற்குத் தீர்வு கோபப்படுவதை வெறுமனே நிறுத்துவது அல்ல. ஏனெனில் கோபம் மிகவும் சிக்கலானது. கோபப்படாமல் இருக்கக் கடினமாக முயன்று மீண்டும் மீண்டும் தோல்வியடையும் போது, விரக்தி நம்மை நிரப்பலாம். எபேசுவில் உள்ள சபைக்கு பவுல் கூறியது போல், கோபத்தை அனுமதிப்பது முழுமையான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையின் ஒரு பகுதியாகும் என்று உணரவேண்டும். ஆனால், நம் உள்ளுணர்வு பெரும்பாலும் காயீனைப் போலவே சுயநலக் கோபத்தை நோக்கியே இருப்பதால், உண்மையில் கோபம் எப்போது நல்லது?

தேவனின் கோபத்தைக் கருத்தில் கொள்வது, இதைப் பற்றிச் சிந்திக்க ஒரு வழியாகும். நம்மில் பலருக்கு, தேவனின் கோபத்தைப் பற்றிப் பேசுவது அசௌகரியமாக இருக்கலாம். நாம் தேவனை அன்பானவராகப் பார்க்க விரும்புகிறோம்; கோபமானவராக, சர்வ வல்லவராக அல்ல. ஆனால், தேவனின் கோபம் நம் கோபத்திலிருந்து வேறுபட்டால் என்ன செய்வது? அவருடைய கோபம் உண்மையில் அவருடைய அன்பின் பிரதிபலிப்பாக இருந்தால் என்ன செய்வது? அது எப்படி நம் புரிதலை மாற்றும்?

தேவன் கோபப்படுவதில் தாமதிக்கிறவர் என்று வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது

தேவனுடைய கோபம் எவ்வாறு வித்தியாசமானது மற்றும் எவ்வாறிருக்கும் என்று ஆராய்வதின் மூலம் நம்முடைய சொந்த கோபத்தைக் குறித்து நிறையக் கற்றுக்கொள்ளலாம். தேவனின் கோபத்தை வேறுபடுத்துவது எது? நாம் ஏற்கனவே பார்த்தபடி, நம் கோபம் பெரும்பாலும் நம் வழிக்கு ஒத்துவராத காரியங்களுக்கு எதிரான உடனடி எதிர்வினையாகும். இதற்கு நேர்மாறாக, தேவன் கோபப்படுவதில் தாமதிக்கிறவர் என்று வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது (யாத்தி. 34:6-7; சங்கீதம் 103:8; யோனா 4:2). மேலும் அவர் நம்மை நேசிப்பதால், தமது சாயலில் சிருஷ்டிக்கப்பட்டவர்களுக்கு வறுமை, அநீதி மற்றும் கொடுமைப்படுத்துதல் போன்ற எத்தகைய தீங்கு விளைவிக்கப்பட்டாலும் அவருடைய கோபம் தூண்டப்படுகிறது. ஜனங்களின் வேதனையைச் சகிக்கக் கூடாதவர். அது அவருக்குக் கோபத்தை உண்டாக்குகிறது.

தேவனை மிகவும் கோபப்படுத்துவது இத்தகைய விஷயங்களுக்குக் காரணமாயிருப்பது நமது பாவமே. மனிதனாக வெளிப்பட்ட இயேசுவிடம், தேவனின் கோபம் என்றால் எவ்வாறிருக்கும் என்பதை நாம் பார்க்கிறோம். பூமியிலிருந்தபோது, ​​இயேசு யூத மதத் தலைவர்களிடம் கோபமடைந்தார் (மத். 23). ஏன்? அவர் அவர்கள் மீது கோபமாக இருந்தார், ஏனென்றால் ஜனங்களை இரக்கம், கருணை மற்றும் சத்தியத்திற்கு நேராய் வழிநடத்துவதற்குப் பதிலாக, அவர்கள் முதன்மையாக தங்களுக்கு தாங்களே ஊழியம் செய்து கொண்டனர். அவர்கள் தேவனைக் கண்டுகொள்ளப் பிறருக்கு உதவவில்லை; மாறாக, அவர்கள் ஜனங்களை கீழ்ப்படுத்த சிக்கலான கட்டளைகளை உருவாக்கி, தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொண்டனர்.

தேவனின் கோபம் வெறுமனே தன்னைப் பற்றியோ அல்லது அவரது கனத்தைப் பற்றியது மட்டுமோ அல்ல. நாம் அனைவரும் அவரை அறிந்து, அவருடன் தனிப்பட்ட உறவை அனுபவிக்க வேண்டும் என்ற அவரது விருப்பத்திலிருந்து வெளிப்படுகிறது. நமது சொந்த சுயநல ஆசைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கையில்; ​​அவருடைய தனிப்பட்ட அன்பு, அக்கறை மற்றும் இரக்கத்தை நாம் இழக்கிறோம். நாம் தொலைந்து தனிமையில் விடுகிறோம். மேலும் இது தேவனைக் கோபப்படுத்துகிறது; அவர் நம்மை இப்படி வாழ்வதற்காகப் படைக்கவில்லை. அவருடைய கோபம் அவருடைய அன்பிற்கு எதிரானது அல்ல, மாறாக அதன் தொடா்ச்சி. நம் வாழ்வில் நம்மை அவரிடமிருந்து தூரமாக்கும் அல்லது நம்மைச் சுற்றியுள்ளவர்களைக் காயப்படுத்தும் விஷயங்களை அவர் எப்படிப் பொறுத்துக்கொள்ளக் கூடும்?

நாம் தேவனை நேசித்து, அவர் சிருஷ்டித்த மனிதர்களையும் நேசித்தால்; அவருக்கும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்குமான அவரது மீட்பின் அன்புக்கும் இடையில் நிற்கும் எதற்கும் எதிராக அவருடைய கோபத்தை நாம் எதிரொலிக்க வேண்டும்.

தேவனின் கோபம் எப்படி இருக்கும்? அவரிடமிருந்து நம்மைப் பிரிக்கும் அனைத்திற்கும் எதிரான தேவனின் கோபம் நாம் அடிக்கடி வெளிப்படுத்தும் கோபத்திற்கு முற்றிலும் எதிரானது! பிறர் மீது அவருடைய கோபத்தைக் காண்பிப்பதற்குப் பதிலாக, அவர் நம் கோபத்தின் வலியையும் தவற்றையும் தன் மீது சுமத்திக் கொண்டார். அற்புதமான இந்த சுய தியாகத்தின் செயலில், இயேசு நம் இடத்தில் தம் ஜீவனைக் கொடுத்தார். அவர் நமது தோல்விகள், சுயநலம், குற்ற உணர்வு மற்றும் அவமானம் ஆகியவற்றைச் சுமந்துகொள்ளத் தெரிந்துகொண்டார். இயேசுவின் மரணத்தை நமது பாவத்திற்கான “முடிந்தது” (யோவான் 19:30) என்ற கிரயமாகத் தேவன் ஏற்றுக்கொண்டார் மேலும் இயேசுவின் உயிர்த்தெழுதலானது அவருடன் புதிய, மன்னிக்கப்பட்ட வாழ்க்கைக்கு நமக்கான அழைப்பாக மாறியது. இதற்கு ஒரு உதாரணம் சகேயு (முழு கதையும் லூக்கா 19ல் உள்ளது).

சகேயு ஒரு இழிவான வரி வசூலிப்பவராக இருந்தபோதிலும், வரிப்பணத்தை அதிகமாகச் செலுத்தச் செய்து ஜனங்களைச் சுரண்டினார், இயேசு அவரை தன்னுடன் கிட்டி சேர, “இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும்” (வ. 5) என்று அழைத்தார். இருவரும் ஒன்றாக நேரத்தைச் செலவழித்த பிறகு, சகேயு ஒரு மாற்றமடைந்த மனிதன் என்று இயேசு உறுதியாக அறிவித்தார், “இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது” (வ. 9).

மதத் தலைவர்கள் தங்கள் தவற்றுக்காக இயேசுவிடமிருந்து சீற்றத்தைப் பெற்றார்கள் (மத். 23), எனினும் அவர்களைப் போலவே மக்களைத் தவறாக நடத்துவதில் சமமான குற்றவாளியான சகேயு இயேசுவுடனான உறவை எவ்வாறு அனுபவித்தார்? எளிமையாகச் சொன்னால், மதத் தலைவர்கள் பிறரை மோசமாக நடத்தியதற்காக மனந்திரும்பவில்லை, அதேசமயம் சகேயு சந்தோஷத்துடன் (வ. 6) தன்னையே மையப்படுத்தியிருந்த பேராசையிலிருந்து விலகிவிட்டார்! அவர் ஒரு புதிய வகையான வாழ்க்கைக்காக இயேசுவின் அழைப்பை ஏற்றுக்கொண்டார், அதிலே அவர் தேவையிலுள்ளவர்களுக்கு இயேசுவின் தாராள மனப்பான்மையையும் இரக்கத்தையும் பிரதிபலிப்பார் (வச. 8).

நம்முடைய சொந்த கோபத்தை நாம் எப்படி கையாள வேண்டும் என்பது பற்றி இது நமக்கு என்ன கற்பிக்கிறது? இந்த உணர்வுகளை வெளிப்படுத்த எப்போதாவது இடம் இருக்கிறதா?

banner image

ரிபூரணமான தேவனே கோபத்தை வெளிப்படுத்தியதால், நமது கோபத்தைப் பற்றி நாம் குற்ற உணர்வு கொள்ள வேண்டிய அவசியமில்லை. தேவன் கோபப்படுவதற்குக் காரணமான அதே கரிசனைகளிலிருந்துதான் நமது கோபம் வருகிறதா என்பதை பாா்ப்பதே முக்கியம். நமது கோபத்தைச் சோதித்து, கையாள்வதற்கான சில பயனுள்ள வழிகள் இங்கேயுள்ளன:

உங்கள் கோபத்தைப் பற்றி தேவனிடம் சொல்லுங்கள்: முதலில் செய்யவேண்டியதை முதலில் செய்யுங்கள். நாம் கோபப்படாதது போல் நடிக்க முடியாது. நாம் எல்லோரும் கோபப்படுகிறோம். அந்த கோபத்தை ‘விரக்தி’ அல்லது ‘எரிச்சல்’ என்று முத்திரை குத்தி அதைத் தணிக்காதீர்கள். அதைக் கோபமென்று அழையுங்கள். நாம் நம்மோடும் தேவனோடும் நேர்மையாக இருக்க வேண்டும். அவர் நம்மை நன்கு அறிந்திருக்கிறார் (எபி. 4:12-13) மேலும் அவர் நம்மீது ஆழ்ந்த அக்கறை காட்டுகிறார் (1 பேதுரு 5:7). நாம் அவரிடம் நம் உள்ளத்தை வெளிப்படுதத்தி பேச வேண்டும், நாம் என்ன உணர்கிறோம் என்பதையும் அவரிடம் சொல்ல வேண்டும்.

நமது சுயநலமான கோபத்தினால் செய்யும் எதிர்வினை காரியங்களைக்கூட தேவனிடம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

உங்கள் கோபம் தவறாக இருக்கும்பட்சத்தில் நீங்கள் மாற விரும்புவதைத் தேவனிடம் சொல்லுங்கள்: மனந்திரும்புதல் என்பது என் வழியில் காரியங்களைச் செய்வதிலிருந்து விலகி தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவரை பின்பற்றும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்பதாகும். நாம் சுயநலமான கோபத்துடன், காரியங்களுக்கு எதிர்வினையாற்றும்போது, ​​இதை நாம் தேவனிடம் ஒப்புக்கொள்ள வேண்டும். நாம் ஏற்கனவே பார்த்தது போல், நம்முடைய கோபத்திற்குப் பின்னால் உள்ள உந்துதல் பெரும்பாலும் அவருடைய கரிசனைகள் மற்றும் பிறரின் தேவைகளைப் பின்தொடர்வதைக் காட்டிலும், நம்மைச் சேவித்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான நமது உறுதியே ஆகும். அதனால்தான் நாம் அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் மற்றும் நம்மைக் கோபப்படுத்தும் சூழ்நிலைகளில் அவரின் வழிநடத்துதலை நாட வேண்டும்.

நாம் நன்றிசெலுத்தும்படி, இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுந்தக் காரணத்தால், நம்முடைய சுயநலமான கோபத்திற்காக வருந்துகையில் தேவன் நம்மை மன்னிப்பார் என்று நாம் உறுதி உடையவா்களாக இருக்கலாம். தேவனுடைய மன்னிப்பின் தன்மையை (கிறிஸ்து நம் கோபம் மற்றும் கசப்பான உணர்வுகள் அனைத்திற்கும் கிரயம் செலுத்தினார்) என்பதை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்கையில், நம்மிலுள்ள தேவனின் ஆவியானவா் நம்மை மாற்ற அனுமதிக்கும்போது பிறரை மன்னிக்க முன்வருவது நமக்கு எளிதானதாகவும் இயல்பானதாகவும் இருக்கும்.

உங்கள் கோபத்தின் மத்தியில் தேவனை நம்புங்கள்: நம் கோபத்தைக் கையாள்வது என்பது தேவனுடனான ஒரு ‘ஒரு முறை’ ஒப்பந்தம் மட்டுமல்ல. நம் கோபம் சுயநலம் சார்ந்த விஷயத்திலிருந்து மாறி தேவனை மையமாகக் கொண்டவா்களாக ஒவ்வொரு நாளும் தேவனைச் சார்ந்திருக்க வேண்டும். இது ஒரே நாளில் நடக்காது. அதற்கு கால அவகாசம் தேவை. ஆனால் தேவன் புரிந்துகொண்டவராக ஒவ்வொரு அடியிலும் நம்முடன் இருப்பார் என்று அவா் உறுதியளிக்கிறார்.

இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக, நாம் புண்படுத்தியவர்களிடம் மன்னிப்பு கேட்கவோ அல்லது நம் கோபத்தை விட்டுவிடவோ வேண்டும். இது ஒரு கடினமான காரியம்தான், ஆனால் இது நம்மைக் காட்டிலும் தேவனைச் சார்ந்து இருப்பதனால் நடக்கும் காரியயாகும். நாம் தேவனுக்குரியவர்கள் மற்றும் அவரில் இளைப்பாறுகிறோம் என்பதில் உறுதியாக இருக்கையில், ​​நாம் இனி மற்றவர்களிடமிருந்து மறைந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை, மேலும் நம் கோபத்தைக் கவசமாக அணியவும் வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக நாம் தாழ்மையுடன், மற்றவர்களை ஒதுக்கிவிடாமல் அவர்களை நாடலாம்.

உங்கள் கோபத்தை எப்படி வெளிப்படுத்துவது என்பதில் தேவனை நம்புங்கள்: வேதாகமத்தைப் படிப்பதன் மூலமும் அவருடன் பேசுவதன் மூலமும் நாம் அவருடன் நேரத்தைச் செலவிடும்போது, ​​அவர் நம்மை மாற்றுவதாகத் தேவன் வாக்களிக்கிறார் (ரோமர் 12:1-2). இதன் அர்த்தம், நமது கோபமும், நமது சுபாவத்தின் ஒவ்வொரு அம்சத்தோடும் இனைந்து தேவனின் சாயலை பிரதிபலிக்கத் தொடங்கும். பாவத்தின்மீதும், அதன் விளைவுகள் மீதும் கோபப்படுவதில் நாம் அவருடன் இணைவோம்.

கிறிஸ்து நம்மில் வாழ்வதால், நாம் அவரைப் போலவே மாறுகிறோம், ​​நமது கோபமானது நம் உரிமைகளைப் பாதுகாப்பதிலோ அல்லது மற்றவர்களை வீழ்த்துவதிலோ நிறைவடையாமல், மாறாக நமக்கும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் சுயநல வாழ்விலிருந்தும், வேதனையான வாழ்க்கை தெரிவுகளையும் விட்டுவிட உதவுகிறது. இவ்வுலகின் வேதனையின் மீதான நமது கோபம் நமக்குள் ஒரு துக்கத்தை உருவாக்கும், அது இயேசுவைப் பற்றியும் அவர் வழங்கும் புதிய வாழ்க்கையைப் பற்றியும் நாம் சந்திப்பவர்களிடம் சொல்லத் தூண்டும்.

நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். சங்கீதம் 4:4

உங்களுக்காக சிறிது நேரமெடுத்துக் கொள்ளுங்கள்: தனது வாழ்நாளில் மிகவும் வேதனையை அனுபவித்த தாவீது ராஜா, “நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள்.” (சங்கீதம் 4:4) என்றார். நமக்குக் கோபம் வந்தால், சரியான காரணங்களுக்காக நாம் கோபப்படுகிறோமா என்பதைப் பற்றி தேவனிடம் பேசுவதற்கு இடத்தையும் நேரத்தையும் ஒதுக்க வேண்டும். நாம் தனிப்பட்ட முறையில் புண்படுத்தப்பட்டால் இது மிகவும் அவசியம். நம்மைத் தவறாகப் பேசும் ஒருவரிடம் உடனடியாக சூடேறும் உள்ளுணர்வை அடக்குவதென்பது, ஆரம்பத்தில் கடினமாக இருக்கலாம்; ஆனால் நாம் பின்னர் வருந்தக்கூடிய ஒரு செயலைச் செய்வதற்கு முன் நம் கோபத்துடன் நாம் முக்கியமாகச் செய்யவேண்டிய முதல் காரியம், அதை விரைவாகத் தேவனிடம் கொண்டு வருவதுதான்.

பிறரை எப்போது எதிர்க்கவேண்டும், அவர்களிடம் அன்பாக ஆனால் உண்மையாக எப்படிப் பேச வேண்டும் அல்லது தவறாக நடத்தப்பட்டதாக நாம் கருதும் ஒருவரை எவ்வாறு தற்காக்க வேண்டும் என்பதையெல்லாம் குறித்து உறுதியான வழிகாட்டுதல் எதுவும் இல்லை. அதனால்தான் நாம் வெறுமனே நம் உள்ளுணர்வை மட்டும் சார்ந்துகொள்ளவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். நம் உணர்வுகள் எளிதாக தவறாக வழி நடத்தலாம், எனவே ஒவ்வொரு சூழ்நிலையையும், நபரையும் ஜெபத்தின் மூலம் தேவனிடம் கொண்டு வர வேண்டும். “எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்” என்றும் “நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்” என்றும் வேதாகமம் நம்மை ஊக்குவிக்கிறது (ரோமர் 12:18-19). அவருடைய பரிசுத்த ஆவியானவரால் நம்முடைய இருதயங்களையும் மனப்பான்மையையும் மாற்றுவதற்கு அவரைச் சார்ந்திருப்பதன் மூலம் நாம் அதைச் செய்யலாம்.

.நாம் கோபத்தோடு தேவனுக்கு முன்பாக வரும்போது, சில சிந்திக்கவேண்டிய கேள்விகளை நம்மை நாமே கேட்டுக்கொள்வதும் உதவியாக இருக்கும்; நான் எதற்காக உண்மையில் கோபமாக இருக்கிறேன்? இயேசுவின் கரிசனைகள், அன்பு மற்றும் இரட்சிப்பு ஆகியவற்றை ஜனங்களுக்குக் காண்பிக்க என் கோபம் உதவுகிறதா? இதைப் பற்றி நான் யாரிடமாவது பேச வேண்டுமா அல்லது தேவனை நம்பி விட்டுவிட வேண்டுமா? என் கோபம் பிறரைக் காயப்படுத்துகிறதா அல்லது உதவு செய்கிறதா?

நம்மைச் சுற்றியுள்ளவர்களுடன் சமாதானமாக வாழ்வதைப் பற்றியும் மற்றும் நமது கோபத்தைக் கையாள்வதைப் பற்றியும் இன்னும் நிறையச் சொல்லலாம். Discoveryseries.org இல் இன்னும் ஆழமான வேதாகம போதனைகளை நீங்கள் காணலாம். நீங்கள் கோபத்துடன் போராடினால், உங்கள் சபை தலைவர்கள் அல்லது பிற கிறிஸ்தவ நண்பர்களிடம் அதை பகிா்ந்துகொள்வது முக்கியம். நம் போராட்டங்களை நாம் தனியாக எதிர்கொள்ளாமல், ஒவ்வொரு நாளும் இயேசுவைப் போல நாம் மாறுவதற்கு நாம் தேவனைச் சார்ந்திருப்பது மற்றும் ​​நம்முடன் ஜெபிக்கவும், நம்மை ஊக்குவிக்கவும் சக கிறிஸ்தவர்களைக் கொண்டிருப்பது அவசியம்.

banner image